மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.5.11

அகிலா துப்பிய தாம்பூலம்!

அகிலா துப்பிய தாம்பூலம்

ஞாயிறு மலர்
------------------------------------------------------------
இன்றைய ஞாயிறு மலரை இரண்டு ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்

1
அகிலா துப்பிய தாம்பூலம்

(அகிலா என்பது திருவானைக்கோவிலில் உறையும்
அகிலாண்டேஸ்வரி அம்மனின் திருப்பெயர். சுருக்கி
உங்களுக்குப் பிடித்த மாதிரிக் கொடுத்துள்ளேன்.

அகிலாவின் படமா? அது இல்லாமலா? அதையும்
கொடுத்துள்ளேன்)


Over to the article written by our great & regular classroom visitor Mr.V.Gopalam, Thanjavur
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கவி காளமேகம்.

கவி காளமேகம் பற்றி உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்திருக்கும்.
காரணம் பள்ளிக்கூட பாடங்களில் அவனது  'சிலேடை' பாடல்கள்
அதிகம் வந்திருக்கிறது. காளமேகம் பாடல்களில் கிண்டலும் கேலியும் நிறைந்திருக்கும்.

இவன் திருவரங்கத்தில் கோயில் மடைப்பள்ளியில் வேலை பார்த்து
வந்தவன். அது வைஷ்ணவக் கோயில் என்பது  அனைவருக்கும்
தெரியும். அவன் காலத்தில் வைணவ, சைவ பூசல்கள் அதிகம்.
அப்படிப்பட்ட  காலத்தில்வைணவ ஆலய மடப்பள்ளி ஊழியன் திருவானைக்கோயில் சிவாலயத்தில் நடனமாடும் கணிகை மீது
காதல்  கொண்டான். தன்  நெற்றி நாமத்தைக் கலைத்து விட்டு திரு
நீறணிந்து கொண்டு திருவானைக்காவே கதி என்று இருந்தான்.
இரவு அர்த்தஜாம பூஜைக்கு காளமேகம் தன் காதலியோடு
கோயிலுக்குப் போனதும், அவள்  சந்நிதிகளில் சதிராடி முடித்து
விட்டு வர நேரமாகும். காத்திருக்கும்  நேரத்தில் இவன் ஒரு
மண்டபத்தில் படுத்து  குறட்டையோடு  நல்ல உறக்கத்தில் ஆழ்ந்து
விடுவான்.

அந்த சூழ் நிலையில் அந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள
அகிலாண்டேஸ்வரி அம்மனை வழிபட்டு பல  சித்திகளை
அடைய வேண்டுமென்று ஒரு  பக்தன் நீண்ட நாட்களாகத்
தவமியற்றிக் கொண்டிருந்தான். அவன்  தவத்தை மெச்சி
அன்னை அவன் முன்பு சிறு பெண்ணைப் போல வடிவெடுத்துக்
கொண்டு வந்து அவனைத் தட்டி கண்களைத் திற, வாயை நன்கு
திற என்றாள். அந்த பக்தன் கண்களைத் திறந்து  பார்த்து விட்டு
எதிரில் ஒரு சிறு  பெண் நிற்பதைக் கண்டு  கோபத்துடன்,
"உனக்கு என்ன வேண்டும்? எதற்காக வாயைத்   திறக்கச்
சொல்கிறாய்?"  என்று அதட்டினான்.

அந்தப் பெண் சொன்னாள், "என் வாயிலுள்ள தாம்பூலத்தைத் துப்ப
வேண்டும்" பக்தனுக்கு வந்ததே கோபம். "போ! போ! தாம்பூலம் துப்ப
இடம் பார்த்து வந்திருக்கிறாள் பார், போய்விடு இங்கிருந்து" என்று  விரட்டிவிட்டுத் தன் தவத்தைத் தொடர்ந்தான்.

அம்மைக்குப் புரிந்துவிட்டது. இவனுக்கு இன்னும் பக்குவம்
வரவில்லை என்று திரும்பப் போகும் வழியில் குறட்டை ஒலி.
பார்த்தாள். அங்கு நமது கதா நாயகன் நன்கு குறட்டை விட்டு
அசந்து தூங்குவதைக் கண்டாள்.

சரி இவனிடம் சற்று விளையாடலாமே என்று அவனைத் தட்டி எழுப்பி "எழுந்திரு, வாயைத் திற, நான் என் வாயிலுள்ள தாம்பூலத்தைத் துப்ப வேண்டும்" என்றாள்.

கண் விழித்துப் பார்த்த காளமேகத்துக்கு இதெல்லாம் ஒரு பொருட்டு
அல்ல. நல்ல தூக்கம் கலைந்து போனதே  என்றுதான் வருத்தம்.
"சரி! சரி! தாம்பூலத்தைத் துப்பு!" என்று சொல்லி வாயை "ஆ" வென்று
திறந்து காட்டினான்.

அவ்வளவுதான், சிறு பெண் வடிவில் வந்த அன்னை அகிலாண்டேஸ்
வரியின் தாம்பூலம் அவன் வாயில் விழுந்து  உள்ளே சென்றதுதான்
தாமதம். மந்த புத்தி படைத்த அந்த 'மடையன்' (சமையற்காரன் என்று
பொருள்) கவி பொழியும் காளமேகம் ஆனான்.

அதுமுதல் இவன் ஊர் ஊராகப் போவான், ஆங்காங்கு ஆலயங்களில்
போய் உண்டைக்கட்டி வாங்கி உண்பான்,

பொற்காசு கொடுத்துப் பாடச் சொன்னால் பாடுவான். பிடிக்காதவர்களை
வசை பாடுவான். காசு கொடுத்தும் இவனிடம் வசை வாங்கிக் கட்டிக் கொண்டவர்கள் ஏராளம். அவன் சபித்து ஒரு ஊர் மண்மேடிட்டுப்
போயிற்று.

சில வைணவ ஆலயங்களுக்கு இவன் போனபோது, இவன்
வைணவத்திலிருந்து சைவத்துக்குப் போனவன் என்று  இவனுக்குக்
கதவை அடைத்தது உண்டு. அங்கெல்லாம் இவனது வசைப் பாடல்கள் உதிர்ந்திருக்கின்றன. நீங்கள் ரசிப்பீர்கள் என்று இப்போது இரண்டு பாடல்களைத் தருகிறேன். பிடித்திருந்தால் சொல்லுங்கள், மேலும்
சில  அடுத்தடுத்துக் கொடுக்கிறேன். இவைகள் எங்களுக்கு ஏற்கனவே நன்றாகத் தெரியுமே, ஏன் திரும்பத் திரும்ப 'போர்' அடிக்கிறாய், என்று சொல்பவர்கள் மன்னித்து விடுங்கள். தெரியாதவர்களுக்காக  இவற்றைப் படிக்க  உதவுங்கள். உங்கள் கருத்துக்களையும் தாராளமாக எழுதுங்கள்.

இப்போது இரு பாடல்கள் உங்கள் ரசனைக்கு.

1. முதல் பாட்டு:

கவி காளமேகம் கும்பகோணத்துக்குப் போனபோது ஒரு சத்திரத்தில்
சாப்பிட உட்கார்ந்தான்.நிறைய கூட்டம். வரிசையாக இலை போடப் பட்டிருந்தது. இவன் ஒரு வரிசையில் போய் உட்கார்ந்தான். இவனுக்கு அடுத்தபடியாக  ஒரு முன் குடுமி வைத்தவன் உட்கார்ந்தான். சாப்பாடு பரிமாறினார்கள். காய்கள் பரிமாறி முடிந்ததும் இலையில்  சோறு
கொண்டு வந்து வைத்ததும், காளமேகம் அருகில் உட்கார்ந்திருந்த
குடுமிக்கு அதீதமான பசி போல  இருக்கிறது. வேகமாகக் குனிது
சோற்றைக் கையால் பிசைய முனைந்தான். அப்போது அவனது
முன் குடுமி  அவிழ்ந்து இலையில் விழுந்தது. வலது கை சோறாக
இருந்ததால், தனது இடது கையால் அந்த சிகையை  (தலைமுடி)
அள்ளி வீசி முடிந்து கொண்டான். அப்போது அவன் முடியில்
ஒட்டியிருந்த சோற்றுப் பருக்கைகள்  காளமேகத்தின் மீதும்
இலையிலும் விழுந்தது. வந்ததே கோபம் காளமேகத்துக்கு.
உடனே பாடினான்:-

"சுருக்கு அவிழ்ந்த முன் குடுமிச் சோழியா, சோற்றுப்
பொறுக்கு உலர்ந்த வாயா, புலையா - திருக்குடந்தை
கோட்டானே, நாயே, குரங்கே, உனை ஒருத்தி
போட்டாளே வேலை அற்றுப் போய்"


இதென்னடா இது. தெருவில் சிறு பையங்கள் வசைபாடிக் கொள்வதைப்
போல இருக்கிறதே என்று  நினைக்கிறீர்களா? ஆம்! அதுதான் காள
மேகத்தின் ஸ்பெஷாலிடி. "வசைபாட ஒரு காளமேகம்" என்று
சும்மாவாசொன்னார்கள்.

பாடல் நன்றாகப் புரிகிறது என்று நினைக்கிறேன். தலைமுடியை
முடிச்சு போட்டிருந்தது அவிழ்ந்ததால் 'சுருக்கு  அவிழ்ந்த' என்கிறான்.
சிலர் தலையில் முன்பக்கத்தில் முடிவளர்த்துக் குடுமி வைத்து
அதைக் கட்டிக்  கொள்வார்கள். அமரர் கல்கியின் "பொன்னியின்
செல்வன்"  கதையைப் படித்தவர்கள் அதில் வரும்  ஆழ்வார்க்
கடியானை   நினைத்துக் கொள்ளுங்கள். சோற்றுப் பொறுக்கு
வாய்ப் பகுதியில்  பட்டு உலர்ந்து  போயிருக்கிறதாம். வேலையற்றுப்
போய் உன்னையும் ஒருத்தி பெற்றுப் போட்டாளே என்பதில்
எத்தனை கேலி?

சரி! இப்போது மற்றுமொன்று.

2. இரண்டாம் பாட்டு:

காளமேகம் நல்ல சாப்பாட்டுப் பிரியன். ஒரு முறை இவன் நாகைப்
பட்டினம் போனான். அப்போதெல்லாம் எல்லா  ஊர்களிலும் பல
அன்ன சத்திரங்கள் இருக்கும். அங்கு வெளியூர்களிலிருந்து
வந்தவர்கள் தங்கிக்கொள்ளவும், உணவருந்தவும் சில பெரியோர்கள்
தர்மம் செய்து வைத்திருந்தனர். அப்படிப்பட்ட ஒரு சத்திரத்துக்குக்
காளமேகம்   போனான். அங்கு சத்திரத்தை நிர்வாகம் செய்து
கொண்டிருந்தவன்  பெயர் காத்தான். காளமேகத்தை அந்த
காத்தானுக்கு இன்னாரென்று   தெரியாது. தான் தங்கவும், இரவு
சாப்பாடும் வேண்டுமென்று காளமேகம் கேட்டார்.

சரியென்று தலையாட்டிவிட்டு காத்தான் புறப்பட்டு எங்கோ
போனான்.  அவன் வருவான் வருவான் என்று பசியால்  காத்திருந்த காளமேகத்துக்குக் கோபம் வந்தது. என்ன இது? நள்ளிரவு நேரம்
ஆகிவிட்டது, இவன்  எப்போது வருவது, எப்போது சமைப்பது,
எப்போது நாம் சாப்பிடுவது.  இப்படி நினைத்துக் கொண்டே பசியால்
தூங்கிப்  போய்விட்டான். காத்தான் வந்து எழுப்பினான், கண் விழித்துப் பார்த்தால் வெள்ளி முளைக்கும் நேரம். பொழுது  விடியப் போகிறது.
வந்ததே ஆத்திரம் காளமேகத்துக்கு, அப்போது பாடினான்:

"கத்து கடல் சூழ் நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசி வரும் - குத்தி
உலையில் இட ஊர் அடங்கும், ஓர் அகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி எழும்."


பாட்டு மிக எளிமையானது. காத்தானுடைய சத்திரத்துக்குப் போய்
பசி என்று சொன்னால், பொழுது அத்தமிக்கும்  போது அரிசி வருமாம்,
அதைக்  குத்தி உலையில் போட ஊர் அடங்கிவிடுமாம், அது சொறாக
ஆகி இலையில் இடபொழுது விடிந்துவிடுமாம்". இந்தப் பாட்டைக்
கேட்ட காத்தானுக்கு அதிர்ச்சி. வந்திருப்பவர் பெரிய மனிதர் 
என்பதை   உணர்ந்து கொண்டு மன்னிப்பு கேட்டான். விழுந்து
விழுந்து உபசரித்தான். "சாமி! என்னை இப்படி திட்டி பாட்டு
சொல்லிட்டீங்களே! என்னை எல்லோரும் கேலி பேசுவார்களே"
என்று அழுதான்.

அதற்கு காளமேகம் சொன்னார், "நான் உன்னை கேலி பேசவில்லை
யப்பா. அத்தமிக்கும் போதில் என்றால்,  ஊரெல்லாம் வளம் இழந்து
பஞ்சம்   வரும் போது என்று பொருள், ஊர் அடங்கும் என்றால், உன் சத்திரத்தில் உணவு உண்டு நிம்மதி அடைவர் என்று பொருள். உன் 
சோறு அகப்பையில் வந்து இலையில் விழும்போது  அந்தச் சோற்றைப் பார்த்தால் வெள்ளி கூட தோற்றுப் போகும், அவ்வளவு வெண்மையாக இருக்கும் என்றாராம்.

எப்படி சாமர்த்தியம்? . உங்கள் கருத்தை எழுதுங்கள்.

அன்புடன்
வி.கோபாலன்
தஞ்சாவூர்


கட்டுரையாளர் திரு.வி.கோபாலன் அவர்களின் 
எழில்மிகு தோற்றம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
மனநல மருத்துவமனையில் சேர்வதற்கு என்ன வழி?
-------------------------------------------------------------------------------
"ஐயா! ஒரு சந்தேகம்!"

"என்ன சந்தேகம்? தயங்காமல் கேள் ம‌க்கா!"

"ஐயா! இந்த "அறிவு ஜீவி" என்கிறார்களே அவர் யார்? அவர் எப்படி நடப்பார்?எப்படிப் பேசுவார்? எப்படி எழுதுவார்?"

"இதைப்பற்றி உனக்கு ஏதாவது ஓர் அபிப்ராயம் இருக்குமல்லவா? அதை முதலில் கூறு!"

"நான் சொன்னால் என் 'அறிவை'ப் பார்த்து நீங்கள் சிரிக்கக் கூடாது ஐயா!"

"சரி! சிரிக்கவில்லை சொல்லு!"

"அறிவு' என்பதை நான் ஒரு பெயராகவே நினைத்து இருந்தேன்.அறிவுடை நம்பி, அறிவழகன் என்று திராவிட இனமானப் பெயர்களாக வைக்கப்படு மல்லவா? அதுபோல 'அறிவு' ஒரு பெயராகவும், 'ஜீவி' என்பதை இனிஷியலாகவும் நினைத்து இருந்தேன்.நேற்றுதான் என் நண்பன் சொன்னான் நான் எண்ணியிருந்தது தவறாம்."

"சரி! உன் நண்பன் என்ன விளக்கம் கொடுத்தான்?"

"அவனுக்கும் சொல்லத் தெரியவில்லை. 'அதெல்லாம் பெரிய விஷயமடா! நமக்கு எதுக்கு?' என்று சொல்லிவிட்டு 'கட்டிங்' அடிக்கப் போய்விட்டான்."

"சரி!மீண்டும் நீ கேட்ட கேள்வியை கேள் பார்ப்போம்!"

"இந்த "அறிவு ஜீவி" என்கிறார்களே அவர் யார்? அவர் எப்படி நடப்பார்?எப்படிப் பேசுவார்? எப்படி எழுதுவார்?"

"நீ கேட்பது கண்ண பரமாத்வைப் பார்த்து அர்ஜுனன் கேட்பது போல் உள்ளது. கீதை வாசித்து இருக்கிறாயா?"

"இல்லை ஐயா!"

"மிகவும் நல்லாதாயிற்று. முதல் பாடத்திற்கு நீ சரியான ஆள்."

"அப்படியா ஐயா!?"

"ஆமாம்! ஒரு அறிவுஜீவிக்கு வேண்டிய 'ஆடியென்சே' அவன் சொல்லப் போகும் தத்துவத்தினை அறியாதவர்கள் தான்"

"சரி!ஐயா!"

"கிருஷ்ணரைப் பார்த்து அர்ஜுனன் கேட்டானாம்:"கண்ணா!இந்த 'ஸ்திதப் பிரக்ஞன்' என்கிறவன் எப்படி இருப்பான்? எப்படிப் பேசுவான்? எப்படி நடந்து கொள்வான்?"

"ஐயா! நான் கேட்டது 'அறிவு ஜீவி'யைப் பற்றி! நீங்கள் புரியாத சொற்களில் ஏதேதொ சொல்கிறீர்களே!"

"ஆங்!முதல் பாடத்தைக் கற்றுக் கொண்டுவிட்டாயே!"

"அப்படியா ஐயா? அதென்ன?"

"புரியாத சொற்கள்' என்று சொன்னாயே! அது தான் அறிவுஜீவித் தனத்துக்கு முதல் தகுதி!"

"அப்படியா ஐயா? ஓரிரு எடுத்துக்காட்டுக்கள் சொல்ல முடியுமா ஐயா!"

"சொல்கிறேன்.புறவயம், முரணியக்கம், முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம்..."

"ஐயா! போதுமய்யா! தலை சுற்றுகிறது!"

"அதன் பிற்கு கேள்.இதுவரை கேள்விப் பட்டிராத வெளிநாட்டுப் பெயர்களைப் பயன் படுத்தி எழுதவும் பேசவும் தெரிய வேண்டும்"

"எடுத்துக்காட்டாக..."

"ஜான் டி ஃப்ளஃப்;   ரொனல்டு டிம்ரி லையர்..."

"இதனால் என்ன பயன் ஐயா?"

"கேட்பவர்களுக்கு அறிவு ஜீவி நிறையப் படித்து இருக்கிறார்.அவர் சொல்லுவ தெல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்ற நல்ல எண்ணம் வரும்."

"அப்புறம்...?"

"நீளமான ஜோல்னா பை ஒன்று வேண்டும்.. காதி கிராஃப்டில் கிடைக்கும்"

"இது எதற்கு ஐயா!?"

"அப்போதான் அறிவு ஜீவி 'கெட் அப்' கிடைக்கும்.அந்தப் பையில் இரண்டு பெரிய பைண்டு வால்யூம் புத்தகங்கள் இருக்க வேண்டும்.கூடியவரை அந்தப் புத்தகங்கள் அந்தக் கால ருஷ்யப் புத்தகங்களாக இருத்தல் நலம். சேகுவாராவாக இருந்தால் மிகவும் நல்லது."

"வேறு ஏதாவது உண்டா ஐயா?"

"நிறைய இருக்கிறது. ஒன்றிரண்டு சொல்லி முடிப்பேன்..."

"சரி சொல்லுங்கள் ஐயா!"

"அறிவு ஜீவி முடியை அடிக்கடி வெட்டக் கூடாது. வருடத்திற்கு ஒருமுறை வெட்டினால் போதுமானது!அதுபோல முகச்சவரம் ஆண்டுக்கு இரு முறைதான் செய்ய வேண்டும். கட்டாயம் ஜிப்பா போட்டுக் கொள்ள வேண்டும். அது கணுக்கால் வரை தொங்கினால் நிறைய அறிவு ஜீவித்தனம் வரும். ஃப்ரேம் இல்லாத குறுகிய கண்ணாடியைப் போட்டுக் கொண்டு மேல் கண்ணால் சீரியஸாக முகத்தை வைத்துக்கோன்டு பார்க்க வேண்டும். அப்புறம்....."

"ஐயா! போறும் ஐயா! புரிந்துவிட்டது. நன்றி ஐயா!"

"சரி! போய் வா மகனே! நாளைக்கு மன நல மருத்துவமனையில் சேராமல் இருந்தால் எனக்கு ஒரு 'கால்' போடு."

ஆக்கம்:
முக்காலம்

(இது புனைப்பெயர். உண்மைப் பெயரையும், ஊரையும் கட்டுரையாளர் தரவில்லை!)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

19 comments:

  1. கவி காளமேகத்தை இத்தனை விரைவாக வெளிக்கொணர்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மிக்க நன்றி. இதுபோன்ற பாடல்களைத் தெரிந்து கொள்வதால் என்ன பயன்? காலத்தை வீணடிக்கும் வேலையல்லவா இது என்று அறிவுஜீவிகள் சிலர் கேட்கலாம். வாழ்க்கையை எப்போதும் சீரியசாக வைத்துக் கொள்வதுதான் சரி என்ற எண்ணம் தவறு. அவ்வப்போது சீரியஸ் அல்லாத விஷயங்களையும் படித்து ரசிப்பது உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. இதை வெளியிட்ட உங்களுக்கு மீண்டும் எனது நன்றி. அறிவுஜீவிகள் பற்றிய விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது. கட்டுரையில் கண்டுள்ளபடி பல அறிவுஜீவிகள் இருப்பதையும் நான் அறிவேன். சமீபத்தில் அன்னா ஹசாரே குறித்து நான் ஒரு கட்டுரை எழுதி ஒரு வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தேன். அதில் லோக்பால் மசோதாவை உடனடியாகக் கொண்டுவர வேண்டி உண்ணா நோன்பு இருந்ததைக் குறிப்பிட்டு, இந்தியாவில் இதற்கு முன்பு நடந்த ஊழல்களின் போது இவர் ஏன் வாயைத் திறக்கவில்லை என்று கேட்டிருந்தேன். அதற்கு ஒரு பிரபல எழுத்தாளர் என்னுடைய கட்டுரையை குறை கூறி எழுதினார். மற்றொரு அறிவுஜீவி என்னை 'அரை வேக்காடு' என்று விமரிசித்தார். நான் அரை வேக்காடுதானா என்ற ஐயப்பாடு இப்போது எனக்கு ஏற்பட்டுவிட்டது. ஏனென்றால் அப்படி சொன்னது ஒரு அறிவுஜீவி. நன்றி ஐயா.

    ReplyDelete
  2. கோபாலன் சாரின் புகைப்படத்துக்கும் அவர் சொல்லியுள்ள செய்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஏதோ லண்டன் துரை போல இருக்கிறார்.ஆமாம்!அந்தப் புகைப் படம் லண்டனில் எடுக்கப்பட்டதுதான்.

    கவி காளமேகத்தினைப் பற்றிய செய்தி என் தலைமுறைக்குப் புதிது இல்லை. ஆனால் வகுப்பறைக்கு வரக்கூடிய 2315 க்கு மேல் உள்ள இளைஞர்களில் பாதிப் பேருக்காவது புதிதாக இருக்கும். பெரும்பாலோர் தமிழை இரண்டாவது பாடமாகக் கூடப் பயிலாதவர்களாக இருக்ககூடும். என்வே உங்கள் செய்தி பலருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்.எனவே மேலும் சுவையுள்ள காளமேகத்தின் பாடல்களைத் தாருங்கள், கோபாலன் சார்!

    இரண்டாவது கட்டுரை நல்ல அங்கதம்.ஜோல்னா பை மட்டும் தான் உள்ளது. மற்ற சாதனங்களையும் வாங்கிவிட்டு நானும் ஒரு அறிவுஜீவியாக நடமாடுகிறேன்.

    ReplyDelete
  3. /////Thanjavooraan said...
    கவி காளமேகத்தை இத்தனை விரைவாக வெளிக்கொணர்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மிக்க நன்றி. இதுபோன்ற பாடல்களைத் தெரிந்து கொள்வதால் என்ன பயன்? காலத்தை வீணடிக்கும் வேலையல்லவா இது என்று அறிவுஜீவிகள் சிலர் கேட்கலாம். வாழ்க்கையை எப்போதும் சீரியசாக வைத்துக் கொள்வதுதான் சரி என்ற எண்ணம் தவறு. அவ்வப்போது சீரியஸ் அல்லாத விஷயங்களையும் படித்து ரசிப்பது உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. இதை வெளியிட்ட உங்களுக்கு மீண்டும் எனது நன்றி. அறிவுஜீவிகள் பற்றிய விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது. கட்டுரையில் கண்டுள்ளபடி பல அறிவுஜீவிகள் இருப்பதையும் நான் அறிவேன். சமீபத்தில் அன்னா ஹசாரே குறித்து நான் ஒரு கட்டுரை எழுதி ஒரு வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தேன். அதில் லோக்பால் மசோதாவை உடனடியாகக் கொண்டுவர வேண்டி உண்ணா நோன்பு இருந்ததைக் குறிப்பிட்டு, இந்தியாவில் இதற்கு முன்பு நடந்த ஊழல்களின் போது இவர் ஏன் வாயைத் திறக்கவில்லை என்று கேட்டிருந்தேன். அதற்கு ஒரு பிரபல எழுத்தாளர் என்னுடைய கட்டுரையை குறை கூறி எழுதினார். மற்றொரு அறிவுஜீவி என்னை 'அரை வேக்காடு' என்று விமரிசித்தார். நான் அரை வேக்காடுதானா என்ற ஐயப்பாடு இப்போது எனக்கு ஏற்பட்டுவிட்டது. ஏனென்றால் அப்படி சொன்னது ஒரு அறிவுஜீவி. நன்றி ஐயா.//////

    மனிதர்களில் முழு வேக்காடு ஆனவர்கள் என்று ஒருவரும் கிடையாது. முழு வேக்காடு ஆனவர்களை சனீஷ்வரன் விட்டு வைக்கமாட்டான்.ஆகவே உங்கள் ஐயப்பாடுகளைக் கடாசிவிட்டு, தொடர்ந்து உங்கள் அனுபவங்களையும், சிந்தனைகளையும் ஆவணப் படுத்துங்கள். கூகுள் ஆண்டவர் இருக்கிறார் கை கொடுக்க!

    ReplyDelete
  4. கவி காளமேகத்தின் பாடல்கள் மிக அருமை... கோபாலன் அவர்களே, மேலும் எழுதவும்...

    ReplyDelete
  5. அன்புடன் வணக்கம் திரு தஞ்சாவூரார். கவி காளமேகம் பற்றி இன்னும் நிறைய செய்திகள் உள்ளன நீங்கள் சுவைபட எழுதுக்ரீர்கள் !! மேலும் எடுத்து கொடுங்கள் கூகுளே ஆண்டவர் என்ன??? நமது வகுப்பறை வாத்தியார் கருணை மிக்கவர் நல்லவர் இது போன்று நல்ல கருத்துக்களை நகைசுவையாகவும் ...சுவைபடவும் ...எழுதினால் மிக்க மகிழ்வுடன் பிரசுரிப்பார்கள்.. >>வணக்கம் திரு முக்காலம்.பதிவு அருமை...

    ReplyDelete
  6. வணக்கம் திரு kmr.k..
    **இரண்டாவது கட்டுரை நல்ல அங்கதம்.ஜோல்னா பை மட்டும் தான் உள்ளது. மற்ற சாதனங்களையும் வாங்கிவிட்டு நானும் ஒரு அறிவுஜீவியாக நடமாடுகிறேன்**
    ஜோல்ன பை வேண்டாம் ?? வெறும் சட்டை பை போதும்!! எங்கள் .kmr.k.க்கு...!! **அங்கதம்**நல்ல வார்த்தை .விளக்கம் கொடுங்கள்... (எனக்கு தெரிகிறது..) பிறருக்கு... ??

    ReplyDelete
  7. கோபாலன் சார்,
    காளமேகப் புலவரின் சரிதையை அடக்கிய கதை ஒன்றை எழுத்தாளர் பாலகுமாரன் எழுதியதைப் படித்திருக்கிறேன்....
    அவரின் கவித்துவத்தை இப்போது படித்து ரசிக்கிறேன்... உண்மையில் அருமை, தொடர்ந்து எழுதுங்கள்....
    ////"சுருக்கு அவிழ்ந்த முன் குடுமிச் சோழியா, சோற்றுப்
    பொறுக்கு உலர்ந்த வாயா, புலையா - திருக்குடந்தை
    கோட்டானே, நாயே, குரங்கே, உனை ஒருத்தி
    போட்டாளே வேலை அற்றுப் போய்"////

    இன்றும் இப்படிப் பட்டவர்களைக் காண முடிகிறது.... பெரும்பாலும் உணவு விடுதியில் பார்க்கலாம்... கையைக் கழுவிவிட்டு.. கையை உதறி பக்கத்தில் இருப்பவர் மேலே தெறிக்கச் செய்வது... அதன் பிறகு கொஞ்சம் கூட சொரணை இல்லாமல் அப்படியே போவது... சிலநேரம் தனது ஆடை அடுத்தவர் இலையில் படுவதைக் கவனிப்பதில்லை.. ஒரு இருமல் செருமல்... இப்படிப் பல.... அப்படி நிகாழும் போது.. இனி காளமேகத்தின் ஞாபகம் தான் வரும்..

    /////காத்தானுடைய சத்திரத்துக்குப் போய்
    பசி என்று சொன்னால், பொழுது அத்தமிக்கும் போது அரிசி வருமாம்,
    அதைக் குத்தி உலையில் போட ஊர் அடங்கிவிடுமாம்/////

    பெயர் என்னமோ அவனுக்கு காத்தான்... ஆனால் அதன் பொருளோ அங்கு செல்பவர்களுக்குப் போலும்.. நன்றாக இருக்கிறது.... தொடர்ந்து எழுதுங்கள்.. நன்றி சார்.

    ReplyDelete
  8. அறிவுஜீவியின் லட்ச்சணம் என்று அடையாள படுத்திக் கொள்பவர்களின் போக்கை சொன்னவரின்.... லட்ச்சணம் அருமை! "முக்காலம்" என்பது பொருந்தும்... அருமையான சுவாரஷ்யமான அதே நேரம் அர்த்த மிகுந்த எதார்த்தமான கதை....

    /////"புரியாத சொற்கள்' என்று சொன்னாயே! அது தான் அறிவுஜீவித் தனத்துக்கு முதல் தகுதி!"
    "அப்படியா ஐயா? ஓரிரு எடுத்துக்காட்டுக்கள் சொல்ல முடியுமா ஐயா!"
    "சொல்கிறேன்.புறவயம், முரணியக்கம், முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம்..."
    "ஐயா! போதுமய்யா! தலை சுற்றுகிறது!"
    "அதன் பிற்கு கேள்.இதுவரை கேள்விப் பட்டிராத வெளிநாட்டுப் பெயர்களைப் பயன் படுத்தி எழுதவும் பேசவும் தெரிய வேண்டும்"
    "எடுத்துக்காட்டாக..."
    "ஜான் டி ஃப்ளஃப்; ரொனல்டு டிம்ரி லையர்..."
    "இதனால் என்ன பயன் ஐயா?"
    "கேட்பவர்களுக்கு அறிவு ஜீவி நிறையப் படித்து இருக்கிறார்.அவர் சொல்லுவ தெல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்ற நல்ல எண்ணம் வரும்."/////

    முழுவதுமே அருமை என்றாலும் இந்த இடங்கள் அருமை... உயர்ந்த நடை (அறிவுஜீவித் தனம்) என்று சொல்லிக் கொண்டு எழுதாமல்... பிறருக்கு புரியும் படி எழுதுவதே சிறப்பு... இதுவே மகாகவியின் எண்ணமுமே...

    திருவாளர் முக்காலம் அவர்களின் ஆக்கம் எக்காலத்திற்கும் பொருந்தும்.... நன்றி...

    ReplyDelete
  9. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா, சிறு வயதில் நான் படித்த கவி காளமேகத்தின் பாடல்கள் அனைத்தும்
    மறந்தே போய் விட்ட நேரத்தில் மீண்டும் அவற்றை நினைவூட்டி , சுவைக்கவும் இரண்டு பாடல்களை வழங்கிய ஆசிரியருக்கும் , திரு.கோபாலன்
    அவர்களுக்கும் நன்றி. காளமேகப்புலவரின் பாடல்கள் அனைத்தையும் பார்க்க‌
    வலைத்தளம்"லின்க்" இருந்தால் பதிவிடுமாறு பணிவுடன் வேன்டுகிறேன்.
    அன்புடன், அரசு.

    ReplyDelete
  10. kaalamegam padalgal engalukku puthithu alla, akilavin kathaithan puthithu. thodarthu ithu pondra kathaigalai ezhuthungal appa.

    ReplyDelete
  11. "முக்காலம் "

    பெயரை வெளியிடாதவரின் பதிப்புகளை தரும் கண்டிப்பில்லாத வகுப்பறையில் ..

    ஒருகாலத்தைக் கூட முக்கால் பாகமே அறிந்திருப்பதாக சொல்ல அந்த பெயரா..

    இருக்கும் 12 காலத்தில் 3 காலத்தை மட்டுமே அறிந்திருப்பதால் அந்தப் பெயரா..

    அது சரி..

    அறிவு ஜீவி யார் என யாரிடம் கேட்கனும் எனத் தெரியாத அறிவு ஜீவிகளுக்கு(?)
    இப்படித்தான் விளக்கம் சொல்ல வேண்டும்..

    அறிவைப் பற்றி கேட்டால் ஆடை அணிகலன் என புறத் தோற்றத்தை சொல்லுவது வள்ளுவம் சொல்லும் "புல்லறிவாண்மை"யை வெளிப்படுத்துகிறது..

    இது நகைச்சுவை பதிவு..
    ரசிக்கவா..புசிக்கவா..

    ReplyDelete
  12. காளமேகப் புலவரின் கவித்திறனை செப்பியமைக்கு வாழ்த்துக்கள்..

    சமணத்தில் பிறந்தது
    வைணவத்தில் வளர்ந்து
    சைவத்திற்கு மாறியதால்
    அவரின் தமிழ் ரசிக்க வைக்கிறதோ..?

    இன்னமும் எதிர்பார்க்கிறோம்..
    வழக்கம் போல் வணக்கமும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  13. ///காளமேகப்புலவரின் பாடல்கள் அனைத்தையும் பார்க்க‌///

    வணக்கம் தோழர் அரசு அவர்களே..

    fpublish.com என்ற தளத்தில்
    காளமேகப் புலவரின் பாடல்கள்
    மொபைல் பதிப்பாக உள்ளது
    உங்கள் செல்(ல)ப் பேசியில் பதிவு இறக்கம் செய்து கொண்டு எப்போது வேண்டுமானாலும் படித்து ரசியுங்கள்

    ReplyDelete
  14. அந்தப் பைய‌ன் மன நல மருத்துவமனையில் உள்ளார். ஓரிரு நாளில் வெளி வருவார்.அவ்ருக்கு 'அறிவுஜீவி'யைப் பற்றி முழு விளக்கம் அளிக்க ஐயர் தயாராக இருக்கட்டும்=தன் வல்லறிவோடு!

    ReplyDelete
  15. ///அந்தப் பைய‌ன் மன நல மருத்துவமனையில் உள்ளார். ஓரிரு நாளில் வெளி வருவார்.அவ்ருக்கு 'அறிவுஜீவி'யைப் பற்றி முழு விளக்கம் அளிக்க ஐயர் தயாராக இருக்கட்டும்=தன் வல்லறிவோடு!///

    எல்லோருக்கும்
    எல்லா விளக்கமும் புரியாது..
    புரிய வேண்டிய அவசியமும் இல்லை.
    புரிய வைக்க வேண்டிய கட்டாயமும் இல்லை

    இது புரியாததால் தானே அறிவு ஜீவி பற்றிய விளக்கம் கேட்டு இப்படி சிலர்..

    ReplyDelete
  16. அகிலா பான்பராக் போட்டுத் துப்பியதை சாப்பிட்டுத்தான் காளமேகம் பெரும் புலவரானார் என்பது காளமேகத்தின் இமேஜைக் குறைப்பதாக இருந்தது..(அம்பாளின் இமேஜையும்தான்..)செய்தி புதிது..
    மேலும்.. காளமேகத்தின் சிலேடை பற்றிப் படித்திருக்கிறேன்..சிலேடைக்கு தனியாக உதாரணங்கள் படித்ததுண்டு..அவர் பாடலின் சிலேடை படித்து அறிந்ததில்லை..
    எப்படி சாமர்த்தியம்? என்று கேட்டு ஒரு பாராவில் விளக்கி எழுதியிருந்ததைப் படித்தபோதுதான் புரிந்தது அவரின் சாமர்த்தியம்..
    உண்மையில் அவரின் பாடலைப் படித்தபோது பசியின் வேகத்தில் அவரின் கோபம் கலந்த வசவு அர்த்தம்தான் பாடலில் தொனித்தது..எனக்குப் புரிபட்டது..
    அய்யாவின் ஆக்க வரிசையில் மற்றுமொரு நல்ல தொடர்ச்சி..நன்றி..

    ReplyDelete
  17. //////////புறவயம், முரணியக்கம், முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம்..."
    "ஜான் டி ஃப்ளஃப்; ரொனல்டு டிம்ரி லையர்..."//////////

    இவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்து உரையாடல் வடிவில் வெளியிட்டிருக்கும் முக்காலம் ஒரு பெரிய அறிவுஜீவிதான் போங்க..

    ReplyDelete
  18. "அகிலா துப்பிய தாம்பூலம்!" கொவிலில் எதோ சொற்பொழிவு கேட்டது போன்ற உணர்வு. நல்ல தலைப்பு.

    திருவானைக்கோவிலில் உறையும் அகிலாண்டேஸ்வரி அம்மன் கை விட்டால் மதுரை மீனாக்ஷி, காஞ்சி காமாக்ஷி, அபிராமி, சிவகாமி எல்லாதுக்கும் மேலெ சக்தினு அம்மனுக்கு நிரய பெயர்கள் உண்டு. ஒரு வடிவம் போனால் இன்னொன்று... ஆயிரம் கண்ணுடயால், "அவள் கடைக்கண் பார்வை போதும் முப்பேறும், எப்பேறும் பெற்று வாழ" என்பார்கள். அவள் தான் லோக நாயகி, லோக மாதா என்பார்கள்.

    //Mr.V.Gopalam, Thanjஅவுர்//பெயர் தவராக அச்சிடப்பட்டுள்ளது அய்யா.

    //கவி காளமேகம் பற்றி உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்திருக்கும்.
    காரணம் பள்ளிக்கூட பாடங்களில் அவனது 'சிலேடை' பாடல்கள்
    அதிகம் வந்திருக்கிறது.// இம் என்னும் பொலுதில் எலு நூரு, என்னுரு பாடல் பாடும் திரமை கொன்டவர் என கேள்வி பட்டுல்லேன் அய்யா. ஆனால் அவரின் அருள்பெற்ற கதை எனக்கு புதிது :)

    //அவன் காலத்தில் வைணவ, சைவ பூசல்கள் அதிகம்//

    ஒரு வேலை அதிகமா பூசிக்கொண்டதால் இருக்குமோ!:)

    ReplyDelete
  19. //பள்ளிக்கூட பாடங்களில் அவனது 'சிலேடை' பாடல்கள்
    அதிகம் வந்திருக்கிறது//
    அய்யகோ! எனது பாட்டனார் காலத்து பாடதிட்டம் இன்னமும் மாற்றப்படவில்லையோ. தமிழ‌கம் இன்னமும் முன்னேரவில்லை. சத்யசோதனை.

    //தன் தவத்தைத் தொடர்ந்தான்// superb. vida maattan pola.
    கஜினி - சஞ்ஜை ராமசாமி - சூரியா ஞாபகத்துக்கு வருது அய்யா.

    தனது இடது கையால் அந்த முன் குடுமியை அள்ளி வீசி முடிந்து கொண்டான். :)) யப்படி பெரிய வேலைக்காரனாயிருப்பார் போல.

    புலையா - ஓஹ், இதெல்லாம் மகா ராஜாவின் பாடல்களா... யாரங்கே ***** நோக்கி சிற‌ப்பு படை செல்லட்டும். :)))

    கோபாலன் சார் காலில் ஸ்போட்ஸ் சார்க்ஸ் என்னும் சிரிய வகை சாக்ஸ் அனிந்துல்லார் பொலும். எப்புடி கண்டு புடிச்சோமுல்லே. கரண்டுபில் கட்ரதே இல்லை.

    அய்யா ஊழல் விவகாரமாக தயாலு அம்மாவை கண்காணிக்க அவர்களின் இருப்பிடதிற்கு CBI விரைந்தனர் என்று ஒரு செய்தியும் நாளிதல்கலில் படித்தேன்.

    //2. மனநல மருத்துவமனையில் சேர்வதற்கு என்ன வழி?//
    முக்காலம் அய்யா "அறிவுடை நம்பி கலியுக பெருமாள்" - என்பது திராவிட இனப் பெயரா?

    //சரி! போய் வா மகனே! நாளைக்கு மன நல மருத்துவமனையில் சேராமல் இருந்தால் எனக்கு ஒரு 'கால்' போடு."// விழுந்து,விழுந்து சிரித்தேன்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com