மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.5.18

திருமலைக்குச் செல்வதால் என்ன நன்மை?

திருமலைக்குச் செல்வதால் என்ன நன்மை? 

திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடன் பதிவு

யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்  வாருங்கள்...

இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம்
திருப்பதி ஆகும். சந்திரனனின் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனதிற்கு நிம்மதி உண்டாகிறது.

திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார் அவற்றின் சக்தி
கடல் அளவு என்பர் .

கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை
போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும். பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல
மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது. இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

வாஸ்துபடி  வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன. வடக்கு தாழ்ந்து தெற்கு
உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல குவியும் .

உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சயுடன் உள்ளார்கள் . அதுபோல
இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம்
திருப்பதி ஆகும்.

மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.

வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக
அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள
கோயில் இதுதான். கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு
உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம்
இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர்
சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது நிமிர்ந்து
மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு
சுழல்கின்றன.

உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் கோவில்!

குறிப்பு

சந்திர தசை மற்றும் சந்திர புக்தி நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை
பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகார தலமாகும். திங்கட்கிழமை இரவு தங்குவது சிறப்பாகும்.

திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு. திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு
நன்மையை தரும்.

அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும்
அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..
அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம்
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதினோரு மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம் அதை யாரிடமும் சொல்லி
புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டூள்ளனர். அந்த
அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம் ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது மாறாக
அங்கு கூச்சலும் குலப்பமாக தான் இருக்கும் இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக
இருங்கள்.

அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னக்காரர்கள் தெரியுமா. மேஷம்  , ரிஷபம் ,
மிதுனம் ,கடகம் , கன்னி , துலாம் .விருச்சிகம் , மகரம், மீனம் அவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும்.

வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னக்காரர்கள் .சிம்மம் , தனுசு , கும்பம்.

 ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ

" சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் " --

“ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”
ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித
வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!

பொதுப்  பொருள்:

திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும்
வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு
மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா உங்கள் திருவடிகளே சரணம் " சரணம் " சரணம்
---------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. நான் திருப்பதி சென்று பதினாறு வருடங்கள் ஆகின்றன!

    ReplyDelete
  2. Good morning sir very useful information om namo narayanaya namaha thanks sir vazhga valamudan

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Very very useful info...

    Thanks for sharing...

    Have a holy day.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. திருப்பதி (திருமலை) தரிசனம் செய்யும் முறை

    திருமலைக்கு செல்லும் முன்னர் முதலில் கீழ்த்திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமாளை கும்பிட்டுவிட்டு , அடுத்ததாக பத்மாவதி தாயாரை திருச்சானூர் அல்லது அலர்மேல்மங்காபுரம் (இரண்டும் ஒன்றே ) சென்று கும்பிட்டுவிட்டு , பின்னர் மலையேற வேண்டும்.

    வெங்காயம் பூண்டு கூடாது. உடை- வேட்டி, புடவை அல்லது துப்பட்டாவுடன் கூடிய உடை.

    மலை மேல் சென்றதும் கோவிலுக்குள் செல்லும் முன் ஸ்வாமி புஷ்கரிணி எனப்படும் குளத்தில் நீராடிய பின் நெற்றியில் அவரவர்கள் குலாச்சாரப் படி குறியீடு செய்து கொள்ளுதல் முக்கியம்.

    அடுத்து குளத்தின் கரையில் இருக்கும் ஆதி வராஹப் பெருமாள் சன்னதியில் (இது தனிக்கோவிலாக இருக்கும்) சென்று சேவிக்க வேண்டும். பெரும்பாலும் இந்த சன்னதி மூடி இருக்கும் என்பதால் உள்ளே உள்ள வராஹரை சேவிக்கலாம். இங்கே போக நேரம் இல்லை என்றால் உள்ளே ஸ்தம்பத்தில் (தூணில்) உள்ள ஆதிவராஹரை சேவித்துக்கொள்ளலாம்.

    வராகர் சன்னதி முடிந்ததும் க்யூவில் கோவிலின் entrance வந்ததும் முதலில் காணப்படும் த்வஜஸ்தம்பம் (கொடிக்கம்பம்) முன்பே கீழே விழுந்து சேவிக்கலாம். ஆண்கள் மட்டும் நெடுஞ்சாண்கிடையாகவும் பெண்கள் மண்டியிட்டும் சேவிக்கணும். இங்கே உள்ள பலி பீடத்தையோ கொடிக்கம்பையோ எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது. க்யூவில் நிற்பதால் ஒரு வேளை இது முடியாது போனால் இருந்த இடத்திலிருந்து கையால் கும்பிடலாம்.

    க்யூ வளைந்து இடதுபக்கம் செல்லும். அங்கே வரதர் சன்னதி இருக்கும், க்யூவில் இருந்தாலும் இவரை சேவித்துச் செல்லலாம்.

    அங்கிருந்து பெருமாளின் கர்பக்ருஹத்தின் முன் மண்டபம் வழியாக செல்வோம். உள்ளே உள்ள ஒரு ஸ்தம்பத்தில் வராகர் கோவிலில் உள்ளது போலவே ரூபத்துடன் வெளியில் சேவிக்கத் தவறின ஆதி வராகர் இருப்பார். அவரையும் சேவித்துவிட்டு பெருமாளின் முன் எப்போதும் நிற்கும் கருடாழ்வாரையும் வணங்கிவிட்டு சன்னதிக்குள் செல்ல வேண்டும். சில சமயம் அதிக கூட்டம் என்றால் வெளியில் இருந்தே திருப்பி விடுவார்கள், எப்படியும் த்வாரபாலகர் வரை போகலாம்.

    சன்னதிக்குள் நுழையும் முன் வாசலில் இருக்கும் த்வார பாலகர்கள் இருவரையும் கை கூப்பி வணங்கி உள்ளே நுழைய அனுமதி கோரவேண்டும். இதை மனதால் செய்தால் போதும், பிறகு பெருமாளின் திவ்ய தரிசனம்.

    முடித்ததும் வெளியில் வந்தால் இடது கோடியில் பழைய மடப்பள்ளி (கோவிலின் kitchen) இருக்கும், அங்கே உள்ளே மேற்பார்வை பார்த்துக்கொண்டு வகுளாதேவி (ஸ்ரீனிவாசப் பெருமாளின் தாயார்) இருப்பார். அவரை கண்டிப்பா சேவிக்கணும்.

    முடித்ததும் தீர்த்தம் சடாரி சாதிப்பார்கள். அது முடிந்து பிராகாரத்தை வலம்வந்தால் ஒரு இடத்தில் எல்லாரும் படியில் ஏறி ஏறி பார்ப்பார்கள், நீங்களும் பாருங்கள், விமானத்தின் மேலே (தங்க விமானத்தில் வெள்ளியால் ஒரு பிரபை இருக்கும்) விமான வெங்கடேசர், அவரையும் வணங்கிவிட்டு வந்தால் the great Hundi...

    உண்டியில் காணிக்கையை செலுத்திவிட்டு எதிரில் உள்ள ராமானுஜர் சன்னதி, அருகிலேயே யோகநரசிம்மர் சன்னதியையும் விடாமல் சேவித்துவிட்டு வெளியில் வரலாம்.

    சுருக்கமா சொல்லவேண்டும் என்றால் கோவிலுக்குள் சென்றுவிட்டால், நாம் ஒன்றுமே செய்ய வேண்டாம், கூட்டமே நம்மை வழிநடத்திச் சென்றுவிடும்.

    நடுவில் பிரசாத க்யூவில் கையில் ஒரு பிரசாதம் திணித்துவிடுவார்கள்...so, Happy பெருமாள் சேவை....:thumbsup:thumbsup
    https://www.penmai.com/community/threads/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.119974/

    ReplyDelete
  5. ////Blogger ஸ்ரீராம். said...
    நான் திருப்பதி சென்று பதினாறு வருடங்கள் ஆகின்றன!/////

    பெருமாளிடமிருந்து கூடிய விரைவில் அழைப்பு வரும். சென்று, தரிசித்து வாருங்கள் நண்பரே!!!!

    ReplyDelete
  6. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful information om namo narayanaya namaha thanks sir vazhga valamudan/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  7. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Very very useful info...
    Thanks for sharing...
    Have a holy day.
    With kind regards,
    Ravi-avn////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  8. /////Blogger Kalai said...
    திருப்பதி (திருமலை) தரிசனம் செய்யும் முறை
    திருமலைக்கு செல்லும் முன்னர் முதலில் கீழ்த்திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமாளை கும்பிட்டுவிட்டு , அடுத்ததாக பத்மாவதி தாயாரை திருச்சானூர் அல்லது அலர்மேல்மங்காபுரம் (இரண்டும் ஒன்றே ) சென்று கும்பிட்டுவிட்டு , பின்னர் மலையேற வேண்டும்.
    வெங்காயம் பூண்டு கூடாது. உடை- வேட்டி, புடவை அல்லது துப்பட்டாவுடன் கூடிய உடை.
    மலை மேல் சென்றதும் கோவிலுக்குள் செல்லும் முன் ஸ்வாமி புஷ்கரிணி எனப்படும் குளத்தில் நீராடிய பின் நெற்றியில் அவரவர்கள் குலாச்சாரப் படி குறியீடு செய்து கொள்ளுதல் முக்கியம்.
    அடுத்து குளத்தின் கரையில் இருக்கும் ஆதி வராஹப் பெருமாள் சன்னதியில் (இது தனிக்கோவிலாக இருக்கும்) சென்று சேவிக்க வேண்டும். பெரும்பாலும் இந்த சன்னதி மூடி இருக்கும் என்பதால் உள்ளே உள்ள வராஹரை சேவிக்கலாம். இங்கே போக நேரம் இல்லை என்றால் உள்ளே ஸ்தம்பத்தில் (தூணில்) உள்ள ஆதிவராஹரை சேவித்துக்கொள்ளலாம்.
    வராகர் சன்னதி முடிந்ததும் க்யூவில் கோவிலின் entrance வந்ததும் முதலில் காணப்படும் த்வஜஸ்தம்பம் (கொடிக்கம்பம்) முன்பே கீழே விழுந்து சேவிக்கலாம். ஆண்கள் மட்டும் நெடுஞ்சாண்கிடையாகவும் பெண்கள் மண்டியிட்டும் சேவிக்கணும். இங்கே உள்ள பலி பீடத்தையோ கொடிக்கம்பையோ எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது. க்யூவில் நிற்பதால் ஒரு வேளை இது முடியாது போனால் இருந்த இடத்திலிருந்து கையால் கும்பிடலாம்.
    க்யூ வளைந்து இடதுபக்கம் செல்லும். அங்கே வரதர் சன்னதி இருக்கும், க்யூவில் இருந்தாலும் இவரை சேவித்துச் செல்லலாம்.
    அங்கிருந்து பெருமாளின் கர்பக்ருஹத்தின் முன் மண்டபம் வழியாக செல்வோம். உள்ளே உள்ள ஒரு ஸ்தம்பத்தில் வராகர் கோவிலில் உள்ளது போலவே ரூபத்துடன் வெளியில் சேவிக்கத் தவறின ஆதி வராகர் இருப்பார். அவரையும் சேவித்துவிட்டு பெருமாளின் முன் எப்போதும் நிற்கும் கருடாழ்வாரையும் வணங்கிவிட்டு சன்னதிக்குள் செல்ல வேண்டும். சில சமயம் அதிக கூட்டம் என்றால் வெளியில் இருந்தே திருப்பி விடுவார்கள், எப்படியும் த்வாரபாலகர் வரை போகலாம்.
    சன்னதிக்குள் நுழையும் முன் வாசலில் இருக்கும் த்வார பாலகர்கள் இருவரையும் கை கூப்பி வணங்கி உள்ளே நுழைய அனுமதி கோரவேண்டும். இதை மனதால் செய்தால் போதும், பிறகு பெருமாளின் திவ்ய தரிசனம்.
    முடித்ததும் வெளியில் வந்தால் இடது கோடியில் பழைய மடப்பள்ளி (கோவிலின் kitchen) இருக்கும், அங்கே உள்ளே மேற்பார்வை பார்த்துக்கொண்டு வகுளாதேவி (ஸ்ரீனிவாசப் பெருமாளின் தாயார்) இருப்பார். அவரை கண்டிப்பா சேவிக்கணும்.
    முடித்ததும் தீர்த்தம் சடாரி சாதிப்பார்கள். அது முடிந்து பிராகாரத்தை வலம்வந்தால் ஒரு இடத்தில் எல்லாரும் படியில் ஏறி ஏறி பார்ப்பார்கள், நீங்களும் பாருங்கள், விமானத்தின் மேலே (தங்க விமானத்தில் வெள்ளியால் ஒரு பிரபை இருக்கும்) விமான வெங்கடேசர், அவரையும் வணங்கிவிட்டு வந்தால் the great Hundi...
    உண்டியில் காணிக்கையை செலுத்திவிட்டு எதிரில் உள்ள ராமானுஜர் சன்னதி, அருகிலேயே யோகநரசிம்மர் சன்னதியையும் விடாமல் சேவித்துவிட்டு வெளியில் வரலாம்.
    சுருக்கமா சொல்லவேண்டும் என்றால் கோவிலுக்குள் சென்றுவிட்டால், நாம் ஒன்றுமே செய்ய வேண்டாம், கூட்டமே நம்மை வழிநடத்திச் சென்றுவிடும்.
    நடுவில் பிரசாத க்யூவில் கையில் ஒரு பிரசாதம் திணித்துவிடுவார்கள்...so, Happy பெருமாள் சேவை.../////

    உங்களின் அனுபவப்பகிர்விற்கும், அறிவுரைக்கும் நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com