மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

23.6.11

Astrology வரிசையில் எப்போது நன்மைகள் வந்து சேரும்?

----------------------------------------------------------------------------------------
 Astrology வரிசையில் எப்போது நன்மைகள் வந்து சேரும்?

தசா புத்திப் பாடல்கள் வரிசையில் கடைசியாக சுக்கிரதிசையில் ராகு புத்திக்கான பலன்களையும், ராகு மகா திசையில் சுக்கிர புத்திக்கான பலன்களையும் பார்த்தோம்.

இன்று, அதற்கு அடுத்து சுக்கிர திசையில் வியாழ புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்.
---------------------------------------------------------------
இரண்டுமே சுபக்கிரகங்கள் கேட்கவா வேண்டும்? இரண்டிலும் பலன்கள் நன்மையுடையதாக இருக்கும். இரண்டு கிரகங்களும் தங்களுடைய தசாபுத்திகளில் போட்டி போட்டுக் கொண்டு நன்மைகளை வாரி வழங்கும். நன்மைகள் எல்லாம் வரிசையில் (Queue) வந்து சேரும்.

பாடல்களைப் பாருங்கள். பாடல்கள் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

தசாபுத்திக்காலம் 32 மாதங்கள்

காணவே சுக்கிரதிசை வியாழபுத்தி
   கனமான மாதமது முப்பத்தியிரண்டு
தோணவே அதன்பலனை சொல்லக்கேளு
   தோகையரும் மங்களமும் சுபயோகமாகும்
பேணவே பெருஞ்செல்வம் பெருகும்பாரு
   பெரிதான புத்திரனும் பெண்களுண்டாகும்
நாணவே நாடுநகரம் உண்டாகும்பாரு
   நன்மையுடன் வாகனமும் நடப்புடனே உண்டாம்


அத்துடன் இந்தப் பலன்களுக்குச் சமமானதொரு சுப பலன்களை வியாழ மகா திசையில் சுக்கிர புத்தியும் தருவதாக இருக்கும். பாடலைப் பாருங்கள்

போமென்ற வியாழதிசை சுக்கிரபுத்தி
   பொருள்காணு மாதமது முப்பத்தியிரண்டு
ஆமென்ற அதன்பலனை சொல்லக்கேளு
   அருளான லெட்சுமியும் அன்புடனே சேர்வாள்
சுபமென்ற சோபனமும் மனமகிழ்ச்சியுண்டாம்
   சுகமான கன்னியுடனே சுகமாக வாழ்வான்
நாமென்ற நாடுநகர் கைவசமேயாகும்
   நன்றாக அவனிதனில் நன்மையுடன் வாழ்வான்!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

5 comments:

kmr.krishnan said...

சுக்ரதசா குருபுக்தியின் போது வீட்டை விரிவு படுத்தி மாடியைக் கட்டினேன்.
மகள் திருமணம் செய்தேன். அதுவரை சைக்கிளில் போய் வந்த நான் ஒரு டி வி எஸ் 50 வாங்கினேன். பணத் தட்டுப்பாடு எப்போதுமே இருக்கவில்லை .சுக்கிர தசா குருபுக்திக்குப் பிறகு சிறிது தாராள‌மாகவே செலவு செய்ய முடிந்தது.

எனக்கு குருதசாவே வராது. எனவே அதன் பலனைக்காண முடியாது.பதிவுக்கு நன்றி ஐயா!
கே எம் ஆர் கே (சென்னையில் இருந்து!)

iyer said...

சுகம் இதுவோ..
சுவையாகவே இருக்கிறது..

குருவில் சுக்கிரன்
கொடுத்து வைத்தவர்களுக்கு

எளிமையான பாடத்திற்கு
இதயம் கனிந்த நன்றிகள்..

வணக்கமும் வாழ்த்துக்களும்
வழக்கம் போல் இன்றும்..

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

ஓ..

குருதிசை இனிமேதான் எனக்கு வரப்போது..

சோ.. காத்திருக்கிறேன் சுக்கிரனுக்காக

Nanjai Govindarajan said...

அய்யா, வணக்கம்! வாழ்க வளமுடன்!
எனது முதல் மகன் அறிவானந்தனின் ஜாதகப்படி சுக்ர திசை குரு புத்தி நடப்பு காலத்தில் தான் அது வரை வீடு கட்டும் எண்ணம் இல்லாத எனக்கு போதிய பொருளாதர வசதி இல்லாத போதும் எனது அண்ணன் வடிவில் வ்ங்கி உதவியுடன் வீடு யோகமும், வண்டி யோகமும் அமைந்தது.
மிக்க நன்றி அய்யா!
வாழ்க வளமுடன்!
நஞ்சை கோவிந்தராஜன்

ananth said...

எனக்கு குரு தசை சுக்கிர புத்தி நன்மையான பலன்களே கொடுத்தது. பொற்காலம் என்பார்களே, அதற்கு உதாரணமாக இருந்தது. இருவரும் சுபர் என்பதோடு கேந்திர கோணாதிபதிகள். கேந்திராதிபர் தசையில் கோணாதிபர் புத்தியும், கோணாதிபர் தசையில் கேந்திராதிபர் புத்தியும் மேலான ராஜயோக பலன்களையே கொடுக்கும்.