மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.6.11

Astrology: Made for each other கூட்டணி எது?

-----------------------------------------------------------------------------------------
Astrology: Made for each other கூட்டணி எது?

Astrology ஒத்துவரும் கூட்டணி எது?

கூட்டணியில் பலவகை உள்ளது.

உண்மையான கூட்டணி. சந்தர்ப்பக் கூட்டணி. காலத்தின் கட்டாயத்தால் ஏற்படும் கூட்டணி. ஒத்துவராது என்றாலும் அதைத் தெரிந்தே அமைந்திருக்கும் கூட்டணி என்று பலவிதமான கூட்டணிகள் உள்ளன.

கிரகங்களின் கூட்டணியும் அதைப் போன்றதுதான்.

சுபகிரகங்களின் கூட்டணி ஜாதகனுக்கு நன்மைகளை அள்ளித்தரும் உண்மையான கூட்டணியாக இருக்கும். Made for each other என்று சொல்லக்
கூடிய அம்சங்கள் நிறைந்திருக்கும்

ஒரு சுபக்கிரகமும், ஒரு பாப (தீய) கிரகமும் கூட்டணி சேர்ந்தால், அது ஒத்துவராத கூட்டணியாக இருக்கும் உங்கள் மொழியில் சொன்னால்
Not made for each other என்று வைத்துக்கொள்ளுங்கள்.

சூரியனும் சந்திரனும் கூட்டாக இருந்தால், அது இரண்டாவது  வகையைச் சேர்ந்ததாக இருக்கும். ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும்போது, சூரியனுக்குப் பத்து பாகைகள் சந்திரன் தள்ளி இருப்பது நன்மையானதாக இருக்கும். அத்துடன் சூரியனைவிடச் சந்திரன் வலுவாக இருந்தால் (வலு என்றால் என்ன என்பதைப் பலமுறைகள் சொல்லியிருக்கிறேன்) சந்திரன் கூட்டணிக் கொள்கைகளையும் மீறி ஜாதகனுக்கு நன்மையான பலன்களைச் செய்வார்.

அப்படி இல்லாவிட்டாலும், சந்திரன் தன்னுடைய மகா திசையிலும், அல்லது வேறு கிரகங்களின் மகா திசையில் தன்னுடைய புத்திக் காலங்களிலும் நன்மைகளையே செய்வார். ஏனென்றால் அவர் சுபக்கிரகம் அதை மனதில் வையுங்கள்
__________________________________________________________________________
தசா புத்திப் பாடல்கள் வரிசையில் சூரிய மகா திசையில், அவர் தன்னுடைய சுய புத்தியில் (Sun's own period in his Maha Dasa) என்ன பலன்களைத் தருவார் என்பதை இதற்கு முந்தைய பாடத்தில் பார்த்தோம்

அடுத்து சூரிய மகா திசையில், சந்திர புத்தியில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம்.
---------------------------------------------------------------
திசைபுத்தி நடைபெறும் காலம் 180 நாட்கள்  (just 180 days only) - அதாவது ஆறுமாத காலம். மொத்த காலமும் நன்மையுடையதாக மகிழ்ச்சியுடையதாக இருக்கும்

பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

கூறினோம் ரவிதிசையில் சந்திரபுத்தி
   குணமான மாதமது ஆறதாகும்
தேறினோம் அதன்பலனை செப்பக்கேளு
   தீங்கில்லா தனலாபம் சம்பத்துண்டாம்
ஆறினோம் வந்தபிணி தீரும் ரோகம்
   அரசரால் மகிழ்ச்சியது தானுண்டாகும்
தேறினோம் ரவிசந்திரன் பொசித்த நாளில்
   தீங்கிலா நாளென்று தெளிந்து காணே!


ஆனால் இதற்கு நேர்மாறாக சந்திரதிசையில் சூரிய புத்தி இருக்கும். தன்னுடைய மகா திசையில் சந்திரன் தன் புத்திக்காலத்தில் அளித்த நன்மைகளுக்கு பதில் நன்மைகளை சூரியன் அளிக்க மாட்டார். அவர் வழி தனிவழி

பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.

மானேகேள் சந்திரதிசை சூரியபுத்தி
   மரணநாள் மாதமது ஆறதாகும்
தானேதான் சத்துருவும் அக்கினியின் பயமும்
   தாபமுள்ள சுரதோஷம் சன்னிதோஷம்
ஏனோதான் காணுமடா யிறுக்கமதுவுண்டாம்
   ஏகாந்த தேகமது இருளதுவேயடையும்
தேனேகேள் லட்சுமியும் தேகமுடன் போவாள்
   திரவியங்கள் சேதமடா சிலவுடனே தீதாம்!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

13 comments:

  1. அதுவும் சரி தான் பெரும்பாலும் நல்ல மனது இருந்தால் தலைமைப் பதவியில் இருப்பதில்லை....
    தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு நல்ல மனது இருப்பதுவும் இல்லை.
    அதுவும் இந்த வகைத் தானோ!
    படத்தில் இருக்கும் கூட்டணியும் நல்லக் கூட்டணி தான் "தொழில் ரீதியாக!"
    நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  2. வணக்கம் வாத்தியார் ஐயா,

    ஜாதகத்தில் நல்ல கூட்டணி அமையவேண்டும் என்றாலும் அதற்கு முன்வினைப் பயன் ( புண்ணியம் ) இருக்கவேண்டும் இல்லையா ?

    நன்றி ஐயா..

    ReplyDelete
  3. வணக்கம் தமிழ்விரும்பி அவர்களே,

    //அதுவும் சரி தான் பெரும்பாலும் நல்ல மனது இருந்தால் தலைமைப் பதவியில் இருப்பதில்லை....//

    இருப்பதில்லை என்பதை விட இருக்க முடிவதில்லை என்தும் பொருந்தும் எனக் கருதுகிறேன்..

    தமிழ் விரும்பியின் அன்னைத்தமிழை
    தமிழ்கூறும் நல்லுலகின் வலைத்தளத்திற்கு வரவேற்கிறோம்.

    http://tamizhvirumbi.blogspot.com

    ReplyDelete
  4. Good informations.

    Thank You Vaaththiyaar

    ReplyDelete
  5. நீங்கள் கூறியுள்ள சூரியதசா சந்திரபுக்தி,சந்திரதசா சூரிய புக்தி இரண்டுமே எனக்கு இனிதான் வரப் போகின்றன. பொறுத்து இருந்து பார்ப்போம்.

    கே எம் ஆர் கே
    முகாம்:இலண்டன்

    ReplyDelete
  6. சுவாரஷ்யமான பதிவு.எளிய நடை.

    ReplyDelete
  7. வாத்தீ வணக்கம்

    ணீண்ட ணாள்காள் ஊடள் ஸறீ ஈள்ளாஆதணாஆள் ஏள்ளாமூம் மறண்தூ போட்ஷூ வாத்தீ யாஆ

    ஈண்ணமூம் ஸறீ ஆகள வாதீயாறே.

    மணம் போள வாஆள்க்கா.........வாதீயாறே.!

    ReplyDelete
  8. Blogger தமிழ் விரும்பி said...
    அதுவும் சரி தான் பெரும்பாலும் நல்ல மனது இருந்தால் தலைமைப் பதவியில் இருப்பதில்லை....
    தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு நல்ல மனது இருப்பதுவும் இல்லை.
    அதுவும் இந்த வகைத் தானோ!
    படத்தில் இருக்கும் கூட்டணியும் நல்லக் கூட்டணி தான் "தொழில் ரீதியாக!"
    நன்றிகள் ஐயா./////////

    “பொருள்கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
    தரும்கைகள் தேடிப் பொருள் வந்ததில்லை”

    என்று கவிஞர் வாலி எழுதினார். அதைப் போலத்தான் இதுவும். நன்றி

    ReplyDelete
  9. /////Blogger சிவ.சி.மா. ஜானகிராமன் said...
    வணக்கம் வாத்தியார் ஐயா,
    ஜாதகத்தில் நல்ல கூட்டணி அமையவேண்டும் என்றாலும் அதற்கு முன்வினைப் பயன் ( புண்ணியம் ) இருக்கவேண்டும் இல்லையா ?
    நன்றி ஐயா../////

    ஆமாம். ஆமாம். ஆமாம் சாமி!

    ReplyDelete
  10. /////Blogger Murari said...
    Good informations.
    Thank You Vaaththiyaar////

    நல்லது. நன்றி முராரி!

    ReplyDelete
  11. ///////Blogger kmr.krishnan said...
    நீங்கள் கூறியுள்ள சூரியதசா சந்திரபுக்தி,சந்திரதசா சூரிய புக்தி இரண்டுமே எனக்கு இனிதான் வரப் போகின்றன. பொறுத்து இருந்து பார்ப்போம்.
    கே எம் ஆர் கே
    முகாம்:இலண்டன்//////

    ஆகா, அப்படியே செய்யுங்கள்! லண்டனில் உங்கள் மனதைத் தொட்ட விஷயங்களைப் பற்றி கட்டுரை ஒன்று எழுதியனுப்புங்கள்!

    ReplyDelete
  12. //////Blogger r.elan said...
    சுவாரஷ்யமான பதிவு.எளிய நடை.//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. //////Blogger kannan said...
    வாத்தீ வணக்கம்
    ணீண்ட ணாள்காள் ஊடள் ஸறீ ஈள்ளாஆதணாஆள் ஏள்ளாமூம் மறண்தூ போட்ஷூ வாத்தீ யாஆ
    ஈண்ணமூம் ஸறீ ஆகள வாதீயாறே.
    மணம் போள வாஆள்க்கா.........வாதீயாறே.!////////

    உங்களுக்குத்தான் உடல் நலமில்லை. உங்கள் தமிழுக்குமா உடல் நலமில்லை?
    இரண்டும் சரியாக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com