மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.5.11

Astrology இளைஞனுக்கு என்ன(டா) தேவை?

-----------------------------------------------------------------------------------------
Astrology இளைஞனுக்கு என்ன(டா) தேவை?

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
-------------------------------------------------------------------
ஒரு இளைஞனுக்கு - நன்றாகக் கவனிக்கவும் - ஒரு இளைஞனுக்கு என்ன தேவை?

1. தோற்றம் Appearance
2. குணம் Character - எதையும் யதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் குணம் மற்றும் முக்கியமாக எவரையும் அனுசரித்துப்போகும் குணம்.
3. அறிவு Skill (ங்கள் மொழியில் சொன்னால் புத்திசாலித்தனம்)
4. கல்வி Education (இன்றைய நிலைக்குக் குறைந்தது ஒரு இளங்கலை பட்டப் படிப்பு. அல்லது குறைந்த பட்சம் ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற நிலை)
5. திறமை Talent
6. அதிர்ஷ்டம் Luck

மேற்கூறிய ஆறும் தேவை.

இந்த ஆறும் அனைவரிடமும் இருக்குமா?

இருக்காது.

இந்திய ஜனத்தொகையான 121 கோடியில் 25% சதவிகிதம் இளைஞர்கள் (இளைஞிகள்) என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.

அவர்களில் ஒரு பத்து சதவிகிதம் பேருக்குத்தான் மேற்கூறியவற்றில்
ஒரு நான்காவது இருக்கும். அந்த ஆறும் இருந்தால் அவன் infossys
நாராயண மூர்த்தியாக அல்லது Reliance முகேஷ் அம்பானி போல
இருப்பான். என்னுடைய ப்ளாக்கிற்கு வந்து பதிவுகளை எல்லாம்
படிக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்காது!:-))))

கல்விக்கு 4ஆம் வீடு, அறிவிற்கு ஐந்தாம் வீடு.

கல்வி வேறு ; அறிவு வேறு.

கடந்த அறுபதாண்டு தமிழக ஆட்சியாளர்களை எடுத்துக்கொண்டால், 1. ராஜாஜி, 2. காமராஜர், 3. பக்தவட்சலம், 4. அறிஞர் அண்ணாதுரை, 5. கலைஞர் கருணாநிதி. 6. புரட்சித் தலைவர். எம்.ஜி.ராமச்சந்திரன், 7. செல்வி ஜெயலலிதா ஆகியோரில் நான்கு பேர்கள் பள்ளி இறுதி வகுப்பைத் தாண்டாதவர்கள்.

பள்ளி இறுதிவகுப்பைத் தாண்டாதவர்கள் எப்படி அத்தனை ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.பி.எஸ் படித்தவர்களைக் கட்டி மேய்த்து ஆட்சி நடத்தினார்கள் அல்லது நடத்துகிறார்கள்? தங்கள் புத்திசாலித்தனத்தால்தான் அதாவது அறிவால்தான் அவர்களுக்கு அது சாத்தியப்பட்டது. அல்லது படுகிறது. ஆகவே கல்வி வேறு அறிவு வேறு அதை மனதில் வையுங்கள்
------------------------------------------------------------------------------
யார் சென்றாலும் பிழைத்துக் கொள்ளலாம் என்று சுட்டிக் காட்டக்கூடிய ஊர்கள் எவை?

1. திருப்பூர்
2. சிவகாசி
3. நாமக்கல்

Knitted Garments, Designer Garments, Woven Fabrics, Crackers, Match Boxes, Multi  colour Printing, Poultry Industry, Lorry operators, Lorry body building industry  என்று விதம் விதமாக சொந்தத் தொழில் செய்வோர்கள் - தொழில் செய்து, பலருக்கும் வேலை கொடுப்போர்கள் நிறைந்த ஊர் தமிழகத்தில், அந்த மூன்று ஊர்கள்தான்.

அங்கே தொழில் செய்வோர்கள் அல்லது அந்தத் தொழில்களில்
வேலையில் இருப்பவர்களில் 80 சதவிகிதம் பேர்கள் பள்ளி இறுதி
வகுப்பு வரை மட்டுமே படித்தவர்களாக இருப்பார்கள். பலருக்கு
அது கூட இருக்காது. பல  படித்தவர்கள் அவர்களுக்காக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் Export document writers, 
auditors, Bank officers  என்று உதாரணங்களைச் சொல்லலாம்

30 வயதில் ஒரு பொறியாளர் (Engineer) சம்பாதிப்பதை விட, அதிகமாகச் சம்பாதிக்கும் Car & Two wheeler  Mechanics குகளை என்னால் காட்ட முடியும். இவர்களுக்கு இருக்கும் தொழில் சுதந்திரம் அவர்களுக்கு இருக்காது. Car & Two wheeler  Mechanics களில் பலர் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர்கள் அதை மனதில் வையுங்கள்.

முறைப்படி தமிழ் படித்து, B.A, M.A, M.Phil, P.Hd என்று பட்டங்களைப் பெற்ற தமிழறிஞர்கள் நூற்றுக் கணக்கில் இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கு, நறுக்’ கென்று 4 வெண்பாக்களை எழுதச் சொன்னால் எழுத வராது. சூழ்நிலையைச் சொல்லி, அழுத்தமாக ஒரு கதை எழுதிக் கொடுங்கள் என்று சொன்னால் எழுத வராது.

பாரதியார், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், வாலி போன்ற பிரபல கவிஞர்கள் எல்லாம் முறைப்படி தமிழ் படித்துப் பட்டம் வாங்காதாவர்கள். அதை மனதில் வையுங்கள். அவர்கள் எழுதிய பாடல்களை வைத்துத்தான் இவர்கள் நோண்டி நொங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

படிப்பைக் குறை சொல்வதற்காக இதை நான் எழுதவில்லை.

கல்வி அவசியம். அதி முக்கியம்

அதிலும் அடிப்படைக் கல்வி அவசியம் தேவை. ஒரு வங்கிச் சலானை நிறப்புவதற்காவது தெரிய வேண்டாமா? ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு முன்பதிவுப் படிவத்தை நிறப்புவதற்காவது தெரிய வேண்டாமா? மான் விழியாள், தோகை மயிலாள் எழுதிய காதல் கடிதத்தை சுயமாகப் படிப்பதற்காவது தெரிய வேண்டாமா? ஆகவே கல்வி அவசியம்.

 “எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண்என்ப வாழும் உயிர்க்கு”


என்று கல்வியின் அவசியத்தை அழுத்தமாகச் சொன்னான் பொய்யாமொழிப் புலவன்.

"Letters and numbers are the two eyes of man" என்று அதற்கு நறுக்கென்று விளக்கம் எழுதினார் ஜி.யு. போப் என்னும் கிறிஸ்துவப் பாதிரியார்

ஆகவே கல்வி அவசியம்.

உயர் கல்வி அப்படியல்ல. எல்லோருமே பொறியாளர் ஆகவேண்டுமென்றால் முடியுமா? அல்லது எல்லோருமே மருத்துவர் அல்லது கணக்காய்வாளாரக வேண்டுமென்றால் முடியுமா?

முடியாது.

காலன் அதை அனுமதிக்க மாட்டான். உங்கள் மொழியில் சொன்னால் இயற்கை அதை அனுமதிக்காது.  Balancing Theory என்னும் சீரமைப்புக் கணக்கில் அது வரும். ஆடு, மாடு, மான் போன்றவற்றிற்குக் கொம்பைக் கொடுத்த இறைவன், குதிரைக்கு மட்டும் கொம்பைக் கொடுக்கவில்லை அல்லவா? அது எந்தக் கணக்கில் வருகிறதோ அந்தக் கணக்குத்தான் அந்த Balancing Theory. இப்போது அது புரியாது அல்லது புலப்படாது. ஆடி அடங்கும்போது புலப்படும்.

அனைவருமே ஒயிட் காலர் வேலைக்கும், குளிரூட்டப்பெற்ற அலுவலகத்திற்கும் ஆசைப் பட்டால் எப்படி?

பிறகு விவசாயம் செய்வது யார்? சென்னை டு கன்னியாகுமரி பஸ்ஸை இயக்குவது - அதாவது ஓட்டுவது யார்? விளக்குக் கம்பத்தில் ஏறி உங்கள் வீட்டு மின் இணைப்பைச் சரி செய்வது யார்? பாணி பூரி, பேல் பூரி வண்டிகளை வைத்து மாலை நேரங்களில் உங்கள் பசியைத் தீர்ப்பது யார்? டாஸ்மாக் கவுண்டர்களில் உங்களோடு மல்லுக் கட்டுவது யார்? எல்லாவற்றிற்கும் ஆட்கள் வேண்டாமா?

ஆகவே வேலை வாய்ப்புக்கள் அல்லது தொழில் வாய்ப்புக்களில் சீரான அமைப்புக் கிடையாது. ஜாதகத்திற்கு ஜாதகம் அது வேற்படும். உங்கள் ஜாதகத்தில் என்ன programme செய்யப்பட்டுள்ளதோ அந்த வேலையை மட்டும்தான் நீங்கள் செய்ய முடியும். விரும்பியதை எல்லாம் செய்ய முடியாது. செய்ய முயன்றால் வெற்றி கிடைக்காது. தோல்வியில்தான் முடியும்.

நீங்கள் மாட்டை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டுமென்றால் மாட்டைவைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டும். ஆனால் மாட்டின் எண்ணிக்கையைக் காலன் நிர்ணயிப்பது இல்லை. அது 4 மாடுகளா அல்லது 400 மாடுகளா என்பது உங்கள் கையில் இருக்கிறது. உங்கள் முயற்சி அங்கேதான் திருவினை செய்யும்.

இல்லை வெறும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கவியரசர் கண்ணதாசன், 5,000ற்கும் மேற்பட்ட திரைப் படப் பாடல்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனிப்பட்ட பாடல்களையும், ஏராளமான மனவளக் கட்டுரைகளையும், நூல்களையும் எப்படி எழுதியிருப்பார்? அதை வெறும் அதிர்ஷ்டக் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியுமா?, விதி என்று கூறிவிட முடியுமா? கவிஞனானது மட்டும்தான் தலை எழுத்து. மற்ற அனைத்து மேன்மைகளும் அவருடைய முயற்சிகள்.

ஆகவே உங்களுக்கு விதிக்கப்பெற்ற தொழிலில் மேன்மையடைவது உங்கள் கையில் உள்ளது.

எந்த வேலை கிடைத்தாலும் செய்யுங்கள்.

செய்யும் தொழிலே தெய்வம் என்று நினையுங்கள்
----------------------------------------------------------------------------
படித்து முடித்தவுடன் வேலை கிடைக்க வேண்டும். அதுதான் முதல் வாய்ப்பு.

சிலபேர் சொல்லலாம் நல்ல வேலை என்பதுதான் முதல் வாய்ப்பு. வேலையில் நல்ல வேலை சுமாரான வேலை என்று எல்லாம் கிடையாது.

வேலை இன்றி வீட்டிற்குச் சுமையாக இருக்கக்கூடாது அவ்வளவுதான்.

முன்பு போல இப்போது இல்லை. பத்து ஆண்டுகளுக்குள் எல்லாம் தலை கீழாக மாறிவிட்டது. பல நிறுவனங்கள், கல்லூரி வளாகங்களுக்கே வந்து, நேர் காணல் செய்து பலருக்கும் இறுதியாண்டு படிப்பின்போதே வேலைக்கான நியமன உத்தரவைக் கொடுத்துவிடுகின்றன. கலைக் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும், பல நிறுவனங்கள் வேலை கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

எல்லோருமே படித்து ஒயிட் காலர் வேலைகளுக்குப் போகும் எண்ணத்துடன் இருப்பதால், அடி மட்ட வேலைகளுக்கு இப்போது ஆட்கள் பற்றாக்குறை.

சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில், கட்டடப் பணி செய்து கொண்டிருக்கும் நிறுவனங்கள், மேஸ்திரி, கொத்தனார், சித்தாள் வேலைகளுக்கு பீஹாரில் இருந்து ஏராளமானவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கோவை அன்னபூர்ணா தொடர் உணவகத்தில் அடிமட்ட வேலைகளுக்கு நேபாளத்தில் இருந்து இளைஞர்களைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

படித்தவர்களுக்கு வேலை என்பது ஒரு பிரச்சினைக்குரிய விஷயம் என்பது இப்போது இல்லை.

கிடைத்த வேலை பிடித்துள்ளதா? அவர்கள் தருகின்ற சம்பளம் போதுமானதா? என்பதெல்லாம் வேறு பிரச்சினை. அதைப் பிறகு அலசுவோம். அதற்கெல்லாம் ஜாதகத்தில் வேறு கட்டங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு முக்கியமான குறிப்பைத் தருகிறேன். ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்கும். அதில் மேன்மையும் உண்டாகும்.

25 அல்லது அதற்குக் கீழான பரல்கள் இருந்தால், உங்கள் தகுதிக்குத் தகுந்த அல்லது உங்களுக்குப் பிடித்த வேலை கிடைக்காது. கிடைக்கின்ற வேலையைப் பிடித்துக்கொள்ள வேண்டும்

அதாவது நாம் விரும்புகின்ற பெண் கிடைக்கவில்லை என்றால், நம்மை விரும்புகின்ற பெண்னைக் காதலிக்க வேண்டியதுதான்!:-)))

என்ன புரிந்ததா? விளக்கம் போதுமா?
---------------------------------------------------------------------------------------------------------------
(அலசல் தொடரும்)

அன்புடன்
வாத்தியார்





வாழ்க வளமுடன்!

13 comments:

  1. எல்லா அறிவுரைகளுமே இளைஞர்களைக் குறிவைத்து ஐயா எழுதியுள்ளீர்கள்.வாழ்க்கையை வாழ்ந்து முடித்து கரை ஒதுங்கியவர்களான என் போன்ற‌வர்கள் கரையில் நின்று படகுப் போட்டியை வேடிக்கைப் பார்க்க வேண்டியதுதான்! ஆக்கம் சிறப்பாக உள்ள‌து ஐயா!

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா

    என்னக்கு பத்தமிடம் 31 பரல் , பத்தமதிபதி புதன் சுயவர்க்கம் 6 பரல் ,டிப்ளோமா படித்தாலும் நல்லவேளையில் தான் உள்ளேன் ,
    எல்லா வேளையும் நல்லா வேலைதான் என புரியவைக்கிறேர்கள் ,
    மேலும் உங்கள் புதிய இணையதளம் பற்றி சொல்லவும் , அதற்கான கட்டண விவரம் போன்ற வற்றை தெரிவிக்கலாமே

    ReplyDelete
  3. வணக்கம் வாத்தியார் ஐயா,

    அருமையான தகவல்கள்..
    சோதிடப் பாடத்தை மனதில் நிலைநிறுத்திக் கொள்ள முயலுகிறேன்.

    நன்றி..

    ReplyDelete
  4. அன்புடன் வணகம் கடைசியாக ஒரு வார்த்தை. பரல் கணக்கு போட்டீங்க பாருங்க..முடிஞ்சது அவரவர் ஆறும் அதில் பார்த்து கொள்ளலாம்..நன்றி.

    ReplyDelete
  5. அன்புடன் வணக்கம் திரு KMR.K..
    """வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்.."""அக்கரைல் அக்கறையாக பார்த்து கொண்டு இருக்க வேண்டியதுதான் !!!..

    ReplyDelete
  6. //அந்த ஆறும் இருந்தால் அவன் infossys
    நாராயண மூர்த்தியாக அல்லது Reliance முகேஷ் அம்பானி போல
    இருப்பான். என்னுடைய ப்ளாக்கிற்கு வந்து பதிவுகளை எல்லாம்
    படிக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்காது//

    இங்கே வருவதற்கு வாய்ப்பு கிடைக்கும், விருப்பம்தான் இருக்காது. This will not be that high in their list of priorities.

    எனக்கு 10ம் இடத்தில் 28 பரல்கள். இப்போதுள்ள வேலை நானாக தேடியதல்ல. வேலைதான் என்னைத் தேடி வந்தது. நான் வேலையை விடலாம் என்று நினைத்தாலும் வேலை என்னை விட மாட்டேன் என்கிறது (வேறு நிரந்தர வருமானம் வந்துக் கொண்டிருக்கிறது). இதற்கு இந்த 28 பரல்தான் காரணமா என்றால் நிச்சயம் இல்லை என்று சொல்லிவிடலாம். இதற்கு வேறு அமைப்புகள் இருக்கின்றன. வாத்தியார் இனி வரும் பாடங்களில் இதைப் பற்றி சொல்லக் கூடும்.

    ReplyDelete
  7. கல்வியும் அறிவும் வேறு என்றே
    கற்று தருகிறது இரு அதிகாரங்களில்

    வாழவைக்கும் தமிழ் வேதம்வள்ளுவம்
    வாசித்து அதனை விட்டுவிடாமல்

    வழி சொன்ன அத்தனையும்
    வாழ துடிக்கும் அந்த இளைஞர்களுக்கு

    முன்னாள் இளைஞர்களுக்கும் அடுத்த
    முன்யோசனைகளை எதிர்பார்த்தபடி..

    வழக்கம் போல் இந்த குறளினை தந்து
    வருகை பதிவு இடுகிறோம்..

    "உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
    கூம்பலும் இல்லது அறிவு

    ReplyDelete
  8. குட்டியாக உள்ள அந்த
    சுட்டி(mouse) செய்த குறும்பு தான்

    மூன்று முறைகளுக்கு மேல்
    மூன்று நாட்களாக பின்னோட்டம்

    மாற்றிவிட்டேன் சுட்டெலியை
    மாற்ற சுட்டிக்காட்டிய அன்பிற்கு நன்றிகள்.

    வழக்கம் போல்
    வாழ்த்துக்களும் வணக்கங்களும்

    ReplyDelete
  9. பாடமும் அது போகும் புது கோணமும்
    அது தரும் வேகமும் நன்று.. நன்று...
    எனக்கு பத்தில் தான் அதிகபட்சமாக
    39 . பரல்கள்.... வேலையில்லாமல் வெட்டியாக
    இருந்ததில்லை.. நேர்முகத் தேர்வில்
    சென்ற இடமெல்லாம் தோற்றதும் இல்லை...

    பத்திற்குரியவன் புதன் அவ்வீட்டில் இருந்து மூன்றில்
    இருக்கிறான் கூடவே ஒன்பதிற்குரிய சூரியனும்
    இருக்கிறான்; ஆக இருவரும் இருப்பது செவ்வாயின்
    வீட்டில்.... நெருப்பு, மின்சாரம் சார்ந்த துறை
    சூரியன் இருப்பதால் ஒரு டீமிற்கு தலைமை எப்போதும்
    இருக்கும்... அதோடு புதன் தான் பத்தின் அதிபதி என்பதால்
    இன்ஸ்பெக்சன், ஆடிட்டிங் என்றே அல்லது மானிடரிங்
    என்றே அமைகிறது.... தனியாக வேலை இருக்காது...
    டீமாகவே இருக்கும்... காரணம் புரியவில்லை??!!

    லக்னாதிபதி குரு, பதினொன்றில் என்பதால் இருப்பதிலே
    சுலபமான வேலையே அமையும்(சுகஸ்தான அதிபதியும் கூட)!!!

    ReplyDelete
  10. உத்தியோகமே பிராப்தம் என்றமைந்த ஜாதகர்...
    தேர்தெடுத்து படிக்கும் துறையை நிர்ணயிக்கப்
    பார்க்கவேண்டிய இடம், கிரகம், யாது?
    அது பத்தாம் இடத்தோடு எப்படித் தொடர்பு படுகிறது?
    என்பதையும் வாத்தியார் விளக்க வேண்டுகிறேன்.
    நன்றி!

    ReplyDelete
  11. வணக்கம் வாத்தியார் ஐயா,

    தங்களின் அனுமதியோடு ஒரு தகவல்..

    வணக்கம் வகுப்பறை தோழர்களே நமது வகுப்பறை மூத்த மாணவர் திரு, வெ, கோபாலன் ( தஞ்சாவூரன் ) ஐயா அவர்களது ஆக்கம் ஒன்று

    " கோடிப் பொன் வேண்டுமா "

    http://sivaayasivaa.blogspot.com

    நமது சிவயசிவ - வில் வெளியாகி இருக்கிறது - அன்பர்கள் ஓதி மகிழ்க..

    வாத்தியாருக்கு நன்றி..

    ReplyDelete
  12. அற்புதம் அய்யா..

    மிகத் தெளிவான அருமையான விளக்கப் பதிவு..

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com