மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.2.17

வாரணாசியின் வரலாறு!


வாரணாசியின் வரலாறு!

*காசியை பற்றி உங்களுக்கான சில சுவாரிசியமான தகவல்கள் :*

பனாரஸ் என்று இன்று நாம் சொல்லும் ஊர் கங்கை கரைக்கு அப்பால் விரிந்து கிடக்கும் மாநகரம்.

 பட்டுநெசவும், பாத்திரங்கள் உற்பத்தியும் பெருகிய தொழில்நகரம். அதற்கும் கங்கை கரையோரம் இருக்கும் பழைய காசிக்கும் தொடர்பில்லை.

பனாரஸ் வாசிகள் பழைய காசிக்கு வருவதில்லை. இங்கே உள்ளவர்கள் பெரும்பாலும் வேறு பகுதியைச் சார்ந்தவர்கள். அன்றாடம் வந்து குவியும்
பயணிகள். அவர்களுக்குச் சடங்குகள் செய்து வைக்கும் புரோகிதர்கள். சிறுவணிகர்கள். பெரும்பாலும் எல்லா இந்திய சாதியினருக்கும் காசியில் தனியான மடங்கள் உண்டு. அவர்கள் அங்கே வரும்போது தங்குவதற்காக. தமிழகத்தின் முக்கியமான சைவ மடங்களுக்கு காசியில் கிளைகள் உண்டு. முன்பெல்லாம் இளைய தம்புரான் காசியில்தான் இருப்பார். பெயருடன் காசிவாசி என்று போட்டுக் கொள்வார்கள். குமரகுருபரர் நெடுங்காலம் காசியில் வாழ்ந்தவர். குமரகுருபரர் மடம் என்றே தனியாக இருக்கிறது.

 எல்லா மாநிலத்தவர்களுக்கும் அவர்களுக்குரிய பிராமணர்கள் உண்டு. தமிழ் அய்யர்களின் ஒரு சமூகமே காசியில் இருக்கிறது. காசி அழகற்ற
நகரம். அதன் நெரிசலுக்கு ஈடு இணையே கிடையாது. காரணம் இன்றைய வண்டிகள் ஏதும் பழக்கத்துக்கு வராத மிகப் பழங்காலத்தில் அதன்

பெரும்பகுதி உருவாக்கப்பட்டுவிட்டது. மிக மிக குறுகலான சந்துகளான் ஆனது காசி. சந்துகள் எல்லாம் எப்படியோ கங்கையின் படிக்கட்டு ஒன்றை
நோக்கி சென்று இறங்கும். தெருக்கள் கடப்பைக்கல் பாவப்பட்டவை. பெரும்பாலான சந்துகளில் மனிதர்கள் மட்டுமே நடக்க முடியும். சற்றுப் பெரிய

சந்துகளில் சைக்கிள் ரிக்ஷாக்கள் நகரும். சைக்கிள் ரிக்ஷாக்கள் தான் இப்பகுதியின் அதிகமாக உள்ள வாகனங்கள். ஆனால் காசியளவுக்கு சுவாரஸியமான இன்னொரு நகரம் இந்தியாவில் இல்லை. பலவகையான மக்கள் வந்து குழுமியபடியே இருக்கிறார்கள்.

தெருக்களில் எப்போதும் ஆர்வமூட்டும் ஒரு விசித்திர முகம் தென்படும். சின்னச்சின்ன சந்துகளில் வாழ்க்கை நுரைத்துக் கொந்தளிக்கிறது. மக்கள்
மீது பாசம் கொண்ட ஒருவன் காசியை எப்படியோ விரும்ப ஆரம்பித்துவிடுவார்.

காசி மரணத்தின் நகரமும் கூட. இங்கே மரணம் தான் முக்கியமான தொழில் முக்கியமான பேசு பொருள். பொழுதுபோக்கும் மரணம் தான். காசி
என்றாலே பிரபலமான *மணிகர்ணிகா கட்,* *அரிச்சந்திர கட்* என்ற இரு பெரும் சுடலைப் படிக்கட்டுகள் தான் நினைவுக்கு வரும்.

 காசியில் ஒருபோதும் சிதை அணையக்கூடாது என்று ஒரு வரம் உள்ளதாம். காசிவாசி காலபைரவ மூர்த்திக்கு சிதைதான் பலி. அந்த வரம் இன்று
வரை இல்லாமல்லாகவில்லை. எப்போதும் சுடலைப்படிகளில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கும். பிணங்கள் எரிய பிணங்கள் மஞ்சள் சரிகை மூடி
காத்து கிடக்கும். பிணங்களை சைக்கிளில் வைத்து கட்டியபடி சந்துகளில் ஓட்டி வருவார்கள். ஆட்டோ ரிக்ஷாக்களின் மேலே ஏற்றி வருவார்கள்.

சாற்றி வைத்து விட்டு அமர்ந்து டீ குடிப்பார்கள். காசியில் மரணம் அதன் பொருளை இழந்துவிட்டிருக்கிறது.

காசி அன்னியர்களின் நகரம். இந்தியாவெங்கும் இருந்து சாமியார்களும் பைராகிகளும் காசிக்கு தான் வந்து கொண்டிருக்கிறார்கள். விதவிதமான
சாமியார்களை இங்கே காணாலாம். அஹோரிகள் என்று சொல்லப்படும் கரிய உடை தாந்த்ரீகர்கள், நாகா பாபாக்கள் என்று சொல்லப்படும்
நிர்வாணச் சாமியார்கள் அவர்களில் உக்கிரமானவர்கள்.

 இதைத்தவிர உலகம் முழுக்கவிருந்து ஹிப்பிகள் நாடோடிகள் ஓரினச்சேர்க்கையாளர்கள் போதை அடிமைகள் காசிக்கு வந்தபடியே இருக்கிறார்கள்.

அவர்கள் அனைவருக்கும் காசியில் இடமிருக்கிறது.

காசி போதையின் நகரம். போதை என்றால் கஞ்சா அல்லது சரஸ் அல்லது ஃபாங். கஞ்சாகுடிக்கும் சிலும்பிகளை தெருவில் போட்டு விற்கிறார்கள்.

எங்கே கைநீட்டினாலும் கஞ்சா கிடைக்கும். மேலும் தீவிரமான போதைப் பொருட்களும் சாதாரணமாகக் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்..

காலையில் கடுங்குளிரில் நடக்கச்சென்றால் படித்துறை ஓரமாக சாமியார்கள் கஞ்சாவுடன் அமர்ந்திருப்பதைக் காணலாம். காசி வைராக்யத்தின்
துறவின் நகரம். காசி பைத்தியத்தின் நகரம். காசி சுடலைச் சாம்பல் பூசிய பித்தனின் வாசஸ்தலம்.

காசியில் கலைகளும் இலக்கியமும் தத்துவமும் செழித்திருந்தன. இன்றும் காசி இவற்றின் தலைநகர் தான். கபீர் ரவிதாஸ், முன்ஷி பிரேம்சந்த்
போன்ற பல கவிஞர்கள் எழுத்தாளர்கள் இங்கே வாழ்ந்தார்கள். உஸ்தாத் பிஸ்மில்லா கான், ரவிசங்கர் போன்ற இசைமேதைகளின் நகரம் இது.

காசியின் தத்துவ சதஸுகள் புகழ்பெற்றவை.

 காசிவித்யாபீடம் இன்று காசி பல்கலைகழகமாக பெருகி வளர்ந்துள்ளது. பாரதி தன் தத்துவக் கல்வியை காசியிலேயே பெற்றார்.

காசியின் மொழி இந்தியாக இருந்தாலும் இங்குள்ள பூர்வீக மொழி போஜ்புரி தான். போஜ்புரி சம்ஸ்கிருதத்தின் அபப்பிரம்ஸ மொழி என்பார்கள்.

அவிமுக்தகா, ஆனந்தகானனம், மகாமசானம், சுரந்தானனன், பிரம்ம வர்த்தம், ரய்மகம் போன்ற பல பெயர்கள் காசிக்கு புராணங்களில் உண்டு.

 *ரிக் வேதத்திலேயே சிவருத்ரனின் இருப்பிடமாக காசி* குறிப்பிடப்பட்டிருக்கிறது.

*வாரணாசியின் வரலாறு:*

வாரணாசி மேல் படையெடுத்த முதன் அன்னிய ஆட்சியாளர் முகமது கஜினி [1033] பின்னர் முகமது கோரி. [1193] இவர்களால் இந்நகரம் முழுமையாக
அழிக்கப்பட்டு விட்டது.. சில வருடங்களுக்குள் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது. அக்பர் காலத்தில் இந்நகரத்தை புதுப்பிக்க நிதியுதவியும் ஊக்கமும்

அளிக்கப்பட்டது. முகலாய கட்டிடக்கலை பாணியிலான படித்துறைகளும் அரண்மனைகளும் அமைந்தன. ஆனால் ஔரங்கஜீப் இந்நகரை அழித்து
இதன் பெயரையும் முகம்மதாபாத் என்று மாற்றினார்.

பின்னர் மராட்டியர்கள் காசியைக் கைப்பற்றினார்கள். இன்றுள்ள காசி மராட்டியர் காலத்தில் இடிபாடுகளில் இருந்து மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது.

மராட்டிய வம்சத்தவரான மன்னர் காசியின் சிற்றரசரானார். இவர்கள் காசியின் மறுகரையில் ராம்நகர் என்ற ஊரை நிறுவி காசியை ஆண்டனர்.
 பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குறுநில மன்னர்களாக இருந்து சுதந்திரம் கிடைப்பதுவரை நீடித்தனர்.

இப்பொழுது இருக்கும் விஸ்வநாதர் கோயில் மராட்டியர் காலத்தில் கட்டப்பட்டது தான்..

 சிவப்புச்சாயமிடப்பட்ட சிறிய கோயில் அப்பகுதி இடிபாடுகளாகக் கிடந்து தன்னிச்சையாக உருவாகி வந்ததாகையால் மிகமிக நெரிசலானது.

கோயிலுக்கு இருவர் மட்டுமே இடிக்காமல் செல்லக்கூடிய சந்து வழியாகவே செல்லவேண்டும். கடுமையான போலீஸ் சோதனை. செல் ஃபோன்கள்
அனுமதி இல்லை.. அதிக கூட்டம் இல்லை என்றாலும் நெரிசல் இருக்கும்.

 காசியில் நாமே லிங்கத்துக்கு நேராக பூஜை செய்யலாம் என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால் எந்த விதமான ஒழுங்கும் முறையும் இல்லாத இடம் இது. நெடுங்காலம் இடிபாடுகளாகக் கிடந்த பின் மீட்கப்பட்டு தன் போக்கில் உருவாகி வந்தது. இந்த இடத்தை கைப்பற்றி வைத்திருந்த

படகோட்டும் குகா சாதியினருக்கு இப்பகுதி மீது மேலாதிக்கம் உள்ளது. பாரம்பரியமான சடங்குகள் முறைகள் எல்லாம் மறைந்துவிட்டன.

நாடெங்கும் இருந்து வந்த பல்வேறு இன மக்கள் அவர்களுக்கு தோன்றிய வகையில் வழிபடுகிறார்கள். தொட்டு வணங்குவது தழுவ முற்படுவது
மேலேயே விழுந்துவிடுவது எல்லாம் உண்டு.

காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி ஔரங்கஜீப் பழைய கோயிலை இடித்துக் கட்டிய பழைய மசூதியின் கும்பம் உள்ளது. அதற்கு கடுமையான
போலீஸ் காவல் போடப்பட்டிருக்கிறது.

அருகே விசாலாட்சி அன்னபூரணி ஆலயங்கள் இருக்கிறது..

தஸாஸ்வமேத காட்டில் ஏழரை மணிக்கு கங்கா ஆர்த்தி சடங்கு உண்டு. கங்கையை தெய்வமாக உருவகித்து அப்படித்துறையை கருவறையாக ஆக்கி செய்யபபடும் விரிவான பூஜைதான் அது. சங்கு ஊதி மலரும் தூபமும் காட்டி விளக்கால் ஆரத்தி எடுக்கிறார்கள். ஐந்து இளம் பூசாரிகள் ஒரு நடனம் போல நிதானமாக ஒத்திசைவுடன் செய்யும் இந்த பூஜை ஒரு அழகிய கலைநிகழ்ச்சி போலவும் இருக்கும். ஏராளமான பேர் கூடுவார்கள். கங்கையின் பழைமையும் அதன் மாட்சியும் நம் நினைவில் இருந்தால் இது ஒரு உணர்ச்சிகரமான நிகழ்ச்சியே.
--------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

  1. ////Blogger kmr.krishnan said...
    Good information/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,காசியை பற்றி திரைப்படத்திலும்,குறும்படங்களிலும் கண்டிருக்கிறேன்.ஆனால் அனைத்து முகங்களையும் அறியத்தருவதாக கட்டுரை அமந்துள்ளது.நன்றி.

    ReplyDelete
  3. Respected Sir,

    Pleasant morning...

    Thanks for sharing holy information.

    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. வணக்கம் குருவே!
    காசிக்குப் போகவேண்டும் என்று நினைத்தாலே புண்ணியம் என்பது வழக்கு!
    அ்க்காசியைப் பற்றிய விரிவான தொகுப்பு ஜோர்!
    போய் வந்த பலனே கிடைக்கும் போலும்!
    மிக நல்ல பகிர்வு!

    ReplyDelete
  5. அருமையான பகிர்வு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. ////Blogger SELVARAJ said...
    சிவ சிவா////

    ஓம் நமசிவாய!

    ReplyDelete
  7. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,காசியை பற்றி திரைப்படத்திலும்,குறும்படங்களிலும் கண்டிருக்கிறேன்.ஆனால் அனைத்து முகங்களையும் அறியத்தருவதாக கட்டுரை அமந்துள்ளது.நன்றி.///

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!

    ReplyDelete
  8. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Pleasant morning...
    Thanks for sharing holy information.
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!!!!

    ReplyDelete
  9. Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    காசிக்குப் போகவேண்டும் என்று நினைத்தாலே புண்ணியம் என்பது வழக்கு!
    அ்க்காசியைப் பற்றிய விரிவான தொகுப்பு ஜோர்!
    போய் வந்த பலனே கிடைக்கும் போலும்!
    மிக நல்ல பகிர்வு!//////////

    போய் வந்த பலன் கிடைத்ததா? மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  10. /////Blogger நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    அருமையான பகிர்வு. பகிர்வுக்கு நன்றி.////

    நன்றி நண்பரே! என்ன பெயர் சாமி? நண்டு என்பது பரவாயில்லை - அது எதற்கு நொரண்டு என்ற சொற் பிரயோகம்? எதுகைக்காகவா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com