மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.5.17

புத ஆதித்ய யோகம்

புத ஆதித்ய யோகம்

யோகங்களைப் பற்றிய பாடங்கள்!!!!

புதனும், சூரியனும் ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அது யோகத்தைக் கொடுக்கும். இந்த யோகத்தின் பெயர் புத ஆதித்ய யோகம்!
-------------------------------
பலன்:
ஜாதகன் அல்லது ஜாதகிக்கு இந்த யோகம் அதீத திறமைகளைக் கொடுக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும்.
சமூகத்தில்/நட்பு வட்டாரங்களில் மதிப்பையும், மரியாதையையும் கொடுக்கும்.
This yoga will give lots of talent, success, honour and fame in society.
-------------------------------
எல்லோருக்கும் கொடுக்குமா?

கொடுக்காது.

ஏன் கொடுக்காது?

சூரிய வட்டத்தில், சூரியனுக்கு மிக அருகில், தொடர்ந்து சூரியனைக் கும்மியடிக்கும் கிரகம் புதன். ஆகவே பலருடைய ஜாதகத்தில் இந்த யோகம் இருக்கும்.

Mercury is the first planet in the Solar System and is very close to the Sun. It cannot be more than one sign away from the Sun in the rasi chart. This yoga, therefore, appears in a lot of charts, but not all the charts can have the benefits of this yoga.

யோகத்தைக் கொடுக்க வேண்டிய கிரகங்கள் வலுவாக இருந்தால் மட்டுமே யோகத்திற்கான பலன்கள் கிடைக்கும்.

ஜாதகத்தில் புதனும், சூரியனும், இருவரில் ஒருவர், 6, 8, 12ஆம் வீடுகளில் ஏதாவது ஒன்றிற்கு அதிபதி என்றால், யோக பலன்கள் இருக்காது. அதுபோல அவர்கள் அமரும் வீடு, அவர்களுக்குப் பகை வீடு அல்லது நீச வீடு என்றாலும் பலன் இருக்காது. அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற வில்லன்களில் ஒருவர் கூட்டாக இருந்தாலும் யோக பலன் இருக்காது.

The Sun and Mercury should be placed well in a chart and also should not themselves be badhakas for the chart
---------------------------------------------------------------------
சிம்மம் (சூரியனின் ஆட்சி வீடு)
மேஷம் (சூரியனின் உச்ச வீடு)
மிதுனம் (புதனின் ஆட்சி வீடு)
கன்னி (புதனின் ஆட்சி மற்றும் உச்ச வீடு)
ஆகிய 4 வீடுகளில் இந்த யோகம் அமைந்திருந்தால் அது பலனளிக்கும்!
மற்ற வீடுகளில்/ராசிகளில் இந்த யோகம் கலவையான (mixed result) பலனைக் கொடுக்கும். அதாவது தண்ணீர் ஊற்றிய பால்
------------------------------------------------------------------------
மேஷ லக்கினக்காரர்களுக்குப் புதன் 3 மற்றும் 6ஆம் வீட்டிற்கு அதிபதி. அந்த லக்கினக்காரர்களுக்கு இந்த யோகம் சொல்லும்படியாகப் பலனளிக்காது

ரிஷப, சிம்ம, துலா மற்றும் மகர லக்கினக்காரர்களுக்கு, இந்த யோகம் இருந்தால் பலன் கிடைக்கும். தனுசு லக்கினக்காரர்களுக்கும் பலன் கிடைக்கும்
------------------------------------------------------------------------
புதன் சூரியனுடன் 6 பாகைக்குள் சேர்ந்திருந்தால் அஸ்தமனமாகிவிடும். அப்போது இந்த யோகம் கிடைக்காது. அதுபோல புதன் வக்கிரகதியில் இருந்தாலும் இந்த யோகம் இல்லை!

சிலர் புதனுக்கு அஸ்தமனம் இல்லை என்பார்கள். அவர்களுக்கு இந்த யோகம் கிடைக்கப் பிரார்த்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27 comments:

  1. Thanks sir, very interesting while reading sir

    ReplyDelete
  2. Bhudan ,Suriuan and chevai pagai endral endha yogam velai seiuma?

    ReplyDelete
  3. ஆசிரியர் ஐயா வணக்கம்.
    தங்கள் புதஆதித்ய யோகம் பாடம் அருமை. நன்றி ஐயா.
    ஒரு சந்தேகம் ஐயா. மேஷத்தில் தாங்கள் குறிப்பிட்டபடி 6 டிகிரிக்கு அப்பால் சூரியனிடமிருந்து புதன் தள்ளி இருக்கிறது. புதன்ஆதித்ய யோகம். மேலும் சூரியன் உச்சம். அருகில் மீனத்தில் சுக்கிரனும் உச்சம்.

    இந்த நிலையில் சித்திரையில் ஆண் குழந்தை பிறந்தால் தந்தைக்கு ஆகாது என்று சிலர் சொல்கிறார்களே ஏன் ஐயா.

    சூரியன் உடல்காரகன். தந்தைகாரகன். எனவே குழந்தையின் உடல் ஆரோக்கியமும், தந்தையின் நிலையும் நன்றாகத்தானே இருக்க வேண்டும்.

    தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும் அன்பன். ந.மோகனசுந்தரம்.

    நன்றி ஐயா.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா!

    ஜோதிடத்தை பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டு கூகளாண்டவரின் துணையை நாடும் போது அவர் என் கைப்பிடித்து தங்களின் வலைப்பூ ஆகிய வகுப்பறை பாடத்திற்கு வழிகாட்டினார்.

    நானும் தங்கள் வகுப்பறைப்பாடங்களை அடிப்படையான முதல் பதிவிலிருந்து வாசிக்க துவங்கினேன்.

    ஆங்காங்கே வரும் குட்டி கதைகளாகட்டும் கண்ணதாசனின் கவிதை வரிகளாகட்டும் தங்களின் அனுபவ நிகழ்வுகளாட்டும் ஒவ்வொன்றும் பதிவுகளை சுவாரசியம் ஆக்கியன.

    ஆகவே தங்களின் முயற்சியை சேவையை பாரட்டி சுய நலத்துடன் ஒரு வாழ்த்து மடலை மின்னஞ்சல் செய்து தங்களின் பதிலுக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன்.

    வாசித்து பார்த்து விட்டீர்களாக என அறிய ஆவலாக இருக்கிறேன் ஐயா!
    (mai.nambiappan@gmail.com)

    மன்னிக்க பின்னுட்டாம் இட்டதிற்கு!

    வாழ்த்துக்களுடன்,
    மணிவண்ணன் நம்பியப்பன்.

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா!

    ஜோதிடத்தை பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டு கூகளாண்டவரின் துணையை நாடும் போது அவர் என் கைப்பிடித்து தங்களின் வலைப்பூ ஆகிய வகுப்பறை பாடத்திற்கு வழிகாட்டினார்.

    நானும் தங்கள் வகுப்பறைப்பாடங்களை அடிப்படையான முதல் பதிவிலிருந்து வாசிக்க துவங்கினேன்.

    ஆங்காங்கே வரும் குட்டி கதைகளாகட்டும் கண்ணதாசனின் கவிதை வரிகளாகட்டும் தங்களின் அனுபவ நிகழ்வுகளாட்டும் ஒவ்வொன்றும் பதிவுகளை சுவாரசியம் ஆக்கியன.

    ஆகவே தங்களின் முயற்சியை சேவையை பாரட்டி சுய நலத்துடன் ஒரு வாழ்த்து மடலை மின்னஞ்சல் செய்து தங்களின் பதிலுக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன்.

    வாசித்து பார்த்து விட்டீர்களாக என அறிய ஆவலாக இருக்கிறேன் ஐயா!
    (mai.nambiappan@gmail.com)

    மன்னிக்க பின்னுட்டாம் இட்டதிற்கு!

    வாழ்த்துக்களுடன்,
    மணிவண்ணன் நம்பியப்பன்.

    ReplyDelete
  6. ரிஷப லக்கினம் 5இல் சூரிய புதன் ராகு மூவர் கூட்டணி. செல்லாமல் போன யோகம் எமக்கு... என் செய்வேன் அய்யா...

    ReplyDelete
  7. ஆசிரியருக்கு வணக்கம்!

    கன்னி லக்னத்திற்கு சூரியன் 12 ஆம் அதிபதி என்னும் போது இந்த யோகம் வேலை செய்யாது என்பது சரிதானே ஆசானே?

    கன்னியா லக்னத்திற்கு புதன் லாபாபதிபதி சூரியன் விரையாதிபதி.
    அப்படியானால் இவர்கள் இணை தனுசு ராசி ஆகிய கேந்திரத்தில் சந்திரனுடன் நிற்பது எத்தகைய பலன் தரும் என அறிய ஆவலாக உள்ளேன் ஐயா!

    சொந்த ஜாதகத்தை வைத்து வரும் கேள்விகளுக்கு தாங்கள் பதிலளிப்பதில்லை என தெரியும். ஆனால் எந்த ஒரு ஜோதிட விதியையும் முதலில் நம் ஜாதகத்தோடு தான் அலசி பார்க்க தோன்றும் என ஆசிரியரே சொல்லி இருக்கிறீர்களே! அந்த நம்பிக்கையில் தான் ஐயா!.

    ReplyDelete
  8. மீன ரேவதியில் லக்னம் மகரத்தில் உத்ராடம் இரண்டாம் பாதத்தில் சூரியன் திருவாேணம் மூன்றாம் பாதத்தில் புதன் நான்காம் பாதத்தில் சுக்ரன் கடகத்தில் ஆய்ல்யம் நான்காம் பாதத்தில் குரு புதன் பாதகாதிபதி புதாத்ய யாேகம் எந்த அளவிற்கு பலன் தரும்

    ReplyDelete
  9. அய்யா மகர லக்கினமாக இருந்து சூரியன் புதன் 6இல் அதாவது மிதுனத்தில் இருந்தால்,அதை
    ஆட்சி என்றா அல்லது மறைவு என்றா? எப்படி அய்யா எடுத்து கொள்வது. புதன் அஸ்தங்கம் இல்லை.அல்லது ஒன்பதுக்கு ஒன்பதாம் அதிபன் ஆட்சி என்று எடுத்து கொள்ளலாமா? கேள்வி தவறாக இருப்பின் மன்னிக்கவும்.

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா,இந்த அஸ்தமன கணக்கு பலவிதமாக சொல்லப்படுகிறது.10 பாகை வரை அஸ்மனம் என்கிறார்கள்.குறிப்பிட்ட பாகைக்குள் இருந்தாலும் அடுத்த ராசியில் இருந்தால் இல்லை என்கிறார்கள்.ஒரே ராசியில் இருந்தாலும் வேறு,வேறு நட்சத்திரத்தில் இரண்டும் இருந்தால் இல்லை என்கிறார்கள்.சோதிட நூல்கள் என்னதான் சொல்கின்றன.நன்றி.

    ReplyDelete
  11. Good post.

    #1
    My view:
    These planetary combinations and forming yoga's apply only to Raasi.

    A friend says:
    It's applicable to navamsa too.


    #2 Some astrologer takes Lagna, if that's not good then they look into Raasi and if that's not good then they take Navamsa for telling something. What is your view on this.


    Can you please clarify.

    ReplyDelete
  12. ////Blogger kmr.krishnan said...
    Very nice Sir.//////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  13. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Thanks sir, very interesting while reading sir/////

    நல்லது. உங்களின் ஆர்வத்திற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  14. //////Blogger Meena Sarathi said...
    Bhudan ,Surian and chevai pagai endral endha yogam velai seiuma?//////

    புதனுக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள பாகையை மட்டும் பாருங்கள் சகோதரி!!!!

    ReplyDelete
  15. ////Blogger VM. Soosai Antony said...
    Super sir////

    நல்லது. நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  16. //////Blogger mohan said...
    ஆசிரியர் ஐயா வணக்கம்.
    தங்கள் புதஆதித்ய யோகம் பாடம் அருமை. நன்றி ஐயா.
    ஒரு சந்தேகம் ஐயா. மேஷத்தில் தாங்கள் குறிப்பிட்டபடி 6 டிகிரிக்கு அப்பால் சூரியனிடமிருந்து புதன் தள்ளி இருக்கிறது. புதன்ஆதித்ய யோகம். மேலும் சூரியன் உச்சம். அருகில் மீனத்தில் சுக்கிரனும் உச்சம்.
    இந்த நிலையில் சித்திரையில் ஆண் குழந்தை பிறந்தால் தந்தைக்கு ஆகாது என்று சிலர் சொல்கிறார்களே ஏன் ஐயா.
    சூரியன் உடல்காரகன். தந்தைகாரகன். எனவே குழந்தையின் உடல் ஆரோக்கியமும், தந்தையின் நிலையும் நன்றாகத்தானே இருக்க வேண்டும்.
    தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும் அன்பன். ந.மோகனசுந்தரம்.
    நன்றி ஐயா./////

    தந்தையின் ஜாதகம் தனியாக வேலை செய்யும். குழந்தைகளால், அந்த ஜாதகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதை மனதில் வையுங்கள் மோகன்! நன்றி!!!!

    ReplyDelete
  17. /////Blogger Manivannan said...
    வணக்கம் ஐயா!
    ஜோதிடத்தை பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டு கூகளாண்டவரின் துணையை நாடும் போது அவர் என் கைப்பிடித்து தங்களின் வலைப்பூ ஆகிய வகுப்பறை பாடத்திற்கு வழிகாட்டினார்.
    நானும் தங்கள் வகுப்பறைப்பாடங்களை அடிப்படையான முதல் பதிவிலிருந்து வாசிக்க துவங்கினேன்.
    ஆங்காங்கே வரும் குட்டி கதைகளாகட்டும் கண்ணதாசனின் கவிதை வரிகளாகட்டும் தங்களின் அனுபவ நிகழ்வுகளாட்டும் ஒவ்வொன்றும் பதிவுகளை சுவாரசியம் ஆக்கியன.
    ஆகவே தங்களின் முயற்சியை சேவையை பாரட்டி சுய நலத்துடன் ஒரு வாழ்த்து மடலை மின்னஞ்சல் செய்து தங்களின் பதிலுக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன்.
    வாசித்து பார்த்து விட்டீர்களாக என அறிய ஆவலாக இருக்கிறேன் ஐயா!
    (mai.nambiappan@gmail.com)
    மன்னிக்க பின்னுட்டாம் இட்டதிற்கு!
    வாழ்த்துக்களுடன்,
    மணிவண்ணன் நம்பியப்பன்.//////

    பாராட்டுக்கள் எல்லாம் எதற்கு? உங்களுடைய அன்பும், தொடர் வாசிப்பு மட்டுமே போதும். நன்றி!!!!

    ReplyDelete
    Replies
    1. சுயநலத்துடன் என ஒரு வார்த்தை இணைத்திருக்கிறேனே ஐயா!
      அதற்காக தான் தங்களது பதிலை எதிர்பார்க்கிறேன்.
      தங்களுக்கு மீண்டும் மின்னஞ்சல் செய்தோ பின்னுட்டம் இட்டோ தொல்லை தர வேண்டாம் என நினைத்திருந்த காரணத்தால் தான் மீண்டும் முயற்சிக்கால் இருந்தேன் ஐயா!
      மடலில் செய்திருக்கும் சிலப்பல அழகியலையாவது தாங்கள் கண்டுவிட்டீர்கள் என பதில் அளித்தால் மனம் அமைதி பெறும். ஒருநாள் உழைப்பு குருநாதா!
      சாம்பிளாக,
      மின்னஞ்சலை பார்த்த உடன் பார்த்துடேன்டா! மடசாம்புராணினு ஒரு பதில் குடுத்துடு குருநாதா!

      Delete
    2. தாங்கள் மின்னஞ்சலை பார்த்துவிட்டீர்களா என அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
      சுயநலத்துடன் என ஒரு வார்த்தையை மிக நுட்பமாக பின்னுட்டத்தில் இட்டிருப்பதை குருநாதர் கவனித்திருப்பார் என நம்புகிறேன்.
      ஒரு நாள் உழைப்பு குருநாதா! பார்த்த உடன் பாத்துட்டேன்டா மட சாம்புராணினு ஒரு பதில் அனுப்பிடு குருநாதா! அப்பதான் மனசுக்கு சந்தோஷமா இருக்கும்.
      மீண்டும் மின்னஞ்சல் அனுப்பி தங்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என கருதியதாலே தங்களுக்கு மீண்டும் மின்னஞ்சல் அனுப்ப முற்படவில்லை.
      இத்தனை நாள் காத்திருந்தும் பதில் வரவில்லை என்னும் போது தான் சிறுது வருத்தம் எனினும் குருநாதர் ரிமைண்டரில் வைத்திருப்பார் என நம்பிக்கைகளுடன்,
      மணிவண்ணன் நம்பியப்பன்.

      Delete
  18. /////Blogger J Murugan said...
    ரிஷப லக்கினம் 5இல் சூரிய புதன் ராகு மூவர் கூட்டணி. செல்லாமல் போன யோகம் எமக்கு... என் செய்வேன் அய்யா.../////

    வேறு இடத்தில் அதற்கான நஷ்ட ஈடும் வழங்கப் பெற்ரிருக்கும் அதையும் பாருங்கள். மொத்தத்தில் அனைவருக்கும் 337 பரல்கள்தான் அதையும் மனதில் கொள்ளுங்கள். கவலையை விடுங்கள். நன்றி!!!!

    ReplyDelete
  19. /////Blogger Manivannan said...
    ஆசிரியருக்கு வணக்கம்!
    கன்னி லக்னத்திற்கு சூரியன் 12 ஆம் அதிபதி என்னும் போது இந்த யோகம் வேலை செய்யாது என்பது சரிதானே ஆசானே?///

    சரிதான்!
    ------------------------------
    கன்னியா லக்னத்திற்கு புதன் லாபாபதிபதி சூரியன் விரையாதிபதி.
    அப்படியானால் இவர்கள் இணை தனுசு ராசி ஆகிய கேந்திரத்தில் சந்திரனுடன் நிற்பது எத்தகைய பலன் தரும் என அறிய ஆவலாக உள்ளேன் ஐயா!
    சொந்த ஜாதகத்தை வைத்து வரும் கேள்விகளுக்கு தாங்கள் பதிலளிப்பதில்லை என தெரியும். ஆனால் எந்த ஒரு ஜோதிட விதியையும் முதலில் நம் ஜாதகத்தோடு தான் அலசி பார்க்க தோன்றும் என ஆசிரியரே சொல்லி இருக்கிறீர்களே! அந்த நம்பிக்கையில் தான் ஐயா!.//////

    கன்னி லக்கினத்திற்கு புதன் லக்கினாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி. மூன்று கிரகங்கள் சேரும் போது கிரக யுத்தம் வேறு இருக்குமே! அதையும் பாருங்கள். அத்துடன் சூரியன் விரையாதிபதியும் ஆகிறார். ஆகவே பலன்கள் இருக்காது!!!!

    ReplyDelete
  20. /////Blogger Raja V N said...
    மீன ரேவதியில் லக்னம் மகரத்தில் உத்ராடம் இரண்டாம் பாதத்தில் சூரியன் திருவோணம் மூன்றாம் பாதத்தில் புதன் நான்காம் பாதத்தில் சுக்ரன் கடகத்தில் ஆய்ல்யம் நான்காம் பாதத்தில் குரு புதன் பாதகாதிபதி புதாத்ய யோகம் எந்த அளவிற்கு பலன் தரும்///////

    சூரியனுக்கும் புதனுக்கும் 10 பாகைக்கு மேல் சேர்க்கையில் இருந்தால் பலன் உண்டு. ஆகவே பாதத்தை மட்டும் பார்க்காமல் பாகையையும் பாருங்கள் நண்பரே! நன்றி!!!

    ReplyDelete
  21. ////Blogger saravanan vpn said...
    அய்யா மகர லக்கினமாக இருந்து சூரியன் புதன் 6இல் அதாவது மிதுனத்தில் இருந்தால்,அதை
    ஆட்சி என்றா அல்லது மறைவு என்றா? எப்படி அய்யா எடுத்து கொள்வது. புதன் அஸ்தங்கம் இல்லை.அல்லது ஒன்பதுக்கு ஒன்பதாம் அதிபன் ஆட்சி என்று எடுத்து கொள்ளலாமா? கேள்வி தவறாக இருப்பின் மன்னிக்கவும்.//////

    6ல் இருந்தால் அது மறைவிடம். ஆகவே அங்கே அமர்வதால் பலன் இருக்காது!!!!

    ReplyDelete
    Replies
    1. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்! பழைய பாடம் கீழே சொடுக்கவும்.
      http://classroom2007.blogspot.in/2008/07/blog-post_17.html?m=1

      Delete
  22. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,இந்த அஸ்தமன கணக்கு பலவிதமாக சொல்லப்படுகிறது.10 பாகை வரை அஸ்மனம் என்கிறார்கள்.குறிப்பிட்ட பாகைக்குள் இருந்தாலும் அடுத்த ராசியில் இருந்தால் இல்லை என்கிறார்கள்.ஒரே ராசியில் இருந்தாலும் வேறு,வேறு நட்சத்திரத்தில் இரண்டும் இருந்தால் இல்லை என்கிறார்கள்.சோதிட நூல்கள் என்னதான் சொல்கின்றன.நன்றி./////

    10 பாகைக்குள் அஸ்தமனம் என்பதுதான் சரி. பல நூல்கள் அதைத்தான் சொல்கின்றன. நாமும் அதையே எடுத்துக்கொள்வோம்!!!! நன்றி!!!

    ReplyDelete
  23. Blogger selvaspk said...
    Good post.
    #1
    My view:
    These planetary combinations and forming yoga's apply only to Raasi.
    A friend says:
    It's applicable to navamsa too.
    #2 Some astrologer takes Lagna, if that's not good then they look into Raasi and if that's not good then they take Navamsa for telling something. What is your view on this.
    Can you please clarify./////

    நவாம்சம் என்பது ராசியின் விரிவாக்கம். (Magnified verson of the Rasi) ஆகவே ராசியை மட்டும் பார்ப்பதுதான் நல்லது!!! உங்கள் கண்ணோட்டம் சரிதான்!!! நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com