மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

1. Galaxy 2007 சிறப்பு வகுப்பு

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

2. Stars2015 சிறப்பு வகுப்பு

2016ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டார்ஸ்2015 வகுப்பறையில் 126 பாடங்கள் உள்ளன. அந்த மேல்நிலை வகுப்பும் நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 126 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

இந்த இரண்டு வகுப்புக்களும் எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

26.4.18

Cinema: துள்ளுவதோ இளமை பாடல் பிறந்த கதை!


Cinema: துள்ளுவதோ இளமை பாடல் பிறந்த கதை! 

*"துள்ளுவதோ இளமை...தேடுவதோ தனிமை.. அற்புதமான இசையமைப்பு எல் ஆர் ஈஸ்வரி, டி எம் எஸ் தேன்கலந்த கம்பீர குரலில், வாத்தியாரின் விறுவிறு நடிப்பு  இனிமை, சொல்ல வார்த்தை இல்லை.*

*வாலி, தாள லயத்துடன் பாடலை அனுபவித்து எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி தன்  இசைத் திறனை  காட்ட அமோக வெற்றி பெற்ற பாடல் இது! வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் உலக இசையைப் பயன்படுத்த எம்.எஸ்.வி. தவறியதில்லை.*

*அப்படி உருவானது தான் “துள்ளுவதோ இளமை” பாடல். ஸ்பெயின் நாட்டில் பிரசித்திப் பெற்ற புல் ஃபைட் இசையான “பேசோ டாப்லே” வகையைச் சார்ந்தது இந்தப் பாடல்.*

*பேசோ டாப்லே என்பது இரட்டை அடிகள்(ஸ்பானியச் சொல்). ஸ்பெயின் நாட்டில் பிரபலமாக நடைபெற்று வந்த காளைகளை அடக்கும் போட்டிகளில் போட்டியாளர் மேடைக்கு வருகையில் வாசிக்கப்படும் இசை. இவ்வகை இசை பிரான்ஸில் சுவீகரிக்கப்பட்டு உலகம் முழுதும் பரவியது. பிரான்ஸில் இது ப்ளமேங்கோ போன்ற பல்வேறு வடிவங்களைப் பெற்றது.*

*இப்படிப் பல அம்சங்களைக் கொண்ட இசையை எம்.எஸ்.வி. தனது பாணியில் பயன்படுத்தியுள்ளார்.பேசோ டாப்லே இசையின் அடிப்படை இலக்கணம் இரண்டு தாளங்கள் .இப்போது பாடலைக் கவனியுங்கள்*

பட்டு முகத்து சுட்டிப் பெண்ணை
கட்டியணைக்கும் இந்தக் கைகள்.......
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை
*என, பாடல் முழுதும் இரு சீர் வரிகள்.*
*பாடலின் துவக்கத்தில் அதிவேக ப்ளமேங்கோ கிட்டாரும், ட்ரம்ஸின் தாளமும், ஒரு நொடி அமைதிக்குப் பின்னர் ‘பட்டுமுகத்து சுட்டிப் பெண்ணை’ என்று ஆண்கள் கோரஸ் வரும் பொழுது, அதிலொரு இடையிசை புகுத்தி காஸ்டனட், கிட்டார், ட்ரம்ஸ் மூன்றையும் இசைக்கவிட்டு இது காளைச் சண்டைப் பாடல் என்பதை உறுதிப்படுத்தி விடுகிறார். வழக்கம் போல இப்பாடலுக்கும் பெண் குரலுக்கு அவர் நாடியது எல்.ஆர். ஈஸ்வரியை. ‘துள்ளுவதோ இளமை’ என்று குறைவான சுருதியில் தொடங்கும் பாடல் ‘அள்ளுவதே திறமை’ என்று உயரே போய், அத்தனையும் புதுமை என்று கீழே இறங்கிடும்.*

*முதல் சரணத்தில் வரிகளிலும் இரண்டு சீர்கள் மட்டுமே *
மேல் ஆடை நீந்தும் பால் ஆடை மேனி மேல் ஆடை நீந்தும் பால் ஆடை மேனி நீராட ஓடிவா நீராட ஓடிவா வேல் ஆடும் பார்வை தாளாத போது வேல் ஆடும் பார்வை தாளாத போது நோகாமல் ஆடவா நோகாமல் ஆடவா 
*இதில் ஒவ்வொரு வரியையும் இரண்டு முறை வருமாறு அமைத்திருப்பார். அதிலும் ஒவ்வொரு வரியும் அடுத்தடுத்து வரும்பொழுது சொற்களில் கமகங்களைக் கவனியுங்கள். ‘நீ..ராட ஓடிவா நீராட ஓடிவா’. எம்.எஸ்.வி. நினைத்ததை எல்.ஆர். ஈஸ்வரி முற்றிலும் உணர்ந்து பாடுவதில் தான் எவ்வளவு சுகம்.*
தேன் ஊறும் பாவை பூ மேடை தேவை
தேன் ஊறும் பாவை பூ மேடை தேவை நானாக அள்ளவா நானாக அள்ளவா தீராத தாகம் பாடாத ராகம் தீராத தாகம் பாடாத ராகம் நாளெல்லாம் சொல்லவா நாளெல்லாம் சொல்லவா

*இரண்டாம் இடையிசை மிகச் சிறப்பானது, ப்ளமேங்கோ நடையில் சேர்ந்து இசைத்து முடித்திட, பேசோ டாப்லே பாணிக்குத் தாவிடும். பின்னர்  TMSஸின் கணீர்க் குரலுக்கு ஈஸ்வரியின் குரலிலிருந்த குழைவைக் கொண்டு வருவது கடினம். இருந்தாலும் ‘நாளெல்லாம் சொல்லவா’ என்ற வரியில் மிகச் சிறப்பாகவே பாடியிருப்பார்.*

*அடுத்த இடையிசையில்  இசை கருவிகள் இணைந்திட பேசோ டாப்லேவுக்கு வந்துவிடும். இந்த முறை டி.எம்.எஸ்., ஈஸ்வரி இணைந்திட, ‘வாய்பேசத் தோன்றுமா’ என்ற வரியில் மீண்டுமொரு முறை அசத்துவார் ஈஸ்வரி.*
காணாத கோலம் நீ காணும் நேரம் வாய் பேச தோன்றுமா வாய் பேச தோன்றுமா ஆணோடு பெண்மை ஆறாகும் போது வேறு இன்பம் வேண்டுமா....

*இறுதியில் பெரும் அதிர்வுகளோடு, பேசோ டாப்லே அடையாளங்களோடு பாடல் முடிவடையும். இன்றைய தலைமுறையை வசீகரிக்கும் பாடலை அளித்தது அத்தனையும் புதுமை.இதோ உங்களுக்காக!*

*கருவூட்டம்: சுந்தர சீனிவாசன்*
படம்: :குடியிருந்த கோவில்  1968
இசை: எம்.எஸ்.வி
பாடலை இயற்றியவர்: வாலி
பாடியவர்கள்: TMS & L.R.ஈஸ்வரி     
நடிப்பு: எம்.ஜி.ஆர் & ராஜஸ்ரீ
--------------------------------------------------------
கேட்டதில் ரசித்தது
அன்புடன்
வாத்தியார்
================================
Video clipping of the song:வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4 comments:

K.P.Shanmuga Sundaram Sundaram said...

Good morning sir very excellent song thanks sir vazhga valamudan

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
வகுப்பறையில், பல்சுவைத் தகவல்களை மாணவ மணிகளுக்கு
வழங்கும் வாத்தியார் பாநயம் நிறைந்த பாடல்களை (காணொளியுடன்) பதியத் தவறுவதே இல்லை, நாங்களும்
அவற்றை இரசிக்கவும் மறப்பதில்லை
பாடலின் சுவை நயத்தை அணுவணுவாக அலசியுள்ளதைப் படிக்கும் போது அதன் கலை நயம்
சுவையூட்டப்படுவது தெளிவு!
பதிவுக்கு நன்றி ஐயா!

Subbiah Veerappan said...

////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir very excellent song thanks sir vazhga valamudan////

நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
வகுப்பறையில், பல்சுவைத் தகவல்களை மாணவ மணிகளுக்கு
வழங்கும் வாத்தியார் பாநயம் நிறைந்த பாடல்களை (காணொளியுடன்) பதியத் தவறுவதே இல்லை, நாங்களும்
அவற்றை இரசிக்கவும் மறப்பதில்லை
பாடலின் சுவை நயத்தை அணுவணுவாக அலசியுள்ளதைப் படிக்கும் போது அதன் கலை நயம்
சுவையூட்டப்படுவது தெளிவு!
பதிவுக்கு நன்றி ஐயா!//////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!