----------------------------------------------------------------------------------------
திருவரங்கம் வாலிக்குக் கிடைத்த திருப்புமுனை!
இளைஞராக இருந்த காலத்தில், தமிழ் வசப்பட்டவுடன் வாலியும் சும்மா இருக்கவில்லை. தன் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார்.
முதல் பிரதியை வெளியிட்டவர் யாரென்று நினைக்கிறீர்கள்? கேட்டால் அசந்து போவீர்கள். எத்தனை பேருக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்?
அந்தக் காலத்தில் மிகப் பெரிய எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளராக இருந்த திருவாளர் கல்கி அவர்கள்தான் அந்தப் பத்திரிக்கையை வெளியிட்டுச்சிறப்பித்ததோடு, வாலியின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையையும் கொடுத்துவிட்டுப் போனார். தன் கதைகளைப் பல திருப்புமுனைகளோடு கொண்டு செல்லும் அவர், வாலியின் வாழ்விலும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது அதிசயமா அல்லது தெய்வாதீனமா என்றால் இரண்டையும் வைத்துக் கொள்ளலாம்.
அன்று திரு.கல்கி அவர்களுடன் திருவாளர் சின்ன அண்ணாமலை அவர்களும், திருச்சி வானொலி நிலைய அதிகாரி திரு.பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் அடுத்து ஒரு ஏற்றம் வாலியின் வாழ்வில் நிகழ்ந்தது. வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.
திருவரங்கத்தில் வாலி அவர்கள் நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிக்கையில் பல இளைஞர் கூட்டமே பங்கேற்றுக் கொண்டது. அப்படிப் பங்கேற்றுக் கொண்டவர்களில் ஒருவர்தான் பின்னாளில் பெரும் புகழ்பெற்ற எழுத்தாளராகத் தன் தனித்தமிழ் நடையால் ராஜ நடைபோட்ட எழுத்தாளர் சுஜாதா! அவரின் இயற்பெயரும் ரங்கராஜன்தான் என்பது வியப்பிற்குரிய விஷயம்!
=====================================================================
--------------------------------------------------------------------------
மாறுதலுக்காக இன்று ஒரு நாடகச் செய்தி!
செய்தி பழசுதான். ஆனால் சுவையானது.
அக்காலத்தில் கோவைக்குப் பல நாடகக் குழுவினர் வந்து நாடகங்களை நடத்தி, கோவை மக்களை மகிழ்விப்பார்கள். விசு, மெளலி, எஸ்.வி.சேகர், காத்தாடி ராமமூர்த்தி என்று பலர் தங்கள் குழுவினருடன் வருவார்கள். அந்த மகிழ்ச்சியான தருணங்கள் எல்லாம் இப்போது இல்லை.
----------------------------------------------------------------
காத்தாடி நாமமூர்த்தி அவர்களின் நகைச்சுவை நாடகத்தில் பார்த்த காட்சி ஒன்றை என் நினைவுத்திரையில் இருந்து உங்களுக்கு அளிக்கிறேன். மனிதரின் குரல் ஏற்ற இறக்கங்களுடன் அசத்தலாக இருக்கும்
---------------------------------------------------------------------
காட்சியில் காத்தாடி ராமமூர்த்தியின் மளிகை பாக்கியை வசூல் செய்து கொண்டு போவதற்காக மளிகைக் கடைக்காரர் வீடு தேடி வந்திருப்பார். அவர் வந்திருக்கும் செய்தியைக் குளித்துக் கொண்டிருக்கும் தன்
கணவரிடம் சொல்வதற்காக நடிகை குட்டி பத்மினி குளியலறைக் கதவின் மறுபுறம் நின்று பேச்சுக் கொடுப்பார்:
“ஏன்னா, செட்டியார் வந்திருக்கார். சீக்கிரமா வாங்கோ?”
“எந்தச் செட்டியாருடீ?”
மனைவி கோபமாக: ”ம்ம்ம்..ராஜா சர் முத்தையா செட்டியார்!”
“நான் ஒன்னும் அவரிடம் கடன் ஏதும் வாங்கவில்லையேடி?”
“அதுதான் கொடுத்துவிட்டுப் போகலாம்னு வந்திருக்கார்!”
“விளையாடாம, விஷயத்தை ஒழுங்கச் சொல்லுடீ!”
இதற்குள், என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக நைசாக உள்ளே வந்த மளிகைக் கடைக்காரர், சத்தமின்றி நடந்துவந்து குட்டி பத்மினியின் பின்புறம் நின்றிருப்பார். அதைக் கவனிக்காமல், தம்பதிகளின் உரையாடல் தொடரும்.
“மளிகைக்கடைச் செட்டியார்தான் வந்திருக்கார்!”
“ஓ..அந்த லூசு வந்திருக்கா? எங்க ஆத்துக்காரர் குளிக்கிறார்.வர்றதுக்கு ஒருமணி நேரம் ஆகும்னு சொல்லி அனுப்பிச்சுவைடி அவரை!”
=========================================================================
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
Please write to Vaaththiyar
திருமணப் பொருத்தம்
Marriage Matching
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
15,640,211
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?
வாத்தியாரின் அடுத்த புத்தகம்

தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
8.6.11
திருவரங்கம் வாலிக்குக் கிடைத்த திருப்புமுனை!
Subscribe to:
Post Comments (Atom)
வாலியும் காத்தாடி ராமமூர்தியும் வகுப்பறைக்கு வந்தது மகிழ்ச்சி.
ReplyDeleteகவிஞ கண்ணதாசனிடம் உதவியாளராகச்சேரும்படி கொடுக்கப்பட்ட ஆலோசனையை வாலி அன்புடன் மறுத்ததும் அவருக்கு என்று ஒரு எதிர்காலம் அமையக் காரணமாக இருந்தது.எம் ஜி ஆரின் ஆதரவு அவரை தூக்கி உயரத்தில் வைத்தது. பின்னால் எம் ஜி ஆரின் எதிர்பக்க அரசியலில் போய் விட்டார்.
மத்தியதர வர்கத்து அலுவலகம் போய்க் கொண்டே நகைச்சுவை நாடகம் போட்டுக்கொண்டு இருந்த அந்த நாளைய குழுக்கள் எல்லாம் காணவில்லை இப்போது.ஆக்கம் நன்று.
பயணம் நன்கு முடிந்ததா? திருமணம் தானே? எனக்குக்கூட இன்று ஆத்தாங்குடியில் இருந்து ஓர் அழைப்பு வந்துள்ளது.இன்று 8 ந்தேதி திருமணம்.செல்ல முடியாத சூழல்.
/////கவிஞர் வாலி தன் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார்.////
ReplyDeleteகாந்தி தேசமே காவல் இல்லையா?
நீதி மன்றமே நியாயம் இல்லையா?
பதவியின் சிறையில் பாரத மாதா
பரிதவிக்கிறாள்... பரிதவிக்கிறாள்...
சுதந்திரதேவி சுயநல வாதிகளின்
துணி துவைக்கிறாள் துணி துவைக்கிறாள்...
என்று எழுதியது திரைப் படக் காட்சிக்காக மட்டுமே என்று இருந்தேன்...
சரி... சரி.... அது இந்தக் தமிழ்க் கவி மார்க்ஸின் குமுறல் என்பதை இப்போது அறிகிறேன்...
அற்புத தகவல்கள்... நன்றி ஐயா!!!
வாலியின் வாழ்க்கையில் வெளிச்சமான பகுதியைத் தந்திருக்கிறீர்கள். எல்லா மனிதர்களுடைய வாழ்க்கையும் திறந்த புத்தகமாக இருப்பதில்லை. மனிதன் அவன் காலத்துக்குப் பின்னும் எல்லோராலும் புகழப்படவும், பாராட்டப்படவும் வேண்டுமென்றால் வாழ்க்கையில் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து எத்தனை சோதனைகள் வாழ்ந்தாலும் நேர்மை தவறி நடக்க மாட்டேன், காரியம் ஆகவேண்டுமென்பதற்காக 'முகஸ்துதி' செய்து பிழைக்க மாட்டேன் என்ற உறுதியை மேற்கொள்ள வேண்டும். அதனால்தான் இன்றும் நாம் பல பெரியோர்களை நினைவில் வைத்திருக்கிறோம். சரி! இதற்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? தெரியவில்லை. ஏதோ தோன்றியது எழுதினேன். காத்தாடி ராமமூர்த்தி நாடகங்கள் நல்ல நகைச்சுவை நிறைந்தவைதான் மனிதனுக்கும் மற்ற பிறவிகளுக்குமுள்ள ஒரு வித்தியாசம் மனிதனுக்கு நகைச்சுவை உணர்வு உண்டு. குரங்குகளுக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன். மற்றவை பற்றி தெரியவில்லை. வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நகைச்சுவை நல்ல பலன்களைக் கொடுக்கும். நகைச்சுவை உணர்வு உடையவர்கள் சமூகத்துக்குச் செய்து வரும் தொண்டு சிறப்பானது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ஆசிரியர் எப்போது தோன்றுவாரோ தெரியவில்லை.
ReplyDeleteஆத்தாடி என வியந்தது பார்கக வைத்த
ReplyDeleteகாத்தாடி நாடகதுறையில் ஒரு முத்திரை
ஒன்றல்ல இரண்டல்ல சொல்லலாம்
ஓராயிரம் அவரின் இயல்பான நகைக்கு
நாடக மேடை இல்லததால் தானோ
நாடகத்தினை தம்பொது வாழ்வில்சிலர்
அரங்கேற்று நடத்தி வருகின்றனர்..
அங்கும் நடிப்பு தான் என்றால் இவர்கள்
வாழ்வது எங்கே.. நம்மை
வாழ வைப்பது எங்கே..?