மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.2.18

திருவல்லம் கோவிலைத் தெரியுமா?


திருவல்லம் கோவிலைத் தெரியுமா?

திருவலம் அருள்மிகு தனுமத்யம்பாள் சமேத ஸ்ரீ வில்வநாதீஸ்வரர் திருக்கோயில்

இறைவர் திருப்பெயர்   :  வில்வநாதீஸ்வரர், வல்லநாதர்.

இறைவியார் திருப்பெயர் :  தனுமத்யாம்பாள், வல்லாம்பிகை.

தல மரம் :  வில்வம்.

தீர்த்தம் :  கௌரி தீர்த்தம்.

வழிபட்டோர் :  கௌரி, மஹாவிஷ்ணு, சனகமுனிவர் முதலியோர்.

தேவாரப் பாடல்கள் :  சம்பந்தர் - எரித்தவன் முப்புரம்.

சிறப்புகள்:

நிவா நதி வடக்கிலிருந்து தெற்காக ஓடிச்சென்று, பாலாற்றில் ஒன்றாகிறது.

பழைய கல்வெட்டில் இத்தலப் பெயர் 'தீக்காலி வல்லம்' என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகச் (சீர்காழிக்குப் பக்கத்தில் 'வல்லம்'
என்றொரு ஊர் இருப்பதால் அதனின் வேறாக இதை அறிவதற்காக) சொல்லப்படுகிறது.

ஞானசம்பந்தர் பாடலில் 'திருவல்லம்' என்றும்; அருணகிரிநாதரின் திருப்புகழில் 'திருவலம்' என்றும் இத்தலம் குறிக்கப்படுகின்றது.

கௌரி, மஹாவிஷ்ணு, சனக முனிவர் முதலியோர் வழிபட்ட சிவலிங்கங்கள் கோயிலுள் உள்ளன.

கோயிலுள் நாகலிங்கப் பூக்கள் பூக்கும் நாகலிங்க மரம் உள்ளது; காணத்தக்கது.

மூன்று நிலைகளையுடைய உள் கோபுரம் கல் மண்டபத்தின் மீது கட்டப்பட்டதாகும்.

ஆதிவில்வநாதேஸ்வரர் சந்நிதி" - தனிக் கோயிலாக உள்ளது;
இதன் எதிரில் நெடுங்காலமாக இருந்து வரும் பலாமரம் ஒன்று
உள்ளது.

இங்கு வழிபட்ட சனக முனிவரின் 'திருவோடு ' சுவாமிக்கு நேரே வெளியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மூலவர் - சிவலிங்கத் திருமேனி, சுயம்பு; சதுரபீட ஆவுடையார்.

மூலவர் கருவறை அகழி அமைப்புடையது; கருவறைச் சுவர்களில் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன.

கோயிலில் அறுபத்து மூவரின் உற்சவ, மூலத் திருமேனிகள் மேலும் கீழுமாக இருவரிசைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இடதுபுறம் பள்ளத்தில் 'பாதாளேஸ்வரர் ' சந்நிதி உள்ளது; பஞ்சம் நேரில், இப்பெருமானுக்கு ஒரு மண்டலகாலம் அபிஷேகம்
செய்யின் மழை பெய்யும் என்று சொல்லப்படுகிறது.

கஞ்சனுக்கு இறைவன் முத்தி தந்த ஐதீகம், திருவிழாவாக இன்றும் நடைபெறுகிறது; இதற்காக தை மாதம் பொங்கல் கழித்து 10-ம்
நாள் சுவாமி இங்கிருந்து புறப்பட்டுக் காஞ்சனகிரிக்கு எழுந்தருளுகிறார். இம்மலையில் (காஞ்சனகிரியில்) சித்ரா பௌர்ணமியில் குளக்கரையிலிருந்து பார்த்தால் ஜோதியொன்று தோன்றிப் பின் மறைகின்றதாம்.

தல வரலாறு:

மக்கள் வழக்கில் 'திருவலம்' என்று அழைக்கப்படுகிறது.

ஊருக்குள் 'நிவா' நதி ஓடுகிறது; நதியின் கரையிலேயே கோயில் உள்ளது. இறைவன், தீர்த்தத்தின் பொருட்டு, 'நீ, வா' என்றழைக்க,
இந்நதி அருகில் ஓடிவந்து பாய்ந்ததால் இப்பெயர் பெற்றது. 'நீ வா ' நதி நாளடைவில் 'நிவா ' நதியாயிற்று என்கின்றனர். இன்று
'பொன்னை' ஆறு என்னும் பெயரும் கொண்டுள்ளது. இந்நதியிலிருந்து தான் பண்டை நாளில் சுவாமிக்குத் தீர்த்தம்

கொண்டுவரப்பட்டது. (இப்போது கோயிலுள் கௌரி தீர்த்தமும் தீர்த்த கிணறும் உள்ளது.)

ஒரு காலத்தில் வில்வக்காடாக இப்பகுதி இருந்தமையால் இத்தலம் 'வில்வவனம்' - 'வில்வாரண்யம்' எனப்படுகிறது. அக்காட்டில்
ஒரு பாம்புப் புற்றில் சிவலிங்கம் இருந்தது. நாடொறும் பசு ஒன்று வந்து, அச்சிவலிங்கத்தின்மீது பாலைச் சொரிந்து வழிபட்டது.

அதனால் புற்றி சிறிது சிறிதாக கரைந்து நாளடைவில் சிவலிங்கம் வெளிப்படலாயிற்று என்று சொல்லப்படுகிறது.

இங்குள்ள அம்பாளுக்கு ஆதியில் 'தீக்காலி அம்பாள்' (ஜடாகலாபாம்பாள்) என்றே பெயரிருந்ததாகவும்; உக்கிர வடிவிலிருந்த இந்த அம்பாளை, ஆதி சங்கரர் சாந்தப்படுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது.

இங்குள்ள பெருமானை விஷ்ணு வழிபட்டதால், விஷ்ணுவின் பாதம் பத்மபீடத்தில் கொடிமரத்தின் முன்பு உள்ளது.

கொடிமரத்தின் பின்னால் உள்ள நந்தியும், மூலவர் சந்நிதியில் உள்ள நந்தியும் சுவாமியை நோக்கியிராமல் கிழக்கு நோக்கியுள்ளது.

இதன் வரலாறு - இத்தலத்திலிருந்து 4 கி. மீ. தொலைவில் கஞ்சன்கிரி என்றொரு மலையுள்ளது. (அது தற்போது 'காஞ்சனகிரி'
என்று வழங்குகின்றது.) இம்மலையில் கஞ்சன் என்னும் அசுரன் இருந்து வந்தான். இம்மலையிலிருந்துதான் மிகப்பழங்காலத்தில்
சுவாமிக்கு தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. அவ்வாறு கொண்டுவருவதை 'கஞ்சன்' தடுத்தான். செய்வதறியாது உரியோர்
இறைவனிடம் முறையிட, நந்தியம்பெருமான் சென்று கஞ்சனுடன் போரிட்டு அவனை அழித்தார். அவ்வாறு அழித்தபோது
அவ்வசுரனின்; லலாடம் வீழ்ந்த இடம் தற்போது "லாலாபேட்டை" என்றும், சிரசு வீழ்ந்த இடம் "சீகராஜபுரம்" என்றும், வலக்கால்
அறுபட்டு வீழ்ந்த இடம் "வடகால்" என்றும், தென்கால் (இடது கால்; - தென்கால் என்பது அவ்வசுரன் நின்று போரிட்ட
திக்கிலிருந்து கையாளப்பட்ட வார்த்தையாக தெரிகிறது) வீழ்ந்த இடம் "தென்கால்" என்றும், மணிக்கட்டு வீழ்ந்த இடம்
"மணியம்பட்டு" என்றும், மார்பு வீழ்ந்த இடம் "குகையநல்லூர் " என்றும் வழங்கப்படுகிறது. (இவ்வூர்களெல்லாம் திருவலத்திற்கு
3 கி.மீ. தொலைவில் உள்ளன.) இந்நிகழ்ச்சியை யொட்டியே நந்தி, காவலுக்காக கிழக்கு நோக்கியுள்ளார்.

காஞ்சனகிரியில் அசுரனின் குருதி பட்ட இடத்திலெல்லாம் இறைவனருளால் அவ்விடத்தைப் புனிதப்படுத்த சிவலிங்கங்கள்
உண்டாயின. (இன்றும் இம்மலையில், குளக்கரையில் எண்ணற்ற சிவலிங்கங்கள் இருப்பதையும் தோண்டினால் கிடைப்பதையும்
நேரில் பார்க்கலாம்.)

அமைவிடம்: காட்பாடிக்கு அண்மையிலுள்ள இருப்புப்பாதை நிலையம். ஆற்காட்டிலிருந்து ராணிப்பேட்டை வழியாக காட்பாடி
செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது. நகரப் பேருந்துகள் அடிக்கடி செல்கின்றன.

மேலும் விபரங்களுக்கு{
http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_vallam.htm
--------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. Good morning sir very useful information about temple thanks for your valuable posting sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    திருவல்லிக்கேணி கோவில் பற்றிய இன்றைய பதிவு ஜோர்! அதில்
    "கொடிமரத்தின் பின்னால் உள்ள
    நந்தியும், மூலவர் சந்நிதியில் உள்ள
    நந்தியும் சுவாமியை நோக்கியிராமல் கிழக்கு நோக்கியுள்ளது" என்பதற்கான
    காரணங்கள் கதை
    வியப்பூட்டுகிறது! அதுபோல, பாதாளேஸ்வரருக்கு ஒரு மண்டலம் அபிஷேகம் செய்யின் மழை பெய்யும்,பஞ்சமும் தீரும் என்பன
    இக் கோவிலின் மகத்துவத்தை
    உயர்த்துகிறது!
    இப்படிப்பட்ட கோவில் இருக்கும் திசை நோக்கி,கைகளை உயர்த்தி
    வணக்கம் மட்டுமே என்னால் முடியும்!அருள்மிகு வில்வநாதரே துணை!!

    ReplyDelete
  3. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful information about temple thanks for your valuable posting sir vazhga valamudan////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  4. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    திருவல்லிக்கேணி கோவில் பற்றிய இன்றைய பதிவு ஜோர்! அதில்
    "கொடிமரத்தின் பின்னால் உள்ள
    நந்தியும், மூலவர் சந்நிதியில் உள்ள
    நந்தியும் சுவாமியை நோக்கியிராமல் கிழக்கு நோக்கியுள்ளது" என்பதற்கான
    காரணங்கள் கதை
    வியப்பூட்டுகிறது! அதுபோல, பாதாளேஸ்வரருக்கு ஒரு மண்டலம் அபிஷேகம் செய்யின் மழை பெய்யும்,பஞ்சமும் தீரும் என்பன
    இக் கோவிலின் மகத்துவத்தை
    உயர்த்துகிறது!
    இப்படிப்பட்ட கோவில் இருக்கும் திசை நோக்கி,கைகளை உயர்த்தி
    வணக்கம் மட்டுமே என்னால் முடியும்!அருள்மிகு வில்வநாதரே துணை!!/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com