மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

1.5.11

குடும்ப அரசியல்

--------------------------------------------------------------------------
குடும்ப அரசியல்
========================================
எழுதியவர் மிஸ்டர் முக்காலம்
ஞாயிறு மலர்

தலைப்பை பார்த்து நீங்கள் ஏதாவது கற்பனை செய்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. கட்டுரையாளர் கொடுத்திருந்த தலைப்பு வேறு. அதை நான் சற்று மாற்றியிருக்கிறேன். அவ்வளவுதான். சரத் பாவரில் துவங்கி இன்று பல்வேறு மாநிலங்களிலும் நடக்கும் குடும்ப அரசியலால் இந்தத் தலைப்பு மிகவும் பிரசித்தம். அதனால் உங்களை இழுக்கும் முகமாக இந்தத் தலைப்பை வைத்தேன். இதுதான் கொக்கித் தலைப்பு என்பது

”தலைப்பை நன்றாகப் போடு
தானே வருவார்கள்”

என்பதுதான் வகுப்பறையின் முதல் மந்திரம். என்ன சரிதானா?
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++  
29 ஏப்ரல் 2011 வெள்ளிக்கிழமை அன்று வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் மஹாத்மா காந்திஜியின் இரு பிள்ளைகளைப் பற்றிய குறிப்பு வந்துள்ளது. புதிய தலைமுறைக்கு காந்திஜியின் பிள்ளைகளைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மஹாத்மாஜி தன் பிள்ளைகளில் மூத்தவரைத் தவிர மற்றவர்களைச் சமூகப் போராளிகளாக‌வே ஆக்கிவிட்டார். ஆம்!பதவிக்க்காகப் போராட்டம் நடத்தும் அரசியல்வாதிகளாக அல்ல!உண்மையான ச‌மூக மாற்றங்களைக் கொண்டு வரக் கூடிய மனோ வலிமையும்,போராட்ட குணமும் உடைய ச‌மூகப் போராளிகளாக‌ உருவாக்கினார் காந்திஜி, தன் நான்கு மகன்களில் மூவரை !  ஒருவர் மட்டும்,மூத்தவர், வேலி தாண்டிய வெள்ளாடாக இருந்தார்.

அந்த நான்கு பேரைப் பற்றி சிறு குறிப்புத் தரப்பட்டுள்ளது
காந்திஜிக்கு நான்கு புதல்வர்கள்

1.ஹரிலால் காந்தி (1888‍=1948)
2.மணிலால் காந்தி (1892=1956)
3.ராம்தாஸ் காந்தி (1897=1969)
4.தேவதாஸ் காந்தி (1900=1957)

இதில் மூத்தவர் ஹரிலால் சிறுவயதில் இந்தியாவில் காந்திஜியின் சகோதரர் பொறுப்பில் விடப் பட்டார். தந்தையுடன் அவர் வாழத் துவங்கியது தன் 18 வயது முதலே. தன் 18 வயதில் தென் ஆப்பிரிக்காவில் காந்திஜியின் பீனிக்ஸ் ஆசிரமத்தில் சேரும் போது, அந்த ஆஸ்ரம வாழ்க்கைக்கு ஏற்ற மனோ நிலையில் அவர் இல்லை.ஏற்கனவே பல கெட்ட சஹவாசங்களினால் உடலும் மனமும் கெட்டுத்தான் வந்து சேர்ந்திருந்தார்.

அவரைத் திருத்த காந்திஜி மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்தன, தன் கை மீறிப் போய்விட்ட நிலையில் அவரைத் தன் மகன் அல்ல என்று காந்திஜி சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அரசியலுக்காக் முஸ்லிம் லீக் ஹரிலாலை அப்துல்லா காந்தியாக மது வாங்கிக் கொடுத்து மத மாற்றம் செய்தது. முஸ்லிம் லீக் மேடைகளில் மதுவின் போதையில் மஹாத்மாவை இழிவாகப் பலமுறை ஹரிலால் பேசிய‌து உண்டு.   ஆனால் கராச்சியில் ஹரிலாலை வைத்துக்கொண்டு காந்திஜியை இழிவாகப் பேசிய முல்லாவை "என் தந்தயையா அவமதிக்கிறாய்?" என்று மேடையிலேயே செருப்பால் அடித்தவரும் ஹரிலால் தான்.

காந்திஜி முயற்சி செய்து தன்னிடமிருந்த வேண்டாத குணஙளை விரட்டினார், அவைகள் எல்லாம் ஒரு பூதம் போல் திரண்டு ஹரிலாலிடம் உட்புகுந்து கொண்டது. '.காந்திஜி பிள்ளைப் பாசத்தைத் துறக்கிறாரா என்று பார்க்க‌ ஆண்டவன் வைத்த சோதனையே ஹரிலால். காந்திஜி மறைந்த 8 மாதங்களில் ஒரு முனிசிபல் மருத்துவமனையில் பிச்சைக்காரனாக இறந்தார் ஹரிலால்.

அடுத்தவர் ம்ணிலால் காந்தி பின்னால் வந்த இருவரைப் போலவே காந்திஜி தென் ஆப்பிரிக்காவில் இருந்த போது பிறந்து காந்திஜியின் நேரடிப் பராமரிப்பில் வளர்ந்தவர். காந்திஜியின் எல்லாச் செயல்களிலும் தன் சிறு வயது முதலே நேரடித் தொடர்பும், ஆர்வமும் கொண்டவராக விளங்கினார்.காந்தீய வழியில் அக்கால ஆங்கிலப் பள்ளியில் கல்விக்குச் செல்லாமல் தந்தையிடமே கல்வி பயின்றார். தென் ஆப்பிரிக்காவில் காந்திஜி சிறையில் அடைக்கப்பட்ட போது 12 வயது சிறுவனான் மணிலால் ஆஸ்ரம நிர்வாகப் பொறுப்பை திற‌ம்பட ஏற்று நடத்தினார்.ஆஸ்ரம வாசிகளின் உணவுக்காக முள்ளங்கியைத் தலையில் ஏந்திச் சென்று விற்றுக் காசாக்கி பசிப்பிணி போக்கினார். உடல் நலம் குன்றிய தாயைப் பேணிக் காத்தார்.

காந்திஜி இந்தியாதிரும்பிய பின்னர் 24 வயதில் மணிலால் மீண்டும் தென் ஆப்பிரிக்கா அனுப்பப்பட்டார்.அங்கே நிறவெறிக் கொள்கையை எதிர்த்து காந்தீய‌ வழியில் தொடர்ந்து 30 ஆண்டுகள் போராடினார். நெல்சன் மண்டேலாவுக்கு காந்தீய வழிமுறைகளை எடுத்துச்சொன்னவர் மணிலாலே. அதே போல வன்முறையைக் கைவிட்டு அற ப்போராடத்திற்குத் திரும்பிய அல்பெர்ட் லுதுலி அமைத்திக்கான நோபல் பரிசு பெறப் பின்னனியில் இருந்தவர் மணிலாலே.

ஆப்பிரிக்க இந்தியர்களை மணிலாலிடமிருந்து பிரித்து அரசியல் செய்தது தென்னாப்பிரிக்க நிறவெறி அரசு. மனம் தளராமல் ஆப்பிரிக்க இந்தியர்களையும்.கறுப்பின மக்களையும் ஒன்றிணைத்து நிறவெறிக்கு எதிராகப் போராடினார்.நெல்ச‌ன் மண்டெலா 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தார்.மணிலால் காந்தி ஆப்பிரிக்கச் சிறையில் 14 ஆண்டுகள் இருந்துள்ளார்.25 முறைகளுக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்திய சுதந்திரப்போராட்டத்தில் உப்பு சத்தியாகிரஹத்தில் மண்டை உடைந்து சிகிச்சைப்பெற்றுள்ளார்.

மூன்றாவதான ராமதாஸ் காந்திஜியின் எல்லாப் போராட்டங்களிலும் கூடவே இருந்துள்ளார்.பல சமயம் காந்திஜியின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். ஆன்மீக நாட்டம் அதிகம் உடையவர்.காந்திஜியின் வழிமுறைகளை அவரிடமே விவாதம் செய்து அவற்றிற்கு ஒரு பொது உருவம் கிடைக்கப் பின்னணியில் இருந்து பாடுபட்ட‌வர். காந்திஜியின் கருத்துக்களிலிருந்து மாறுப‌ட்டார் என்று சொல்லும் அளவு காந்தீயக் கொள்கையில் அலசி ஆராய்ந்தார்.வார்தா ஆஸ்ரமத்தை வழிநடத்தி கிராமப்பணி செய்து 1969ல் மறைந்தார்.

தேவதாஸ் காந்திஜியின் நான்காவது மகன். எல்லாவகையிலும் காந்திஜியின் வாரிசு.அமைதியின் இருப்பிடம். ராஜாஜியின் மகளைக் காதலித்து மணந்தார்.காந்தியின் எல்லா போராட்டஙளிலும் பங்கு கொண்டார். காந்திஜிக்குப் பக்க பலமாக இருந்தார்.ஹிந்துஸ்தான் டயிம்ஸ் பத்திரிகையில் ஆசிரியராக தன் மறைவு 1957 வரை இருந்தார்.

ஆக்கம்:
திருவாளர் “முக்காலம்”

(எழுதியவர் புனைப்பெயரை மட்டும் கொடுத்துள்ளார் உண்மைப் பெயரையும், ஊரையும் சொல்லவில்லை)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

2

இதுதான்டா பின்னூட்டம்

12 வயதுச் சிறுவன் ஒருவன் மகாராஜாவாகப் பட்டம் சூட்டப்பெற்றிருக்கிறான்.

யாஹீ செய்தி வலையில் முழுவிவரம் உள்ளது. அதற்கான சுட்டி இங்கே உள்ளது.

சிறுவனின் படம் கீழே உள்ளது.

முகத்தில் என்னவொரு அப்பாவித்தனம்?

இளம் மகாராஜாவை நிறையப் பேர்கள் வாழ்த்திப் பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள். நீங்களும் வாழ்த்திவிட்டுச் செல்லுங்கள். முக்கியமாக அந்தத் தளத்தில் வந்த வாழ்த்துக்களில் ஒன்று அசத்தலாக இருந்தது. அதையும் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------------------
ஜெய்ப்பூரில் இரண்டு நாட்களுக்கு முன்பு 
பத்வி ஏற்றுக்கொண்ட 
மகாராஜாவின் எழில்மிகு தோற்றம்

அடுத்து உள்ளது அசத்தலாக வந்த அந்தப் பின்னூட்டம்


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

8 comments:

kmr.krishnan said...

குடும்ப அரசியல் கட்டுரையில் வித்தியாசமான குடும்பத்தைப் பற்றி வெளியாகியுள்ள கட்டுரை சுருக்கமாகவும் நிறைய அறியாத செதிகளையும் கொடுத்துள்ளது.

காந்திஜியின் 4 பிள்ளைகளில் மணிலாலுக்கே என் ஓட்டு.பள்ளி கல்லூரிப் பட்டம் எதுவும் கைவசம் இல்லாமல்,வாழ்க்கை முழுவதும் சமூகத்திற்கு உழைத்த அந்தப் பெரியவருக்கு உற்ற துணையாக சுசீலா மஷ்ருவாலா அமைந்தார்.இருவருமாக இந்தியன் ஒப்பீனியன் என்ற பத்திரிகையை நடத்தினர்.

இருவருமாக ஆப்பிரிக்க நிறவெறி அரசைக் கடுமையாக எதிர்த்தார்கள். உலக நாடுகள் பலவும் தென்னாப்பிரிக்க அரசினைப் புறக்கணித்தன‌ என்றால் அதுஅந்த மணிலால், சுசிலா அம்மையார் இருவரும் உலக நாடுகளின் கவனத்தைநிறவெறிக்கு எதிராக ஈர்த்துக் கூர்மைப்படுத்தியதே ஆகும்.

தன் தாய் நாட்டுக்க்காக மட்டுமன்றி உலகின் எந்த மூலையில் சமூக அநீதி இருந்தாலும் உண்மையான ஈடுபாட்டோடு அதில் அறப் போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றுள்ளனர் காந்திஜியின் குடும்பத்தினர்.

தன்னை மறைத்துக்கொண்டு அமைதியாக, உறுதியாக, தர்ம யுத்தம் செய்து,தென்னாப்பிரிக்க மக்களுக்கும்சுதந்திரத்தைப்பெற்றுத்தந்த மஹாத்மாஜியின் குடும்பத்தினரைப் போற்றுவோம்.
அவர்களுடையது குடும்ப அரசியல் அல்ல.குடும்பத் தியாகம்.

kmr.krishnan said...

ஜெய்ப்பூரின் புது மஹாராஜா கொள்ளை அழகு. அந்தக் கண்கள் திராட்சைப் பழத்தைப்போல துறுதுறு என்று மின்னுகின்றன‌.ரஜபுத்திரர்கள் என்றாலே அந்த கம்பீரமும் அழகும் தானாக வந்துவிடுமோ?!அருமையான படமும் செய்தியும்!

Alasiam G said...

திருவாளர் முக்காலம் அவர்கள் தந்த செய்தி அருமை...
தாங்கள் கூறியது போல் என் போன்றோருக்கு இந்த
அறிய செய்திகள் தெரியாமலே இருந்தது...
////அவரைத் திருத்த காந்திஜி மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்தன,
தன் கை மீறிப் போய்விட்ட நிலையில் அவரைத் தன் மகன் அல்ல
என்று காந்திஜி சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது./////

ஆமாம், மகாத்மா பத்திரிகைகளில் விளம்பரமே செய்தார் என்று கேள்வியுற்றேன்.....

அற்புதத் தகவல் நன்றி...

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

மகாத்மா காந்தியின் குடும்பத்தை பற்றிய அரிய செயத்திகள் ... பதிவாளருக்கு பாராட்டுக்களும், நன்றிகளும்.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் வாத்தியார் ஐயா,

ஒரு மெயில் அனுப்பியுள்ளேன்.. பார்க்கவும்.. நன்றி.

Thanjavooraan said...

"முக்காலம்" என்பவர் யார் என்பதைத் தெரிந்துகொள்வது எக்காலம்? வாரிசு என்றதும் நம் நினைவுக்கு வருவது தெற்கே ஒன்றும் வடக்கே ஒன்றுமாக இரு குடும்பங்கள். இதில் ஹைதர் காலத்து வாரிசுகளின் கதையைச் சொல்லி நம்மை நன்றாக ஏமாற்றிவிட்டார். குடும்பத்தில் ஒரு கோடரிக்காம்பு இருப்பது சகஜம் தான். ஹரிலால் அப்படிப்பட்டவர். ஆனால் நீரினும் குறுதி அடர்த்தியானது என்பதை காந்தியைப் பழித்தவர் மீது தாக்குதல் நடத்தி நிரூபித்திருக்கிறார். "வாழையடி வாழை" என்கிறோம். முதல் மரத்தின் தார் போல, அதன் அடுத்த வாரிசு மரம் பயன் தருவதில்லை. தூக்கிவிட ஆளில்லாமல் வாரிசு முறையில் தலைதூக்கமுடியாமல் தவித்துக் கிடக்கும் திறமைகள் கோடானுகோடி உண்டு. ஆனால் எந்தத் திறமையுமில்லாமல் பெருங்காயம் வைத்த பாண்டத்தின் மணத்தில் காலத்தை ஓட்டும் பல வாரிசுகளை அடையாளம் காட்ட முடியும். ஏன் கருடா செளக்கியமா? என்றதாம் பரமசிவன் கழுத்து நாகம். எல்லாம் இருக்கிற இடத்தில் இருந்தால் செளக்கியம்தான் என்றது கருடன். இசையைக் கரைகண்ட திறமைசாலிகள் ஆயிரமாயிரம் பேர் இருப்பினும், வாரிசுரிமை காரணமாக கத்தும் காக்கையும் கருங்குயில் என ஜால்ராக்களால் போற்றி நிற்க பெயர் வாங்குப‌வர் எத்தனை பேர்? இதெல்லாம் காலத்தின் கோலம். என்ன சொல்லி என்ன? அவரவர்க்கு விதித்ததுதான் கிடைக்கும்.

Thanjavooraan said...

இன்றைய காலகட்டத்தில், இங்கிலாந்து நாட்டில், ஜனநாயக அரசு இருந்தும் ராஜபரம்பரையினருக்கு இருக்கும் மரியாதையை எண்ணி பாராட்ட வேண்டும். அந்த நாட்டு இளவரசர் கல்யாணம் நாட்டு மக்கள் கடலென வந்து கண்டு மகிழும் வண்ணம் நடத்தப்படுகிறது. இங்கு ஆண்டுகள் பலவாக நாட்டை ஆண்டுவந்த ராஜவம்சத்தினரின் மரியாதை இந்திரா காந்தியின் ஒரே கையெழுத்தில் பறிக்கப் பட்டுவிட்டது. குடியரசு நாட்டில் மன்னர்களுக்கு என்ன வேலை? அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ராஜமான்யம் வீண்செலவு என்று காரணம் காட்டப்பட்டது. இன்றைய அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்படும் "ரா......ஜ மான்யம்" எவ்வளவு? அவர்களாக எடுத்துக் கொள்ளும் மான்யம் எவ்வளவு? அப்படி இருக்கையில் சமஸ்தான மன்னர்களின் மான்யத்தை ஒழித்ததைப் பெருமையாகவா நினைக்க முடிகிறது? ஜெய்ப்பூர் பரம்பரை நல்ல ராஜபுத்திர பரம்பரை. குழந்தையைப் பாருங்கள். நல்ல ராஜ களை.

vprasanakumar said...

அருமை.