மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.10.10

என்ன ஆச்சு கண்ணுங்களா?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
என்ன ஆச்சு கண்ணுங்களா?

நேற்று வாத்தியார் கேட்டிருந்த விவரத்திற்கு 112 பேர்கள் மட்டும்தான் கையைத் தூக்கியிருக்கிறார்கள். அதாவது மின்னஞ்சலில் பதில் அனுப்பியிருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் அரைத்தூக்கத்தில் இருப்பதாகத் தோணுகிறது.

மாப்பிள்ளை பெஞ்சை விடுங்கள். வகுப்பறையில் உள்ள 1849 பேர்களில்,
1500 பேர்களாவது விவரம் அனுப்ப வேண்டாமா? இல்லை
அனுப்பியவர்களை வைத்துப் புள்ளிவிவரம் போட்டுவிடவா?
அது சரியாக இருக்காதே! ஆகவே அனைவரும் அனுப்பி வையுங்கள்.

உங்கள் ஒத்துழைப்பை வேண்டும்,
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------------
அனுப்ப வேண்டியவர்களின் வசதிக்காக, நேற்றையப் பதிவு அப்படியே கொடுக்கப்பெற்றுள்ளது

ஜோதிடப் புத்தகங்கள் முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

புத்தகத்தின் முத்தாய்ப்பான அம்சம், அது ஒருவருக்கு சமர்ப்பணம்
செய்யப்பட உள்ளது. அவருடைய படத்துடன்  சமர்ப்பண அறிவிப்பு
புத்தகத்தின் முதல் பக்கத்தில் மல்ட்டி கலரில் வெளியாக உள்ளது.
யார் அவர் என்பது வாத்தியாருக்கு மட்டுமே தெரியும். புத்தகம் உங்கள் கைக்குக் கிடைத்தவுடன், அதை நீங்கள் பார்த்தால், நீங்கள்  அனைவரும் மகிழ்வு கொள்வீர்கள்.

யார் அது?

சஸ்பென்சாக இருக்கட்டும். புத்தகம் உங்கள் கைக்கு வரும்வரை பொறுத்திருங்கள்.

புத்தகத்தின் மற்றொரு மேன்மையான விஷயம் நம் வகுப்பறையைப் பற்றி இரண்டு பக்க அளவில் விரிவான  செய்தி வரவுள்ளது. அதற்கு இன்று நம் வகுப்பறையில் பதிவு செய்துள்ள உங்களைப் பற்றிய (Followers) சிறு
குறிப்புக்கள் வாத்தியாருக்குத் தேவைப்படுகின்றன. ஆகவே அனைவரும் தங்களுடைய ஒத்துழைப்பைத் தந்து  உதவ வேண்டுகிறேன்.

தேவையான செய்திகள்/
1. உங்களுடைய உண்மைப் பெயர்
2. உங்களுடைய புனைப்பெயர்
3. உங்களுடைய வயது
  (முடிந்தால் பிறந்த தேதி)
4. உங்களுடைய நட்சத்திரம் (இது option மட்டுமே)
5. உங்களுடைய பால் இனம் (Gender: Male reader 0r female reader) இது முக்கியமானது.
6. நீங்கள் பிறந்த ஊர்
7. நீங்கள் வசிக்கும் ஊர்
8. உங்களுடைய கல்வித் தகுதி
9. உங்களுடைய வேலை அல்லது தொழில் (இது option மட்டுமே)
10. எத்தனை மாதங்களாக நீங்கள் பாடங்களைப் படிக்கின்றீர்கள் என்னும் விபரம்

இவை அனைத்தையும் எழுதி அனுப்புங்கள். இந்த விவரங்கள் வெளியிடப்பட மாட்டாது. ரகசியம் காக்கப்படும்.  உறுதியளிக்கிறேன். இந்த விவரம் எனக்கு மட்டுமே. இதைவைத்து புள்ளிவிவரங்கள் மட்டுமே புத்தகத்தில் 
வெளி வரும்.

அதாவது வகுப்பறையில் படிப்பவர்களில், இந்தந்த வயதில் இத்தனைபேர்கள் உள்ளார்கள். ஆண் வாசகர்கள்  இத்தனைபேர்கள் உள்ளார்கள். பெண் வாசகிகள் இத்தனை பேர்கள் உள்ளார்கள். இந்தந்த நாட்டில் (ஊர்களில்)
இத்தனை பேர்கள் உள்ளார்கள் என்னும் புள்ளி விவரம் மட்டுமே வெளியாகும்.

நீங்கள் தகவல் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

classroom2007@gmail.com

வேறு முகவரிக்கோ அல்லது பின்னூட்டத்திலோ யாரும் அதைத் தரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். 

மேலே உள்ள மின்னஞ்சல் முகவரியை மட்டுமே அனைவரும் பயன்படுத்துங்கள்.

ஜோதிடப்பாடம் வழக்கம்போல் நாளை வெளிவரும்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

48 comments:

  1. The cartoon is excellent.It shows the real colour of politicians.

    ReplyDelete
  2. அய்யா அவர்களுக்கு,
    அந்த மல்டிகலர் படம், தங்களுடைய நன்பர் இயற்கை எய்திய திரு.ஆசான் அவர்கள் தானே !!!


    அன்புடன்,

    சஞ்சய் ராமனாதன்

    ReplyDelete
  3. ////kmr.krishnan said...
    The cartoon is excellent.It shows the real colour of politicians.////

    ஒரு கூடுதல் கலகலப்பிற்காக அவற்றைச் சேர்த்து வருகிறேன். உங்களின் ரசனைக்கு நன்றி சார்!

    ReplyDelete
  4. ////சூரிபாபா said...
    i second KMR sir.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. ////sanjay said...
    அய்யா அவர்களுக்கு,
    அந்த மல்டிகலர் படம், தங்களுடைய நண்பர் இயற்கை எய்திய திரு.ஆசான் அவர்கள் தானே !!!
    அன்புடன்,
    சஞ்சய் ராமனாதன்////

    இல்லை. கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஒரே ஒரு க்ளூ தருகிறேன். அவர் உங்கள் அனைவருக்கும் தெரிந்தவர்

    ReplyDelete
  6. /////LK said...
    anupiten//////

    கிடைத்தது. நன்றி!

    ReplyDelete
  7. கூகுள் ஆண்டவரா?

    ReplyDelete
  8. ////Uma said...
    கூகுள் ஆண்டவரா?////

    இல்லை சகோதரி!

    ReplyDelete
  9. அய்யா அவர்களுக்கு,
    இந்த அடியேனிடமிருந்து ஒரு சின்ன ஆலோசனை ! தங்களுடைய இந்த படைப்பானது, இத்தனை வருடம் ஆழ்ந்த அறிவுடனும், சுயமுயர்ச்சியினாலும், இந்த சோதிட கலையினை கற்று தேர்ந்துள்ளீர்கள் அதெ சமயம் எங்களுக்கும் கற்று கொடுத்துள்ளீர்கள். அப்படிப்பட்ட படைப்பை ஒரு நல்ல தரம் வாய்ந்த வெளியீட்டார்களான, நர்மதா பதிப்பகத்தின் மூலமாகா வெளியிட்டால் மிகவும் அசத்தலாக இருக்கும் என்பது என் கருத்து !

    ( sir, i don't have any personal relationship with that publication or anyother even. i am very much interested in reading books and learning things. And i always buy the books published by Narmadha publications as their finishing and the quality is very very good and for that purpose itself we tend to buy the books. Thats why i suggested this in here dear sir !)

    அன்புடன்,
    சஞ்சய் ராமனதன்

    ReplyDelete
  10. ஐயா

    அவர் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகராக இருப்பார் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  11. அனுப்பி விட்டேன். தாங்களும் கிடைத்தது என்று பதில் அனுப்பி விட்டீர்கள். புத்தகம் வெளிவரும் போது தெரியும் என்று வாத்தியார் சொல்லியும் எத‌ற்கு இன்னும் அவ‌ரா இவரா என்ற கேள்வி. சற்று பொறுத்து இருந்துதான் பாருங்களேன்.

    ReplyDelete
  12. ////Arul said...
    He is Kavignar Kannathaasan.////

    இல்லை! கவியரசருக்கு முன்பே எனது நூல் ஒன்றை சமர்ப்பணம் செய்துவிட்டேன். அந்தப் புத்தகம் 10.10.2010 அன்று ஒரு நண்பரின் மணிவிழா நிகழ்வில் வெளியாகிறது!

    ReplyDelete
  13. /////sanjay said...
    அய்யா அவர்களுக்கு,
    இந்த அடியேனிடமிருந்து ஒரு சின்ன ஆலோசனை ! தங்களுடைய இந்த படைப்பானது, இத்தனை வருடம் ஆழ்ந்த அறிவுடனும், சுயமுயர்ச்சியினாலும், இந்த சோதிட கலையினை கற்று தேர்ந்துள்ளீர்கள் அதெ சமயம் எங்களுக்கும் கற்று கொடுத்துள்ளீர்கள். அப்படிப்பட்ட படைப்பை ஒரு நல்ல தரம் வாய்ந்த வெளியீட்டார்களான, நர்மதா பதிப்பகத்தின் மூலமாகா வெளியிட்டால் மிகவும் அசத்தலாக இருக்கும் என்பது என் கருத்து !
    ( sir, i don't have any personal relationship with that publication or anyother even. i am very much interested in reading books and learning things. And i always buy the books published by Narmadha publications as their finishing and the quality is very very good and for that purpose itself we tend to buy the books. Thats why i suggested this in here dear sir !)
    அன்புடன்,
    சஞ்சய் ராமனதன்////

    உங்கள் ஆலோசனைக்கு நன்றி! இதுவரை என்னுடைய 4 புத்தகங்களை வெளியிட்ட பதிப்பாளர்கள்தான் இந்தமுறையும். புத்தகம் தரமாக இருக்கும். அதற்கு நான் கியாரண்டி! நன்றி

    ReplyDelete
  14. /////Lakshmanan said...
    ஐயா
    அவர் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகராக இருப்பார் என நினைக்கிறேன்.////

    இல்லை!

    ReplyDelete
  15. ////ananth said...
    அனுப்பி விட்டேன். தாங்களும் கிடைத்தது என்று பதில் அனுப்பி விட்டீர்கள். புத்தகம் வெளிவரும் போது தெரியும் என்று வாத்தியார் சொல்லியும் எத‌ற்கு இன்னும் அவ‌ரா இவரா என்ற கேள்வி. சற்று பொறுத்து இருந்துதான் பாருங்களேன்.////

    அதானே! பொறுத்திருங்கள் மக்களே!

    ReplyDelete
  16. சனி பகவான் இல்லை. அவரைவிட உயர்ந்தவர். //

    யார் கால தேவனா?

    ReplyDelete
  17. sir,
    could you pls let me know what are all other 4 books ? and how can i buy those???? pls

    sanjay ramanthan

    ReplyDelete
  18. It should be "Nanthi Devar".
    Am I right Sir?.

    ReplyDelete
  19. /////Uma said...
    சனி பகவான் இல்லை. அவரைவிட உயர்ந்தவர். //
    யார் கால தேவனா?////

    இல்லை!

    ReplyDelete
  20. ////sanjay said...
    sir,
    could you pls let me know what are all other 4 books ? and how can i buy those???? pls
    sanjay ramanthan////

    செட்டிநாட்டு மண்வாசனைக் கதைகள் - பகுதி 1, பகுதி 2, பகுதி 3, (ஒவ்வொன்றும் 160 பக்கங்கள். ஒவ்வொன்றிலும் 20 சிறுகதைகள் உள்ளன. மொத்தம் 60 கதைகள் அனைத்தும் மாத இதழ் ஒன்றில் வெளிவந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றவை) முத்தான கதைகள் (104 பக்கங்கள். 28 கதைகள்)
    பதிப்பாளர்களின் மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@yahoo.in

    ReplyDelete
  21. ////Alasiam G said...
    It should be "Nanthi Devar".
    Am I right Sir?.////

    இல்லை. பொறுத்திருங்கள் ஆலாசியம்!

    ReplyDelete
  22. sir,
    can i get the mobile no of umayalpathippagam ??? coz i am from salem thats y i need the mobile no. so that i can reach them easily and buy the books dear sir !!

    sanjay ramanathan

    ReplyDelete
  23. sir,
    i better wait till 10.10.10 and get ur latest release also !

    sanjay ramanathan

    pls provide me the mobile no of umayal pathippagam sir

    ReplyDelete
  24. சார் எனக்கு தெரியும் அவர் பழனி ஆண்டவர்(கடவுள்) அவர் படம் தானே ச்ரியா எனக்கு புத்தகம் அனுப்புவிங்களா சார்.

    ReplyDelete
  25. dear sir

    what is title for our book sir and who is the father of this book title?

    is his photo also will be print in our jathakam book?

    ReplyDelete
  26. சார்,

    வணக்கம், அடுத்த பாடம் எதை பற்றியது (Syllabus).

    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  27. /////sanjay said...
    sir,
    can i get the mobile no of umayalpathippagam ??? coz i am from salem thats y i need the mobile no. so that i can reach them easily and buy the books dear sir !!
    sanjay ramanathan//////

    Phone Number of Umayal Pathippagam: 96007 - 04006

    ReplyDelete
  28. ////sanjay said...
    sir,
    i better wait till 10.10.10 and get ur latest release also!
    sanjay ramanathan pls provide me the mobile no of umayal pathippagam sir////

    நல்லது!

    ReplyDelete
  29. ///////sundari said...
    சார் எனக்கு தெரியும் அவர் பழனி ஆண்டவர் (கடவுள்) அவர் படம் தானே? சரியா எனக்கு புத்தகம் அனுப்புவீங்களா சார்.//////

    பழநிஅப்பனும் அல்ல அவர்! பொறுத்திருங்கள். உங்களுக்குப் புத்தகத்தை நேரில் வந்து தருவதாக உள்ளேன். உங்களுக்கு மட்டுமல்ல. சென்னை வாசகர்கள் சிலருக்கு நேரில் கிடைக்கும்!

    ReplyDelete
  30. ////மகேஷ் ராஜ் said...
    dear sir
    what is title for our book sir and who is the father of this book title?
    is his photo also will be print in our jathakam book?/////

    தலைப்பை இன்னும் முடிவு செய்யவில்லை. பொறுத்திருங்கள். நான் சொல்லும் நபரின் படம் மல்ட்டி கலரில் முதல் பக்கத்தில் இருக்கும். பொறுத்திருங்கள்

    ReplyDelete
  31. /////bhuvanar said...
    சார்,
    வணக்கம், அடுத்த பாடம் எதை பற்றியது (Syllabus)
    நன்றி
    பாண்டியன்//////

    பாரதியார் பல்கலைக் கழகத்தில் கேட்போம். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்துவிடுவோம்! என்ன சரிதானே?

    ReplyDelete
  32. அது நமது வாத்தியாரின் தந்தை அல்லது நம்மில் ஒருவர் கூறிய விடையாக இருக்கும்

    வாத்தியார் நம்மிடம் ஆர்வத்தை தூண்டுகிறார் போலும்

    ReplyDelete
  33. மிக்க நன்றி அய்யா !
    உமயாள் பதிப்பகத்தின் அலைப்பேசி எண் அளித்தமைக்கு !!

    சஞ்சய் ராமனாதன்

    ReplyDelete
  34. ஒரு சின்ன ஜோக் !

    இறு நண்பிகள் சந்திக்கின்றனர்,

    வனிதா : ஹேய் அனிதா, இந்த போட்டோவைப் பாரேன்.ஆள் எப்படி இருக்கார்னு சொல்லு ! (தான் கொண்டு வந்த போட்டோவை காண்பிக்கிறாள்)

    அனிதா : ம்ம்ம்... நல்லா ஸ்மார்ட்டா இருக்கார் டி ! யார் இது ??

    வனிதா : இது என்னோட 'வுட்பீ' ...!

    அனிதா : (ஓரக்கண்ணால் பார்த்துக் கொன்டே) கையில இருக்கிற போட்டோ 'வுட்பீ'னா, அப்ப உன் பையில இருக்கிற லவ்வர் போட்டோ ..???

    வனிதா : அது "குட் பீ" (could be) ...!

    அனிதா : ?????????

    ReplyDelete
  35. வணக்கம் ஐயா

    செல்ல குதிரை,
    சிறு பிள்ளை குதிரை,
    மைனர் குதிரை,
    மேஜர் குதிரை,
    சண்டி குதிரை,
    நொண்டி குதிரை,
    அடங்காத வரி குதிரை,
    ஞான குதிரை,
    விஞ்ஞான குதிரை,
    மெய்யான குதிரை,
    மடக்குதிரை,
    மாடத்து குதிரை,
    கன்னி குதிரை,
    கட்டழகு குதிரை என்று அனைத்து குதிரையையும் ஓட்டி செல்லும் வாத்தியாரின் பொறுமையோ மிகப்பெரிய பொறுமை.

    ReplyDelete
  36. Naveen said...
    அது நமது வாத்தியாரின் தந்தை அல்லது நம்மில் ஒருவர் கூறிய விடையாக இருக்கும்
    வாத்தியார் நம்மிடம் ஆர்வத்தை தூண்டுகிறார் போலும்////

    என் தந்தையாருக்கு என்னுடைய முதல் புத்தகத்தை சமர்பித்துவிட்டேன். ஜோதிட புத்தகத்தில் அவருக்கு வேலை இல்லை! நீங்கள் அனைவரும் இதுவரை கூறிய விடைகள் அனைத்தும் தவறானது. அதை ஒவ்வொருவரின் பின்னூட்டத்திலும் சொல்லியிருக்கிறேன். நான் ஆர்வத்தைத் தூண்டவில்லை. நமது வகுப்பறை மாணவர் திருவாளர் ஆனந்த் அவர்கள் கூறியதைப் போல அனைவரும் பொறுமையாக இருங்கள். புத்தகம் உங்கள் கைக்கு வந்தவுடன் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்!

    ReplyDelete
  37. //sanjay said...
    மிக்க நன்றி அய்யா !
    உமயாள் பதிப்பகத்தின் அலைப்பேசி எண் அளித்தமைக்கு !!
    சஞ்சய் ராமனாதன்////

    இதற்கு எதற்கு நன்றி!

    ReplyDelete
  38. ////sanjay said...
    ஒரு சின்ன ஜோக் !
    இறு நண்பிகள் சந்திக்கின்றனர்,
    வனிதா : ஹேய் அனிதா, இந்த போட்டோவைப் பாரேன்.ஆள் எப்படி இருக்கார்னு சொல்லு ! (தான் கொண்டு வந்த போட்டோவை காண்பிக்கிறாள்)
    அனிதா : ம்ம்ம்... நல்லா ஸ்மார்ட்டா இருக்கார் டி ! யார் இது ??
    வனிதா : இது என்னோட 'வுட்பீ' ...!
    அனிதா : (ஓரக்கண்ணால் பார்த்துக் கொன்டே) கையில இருக்கிற போட்டோ 'வுட்பீ'னா, அப்ப உன் பையில இருக்கிற லவ்வர் போட்டோ ..???
    வனிதா : அது "குட் பீ" (could be) ...!
    அனிதா : ?????????/////

    கலிகாலம்! வேறு என்னத்தை சொல்வது?

    ReplyDelete
  39. /////kannan said...
    வணக்கம் ஐயா
    செல்லக் குதிரை,
    சிறு பிள்ளைக் குதிரை,
    மைனர் குதிரை,
    மேஜர் குதிரை,
    சண்டிக் குதிரை,
    நொண்டிக் குதிரை,
    அடங்காத வரிக் குதிரை,
    ஞானக் குதிரை,
    விஞ்ஞானக் குதிரை,
    மெய்யானக் குதிரை,
    மடக் குதிரை,
    மாடத்துக் குதிரை,
    கன்னிக் குதிரை,
    கட்டழகுக் குதிரை என்று அனைத்து குதிரைகளையும் ஓட்டிச் செல்லும் வாத்தியாரின் பொறுமையோ மிகப்பெரிய பொறுமை.//////

    ஒரு தவறு உள்ளது. கட்டழகுக் குதிரை என்று யாரைச் சொல்கிறீர்கள்? அது ஆண் குதிரைதானே? அப்படியென்றால் இருக்கிறது. இன்று உள்ள 1849 பேர்களில் ஒரு பத்துப்பேர்களின் புகைப்படத்தை மட்டும்தான் பார்த்துள்ளேன். மற்றவர்களை நான் அறியேன். ஞானம் உள்ளவர்கள் நிறைய உள்ளார்கள். இங்கே நடக்கும் கூத்துக்களைச் சகித்துக்கொண்டு, அவர்கள், தினமும் வந்து பாடங்களைப் படிக்கிறார்கள். என் பொறுமையைவிட அவர்களுடைய பொறுமைதான் பெரியது. கடலினும் பெரியது. அவர்கள் வாழ்க!

    ReplyDelete
  40. தோல்வி தான் அய்யா,

    சரி வேறு வழி இல்லை பொறுமையாக இருப்போம்

    எப்பொழுது புத்தகம் வெளிவரும், தங்கள் சென்னை வரும்பொழுது தெரிவிக்கவும் புத்தகத்தை நேரில் பெற்றுகொள்கிறேன்.

    ReplyDelete
  41. ஐயா நம்ப வகுப்பறையில்ல கூத்து ஒன்றும் நடக்கவில்லை
    நல்ல் ததுவத்தை தான் எல்லாம் தங்களிடமிருந்து பெற்றுகொள்கிறார்கள்
    உங்க வகுப்பறைதான் எனக்கு பிடித்திருக்கிறது எல்லாப்பின்னூட்டத்திற்கும் பொறுமையா பதில் சொல்றீங்க அது பொறுமையில்லையா அது(உங்கள் பொறுமை) கடலைவிட பெரியதில்லையா. நீங்க ரொம்ப நல்ல ஆரோக்கியமாயிருந்து எல்லோருக்கும் இந்த மாதரியே பதிவு தரவேண்டும்.
    சகோதரர் கண்ணா எங்கிருந்து இந்த குதிரைக்ள் வந்தது. அப்பா ரொம்ப நல்ல எழுதுறீங்க.

    ReplyDelete
  42. ///Naveen said...
    தோல்வி தான் அய்யா,
    சரி வேறு வழி இல்லை பொறுமையாக இருப்போம்
    எப்பொழுது புத்தகம் வெளிவரும், தங்கள் சென்னை வரும்பொழுது தெரிவிக்கவும் புத்தகத்தை நேரில் பெற்றுகொள்கிறேன்.////

    ஆகா, தெரிவிக்கிறேன்.சந்திப்போம்!

    ReplyDelete
  43. /////sundari said...
    ஐயா நம்ப வகுப்பறையில்ல கூத்து ஒன்றும் நடக்கவில்லை
    நல்ல தத்துவத்தைத்தான் எல்லாம் தங்களிடமிருந்து பெற்றுகொள்கிறார்கள்
    உங்க வகுப்பறைதான் எனக்கு பிடித்திருக்கிறது எல்லாப்பின்னூட்டத்திற்கும் பொறுமையா பதில் சொல்றீங்க அது பொறுமையில்லையா அது(உங்கள் பொறுமை) கடலைவிட பெரியதில்லையா. நீங்க ரொம்ப நல்ல ஆரோக்கியமாயிருந்து எல்லோருக்கும் இந்த மாதரியே பதிவு தரவேண்டும்.
    சகோதரர் கண்ணா எங்கிருந்து இந்த குதிரைகள் வந்தது. அப்பா ரொம்ப நல்ல எழுதுறீங்க./////

    சிலசமயம் நானும் இளைஞர்களுடன் சேர்ந்து கூத்தில் கலந்துகொள்கிறேன். அதனால்தான் சொன்னேன். வித்தியாசமாக ஒன்றும் இல்லை சகோதரி!

    ReplyDelete
  44. sir... pls announce the date of release of your lessons... i am awaiting for that... like i what feel for enthiran movie...

    ReplyDelete
  45. /////அடைமழைக்காலம் said...
    sir... pls announce the date of release of your lessons... i am awaiting for that... like i what feel for enthiran movie...////

    மெதுவாகச் சொல்லுங்கள் தயாநிதிமாறனுக்குக் கேட்டுவிடப்போகிறது. டிசம்பர் முதல் வாரம் என்று வைத்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com