மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.6.16

Story: kuttik kathai: படித்து ரசித்த ஒரு அருமையான கதை

Story: kuttik kathai: படித்து ரசித்த ஒரு அருமையான கதை

ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில் பல மாணவர்கள் படித்து வந்தனர். ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர் .

அதில் ஒரு மாணவன் எல்லோரையும்விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான். ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக் கொண்டான் . இதனால் அங்கிருந்த அனைத்து மாணவர்களிலும் அவனே சிறந்தவனாகத் திகழ்ந்தான் .

ஆசிரியரும் அவனிடம் தனிப்பட்ட அன்பும் , கவனமும் செலுத்தினார்.

சிறிது காலம் சென்றது. அவனிடம் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அவன் எல்லோரையும் ஏளனமாக நோக்க ஆரம்பித்தான். தன்னை விட மூத்த மாணவர்களைக் கூட மதிப்பதில்லை . பலருக்கு மத்தியில் மூத்த மாணவர்களிடம் கடினமாகக் கேள்வி கேட்டு, அவர்கள் விடை தெரியாமல் விழிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து, அவர்கள் அவமானத்தில் அழும்வரை கேலி செய்யத் தொடங்கினான்.

ஆசிரியரின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டிவிட்டது. இந்த அகம்பாவம் அவனை அழித்து விடும் என்பதை உணர்ந்தார்.ஒரு நல்ல மாணவன் நாசமாவதை அவர் விரும்பவில்லை.

அவனது பிழையை அவனுக்கு உணர்த்த விரும்பினார். நேரடியாக அறிவுரை சொன்னால் அவன் கண்ணை மறைக்கும் அகம்பாவத்தில் அவரையே கூட எதிர்த்துப் பேசக் கூடும்.

வேறொரு வழியை யோசித்தார்.மறுநாள் அவனை அழைத்தார்.

"மகனே ! இன்று அதிகாலையில், பக்கத்து கிராமத்தில் உள்ள என் நண்பர் ஒருவர் இறந்து விட்டார். அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர். பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு. நீ போய் பக்கத்துத் தெருவிலுள்ள தச்சு ஆசாரியிடம் போய் விவரத்தைச் சொல்லி ஒரு தரமான சவப்பெட்டியை செய்து வைக்கச் சொல். இன்று மதியம் அவரது அடக்கத்திற்குத் தேவைப் படுகிறது. இதை உன்னால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் " என்றார் . கடைசியாக அவர் அவனை உயர்த்திச் சொன்ன வார்த்தைகள் அவனை மிகவும் உற்சாகப்படுத்தி விட்டன.

''இதோ உடனே செய்து முடிக்கிறேன் ஐயா" என்று சொல்லிவிட்டு ஆசாரி வீட்டுக்கு விரைந்தான்.

ஆசாரி அவனை வரவேற்று அவன் வந்த விஷயத்தைக் கேட்டார். அவனும் மதியத்திற்குள் ஒரு தரமான சவப்பெட்டி வேண்டுமென்ற விஷயத்தை சொன்னான்.

ஆசாரி இறந்து போனவரைக் குறித்த விபரங்களைக் கேட்டார்.

அவனும் ஆசிரியர் சொன்னபடியே " அவர் தர்க்க சாஸ்'திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர். பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு."

அவன் சொல்லி முடிப்பதற்குள் ஆசாரி சூடாகி விட்டார். "ஏன்டா ! இன்னிக்கு நீ பொழுது போக்க நான்தான் கிடைச்சேனா ? செத்த பிணத்தோட விவரம் சொல்லாம வேறென்னமோ உளர்றியே! நீ படிச்சவன்தானா ? " என்றார்.

இந்தக் கேள்வி அவனை ஆத்திர மூட்டியது " அவரைப் பத்தி இவ்வளவு சொல்லியும் புரியலைன்னு சொன்னா நீங்கதான் ஒரு அடி முட்டாள் " என்றான்.

ஆசாரி "அடேய் அறிவு கெட்டவனே ! என்னதான் படிச்சிருந்தாலும், விருதெல்லாம் வாங்கி இருந்தாலும் எனக்கு அது பிணந்தான். எனக்கு வேண்டியது அதோட உயர, அகலந்தான். நீங்க படிக்கிற படிப்பெல்லாம் உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும் தான். உனக்குப் பெட்டி வேணும்னா மரியாதையா போய் அளவெடுத்துக் கிட்டு வா" என்றார்.

எங்கோ பளீரென்று அடி விழுந்தது அவனுக்கு. "மனித அறிவு இவ்வளவுதானா ? இதுக்காகவா இத்தனை பேரை அவமானப்படுத்தினேன் ? "

அவமானம் பொங்கியது .

கூனிக் குறுகியபடியே ஆசியரின் முன்னால் போய் நின்றான் .

ஆசிரியர் சிரித்துக் கொண்டே கேட்டார், " என்னப்பா ! சவப்பெட்டி அடிச்சாச்சா " .

அவன் பதில் சொன்னான்.

"அடிச்சாச்சு. என்னோட தலை கனத்துக்கு ".

ஆசிரியர் சொன்னார்: செல்லமே ! என்னதான் படித்தாலும் இது அழியப் போகிற சரீரந்தான். இதை உணர்ந்து மனத்தாழ்மையாய் நடப்பதே உண்மையான ஞானம்...!

இதை அறியாமல் / உணராமல் பலபேர்கள் அப்படித்தான் திரிகின்றார்கள்!
-----------------------------------------------------------------------
படித்து ரசித்த ஒரு அருமையான கதை: உங்களுக்கு அறியத் தந்துள்ளேன். கதை எப்படி இருக்கிறது சாமிகளா?

அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

38 comments:

  1. அருமையான நீதிக்கதை.நன்றி ஐயா!

    ReplyDelete
  2. அருமை ஐயா.ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலங்களை அழித்து (அழிக்க முடியாது - எனவே அடக்கி) அன்பு கருணை பாசத்தால் மட்டுமே மேன்மை அடையமுடியும் என்பதை சொல்லாமல் சொல்லும் கதை. சொல்லிய பாங்கு அருமை ஐயா. நன்றி.

    ReplyDelete
  3. குட்டிக்கதை அருமையிலும் அருமை ஐயா...
    நன்றி ,
    செ . ஆறுமுகவேல்

    ReplyDelete
  4. பலருக்கு இது
    படிப்பதற்கு மட்டுமே...

    என்ன செய்ய...
    எப்படி இருந்தாலும்

    சாகும் வரை
    வாழ்ந்தாக வேண்டும் என

    வாழ்த்திக் கொண்டு...
    வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் ...

    ReplyDelete
  5. Ayya vanakkam. Arumaiyana kathai. Anbudan Kittuswamy

    ReplyDelete
  6. Respected Sir,

    Happy morning... This article touched my bottom of heart.

    Simply superb.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  7. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    நல்லதொரு கருத்தாழம் கொண்ட கதை. சாட்டையடி அறிவு ஜீவிகளுக்கு!!.
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  8. அருமையான பதிவு வாத்தியார் அவர்களே!!!


    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  9. இது நிச்சயம் பலருடைய அறிவுக்கண்களை திறக்கக்கூடிய கதைதான் அய்யா .
    அரசு திருப்பத்தூர்

    ReplyDelete
  10. உள்ளேன் ஐயா
    உன்மைதான் ஐயா மிகவும் சரிய்க உனர்தின கதையின் கருத்து. அருமை

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா
    மன்னிக்கவும் ஐயா புதிய வகுப்பறையில் பாடங்கள் இன்னும் வரவில்லை ஐயா. வகுப்பறைக்கு புதிய கடவு சொல் ஏதேனும் உள்ளதா ஐயா.

    ReplyDelete
  12. வணக்கம் ஐயா,உயிர் போய்விட்டால் அது பிணம்தான்.நேற்றுவரை பெயர் சொல்லி அழைத்தவர்கள்,body எப்போ வரும் எப்போது எடுப்பார்கள் என்றுதானே கேட்கிறார்கள்.எளிய கதையில் இதை எடுத்து சொன்ன கதை ஆசிரியர்க்கு நன்றி.

    ReplyDelete
  13. கதை நன்றாக உள்ளது குருசாமியே! சாமிகளா என்று அழைத்தீர்கள், அதான் நீங்கள் குருசாமியாகிவிட்டீர்கள்!!
    நல்ல நீதி கதை.! பகிர்வுக்கு நன்றி!!
    பன்னீர்செல்வம்.

    ReplyDelete
  14. அன்பின் குருவே வாத்தியார் ஐயா,

    பதிவு வழமைபோல் என் உள்ளத்தை தொட்டது மிக்க நன்றி ஐயா. மேலும் இத்தருணத்தில் எனக்கு நினைவுக்கு வரும் கதை இந்த உலகமே தனக்கு போதாது என்றவனுக்கு ஆறடி நிலமே போதுமானதாக இருந்தது என்பதும் உலக சரித்திரத்தில் அலெக்ஸாண்டரைப்போல் வேறு ஒரு மாவீரன் கிடையாது என்பதால்தான் அவரை 'அலெக்ஸாண்டர் தி கிரெட்' என்று நினைவில் வைத்திருக்கிறது வரலாறு. அப்படிப்பட்ட மாவீரனுக்கு ஆறடி நிலம் தான் இறுதி...


    அன்புடன்
    விக்னசாயி.

    ==================================

    ReplyDelete
  15. /////Blogger kmr.krishnan said...
    அருமையான நீதிக்கதை.நன்றி ஐயா!////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  16. /////Blogger mohan said...
    அருமை ஐயா.ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலங்களை அழித்து (அழிக்க முடியாது - எனவே அடக்கி) அன்பு கருணை பாசத்தால் மட்டுமே மேன்மை அடையமுடியும் என்பதை சொல்லாமல் சொல்லும் கதை. சொல்லிய பாங்கு அருமை ஐயா. நன்றி./////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி மோகன்!

    ReplyDelete
  17. ///Blogger Arumugavel said...
    குட்டிக்கதை அருமையிலும் அருமை ஐயா...
    நன்றி ,
    செ . ஆறுமுகவேல்/////

    நல்லது. நன்றி ஆறுமுகவேல்!

    ReplyDelete
  18. /////Blogger வேப்பிலை said...
    பலருக்கு இது
    படிப்பதற்கு மட்டுமே...
    என்ன செய்ய...
    எப்படி இருந்தாலும்
    சாகும் வரை
    வாழ்ந்தாக வேண்டும் என
    வாழ்த்திக் கொண்டு...
    வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் ...//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  19. ////Blogger kittuswamy palaniappan said...
    Ayya vanakkam. Arumaiyana kathai. Anbudan Kittuswamy/////

    நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிட்டுசாமி!

    ReplyDelete
  20. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... This article touched my bottom of heart.
    Simply superb.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  21. ////Blogger Vasudevan Tirumurti said...
    அருமை!/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    நல்லதொரு கருத்தாழம் கொண்ட கதை. சாட்டையடி அறிவு ஜீவிகளுக்கு!!.
    அன்புடன்,
    -பொன்னுசாமி./////

    வாங்க பொன்னுசாமி அண்ணா! ரொம்ப நாளாய் உங்களைக் காணவில்லையே? என்னவென்று சொல்லுங்கள்!

    ReplyDelete
  23. ////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    அருமையான பதிவு வாத்தியார் அவர்களே!!!
    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.////

    நல்லது. நன்றி தூத்துக்குடிக்காரரே!

    ReplyDelete
  24. ////Blogger ARASU said...
    இது நிச்சயம் பலருடைய அறிவுக்கண்களை திறக்கக்கூடிய கதைதான் அய்யா .
    அரசு திருப்பத்தூர்////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. /////Blogger siva kumar said...
    உள்ளேன் ஐயா
    உன்மைதான் ஐயா மிகவும் சரியாக உணர்த்தின கதையின் கருத்து. அருமை/////

    உண்மைதான். உணர்ந்தால் சரிதான். நன்றி சிவகுமார்!

    ReplyDelete
  26. /////Blogger siva kumar said...
    வணக்கம் ஐயா
    மன்னிக்கவும் ஐயா புதிய வகுப்பறையில் பாடங்கள் இன்னும் வரவில்லை ஐயா. வகுப்பறைக்கு புதிய கடவு சொல் ஏதேனும் உள்ளதா ஐயா./////

    பாடங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் அனைத்தும் பதிவாகும். கடவுச்சொல்லில் எந்த மாற்றமும் இல்லை!

    ReplyDelete
  27. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,உயிர் போய்விட்டால் அது பிணம்தான்.நேற்றுவரை பெயர் சொல்லி அழைத்தவர்கள்,body எப்போ வரும் எப்போது எடுப்பார்கள் என்றுதானே கேட்கிறார்கள்.எளிய கதையில் இதை எடுத்து சொன்ன கதை ஆசிரியர்க்கு நன்றி./////

    திருமூலர் அந்தக் காலத்திலேயே சொல்லியிருக்கிறார்:
    ஊர்கூடி உரக்க அழுதிட்டு
    பேரினை நீக்கி பிணமென்று கூப்பிட்டு
    சூரையன் காட்டிடையே கொண்டுப்போய் சுட்டுவிட்டு
    நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே!

    ReplyDelete
  28. /////Blogger Selvam R said...
    கதை நன்றாக உள்ளது குருசாமியே! சாமிகளா என்று அழைத்தீர்கள், அதான் நீங்கள் குருசாமியாகிவிட்டீர்கள்!!
    நல்ல நீதி கதை.! பகிர்வுக்கு நன்றி!!
    பன்னீர்செல்வம்.//////

    நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பன்னீர்செல்வம்!!!

    ReplyDelete
  29. ////Blogger Vicknaa Sai said...
    அன்பின் குருவே வாத்தியார் ஐயா,
    பதிவு வழமைபோல் என் உள்ளத்தை தொட்டது மிக்க நன்றி ஐயா. மேலும் இத்தருணத்தில் எனக்கு நினைவுக்கு வரும் கதை இந்த உலகமே தனக்கு போதாது என்றவனுக்கு ஆறடி நிலமே போதுமானதாக இருந்தது என்பதும் உலக சரித்திரத்தில் அலெக்ஸாண்டரைப்போல் வேறு ஒரு மாவீரன் கிடையாது என்பதால்தான் அவரை 'அலெக்ஸாண்டர் தி கிரேட்' என்று நினைவில் வைத்திருக்கிறது வரலாறு. அப்படிப்பட்ட மாவீரனுக்கு ஆறடி நிலம் தான் இறுதி...
    அன்புடன்
    விக்னசாயி./////

    பலருக்கு அந்த ஆறடி நிலமும் இல்லை. உடம்பை எரித்துவிடுகிறார்கள். பிடி சாம்பல்தான் மிச்சம். அதையும் ஆறுகளில் கலக்கிவிடுகிறார்கள்!

    ReplyDelete
  30. அறிய அறிவை மாற்றி அமைக்கும் கதை அல்லது ஒரு சொல் கதை

    ReplyDelete
  31. /////Blogger siva kumar said...
    வணக்கம் ஐயா
    மன்னிக்கவும் ஐயா புதிய வகுப்பறையில் பாடங்கள் இன்னும் வரவில்லை ஐயா. வகுப்பறைக்கு புதிய கடவு சொல் ஏதேனும் உள்ளதா ஐயா./////

    பாடங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் அனைத்தும் பதிவாகும். கடவுச்சொல்லில் எந்த மாற்றமும் இல்லை!//

    ஐயா வணக்கம்.
    கடவுச்சொல் பயன்படுத்தி பாடம் படிப்பது எப்படி.
    நான் வகுப்பறைக்கு பாதியில் வந்தவன். விபரம் தெரியவில்லை. விபரம் எந்தப்பதிவில் உள்ளது.

    நன்றி ஐயா.

    ReplyDelete
  32. Nalla story.how can you collect these stories

    ReplyDelete
  33. ////Blogger Bala Krishnan said...
    அறிய அறிவை மாற்றி அமைக்கும் கதை அல்லது ஒரு சொல் கதை////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  34. ////Blogger Damodar said...
    அருமை ஐயா.////

    நல்லது. நன்றி தாமோதர்!

    ReplyDelete
  35. ////Blogger mohan said...
    /////Blogger siva kumar said...
    வணக்கம் ஐயா
    மன்னிக்கவும் ஐயா புதிய வகுப்பறையில் பாடங்கள் இன்னும் வரவில்லை ஐயா. வகுப்பறைக்கு புதிய கடவு சொல் ஏதேனும் உள்ளதா ஐயா./////
    பாடங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் அனைத்தும் பதிவாகும். கடவுச்சொல்லில் எந்த மாற்றமும் இல்லை!//
    ஐயா வணக்கம்.
    கடவுச்சொல் பயன்படுத்தி பாடம் படிப்பது எப்படி.
    நான் வகுப்பறைக்கு பாதியில் வந்தவன். விபரம் தெரியவில்லை. விபரம் எந்தப்பதிவில் உள்ளது.
    நன்றி ஐயா./////

    டிக்கெட்டை வாங்கிக் கொண்டு இருக்கையில் அமர்ந்து படத்தைப் பார்க்க வேண்டியதுதான். பயனர் பெயர், கடவுச்சொல் இரண்டையும் பயன் படுத்த் உள்ளே சென்று படத்தைப் பாருங்கள்!

    ReplyDelete
  36. /////Blogger Subathra Suba said...
    Nalla story.how can you collect these stories////

    எனக்கு நட்பு வட்டம் பெரியது. நண்பர்களிடம் இருந்து நிறைய வருகின்றன. அவற்றில் சிலவற்றைத் தேர்வு செய்து பதிவிடுகிறேன். சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com