மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

1. Galaxy 2007 சிறப்பு வகுப்பு

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

2. Stars2015 சிறப்பு வகுப்பு

2016ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டார்ஸ்2015 வகுப்பறையில் 126 பாடங்கள் உள்ளன. அந்த மேல்நிலை வகுப்பும் நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 126 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

இந்த இரண்டு வகுப்புக்களும் எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

22.5.18

திருவரங்கனும் ஏழாம் எண்ணும்!


திருவரங்கனும் ஏழாம் எண்ணும்!

1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களுடன் ஏழு திருமதில்களை

கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.

2. பெருமை உடைய
(1) பெரிய கோவில்
(2) பெரிய பெருமாள்
(3) பெரிய பிராட்டியார்
(4) பெரிய கருடன்
(5) பெரியவசரம்
(6) பெரிய திருமதில்
(7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம்  கோவில்.

3. ஸ்ரீரங்கம் ரங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள்

(1) ஸ்ரீதேவி
(2) பூதேவி
(3) துலுக்க நாச்சியார்
(4) சேரகுலவல்லி நாச்சியார்
(5) கமலவல்லி நாச்சியார்
(6) கோதை நாச்சியார்
(7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.

4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில்

எழுந்தருளுவார்.
(1) விருப்பன் திருநாள்
(2) வசந்த உத்சவம்
(3) விஜயதசமி
(4) வேடுபறி
(5) பூபதி திருநாள்
(6) பாரிவேட்டை
(7) ஆதி பிரம்மோத்சவம்.

5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்.

(1) சித்திரை
(2) வைகாசி
(3) ஆடி
(4) புரட்டாசி
(5) தை
(6) மாசி
(7) பங்குனி.

6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை  நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார்
.
(1) சித்திரை
(2) வைகாசி
(3) ஆவணி
(4) ஐப்பசி
(5) தை
(6) மாசி
(7) பங்குனி.

7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

8. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.

10. இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும்.

(1) கோடை உத்சவம்
(2) வசந்த உத்சவம்
(3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை
(4) நவராத்ரி
(5) ஊஞ்சல் உத்சவம்
(6) அத்யயநோத்சவம்
(7) பங்குனி உத்திரம்.

12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்.

(1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார்
(2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார்
(3) குலசேகர ஆழ்வார்
(4) திருப்பாணாழ்வார்
(5) தொண்டரடிபொடி ஆழ்வார்
(6) திருமழிசை ஆழ்வார்
(7) பெரியாழ்வார், ஆண்டாள்

13. இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.

14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன.

(1) நாழிகேட்டான் கோபுரம்
(2) ஆர்யபடால் கோபுரம்
(3) கார்த்திகை கோபுரம்
(4) ரெங்கா ரெங்கா கோபுரம்
(5) தெற்கு கட்டை கோபுரம்-I
(6) தெற்கு கட்டை கோபுரம்-II
(7) ராஜகோபுரம்.

15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார்
.
(1) வசந்த உத்சவம்
(2) சங்கராந்தி
(3) பாரிவேட்டை
(4) அத்யயநோத்சவம்
(5) பவித்ர உத்சவம்
(6) உஞ்சல் உத்சவம்
(7) கோடை உத்சவம்.

16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும்.

(1) பூச்சாண்டி சேவை
(2) கற்பூர படியேற்ற சேவை
(3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை
(4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம்
(5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை
(6) தாயார் திருவடி சேவை
(7) ஜாலி சாலி அலங்காரம்

#பூலோக #வைகுண்டத்தில் அரங்கனை தரிசிக்க #வாரீர்
------------------------------------------------------------------
2
பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை மரத்திலிருந்து சுமார் 100 பழங்கள் உள்ள பெரிய வாழைத் தாற்றை அறுத்தார். தன் வேலைக்காரனை அழைத்து,
"இந்த வாழைத் தாற்றைக் கோயிலுக்கு கொண்டு போய் கொடுத்து விட்டு வா...." என்றார்.

வேலைக்காரனும் அவ்வாறே செய்தான்.

அன்றிரவு பண்ணையாரின் கனவில் தோன்றிய இறைவன்,
"நீ அனுப்பிய ஒரு வாழைப் பழம் கிடைத்தது...." என்றார்

திடுக்கிட்ட பண்ணையார், "இறைவா நான் 100 பழங்களையல்லவா அனுப்பினேன்..." என்றார்

இறைவன், "இல்லை ஒரு பழம் தான் எனக்கு வந்து சேர்ந்தது..." என்றார்.

விடிந்ததும் பண்ணையார் வேலைக்காரனை அழைத்து,
"நான் கொடுத்த வாழைப் பழங்களை முழுமையாகக் கோயிலில் கொண்டு சேர்த்தாயா....." என்றார்.

அவன் "ஆம்" என்றான். பண்ணையாருக்குக் கோபம் வந்து விட்டது. அவர் வேலைக்காரனை வேகமாக  அறைந்தார்.
"உண்மையைச் சொல், இல்லையென்றால் அடித்தேக் கொன்று விடுவேன்..." என்றார்.

அவன், "உண்மையைச் சொல்லி விடுகிறேன், வழியில் ஒருவன் பசியாய் இருக்கிறது என்றான், நான் பரிதாபப்பட்டு அவனுக்கு ஒரு பழத்தைக் கொடுத்தேன், மீதமுள்ள எல்லாப் பழத்தையும்
கோவிலிலுக்குக் கொடுத்து விட்டேன்.." என்றான்.
பண்ணையாருக்குப் புரிந்து விட்டது.

ஏழைக்குக் கொடுத்த பழமே இறைவனைக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. கோயிலுக்குக் கொடுத்த பழம் சேரவில்லை.....
கோயிலில் இருக்கும் இறைவனுக்கு நீ ஏதாவது கொடுத்தால், அது ஏழைகளுக்குப் போய்ச் சேராது.
ஏழைகளுக்கு நீ ஏதாவது கொடுத்தால், அது இறைவனிடம் போய்ச் சேர்ந்து விடும்......
கோயிலில் போய்க் கொடுப்பதும், ஏழைகளுக்குக் கொடுப்பதும் ஒன்றா என்று சிலர் கேட்கலாம்.
ஏழைகளின் வயிறு அஞ்சல்பெட்டி, இறைவனுக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை இதில் போட்டால் இறைவனுக்குப் போய்ச் சேர்ந்து விடும்......
"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்...
------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

K.P.Shanmuga Sundaram Sundaram said...

Good morning sir very useful information thanks sir vazhga valamudan

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
பகிர்ந்த பதிவுகள் இன்று சுவை கூட்டின!
எழில் கொஞ்சும் ஏழால் எண்ணற்ற
பெருமை கொண்ட எம்பெருமான்
திருவரங்கனை நினைந்து ஒரு
பக்தி கூடிய வணக்கம்!
இரண்டாம் பதிவில் "வறியவனை
வாழ வைத்தால்'வையவன்' நம்மை
வாழ்த்துவான்" என்பது உணர்த்தப்படுகிறது!
பிரமாதம்!

kmr.krishnan said...

Excellent Sir.

adithan said...

வணக்கம் ஐயா,அஞ்சல் பெட்டியை மறந்து ரொம்ப நாளாச்சு.ஏழைகளின் வயிறு வாட்ஸ்அப் மாதிரி.போட்ட அடுத்த செகண்ட் இறைவனை சேர்ந்துவிடும் என்று சொல்லலாமா?.நன்றி.

ravichandran said...

Respected Sir,

Happy morning...Last line is true and excellent sir...

Have a great day.

With kind regards,
Ravi-avn

Subbiah Veerappan said...

/////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir very useful information thanks sir vazhga valamudan/////

நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

Subbiah Veerappan said...

//////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
பகிர்ந்த பதிவுகள் இன்று சுவை கூட்டின!
எழில் கொஞ்சும் ஏழால் எண்ணற்ற
பெருமை கொண்ட எம்பெருமான்
திருவரங்கனை நினைந்து ஒரு
பக்தி கூடிய வணக்கம்!
இரண்டாம் பதிவில் "வறியவனை
வாழ வைத்தால்'வையவன்' நம்மை
வாழ்த்துவான்" என்பது உணர்த்தப்படுகிறது!
பிரமாதம்!//////

நல்லது. நன்றி வரதராஜன்!!!!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
Excellent Sir./////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

Subbiah Veerappan said...

/////Blogger adithan said...
வணக்கம் ஐயா,அஞ்சல் பெட்டியை மறந்து ரொம்ப நாளாச்சு.ஏழைகளின் வயிறு வாட்ஸ்அப் மாதிரி.போட்ட அடுத்த செகண்ட் இறைவனை சேர்ந்துவிடும் என்று சொல்லலாமா?.நன்றி./////

உண்மைதான். நன்றி ஆதித்தன்!!!

Subbiah Veerappan said...

///Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning...Last line is true and excellent sir...
Have a great day.
With kind regards,
Ravi-avn/////

நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!!!!

Subathra Suba said...

Annathanam patri sirappaga sonnergal

Subbiah Veerappan said...

/////Blogger Subathra Suba said...
Annathanam patri sirappaga sonnergal////

நல்லது. நன்றி சகோதரி!!!!