மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

Galaxy2007 Class

Galaxy2007 Class
Classroom for Advanced Lessons

Galaxy 2007 Class -Advanced Lessons

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

இரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன!

Galaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.

அந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

வந்தவர்களின் எண்ணிக்கை

8.2.18

Astrology: ஜாதகம்: உங்களுக்குப் பொருத்தமான துணை வேண்டுமா?


Astrology: ஜாதகம்: உங்களுக்குப் பொருத்தமான துணை வேண்டுமா?

திருமணத்திற்குப் பெண் பார்க்கும்போது, முக்கியமாக எதைப் பார்க்க வேண்டும்? இருவருக்கும் ஜாதகம் பொருந்தியுள்ளதா என்பதைத்தான் முதலில் பார்க்க வேண்டும்!!!

தோற்றம், கல்வி, வேலை, வருமானம், பெற்றோர்கள், குடும்ப மேன்மை, போன்றவற்றை எல்லாம் பிறகுதான் பார்க்க வேண்டும்.

1.நட்சத்திரப் பொருத்தம்
(1. நட்சத்திரப் பொருத்தம், 2. கணப் பொருத்தம், 3. மகேந்திரப் பொருத்தம், 4. ஸ்திரி தீர்க்கப் பொருத்தம், 5.யோனிப் பொருத்தம், 6. ராசிப் பொருத்தம், 7. ராசி அதிபதிப் பொருத்தம், 8. வசியப் பொருத்தம், 9. ரஜ்ஜுப் பொருத்தம் (இது முக்கியமானது) 10, வேதைப் பொருத்தம், ஆகிய பத்துப் பொருத்தங்கள் இதில் அடங்கும்)

2.செவ்வாய் தோஷம்
3. பாவசாம்யம்
4. தசா சந்திப்பு
ஆகிய நான்கையும் அலச வேண்டும்!!!!
---------------------------------------------------
ஒருவரின் பிறந்த நக்ஷத்திரத்திற்கு, எந்த நக்ஷத்திரங்கள் பொருந்தும் என்று தெரிந்து கொண்டு ஆண், பெண் ஜாதகங்களை எடுக்க வேண்டும். நமக்குக் கிடைத்திருக்கும் ஜாதகம் சரியாக இருக்கிறதா என்று தெரிந்துகொள்வது அவசியம். கையால் எழுதும் ஜாதகத்தில் சில சமயம் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் கிடைத்தால், ஜாதகங்களைக் கணித்துச் சரிபார்க்க முடியும். ஒரே பஞ்சாங்கத்தில் கொண்டு வந்து பொருத்தம் பார்ப்பது திருப்திகரமாக இருக்கும். நக்ஷத்திரப் பொருத்தம், செவ்வாய் தோஷப் பொருத்தம், பாவசாம்யம், தசா சந்திப்பு என்ற 4 அம்சங்களையும் கவனமாகப் பார்க்க வேண்டும்.

1. யோனிப் பொருத்தம் தம்பதிகளின் அன்யோன்னிய உறவிற்கு அவசியம்.

2. ரஜ்ஜூ தட்டினால் அடிக்கடி இடம் மாறவேண்டி வரலாம், நோய்வாய்ப்பட்டு, திருமண வாழ்க்கை பாதிக்கப்படலாம், பிறக்கும் குழந்தைக்கு தோஷமும் கணவன் அல்லது மனைவி ஆயுளுக்குப் பாதிப்பும் வரலாம்.

3. ஷஷ்டாகமாக ராசி அமைந்தால் கணவன், மனைவி ஒற்றுமை பாதிக்கப்படும்.

4. செவ்வாய் தோஷம் சரியாகப் பொருந்தாவிட்டால், குடும்பத்தில் சண்டை சச்சரவு, பணக்கஷ்டம்.

5. குடும்ப நலன், உடல் நலம், மனநிலை, ஒழுக்கம், ஆயுள், இன்ப துன்பம், மாங்கல்ய பலம், தாம்பத்ய உறவு, படுக்கை சுகம் முதலியவை பாதிக்கப்படலாம்.

6. பாவசாம்யம் அல்லது தோஷசாம்யம் பார்க்காவிட்டால் ஒருவரின் தோஷத்தால் மற்றவர் பாதிக்கப்பட்டு, திருமண வாழ்க்கையில் பல கஷ்டங்கள் வர வாய்ப்பு உள்ளது.

7. தசா சந்திப்பு ஏற்பட்டால் எதிர்காலத்தில் சிரமமான காலகட்டங்களைச் சந்திக்க நேரிடும்.

இப்போது ஜாதகப் பொருத்தத்தின் விவரங்களைப் பார்ப்போம்.

நக்ஷத்திரப் பொருத்தம்

10 நக்ஷத்திரப் பொருத்தங்கள். தினம், கணம், ராசி, யோனி, ரஜ்ஜூ முக்கியமானவை. மற்ற ஐந்து, ராசி அதிபதி, வேதை, ஸ்த்ரீ தீர்க்கம், வசியம், மாகேந்திரம என்பன. தம்பதிகளின் உடலுறவிற்கு யோனிப் பொருத்தம் அவசியம்.

ரஜ்ஜூவில் சிரோ ரஜ்ஜூ, கண்ட ரஜ்ஜூ, ஊரு ரஜ்ஜூ, உதர ரஜ்ஜூ, பாத ரஜ்ஜூ என்று 5 வகை உள்ளது. ஒரே ரஜ்ஜூ அமையக் கூடாது. ரஜ்ஜூவும், யோனிப் பொருத்தமும் அமையாத ஜாதகங்களை ஒதுக்கிவிட வேண்டும். நக்ஷத்திரப் பொருத்தத்தை மட்டும் பார்த்துத் திருமணப் பொருத்தம் முடிவு செய்யக் கூடாது

செவ்வாய் தோஷம்

லக்னத்திலிருந்து 1-2-4-7-8-12ஆம் இடங்களில் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷம், லக்னம், சந்திரன், சுக்கிரன் 3இலிருந்தும், செவ்வாய் தோஷத்தைப் பார்க்க வேண்டும். செவ்வாய் தோஷத்திற்குப் பல விதிவிலக்குகள் உள்ளன. செவ்வாய் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதைப் பொருத்தும் இந்த விதிவிலக்குகளை அனுசரித்தும் கவனமாகப பொருத்த வேண்டும். செவ்வாய் தோஷம் இரத்த சம்பந்தப்பட்டது. செவ்வாய் தோஷம் இல்லாத ஜாதகத்தை செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்த்தால் திருமண வாழ்க்கை கண்டிப்பாகப் பாதிக்கப்படும். நோய்வாய்ப்பட்டு உயிருக்கு ஆபத்து வரக்கூடிய வாய்ப்புகூட உள்ளது.

பாவசாம்யம்

இதனை தோஷசாம்யம் எனவும் சொல்லலாம். பொதுவாக ஒரு ஜாதகத்தில் தோஷத்தை தரக்கூடியவர்கள் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது. இவர்களால் ஏற்படும் தோஷங்களை, லக்னம், சந்திரன், சுக்கிரன் என்ற மூன்றிலிருந்தும் ஒரு கணக்குப்போட்டு, பெண்ணிற்கு எவ்வளவு தோஷம், ஆணுக்கு எவ்வளவு தோஷம். பொருத்தலாமா, கூடாதா என்று தீர்மானிக்கும் மிக முக்கியமான அம்சம் பாவசாம்யம். தம்பதிகளின் நல்வாழ்விற்கு மிகவும் அவசியமானது. பாவசாம்யத்தில் பெண்ணின் தோஷம் ஆணின் தோஷத்தை விடக் குறைவாக இருப்பது நல்லது. இருவருக்கும் சமமாகவும் இருக்கலாம். பாவசாம்ய நிர்ணயத்திற்குச் சில விதி முறைகள் உள்ளன. அவற்றை அனுசரித்து பாவசாம்யத்தை முடிவுசெய்ய வேண்டும்.

தசா சந்திப்பு

எல்லா ஜாதகங்களிலும் ஜனனகால தசா இருப்பு குறிப்பிடப்பட்டு இருக்கும். உதாரணமாகக் சுக்ர தசை 8 வருஷம் 10 மாதம், 12 நாள் என்பது போல இருக்கும். இதிலிருந்து ஆண், பெண் இருவருக்கும் எந்தத் தசை எப்போது மாறுகிறது என்று 70 / 75 வயது வரை பார்க்க வேண்டும். ஒரு வருஷ காலத்திற்குள் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ தசை மாறினால் பொருத்தம் இல்லை என்று தீர்மானிக்கப்படும்.

சில ஜோதிடர்கள் இருபாலருக்கும் ஒரே தசை (சமதசை) நடக்கிறதா என்று பார்ப்பார்கள். தசா சந்திப்பு, அல்லது சமதசை வந்தால், பிற்காலத்தில் சிரமமான கால கட்டங்களை கடக்க வேண்டிவரும். மேலும் களத்திர தோஷம், புத்திர தோஷம், நாடிப் பொருத்தம், ஆயுள் பாவம், சமசப்தமம், லக்ன பொருத்தம், ஷஷ்டாஷ்டகம், காலசர்ப்பதோஷம், நாகதோஷம், எப்படி இருக்கிறது என்று கவனிக்க வேண்டும். இவ்விதம் சரியான முறையில் ஜாதகப் பொருத்தம் பார்க்க அரைமணி நேரமாவது தேவைப்படும். சில நிமிடங்களில் பொருத்தம் பார்த்தால் சரியாகப் பார்க்க முடியுமா? எனது அனுபவத்தில் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்தவர்கள் ஏதாவது ஒரு காலகட்டத்தில் பொருத்தம் பார்க்கிறார்கள். சிலர் காதலித்துவிட்டுப் பொருத்தம் பார்க்கிறார்கள். பொருத்தம் இல்லை என்றால் மனவேதனைப்படுகிறார்கள். தம்பதிகளுக்குள் மனக்கசப்பு ஏற்படுகிறது. பெற்றோர் துயரப்படுகின்றனர். பரிகாரம் தேடுகிறார்கள். திருமாங்கல்யத்தை மாற்றிக்கொள்கிறார்கள். திருமணப் பொருத்தம் பார்த்தும் கஷ்டங்கள் வருகின்றனவே என்று கேட்கலாம். அதற்கு வேறு எவ்வளவோ காரணங்கள் சொல்லலாம். வாழ்க்கையைச் சந்தோஷமாக நடத்துவது தம்பதிகளின் கையில்.

பொருத்தம் பார்க்கலாமா வேண்டாமா என்பது பெற்றோர் கையில்.

பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்வது தான் நல்லது. முடிவு உங்கள் கையில்.
---------------------------------------------------------------------------------------------

சரி, இவற்றை எல்லாம் எங்கே பார்ப்பது? என்னிடம் மென்பொருள் உள்ளது. பெண் மற்றும் பையனின் பிறப்பு விபரங்களைக் கொடுத்தால், அந்த மென் பொருள் இரண்டு ஜாதகங்களையும் அலசி பொருத்தம் உள்ளதா? அல்லது இல்லையா என்று சொல்லிவிடும். ஏ4 அளவில் 2 பக்கங்கள் விபரங்களைக் கொடுப்பதுடன். பொருத்தம் உள்ளது விவாகம் செய்யலாம் என்றோ அல்லது பொருத்தம் இல்லை விவாகம் செய்ய வேண்டாம் என்றோ சொல்லிவிடும்.

அது பணம் கொடுத்து நான் வாங்கி வைத்துள்ள மென்பொருள். ஆகவே பொருத்தம் பார்ப்பதற்கு நீங்கள் சிறிது கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.

திருமணத்திற்குக் காத்து இருப்பவர்களும் எழுதலாம். திருமணம் ஆனவர்களும் எழுதலாம். சரியான துணையோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கும் என்று திருப்தியடையலாம். அல்லது ரிசல்ட் வேறு மாதிரி இருந்தால், தெரிந்து கொண்டு அணுசரித்துக் கொண்டு போகலாம்.

என்ன சரிதானே?

விருப்பம் உள்ளவர்கள் எழுதுங்கள். என்னுடைய மின்னஞ்சல் முகவரி: spvrsubbiah@gmail.com
Subject Boxல்  Matching என்பதை மறக்காமல் குறிப்பிடுங்கள்!!!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

Shanmugasundaram said...

Good morning sir very useful information for nowadays, useful information for younger generation thanks sir vazhga valamudan

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
தாங்கள் ஜோதிடத்தில் மிகுந்த அநுபவம் உள்ளவர் என்பதை யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை!
வகுப்பறை மாணவர்கள் அனைவரும்
தங்களுக்கு கடமைப் பட்டவர்கள்!

ravichandran said...

Respected Sir,

Happy morning... Its great...

Thanks for providing such a wonderful service...

Have a great day.

With kind regards,
Ravi-avn

RAJ said...

தகவலுக்கு நன்றி அய்யா !!!!. கண்டிப்பாக பயன்படுத்தி கொள்கிறோம்.
ந.இராஜு
சென்னை

selvaspk said...

Fate prevails.

Subbiah Veerappan said...

/////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir very useful information for nowadays, useful information for younger generation thanks sir vazhga valamudan/////

நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

Subbiah Veerappan said...

////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
தாங்கள் ஜோதிடத்தில் மிகுந்த அநுபவம் உள்ளவர் என்பதை யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை!
வகுப்பறை மாணவர்கள் அனைவரும்
தங்களுக்கு கடமைப் பட்டவர்கள்!/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... Its great...
Thanks for providing such a wonderful service...
Have a great day.
With kind regards,
Ravi-avn/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ரவிச்சந்திரன்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger Nallaswamy Raju said...
தகவலுக்கு நன்றி அய்யா !!!!. கண்டிப்பாக பயன்படுத்தி கொள்கிறோம்.
ந.இராஜு
சென்னை////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நல்லசாமி ராஜூ!!!!

Subbiah Veerappan said...

//Blogger selvaspk said...
Fate prevails./////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி செல்வா!!!!