--------------------------------------------------------------
நீங்களும் கடவுள்தான்!
வாரமலர்
------------------------------------------------
ஞாயிறன்று வரவேண்டிய வாரமலர் இன்றே வருகிறது. வாத்தியார் இரண்டு நாட்களுக்கு வகுப்பறைக்கு ’கட்’. அதாவது வெளியூர்ப் பயணம். ஆகவே அது இன்றே பதிவிடப்பெறுகிறது. Auto posting முறையில் வெளியிடலாமே? அதில் ஒரு சிரமம் உள்ளது. கட்டுரைக்கு வரும் பின்னூட்டங்களைப் பதிவிற்கு அனுப்ப முடியாது. இரண்டு நாட்கள் தாமதம் ஏற்படுமே? கட்டுரையாளரின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற வேண்டு மென்றால், இன்று பதிவிடுவதுதான் நல்லது. இன்று இரவுதான் பயணம். ஆகவே இன்று 9:00 PM வரை வரும் பின்னூட்டங்களைப் பதிவிற்கு அனுப்பி வைக்க முடியும். ஆகவே படித்து மகிழுங்கள். பின்னூட்டம் இட்டு எழுதியவரையும் மகிழ்வுறச் செய்யுங்கள்.
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------
சமீபத்தில் தன் பூதவுடலை விட்டு புகழுடம்பு எய்திவிட்ட சத்திய சாய்பாபாவுடன் என் மூத்த சகோதரர் முனைவர் திரு கண்ணன் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இது 1976ல் நடந்த நிகழ்ச்சி.
அப்போது என் அண்ணன் கண்ணன் அவர்கள் பெங்களூரு டாட்டா இன்ஸ்டிட்யூட் என்று அழைக்கப்படும், ஐ ஐ எஸ்சி யில் முனைவர் பட்டம் பெற ஆய்வு மேற்கொண்டு இருந்தார்.
அங்கே பலதரப்பட்ட குழுக்கள் உண்டு.ஓர் ஆன்மீகக் குழுவுடன் அண்ணன் தொடர்பில் இருந்தார்கள்.
அந்த ஆன்மீகக் குழுக்காரர்கள் ஒரு விடுமுறை நாள் அனறு புட்டபர்த்தி சாய்பாபாவை தரிசிக்க ஏற்பாடு செய்தார்கள். அண்ணனும் அந்தக்குழுவுடன் சென்றுள்ளார்.
பொது தரிசனத்திற்குப் பின்னர் பாபாவுடன் தனிச் சந்திப்புக்கு இவர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. பாபாவுடன் பேசவும் கேள்விகள் கேட்கவும் சந்தேகம் தெளியவும் ஏற்பாடகியிருந்தது.
அறைக்குள் நுழைந்தவுடனேயே, இந்த ஆய்வாளர்களுக்குத் தலைவராகப்போன
பேராசிரியருக்கு காற்றில் கையைச் சுழற்றி மோதிரம் வரவழைத்துக்கையில்
அணிவித்து உள்ளார் பாபா.பார்த்த இவர்களுக்கு ஆச்சரியம் உண்டாயிற்று
"பாபா!இது ஓர் அற்புதம்தானே?" ....இது ஓர் அனபரின் கேள்வி.
"இருக்கலாம்" ....இது பாபா.
"அப்படியானால் இதை எப்படி பாபா நினைத்தவுடன் உருவாக்க முடிகிறது?"
"நீங்கள் எல்லோரும் விஞ்ஞானிகள்.உங்களுக்குத் தெரியும் ஒன்றை உருவாக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது.ஒன்று மற்றொன்றாக மாறுமே அல்லாது புதிதாக ஒன்று உருவாக முடியாது. எல்லாம் இருப்பதே. பாபாவால் அதனை வேண்டும் போது வெளிக் காண்பிக்க (project) முடியும். அவ்வளவே."
"இப்படிப்பட்ட அற்புதங்கள் செய்யத்தான் வேண்டுமா?"
"இந்தச் செயல்கள் அதற்கான தேவை இருக்கக் கூடிய சாதாரண பக்தர்களுக்காகச் செய்யப்படுகிறது.உங்களுக்கு இந்த அதிசயங்களில் நாட்டம் இல்லை எனில் விட்டு விடுங்கள்.ஆனால் பாபா மற்றொரு அதிசயத்தை எப்போதும் நிகழ்த்திக் கொண்டு இருக்கிறார். அதனை மனதில் வாங்கிக் கொள்ளுங்கள்.எப்போதும் பாபா மலர்ந்த முகத்துடன் பக்தர்களைச் சந்திக்கிறார். துக்கப்பட்டு, வாழ்க்கைத் துன்பங்களில் அடிபட்டு வரும் பக்தர்களுக்கு பாபாவின் மலர்ந்த மந்தகாசமான முகம் ஆறுதலை அளிக்கிறது. அதுவே பாபாவின் முக்கியமான அதிசயம். பாபாவின் அன்பு என்னும் அதிசயத்தை,அற்புதத்தைக் காணுங்கள். முடிந்தால் நீங்களும் அதனைக் கடைப்பிடியுங்கள். உங்களாலும் அன்பு செலுத்த முடிந்தால் பல அதிசயங்கள் நடப்பதைக் காண முடியும்."
"பாபா தாங்கள் கடவுளா?"
"ஆம்!நான் கடவுள்தான்! எந்த அளவு நீங்கள் கடவுளோ அந்த அளவு நானும் கடவுள்தான். நான் கடவுள் என்ற உண்மை எனக்குப் புலனாகிவிட்டது. அதனால் எனக்குச் சந்தேகம் எழவில்லை. நீங்கள் உங்களைக் கடவுளாக உணர்ந்து கொள்ளும் பக்குவ நிலையை இன்னும் அடையவில்லை.ஆகவே தன்னைக் கடவுள் என்று உணர்ந்தவரின் சொற்களில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை."
இன்னும் பல கேள்விகளுக்கும் பாபா பொறுமையாகப் பதில் அளித்து உள்ளார். பாபாவின் தெலுங்கை அவருடைய சீடர் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்பாளர் செய்யும் தவறான பொருள் வரும்படியான மொழிபெயர்ப்பை பாபாவே சரியாகப் புரியும் படிக்கு ஆங்கிலச் சொற்களை கூறி விளக்கியுள்ளார்.
அந்த தரிசனம் மனதைவிட்டு நீங்காத ஒன்றாக ஆனது. அடிக்கடி நினைவு கூர்ந்து என் அண்ணன் அவர்கள் மீண்டும் மீண்டும் இதைக் கூறுவார்கள்
அதனை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.கருத்தூன்றிப் படித்தவர்கள் அனைவருக்கும் பாபாவின் அருளாசி கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்
அன்புடன்
கே.முத்துராமகிருஷ்ணன்
லால்குடி
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
18.6.11
நீங்களும் கடவுள்தான்!
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான நினைவுகள்
ReplyDeleteபகிந்து கொண்டமைக்கு
நன்றிகள்....
வேண்டும் பகவான் ஸ்ரீ சத்யா சாய் பாபாவின் அருளாசிகள்
வணக்கம் வாத்தியார் ஐயா..
ReplyDeleteஎழுத்துரு மிகச் சிறியதாகப் போய்விட்டதே படிப்பதற்கு சற்று சிரமமாக இருக்கிறது..
பிழைபடின் பொறுத்தருள்க..
வணக்கம் கிருஷ்ணன் ஐயா,
ReplyDelete//உங்களுக்குத் தெரியும் ஒன்றை உருவாக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது.ஒன்று மற்றொன்றாக மாறுமே அல்லாது புதிதாக ஒன்று உருவாக முடியாது. எல்லாம் இருப்பதே//
பாபாவின் பதில் மிக அருமையானது..
இதைத்தான் சைவ சித்தாந்தமும் சொல்கிறது.. இத் தத்துவத்திற்கு
" சற்காரிய வாதம் " என்று பெயர்.
அதாவது இல்லது தோன்றாது - உள்ளதே சிறக்கும் என்பது..
இது மிக மிக முக்கியமான கோட்பாடு..இதை யாவரும் அறிந்துணர வேண்டும் என்பது எமது அவா..
இதுவே நமது சைவ சமயத்தின் ஆணி வேரான தத்துவம் - இதன் அடிப்படையிலேயே நமது சமய கோட்பாடுகள் அனைத்தும் அடங்கியிருக்கின்றன..
இந்த அருமையான கருத்தை சொன்ன பாபாவின் மீது மேலும் மரியாதை தோன்றுகிறது.
கிருஷ்ணன் ஐயா..
தாங்கள் சொன்னது போல... பாபாவின் பூதவுடல் மறைந்தாலும் அவரது புகழுடல் என்றும் வாழும்..
நன்றிகள் பல..
very very good article
ReplyDeletethank you sir