மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

1. Galaxy 2007 சிறப்பு வகுப்பு

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

2. Stars2015 சிறப்பு வகுப்பு

2016ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டார்ஸ்2015 வகுப்பறையில் 126 பாடங்கள் உள்ளன. அந்த மேல்நிலை வகுப்பும் நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 126 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

இந்த இரண்டு வகுப்புக்களும் எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

25.4.18

உலகப் புத்தக தினம்.


உலகப் புத்தக தினம்.

23-4-2018 அன்று உலக புத்தக தினம். நாம் இரண்டு நாட்கள் தாமதமாக அதைக் கொண்டாடுகிறோம்!

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது "ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா..

கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்

 தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்
என்று பதிலளித்தாராம் ஜவஹர்லால் நேரு

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா
பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த
புத்தகங்கள் பல லட்சம்

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம்
சார்லிசாப்லின்

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
-ஜூலியஸ் சீசர்

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
-டெஸ்கார்டஸ்

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
-இங்கர்சால்

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
-பிரான்சிஸ் பேக்கன்

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
-லெனின்

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
-ஆஸ்கார் வைல்ட்

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
-சிக்மண்ட் ஃப்ராய்ட்

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போங்கள்
-மாசேதுங்

உலக புத்தக தின வாழ்த்துகள்!!!!
------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=======================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

ஸ்ரீராம். said...

படிக்க மகிழ்ச்சியான தொகுப்பு.

இறைவனிடம் என் பிரார்த்தனை, "என் கண்களையும் மனதையும் தொடர்ந்து புத்தகம் படிக்கும் உற்சாகத்தைத் தந்து கொண்டே இருங்கள்!"

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
எல்லா முக்கிய அம்சங்களையும்
தன்னகத்தே கொண்டுள்ள புத்தகம்
எனும் 'வார்த்தைகள் அடங்கிய
காகிதங்கள்', உலகின் மாபெரும்
மனிதர்களின் மனங்களை மயக்கி,
வரலாறு படைத்தது என்பது மறக்கவொன்னா விசித்திரமே!...
என்பதை இவ்வுலக பத்தக தினத்தில்
நினைநது கொண்டாடுவோம்!

adithan said...

வணக்கம் ஐயா,இவையெல்லாம் இன்டர்நெட் யுகத்திற்கு முந்தைய கருத்து பதிவுகள் என்று சிலர் நினைக்கலாம்.ஆனால் புத்தகங்களை படிக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கும்,மற்றும் cross reference பண்ணவும் புத்தகங்களேஉறுதுணை.பராமரிக்க தக்க இடவசதியிருந்தால் புத்தகங்களே சிறப்பு.நன்றி.

Subbiah Veerappan said...

/////Blogger ஸ்ரீராம். said...
படிக்க மகிழ்ச்சியான தொகுப்பு.
இறைவனிடம் என் பிரார்த்தனை, "என் கண்களையும் மனதையும் தொடர்ந்து புத்தகம் படிக்கும் உற்சாகத்தைத் தந்து கொண்டே இருங்கள்!"/////

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஸ்ரீராம்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
எல்லா முக்கிய அம்சங்களையும்
தன்னகத்தே கொண்டுள்ள புத்தகம்
எனும் 'வார்த்தைகள் அடங்கிய
காகிதங்கள்', உலகின் மாபெரும்
மனிதர்களின் மனங்களை மயக்கி,
வரலாறு படைத்தது என்பது மறக்கவொன்னா விசித்திரமே!...
என்பதை இவ்வுலக பத்தக தினத்தில்
நினைநது கொண்டாடுவோம்!///////

நல்லது. அப்படியே செய்வோம்! நன்றி வரதராஜன்!!!!!

Subbiah Veerappan said...

//////Blogger adithan said...
வணக்கம் ஐயா,இவையெல்லாம் இன்டர்நெட் யுகத்திற்கு முந்தைய கருத்து பதிவுகள் என்று சிலர் நினைக்கலாம்.ஆனால் புத்தகங்களை படிக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கும்,மற்றும் cross reference பண்ணவும் புத்தகங்களேஉறுதுணை.பராமரிக்க தக்க இடவசதியிருந்தால் புத்தகங்களே சிறப்பு.நன்றி./////

உண்மைதான். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

sasikantha peter said...

Nanraka irunthathu vasika .. nanri

Subbiah Veerappan said...

////Blogger sasikantha peter said...
Nanraka irunthathu vasika .. nanri////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!