மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.6.16

Astrology Quiz: புதிர் எண்.110 ஜாதகர் ஜீவனத்திற்கு என்ன செய்தார்?


Astrology Quiz: புதிர் எண்.110 ஜாதகர் ஜீவனத்திற்கு என்ன செய்தார்?

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள். ஜாதகத்தை அலசி, உங்கள் கணிப்பைச் சொல்லுங்கள்!கேள்வி:

எப்படிப்பட்ட ஜாதகம்?

1. வேலை செய்யும் ஜாதகமா?
2. வியாபாரம் செய்யும் ஜாதகமா?
3. சுயதொழில் செய்யும் ஜாதகமா?
4. சுகஜீவன ஜாதகமா?

மொத்தத்தில் ஜீவனத்திற்கு ஜாதகர் என்ன செய்தார்?

நேற்று வெளியூர் பயணத்தினால் பதிவிட முடியவில்லை. ஆகவே இன்று பதிவிட்டுள்ளேன். உங்கள் பதில்களை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6:30 மணிக்குள் அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

 1. ஜாதகர் கும்ப ராசிக்காரர். ரிஷ்ப லக்கினக்காரர். யோககாரகர்கள்: சூரியன், சனி //
  யோகமில்லாதவர்கள்: குரு, சந்திரன் // நல்ல பலன்களைக் கொடுப்பவர்:புதன் //
  ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சூரியன், சனி ஒன்று சேர்ந்து, கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும் //
  மாரக அதிபதி: (killer) குரு, சந்திரன்

  1) 2ம் வீட்டதிபதி / ரிஷ்ப லக்கினதிற்கு நல்ல பலன்களைக் கொடுப்பவர் மற்றும் வியாபாரகாரகன் புதன் லக்கினாதிபதி சுக்கிரனோடு சேர்ந்து 8ல் மறைந்துவிட்டார். வியாபார பாக்கியம் கெட்டது. // வியாபாரம் செய்யும் ஜாதகம் இல்லை.
  2) 4ம் வீட்டதிபதி மற்றும் ரிஷ்ப லக்கினதிற்கு யோககாரகர் சூரியன் திரிகோணம் 9ல் கேதுவோடு கூட்டு மற்றும் ராகு பார்வை // 4ல் தனகாரகன் மற்றும் ரிஷ்ப லக்கினதிற்கு யோகமில்லாத மாரக அதிபதி குரு // 4ம் வீட்டை ரிஷ்ப லக்கினதிற்கு யோககாரகர் சனீச்வரனனுடன் உள்ள விரையதிபதி செவ்வாய் பார்க்கிறார். பாதிக்கு பாதி சுகஸ்தானம் கெட்டது // சுகஜீவன ஜாதகம் இல்லை.
  3) 9ம் வீட்டதிபதி மற்றும் ரிஷ்ப லக்கினதிற்கு யோககாரகர் சனீச்வரன் லக்கினத்தில் விரையதிபதி செவ்வாயோடு கூட்டு//9ல் சூரியன் திரிகோணம் பெற்று கேதுவோடு கூட்டு மற்றும் ராகு பார்வை // பாக்கியஸ்தானம் கெட்டது
  4) 9 மற்றும் 10ம் வீட்டதிபதி சனீச்வரன் லக்கினத்தில் விரையதிபதி செவ்வாயோடு கூட்டு // 4ல் உள்ள மற்றும் ரிஷ்ப லக்கினதிற்கு யோகமில்லாத மாரக அதிபதி தனகாரகன் குரு 10ம் வீட்டை பார்க்கிறார். பத்தாம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளது. ஒரு பக்கம் கேது சூரியன், மறுபக்கம் மாந்தி. விரையதிபதி செவ்வாய் உடன் உள்ள கர்மகாரகன் சனீச்வரனும் 10ம் வீட்டை பார்க்கிறார். ரிஷ்ப லக்கினதிற்கு யோகமில்லாத மாரக அதிபதி சந்திரன் 10ல் உள்ளார். பாதிக்கு பாதி ஜீவனஸ்தானம் கெட்டது. சுயதொழில் செய்யும் ஜாதகம் இல்லை.
  5) 2ம் வீட்டதிபதி புதன் லக்கினாதிபதி சுக்கிரனோடு சேர்ந்து 2ம் வீட்டை பார்க்கிறார். 2ம் வீட்டதிபதி புதன் லக்கினாதிபதி சுக்கிரனோடு லக்கினத்திற்கு 8ல் உள்ளதால் பாதிக்கு பாதி தனஸ்தானம் ஓகே. 11ம் வீட்டதிபதி மற்றும் தனகாரகன் மற்றும் ரிஷ்ப லக்கின யோகமில்லாத மாரக அதிபதி குரு 4ல் கேந்திரம் பெற்றுள்ளார். பாதிக்கு பாதி லாபஸ்தானம் ஓகே. 1ல் உள்ள கர்மகாரகன் சனி 10ம் வீட்டை பார்க்கிறார். ஜாதகர் வேலைக்குச் செல்ல வேண்டியவர். அதில்தான் அவர் மேன்மையடைய முடியும்.
  6) சுக்கிரனுக்கு, 9ஆம் அதிபதி மற்றும் 7ஆம் அதிபதியுடன் தொடர்பு இல்லை. ஆகவே வெளிநாடு சென்று வேலை செய்யும் அமைப்பு ஜாதகத்தில் இல்லை. ஆசாமி இங்கேயே வேலை செய்ய வேண்டியதுதான்.
  சந்தானம் சேலம்

  ReplyDelete
 2. SIR,

  JODAHAKAR SUYA THOZHIL VIVASHAYAM SEITTAR {IVAR ORU VIVASAAEE ]
  ஜடகர் விவசாயம் செய்தார்


  ReplyDelete
 3. SIR,

  JODAHAKAR SUYA THOZHIL VIVASHAYAM SEITTAR {IVAR ORU VIVASAAEE ]
  ஜடகர் விவசாயம் செய்தார்


  ReplyDelete
 4. ஜாதகர் 27 ஜனவரி 2014 ; மதியம் 2 50 க்கு சென்னையில் பிறந்ததாக எடுத்துக்கொண்டேன்.

  பத்தாம் அதிபதி சனி லக்கின பாவத்தில் இருப்பதால் சுயதொழிலில் சிறந்து விளங்குவார்.தன ஸ்தானத்திற்கு லக்கினாதிபதி சுக்ரன், 2,5 ஸ்தானதிபதி புதனின் பார்வை கிடைப்பதும், தைரிய ஸ்தானதிபதிக்கு லாப ஸ்தானதிபதியின் பார்வை கிடைப்பதும், கஜ கேசரி யோகம் இருப்பதும் சுய தொழிலில் நல்ல முன்னேற்றத்தினைக் கொடுத்து இருக்கும்.

  ReplyDelete
 5. வணக்கம் ஐயா,11ம்பாவத்தில் மாந்தி.மேலும் யோககாரன் சனி லக்னத்தில் இருந்து பார்வை.அரசனை போல வாழ்வு.ஆனால் எப்படி?.சுயதொழில்,வியாபாரம்,வேலை எதுவாக இரு ந்தாலும் 10ம் இடம் கர்மஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும்.ஆனால்10ல் அமர்ந்த மூன்றாம் அதிபதி சந்திரனுக்கு,விரையாதிபதி செவ்வாய் மற்றும் எட்டாம் அதிபதி குரு பார்வை.வியாபாரத்திற்க்கு புதன் நன்றாக இருக்க வேண்டும்.ஆனால் புதனும், லக்னாதிபதியும் எட்டில் மறைவு.சுக ஸ்தான 4ம் அதிபதி சூரியன்,9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில்.தாய்,தந்தை சொத்து நிரம்ப பெற்றவர்.மூன்றாம் இடத்தில் ராகு எனவே பங்காளி பிரச்சினை இல்லை.எனவே வேலை,வெட்டி எதுவும் இல்லாமல் சுக ஜீவனம்.விரையாதிபதி லக்னத்திலேயே இருப்பதால் அவருடைய வாழ்க்கை யாருக்கும் பயன்படாது.நன்றி.ஐயா பின்னுட்ட பதிலில் தவறுகளை சுட்டினால் சரியான விதிகளை எல்லோரும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

  ReplyDelete
 6. அரசியல்வாதி பல லட்சம் கோடி.. என
  அப்படி பட்டியல் போட்டால்...

  பணமா வாழ்க்கை...
  பதவியா வாழ்க்கை ...

  போலி தனமாக வாழும் மக்களுக்கு
  போதும் என்பதை எடுத்து சொல்லுங்க

  ReplyDelete
 7. Vanakkam Iyya,

  Rishaba lagna Jaathagar

  Lagnathipathi - 8il + (2&5 aam veetirku - budhan udaya kootu + Guru vin paarvayum lagnathipathiku ullathu).

  Thozhil/vyabaram seivatharku - lagnathipathi + 10aam athipathi + 11 aam athipathi valuvaaga iruka vendum

  Lagnathipathi - sukkran 8il , navasamathil aatchi balam petraalum + sevvai + neecha kethu kootu

  10aam athipathi - Intha lagnathirku yoga kaaragana aana saniswaran - Lagnathil + sevvai(7&12 athipathi udan) kootu - navamsathil - Uchha budhan + saniswaran, Sevvai vargothamamam

  11aam athipathi - Guru bhagavan ( Lagnathirku 4 il - 11 am veetirku 6 il ullar)

  10aam veetil - chandran (3aam athipathi + Guru vin neradi paarvayil)

  2 aam veetirku athipathi budhan 8il amarnthalum avanin neradi paarvai 2aam veetiruku ullathu + navamsamthil ucham + yoga kaaraganudan kootu

  Budhan nandraga irunthaal thaan vyabaram seiya mudiyum + dasa buthiyum atharku etra vaaru iruka vendum

  Jaathagarku aarambam ragu dasa (Sadayam 1 aam paatham) - aduthathu guru dasa - guru 8aam athipathiya irunthalum endrum nallavare - 4 aam veetil amarnthu suga jeevanathirku vazhi seithu ullar, melum 10aam veetirku - saniswaran + guruvin paarvai ullathu

  Jaathagar vyabaram seiahlaam velaiku sella avasiyam illai.

  guru dasa, yoga kaargan dasa budha dasa endru - varisayaga nalla dasaigal nadai peruvaathal , melum jaathagaruku 2,5, guru + yogakaargan saniswaran paarvai balamaga ullathal vyabaram nandra nadai perum

  Nandri,
  Bala

  ReplyDelete
 8. புதிர் எண் :110க்கான அலசல் :

  ரிசப லக்கினம், கும்ப ராசி ஜாதகர்.லக்கினாதிபதி சுக்கிரன் மற்றும் தனாதிபதி புதன் 8ல் மறைந்து விட்டனர்.கர்ம காரகனும், யோகாதிபதியும், தர்மகர்மாதிபதியுமான சனி பகவான் லக்கினத்திலேயே அமர்ந்து பகைவரான செவ்வாயுடன் கூட்டணி வைத்துள்ளார். இதனால் ஜாதகர் வீடு, மனை சம்பத்தப்பட்ட ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்.

  ReplyDelete
 9. வாத்தியாருக்கு வணக்கம்,

  பத்தாம் அதிபதி சனி லக்னத்தில், உடன் 7,12 அதிபதி செவ்வாய். ஆதலால் அரசியல் (அ) மாமனார் மூலமாய் தொழில் செய்பவராக இருக்கலாம்.
  11ல் (லாபஸ்தானத்தில்) மாந்தி. ஆதலால் வியாபாரம், சுயதொழிலில் சிறப்பித்திருக்க முடியாது.
  செவ்வாய் வர்கோத்தமத்தில் உள்ளது (12 அயன சயன போக பாக்கியத்தை தருவது.) ஆதலால் ஜீவனம் சுகஜீவனம்.

  தொடர்ந்து நிறைய பாடம் மற்றும் புதிர் பகுதியை நடத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.
  நன்றி ஐயா.
  தா.சுதர்சன்,
  காஞ்சிபுரம்.

  ReplyDelete
 10. அய்யா வணக்கம்.

  இவர் வேலை செய்பவர்.
  2 ஆம் & 5ஆம் வீட்டு புதன் 8ல் மறைவு(Business Out), 10 ஆம் வீட்டுக்கு சொந்தக்காரர் லக்னத்தில் உள்ளார், லக்னாதிபதி 8ல் மறைவு ஆகையால் இவர் வேலை செய்வது உத்தமம்.
  11ல் மாந்தி ஆகையால் சுகவாசியாக இருக்க முடியாது.அந்த வீட்டுக்காரர் 4ல் (கேந்திரம்) ஆகையால் வேலை செய்வார். கடின உழைப்பாளி ஏன் என்றல் சனி (8,9 ஆம் வீட்டு அதிபதி) லக்னத்தில் உள்ளார்.

  நன்றி.
  அன்புடன் சா. குமணன்.

  ReplyDelete
 11. வணக்கம் ஆசிரியர் ஐயா. உங்கள் பூரண நலம் நாடி திருச்செந்தூர் முருகப்பெருமானை வேண்டுகின்றேன்.

  புதிர் எண்:110.

  சனவரி 27. வருடம் 1944, மதியம் 2.55 மணிக்கு பிறந்தவரின் சாதகம் இது. சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக்கினம்.

  1. பத்தாம் வீட்டு அதிபதி லக்கினத்தில் அமர்ந்திருப்பதால் தீவிரமாக தொழில் செய்வார்.

  2. கஜகேசரி யோகம்.

  3. கர்மக்காரகன் (தொழில் காரகன்) சனி பகவான் தனது சிறப்புப் பத்தாம் பார்வையால் தனது வீட்டையே பார்க்கிறார். மேலும் அது அவருக்கு ஆட்சி வீடு.

  4. தனாதிபதி புதன், தன் 7ஆம் பார்வையால் இரண்டாம் வீட்டைப் பார்க்கின்றார். மேலும் அது அவருக்கு ஆட்சி வீடு.

  5. குருவின் 5 ஆம் பார்வையில் புதனும் சுக்கிரனும். 7ஆம் பார்வையில் சந்திரன். 9ஆம் பார்வை மேஷத்தில். அதன் அதிபதி செவ்வாய் லக்கினத்தில்.

  6. நவாம்சத்தில் சூரியன் உச்சம். புதன் உச்சம். ராகு உச்சம். சுக்கிரன் ஆட்சி. செவ்வாய் வர்க்கோத்தமம். புதன் உச்சம் மட்டுமல்ல நவாம்சத்தில் பத்திற்குரியவன்.

  7. லக்கினத்திற்கு 30 பரல்.

  8. ஜீவன ஸ்தானத்தில - 10ஆம் வீட்டில் - 31 பரல். அதனால் நல்ல தொழில்.

  9. லாப ஸ்தானத்தில் - 11ஆம் வீட்டில் - 35 பரல். அதனால் நல்ல லாபம்.

  10. சுய வர்க்கத்தில் தொழில் காரகன் செவ்வாய்க்கு 7 பரல். மனகாரகன் சந்திரனுக்கு 6 பரல். குருவிற்கு 7 பரல். தனாதிபதி புதனுக்கு 7 பரல்.

  இப்படியாக எல்லா விதத்திலும் இச்சாதகர் நல்ல நிலையில் இருப்பதால் தொழிலில் வியாபாரத்தில் கொடி கட்டிப்பறந்து நல்ல சம்பாதித்து சுகஜீவனத்துடன் திகழ்ந்து வருவார்.

  எனது பதில் சரியா ஐயா.

  தங்களின் பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்கள் அன்பு மாணவன். ந.மோகனசுந்தரம். திருநெல்வேலி.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com