மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.5.11

Astrology ஸீனியாரிட்டி இங்கே செல்லாது

---------------------------------------------------------------
 Astrology ஸீனியாரிட்டி இங்கே செல்லாது

Seniority & Priority எல்லாம் இங்கே செல்லாது. முன்னுரிமை, முக்கியத்துவம் என்ற வாதம் எல்லாம் இங்கே எடுபடாது

Seniority (மூப்புரிமை)
1. The state of being older than another or others or higher in rank than another or others.
2. Precedence of position, especially precedence over others of the same rank by reason of a longer span of service.

Priority (முன்னுரிமை)
1. Precedence, especially established by order of importance or urgency.
2. a. An established right to precedence.b. An authoritative rating that establishes such precedence.
3. A preceding or coming earlier in time.
4. Something afforded or deserving prior attention.

மூத்தவன், இளையவன் என்ற பாகுபாடு எல்லாம் இங்கே கிடையாது. நான் பெரியவன், இவன் சின்னவன் என்ற வேறுபாடும் இங்கே கிடையாது. நான் ஸீனியர். நீண்ட நாட்கள் அனுபவம் மிக்கவன். இவன் எனக்குப் பிறகு வந்தவன். ஜீனியர்.ஆகவே எனக்குத்தான் முன்னுரிமை தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கும் இடமில்லை. சுருக்கமாகச் சொன்னால் உங்கள் நிலைப்பாடுகள், வாதங்கள் எதுவுமே இங்கே செல்லாது.

எங்கே?

அதாவது ஸீனியாரிட்டிக்கும், பீரியாரிட்டிக்கும் மதிப்பே இல்லாத இடம் எது?

காலதேவனின் மேற்பார்வையில் இருக்கும் மரண அமைச்சகம்தான் அது (Ministry of death)

நேரம் முடியும்போது சொல்லாமல் கொள்ளாமல் அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள், அவனுடைய தூதர்கள்

“காலா, வாடா! உன்னைக் காலால் மிதிக்கிறேன்” என்று ஒரு மாபெரும் கவிஞன் சொன்னான். அவனையும் காலதேவன் விட்டு வைக்கவில்லை. 39 வயது முடிவதற்குள்ளாகவே அவரைத் தூக்கிக்கொண்டு போய்விட்டான்

“காலன் ஒரு படிப்பறிவில்லாதவன். கண்ணதாசன் என்ற அரிய புத்தகத்தைக் கிழித்துப்போட்டுவிட்டான்” என்றார் கவிஞர் வாலி. ஆதங்கத்திலும், துக்கத்திலும் நாம் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளலாம்.

Meeting is always a pleasure
Parting is always painful

மரணத்தைப் பற்றிச் சொல்லும்போது இப்படிச் சொல்வார்கள்:

1. மரணம் அனைவருக்கும் பொதுவானது (Death is commom to all)
2. மரணம் தவிக்கமுடியாததது (inevitable, Impossible to avoid or prevent)
3. ஒவ்வொருநாளும் நாம் மரணத்தை நோக்கித்தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம் (walking towards death)

சாதாரண மனிதனுக்கு இதெல்லாம் தெரியாது. தான் இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் வாழப்போவதாக நம்பிக்கொண்டிருப்பான்.

ஊரை அடித்து உலையில் போட்டுப் பணத்தைச் சேர்த்துக்கொண்டிருப்பான்.

கேட்டால் பணம், மரணத்திற்கான பாதுகாப்புத் தொகை என்பான். Money is the security against death என்பான். அதாவது பணம் இருந்தால் வயதான காலத்தில் அது தன்னைக் காப்பாற்றும் என்பான்.  நோய்வாய்ப் பட்டுப் படுத்தால், ஒரு நல்ல மருத்துவமனையில் சிகிச்சைபெற பணம் தேவைப்படும் என்பான்.

மரணம் எப்போது வரும், எப்படி வரும் என்ற சிந்தனை இல்லாததால் அல்லது அறியாமையால் அப்படிச் சொல்வான்.

மரணம் எப்படி வேண்டுமென்றாலும் வரும். எப்போது வேண்டுமென்றாலும் வரும்.

பலரை இரவு தூக்கத்திலேயே மரணம் சுருட்டிக்கொண்டு போயிருக்கிறது. விபத்தில் ஒரு நொடியில் மரணத்தைச் சந்தித்தவனும் உண்டு. பல ஆண்டுகள் படுக்கையில் கிடந்து அவஸ்தைப்பட்டு, பலரை அவஸ்தைக்கு உள்ளாக்கி இறந்தவனும் உண்டு.

மரணம் நமக்குத் தெரியாமல் வர வேண்டும். உயிர் நாம் அறியாமல் போக வேண்டும். அதுதான் உன்னத மரணம்.

அதற்கு வரம் வாங்கிக் கொண்டு வந்திருக்க வேண்டும்.

நம் ஜாதகத்தைப் பார்த்தால் அது தெரியுமா?

தெரியும்.

அதைப் பற்றிய விரிவான கட்டுரை ஒன்று நாளை வெளிவரும். இங்கேயல்ல! வகுப்பறையின் தனி இணைய தளத்தில் அது வரும். இங்கே வந்தால், வகுப்பறையின் சுற்றுச் சுவர்களில் குந்திக் கொண்டிருக்கும் ஆசாமிகள் திருடிக் கொண்டுபோய் விடுவார்கள். திருட்டுப்போகக்கூடாது என்பதற்காக 4 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பெற்றது தனி இணைய தளம். பயனர் பெயர் (User Name), கடவுச் சொல்லுடன் (Password) கூடியது அந்த இணைய தளம் அதில் பல பாடங்கள் இது வரை வந்துள்ளன! இதுவும் அங்கே தான் வரும்

மேல் நிலைப் பாடங்கள், அலசல் பாடங்கள், அஷ்டகவர்க்கப் பாடங்கள், ஜாதக நுட்பங்கள் என்று கலக்கலாக எழுதும் பாடங்கள் அனைத்தும் அதில் மட்டுமே வரும்.

அதில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள், படிக்கும் வாய்ப்பு இல்லாதவர்கள், பின்னால் அவைகள் அனைத்தும் புத்தக வடிவாக வரும்போது படித்துக்கொள்ளலாம்.


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

29 comments:

  1. pls give ur web address

    ReplyDelete
  2. "எமன் வந்தால் பொல்லாதவன் விடமாடான் ராம நாமம் சொன்னால் அவன் தொடமாடான்"என்று ஒரு தாத்தா நான் சிறுவனாக இருந்தபோது சொல்லிக்கொடுத்தார்.அவரும் ஒரு நாள் இறந்து போனார்."ஏன் அவர் ராமநாமம் சொல்லலயா?"என்று அம்மாவிடம் கேட்டேன்.
    'அவர் நாமம் சொல்லிக்கொண்டே இறந்ததாகவும்,அதனால் அவர் உயிரை யமனால் அணுக முடியாது. பகவான் தன் தூதர்களை அனுப்பி தன் இருப்பிடத்திற்கு அழைத்துப்போயிருப்பார்' என்றும் அம்மா சொன்னார்கள்.
    நம்பிக் கொண்டேன்.

    இணையதளம் வெளியாவது குறித்து மகிழ்ச்சி. ஆவலௌடன் எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  3. ஐயா தங்களுடைய வகுப்பறையின் தணி இணைய தள முகவரியை தெரிவிக்க இயலுமா.... நானும் அதில் உருப்பினராக விழைகிறேன்...

    ReplyDelete
  4. இந்த பதிவினை கண்டவுடன் நினைவில் வந்த நம் எம்ஜிஆரின் திரைப்பட பாடலினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

    "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நின்றவர் யார்"

    அங்கே அய்யர் வந்து கொண்டு இருப்பதும் உண்டு அது படிக்கும் கூடம் அதனால்.. பின் ஊட்டங்கள் இடுவதில்லை..

    இது கண்டிப்பில்லாத வகுப்பறை பெயரை சொல்லாதவரின் படைப்பும் வெளியிடும் அன்புக் கூடம்..

    இங்கே அதையும் ...
    பகிர்ந்து கொள்கிறேன்..
    என்ற அன்பு தகவல்களுடன்

    புத்தகத்தை பேராவலுடன் எதிர்பார்த்தபடியே..

    வழக்கம் போல்
    வாழ்த்துக்களும்
    வணக்கமும்..

    ReplyDelete
  5. dear sir,
    i want to join in your new web site,please give me the address and procedure to join if any.
    thanks and regards
    Ezhil

    ReplyDelete
  6. ஆசிரியருக்கு வணக்கம்....

    மகிழ்ச்சி தரும் செய்தி...

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  7. ஐயா!
    எல்லாமே முன்பே எழுதப்பட்டுவிட்டது,
    எதையும் மாற்றி எழுத முடியாது !
    சரி தானே ஐயா!

    ReplyDelete
  8. hi sir


    i am seen your site above 2 years so if the seniority priority pls give me your new site details

    ReplyDelete
  9. dear sir,
    i want to join in your new web site,please give me the address and procedure to join if any.
    thanks and regards
    Sahul

    ReplyDelete
  10. Dear Sir,

    Please let me know the procedure to join your new web site.

    Thanks & Regards,
    Amuthan Sekar

    ReplyDelete
  11. ஐயா அருமையான பதிவு,

    //2. மரணம் தவிக்கமுடியாததது (inevitable, Impossible to avoid or prevent)//
    மரணத்தை வெல்ல முடியும்....சித்தர்கள் பற்றிய வரலாறு தெரிந்தவர்களுக்கு இது நன்கு புலப்படும்.

    ReplyDelete
  12. Dear Sir... Kindly allow me to register with your website... and tell me the procedure...

    ReplyDelete
  13. அன்பு அய்யா,

    தர்மதேவனின் அலுவலகம் ஒன்று உண்டு. ஒவ்வொரு பிறப்பிற்கும் இறப்பு அங்கே பதிவு செய்யப் படுகின்றது. ஆனால் அது காலதேவனின் கணக்கில் Priority (முன்னுரிமை)அடிப்படையிலே செயல்படுகின்றது அல்லவா!! தாங்கள் அறியாததா, இருந்தாலும் சோதிக்கின்றீர்கள்.

    காலதேவன் கணக்குச் சூத்திரம் யாருமரியா. ஆனால் தங்களைப் போன்ற சிலர் சூட்ச்சமத்தை நன்கு அறிந்துள்ளனர்.
    //அதாவது பணம் இருந்தால் வயதான காலத்தில் அது தன்னைக் காப்பாற்றும் என்பான். நோய்வாய்ப் பட்டுப் படுத்தால், ஒரு நல்ல மருத்துவமனையில் சிகிச்சைபெற பணம் தேவைப்படும் என்பான்.
    //

    அலவான பணம் வாழ்வில் தைரியதை தருகின்ற‌தல்லவா அய்யா அதனால் தெரியாமல் கூரியிருப்பார்கள். பாவம் விட்டு விடுங்கள் அய்யா.

    //இங்கே வந்தால், வகுப்பறையின் சுற்றுச் சுவர்களில் குந்திக் கொண்டிருக்கும் ஆசாமிகள் திருடிக் கொண்டுபோய் விடுவார்கள். //

    அளவற்ற தங்களின் அறிவை சற்று வாரிக்கொண்டுதான் போகட்டுமே விட்டு விடுங்கள் அய்யா.

    //கடவுச் சொல்லுடன் (Password) கூடியது // கடவுளே, நெருப்புவேலிப் போட்டுல்லீர்களா :)

    Low Priority -ல் உள்ள‌ என்னயும் அனுமதித்ததற்கு நன்றிகள் அய்யா.

    ReplyDelete
  14. //புத்தக வடிவாக வரும்போது படித்துக்கொள்ளலாம்.//

    எனக்கு? :(

    ReplyDelete
  15. //////SUBA said...
    pls give ur web address////////

    Please write to me through mail: Mail ID classroom2007@gmail.com

    ReplyDelete
  16. ///////kmr.krishnan said...
    "எமன் வந்தால் பொல்லாதவன் விடமாடான் ராம நாமம் சொன்னால் அவன் தொடமாடான்"என்று ஒரு தாத்தா நான் சிறுவனாக இருந்தபோது சொல்லிக்கொடுத்தார்.அவரும் ஒரு நாள் இறந்து போனார்."ஏன் அவர் ராமநாமம் சொல்லலயா?"என்று அம்மாவிடம் கேட்டேன்.
    'அவர் நாமம் சொல்லிக்கொண்டே இறந்ததாகவும்,அதனால் அவர் உயிரை யமனால் அணுக முடியாது. பகவான் தன் தூதர்களை அனுப்பி தன் இருப்பிடத்திற்கு அழைத்துப்போயிருப்பார்' என்றும் அம்மா சொன்னார்கள்.
    நம்பிக் கொண்டேன்.
    இணையதளம் வெளியாவது குறித்து மகிழ்ச்சி. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்////////

    இணையதளம் துவங்கி 4 மாதங்கள் ஆகிறது. உங்களுக்குத்தான் தனி மின்னஞ்சல் அனுப்பினேனே!

    ReplyDelete
  17. /////Jayanthy said...
    ஐயா தங்களுடைய வகுப்பறையின் தணி இணைய தள முகவரியை தெரிவிக்க இயலுமா.... நானும் அதில் உறுப்பினராக விழைகிறேன்.../////

    Please write to me through mail: Mail ID classroom2007@gmail.com

    ReplyDelete
  18. //////iyer said...
    இந்த பதிவினை கண்டவுடன் நினைவில் வந்த நம் எம்ஜிஆரின் திரைப்பட பாடலினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
    "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நின்றவர் யார்"
    அங்கே அய்யர் வந்து கொண்டு இருப்பதும் உண்டு அது படிக்கும் கூடம் அதனால்.. பின் ஊட்டங்கள் இடுவதில்லை..
    இது கண்டிப்பில்லாத வகுப்பறை பெயரை சொல்லாதவரின் படைப்பும் வெளியிடும் அன்புக் கூடம்..
    இங்கே அதையும் ... பகிர்ந்து கொள்கிறேன்.. என்ற அன்பு தகவல்களுடன்
    புத்தகத்தை பேராவலுடன் எதிர்பார்த்தபடியே..
    வழக்கம் போல்
    வாழ்த்துக்களும்
    வணக்கமும்../////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  19. /////ezhil said...
    dear sir,
    i want to join in your new web site,please give me the address and procedure to join if any.
    thanks and regards
    Ezhil////

    Please write to me through mail: Mail ID classroom2007@gmail.com

    ReplyDelete
  20. /////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்....
    மகிழ்ச்சி தரும் செய்தி...
    நன்றிகள் ஐயா!

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  21. ////sridhar said...
    ஐயா!
    எல்லாமே முன்பே எழுதப்பட்டுவிட்டது,
    எதையும் மாற்றி எழுத முடியாது !
    சரி தானே ஐயா!//////

    சரிதான்!

    ReplyDelete
  22. //////KKK said...
    hi sir
    i am seen your site above 2 years so if the seniority priority pls give me your new site details////

    Please write to me through mail: Mial ID classroom2007@gmail.com

    ReplyDelete
  23. //////dubai saravanan said...
    dear sir,
    i want to join in your new web site,please give me the address and procedure to join if any.
    thanks and regards
    Sahul/////

    என்ன குழப்பம்? உங்கள் பெயர் சாகுல்’ஆ அல்லது துபாய் சரவணனா?

    ReplyDelete
  24. ////Amuthan Sekar said...
    Dear Sir,
    Please let me know the procedure to join your new web site.
    Thanks & Regards,
    Amuthan Sekar////

    Please write to me through mail: Mail ID classroom2007@gmail.com

    ReplyDelete
  25. ///////R.Puratchimani said...
    ஐயா அருமையான பதிவு,
    //2. மரணம் தவிக்கமுடியாததது (inevitable, Impossible to avoid or prevent)//
    மரணத்தை வெல்ல முடியும்....சித்தர்கள் பற்றிய வரலாறு தெரிந்தவர்களுக்கு இது நன்கு புலப்படும்.////

    உங்களுக்குப் புலப்பட்டதா?

    ReplyDelete
  26. ////அடைமழைக்காலம் said...
    Dear Sir... Kindly allow me to register with your website... and tell me the procedure...////

    Please write to me through mail: Mail ID classroom2007@gmail.com

    ReplyDelete
  27. //////அலுமூஞ்சி :( said...
    Nice Post//////

    அலுமூஞ்சியல்ல அழுமூஞ்சி! எதற்காக இந்தப்பெயர்?

    ReplyDelete
  28. ஐயா தங்களுடைய வகுப்பறையின் தணி இணைய தள முகவரியை தெரிவிக்க இயலுமா.... நானும் அதில் உருப்பினராக விழைகிறேன்...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com