மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.6.16

கவிதை: நம்மைத் திக்குமுக்காட வைக்கும் கவியரசரின் பாடல்!

கவிதை: நம்மைத் திக்குமுக்காட வைக்கும் கவியரசரின் பாடல்!

புனித ரமதான் நோன்பு துவங்கி சில நாட்கள்  ...

"பாவமன்னிப்பு" படத்தில் "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் அவர்கள் முதன்முதலாக படத்தில் தோன்றும் காட்சியில் ஒரு அற்புதமான பாடலை வைத்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார் படத்தின் இயக்குனர் ஏ.பீம்சிங்.

"மெல்லிசை மன்னர்கள்" விஸ்வநாதன் - ராமமூர்த்தி, "கவியரசு" கண்ணதாசன் ஆகியோரோடு அந்த அற்புதமான சூழ்நிலைக்கு அமர்ந்தார்கள்.

படத்தின் கதைப்படி சிவாஜி கணேசன் அவர்கள் முஸ்லீமாக இருந்தாலும், பிறப்பால் ஒரு இந்து வீட்டில் எம்.ஆர். ராதாவுக்கு மகனாக பிறந்திருப்பார். அதன்படி, அந்த நுட்பத்தை வெளிப்படுத்தும் விதமாக பாட்டு அமைய வேண்டும் என்று விரும்பி இயக்குனர் ஏ.பீம்சிங் இதை கண்ணதாசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி அவர்களிடம் தெரிவித்தார். வழக்கம்போல், "மெல்லிசை மன்னர்கள்" மெட்டமைக்க, கண்ணதாசன் பாட்டு எழுதிக் கொடுத்தார்.

பாடலை படித்துப் பார்த்த ஏ.பீம்சிங்கிற்கும், விஸ்வநாதனுக்கும் முதலில் ஒன்றும் விளங்கவில்லை. "இதில் என்ன புதுமை இருக்கிறது, நுட்பம் உள்ளது" என குழம்பினார்கள். திரும்ப, திரும்ப படித்துப் பார்த்துவிட்டு கண்ணதாசனிடம் தயங்கிக் கேட்டார்கள்.

கண்ணதாசன் வழக்கமான தன்னுடைய குழந்தைப் புன்னகையை உதிர்த்துக் கொண்டே "பாடலைப் படித்துக் காட்டுங்கள்" என்றார்.

எம்.எஸ்.வி. உடனே,

" எல்லோரும் கொண்டாடுவோம்... எல்லோரும் கொண்டாடுவோம். அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம்" என்று மெட்டில் பாடினார்.

கண்ணதாசன், "இன்னுமா புரியலை, பிறப்பால் இந்துவாக பிறந்து வாலிப வயதை எட்டிப் பிடித்தவன் ஒரு முஸ்லீமாக வளர்ந்திருந்தாலும், அவனை அறியாமல் இந்து மத தத்துவமான "ஓம்" என்ற நாத மந்திரம் அவன் வாயினில் இருந்து வருவதுபோல் பாடலை அமைத்துள்ளேன். இப்பொழுது பாருங்கள்" என்று பாடிக் காட்டினார்.

"எல்லோரும் கொண்டாடு'வோம்' (ஓம்)... எல்லோரும் கொண்டாடு'வோம்' (ஓம்)...vஅல்லாவின் பெயரைச் சொல்லி, நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடு'வோம்' (ஓம்).. என்று முடித்ததுமே, "மெல்லிசை மன்னர்" அவரைக் கட்டிப்பிடித்து "கவிஞரே... இந்த உலகத்தில் உம்மை
ஜெயிக்க யாரய்யா இருக்கிறார்" என்று உச்சி முகர்ந்தார்.. கூடவே இயக்குனர் ஏ.பீம்சிங்கும் தமக்கு வேண்டியது கிடைத்து விட்டது என்று சந்தோஷக் கடலில் ஆழ்ந்தார்.

அதே போல இந்தப் பாடல் முழுக்க "முதலுக்கு அன்னை என்போம்(ஓம்), முடிவுக்கு தந்தை என்போம்(ஓம்)"  என வார்த்தை விளையாட்டு தொடர்ந்து நிகழ்ந்து நம்மை திக்கு முக்காட வைக்கும் அந்தப் பாடல்.
--------------------------------------
அந்தப் பாடலை முழுமையாக, உங்களுக்காக் கீழே கொடுத்துள்ளேன்:

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------
எல்லோரும் கொண்டாடுவோம்;
அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி

(எல்லோரும்)

கல்லாகப் படுத்திருந்து களித்தவர் யாருமில்லே
கைகால்கள் ஓய்ந்த பின்னே துடிப்பதில் லாபமில்லே
வந்ததை வரவில் வைப்போம் செய்வதைச் செலவில் வைப்போம்
இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்!

(எல்லோரும்)

நூறுவகைப் பறவை வரும், கோடிவகைப் பூமலரும்
ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா
கறுப்புமில்லே வெளுப்புமில்லே, கனவுக்கு உருவமில்லே
கடலுக்குள் பிரிவுமில்லே, கடவுளில் பேதமில்லே
முதலுக்கு அன்னை என்போம் முடிவுக்குத் தந்தை என்போம்
மண்ணிலே விண்ணைக் கண்டு ஒன்றாய்க்கூடுவோம்

(எல்லோரும்)

ஆடையின்றிப் பிறந்தோமே ஆசையின்றிப் பிறந்தோமா
ஆடிமுடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ?
படைத்தவன் சேர்த்துத் தந்தான் வளர்த்தவன் பிரித்து வைத்தான்

எடுத்தவன் மறைத்துக் கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்

இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்"

(எல்லோரும்)

படம்: பாவ மன்னிப்பு (வருடம் 1961)

கருத்துக்களோடு, என்னதொரு சொல் விளையாட்டையும் நடத்தியிருக்கிறார் பாருங்கள்!

”நூறுவகைப் பறவை வரும், கோடிவகைப் பூமலரும், ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா” என்று எழுதினார் பாருங்கள் - அதுதான் இந்தப் பாடலின் முத்தாய்ப்பான வரி!
-----------------------


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. மனதை கவர்ந்த வரிகள்..

    ///ஆடையின்றிப் பிறந்தோமே ஆசையின்றிப் பிறந்தோமா
    ஆடிமுடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ?
    படைத்தவன் சேர்த்துத் தந்தான் வளர்த்தவன் பிரித்து வைத்தான்////

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,இந்த பாடலை பல முறை கேட்டிருக்கிறேன்.கருத்தாழம் மிக்க பாடல்.ஆனால் இப்படி ஒரு கவிதை நுணுக்கம்!ஆஹா!மெய் சிலிர்க்கிறது.நன்றி.

    ReplyDelete
  3. ஆசிரியர் ஐயா, வணக்கம்.

    /
    கறுப்பில்லே வெளுப்புமில்லே,
    கனவுக்கு உருவமில்லே
    கடலுக்குள் பிரிவுமில்லே,
    கடவுளில் பேதமில்லே....
    /

    இந்த வரிகள் என் மனம் கவர்ந்தவை.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  4. What poet mean here

    முதலுக்கு அன்னை என்போம்
    முடிவுக்குத் தந்தை என்போம்

    ReplyDelete
  5. Ippothuthan intha padalin karuthu purinthathu.nandri iyya

    ReplyDelete
  6. நான் பார்த்த முதல் தமிழ் படம்.
    நான் ரசித்த முதல் தமிழ் வரிகள்.
    ஆடையின்றிப் பிறந்தோமே ஆசையின்றிப் பிறந்தோமா
    ஆடிமுடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ.

    ReplyDelete
  7. ////Blogger வேப்பிலை said...
    மனதை கவர்ந்த வரிகள்..
    ///ஆடையின்றிப் பிறந்தோமே ஆசையின்றிப் பிறந்தோமா
    ஆடிமுடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ?
    படைத்தவன் சேர்த்துத் தந்தான் வளர்த்தவன் பிரித்து வைத்தான்////

    நல்லது. உங்களின் தெரிவைத் தெரிவித்தமைக்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  8. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,இந்த பாடலை பல முறை கேட்டிருக்கிறேன்.கருத்தாழம் மிக்க பாடல்.ஆனால் இப்படி ஒரு கவிதை நுணுக்கம்!ஆஹா!மெய் சிலிர்க்கிறது.நன்றி.////

    மெய் சிலிர்த்ததைத் தெரிவித்த மேன்மைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////Blogger kmr.krishnan said...
    Nice old song of our times./////

    ஆமாம். நமது காலத்துப் பாடல். அதில் எனக்கும் மகிழ்ச்சிதான். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  10. ////Blogger mohan said...
    ஆசிரியர் ஐயா, வணக்கம்.
    /
    கறுப்பில்லே வெளுப்புமில்லே,
    கனவுக்கு உருவமில்லே
    கடலுக்குள் பிரிவுமில்லே,
    கடவுளில் பேதமில்லே....
    /
    இந்த வரிகள் என் மனம் கவர்ந்தவை.
    நன்றி ஐயா./////

    நல்லது. உங்களின் தெரிவிற்கு நன்றி மோகன்!

    ReplyDelete
  11. ////Blogger selvaspk said...
    What poet mean here
    முதலுக்கு அன்னை என்போம்
    முடிவுக்குத் தந்தை என்போம்///////

    ஈன்று புறந்தருவது (முதலில்) அன்னை
    சான்றோனாக்கி நம்மை (முடிவில்) மனிதனாக்குவது நந்தை!

    ReplyDelete
  12. //////Blogger Subathra Suba said...
    Ippothuthan intha padalin karuthu purinthathu.nandri iyya////////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    நான் பார்த்த முதல் தமிழ் படம்.
    நான் ரசித்த முதல் தமிழ் வரிகள்.
    ஆடையின்றிப் பிறந்தோமே ஆசையின்றிப் பிறந்தோமா
    ஆடிமுடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ.///////

    ஆடிமுடிக்கும் நிலைபற்றி கவியரசர் தன்னுடைய பாடல்கள் பலவற்றில் குறிப்பிட்டுள்ளார். நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com