மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.10.10

அடைக்கலம் என்பவர்க்கு என்ன நிலை?


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடைக்கலம் என்பவர்க்கு என்ன நிலை?
----------------------------------------------------------
இன்றைய பக்தி மலரை முருகப்பெருமானின் புகழ் சொல்லும் பாடல் ஒன்றும், நமது வகுப்பறை மாணவர் ஆலாசியம் கோவிந்தசாமி அவர்களின் கட்டுரை ஒன்றும் அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள்!
-------------------------------------------------------------------
தங்க மயம் முருகன் சந்நிதானம்

பாடல்: தங்க மயம் முருகன் சந்நிதானம்
பாடியவர்: திரு. சீர்காழி கோவிந்தராஜன்


தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்
அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்

(தங்க மயம்)

எங்கும் மனம் பரப்பும் மாலைகளே
அவன் ஈராறு கைகளாம் தாமரையே
திங்கள் முகம் அரும்பும் புன்னகையே
குகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே

(தங்க மயம்)

கருணை மழை பொழியும் கருவிழிகள்
அந்த காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள்
அமுதம் ஊறி வரும் திருவடிகள்
அவை அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள்

தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
ஓம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
ஓம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அடுத்து வருவது  நமது வகுப்பறை மாணவர் ஆலாசியம் கோவிந்தசாமி அவர்களின் கட்டுரை
_---------------------------------------------------------------------------

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பாரதியின் பார்வையில் பௌத்தம்.

மஹாகவி பாரதியார் பகவத் கீதைக்கு விளக்கம் எழுதியது, நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதை நான் படித்த போது அவர் அந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் பௌத்த மதத்தைப் பற்றிய தகவல்களை அவரின் பார்வையில் தந்திருந்தார் அதை நான் இங்கே உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன். எல்லாப் புகழும் பாரதிக்கே.
புத்தியில் சார்பு எய்தியவன், இங்கு, நல்ல செயல், தீயச் செயல் இரண்டையும் துறந்து விடுகிறான். ஆதலால் யோகநெறியிலே பொருந்துக. யோகம் செயல்களிலே திறமையாவது (கீதை 2 - ஆம் அத்தியாயம்; 50 - ஆம் சுலோகம்)
புத்தியிலே சார்பு எய்துதல் யாதனில் அறிவை தெளிவாக கவலை நினைப்புகளும் அவற்றிக்கு ஆதாரமான பாவ நினைப்புகளும் இன்றி அறிவை இயற்கையாக நிலை நிறுத்துதல்.

"நீங்கள் குழந்தையைப் போல் இருந்தால் அன்றி மோட்ச ராஜ்ஜியத்தை அடைய மாட்டீர்கள்" என்றார் ஏசு கிறிஸ்து..... அப்படிஎன்றால், உங்களுடைய லௌகீக அனுபவங்களை , படித்த படிப்பை, மறந்து மீண்டும் குழந்தைகளைப் போல் தாய்ப்பால் குடிப்பது, மழலைச் சொல் பேசுவது அன்று....குழந்தைகளைப் போல் இதயத்தை கள்ளம் கபடம் இல்லாமல் (அவற்றைப் புரிந்து கொள்ளுதல் என்பது வேறு) சுத்தமாக வைத்துக் கொள்ளுதல். இதயம் சுத்தமானால் அறிவு (புத்தி) தெளிவுபெறும் என்று பகவான் சொல்கிறார்.
 
மேலும் பகவான் கூறுகிறார், 'கர்மத்தின் பயனிலே பற்றுதலின்றித் தான் செய்ய வேண்டிய தொழிலை எவன் செய்கிறானோ, அவனே துறவி அவனே யோகி.... ஆக அறிவுத் தெளிவை தவறவிடாதே, பிறகு பலனிலே பற்றுதல் கொள்ளாமல் (அதாவது எப்படியாவது பெறவேண்டும் என்று நினைத்து செயல்படுதல் ஆகாது என்பதாகும்) அதன் பின் ஓயாமல் தொழில் செய். அதன் பிறகு நீ எதைச் செய்தாலும் நல்லதாகவே முடியும்…….

பகவான் சொல்கிறார் யோகம் பண்ணு, அதாவது தொழிலுக்குத் தன்னை தகுதி உடையவனாகச் செய்வது யோகம் எனப்படும்.

யோகமாவது சமத்துவம், 'ஸமத்வம் யோக உச்யதே' அதாவது பிறிதொரு பொருளைக் கவனிக்கும் பொருட்டு மனதினில் எந்தவித சஞ்சலம், சலிப்பு, பயன் இன்றி அதை ஆழ்ந்து, மன முழுவதையும் அதனுடன் லயப்படுத்திக் கவனிப்பதாகியப் பயிற்சி. அப்போது அப்பொருளை உண்மையாக முழுவதுமாக புரிந்துக் கொள்ள முடியும். "யோகஸ்த: குரு கர்மாணி" யோகத்தில் நின்று தொழில்செய் என்கிறார் கடவுள்.

இப்படியே பாரதி முன்னுரையில் கூறிச் செல்கிறார் நான் சுருக்கமாக கூற எண்ணி தாவி வெகு தூரம் வந்து விடுகிறேன்...

இனி இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாக கருதுதல் அவசியமென்கையில், அப்போது கடவுளை நம்புவது எதன் பொருட்டு?, கடவுள் நம்மை அச்சம் தவிர்த்துக் காப்பார் என்று எதிபார்ப்பது எதன் பொருட்டு? நமக்கு, இன்பம், துன்பம், வாழ்வு, தாழ்வு, மரணம் எதுநேர்ந்தாலும் - எல்லாம் கடவுள் செய்கையிலே நாம் எல்லாவற்றையும் சமமாகக் கருதவேண்டும் என்று பகவத் கீதை சொல்லுகையிலே, நமக்கு கடவுளின் துணை எதன் பொருட்டு?

நம்மை (திருநாவுக்கரசரைப் போல்) கல்தூணிலே வலியக் கட்டி கடலிலே வீழ்த்தினால், நாம் இதுவும் கடவுள் செயல் என்று எண்ணி அப்படியே மூழ்கி இறந்து விடுதலும் பொருந்தும் அன்றி, பிறகு ஏன்? நமச்சிவாய! நமச்சிவாய! என்றுக் கூவி நம்மைக் காத்துக் கொள்ள முயலவேண்டும்? என்று சிலர் ஆட்சேபிக்கலாம்.

இந்த ஆட்சபம் தவறானது. எப்படியெனில், முந்தியக் கர்மங்களால் நமக்கு விளையும் நன்மைத் தீமைகளை சமமாகக் கருதி நாம் மனச் சஞ்சலத்தை விட்டுக் கடவுளை நம்பினால், அப்போது கடவுள் நம்மை சில வலியச் சோதனைகளுக்கு உட்படுத்துகிறார். அந்தச் சோதனைகளில் நாம் சோர்ந்து கடவுளின் மீது உள்ள நம்பிக்கையை இழக்காமல் அவன் திருவடியையே தொழுதொமானால், அப்போது ஈசன் நமக்குள் வந்து குடி புகுகிறான்.

அதனால் நம்மை துன்பம், மரணம் (உடல் அழியக் கூடியது, ஆத்மா முக்தி அடைவதும் மரணத்தை வெல்வதாகக் கொள்ளவேண்டும்) நம்மை அணுகாது, எல்லாவிதமான ஐயுறவுகளும், கவலைகளும், துயரங்களும் தாமாகவே நம்மை விட்டு விலகி, இந்த உலகத்திலே நாம் விண்ணவர்களின் வாழ்க்கையைப் பெற்று நித்தியானந்தம் பெறுகிறோம்.

மேலும் எல்லாவற்றையும் ஞானி சமமாக கருத வேண்டும் என்ற இடத்தில், அவன் வாழ்க்கைக்கு உரிய விதிகளையெல்லாம் அறவே மறந்துபோய் பித்தனாகிவிட வேண்டும் என்று அர்த்தம் ஆகாது....

கஷ்ட நஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டு மனதார பிறருக்கு கஷ்ட நஷ்டங்களை கொடுக்காமல் இந்த உஅலகுக்கு நன்மையை செய்துக் கொண்டே இருக்கவேண்டும். தன்னுயிரைப்போல் மன்னுயிரையும் காக்கவேண்டும், இவைகளே புண்ணியம் தரும் செயல்கள் என்கிறார்.

மேலும் பகவான் 'ஸம்சயாத்மா விநச்யதி' - ஐயமுடையோன் அழிவான் அதாவது கடவுளை நம்பினார் கைவிடப் படார். (இந்த இடத்திலே இன்னொன்றையும் கூறவேண்டும் துச்சாதணன் துகிலுரியும் போது திரௌபதி தனது கைகளால் உடையைக் காக்காது அவள் முழுவதுமாக கிருஷ்ணனையே நினைத்து தனது தலைக்கு மேலே இருகரங்களையும் தூக்கி ஹரி! ஹரி! ஹரி!.... என்று முழுவதுமாக சரணாகதி அடைந்தாள் கிருஷ்ணனும் அருளினான்).

சரி, நான் கூற இங்கு சொல்ல வந்ததை  நோக்கிப் போகிறேன்.

வேதங்களுக்கு உரை செய்தவர்கள், வேதம் கர்மங்களை போற்றுகிற நூலாகவே கண்டார்கள். இதிலே சாயணாசாரியார் சொல்லும் உரையிலும் (சில இடங்களுக்கு கருத்து வேற்பட்டு நின்றாலும்) தமது குருக்களைப் போல் வேதம் கர்ம நூல்  என்றெண்ணி, கர்மத்தையும்- யாகம் என்றெண்ணி இருக்கிறார்.

அப்போதும் கூடவே போலிகள் செய்த இந்த யாகங்களே பெரும்பாலும் பசுவதைகளும், குதிரைவதைகளும், ஆட்டுப் பலிகளும் முக்கியமாக பாராட்டிய கொலைச் சடங்குகள். இவ்விதமான் சடங்குகளைச் செய்தால் மோட்சம் என்ற போலிகளின் செயல்களை புத்தமதம் தனக்கு சாதக மாக்கிக் கொண்டு யாகத் தொழிலை அன்றைய அரசர்களோடு சேர்ந்துக் கொண்டு இகழ்ச்சி செய்தது. 

அப்போது தான் பௌத்தர்களை வென்று ஹிந்து தர்மத்தை நிலை நாட்ட, சங்கராச்சாரியார் அவதரித்தார். அவர் புத்தமதக் கருத்துக்களைப் பெரும்பாலும் ருசிகண்டு, சுவைத்து தமது வேதாந்ததிற்கு ஆதாரகளைத் தயார் செய்துக் கொண்டார். சைவம், வைஷ்ணவம் உள்ளிட்ட ஆறு கிளைகளை கொண்ட விருட்சத்தின் ஆணிவேராகிய வேதத்தை தனது ஞானத்தால், கல்வித் திறமையால், திறம்பட உரைப்பித்து மீண்டும் மீள, என்றும் அழியா சக்தியாக ஹிந்து என்னும் விருட்சம் உயிர்பித்து விளங்கச் செய்து  விட்டுப் போனார் ஸ்ரீ சங்கராச்சாரியார்.

தம்மாலே வெட்டுண்ட புத்தமத விருட்சத்தின் கிளைகள் பலவற்றை ஹிந்து தர்மமாகிய விருட்சத்திற்கு உரமாகுபடி எருவாகச் செய்து போட்டார். அதனாலே, இவரை சிலர் "பிரசன்னா பௌத்தர்" (மறைவு பட்ட பௌத்தர்) என்றும் சொன்னார்கள். எனினும் இவர் ஹிந்து தர்மத்திற்கு செய்த பேருதவியால் இவரை ஹிந்துக்கள் பலரும் பரமசிவனுடைய அவதாரமாகவேக் கருதினார்கள்.

புத்தமதமே துறவு நெறியை உலகத்தில் புகுத்திற்று. அதற்கு முன் ஆங்காங்கே சில மனிதர் துறவிகளாகவும், சில இடங்களில் சிலர் துறவிக் கூட்டத்தாராகவும் இருந்திருக்கிறார்கள். துறவிகளின் மடங்களை இத்தனைத் தாராளமாகவும், இத்தனை வலிமையுடையவனாகவும் செய்ய வழி காட்டியது பௌத்த மதமே. எங்கே பார்த்தாலும் இந்தியாவை அந்த மதம் சந்நியாசி வெள்ளமாகச் சமைத்து விட்டது. பாரத தேசத்தை அந்த மதம் ஒரு பெரிய மடமாக்கி வைத்து விட்டது. ராஜா, மந்திரி, குடி, படை எல்லாம் மடத்துக்குச் சார்பிடங்கள். துறவிகளுக்குச் சரியான போஜனம் முதலிய உபசாரங்கள் நடத்துவதே மனித நாகரீகத்தின் உயர் நோக்கமாக கருதப் பட்டது.

துறவிகள் தான் ஜனங்கள்! மற்றவர்கள் எல்லாம் அவர்களுக்குப் பரிவாரங்கள்! மேடம் தான் பிரதானம், ராஜ்ஜியம் அதற்குச் சாதனம். ஜீவகாருண்யம், ஜனசமத்துவம் கூறிய புத்தம் ஜகத்தின் ஒளி போன்றவளாகிய பத்தினியைத் துறந்தவர்களே மேலோர் என்று வைத்து, அவர்களுக்கு கீழே மற்ற உலகை அடக்கி வைத்து உலகமெல்லாம் துக்கமயம், போஇமயம் என்று பிதற்றிக்கொண்டு வாழ்நாளைக் கழிப்பதே ஞான நெறியாக ஏற்படுத்தி மனித நாகரிகத்தை நாசஞ்செய்ய முயன்றதாக குற்றம் புத்த மதத்திற்கு உண்டு.

நல்ல வேலையாக இந்தியா அதை உதறித் தள்ளி வந்துவிட்டது. பின்னிட்டு புத்த தர்மத்தின் வாய்ப்பட்ட பர்மா போற்ற நாடுகள் இங்ஙனமே புத்த மதத்தின் மடத்தை வரம்புமீறி உயர்த்தி மனித நாகரிகத்தை அழித்துக் கொண்டுதான் வந்திருக்கிறது.

(பாரதி ஒரு தீர்க்க தர்சி என்பதற்குள்ள பல சான்றுகளில் இதுவும் ஓன்று... இன்றும் பெரிதும் போற்றும் இலங்கையிலே உள்ள நிலைமை அனைவரும் அறிந்ததே. மடம் தான் பிரதானம், ராஜ்ஜியம் அதன் கருவி.... நாம் இன்று பார்ப்பதை பாரதி அன்றே தீர்க்க தர்சனத்தால் பார்த்து இருக்கிறான் அது பொய்யாகாது) 

இதை தொடர்ந்து வந்த ரோமன் கத்தோலிக்கர்களின் போக்குக்கும் இப்படி இருந்து, பின்பு ஐரோப்பாவில் பெரும்  எதிப்புக் கிளம்பி ஒருக் கட்டுக்குள் வந்தது.  

பௌத்தம் அதன் கொள்கைகள் இந்தநாட்டில் மண்ணோடு மண்ணாக போய்விட வில்லை. அவைகள் ஹிந்து மதக் கொள்கைகளுடன் கலந்து இந்நாட்டில் வழங்கி வருகின்றன.

புலால் மறுத்தல், பூர்வஜென்மக் கொள்கை என்னும் இவை இரண்டும் பௌத்தத்தில் இருந்து ஹிந்து மதத்திற்கு வந்ததாக கூறினாலும் அதற்கு ஆதாரம் இல்லை. காரணம் பூரவஜன்மக் கொள்கை பூர்வ புராணங்களிலேயே இருந்தது. பௌத்தமதம் அக்கொள்கையை அறிஞர் கண்டு நகைக்கத் தக்கப்படியாக, வரம்பு மீறி வற்புத்திற்று எனலாம்.

பிற்கால ஹிந்துமதத்தில் அக்கொள்கை அளவுக்கு மிஞ்சி, நிறைந்த ஆர்த்தமாக ஏறிப்போய் இப்போது ஹிந்து நம்பிக்கைகளில் உள்ள குறைகளில் ஒன்றாக விளங்குகிறது.

சாதரணமாக ஒருவனுக்குப் தலைவலி என்றாலும் கூட, அதற்குக் காரணம், 'முதல் நாள் பசியில்லாமல் உண்டதோ',அளவுக்கு மீறித் தூக்கம் விழித்ததோ அல்லது மிகக் குளிர்ந்த அல்லது அசுத்தமான நீரில் குளித்ததோ என்பதை ஆராயாமல், எல்லாம் பூர்வஜன்ம புண்ணியப் பலன் என்று ஹிந்துக்களிலே பாமரர் கூட என்னும் அளவிற்கு நிலைமை வந்துவிட்டது.

உலகத்து வியாபார நிலைமையையும் (He is an economist here) பொருள் வழங்கும் முறைகளையும் மனித தந்திரத்தால் மாற்றிவிடலாம் என்பதும், அங்ஙனம் மாற்றுமிடத்தே செல்வமிகுதியாலும், செல்வக் குறையாலும் மனிதர்களுக்குள்ளே ஏற்படும் கஷ்டங்களையும், அவமானகளையும், பசிகளையும், மரணங்களையும் நீக்கிவிடக் கூடும் என்பதும் தற்காலத்து ஹிந்துக்களிலே பலருக்குத் தோன்றவில்லை. பிறர் சொல்லியும் அது அவர்களுக்குப் புரிவதில்லை.

(அது அவன் விதி... ஆமாம் நாமும் கொஞ்சம் நிதித் தந்தால் அந்த விதியைக் கொஞ்சம் மாற்றலாமே…. எத்தனைப் பேருக்கு இதில் நாட்டம்.....)

ஏனென்றால், அது மன விசயத்தில் ஏற்பட்ட பயங்கரமான பேதங்களையும், தார தம்மியங்களையும், பாரபட்சங்களையும் கண்டு அதற்கு வழி காண முடியாத இடத்திலேதான் (மனம் இல்லை என்று தான் கூற வேண்டும்) இந்த பூர்வஜென்ம விஷயம் உதவியாக நிற்கிறது.

நீண்ட ஆயுள், அற்ப ஆயுள், நோய், நோயின்மை, அழகு, அழகின்மை, செல்வா, ஏழைக் குடியில் பிறப்பதோடு நிற்கலாம். மற்றவைகள் சரிசெய்ய முடிந்தாலும் பணம் சம்பந்தமானதாலே பிறருக்கு உதவ மனமில்லாது இதைக் காரணம் காட்டி தப்பிக்கவே இது பெரிதும் துணைபோகிறது.

பௌத்தமதத்தால் நாம் அடைந்த நன்மைகளில், உண்மையானது ஓன்று உண்டு, அதாவது விக்ரக வழிபாடை ஊர்ஜிதப்படுத்தியது. பௌத்தர்கள் மனிதர்களுக்கு ஏற்படுத்திய சிலைகளை நம்மவர்கள் தேவர்களுக்கு ஞானசக்தியின் விரிவாலும், கற்பனா சக்தியின் விரிவாலும் கலைநயமும் கற்பனையும் கலந்து  அருமையாக ஏற்படுத்தி முக்திக்கு வழிதேடி, உண்மையானப் பக்தியால் வெற்றியும் கண்டார்கள்.

இனி புத்தமதம் இங்கு இழைத்த தீமை யாதெனினும் மாயா வாதம்.

வேதங்களிலும், உபநிடங்களிலும் 'மாயா' என்றால் அது பராசக்தியைக் குறிப்பது. இடைக்காலத்தில் மாயை பொய் என்றொரு வாதம் உண்டாயிற்று. இதனால் ஜகத் பொய், தேவர்கள் பொய், சூர்யா நட்சத்திராதிகள் பொய் (கிரஹங்களை ஆராதிக்கிறான்) பஞ்சபூதம் பொய், பஞ்சேந்திரியம் பொய், மனம் பொய், சைதந்யம் மாத்திரம் மெய்; ஆதலால், இந்த உலகத்துக் கடமைகள் எல்லாம் எரிந்து விடத்தக்கன, என்றதொரு வாதம் எழுந்தது.

'இவ்வுலக இன்பங்கள் எல்லாம் அசாசுவதம்; துன்பங்கள் சாசுவதம் இத்தகைய உலகத்தில் நாம் எந்த இன்பத்தையும் தேடப் புகுதல் மடமையாகும். ஆகவே, எந்தக் கடமைகளையுஞ் செய்யப்புகுதல் வீண் சிரமமுமாகும்' என்ற கட்சி ஏற்பட்டது.

ஆனால் இவைகளை எல்லாம் துறந்துவிட்டதாக நடிக்கிறார்கள் அன்றி, இவர்கள் அங்ஙனம் துறக்கவில்லை. இவ்வுலகத்தில் ஜீவர்கள் எல்லா இன்பங்களையும் துறப்பது சாத்தியமில்லை. கடமைகளைத் துறந்துவிட்டு சோம்பேறிகளாகத் திரிதல் சாத்தியம்,

(எவ்வளவு செல்வம் உள்ளவனும் தொழில் செய்யவேண்டும், சும்மா இருப்பது சுகம் அல்ல நம்மில் பலர் சும்மா இருப்பதற்காக செல்வம் எவ்வழியிலாவது  கொட்டாதா என்று பார்க்கிறோம்)

அது மிக சுலபமுங்கூட, இந்த சோம்பேறித்தனத்தை பெரிய சுகமாகக் கருதியே அநேகர் துறவு பூணுகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

இவர்கள் கடமைகளைத் துறந்தனவரே அன்றி, இன்பங்களைத் துறக்கவில்லை. உணவின்பத்தைத் துறந்துவிட்டார்களா? சோறில்லாவிட்டால் உயிர் போய்விடுமே என்றால், அப்போது நீங்கள் தொழில் செய்து ஜீவிக்க வேண்டும். ஆடையின்பத்தை இவர்கள் துறக்கவில்லை, ஸ்நான இன்பத்தை இவர்கள் துறக்கவில்லை, தூக்க இன்பத்தை இவர்கள் துறக்கவில்லை, கல்வி இன்பத்தை இவர்கள் துறக்கவில்லை, புகழின்பத்தைத் துறக்கவில்லை; உயிரின்பந்தத்தைத் துறக்கவில்லை; வாதின்பத்தை துறக்கவில்லை. இவர்களில் முக்கியஸ்தர்களான மடாதிபதிகள் பணவின்பத்தை துறக்கவில்லை. இவர்களுடைய போலி வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே பகவத் கீதை எழுதப்பட்டது.

உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது, பின் மாறுகிறதே எனில், மாறுதல் மாயையின் இயற்கை.

மாயை பொய் இல்லை. அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் அழிக்கவேண்டியன, நன்மைகள் செய்வதற்கும், எய்துவதற்கும் உரியன.

சரணாகதியால்-கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள்,எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள். (வீடுபேறு/ஜீவன் முக்தி/ அழியா நிலை/ ஆண்டவன் அருகே அமர்தல்) சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள்.

இந்த மகத்தான உண்மையே கீதை உபதேசிக்கிறது.

இப்படியாக பாரத்தின் பௌத்த மதப் பார்வையின் மூலம் நம்மை நாம் செல்லாத நம் வீட்டின் பல அறைகளுக்குள் அழைத்திச் செல்கிறான் பாரதி. மஹாகவி இவன் ஒரு விஞ்ஞானி, அதனால் தான் தொலைபேசி வரும்முன்னே காசியில் புலவராற்றும் உரையைக் காஞ்சியில் கேட்க கருவி செய்வோம் என்றான். இவன் ஒரு கவியோகி... நாம் அறிந்ததே.

இவன் ஒரு பொருளாதார மேதை (சேதுவை மேல் நிறுத்தச் சொன்னான்) என்பதை மேலுள்ளக் கருத்துக் கூறும்.

தவறான மதம் எப்படி ஒரு நாட்டின் தர்மத்தைக் கெடுக்கும் என்பதை அப்போதே அறிந்தவன் ஆக இந்த தீர்க்க தர்சியை வேறுபலக் காரணத்தால் சில அரசியல் வாதிகள் ஒதுக்கலாம், வேறுபலக் (சமதர்மத்தைப் பற்றிய பாடல்களால்) காரணத்தால் அவனை நம்மவரே (ஹிந்துக்கள்) ஒதுக்கலாம்.

இவன் ஜீவர்களின் வரிசையில் நின்றதால், எல்லா ஜீவாத்மாவினுள்ளும் பரமாத்மாவையேப் பார்த்தான்.

வாழ்க வளர்க பாரதியின் புகழ்.
வாழ்க வாழ்க வாழ்கவே!
ஆக்கம்:  ஆலாசியம் கோவிந்தசாமி, சிங்கபூர்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++



வாழ்க வளமுடன்!

33 comments:

  1. மகாகவி பாரதி தேடலில் அன்பர் ஹாலாசியம் அவர்களுக்குக் கிடைத்தது அவரது பகவத் கீதையின் உரை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாரதியின் அறிவாற்றலை அவனது ஞானத்தின் ஆழத்தை வெளிப்படுத்தும் வாயிலாகத் திகழ்வது இதுபோன்ற படைப்புக்களே. அதிலும் மகாகவியின் பகவத் கீதையின் உரை இன்று வரை தமிழில் வந்த எல்லா உரைகளிலும் மிகச் சிறந்தது என்பது அறிஞர்களின் கருத்து. ஆழமான, தத்துவக் கருத்துக்களைப் படிப்பது அதனை உள்வாங்கிக் கொள்வது என்பது எவராலும் இயலக்கூடியதல்ல. அந்தப் பெரும் இமாலயப் பணியில் அன்பர் ஹாலாசியம் தேர்ந்தவராக இருப்பது பாராட்டப் படக்கூடியது. பாரதியின் கீதை உரைகளிலுள்ள‌ வாசகங்கள் மட்டுமல்ல, இதில் ஒளிர்விடுவது ஹாலாசியத்தின் உள்ளார்ந்த தத்துவ ஆர்வமும்தான். வாழ்க அவரது பணி. இதனை வெளியிட்டு பாரதியின் மேன்மையையும், அன்பர் ஹாலாசியத்தின் சிறப்பையும் வெளிக்கொணர்ந்தமைக்கு ஆசிரியர் அவர்களுக்கும் நன்றிகள் பல. வாழ்க பல்லாண்டு!

    ReplyDelete
  2. " கருணை மழை பொழியும் கருவிழிகள்
    அந்த காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள்
    அமுதம் ஊறி வரும் திருவடிகள்
    அவை அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள்"

    இன்பத்தேன் சுவைத் தரும் அற்புத வரிகள்........

    அக்னிக் குஞ்சின் அருகிலே வெண் திங்களாய்,
    செல்லம்மா பாரதியின் படம் அருமை.
    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. வணக்கம் வாத்தியார் ஐயா !

    எம்பெருமான் வடிவேலவனின் பாடல் அருமையிலும் மிக அருமை!

    எம்மால் புரிந்து கொள்ளும் அளவை விட மிகவும் பெரிய விஷயம் என்று தோன்றுகின்றது தங்களுடைய
    கட்டுரையை பார்த்தால்.

    உண்மையிலே தாங்கள் நல்ல தமிழ் புலமை பெற்ற தமிழ் புலவர்.

    தங்களுக்கு உள்ளம் கனிந்த வணக்கத்துடன் கூடிய நன்றிகள் பல கோடிகள்.

    ReplyDelete
  4. ////இதில் ஒளிர்விடுவது ஹாலாசியத்தின் உள்ளார்ந்த தத்துவ ஆர்வமும்தான். வாழ்க அவரது பணி./////
    இதுவே எனது பேறு. அந்த மகாகவியே தங்கள் உருவில் வாழ்த்தியதாக எண்ணி உள்ளம் மகிழ்கிறேன்.
    தங்களின் பாராட்டுக்களுக்கும் ஆசிக்கும் தங்களின் திருப்பாதம் தொட்ட ஆத்மாத்மமான வணக்கங்கள். நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  5. பௌத்தம் என்ற ஒரு மதமே . .
    இந்து மதத்தின் சீரழிவிற்கு காரணம் . .

    இன்னமும் சொல்லப்போனால்
    கடவுள் இல்லாக் கட்சிக் காரர்கள்
    பலர் உருவாகி இப்போ ஒரு தனி மதமில்லா மதம் என்று ஒரு மதத்தினை உருவாக்கிக் கொண்டிருக்கும் சில கறுப்பு சட்டைக் காரர்களை உருவாக்கியதே இந்த பெத்தம் தான் . .

    இந்து மதத்தில் காவியே இல்லை ..
    அந்த காவியை ஏற்படுத்தி . . பலரும் அதனை தொடர்ந்து இப்போ எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள் . . (நாட்களை இல்லை கம்பிகளை)

    பௌத்தத்தின் அடிப்படை கொள்கை உண்மையாக பாராபட்சம் இன்றி பார்த்தால் . . .

    அது
    சொல்வது ஒன்று செய்வது ஒன்று
    உண்மைக்கு புறம்பானது ..
    அது மகாயானத்திலும் உண்டு ஹீனயானத்திலும் உண்டு

    இன்னமும் பல ,, பல,,
    ஒரு பட்டி மண்டபம் வைத்தால்
    நான் பௌத்ததிற்கு எதிராகவே நிற்பவன்..

    அந்த மதத்தில் உள்ள பல இந்து மதத்தினை சீரழித்த செய்திகள் . .
    நமது சங்க இலக்கியங்களில் உள்ளன..

    சீவக சிந்தாமணி மணிமேகலை என்ற ஐம்பெருங்காப்பியங்களிலும் உள்ளது சான்று . .

    நான் மதங்களை சாடுபவன் அல்ல..
    ஆனால்
    உண்மைக்கு புறம்பானதை உண்மை என்று யார் சொன்னாலும் அதனை பாரதியே சொன்னாலும் ஏற்றுக் கொள்வது எப்படி சரியாக இருக்க முடியும்..

    பாரதி சொன்னதற்காக ஏற்றுக் கொண்டுவிட்டால் நாம் பாரதியையும் குற்றவாளியாக்குகின்றோம் . .
    நீதி மன்றத்தில் பொய் சாட்சி சொல்வதுபோல் . .

    மத விவாதம் வேண்டாம் என்பதினால்
    மற்ற விஷயங்களை பேசுவோமே ..

    ReplyDelete
  6. ஆலாசியம், உங்கள் தமிழ் ஆர்வத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நான் படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் நிறைய, ஆனால் நேரம்தான் அதிகம் கிடைப்பதில்லை. இருந்தாலும் படிப்பதை நிறுத்தவில்லை. இப்போதுதான் பகவத் கீதையை எடுத்திருக்கிறேன். எப்போது முடிப்பேன் என்று எனக்கே தெரியாது.

    ReplyDelete
  7. இவரை ஹிந்துக்கள் பலரும் பரமசிவனுடைய அவதாரமாகவேக் கருதினார்கள்.//

    புத்தரையே மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். அது பற்றி வேதங்களிலோ / புராணங்களிலோ குறிப்பிடப்பட்டுள்ளதா என்று தெரியாது.

    ReplyDelete
  8. தம்பி ஆலாச்சியத்தின் கட்டுரை கவர்ந்திழுப்பதைவிட சிந்திக்கவும் தூண்டுகின்றது.என்னை அதிகம் கவர்வது அவரின் கவிதை வரிகள்தான்.மேலும் சொற்களுக்கு அவரிடம் பஞ்சமில்லை. அறிஞர் அண்ணாவிடம் சொற்கள் வந்து கெஞ்சுமாம், தங்களை எடுத்தாழும்படி. அண்ணாவுக்கு எதை எடுப்பது விடுவது என்ற சிரமம்.அவ்வாறே நான் எண்ணுகின்றேன் சொற்கள் ஆலாச்சியத்தின் பின்னால் நிரையில் நின்று கெஞ்சுவதாக.தம்பிக்கு என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. ஜனசமத்துவம் கூறிய புத்தம் ஜகத்தின் ஒளி போன்றவளாகிய பத்தினியைத் துறந்தவர்களே மேலோர் என்று வைத்து, அவர்களுக்கு கீழே மற்ற உலகை அடக்கி வைத்து //

    இது உண்மை. நான் படித்தவரை இந்து மதத்தில் வீட்டை / குடும்பத்தை / கடமையை மறந்துவிட்டு துறவு ஏற்கும்படி சொல்லப்படவில்லை.

    ReplyDelete
  10. உலகமெல்லாம் துக்கமயம், போஇமயம் என்று பிதற்றிக்கொண்டு வாழ்நாளைக் கழிப்பதே ஞான நெறியாக ஏற்படுத்தி மனித நாகரிகத்தை நாசஞ்செய்ய முயன்றதாக//

    இது மட்டுமில்லை, 'பிறவா வரம் வேண்டும்' அப்படிங்கறதுல கூட எனக்கு உடன்பாடு கிடையாது.

    ReplyDelete
  11. இந்து மதத்தில் காவியே இல்லை ..
    அந்த காவியை ஏற்படுத்தி . . பலரும் அதனை தொடர்ந்து இப்போ எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள் . . (நாட்களை இல்லை கம்பிகளை)//

    ஹா ஹா ஹா

    ReplyDelete
  12. /////தங்களுக்கு உள்ளம் கனிந்த வணக்கத்துடன் கூடிய நன்றிகள் பல கோடிகள்.//////
    எண்ணத் தயக்கம், வாழ்த்துக்கள் என்றுக் கூறுங்கள் கண்ணன். கட்டுரையில் அடைப்புக் குறிப்புக்குள் வருவது மட்டும் நான் புரிந்துக் கொண்டதைக் கூறியுள்ளேன். மற்றபடி பாரதியார் கூறியதை கொஞ்ச சுலப நடையில் எழுத முயற்சித்து இருக்கிறேன். அவரே கூறுகிறார் வேதம் எழுதப்பட்ட சமஸ்கிருதம் வேறு, உபநிடதங்கள் எழுதிய சமஸ்கிருதம் வேறு என்று. பாரதியின் தமிழ் நடைதான் எளியது என்பர் அறிஞர். நமதுத் தமிழ் நடை அதனினும் எளியது.
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. /////பாரதி சொன்னதற்காக ஏற்றுக் கொண்டுவிட்டால் நாம் பாரதியையும் குற்றவாளியாக்குகின்றோம் . .
    நீதி மன்றத்தில் பொய் சாட்சி சொல்வதுபோல் . ./////

    நீங்கள் கூரியதையேத் தான் பாரதியும் கூறுகிறான் ஐயா!
    எல்லாப் புகழும் பாரதிக்கே! நன்றி.

    ReplyDelete
  14. ////ஆலாசியம், உங்கள் தமிழ் ஆர்வத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை./////
    நன்றிகள் உமா.

    ReplyDelete
  15. /////இப்போதுதான் பகவத் கீதையை எடுத்திருக்கிறேன். எப்போது முடிப்பேன் என்று எனக்கே தெரியாது./////
    நானும் தான் அதுதான் கொஞ்ச நாளாகவே புத்திக்குள் ஏதோச் செய்கறது..... நாற்பது ஆகிவிட்டால் புதுப் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து விடுவது என்று சேர்ந்து விட்டேன். பார்ப்போம் படித்துப் பட்டம் வாங்குகிறோமா, இல்லை பாதியிலே திரும்புகிறோமா என்று.

    ReplyDelete
  16. /////புத்தரையே மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். அது பற்றி வேதங்களிலோ / புராணங்களிலோ குறிப்பிடப்பட்டுள்ளதா என்று தெரியாது./////

    அப்படிப் பிறப்பார் என்று சொல்லியிருப்பதாக நானும் அறியவில்லை. அவரும் அந்த பிரம்மனின் படைப்பே / மகாத்மா. அவர் அரசர் என்பதால் அவரின் கொள்கைகள் வெகுவாகப் பரவி இருக்கலாம். நிகழ்காலத்திலே கூறினால், பண்டார் ஸ்ரீ பகவான் என்ற நகரத்தைத் தலைநகரமாக கொண்டு ஆளும் புருனே சுல்த்தானின் பாட்டனாரோ அவருக்கு முந்தியவரோ ஒரு இஸ்லாமியப் பெண்ணை மணந்ததால் இந்த நாடு மட்டும் அல்ல இங்கு தென்கிழக்கு ஆசிய நாடே மாறி இருக்கிறது என்பது தான் வரலாற்று உண்மை.

    ReplyDelete
  17. ///// தம்பிக்கு என் பாராட்டுக்கள்./////
    அண்ணா, பேரறிஞர் அண்ணாவை (அவர் நான் அன்னார்ந்துப் பார்த்தாலும் அவரின் உயரம் தெரியாது) ஒப்பிடுவது அளவிடமுடியாத அளவுக்கு அதிகப் படுத்துதல் (என்மகன் வீட்டில் டாக்டர் வேடமிட்டு எங்களுக்கு வைத்தியம் பார்க்கும் போது, அவனை மருத்துவராகவே பாவித்து பேசுவோம் இதுவும் அதைப் போல இங்கே கொள்கிறேன்) இருந்தும் உங்களின் பாராட்டுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  18. பண்டார் ஸ்ரீ பகவான் என்ற நகரத்தைத் தலைநகரமாக கொண்டு ஆளும் புருனே சுல்த்தானின் பாட்டனாரோ அவருக்கு முந்தியவரோ //

    இது பற்றி நான் எதுவும் கேள்விப்பட்டதில்லை, உங்களுக்கு நேரம் இருந்தால் என் மெயிலுக்கு விவரம் அனுப்புங்களேன். (umas1234@gmail.com)

    ReplyDelete
  19. அஷ்டவர்க்கம் பாடத்தின் முடிவில் அஷ்டவர்க்கம் சம்பந்தப்பட்ட என் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா அய்யா அவர்களே

    ReplyDelete
  20. நல்ல காரியம் செய்தீர்கள் நண்பரே!மஹாகவியை ஒரு பாடல் ஆசிரியராக மட்டுமே அறிந்து வைத்துள்ள பலருக்கும் அவருடைய உரை நடையை செவ்வனே அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
    //(பாரதி ஒரு தீர்க்க தர்சி என்பதற்குள்ள பல சான்றுகளில் இதுவும் ஓன்று... இன்றும் பெரிதும் போற்றும் இலங்கையிலே உள்ள நிலைமை அனைவரும் அறிந்ததே. மடம் தான் பிரதானம், ராஜ்ஜியம் அதன் கருவி.... நாம் இன்று பார்ப்பதை பாரதி அன்றே தீர்க்க தர்சனத்தால் பார்த்து இருக்கிறான் அது பொய்யாகாது)//


    பார‌தி ஒரு விவேகானந்த‌ர் அபிமானி என்ப‌து ப‌ல‌ரும் அறிந்த‌தே!
    ஜ‌ப்பான் சென்ற‌ சுவாமிஜி அங்கு நில‌வும் பெள‌த்த‌ம் பாரத‌த்தின் வேதாந்தத்தின்
    ஆக்கபூர்வமான முகம் என்றார். எனவே அந்த நாட்டுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்றார். நடைமுறை வேதாந்தம் என்ற கருத்தை சுவாமிஜி முன் வைத்தது ஜப்பான் விஜயத்திற்குப் பின்னரே! அதுபோலவே இலங்கை சென்ற சுவாமிஜி அங்கு இருந்த பெள்த்த மடாலயங்களைப் பார்த்துவிட்டு எல்லாம்
    எதிர்மறையாக உள்ளதே! இந்த நாட்டுக்கு அழிவுப் பாதைதான்!என்றார்.
    பாரதியின் பெள‌த்தம் பற்றிய கருத்துக்கள் சுவாமிஜியின் கருத்துக்களை ஒட்டியே அமைந்துள்ளன‌.

    ReplyDelete
  21. ///// இது பற்றி நான் எதுவும் கேள்விப்பட்டதில்லை, உங்களுக்கு நேரம் இருந்தால் என் மெயிலுக்கு விவரம் அனுப்புங்களேன்.//////

    தங்களுக்கு மின்-அஞ்சல் செய்துள்ளேன்.
    இந்த தகவலை நான் சிங்கப்பூர் வானொலியில் சுமார் 15 - வருடங்களுக்கு முன்பு ஒருவரை நேர்கேட்டல் செய்தார்கள் (அவர் ஒரு இஸ்லாமியரும் கூட. இதில் இன்னொருத் தகவல் என்னவென்றால் திருநெல்லாறிலே சனீஸ்வரனுக்கு ஏழு வண்ணங்களில் கட்டப் பட்ட துணிக்குத் தந்த விளக்கத்திற்கும் பின்னாளில் நாசாவில் சனிகோளைச் சுற்றி உள்ள தூசுமண்டலத்தை பற்றிய ஆராய்ச்சிக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டு வியந்ததாகவும் கூறினார்.) அப்போது கேள்வியுற்றேன். இருந்தும் அதைப் பற்றிய சிலத் தகவல்களை கூகுள் ஆண்டவரும் தந்துள்ளார்.

    இன்னும் ஒரு தகவல்.
    கருவில் இருக்கும் குழந்தைக்கு கேட்டது பீஷ்மரின் பத்ம வியூகக் கதை அது பாதயில் நிறுத்தப் பட்டதால் அவன் போரிலே மாண்டான். கண்ணனுக்கு மட்டும் தெரிந்ததாக மகாபாரதம் கூறிற்று கேலி செய்தார்கள் பின்னாளில் ஜப்பான் ஆமாம் கருவில் இருக்கும் குழந்தைக்கு கேட்கும் / தாயின் உணர்வுகளை தானும் உணர முடியும் என்று ஆராய்ச்சி முடிவு கூறிற்று. கேலிசெய்தவர்கள் வாயடைத்தார்கள்.

    3 March 2007 (Brunei Times) – An overview of the ancient history of Brunei.



    Treasuring Brunei’s past

    Many of the great civilisations in our world’s history had marine origins, whether they evolved in Europe, the Americas or Asia. The kingdom of Brunei Darussalam is no exception, as historical evidence lends veracity to this claim. Relics of Bruneian culture have been found around river estuaries and ancient settlements, as proven from recent archaeological finds in Kota Batu, Tanjung Batu, Limau Manis and several other areas.

    The powerful and opulent kingdom of Brunei Darussalam was first mentioned in various accounts of contemporaneous Asian civilisations in the 14th century. As local legend has it, Brunei was founded by Awang Alak Betatar (or Alka Betara as recorded in Hindu accounts). His move from Garang to the Brunei river estuary led to the glorious discovery of Brunei. His first exclamation upon landing on the shore, as the legend goes, was “Baru nah!” (which in English, translates into “This is it!”) and thus, the name “Brunei” was derived from his words.

    Another version of the etymology of “Brunei” recalls that the early Bruneians, who were fishermen or sea-loving people, were known as “Varuna” in the Sanskrit language, which means “people who live by, and on the water”. This gradually became the name of the country.

    நன்றி.

    ReplyDelete
  22. // Uma said...
    இவரை ஹிந்துக்கள் பலரும் பரமசிவனுடைய அவதாரமாகவேக் கருதினார்கள்.//

    புத்தரையே மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். அது பற்றி வேதங்களிலோ / புராணங்களிலோ குறிப்பிடப்பட்டுள்ளதா என்று தெரியாது.//

    திரு ஆலாசியம் அவர்கள் சங்கராச்சாரியரைத்தான் பரமசிவனாக சொல்லி இருக்கிறார்.

    //தம்மாலே வெட்டுண்ட புத்தமத விருட்சத்தின் கிளைகள் பலவற்றை ஹிந்து தர்மமாகிய விருட்சத்திற்கு உரமாகுபடி எருவாகச் செய்து போட்டார். அதனாலே, இவரை சிலர் "பிரசன்னா பௌத்தர்" (மறைவு பட்ட பௌத்தர்) என்றும் சொன்னார்கள். எனினும் இவர் ஹிந்து தர்மத்திற்கு செய்த பேருதவியால் இவரை ஹிந்துக்கள் பலரும் பரமசிவனுடைய அவதாரமாகவேக் கருதினார்கள்.//

    ReplyDelete
  23. //// நல்ல காரியம் செய்தீர்கள் நண்பரே!மஹாகவியை ஒரு பாடல் ஆசிரியராக மட்டுமே அறிந்து வைத்துள்ள பலருக்கும் அவருடைய உரை நடையை செவ்வனே அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!////
    விவேகானந்தரையும் நான் படிக்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது.
    தங்களின் பாராட்டுக்கு நன்றிகள் கிருஷ்ணன் சார்.

    ReplyDelete
  24. சுதாகர் சொன்னது...
    /////சங்கராச்சாரியரைத்தான் பரமசிவனாக சொல்லி இருக்கிறார்.////
    திருவாளர், சுதாகர் அவர்களே, திருமதி உமாவும் தாங்கள் கூறியது போலத்தான் புரிந்து இருக்கிறார்கள், மேலும் புத்தரின் அவதாரம் மகாவிஷ்ணுவின் அவதாரம் என தான் பிறர் கூற கேள்விப்பட்டதற்கு, ஏதேனும் ஆதாரம் உண்டென்று யாரேனும் கேள்விப் பட்டதுண்டா? என்றும் கேட்டிருந்தார்கள். தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றிகள் நண்பரே.

    ReplyDelete
  25. ////KATHIR = RAY said...
    அஷ்டவர்க்கம் பாடத்தின் முடிவில் அஷ்டவர்க்கம் சம்பந்தப்பட்ட என் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா அய்யா அவர்களே/////

    பொதுக்கேல்விகளுக்குப் பதில் கிடைக்கும். சொந்த ஜாதகத்தை வைத்து யாரும் கேட்க வேண்டாம்!

    ReplyDelete
  26. 'நித்தியானந்தம்' என்று ஒரு சமீப காலத்து TV பிரசித்தி பெற்ற சாமியார் அடிக்கடி தன் பெயரை brand establish பண்ணுவதற்காக பயன்படுத்துவார்..
    அந்த வார்த்தையின் மதிப்பையே கெடுத்து விட்டார்.. அன்பர் ஆலாசியம் இந்த வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்..
    புத்தமதத் துறவிகள் எறும்பு போன்ற சிறு ஊர்ந்து செல்லும் உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் மயில் தோகை கொண்டு பாதையை விலக்கியபடி
    பயணித்தார்கள் என்பது கேள்விப்பட்டிருக்கிறேன்..
    அனைத்துலக நாடுகளும் தடை செய்துவிட்ட cluster bomb களைப் போரில் பயன்படுத்தி உலகின் மிகக் கொடூரமான போரை நடத்தி இனப்படுகொலைக்கு பின்புலமாக
    இந்த பவுத்தம் மாறியிருப்பதும், நடப்பன ஊர்வன,பறப்பன என்று அனைத்து உயிரினங்களையும் ஸ்வாகா பண்ணும்வரை வளர்ந்திருப்பதையும் பார்க்கும்போது
    புத்தனின் போதிமர ஞானம் காலப் பரிமாணத்தில் முற்றிலும் தடம் புரண்டு விட்டது என்றே தோன்றுகிறது..

    ReplyDelete
  27. மதம் பிடித்ததால் இந்தக் கட்டுரை வெளியாகி மதம் பிடித்த பலரின் விமர்சனத்துக்கும் ஆளாகியிருக்கிறது..
    யானைக்கும் மதம் பிடித்ததால் பாரதிக்கு ஏற்பட்ட கடைசி பாதிப்புதான் எல்லோருக்கும் பாடம்..

    ReplyDelete
  28. //////// minorwall said...
    அனைத்துலக நாடுகளும் தடை செய்துவிட்ட cluster bomb களைப் போரில் பயன்படுத்தி உலகின் மிகக் கொடூரமான போரை நடத்தி இனப்படுகொலைக்கு பின்புலமாக
    இந்த பவுத்தம் மாறியிருப்பதும், நடப்பன ஊர்வன,பறப்பன என்று அனைத்து உயிரினங்களையும் ஸ்வாகா பண்ணும்வரை வளர்ந்திருப்பதையும் பார்க்கும்போது
    புத்தனின் போதிமர ஞானம் காலப் பரிமாணத்தில் முற்றிலும் தடம் புரண்டு விட்டது என்றே தோன்றுகிறது../////

    பின்னூட்டம் 2
    ///// மதம் பிடித்ததால் இந்தக் கட்டுரை வெளியாகி மதம் பிடித்த பலரின் விமர்சனத்துக்கும் ஆளாகியிருக்கிறது..
    யானைக்கும் மதம் பிடித்ததால் பாரதிக்கு ஏற்பட்ட கடைசி பாதிப்புதான் எல்லோருக்கும் பாடம்..///////

    நீங்கள் உங்களின் முதல் பின்னூட்டத்தில் சொன்ன கருத்தைத்தான் அனைவரும் மனதில் கொண்டுள்ளார்கள் மைனர்!

    கவியரசர் கண்ணதாசன் சொல்வார்: “இறைவன் ஒருவன் தான். அவன் கடலைப்போன்றவன். அத்தனை மதங்களும் ஆறுகளைப் போன்றவை. அவைகள் அனைத்தும் கடலை நோக்கித்தான் பயணிக்கின்றன. இறைவனை அடையும் வழியைத்தான் மக்களுக்குப் போதிக்கின்றன”

    ஒருமித்த கருத்து என்பது சாத்தியமில்லை. வகுப்பறையில் அனைவரும் தங்கள் கருத்தைச் சொல்லலாம். ம்ற்றவர்கள் அதற்கு உடன் படுவார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

    இங்கே சர்ச்சைக்கும், வாதங்களுக்கும் இடமுண்டு. ஆனால் சண்டைக்கு இடமில்லை. யாருக்கும் மதம் பிடித்துள்ளதாக எனக்குத் தோன்றவில்லை மைனர். அவரவர்கள் தங்கள் கருத்தை வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்கள். அவ்வளவுதான். டேக் இட் ஈஸி மைனர்.

    பாரதிக்கு விதிவசத்தால் ஏற்படவுள்ள துர்சம்பவத்தை முன்னரே அறிந்த இறைவன், அவரைப் பல அற்புதமான
    பாடல்களை முன்னரே (அந்த நிகழ்வுக்கு முன்னரே - அந்த 40 வயதிற்குள்ளாகவே) எழுத வைத்தான் பாருங்கள் - அதுதான் இறைவனின் கருணை என்பது!

    பாரதி இல்லாவிட்டால், :செந்தமிழ் நாட்டின் உயர்வும் நமக்குத் தெரிந்திருக்காது. இன்பத்தேன் வந்து நம் காதினிலே பாய்ந்தும் இருக்காது!

    ReplyDelete
  29. //////மதம் பிடித்ததால் இந்தக் கட்டுரை வெளியாகி மதம் பிடித்த பலரின் விமர்சனத்துக்கும் ஆளாகியிருக்கிறது../////

    வாத்தியார் சார் பதில் கூறிவிட்டார்கள்... இருந்தும் நானும் கூற முற்படுவதற்கு ஆசிரியர் மன்னிக்கணும்.

    உண்மைதான் நண்பரே!
    மதத்தை பிடித்திருக்கலாம்,
    மதம் என்னும் மதம் பிடிக்கக் கூடாது....
    பிறகு மதம் மூலம் என்ன கூறப் படுகிறது என்ற மகத்துவமான மாசற்ற மட்டற்ற பரிபூர்ண நித்தியமான சத்தியத்தை புரிந்துக் கொள்ள முடியாது. உங்களின் இந்த பின்னூட்டத்தின் அர்த்தம் அருமை. வாய்ப்புக் கிடைத்தால் இதைப் பற்றி மீண்டும் பேசுவோம்.
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  30. இந்து மத வழிபாட்டு முறைகள் பவுத்தத்திலும் கலந்து கிடக்கின்றன..இந்து தெய்வங்களான கண்ணன், சிவன் எல்லாரும் இங்கேயும் ஆஜர்..
    தெய்வங்களுக்கு, மரங்களுக்கு(தெய்வமாகக் கருதி ) என்று ஊதுவத்தி ,சாம்பிராணி , அரிசி,சாராயம், தண்ணீர் என்று படைப்பதில் தொடங்கி சுவாமி ஊர்வலம் என்று பல்லக்கில் பவனி, தேரிழுப்பு
    வெடி வெடித்து கோலாகலம், ஆடி மாதம் இறந்தவர்களுக்கான பூஜைகள், 108 மணிகள் கோர்த்த மாலை கொண்டு மந்திரங்கள் செபித்தல் (ஷிங்கோன் என்றொரு பவுத்தத்தின் பிரிவு.) கோவிலில் பெரிய மணியை அடித்தல் (ஒவ்வொரு வருட இறுதி நாளிலும் 108 விதமான அசுத்த எண்ணங்களைப் போக்கும் விதத்தில் 108 முறை மணி அடித்தல்)
    என்று கிட்டத்தட்ட நம்மூர் பக்திப் பரவச அயிட்டங்கள் எல்லாம் ஜப்பானிலும் இப்போதும் பழக்கத்தில் உண்டு..(என்ன? இங்கே கோட் சூட் போட்டுக் கொண்டு செய்வார்கள்..)ஜப்பானியப் பவுத்தத்தில் உட்பிரிவுகள் 7 உண்டு என்று அறிகிறேன்..அவற்றுள் சில..ஷிங்கோன்,நிச்சிரென் ,ஒபாக்ஷு , ஷோடோஷு என்று சற்று வேறுபாடுகள் உண்டு..
    மரங்கள்,ஆறு, பாறை என்று இயற்கையை வழிபடும் முறை விரவிக் கிடக்கிறது..
    ராமன் கால் பட்டுப் பாறை சாப விமோசனம் பெற்று அகலிகை உயிர்த்தெழுந்ததையும், மூலிகை பறிக்கும் பொருட்டு செடிகளை வெட்டும் முன் சில மந்திரங்களை உச்சரித்து சாப விமோசனம் கொடுத்தபின் வெட்ட வேண்டும் என்று அகஸ்த்தியர் சொல்வதையெல்லாம் வைத்துப் பார்த்தால் ஏதோ சாபம் பெற்றுதான் வெவ்வேறு ரூபங்களிலான இயற்கையின் அம்சங்கள் விரவிக் கிடக்கிறதோ என்று மனக்கண்ணில் கற்பனைக் குதிரை ஓட முற்படுகிறது..

    ReplyDelete
  31. மைனர், மதம் பிடித்தவர்கள்னு சொல்லிருக்கீங்க. நான் இந்து மதம்தான் உயர்ந்ததுன்னு எங்கயும் கமெண்ட் போடலையே. பாரதியார் புத்த மதத்தைப் பற்றி எழுதினதைப் பற்றிக்கூட நான் கருத்து எதுவும் சொல்லலை, ஏன்னா சில கருத்துகள்ல எனக்கு உடன்பாடு இல்லை. 'பிறவா வரம் வேண்டும்'ங்கறது கூட இந்து மதத்தில் சொல்லப்பட்டதுதான், அதுலயும் எனக்கு உடன்பாடு கிடையாதுன்னுதான் சொல்லிருக்கேன்.

    மற்றபடி எல்லாப் பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணமே தன் மதத்து மேல இருக்கிற கண்மூடித்தனமான நம்பிக்கை / பெருமை மற்றும் அடுத்த மதத்தைப் பற்றி துச்சமாக நினைப்பதும்தான்.

    ReplyDelete
  32. பாரதியின் கட்டுரையை வெளியிட்டு விட்டேன் இருந்தும் மதத்தைப் பொறுத்தவரை எனது அபிப்ராயம் (இது தான் மதங்களைப் பற்றி நன்கு புரிந்தவர்களின் கருத்தாகவும் இருக்கும்) என்ன என்றுக் கேட்டால். எம்மதமும் சம்மதமே. எல்லா மதங்களும் ஒரே இடத்திற்குத் தான் செல்ல நினைக்கிறது. பாதைகள் தான் வேறு வேறு. மிகப் பழைய மதம் நமது என்றாலும் இந்த பிரபஞ்சம் முழுவதும் ஈசனால் படைக்கப் பட்டதே. அப்படிஎன்றால் ஜோசுவாவும், நபியும் நமது மத ரிஷிகளும் எல்லா மகாத்மாக்களும் அதில் அடக்கம். அந்தப் பர பிரம்மத்திற்குத் தெரியாமல் எதுவும் நடக்காது. நமக்குப் புரிய வில்லை என்பதால் அது தவறாகாது. நான் கொஞ்சம் குரானையும், கொஞ்சம் பைபிளையும் படித்தும் அதன் போதனைகளையும் படித்துப் பார்த்தேன் நமது மதம் கூறியதைத் தான் அவைகள் அப்படிக் கூறுகிறார்கள்.


    மேலோட்டமாக காழ்ப் புணர்ச்சி கொள்ளாமல், அவைகளின் உள்ளார்ந்த கருத்தை பார்க்காமல், அதோடு பிற மதத்தில் பிறந்தவர்களின் (பிறந்தவர்கள் என்பதைக் கவனிக்கணும்) சில தவறான நடவடிக்கைகளால் நாம் அந்த மதத்தை குறை கூற முடியாது, அதோடு அவர்கள் ஒன்றும் அந்த மத ஸ்தாபகர்கள் அல்ல, புரியாமல் அல்லது தவறாகப் புரிந்து செயல் படுபவர்கள். அவர்களும் அந்த மதத்தை குத்தகைக்கு எடுத்தது போன்ற தொரு நினைப்பே அவ்வளவே. எது எப்படியாகினும் நம் மதம் சொல்லுவது போல் இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். ஆனால் அவன் அதன் தன்மையாகவே இருக்கிறான்.



    காக்கை சிறகினிலே இறைவன் கருப்பு

    நெருப்பிலே அவர் சுடும் தன்மை

    நல்லவநிடத்தில் நல்ல புத்தி

    கெட்டவன் இடத்திலும் கேடாக இருக்கிறான் காரணம் அவன் (அந்த இறைவன்) மட்டுமே அறிவான்.. ஆக,

    புகை நடுவினில் தீயிருப்பதைப்
    பூமியிற் கண்டோ மே-நன்னெஞ்சே!
    பூமியிற் கண்டோ மே.
    பகை நடுவினில் அன்புரு வானநம்
    பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே

    எதிரியின் உள்ளும் இருக்கும் பரமாத்மாவை வணங்குவோம் என்றான் பாரதி.

    கடைசியாக எனது தமிழாசான் கூறியதை கண்டிடுவோம்.

    ''சாரமுள்ள பொருளினைநான் சொல்லிவிட்டேன்;
    சஞ்சலங்கள் இனிவேண்டா;சரதந் தெய்வம்;
    ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
    எப்போதும் அருளைமனத் திசைத்துக் கொள்வாய்;
    வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்;
    எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்;
    பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
    பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும். 64

    ''பூமியிலே,கண்டம் ஐந்து,மதங்கள் கோடி!
    புத்த மதம்,சமண மதம்,பார்ஸி மார்க்கம்,
    சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,
    சநாதனமாம் ஹிந்து மதம்,இஸ்லாம்,யூதம்,
    நாமமுயர் சீனத்துத் 'தாவு''மர்க்கம்,
    நல்ல ''கண் பூசி''மதம் முதலாப் பார்மேல்
    யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;
    யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே. 65

    ''பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்
    பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்:
    சாமி நீ;சாமி நீ;கடவுள் நீயே;
    தத்வமஸி;தத்வமஸி;நீயே அஃதாம்;
    பூமியிலே நீகடவு ளில்லை யென்று
    புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை;
    சாமிநீ அம் மாயை தன்னை நீக்கிச்
    சதாகாலம் 'சிவோஹ'மென்று சாதிப் பாயே!'' 66

    நன்றி வணக்கம்.

    ReplyDelete
  33. human scientist Craig venter had created a man made DNA synthetic cell throughwhich he could make new species possible..with manualy written genetic charecters..jenome..

    pls. go through this link.. http://www.youtube.com/watch?v=IyAOepIU6uo&feature=related

    மதங்கள் மனிதனுக்கு விடிவு தருமா? இது போன்ற விஞ்ஞானிகள் விடிவு தருவார்களா? இவர்கள்தான் வாழும் மனிதகுல மேம்பாட்டுக்கான கடவுளர்கள்..சிந்திப்போம்..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com