மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.3.14

எண் எட்டின் புதிய பயன்பாடு!

 

எண் எட்டின் புதிய பயன்பாடு!

எண் எட்டு சனியின் எண். எட்டு என்றவுடனேயே பாதிப்பேர்கள் காணாமல் போய்விடுவார்கள். எங்களுக்கும் எட்டிற்கும் ஆகாது என்பார்கள்.அதெல்லாம் தேவையில்லாத பயம். மூட நம்பிக்கை.

சனி இல்லாமல் நீங்களும் இல்லை. நானும் இல்லை!

சனிதான் கர்மகாரகன் (Authority for work, profession)
சனிதான் ஆயுள்காரகன் (Longevity)

அஷ்ட லெட்சுமிகள், எண் திசைகள், எண் சாண் உடம்பு என்று பல மேட்டர்கள் எண் எட்டோடு தொடர்பு உடையவைகள்!

ஆகவே எண் எட்டை ஒதுக்காதீர்கள்!
--------------------------------------------------
எண் எட்டினால் ஒரு புதிய பயன் இருக்கிறது.

நமக்கு தெரிந்தது ஒன்று உள்ளது. இரண்டு சக்கர வாகனத்திற்கு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு எண் எட்டின் வடிவத்தில் வாகனத்தை ஓட்டிக் காட்டச் சொல்வார்கள்.

அதை நினைவில் வையுங்கள். அதே எண் எட்டின் வடிவத்தில் தினமும் நடைப் பயிற்சி மேற்கொள்ளச் சொல்கிறார் அன்பர் ஒருவர் எண் எட்டை வீட்டிற்குள்ளேயே அல்லது வீட்டு வாயிலிலே அல்லது வீட்டிற்கு அருகில் உள்ள மைதானத்தில் எழுதிவைத்து அதன் மீது நடைப் பயிற்சி மேற்கொள் ளுங்கள்,அதனால் உங்களுக்கு மிகுந்த நன்மைகள் காத்திருக்கின்றன என்கிறார் அந்த அன்பர்.

உங்களுக்கு உள்ள பல நோய்கள் தீர்ந்துவிடும் என்கிறார் அவர். முக்கியமாக சர்க்கரை நோய், இரத்த அழுத்தம். எல்லாம் தீர்ந்துவிடும் என்கிறார். உங்கள் எடை குறைந்து பொலிவான தோற்றத்தைப் பெறுவீர்கள் என்கிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கப் பட நாயகன் சிவகார்த்திகேயனைப் போல் ஆகிவிடலாம் நீங்கள்!

அதை அவர் வாய் மொழியாகச் சொல்லாமல், எழுத்தாக்கி புத்தக வடிவில் கொடுத்திருக்கிறார்.வாக்கிங் செல்ல முடியாமல் தவிப்பவர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதம் என்கிறார்.

முயற்சி செய்து பாருங்கள்.

முப்பத்திரெண்டு பக்கங்கள் உள்ள அந்தப் புத்தகத்தின் விலை வெறும் 14 ரூபாய்கள்தான். சென்னை சரவபவன், கோவை அன்னபூர்ணா காப்பியைவிட
குறைவான் விலைதான்.

அந்த நூலை விலைக்கு வாங்கிப் படித்துப்பார்த்து, அதன்படி செய்து பயன் பெறுங்கள்


நூல் கிடைக்கும் இடம்:

ஸ்ரீநிலையம்
உளவியல் ஆலோசனை மற்றும் சிகிச்சை மையம்
77/44, அரிசிப்பாளையம் மெயின் ரோடு,
சேலம் - 636 009
கைபேசி எண்: 98426 - 38916


நூல் ஆசிரியரின் பெயர்: எஸ். ஸ்ரீனிவாசன்
----------------------------------------------
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=========================================

15 comments:


  1. சீனர்களுக்கு எட்டும், ரெட்டும் (சிவப்பு நிறம்) மங்களகரமானவை.

    'ஙப்போல் வளை' என்கிற ஆத்திச் சூடியும் நினைவுக்கு வருகிறது.

    புத்தகம் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  2. தாமதமான தகவல் ஆனாலும்
    தரமான தகவல்..

    நடப்பது எட்டில் என்றால்
    நன்மை கிடைக்கும்

    அத்துடன் பார்வையை
    அப்படி 8 வகை பயிற்சி செய்தால்

    கணினி அழுத்தம் பார்வையில்
    கட்டாயம் பதியாது

    எட்டு என்பதில் பெருமையே
    எட்டில் பிறந்த அய்யர் சொல்கிறேன்

    ReplyDelete
  3. முப்பத்தெட்டுப்(38)பக்கங்கள் போட்டு,பதினெட்டு(18)ரூபாய்க்கு விற்க வேண்டும்!('எட்டு'க்காரன் நான் செப்பியது!)

    ReplyDelete
  4. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்

    பயனுள்ள விஷயம் ..அனுபவத்தில் எனது சகோதரிக்கு பலவிதமான பிரச்சினைகள் தீர்ந்துள்ளது .எல்லோரும் படித்து பயன்பெற வேண்டிய புஸ்தகம் .. நன்றி.

    ReplyDelete
  5. மிக உபயோகமான தகவல்.

    இன்ஃபினிடி வாக் என்றோ , எய்ட் வாக்கிங் என்றோ தேடினால் கூகுள் ஆண்டவர்
    நிறைய தகவல் தருவார்.

    மூட்டு வலியும் கூட இதனால் சரியாகிறது.நான் ஒரு ஆரோக்கிய(இலவச) வகுப்பு எடுத்து வருகிறேன். அந்தவகுப்பில் இந்த எட்டு நடையைப் பற்றி விவரம் கூறி வருகிறேன்.

    மேலை நாடுகளில் இது மனோ வியாதி கொண்டவர்களுக்கே அதிகம் பயனாகிறது.நினைவாற்றல் பெருக இது பயிற்றுவிக்கப்படுகிறது.

    ReplyDelete
  6. வாத்தியாருக்கு வணக்கம், பயனுள்ள தகவல் உபயோகபடுத்தி பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  7. எட்டு போடனுமா
    என ஏங்கும் சிலருக்கு இது..

    ஒரே நேர் கோட்டில் gap விட்டு
    ஒரே அளவு உயரமுள்ள

    நாற்காலி அல்லது ஸ்டுல் வைத்து
    நடக்க வேண்டும் அதன்இடைவெளி

    வழியாக அது எட்டு நடையாக
    வழிவகுக்கும் ..

    இதை விட சுலபமான வழி தேடாம இப்பவே நடக்க துவங்குங்க..

    ReplyDelete
  8. எனக்கு எட்டு மிகவும் பிடித்த நம்பர்.
    நல்ல தகவல்கள்.

    ReplyDelete
  9. /////Blogger Srinivasa Rajulu.M said...
    சீனர்களுக்கு எட்டும், ரெட்டும் (சிவப்பு நிறம்) மங்களகரமானவை.
    'ஙப்போல் வளை' என்கிற ஆத்திச் சூடியும் நினைவுக்கு வருகிறது.
    புத்தகம் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி ஐயா!

    உங்களுடைய தகவலுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. //Blogger வேப்பிலை said...
    தாமதமான தகவல் ஆனாலும்
    தரமான தகவல்..
    நடப்பது எட்டில் என்றால்
    நன்மை கிடைக்கும்
    அத்துடன் பார்வையை
    அப்படி 8 வகை பயிற்சி செய்தால்
    கணினி அழுத்தம் பார்வையில்
    கட்டாயம் பதியாது
    எட்டு என்பதில் பெருமையே
    எட்டில் பிறந்த அய்யர் சொல்கிறேன்////

    அப்படியே பிறந்த மாதத்தையும் ஆண்டையும் சொல்லியிருக்கமாமே வேப்பிலை சுவாமி!

    ReplyDelete
  11. /////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    பயனுள்ள விஷயம் ..அனுபவத்தில் எனது சகோதரிக்கு பலவிதமான பிரச்சினைகள் தீர்ந்துள்ளது .எல்லோரும் படித்து பயன்பெற வேண்டிய புஸ்தகம் .. நன்றி.////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. ///Blogger kmr.krishnan said...
    மிக உபயோகமான தகவல்.
    இன்ஃபினிடி வாக் என்றோ , எய்ட் வாக்கிங் என்றோ தேடினால் கூகுள் ஆண்டவர்
    நிறைய தகவல் தருவார்.
    மூட்டு வலியும் கூட இதனால் சரியாகிறது.நான் ஒரு ஆரோக்கிய(இலவச) வகுப்பு எடுத்து வருகிறேன். அந்தவகுப்பில் இந்த எட்டு நடையைப் பற்றி விவரம் கூறி வருகிறேன்.
    மேலை நாடுகளில் இது மனோ வியாதி கொண்டவர்களுக்கே அதிகம் பயனாகிறது.நினைவாற்றல் பெருக இது பயிற்றுவிக்கப்படுகிறது.////

    உங்களுடைய மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார். நீங்கள் சொன்னபிறகுதான் எனக்குக் கூகுள் ஆண்டவர் நினைவிற்கு வந்தார்! அதற்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி!

    ReplyDelete
  13. ////Blogger Raja Murugan said...
    வாத்தியாருக்கு வணக்கம், பயனுள்ள தகவல் உபயோகபடுத்தி பார்க்கிறேன். நன்றி.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. ///Blogger வேப்பிலை said...
    எட்டு போடனுமா
    என ஏங்கும் சிலருக்கு இது..
    ஒரே நேர் கோட்டில் gap விட்டு
    ஒரே அளவு உயரமுள்ள
    நாற்காலி அல்லது ஸ்டுல் வைத்து
    நடக்க வேண்டும் அதன்இடைவெளி
    வழியாக அது எட்டு நடையாக
    வழிவகுக்கும் ..
    இதை விட சுலபமான வழி தேடாம இப்பவே நடக்க துவங்குங்க..////

    நல்ல வழிகாட்டல். நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  15. ////Blogger சே. குமார் said...
    எனக்கு எட்டு மிகவும் பிடித்த நம்பர்.
    நல்ல தகவல்கள்.//////

    எனக்கும் பிடித்த நம்பர்தான். நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com