மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.7.18

துரியோதனனை அலற வைத்த தக்‌ஷகன் என்னும் நாகம்!


துரியோதனனை அலற வைத்த தக்‌ஷகன் என்னும் நாகம்!

கட்டின பொண்டாட்டியே என்றாலும்,,,,,,,,,,,என்ன கேள்வி கேட்கிரோம்ன்னு யோசிச்சு கேளுங்க,,!

பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினார்கள். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர். திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன், ''ஐவரின் பத்தினியே... இன்று யாருடைய முறை?'' என்று கேட்டான். திரௌபதிக்குத் தூக்கி வாரிப்போட்டது. நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது, பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள். கண் கலங்கினாள். அதேநேரம் அங்கு தோன்றினார் ஸ்ரீகிருஷ்ணர்.

'கலங்காதே திரௌபதி! நடந்ததை நானும் கவனித்தேன். எல்லோர் முன்னிலையிலும் உன்னை அவமானப்படுத்தி அழவைக்க நினைத்திருக்கிறான் துரியோதனன். அவனுக்கு பாடம் கற்பிக்கலாம். நான் சொல்வது போல் செய். நீ மீண்டும் உணவு பரிமாறப் போ! துரியோதனன் மீண்டும் உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு, 'ஏன் பதில் கூறவில்லை?’ என்பான். உடனே நீ, 'தக்ஷகன் முறை’ என்று சொல். அதன் பிறகு துரியோதனன் அந்த இடத்திலேயே இருக்கமாட்டான்'' என்றார் பகவான்.

கிருஷ்ணனின் வார்த்தையைத் தட்டமுடியாமல் விருந்து மண்டபத்துக்குச் சென்றாள் திரௌபதி. துரியோதனன் இலை அருகில் அவள் வந்ததும், விஷமத்துடன் அதே கேள்வியை மீண்டும் கேட்டான். 'எனக்குப் பதில் கூறவில்லையே... இன்று யாருடைய முறை?'

ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியனுப்பியது போலவே, ''இன்று தக்ஷகன் முறை' என்று பளிச்சென பதில் தந்தாள் திரௌபதி. அதைக் கேட்டு விஷ நாகம் தீண்டியது போன்று அதிர்ந்தான் துரியோதனன். சட்டென எழுந்து அங்கிருந்து வெளியேறினான்.

திரௌபதிக்கு ஆச்சரியம். கண்ணனிடம் ஓடோடி வந்தாள். ''கண்ணா! இதென்ன மாயம்? யாரந்த தக்ஷகன்? அவன் பெயரைக் கேட்டதும் துரியோதனன் ஏன் இப்படிப் பேயறைந்தாற்போல் பதறி, பயந்து ஓடுகிறான்?'' என்று கேட்டாள். கண்ணன் அதற்கான காரணத்தையும் கதையையும் சொன்னான்.

துரியோதனனின் மனைவி பானுமதி மகா பதிவிரதை. கணவனையே தெய்வமாகக் கருதும் உத்தமி. ஆனால், துரியோதனனோ பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அடைவதில் குறியாக இருந்தான். மனைவியிடம் அன்புடன் பேசக்கூட அவனுக்கு நேரம் இல்லை. திருமணமாகி மாதங்கள் பல கடந்தும், மண வாழ்க்கையின் பயனை அடையும் பாக்கியம் பானுமதிக்குக் கிட்டவில்லை. அவனது அன்புக்காக ஏங்கினாள். தெய்வங்களை வேண்டினாள். அவள் தவம் பலிக்கும் வேளை வந்தது.

ஒருமுறை, முனிவர் ஒருவர் பானுமதியின் துயர் நீக்கும் வழி ஒன்றைக் கூறினார். மகிமை மிக்க மூலிகை வேர் ஒன்றை மந்திரித்து அவளிடம் கொடுத்து, அதைப் பாலில் இட்டு கணவனுக்குக் கொடுக்கும்படி கூறினார் முனிவர். பானுமதியும் அதன்படியே பால் காய்ச்சி, அதில் இனிப்பும் இன்சுவையும் சேர்த்து, முனிவர் தந்த வேரையும் அதில் இட்டு, கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள். அன்று பௌர்ணமி. இரவின் இரண்டாம் யாமத்தில் அந்தப்புரம் வந்தான் துரியோதனன். அப்போது அவன் மது அருந்தியிருந்தான். பால் அருந்தும் மனோநிலையில் அவன் இல்லை. ஆசையுடன் மனைவி நீட்டிய பால் கிண்ணத்தைப் புறங்கையால் ஒதுக்கினான். கை தவறிய கிண்ணத்தில் இருந்த பால் தரையில் சிந்தியது. அப்போது அங்கே சென்றுகொண்டிருந்த 'தக்ஷகன்’ எனும் நாகம் அந்தப் பாலைச் சுவைத்தது.

தக்ஷகன் சர்ப்பங்களின் ராஜன். பாலைப் பருகியதும் அதிலிருந்த வேரின் வசிய சக்தியால், அவனுக்குப் பானுமதி மீது ஆசையும் நேசமும் பிறந்தது. உடனே அவன் அவள் முன் தோன்றித் தன் ஆவலை வெளியிட்டான். தன்னை வருந்தி அழைத்தது அவள்தான் என்றும் வாதாடினான். பதிவிரதையான பானுமதி பதறினாள்; துடிதுடித்தாள்.

துரியோதனனுக்குத் தன் மனைவியின் உயர்ந்த கற்பு நெறி பற்றி நன்கு தெரியும். தான் அவளது அன்பையும் பிரேமையையும் புரிந்து நடக்காததால் விளைந்த விபரீதத்தை எண்ணித் தவித்தான். தக்ஷகன் கால்களில் விழுந்து தன் மனைவியின் கற்பைக் காக்க வேண்டினான். தக்ஷகன் பாம்பு எனினும் பண்பு மிக்கவன். பாலில் கலந்திருந்த வேரின் சக்தியால் உந்தப் பெற்றதால்தான், அவன் உள்ளம் பானுமதியை விரும்பியது. எனினும், அவளுக்குக் களங்கம் விளைவிக்க அவன் விரும்பவில்லை.

அதே நேரம், அவளின் அன்பை இழக்கவும் தயாராக இல்லை. எனவே ஒரு நிபந்தனை விதித்தான். 'அந்தப்புரத்தில் அமைந்துள்ள அரச விருட்சத்தின் அடியில் உள்ள புற்றுக்கு, பௌர்ணமிதோறும் பானுமதியைக் காண வருவேன். #பானுமதி #புற்றில்பால் ஊற்றி #என்னைஉபசரித்து, #வணங்கிஅனுப்ப வேண்டும். அப்போது அவள் #கற்புக்குக்களங்கம் #இல்லை என்பதற்குச் சாட்சியாக அவளின் கணவனான #துரியோதனனும் என்னை #வணங்க #வேண்டும்’ என்று கூறிவிட்டு மறைந்தான் தக்ஷகன்.

''அன்று முதல் இன்றுவரை #பௌர்ணமி தோறும் #பாம்புக்குப் #பாலூற்றி #வருகிறாள் #பானுமதி. #துரியோதனனும் #பயபக்தியோடு #பங்குகொள்கிறான். #இந்தச் சம்பவம் #துரியோதனனுக்கும் #பானுமதிக்கும் #தக்ஷகனுக்கும்மட்டுமே #தெரியும். 'இதனை வெளியே யாரிடமும் சொல்வதில்லை’ என்பது அவர்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம். இதை நீ கூறியதுதான் துரியோதனனின் அதிர்ச்சிக்குக் காரணம்'' என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.

துரியோதனனால் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்து ஆறுதல் கூறிய கண்ணனுக்கு நன்றி கூறினாள் திரௌபதி
------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9 comments:

  1. வணக்கம் குருவே!
    இக் கதை உண்மையில் என்னை திகைக்க வைக்கிறது! விஷ எண்ணங்களால் சூழ்ச்சி அரசு செய்து வந்த துரியோதனனுக்கு ஒரு
    விஷ வைத்தியமா?!அக் கொடியோனுக்கு இங்ஙனம் ஒரு
    கற்புக்கரசியா மனைவி!அவளுடைய வாழ்விலா சோதனை!
    அதுபோலவே, இது என்ன திரௌபதியின் இன்னலுக்கு ஒரு முடிவே இல்லாமல்...!?கண்ணன்
    கருணையினால் அல்லவோ காக்கப்படுகிறாள்!!
    மனத்தெளிவுக்கு மருந்து இன்றைய தங்களின் பதிவு!!

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,இது போல் பல கிளைக் கதைகளும்,நிகழ்வுகளும் உங்களால்தான் தெரிந்து கொள்ள முடிகிறது.நன்றி.

    ReplyDelete
  3. Sir Mahabharatham. Ungal..urai.nadail.ezthnal .nanrga purukirathu . continue pannuga.sir

    ReplyDelete
  4. ////Blogger kmr.krishnan said...
    அருமை////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete
  5. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    இக் கதை உண்மையில் என்னை திகைக்க வைக்கிறது! விஷ எண்ணங்களால் சூழ்ச்சி அரசு செய்து வந்த துரியோதனனுக்கு ஒரு
    விஷ வைத்தியமா?!அக் கொடியோனுக்கு இங்ஙனம் ஒரு
    கற்புக்கரசியா மனைவி!அவளுடைய வாழ்விலா சோதனை!
    அதுபோலவே, இது என்ன திரௌபதியின் இன்னலுக்கு ஒரு முடிவே இல்லாமல்...!?கண்ணன்
    கருணையினால் அல்லவோ காக்கப்படுகிறாள்!!
    மனத்தெளிவுக்கு மருந்து இன்றைய தங்களின் பதிவு!!/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!

    ReplyDelete
  6. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very nice thanks sir vazhga valamudan/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!

    ReplyDelete
  7. ///Blogger adithan said...
    வணக்கம் ஐயா,இது போல் பல கிளைக் கதைகளும்,நிகழ்வுகளும் உங்களால்தான் தெரிந்து கொள்ள முடிகிறது.நன்றி.////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!

    ReplyDelete
  8. ////Blogger eswari sekar said...
    Sir Mahabharatham. Ungal..urai.nadail.ezthnal .nanrga purukirathu . continue pannuga.sir/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com