மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.6.16

வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும்?

வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும்?

இதற்கான  விடையை சீன தத்துவ ஞானியான லா வோ த் ஸவின் ஒரு கதை மூலம் பார்க்கலாம்.

'என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை' என்றான் ஒரு அரசன் ஞானியிடம்.

'உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா' என்று ஞானி கேட்டார்.

'என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை' என்றான்.

'அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு' என்றார் ஞானி.

'எடுத்துக் கொள்ளுங்கள்'என்றான் மன்னன்.

'நீ என்ன செய்வாய்' என்றார் ஞானி.

'நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்' என்றான் அரசன்.

'எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்.' என்றார். ”சரி” என்றான் மன்னன்.

ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனைக் காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.

'அது கிடக்கட்டும்' என்ற ஞானி 'நீ இப்போது எப்படி இருக்கிறாய்' என்று கேட்டார்.

'நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்'

'முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?'

'இல்லை'

'அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்?' விழித்தான் அரசன். ஞானி சொன்னார்.

'அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல. எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும். இதே மனநிலையுடன் நீ இந்த நாட்டை நீயே ஆட்சி செய்' என்று கூறி விடைபெற்றார் ஞானி.

ஐம்புலன்களையும் இடைவிடாமல் நெறிப்படுத்துபவன் மனம் ஒருமித்தவன் ஆகிறான். அவனிடம் சலனங்கள் ஏற்படுவதில்லை .

இன்று எது
உன்னுடையதோ
அது நாளை
வேறு ஒருவருடையது.
எங்கிருந்து
பெறப்பட்டதோ
அது அங்கேயே
திரும்பப்பெறப்படும்.
சந்தேகம் என்பது
கொடிய நோய்.
மரணமே முடிவு.

நம்பிக்கை என்பது
உயிரைப் போன்றது.
அதுவே நிரந்தரமான
மகிழ்ச்சியாகும்.

நம்பிக்கையோடு
வாழ்வோம்.
மகிழ்ச்சியைப்
பெறுவோம்.
---------------------------
படித்ததில் பிடித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------
வாழ்க்கைத் தத்துவம்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13 comments:

 1. வணக்கம் குருவே!
  மிக அருமையான பகிர்வு!

  ReplyDelete
 2. Mikka nandri iyya.manathukku migavum ithamags irunthathu.

  ReplyDelete
 3. அன்பு வாத்தியாரே!.,

  நல்ல பதிவு. தன்னுடையது என்ற பற்றுதல் தான் பல் பிரச்சனைகளுக்கு காரணம் என்ற எண்ணத்தை சிறு கதை மூலம் விளக்கியது அருமை. "இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல. எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்." ‍ மிக முக்கியமான‌ வரிகள், இதனை மனதில் சொல்லிக்கொண்டே இருக்கனும் போல.. முயற்சி செய்கிறேன்.
  பகிர்விற்கு நன்றி! ஐயா!

  ReplyDelete
 4. வணக்கம் ஐயா,மனம்தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்று என்மனதிற்கு நன்றாக தெரிகிறது.அது வலிமையாக இருந்தால் துன்பம் இல்லை என்றும் புரிகிறது.துன்பம் இல்லை எனும்போது மகிழ்ச்சியானால் அது இன்பத்தை விரும்புகிறது என்றுதானே பொருள்.இன்பத்தையும்,துன்பத்தையும் சமநிலையில் வைப்பதுதான் வலிமை என்றால் அந்த வலிமையை பெற எளிமையான சூத்திரங்கள் ஏதும் இருந்தால் (உடலுக்கு உடற்பயிற்ச்சி முறைகள் போல்) சொல்லி அருளுங்கள் ஐயா.நன்றி.

  ReplyDelete
 5. மனோநுகூலே ப்ரதமம் ப்ரசஸ்தம் என்று
  ரிஷிகள் கூற்றுப்படி மனம் தான் சகல
  நடத்தைகளையும் தீர்மானிக்கிறது.
  இதையேதான் பெரியோர்கள் எண்ணம் போல் வாழ்க்கை எனக்கூறினார்கள்.

  ReplyDelete
 6. ஆசிரியர் ஐயா, வணக்கம்.
  //ஐம்புலன்களையும் இடைவிடாமல் நெறிப்படுத்துபவன் மனம் ஒருமித்தவன் ஆகிறான். அவனிடம் சலனங்கள் ஏற்படுவதில்லை .
  //
  அருமையான வரிகள் ஐயா.
  நன்றி.

  ReplyDelete
 7. ////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே!
  மிக அருமையான பகிர்வு!////

  நல்லது. நன்றி வரதராஜன்!

  ReplyDelete
 8. //////Blogger Subathra Suba said...
  Mikka nandri iyya.manathukku migavum ithamags irunthathu.////

  நல்லது. நன்றி சகோதரி!

  ReplyDelete
 9. /////Blogger Selvam R said...
  அன்பு வாத்தியாரே!.,
  நல்ல பதிவு. தன்னுடையது என்ற பற்றுதல் தான் பல் பிரச்சனைகளுக்கு காரணம் என்ற எண்ணத்தை சிறு கதை மூலம் விளக்கியது அருமை. "இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல. எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்." ‍ மிக முக்கியமான‌ வரிகள், இதனை மனதில் சொல்லிக்கொண்டே இருக்கனும் போல.. முயற்சி செய்கிறேன்.
  பகிர்விற்கு நன்றி! ஐயா!/////

  ஆஹா... அப்படியே முயற்சி செய்து மனதை வசப்படுத்துங்கள். நன்றி!

  ReplyDelete
 10. /////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,மனம்தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்று என்மனதிற்கு நன்றாக தெரிகிறது.அது வலிமையாக இருந்தால் துன்பம் இல்லை என்றும் புரிகிறது.துன்பம் இல்லை எனும்போது மகிழ்ச்சியானால் அது இன்பத்தை விரும்புகிறது என்றுதானே பொருள்.இன்பத்தையும்,துன்பத்தையும் சமநிலையில் வைப்பதுதான் வலிமை என்றால் அந்த வலிமையை பெற எளிமையான சூத்திரங்கள் ஏதும் இருந்தால் (உடலுக்கு உடற்பயிற்சி முறைகள் போல்) சொல்லி அருளுங்கள் ஐயா.நன்றி.//////

  இதற்கு முன் உள்ள பின்னூட்டத்தில் அன்பர் செல்வம் அவர்கள் எழுதியுள்ளதைப் படியுங்கள். அதுதான் வழி! நன்றி ஆதித்தன்!

  ReplyDelete
 11. //////Blogger ambharish gopalan said...
  மனோநுகூலே ப்ரதமம் ப்ரசஸ்தம் என்று
  ரிஷிகள் கூற்றுப்படி மனம் தான் சகல
  நடத்தைகளையும் தீர்மானிக்கிறது.
  இதையேதான் பெரியோர்கள் எண்ணம் போல் வாழ்க்கை எனக்கூறினார்கள்./////

  உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 12. ////Blogger mohan said...
  ஆசிரியர் ஐயா, வணக்கம்.
  //ஐம்புலன்களையும் இடைவிடாமல் நெறிப்படுத்துபவன் மனம் ஒருமித்தவன் ஆகிறான். அவனிடம் சலனங்கள் ஏற்படுவதில்லை .
  //
  அருமையான வரிகள் ஐயா.
  நன்றி./////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி மோகன்!

  ReplyDelete
 13. மிக அருமையான பகிர்வு!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com