மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

31.5.11

Astrology ரேஸ் குதிரையும், ஜட்கா வண்டிக் குதிரையும்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology ரேஸ் குதிரையும், ஜட்கா வண்டிக் குதிரையும்!

இன்று எல்லாத்துறைகளிலும் பெண்கள் சிறப்பாக வேலை செய்கிறார்கள். வரவேற்க வேண்டிய விஷயம். பல இடங்களில் ஆண்களுக்கு இணையாக - ஏன் ஆண்களைவிட அதிகமான எண்ணிக்கையில் இளம் பெண்கள் வேலை செய்கிறார்கள்.

இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி என்று அனைத்துக் கல்வி விரிவாக்கங்களிலும், பெண்களின் ஆதிக்கம் உள்ளது.

கல்லூரிகளில் கற்க வாய்ப்பு இல்லாத பெண்கள் கூட, ப்ளஸ் டூ வரை அடித்துப் பிடித்துத் தேர்வு பெற்று, பலவிதமான வேலைகளில் பணி செய்கின்றார்கள்..

எங்கள் பகுதியில் (கோவை & திருப்பூர்) பனியன் உற்பத்தி, துணி உற்பத்தி, சாயப் பட்டறைகள், நூல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பெண்களே அதிக அளவில் பணி புரிகிறார்கள்.

இந்த மாற்றம் கடந்த இருபது ஆண்டுகளுக்குள் ஏற்பட்டுள்ளது.

ஏற்பட்டுள்ள அந்த மாற்றம் பல பக்க விளைவுகளையும் (side effects) ஏற்படுத்தியுள்ளது. பக்க விளைவுகள் என்னென்ன என்பதை இன்னொரு நாள் பார்க்கலாம். இப்போது சொல்ல வந்த விஷயத்தை மட்டும் பார்ப்போம்.
-----------------------------------------------------------------------------------------------------
திருமணத்தைப் பொறுத்தவரை பெண்களுக்கு என்று சில கண்டிஷன்கள் உள்ளன!

அந்தக் காலத்தைப் போல, பெற்றோர்கள் சொல்லுகின்ற மாப்பிள்ளைக்கு, எந்தப் பெண்ணும் இப்போது சட்டென்று கழுத்தை நீட்ட மாட்டாள்.

வருகின்ற வரனை உறித்து, ஊருகாய் போடுகிற அளவிற்கு அறிந்து பார்த்துவிட்டுத்தான் திருமணத்திற்கு சம்மதிப்பாள்

பையனின் சம்பாத்தியம்தான் முதன்மையானது. பன்னாட்டு நிறுவனம் அல்லது இந்திய நிறுவனங்களில் பெரிய நிறுவனம் போன்றவற்றில் பணிபுரியும் வரன் வேண்டும்.

வியாபாரம் செய்யும் பையன் என்றால் ‘நோ’ என்று சொல்லிவிடுவார்கள். வியாபாரம் செய்யும் பையனுக்கு முதலீடும் இருக்குமாம், கடனும் இருக்குமாம். அவனுடைய மதிப்பைத் தெரிந்து கொள்ள முடியாதாம். (He may have assets and also liabilities. No one can assess his net worth) ஆகவே வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள்.

கறுப்பு, சிவப்பு என்ற நிற பேதம் எல்லாம் அவர்கள் பார்ப்பதில்லை. ஆசாமி ஸ்டைலாக வாட்டசாட்டமாக இருக்கவேண்டும். உங்கள் மொழியில் சொன்னால், திரைப்பட நடிகர் சூர்யா அல்லது அஜீத் அல்லது கார்த்திக்  அல்லது விஷால் போன்ற தோற்றத்துடன் இருக்க வேண்டும். அது முக்கியம்.

ஓமக்குச்சி நரசிம்மன் அல்லது பயில்வான் ரங்கநாதன் போன்ற தோற்றத்தில் இருந்தால் ‘நோ’ என்று சொல்லிவிடுவார்கள்.

அவை இரண்டையும் விட முக்கியமாக அவன் தனிக் காட்டு ராஜாவாக இருக்க வேண்டும். கிழம் கட்டைகள் உடன் இருக்கக்கூடாது. அதாவது பெற்றோர்கள், தாத்தா, பாட்டிகள் உடன் இருக்கக்கூடாது.

உடன் என்ற வார்த்தையை நன்கு கவனிக்கவும். அவர்கள் இருக்கலாம், ஆனாலும் தள்ளி இருக்க வேண்டும்.

அவன் பெங்களூரில் வேலை பார்த்தால், மேற்படி கூட்டம், வேறு பிரதேங்களில் இருக்க வேண்டும். அதாவது கம்பம், தேனி போன்ற இடங்களில் இருக்கலாம். அவன் சென்னையில் வேலை பார்த்தால், அவர்கள், வள்ளியூர், நாங்குநேரி அல்லது ஸ்ரீவைகுண்டம் போன்ற இடங்களில் இருக்கலாம்.

அவனைத் தேடிப் பார்க்க வந்தாலும் மூன்று நாட்களில் கிளம்பிவிட வேண்டும். விருந்தும் மருந்து மூன்று நாட்கள்தான் என்பதை நினைவில் கொள்ளவும்.

ஒருவர் தன் நண்பரின் மகளுக்காக ஒரு நல்ல வரனைப் பரிந்துரை செய்தார். உடனே பெண்ணைப் பெற்ற புண்னியவான் கேட்டார்.

  “பையன் எங்கே இருக்கிறான்?”

  “பெங்களூரில்....”

  “அவனுடைய பெற்றோர்கள்....?”

  “அவர்களும் அவனுடன்தான் இருக்கிறார்கள். அவனுடைய தந்தை வங்கி அதிகாரியாக இருந்தார். ஒரே மகன். அவனுக்கு நல்ல வேலை கிடைத்தவுடன், தன்னுடைய வேலையில் விருப்ப ஓய்வு பெற்றதுடன், பெங்களூர் சிவாஜி நகரில் ப்ளாட் ஒன்றை வாங்கிக் கொண்டு, அங்கே போய் செட்டிலாகி விட்டார்கள்.”

  “ஓகோ கூட்டுக் குடும்பமா?”

  “மூன்று பேர் இருப்பது எப்படியடா கூட்டுக் குடும்பம் ஆகும்? பையன் தனியாக இருந்தால் தனிக்கட்டை. பெற்றோர்களுடன் இருந்தால் குடும்பம். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, சித்தப்பன்  அல்லது அத்தை என்று ஏழு அல்லது எட்டு டிக்கெட்டுகளுடன் இருந்தால்தான் கூட்டுக் குடும்பம்.”

  “இல்லை. எனக்குச் சரிப்படாது. பையன் தனியாக இருக்கிற இடமாக வேண்டும்”

  “ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

  “என் பெண்ணைப் பற்றி உனக்குத் தெரியாது. பெற்றோர்கள் உடன் இருந்தால் பத்து நாள் கூடத் தாங்காது. சண்டை வந்துவிடும். பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து விடுவாள். ஒரே பெண் என்று செல்லமாக வளர்த்து விட்டேன். யாருக்கும் கட்டுப்பட மாட்டாள். உனக்குப் புரியும்படியாகச் சொன்னால், அவள் ரேஸ் குதிரை. ஜட்கா வண்டியெல்லாம் அவளுக்குச் சரிப்பட்டுவராது! ஜாக்கி மட்டும் இருந்தால் போதும். வண்டி வேண்டாம்”

(அலசல் தொடரும்)

அன்புடன்
வாத்தியார்வாழ்க வளமுடன்!

6 comments:

hamaragana said...

அன்புடன் வணக்கம்
பதிவின் கருத்து மிக சரியானது..தற்காலத்து பெண்கள் வயது வரை வளர்த்த அம்மா அப்பா கேட்டதை வாங்கி கொடுக்கட்டும் போய் பார்க்கட்டும் (கவனிக்க போய் பார்க்கட்டும்) ஆனால் என்னிடம் முதலில் ஒரு வார்த்தை சொல்லி எங்க அப்பா அம்மாவுக்கு இன்ன செய்கிறேன் என்று சொல்லி விட்டு செயட்டும் எனக்கு தெரியாமல் ஏதாவது செய்தால் நடக்கிற கதையே வேறு... பெண்ணும் வேலைக்கு சென்றால் குழந்தைகள் கவனிக்க உங்கள் பெற்றோர் வரட்டும்.. இப்பிடித்தான் இருக்கு உலகம்... !!!!!திரு அய்யர் பெண்ணின் எதிர்பார்ப்பு என்ன என கேட்டார்கள் பதில் ???பதிவுக்கு நன்றி

Soundarraju said...

sir ,
Nalla Pathivu

"அவள் ரேஸ் குதிரை. ஜட்கா வண்டியெல்லாம் அவளுக்குச் சரிப்பட்டுவராது! ஜாக்கி மட்டும் இருந்தால் போதும். வண்டி வேண்டாம்”

niraya ul arthangalai thaangi ullathu .
Nandru,
Nandri .

Soundar

ilayaraja said...

Dear Sir,

What was you said all are truth only. Now days girls are expecting like that only.

iyer said...

சேலை கட்டி பழகாத பெண்களுக்கு
சேலை கட்டும் பயிற்சி தரப்படுகிறதா?

தொடர்பில்லாத சுடிதார் சல்வார்ஜீன்ஸ்
தொடர்ந்து வரும் உறவினை காட்டுது

அப்படியா என கேட்பவர்கள்
அது பற்றி ஆராய்ச்சியே நடத்தலாம்

எங்கள் குடும்பத்தில் அப்படி இல்லை
என்னவோ அய்யர் சொல்கிறார்என்பவர்

எழுதலாம் சில யோசனைகளுக்குபிறகு
ஏதோ சில விதிவிலக்குகள் விதிக்கல்ல

பெண்ணிற்கு மூன்று சுழி போடுவதே
பெண்களே எல்லாவற்றிலும் என

கூடுதலான உரிமைகள் தருவது போல்
கூட்டிச் சொல்வதாக எண்ணவேண்டாம்

பெண்களை மதிக்கின்றோம் ஆனால்
பெண்களை... அந்த பெண்களை...?

sekar said...

Now a days girls are very smart in selecting their companians.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

பக்க விளைவுகளையும் படிக்க ஆவலோடு இருக்கிறோம் ..

நன்றி வாத்தியார் ஐயா..