மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.2.10

Short Story, சிறுகதை: ஆட்டியவனும் தள்ளியவனும்

---------------------------------------------------------------------------------
Short Story, சிறுகதை: ஆட்டியவனும் தள்ளியவனும்

காரைக்குடியில் இருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது அந்தச் சிற்றூர்.


இராமநாதன் செட்டியார் தன் மனைவி சீதை ஆச்சியுடன் அங்கே போய்ச் சேர்ந்தபோது காலை மணி பத்து.

வெயில் சூடு பிடிக்கத் தொங்கியிருந்தது. காரை ஓட்டிக் கொண்டு வந்த அவர் வீட்டு டிரைவர் ஒரு புளிய மரத்தின் நிழலில் வண்டியை நிறுத்தினார். செவர்லே ஸ்டேசன் வாகன் வண்டி. முன்பக்கம் மெட்டல் பாடி, பின்பக்கம் மரத்தினால் பாடி கட்டப்பட்டிருக்கும். ராசியான வண்டி என்பதற்காகச் செட்டியார் அதை விடாமல் வைத்திருந்தார்.

இராமனாதன் செட்டியாருக்கு ஏகப்பட்ட சொத்துக்கள். இங்கே மட்டுமல்ல, மலேசியா, பினாங். கிள்ளான்ங், சிரம்பான் போன்ற இடங்களிலும் ஏகப்பட்ட சொத்துக்கள். அவர் மனைவி சீதை ஆச்சியும் வரும்போது வெள்ளமாகக் கொண்டு வந்தார்கள். தட்டு, கிண்ணம், குவளை, தொன்னை என்று முழுவதும் வெள்ளியிலேயே செய்த டைனிங் செட் மட்டும் மொத்தம் 300 ஜோடிகள் வீட்டில் இருக்கிறதென்றால் மற்றதெல்லாம் எவ்வளவு இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

நூறு பவுனில் செய்த கெட்டிக் கழுத்திரு (திருமாங்கல்யம்) மற்றும் வைர அட்டிகைகள் (Diamond Necklace) மட்டும் தலா நான்கு உருப்படிக்கள் உள்ளன. மற்ற வைர நகைகள் போக உதிரி வைரங்கள் மட்டும் இரண்டு ஹார்லிக்ஸ் பாட்டில் நிறைய ஆச்சியிடம் உள்ளது.

இருவருக்கும் ஒரேஒரு பெண்குழந்தை மட்டும்தான். அவளை நன்றாக வளர்த்து, உரிய பருவம் வந்தவுடன் தன் மைத்துனன் மகனுக்கே கட்டிவைத்து விட்டார் செட்டியார். எல்லாம் இருந்தும் ஒரே ஒரு குறை. ஆண் வாரிசு இல்லை.

அந்தக் குறையைப் போக்குவதற்காகத்தான் இப்போது கிளம்பி வந்திருக்கிறார்.

கதை நடந்த காலம் 1948ம் ஆண்டு. பிரபலமான மகான்.. காந்தி மகான்... பாட்டு பட்டி தொட்டியயல்லாம் ஒலித்து மக்களைப் பரவசப் படுத்திக் கொண்டிருந்த காலம் அது.

வண்டியை விட்டு இறங்கிய செட்டியார் பார்த்தார். நான்கே எட்டு தூரத்தில் தான் லேனா என்னும் லெட்சுமணன் செட்டியாரின் வீடு இருந்தது.

பராமரிப்பின்றி முகப்புச்சுவர் சிதிலமடைந்து இருந்தது. முன்பு இரண்டொருமுறை வந்திருந்தாலும், ரெம்ப நாளைக்குப்பிறகு இப்போதுதான் வருகிறார். லேனாதான் வரச் சொல்லியிருந்தார்.

தனது கடைக்குட்டிகள் இருவரில் ஒருவனை இவர் வீட்டிற்குச் சுவிகாரம் கொடுப்பதற்குச் சம்மதித்துப் பிள்ளை பார்க்க வரச் சொல்லியிருந்தார்.

”மானீ... நான் எட்டு மணிக்கே கிளம்பி விடுவேன். நான் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. வீட்டில் ஆச்சியிடம் செல்லியிருக்கிறேன். நீங்கள் பையனைப் பார்த்துவிட்டு வாருங்கள். மற்ற விபரங்களைக் காரைக்குடியில் மாவன்னா விட்டில் வைத்துப் பேசிக் கொள்eலாம்” என்றிருந்தார்.

இரண்டே நிமிடத்தில் சீதை ஆச்சி பின்தொடர லேனாவின் வீட்டிற்குள் நுழைந்தார் செட்டியார்.

அங்கே முகப்புத் திண்ணையில் சாய்ந்து படுத்திருந்த லேனாவின் சம்சாரம் சடாரென்று எழுந்து, வாய் நிறைய ‘’வாங்க ... வாங்க” என்று இவர்களை வரவேற்றார்கள்.

வருத்தமும், கவலையும் கூட்டாகக் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தது அந்த ஆச்சியின் முகத்தில்.

இருக்காதா பின்னே?

மூத்தவனை விடுத்து, இரண்டாவது மற்றும் மூன்றாவது பையன்களை ஏற்கனவே பிள்ளை விட்டாகிவிட்டது. இப்பொழுது கடைசி இருவரில் ஒருவனையும் விட்டுவிடுவதற்கு தன் கணவர் ஏற்பாடு செய்து வருவதில் ஆச்சிக்கு உடன்பாடில்லை. இருந்தாலும் போகிற இடத்திலாவது பிள்ளைகள் நன்றாக இருக்கட்டும் என்ற பெருநோக்கில்தான் கடைசியில் சம்மதித்தார். எல்லாம் அவர் வீட்டுச் செட்டியார் பிழைத்த பிழைப்பு. ஆடிய ஆட்டம்.

அந்த ஆச்சி சொன்னார். ‘’இரண்டு பேரும் கடைசிக் கட்டில்தான் இருக்கிறார்கள். பார்த்துவிட்டு வாருங்கள்.”

அங்கே அந்தச் சிறுவர்கள் இருவரும் பெரிய ஆட்டுக்கல் ஒன்றில் மாவு ஆட்டிக் கொண்டிருந்தார்கள். நல்ல சிவந்த நிறத்தோடு களையாக இருந்தார்கள்.

பெரியவன் ஒல்லியாக இருந்தான். வயது பதினான்கு இருக்கும். சின்னவன் சற்றுக் குண்டாக இருந்தான். அவனுக்கு வயது பன்னிரெண்டு இருக்கும். இருவருமே சட்டையின்றி அரை டிராயர் அணிந்த நிலையில்தான் இருந்தார்கள்.

சின்னவன் உரலைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தான். பெரியவன் தண்ணீர் தெளித்து மாவைக் குழிக்குள் தள்ளி விட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு கணம் ஆட்டுவதை நிறுத்திவிட்டு இருவரும் நிமிர்ந்து பார்த்தார்கள்.

செட்டியாருக்கு இருவரையுமே பிடித்திருந்தது.

ஆச்சிக்கு யாரைப் பிடித்திருக்கிறது?

செட்டியார் மெல்லிய குரலில் கேட்டார், ‘’இஞ்சே... யாரைப் பிடித்திருக்கிறது?

ஆச்சி அதைவிட மெல்லிய குரலில் பதில் சொன்னார்.

”தள்ளுகிறவனையே கூட்டிக்கொள்வோம்!”

செட்டியார் மீண்டும் கேட்டார். ‘ஏன் அவனைப் பிடித்து இருக்கிறது?”

ஆச்சி சொன்னார். “ஆட்டுகிறவன் நம்மை ஆட்டி வைத்துவிடுவான். தள்ளுவதற்குத்தான் பொறுமை வேண்டும். தள்ளுகிறவன்தான் நம்மோடு இசைஞ்சு வருவான்!

ஆச்சியின் இந்தப் பதிலால் செட்டியார் அசந்து விட்டார். என்ன கெட்டிக்காரத்தனம் பாருங்கள்.

சொன்னபடியே சீதை ஆச்சி ஒரு நல்ல நாளில் தள்ளியவனைத்தான் சுவீகாரம் செய்து கொண்டார்கள்.

(எனது, செட்டி நாட்டு மண் வாசனைக் கதைகள் - இரண்டாம் தொகுப்பு நூலில் உள்ள 20 கதைகளில் இதுவும் ஒன்று. உங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன்)

வார இறுதிப்பதிவு!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்





வாழ்க வளமுடன்!

26.2.10

சோதிப்பவருக்கே ஒரு சோதனை!



நீலக்கல் The Blue Sapphire

+++++++++++++++++++++++++++++++++++++++++++
சோதிப்பவருக்கே ஒரு சோதனை!

நவரத்தினங்களில் சனிக்கான கல் நீலக்கல் The Blue Sapphire

நவரத்தினங்களில் அதிக வலுவானதும், அணிந்தவுடன் வெகு
தீவிரமாகத் தன் குணத்தைக் காட்டுவதும் இந்தக்கல்தான்!
இதற்கு செளரிரத்னா, ஷனிப்பிரியா, யாகுட் (persian name)
என்று பல பெயர்கள் உண்டு.

இந்த நீலக்கல், காஷ்மீர், ரஷ்யா, அமெரிக்கா என்று சில
குறிப்பிட்ட நாடுகளில்தான் கிடைக்கிறது என்றாலும்,
இலங்கையில் கிடைக்கும் நீலக் கல்லிற்குத்தான் மதிப்பு
அதிகம். அதை ஜாதி நீலக்கல் என்பார்கள். மயூர் நீலம்
என்று பெயர். ஆண் மயிலின் கழுத்து நிறத்தில் அக்கற்கள்
இருக்கும்.

இந்திர நீலம்: கரு நீலக்கலரில் இருக்கும்
ஜலநீல்: கரு நீலக்கலரில் இருக்கும் அத்துடன் நடுவில் சற்று
வெளிச்சமாக இருக்கும்

விளைவுகள்: அணிந்தவுடன், அதிரடியாகப் பலனைத் தரக்கூடிய
கல் நீலக்கல்லாகும். 3 மணி நேரம் அல்லது 3 நாட்களில் பலன்
தெரியும். சிலருக்கு ஒருவாரத்திற்குள் பலன் தெரியும்.
பொருத்தமானது என்றால், பணவரவுகள் உண்டாகும்.
பிரச்சினைகள் முடிவிற்கு வரும். தீர்வாகும். பொருத்தமில்லை
என்றால் கீழே விழுந்து அடிபட நேரிடும், விபத்துக்கள் உண்டாகும்,
பண விரையம் ஏற்படும், மற்றவர்களுடன் வாக்குவாதம்
ஏற்பட்டு சிக்கல்கள் உண்டாகும்.

(எல்லாம் இந்த பரிசோதனைக் காலத்திலேயே நடைபெறும்).
ஆகவே தொடர்ந்து அணியலாமா? அல்லது கூடாதா? என்று
நடக்கும் நிகழ்ச்சிகளைவைத்து நாம்தான் ஒரு முடிவிற்கு வரவேண்டும்.

ஆதாயங்கள்; கல் பொருத்தமாக இருக்கும் என்றால், உங்களுக்கு எல்லாவிதங்களிலும் நன்மைகள் உண்டாகும். மன உளைச்சல்கள் நிவர்த்தியாகும். மன அழுத்தங்கள் குறையும்.
நோயில் படுத்திருப்பவர்களுக்கு நோயின் வீரியம் குறையும்.
71/2 ஆண்டுச் சனியின் பாதிப்பில் இருப்பவர்களுக்குப் பாதிப்புக்கள்
குறையும். துன்பங்கள், வெறுப்புக்கள், ஏமாற்றங்கள் போன்ற
சூழ்நிலைகள் எல்லாம் மாறிவிடும்.

நீலக்கல்லை அணிந்துகொள்ள விரும்புகிறவர்கள், முதலில் ஜாதிநீலக்கல்தானா என்று ஒரு கைதேர்ந்த கல் நிபுணரிடம் கேட்டுவிட்டுத்தான் அணிந்துகொள்ளவேண்டும்.

யார்,யார் நீலக் கற்களை அணிந்து கொள்ளலாம்?

லக்கினங்களின்படியான விவரம் கீழே உள்ளது.

1
மேஷ லக்கினக்காரர்கள்: ஜாதகத்தில் சனி 2, 5, 7, 9, 10, 11 ஆம்
வீடுகளில் இருந்தால் அணிந்துகொள்ளலாம்.அதோடு சனி மகாதிசை நடைபெற்றாலும் அணிந்துகொள்ளலாம்!

2
ரிஷப லக்கினக்காரர்கள்: ஜாதகத்தில் சனி தன் சொந்த நட்சத்திரங்களில் அமையப்பெற்றவர்களுக்கும், அல்லது ராகுவின் நட்சத்திரங்களில் அமையப்பெற்றவர்களுக்கும் இந்த நீலக்கல் பொருத்தமாக இருக்கும்.

3.
மிதுன லக்கினக்காரர்கள்: ஜாதகத்தில் சனி நீசமாக இருந்தாலும் அல்லது பகை வீடுகளில் இருந்தாலும் அணிந்துகொள்ளலாம்.அதோடு சனி மகா
திசை நடைபெற்றாலும் அணிந்துகொள்ளலாம்!

4.
கடக லக்கினக்காரர்கள்: நீலக்கல்லை நினைத்தே பார்க்கக்கூடாது.

5.
சிம்ம லக்கினக்காரர்கள்: நீலக்கல்லை நினைத்தே பார்க்கக்கூடாது.

6.
கன்னி லக்கினக்காரர்கள்: சனி தன் சொந்த ராசிகளில் இருந்தால், அவர்கள் அணிந்துகொள்ளலாம்.அதோடு சனி மகாதிசை நடைபெற்றாலும் அணிந்துகொள்ளலாம்!

7.
துலா லக்கினக்காரர்கள்: ஜாதகத்தில் சனி 1, 3, 4, 5, 9ஆம் வீடுகளில்
இருந்தால் அணிந்துகொள்ளலாம்.அதோடு சனி மகாதிசை நடை
பெற்றாலும்
8.
விருச்சிக லக்கினக்காரர்கள்: சனி தன் சொந்த ராசிகளில் இருந்தால்,
அவர்கள் அணிந்துகொள்ளலாம்! அதோடு சனி மகாதிசை நடை
பெற்றாலும் அணிந்துகொள்ளலாம்!

9.
தனுசு லக்கினக்காரர்கள்: சனி தன் சொந்த ராசிகளில் இருந்தால்,
அவர்கள் அணிந்துகொள்ளலாம்

10.
மகர லக்கினக்காரர்கள்: சனி, புதனின் நட்சத்திரங்களில் அல்லது
கேதுவின் நட்சத்திரங்களில், அல்லது தன்னுடைய சொந்த நட்சத்திரங்
களில் இருந்தால் அணிந்துகொள்ளலாம்

11.
கும்ப லக்கினக்காரர்கள்: சனி, புதனின் நட்சத்திரங்களில் அல்லது
கேதுவின் நட்சத்திரங்களில் இருந்தால் அணிந்துகொள்ளலாம்.

12
மீன லக்கினக்காரர்கள்: நீலக்கல்லை நினைத்தே பார்க்கக்கூடாது.

ஒரு எச்சரிக்கையான விஷயம்: நீங்கள் நீலக்கல்லை அணிய
விரும்பினால், அதை மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும். உடன்
முத்து (pearl), சிகப்பு (ruby), பவளம் (coral) ஆகையவற்றையும்
சேர்த்து அணியக்கூடாது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கற்கள் என்ன செய்துவிடும் என்று என் நண்பர் ஒருவர், தனது
உறவினரிடம் சவால்விட்டுவிட்டு, ஒரு பெரிய நீலக்கல்லை
வாங்கித் தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டார். தொடர்ந்து
ஒருவாரம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது நிபந்தனை.

அவர் வைத்துக்கொண்ட அன்றே கல் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் அவருக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு (Loose Motion). அவருடைய வீட்டுத் தோட்டத்தில், அவர் நின்று கொண்டிருந்தபோது, பின்பக்கமாக வந்த காகம் ஒன்று அவர் மண்டையில் கொத்திவிட்டுப் போய் விட்டது. அத்துடன் அந்தவாரம் பங்குச்சந்தையில் ஏற்பட்ட பலத்த சரிவினால், கணிசமான அளவில் பணவிரையம் வேறு ஏற்பட்டது. இப்படியாகப் பல தொல்லைகள்.

ஒருவாரம் கழித்து, கல்லைத் தான் வாங்கிய கடையில் கொடுத்துத் திருப்பி எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். பாதிப் பணம் தந்தால் போதும் என்றார். கடைக்காரர் மறுத்துவிட்டார். அதோடு கடைக்காரரே அதற்குப் பரிகாரமும் சொன்னார். கல்லை விபூதி சம்படத்தில் விபூதிக்குள் முக்கி வைக்கும்படி சொல்லி யனுப்பினார். அவரும் அப்படியே செய்ய உபத்திரவங்கள் நின்றன. ஒரு மாதம் கழித்து மீண்டும், அவர் கல்லைச் சோதிக்க முயன்றபோது, அதே நிலை ஏற்பட, மறுபடியும் வீபூதிச் சம்படத்தில் கல்லைவைத்து, மங்களம் பாடி முடித்தார்.

மனிதர்களைப் பல சோதனைகளுக்கு உள்ளாக்குபவர் சனீஷ்வரன். அவரை அல்லது அவருக்கான கல்லைப் பரிசோதித்துப் பார்க்க விரும்புகிறவர்களும் அல்லது அவரின் சக்தியைப் பரிசோதித்துப் பார்க்க விரும்புகிறவர்களும், அப்படி செய்து பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 4 அல்லது 5 கேரட் எடையுள்ள நீலக்கல்லின் விலை, 20 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1,000 என்ற அளவில் இருந்தது. தற்சமயம் என்ன விலை உள்ளது என்று தெரியவில்லை. சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் கற்களை விற்கும் வியாபாரிகள் உள்ளார்கள். விசாரித்துப்பார்த்து விலையை எழுதுங்கள். நமது வகுப்பறைக் கண்மணி களுக்கு அது உபயோகமாக இருக்கும்!:-)))))))
கற்களுக்கு நோய்களைத் தீர்க்கும் சக்தி உண்டா? உண்டு என்கிறது ஒரு அறிக்கை. அதுபற்றிய கட்டுரை

திங்களன்று வெளிவரும்!

அன்புடன்
வாத்தியார்.

வாழ்க வளமுடன்!

25.2.10

கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு!


+++++++++++++++++++++++++++++++++++++++++
கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு!

பகுதி ஒன்று!

ஒரு பழைய சம்பவம். வருடம் 1985ஆம் ஆண்டில் மே மாதம்.

புதிதாக ஒரு பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரை, அச்சமயம் கோவையில் அக்கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதியாக இருந்த பிரவீன் ஆட்டோமோபைல்ஸ்’ நிறுவனத்தில் முழுப் பணத்தையும் செலுத்தி, (அப்போது அதன் விலை ரூ.11,000) விலைக்கு வாங்கினேன்.

அந்த மாடல் வண்டிக்கு, கிராக்கி அதிகம் இருந்ததால், காத்திருக்க விருப்பமின்றி, நண்பர் ஒருவர் உதவியுடன் முழுப்பணத்தையும், அதற்குச் சமமான அமெரிக்க டாலரில் செலுத்தி ஒரே வாரத்தில் வாங்கினேன்.

வாங்கியது முக்கியமில்லை. அதற்குப் பிறகு நடந்ததுதான் முக்கியம்.

ஆர்.டி.ஓ அலுவலகத்தில், அந்த இரு சக்கர வாகனத்திற்கான காகிதங்களை எல்லாம் சமர்ப்பித்து, பதிவு எண்ணிற்கு (Registration Number) விண்ணப்பித்திருந்தேன்.

அதுசமயம், ஒரு இடைத்தரகர் என்னிடம் வந்து, சார் ஒரு ஐநூறு ரூபாய் செலவழிக்க நீங்கள் தயார் என்றால், உங்களுக்கு நீங்கள் கேட்கும், பதிவு எண்ணை (fancy number) வாங்கித் தருவதாகச் சொன்னார்.

"கொடுக்காவிட்டால் என்ன ஆகும்?" என்று கேட்டேன்.

"கூட்டல் எண் எட்டாம் எண் வரும்படியாகப் போட்டுவிடுவார்கள்" என்று பயமுறுத்தும்படியாகச் சொன்னார்.

எட்டாம் எண், சனியினுடைய எண். சனி எனக்கு ராசிநாதன். போட்டால் போடட்டும். அதைப் போட்டுக்கொடுங்கள் என்று கேட்டால், அதற்கும் பணம் பறிப்பார்கள் என்று நினைத்தவன், ஒன்றும் சொல்லாமல், "பணம் எல்லாம் அனாவசியமாகத் தரமுடியாது. எந்த எண் வந்தாலும் எனக்குக் கவலையில்லை" என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

நான் நினைத்தபடியே நடந்தது. எட்டாம் எண்ணையே போட்டுவிட்டார்கள். நானும் மகிச்சியோடு ஆர்.சி புத்தகத்தை வாங்கிக்கொண்டுவந்துவிட்டேன்.

அந்த எண்ணால் எனக்கு ஒரு பிரச்சினையும் ஏற்பட்டதில்லை!

நம் ஜாதகம் இருக்கும்போது, எண் நம்மை என்ன செய்துவிடப்போகிறது? என்னும் சிந்தனையும் அதற்குக் காரணம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரிகமபதநி’ என்று ஏழு ஸ்வரங்களுக்குள் ஒரு ஒலி அலை இருப்பதைப்போல, எண்களுக்கும் ஒரு ஒலி அதிர்வு உண்டு என்பார்கள்.

எட்டாம் எண், சனீஷ்வரனுக்கான எண்!

கறுப்பு நிறம் சனீஷ்வரனுக்கான நிறம்.

சில (இளம்) பெண்கள் கறுப்பு நிறத்தில் உள்ளாடைகள் மற்றும் வெளியாடைகள் அணிவதைப் பார்த்திருக்கிறேன்.நீங்களும் பார்த்திருக்கலாம். தெரிந்த பெண்ணாக இருந்தால், ’அணியாதே அம்மா’ என்று அறிவுரை சொல்வேன். ஜாதகத்தில், மகரம் மற்றும் கும்ப ராசிக்காரகளும், லக்கினக்காரர்களும், சனி உச்சமாக இருப்பவர்களும் அணியலாம். மற்றவர்கள் அணியும்போது பாதகமான நிலைமை ஏற்படும்.

சனியைப்பற்றியும், அவருடைய சேஷ்டைகளைப் பற்றியும், உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா? கிரகங்களால் ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றி நம்பிக்கை இல்லாதவரா நீங்கள்?

அதைப் பரிசோதித்துப் பார்க்க (அதாவது சனியின் பாதிப்பைப் பரிசோதித்துப் பார்க்க) ஒரு வழி இருக்கிறது.

என்ன வழி?

அதை நாளை சொல்கிறேன்!

(தொடரும்)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

24.2.10

காதலிப்பார் யாருமில்லை!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காதலிப்பார் யாருமில்லை!

கேள்வியும் நானே! பதிலும் நானே!

காதல் திருமணத்திற்கு உரிய முக்கிய கிரக அமைப்பைச் சொல்லமுடியுமா?

காதல் திருமணங்களுக்கான கிரக அமைப்புக்கள்!

(Indications of love marriages)

ஜாதகத்தில் காதல் திருமணத்திற்கான வாய்ப்பைக் கோடிட்டுக் காட்டும் கிரக அமைப்புக்கள்:
1
ஐந்தாம் வீட்டதிபதியும், லக்கின அதிபதியும் கூட்டாக ஒரு வீட்டில் இருக்கும் நிலைமை!

2
ஐந்தாம் வீட்டதிபதியும், லக்கின அதிபதியும் வலிமையுடன் இருப்பதுடன், ஒருவரை ஒருவர் பார்வையில் வைத்திருக்கும் நிலைமை!

3
ஐந்தாம் அதிபதியும், லக்கினாதிபதியும் பரிவர்த்தனையாகி இருத்தல்

4
சந்திரன் அல்லது செவ்வாய் அல்லது சுக்கிரன் ஆகிய மூவரில் ஒருவர் வலிமையாக இருந்து ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் அல்லது பார்க்கும் நிலைமை

5
ஒன்பதாம் வீட்டில் ஒரு தீய கிரகம் வலிமையுடன் இருப்பது. (ஒன்பதாம் வீடு குடும்ப மரபுகளுக்கு உரிய வீடு. அதை நினைவில் வைக்கவும். அதை உடைத்து, ஜாதகனை மரபுகளைக் கடந்து காதல் திருமணம் செய்துகொள்ள வைக்கும் நிலைப்பாடு இது)

6
சுக்கிரனும், செவ்வாயும் நவாம்சத்தில் பரிவர்த்தனை பெற்று இருக்கும் நிலைமை!

ஒரு நாட்டிற்கான ஜாதகத்தில் ஏழாம் வீடு என்பது, வெளிவிவகாரங்களையும், (External affairs) சந்திக்கவிருக்கும் யுத்தங்களையும் காட்டும் (In Mundane Astrology, the Seventh House represents diplomacy & War) தனி மனிதர்களின் ஜாதகத்தில் ஏழாம் வீடு என்பது மனைவியையும், அவளால் அடையவிருக்கும் இன்ப/துன்பங்களையும் காட்டும். என்னவொரு பொருத்தம் பாருங்கள்.

தீயகிரகங்களால் ஏழாம்வீடு பாதிக்கப்பெற்றிருந்தால், திருமணவாழ்க்கை அவலத்தில் முடிந்துவிடும். அதே நேரத்தில் சுபக்கிரகங்களால் மேன்மை பெற்றிருந்தால், இல்லற வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும்!

காதல் கனிவதற்கும், கனிந்து பலன் தருவதற்கும் 5ஆம் வீடு முக்கியமானதாகும். 5ஆம் வீடும் அதன் அதிபதியும் வலுவாக இருந்தாம் மட்டுமே உண்டாகும் காதல் கூடிவரும் அல்லது கனிந்து வரும், உனக்கு நான், எனக்கு நீ எனும் வாழ்க்கையையும் பெற்றுத் தரும்.

அப்படி 5ஆம் வீடு சரியாக இல்லையென்றால், காதலை நினைத்துப் பார்க்கக் கூடாது. கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல் ஒன்றின் துவக்க வரிகளை அடிக்கடி பாடிவிட்டுச் சும்மா இருக்க வேண்டியதுதான்.

என்ன வரி அது?

ஆகா, உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன்.

”காதலிக்க நேரமில்லை
காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க
ஜாதகத்தில் வழியுமில்லை!”
++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

22.2.10

வீரேந்திர சேவாக்கிடம் பெப்ஸி எதற்காகப் போனது?

வீரேந்திர சேவாக்கிடம் பெப்ஸி எதற்காகப் போனது?

பதில் கீழே உள்ளது.
++++++++++++++++++++++++++++++++++++++++
கீழே உள்ள படங்கள், நமது வகுப்பறை மாணவர்
சீதாராம் கண்ணனிடமிருந்து வந்தவை.
நகைச்சுவைக்காகப் பதிவிட்டுள்ளேன்.
உம்மன்னா மூஞ்சி ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்!
_________________________________________________



1


2


3


4


5


6


7


8


9


10
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
பத்தில் எது நன்றாக உள்ளது?
_________________________________________________
வாத்தியார்...பாடம் எப்போது?
நாளை முதல் தொடர்ந்து 4 நாட்களுக்குப் பாடங்கள் வெளியாகும். பொறுத்திருந்து படியுங்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

20.2.10

உங்களை நீங்களே மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்

உங்களை நீங்களே குறைவாகப் பேசாதீர்கள்!

உங்களை நீங்களே மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்
அப்படி ஒப்பிட்டுப்பார்த்தால் என்ன ஆகும்?
உங்களை,
நீங்களே அவமரியாதை செய்துகொள்வதைப் போன்றதாகிவிடும் அது!

உங்களைவிட உயர்ந்தவர் யாருமில்லை;
உங்களைவிடத் தாழ்ந்தவர் எவருமில்லை!
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம்!

அதனால்தான் அனைவருக்கும் 337.
அதை மறுக்கமுடியுமா உங்களால்?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்திப்பாருங்கள்.
படங்களில் உள்ள வாசகங்கள் பெரிதாகத் தெரியும்.
படிப்பதற்கு வசதியாக இருக்கும்!




1



2



3



4



5



6



7



8



9



10
-----------------------------------------------------------------------------------
பத்தில் எது மிகவும் நன்றாக உள்ளது?

இது வார இறுதிப் பதிவு.
இறக்குமதிச் சரக்கு; மின்னஞ்சலில் வந்தது.

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

19.2.10

வெற்றியின் ரகசியம் என்ன?



+++++++++++++++++++++++++++++++++++++++++++++
வெற்றியின் ரகசியம் என்ன?

கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ், இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் வாழ்ந்தவர் (469 BC–399 BC)

அவர் வாழ்ந்த காலத்தில், ஒரு நாள், ஒரு இளைஞன் வந்து அவரை சந்தித்தான். வெற்றியின் ரகசியத்தைத் தனக்கு சுருக்கமாகச் சொல்லித்தருமாறு வேண்டிக்கொண்டான்.

அடுத்த நாள் காலை, ஊருக்கு அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு வந்து தன்னை சந்திக்கச் சொல்லி, அப்போதைக்கு அவனை அனுப்பிவைத்தார் அவர். அவனும் மறு பேச்சின்றி சென்று விட்டான்.

அடுத்த நாள் காலை. ஆற்றங்கரைக்கு வந்து அவரைச் சந்தித்தான் அவன்.

தன்னுடன் சேர்ந்து நடக்குமாறு அவனைப் பணித்துவிட்டு, அவர் ஆற்றுத் தண்ணீரில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். அவனும் நடந்தான்.

மார்பளவு நீருள்ள பகுதிக்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள்.

அப்போதுதான் அது நடந்தது.

சற்றும் எதிர்பார்க்காத வகையில், அந்த இளைஞனைத் தன் இருகரங்களாலும் பிடித்த சாக்ரடீஸ், தன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தண்ணீருக்குள் அமுக்கிப் பிடித்துக் கொண்டார்.

ஒன்றும் புரியாத இளைஞன், அவர் பிடியில் இருந்தும், நீருக்குள் இருந்தும் விடுபட முயன்றான். முடியவில்லை.

ஒரு நிமிட மரணப் போராட்டத்திற்குப் பிறகு, தன்னை விடுவித்துக் கொண்டு மேலே வந்தான். முகம் சிவந்துவிட்டது. மூச்சுத் திணறியதால், வேக வேகமாகக் காற்றை உள்ளிழுத்து சுவாசிக்கத் தொடங்கினான்.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகுதான் தன்நிலைக்கு வந்தான்.

சாக்ரடீசின்மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்ததால், அமைதியாகக் கேட்டான்:

“ஐயா, ஏன் இப்படிச் செய்தீர்கள்?”

“செய்ததைவிடு! தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும்போது உனக்கு மிக அத்யாவசியமாகத் தேவைப்பட்டது எது? - அதைச் சொல் முதலில்!” என்று பதிலுக்கு அவனைக் கேட்டார் சாக்ரடீஸ்.

“காற்று. சுவாசிப்பதற்கான காற்று!”

“வெற்றியின் ரகசியமும் அதுதான். மோசமான நிலையில் ஒன்று தேவைப்படும் நிலையில், போராடி, அதைப் பெற்றாய் இல்லையா நீ? வெற்றியும் அதுபோலத்தான் கிடைக்கும். வெற்றிக்கு வேறு ரகசியம்
ஒன்றும் இல்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எப்படி உள்ளது கதை?

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

16.2.10

கடலை போடுவதற்குக் காலம் பார்க்க வேண்டுமா?


ராகு பகவானின் அழகிய தோற்றம்!:-))))
படம் உதவி: இங்கே பார்க்கவும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேள்வியும் நானே - பதிலும் நானே!

நாட்டுக்கு நாடு ராகுகாலம் வேறுபடுமா? வேறுபட்டால், அதைக் கண்டுபிடிப்பது எப்படி? பயன்படுத்துவது அல்லது அதைத்
தவிர்ப்பது எப்படி?


முதலில் ராகுகாலம் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.

நவகோள்களில் ராகுவிற்கும் கேதுவிற்கும் சொந்த வீடுகள் கிடையாது. சொந்த தினங்களோ அல்லது நாட்களோ கிடையாது.

சூரியனுக்கு - ஞாயிற்றுக்கிழமை (Sunday), சந்திரனுக்குத் திங்கட்கிழமை (Monday), செவ்வாய்க்கு செவ்வாய்க்கிழமை (Tuesday), புதனுக்குப் புதன்கிழமை (Wednesday), குருவிற்கு வியாழக்கிழமை (Thursday), சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமை (Friday), சனிக்கு சனிக்கிழமை (Saturday) என்று அவைகள் ஆதிக்கம் செய்யும் நாட்கள் உள்ளன.

அவ்வாறு ராகுவிற்கும் கேதுவிற்கும் தனியாக நாட்கள் கிடையாது.

ஆனால் தினமும் ராகுவிற்கு ஒன்றரை மணி நேரமும், கேதுவிற்கு ஒன்றரை மணி நேரமும் ஆதிக்கம் செலுத்தும் என்று அந்த நேரம் அவைகளின் காலமாக ஒதுக்கப்பட்டுள்ளது.அவைகளுக்கு யார் அந்த நேரத்தை ஒதுக்கிக் கொடுத்தார்கள்? எந்த அடிப்படையில் ஒதுக்கிக் கொடுத்தார்கள்?
என்று வீணாக மண்டையைப் போட்டு யாரும் உருட்டிக்கொள்ள வேண்டாம். இந்திய ரிஷிகள் கொடுத்துள்ளார்கள். கேள்விகேட்டுப் பதிலைப் பெறலாம் என்றால் அவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை.

நூற்றாண்டுகளாக வாழ்ந்த ‘பெரிசுகளும்’ அவற்றைத் தவிர்க்கும்படி தங்கள் அனுபவத்தின் மூலம் சொல்லிவிட்டுப்போயிருக்கிறார்கள். ஆகவே முடிந்தவர்கள் அவர்கள் சொற்படி நடப்போம்.

தினமும் ராகுவிற்கு உரிய ஒன்றரை மணி நேரம் ராகுகாலம் எனப்படும். தினமும் கேதுவிற்கு உரிய ஒன்றரை மணி நேரம் எமகண்டம் எனப்படும்.

அந்த நேரத்தில் சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் புதிய செயல்களைத் தவிர்க்க வேண்டும். வழக்கமாகச் செய்யும் தினசரி அலுவல்களைச் செய்யலாம். That is your routine work. அதாவது காஃபி அல்லது
டீ குடிப்பதற்கும், தம் அடிப்பதற்கும், அலுவலகத்தில் கடலை போடுவதற்கும், ராகு காலம் பார்க்க வேண்டாம்.

தவிர்க்காமல் சுப காரியங்களைச் செய்தால் என்ன ஆகும்?
செய்து பாருங்கள், தெரியும்.

Rahu Kalam is the inauspicious time slot of the day.
It is the most dreaded time of the day as per Astrology
and must be avoided in all ventures for success.

ஒரு இடத்தின் சூரிய உதயத்தை வைத்து ராகு காலத்தை அறிய வேண்டும். அட்சரேகை, தீர்க்க ரேகையை வைத்து ஒரு இடத்தின் நேரம் மாறுபடும்.

ராகு காலத்தை அறியும் வழி:

ஒரு நாளின் பகல் நேரத்தின் அளவைக் கண்டு பிடியுங்கள். அதை எட்டு சமமான பகுதிகளாகப் பிரியுங்கள். பிரித்த பிறகு கீழே உள்ளபடி ஒவ்வொரு தினத்திற்கும் உரிய ராகுகாலம் தெரியவரும்

ஞாயிற்றுக்கிழமை = சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் வரை உள்ள நேரத்தில் எட்டாவது பகுதி அந்தக் கிழமையின் ராகுகாலம் ஆகும்.

திங்கட்கிழமைக்கு = இரண்டாவது பகுதி

செவ்வாய்க்கிழமைக்கு = ஏழாவது பகுதி

புதன்கிழமைக்கு = ஐந்தாவது பகுதி

வியாழக்கிழமை = ஆறாவது பகுதி

வெள்ளிக்கிழமை = நான்காவது பகுதி

சனிக்கிழமை = மூன்றாவது பகுதி.
==================================================================
உங்களுக்குப் புரியும் வகையில் விரிவாக இரண்டு அட்டவணைகளைக் கீழே கொடுத்துள்ளேன். அட்டவணைகளின் மீது கர்சரைவைத்து அழுத்தினால், அட்டவணைகள் பெரிதாகத் தெரியும்.


1


2

நாட்காட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ராகுகாலம் சூரிய உதயம் 6:00 மணிக்கு என்று கணக்கிடப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. தை, மாசி மாதங்களில் சூரியன் 6:30 மணிக்கு உதிக்கும். அப்போது நாட்காட்டிகளில் குறிப்பிடப் பட்டுள்ள பொது நேரம் மாறுபடும். அர்த்தம் ஆனதா?
++++++++++++++++++++++++++++++++++++++++
தன்னுடைய சொந்தத் தொழில் வேலையாக வாத்தியார் இரண்டு தினங்கள் வெளியூர் செல்வதால், வகுப்பறைக்கு இரண்டு தினங்கள் விடுமுறை. அனைவரும் சமர்த்தாக பழைய பாடங்களை ஒருமுறை திரும்பப்
படிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

15.2.10

கோர்ட்டுக்குப் போனாலும் ஜெயிக்காதது எது?

++++++++++++++++++++++++++++++++++++++++++
கோர்ட்டுக்குப் போனாலும் ஜெயிக்காதது எது?

கேள்வியும் நானே - பதிலும் நானே!
++++++++++++++++++++++++++++++++++==
சனியை நினைத்தால் சிலருக்குப் பயமாக இருக்கிறதே - பயத்தைப் போக்க என்ன செய்யலாம்?

சனியை நினைத்து யாரும் பயப்பட வேண்டாம். அவர்தான் கர்மகாரகர். இந்த உலகில் நீங்கள் பிறவி எடுத்த கர்மத்தின்படி, நீங்கள் பார்க்கவேண்டிய செயலை அல்லது உத்தியோகத்தை அல்லது வேலையை நிர்ணயிப்பவர் அவர்தான். அதோடு அனைவருக்கும் ஆயுள்காரகனும் அவர்தான். இந்த உலகில் ஒருவன் வாழ வேண்டிய நாட்களை நிர்ணயிப்பவரும் அவர்தான். கணக்குப்படி நாட்கள் முடிந்துவிட்டால், உங்களை ஒரு நொடிகூடத் தாமதிக்கவிடாமல் அள்ளிக்கொண்டு போகிறவரும் அவர்தான்!

அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் இப்படிப் பாட்டில் வைத்தார்:

"வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டல்
இந்தமண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...
(போனால்)
இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா..."

இந்தப்பாடலில் உள்ள முக்கியமான வரிகள்: “கூக்குரலாலே கிடைக்காது - இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது”

கர்மவினைப்படிதான் நமது வாழ்க்கை அமையும் - தனது
தர்மம்படிதான் சனீஷ்வரன் நடந்துகொள்வார்.

ஆகவே சனீஷ்வரனைக் கண்டு யாரும் பயப்படவோ அல்லது கவலை கொள்ளுவதோ வேண்டாம்.

சனியைவிடப் பயப்பட வேண்டிய ஆசாமி ஒருவன் இருக்கிறான் என்றால், அது ராகு! தண்டிக்க வேண்டிய ஒருவனை சனி சும்மா அடிப்பார். ஆனால் அதே நிலையில் மாட்டுபவனை ராகு சும்மா அடிக்க மாட்டார். தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடிப்பார். (Rahu is a merciless planet) ராகு மகா தசையில் அதை
அனுபவித்தவர்களுக்குத்தான் அந்த வலி நன்கு தெரியும்.
=-------------------------------------------------
வானவட்டத்தில் பத்து மற்றும் பதினொன்றாம் ராசிகளுக்கு அதிபதி சனி. மகர ராசியும், கும்ப ராசியும் அவருடைய சொந்த ராசிகள். சுக்கிரனின் ராசியான துலாம் ராசியில் சனி உச்சம் பெறுவார். செவ்வாயின் ராசியான மேஷ ராசியில் அவன் நீசமடைவார். அவர் வானவெளியில் ஒரு சுற்றைச் சுற்றி முடிக்க
எடுத்துக்கொள்ளும் காலம் 30 ஆண்டுகள். இதெல்லாம் அடைப்படை விஷயங்கள்.

கட்டுப்பாடுகள் (restriction), வரைமுறைகள் (limitation), தாமதம் (delay) ஆகியவை நம்மை மீறியும் உண்டாவதற்குக் காரணம் சனிதான். சனிதான் வாழ்க்கையின் யதார்த்தத்தை, அர்த்தத்தை நமக்குப் போதிக்கும் ஆசான் ஆவார். தடைகள், தாமதங்கள், தோல்விகள் என்று அடுத்தடுத்து ஏற்பட்டு நமக்கு பலவிதமான அனுபவங்களைக் கொடுத்து நம்மை நெறிப்படுத்து பவரும் அவர்தான்.

Saturn is the guru who teaches us the realities of our earthly existence. Obstacles,
delays and failures!

வெறுப்பு (frustrations) பதவியிறக்கம் (displacement) தனிமை (loneliness) என்று வாழ்க்கையின் பல நிலைப்பாடுகளை ஜாதகனுக்கு, அவனுடைய மதிப்பு, மரியாதை, சாதனைகள், செல்வம், சமூக அந்தஸ்து என்று எதையும் கணக்கில் கொள்ளாமல், (அவனைப்) புரட்டிப்போட்டுக் கற்றுக் கொடுப்பவரும் அவர்தான்!

நமது கர்மாவை உணரவைத்து, “எல்லாம் என் தலை எழுத்து” என்று சொல்ல வைப்பவரும் அவர்தான்.

Saturn walks us through these educating experiences and leads us to where we belong and what we deserve according to our action or Karma.

ஏழரை ஆண்டுச் சனி, அஷ்டமச்சனி என்று கோள்சாரப்படி தனது ஒவ்வொரு சுற்றிலும் மொத்தம் 10 ஆண்டுகளும், தனது தசா அல்லது புத்திகளின் மூலம் மொத்தம் 19 ஆண்டுகளும், பல ஜாதகர்களை அவர் வறுத்தெடுப்பது, ஜாதகனுக்கு பல (கஷ்டங்களின் மூலம்) அனுபவத்தைக் கொடுப்பதறகாகத் தான்.

சிலர் இந்தக் கஷ்டங்களில் இருந்து தப்பிவிடுவார்கள். அதற்குக் காரணம், சந்திரராசியிலும், அதற்கு முன் பின் ராசிகளிலும், சந்திரராசிக்கு எட்டாவது ராசியிலும் 30 அல்லது 30ற்கு மேற்பட்ட பரல்கள் அவர்கள் ஜாதகத்தில் இருக்கும். அந்த நான்கில் எத்தனை ராசிகளில் அப்படி இருக்கிறதோ அத்தனை பெருக்கல் இரண்டரை ஆண்டுகளைத் தப்பிக்கும் ஆண்டுகளாக எடுத்துக்கொள்ளலாம். அதேபோல சனி தன் சுயவர்க்கத்தில் 4 பரல்களுக்கு அதிகமான பரல்களுடன் இருந்தால், சனியின், தசா/புத்தி, ஜாதகனுக்கு
தீமைகளைச் செய்யாமல் நன்மைகளைச் செய்யும். ஆகவே அதையும் பாருங்கள்.

தொழில் ஸ்தானத்தை (Tenth House) முதல் இடமாகக்கொண்டு அன்றையக் கோச்சாரச் சனி எங்கே இருக்கிறார் என்று பாருங்கள். அந்த இடத்தில் இருந்து கோள்சாரப்படி அவர் 6 அல்லது 8 அல்லது 12ஆம் இடங்களில் இருந்தால், உங்கள் வேலைகளில், அல்லது செய்யும் தொழில்களில் சிக்கல் உண்டாகும்.
அந்த இடத்தை அவர் கடந்த பிறகு, அந்தச் சிக்கல்கள் நீங்கிவிடும்.

சனியின் மகோன்னதத்தை அல்லது மேன்மையைப் புரிந்துகொள்ளுங்கள். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குங்கள்!

Know the time periods of Saturn in your life from your Horoscope and live a meaningful life.
----------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

13.2.10

நகைச்சுவை: கலக்கலான கல்லறை வாசகங்கள்!

நகைச்சுவை: கலக்கலான கல்லறை வாசகங்கள்!

கல்லறை வாசகங்கள் நெஞ்சைத் தொடுவதாக இருக்கும். கலக்கலுக்கு அங்கே வழியிருக்காது. ஆனாலும் சில கணவன்மார்கள் கல்லறையில் துயில் கொள்ளும் தங்கள் மனைவியைப் பற்றி எழுதியுள்ள வாசகங்கள் புன்முறுவலை வரவழைப்பதாக உள்ளது. சில பிள்ளைகளும் அவ்வாறே எழுதிவைத்துள்ளன.அவற்றை நீங்கள் அறிந்துகொள்ளக் கீழே கொடுத்துள்ளேன்.
V
V
V
V
V
V
V
V
V
V


1. கடவுளே நான் எத்தனை மகிழ்வுடன் அவளை அனுப்பினேனோ,
அதே அளவு மகிழ்வுடன்
அவளை நீங்களும் வரவேற்க வேண்டுகிறேன்.



2. நீ இப்போது கடவுளின் கரகங்களில் தவழ்கிறாய். அமைதியோடு இரு. கடவுளே, உங்கள் மணிப்பர்ஸை மட்டும் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.


3.தாயே அமைதி கொள்வாயாக!
- உங்களின் அன்பு மகன்கள்
(உங்களுக்கு என்றுமே பணம் தந்து உதவாத ரிகார்டோ நீங்கலாக)



4. இவர் நல்ல கணவனாகவும், அற்புதமான தந்தையாகவும் விளங்கியவர். அதே நேரத்தில் மோசமான எலக்ட்ரீஷியனாகவும் வாழ்ந்தவர்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

12.2.10

உங்களை இருக்கை நுனிக்கு வரவைக்கும் செய்திகள்



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்களை இருக்கை நுனிக்கு வரவைக்கும் செய்திகள்

சில செய்திகளில் அதிசய ஒற்றுமை இருக்கும். அத்துடன் அதன் தொடர் ஒற்றுமை நம்மை இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் தன்மையுடையதாக இருக்கும்.

அப்படிப்பட்ட செய்திகளை உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன். சார், இது அறுதப் பழசு என்று முன்பே இதைத் தெரிந்தவர்கள் யாரும் பின்னூட்டம் இட வேண்டாம். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும்

இதைப்போன்ற, இந்தியாவில் நடந்த ஒரு அதிசய ஒற்றுமைச் செய்தியை, கோள்களுடன் தொடர்பு படுத்தி, அடுத்த பதிவில் உங்களுக்குத் தரவுள்ளேன். பொறுத்திருந்து படியுங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
அப்ரஹாம்லிங்கன் கட்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஆண்டு 1846
ஜான். எஃப் கென்னடி கட்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஆண்டு 1946
2
அப்ரஹாம்லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்ட
ஆண்டு 1860
ஜான். எஃப் கென்னடி அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்ட
ஆண்டு 1960
3
இருவருமே civil rights களுக்காகக் குரல் கொடுத்துப் பதவிக்கு வந்தவர்கள்
(Civil Rights means the right to be civilized with other people that's not your race)
4
வெள்ளை மாளிகையில் வாழ்ந்த காலத்தில் இருவருமே தத்தம் குழந்தையைப் பறிகொடுத்திருக்கிறார்கள்
Both lost their children while living in the White House.
5
இருவருமே வெள்ளிக்கிழமையன்று சுட்டுக் கொல்லப்பட்டார்கள்
6
தலையில் பாய்ந்த குண்டுதான் இருவரின் உயிரையும் பறித்தது.

அடுத்த அதிசயம்:
7
லிங்கனுடைய செயலாளருடைய பெயர் கென்னடி
கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன்
8
இருவருமே தெற்கத்தியப் பகுதி நபர்களால் கொல்லப்பட்டார்கள்
9
தெற்குப்பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்னும் பெயரையுடையவர்களே அவர்கள் இருவருக்கும் அடுத்ததாகப் பதவிக்கு வந்தார்கள்
10
லிங்கனுக்கு அடுத்துப்பதவிக்கு வந்த ஆண்ட்ரூ ஜான்சனின் பிறந்த
வருடம் 1808
கென்னடிக்கு அடுத்துப் பதவிக்கு வந்த லிண்டன் ஜான்சனின் பிறந்த
வருடம் 1908
11
லிங்கனைக் கொன்ற ஜான் வில்கெஸ் பூத் பிறந்த வருடம் 1839
கென்னடியைக் கொன்ற லீ ஹார்வி ஆஸ்வால்ட் பிறந்த வருடம் 1939
12
கொலையாளிகள் இருவரின் பெயருமே 3 சொற்களைக் கொண்டது
அந்த மூன்று சொற்களுமே 15 எழுத்துக்களைக் கொண்டது


உங்களை இருக்கை நுனிக்கு வரவைக்கும் செய்திகள் அடுத்து உள்ளன!:
13
லிங்கன் சுட்டுக்கொல்லப்பட்ட அரங்கின் பெயர் 'Ford'
சுட்டுக்கொல்லப்பட்டபோது கென்னடி பயணம் செய்த காரின் பெயர் லிங்கன் (made by 'Ford')
14
ஒரு அரங்கிலிருந்து லிங்கனைச் சுட்டுக் கொன்றவன், கொலைக்குப் பிறகு ஓடி ஒளிந்த இடம் ஒரு கிடங்கு
ஒரு கிடங்கிலிருந்து கென்னடியைச் சுட்டுக் கொன்றவன் கொலைக்குப் பிறகுஓடி ஒளிந்த இடம் ஒரு அரங்கு!
15
பூத்தும், ஆஸ்வால்டும் போலீஸ் மற்றும் நீதிமன்ற விசாரணைக்கு முன்பாகவே கொல்லப்பட்டார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Coincidence?

Here's a little part of US history which makes you wonder.

Kennedy - Lincoln Similarities

Abraham Lincoln was elected to Congress in 1846.
John F. Kennedy was elected to Congress in 1946.

Abraham Lincoln was elected President in 1860.
John F. Kennedy was elected President in 1960.

The names Lincoln and Kennedy each contain seven letters.

Both were particularly concerned with civil rights.

Both wives lost their children while living in the White House.

Both Presidents were shot on a Friday.

Both were shot in the head.

Lincoln's secretary was named Kennedy.
Kennedy's secretary was named Lincoln.

Both were assassinated by Southerners.

Both were succeeded by Southerners.

Both successors were named Johnson.

Andrew Johnson, who succeeded Lincoln, was born in 1808.
Lyndon Johnson, who succeeded Kennedy, was born in 1908.

John Wilkes Booth,was born in 1839.
Lee Harvey Oswald,was born in 1939.

Both assassins were known by their three names.
Both names are comprised of fifteen letters.

Booth ran from the theatre and was caught in a warehouse.
Oswald ran from a warehouse and was caught in a theatre.

Booth and Oswald were assassinated before their trials.

And here's the kicker;

A week before Lincoln was shot, he was in Monroe, Maryland.
A week before Kennedy was shot, he was ___ Marilyn Monroe.

Taken from URL: Click Here
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

11.2.10

திருமணம் தாமதமாவதற்குக் காரணம் என்ன?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேள்வியும் நானே - பதிலும் நானே! பகுதி 3

திருமணம் தாமதமாவதற்குக் காரணம் என்ன?

திருமணம் தள்ளிக்கொண்டே போவதற்கு ஜாதகப்படி உள்ள காரணங்களில் சில:

1. ஏழாம் வீட்டதிபதி நீசம் பெற்றிருந்தாலும் அல்லது வக்கிரகதியில் இருந்தாலும் அல்லது அஸ்தமனம் ஆகியிருந்தாலும் திருமணம் தாமதப்படும்.

2. ஏழாம் வீட்டதிபதி 12ல் மறைந்திருப்பதோடு, ஏழாம் வீட்டில் சனி வந்து குடியிருக்கும் அமைப்புள்ள ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்குத் திருமணம் தாமதப்படும்.

3. ஏழாம் வீட்டதிபதி எட்டாம் வீட்டில், எட்டாம் அதிபதியுடனும், சனியுடனும் கூட்டாக இருந்தால் திருமணம் தாமதப்படும்.

4. ஒன்று & ஏழாம் வீடுகளின் மேல் (1/7 house axis) சனி, மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் இருந்தால் திருமணம் தாமதப்படும். (லக்கினத்தில் செவ்வாய் அல்லது சனி இருந்தால், அவர்களுடைய நேரடிப்பார்வை ஏழாம்
வீட்டின் மேல் விழுந்து ஜாதகனின் திருமணத்தைத் தாமதப்படுத்தும்)

5. அதேபோல இரண்டு & எட்டாம் வீடுகளின் மேல் (2/8 house axis) சனி, மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் இருந்தாலும் திருமணம் தாமதப்படும்.

6. சுபக்கிரகங்கள் வக்கிரகதியில் இருந்தாலும் திருமணம் தாமதப்படும்.

7. சுக்கிரன் அஸ்தமனமாகியிருந்தால் திருமணம் தாமதப்படும்.

8. ஏழாம் அதிபதி ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங்களின் பார்வையில் இருந்தாலும் திருமணம் தாமதப்படும்.

9. ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் தாமதமான திருமணம்!

10. மிதுனம் அல்லது சிம்மம் அல்லது கன்னி ராசி ஆகிய இடங்கள் ஏழாம் வீடாக இருந்து, அங்கு சனி வந்து டென்ட் அடித்து இருந்தால் திருமணம் தாமதப்படும்.

11.சூரியனும், சுக்கிரனும் கூட்டாக மிதுனம் அல்லது சிம்மம் அல்லது கன்னி ராசியில் இருந்தால் ஜாதகனுக்குத் தாமதமாகத் திருமணம் நடைபெறும். அதுவே பெண்ணின் ஜாதகமாக இருந்தால் ஜாதகி திருமண வாழ்வு
வேண்டாம் எனக் கூறிவிடுவாள்.

12. சனி அல்லது செவ்வாய் ஏழாம் வீட்டில் இருந்தால், ஜாதகன் அல்லது ஜாதகியின் திருமணம் தாமதப்படுவதோடு, அவர்கள் தங்களைவிட வயதில் மூத்தவரைத் திருமணம் செய்து கொள்ள நேரிடும்.

இந்த அவலங்களில் இருந்து ஜாதகனை மீட்டு, அவனுக்குத் திருமணத்தை நடத்திவைக்கக்கூடிய ஒரே கிரகம் குரு பகவான் ஆவார். ஆகவே உரிய காலத்தில் திருமணமாகாமல் தவிப்பவர்கள். தினமும் குரு பகவானை
வழிபடுவது நல்ல பலனைத்தரும்.

இதெல்லாம் பொதுவிதிகள். தனி நபர்களின் ஜாதகத்தில் உள்ள வேறு சில நல்ல அமைப்புக்களை வைத்து இந்த விதிகள் தள்ளுபடியாகிவிடும் வாய்ப்புக்கள் உண்டு. ஆகவே யாரும் குழப்பம் அடைய வேண்டாம்.
குறிப்பாகப் பெண் வாசகர்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

10.2.10

என்ன சொல்லிவிட்டுப்போனார் சாணக்கியர்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++
என்ன சொல்லிவிட்டுப்போனார் சாணக்கியர்?

2,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் சாணக்கியர்.இந்திய வரலாற்றில்
அவருக்கு ஒரு முக்கியமான இடம் எப்போதும் உண்டு.

அவர் அசத்தலாகச் சொன்னது:

“மிகவும் நேர்மையாக இருக்காதே. நேராக வளர்ந்த மரங்களுக்குச் சமம் அது. நேராக வளர்ந்த நெடிய மரங்கள்தான் முதலில் வெட்டுக்கு இறையாகும். நேர்மையாளர்களும் அப்படித்தான் வெட்டப்படுவார்கள்”

கலியுகத்திற்கு இது பொருத்தமாக உள்ளது:-)))))

சாணக்கியர் சொன்ன மற்ற பொன்மொழிகளையும் கீழே கொடுத்துள்ளேன். படித்துப்பாருங்கள். மின்னஞ்சலில் வந்தது. மொழியாக்கம் செய்ய நேரமில்லை!
---------------------------------------------------
1
"A person should not be too honest.
Straight trees are cut first
And Honest people are screwed first."

**********
2
"Even if a snake is not poisonous,
It should pretend to be venomous."

**********
3
"The biggest guru-mantra is: Never share your secrets with anybody.
If you cannot keep secret with you , do not expect that other will keep it!
It will destroy you."

**********
4
"There is some self-interest behind every friendship.
There is no Friendship without self-interests.
This is a bitter truth."

**********
5
"Before you start some work, always ask yourself three questions -
Why am I doing it, What the results might be and Will I be successful.
Only when you think deeply and find satisfactory answers to these questions,
go ahead."

**********
6
"As soon as the fear approaches near, attack and destroy it."

**********
7
"Once you start a working on something,
Don't be afraid of failure and
Don't abandon it.
People who work sincerely are the happiest."

**********
8
"The fragrance of flowers spreads
Only in the direction of the wind.
But the goodness of a person spreads in all direction."

**********
9
"A man is great by deeds, not by birth."

**********
10
"Treat your kid like a darling for the first five years.
For the next five years, scold them.
By the time they turn sixteen, treat them like a friend.
Your grown up children are your best friends."

**********
11
"Education is the best friend.
An educated person is respected everywhere.
Education beats the beauty and the youth."

---------------------------------------
Chānakya (Sanskrit: चाणक्य Cāṇakya) (c. 350–283 BCE) (Indian politician, strategist and writer) was an adviser and prime minister[1] to the first Maurya Emperor Chandragupta (c. 340-293 BCE), and was the chief architect of his rise to power. Kautilya and Vishnugupta, the names by which the ancient Indian political treatise called the Arthaśāstra identifies its author, are traditionally identified with Chanakya. Chanakya has been considered as the pioneer of the field of economics and political science, having first written about the subject a millennium and a half before Ibn Khaldun's Muqaddimah. In the western world, he has been referred to as The Indian Machiavelli, although Chanakya's works pre-date Machiavelli's by about 1,800 years. Chanakya was a teacher at Takshashila monastery and was responsible for the creation of Mauryan empire, the first of its kind on the Indian subcontinent.
============================================
அன்புடன்
வாத்தியார்





வாழ்க வளமுடன்!

9.2.10

இச்சைகளின் அளவு என்ன?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இச்சைகளின் அளவு என்ன?

கேள்வியும் நானே - பதிலும் நானே! பகுதி 2
-------------------------------------------------------
3. ஒழுக்கமின்மைக்கு உள்ள ஜாதக அமைப்பு என்ன? (What is the planetary position for immorality?)

ஒழுக்கம் = தனி மனிதன் கடைப்பிடிக்கும் நெறி. உரிய முறையில் நடந்து கொள்ளுதல். High moral standard discipline, good conduct.

ஒழுக்கமின்மை என்பது மேற்சொன்னவைகள் இல்லாத நிலைமை.

immoral என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு என்ன பொருள்? ஒழுக்கமின்மை என்று பொருள்.

1. not in conformity with accepted principles of right and wrong behaviour
2. not in conformity with the accepted standards of proper sexual behaviour; unchaste
3. wicked

இதைத்தமிழில் விவரித்துச் சொன்னால்: முறை தவறி நடப்பவன். ஒழுங்கீனமானவன். தவறாக நடப்பவன். முறையற்ற புணர்ச்சியில் ஈடுபாடு கொண்டவன். உங்கள் மொழியில் சொன்னால், எல்லோருக்கும் அல்வாக் கொடுப்பவன். குறிப்பாக வலையில் சிக்கும் பெண்களுக்கு அல்வாக் கொடுப்பவன் என்று கொள்ளலாம்.

சுருக்கமாகச் சொன்னால் சிதறிய நியாயங்களை, நியதிகளை ( Loose morals) உடையவன்.

Planetary combination for loose morals

1. சுக்கிரனும், புதனும் சேர்ந்து அல்லது கூட்டணி போட்டு ஜாதகத்தில் 7ஆம் வீடு, அல்லது 8ஆம் வீடு அல்லது 10ஆம் வீட்டில் இருப்பது.

2.செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்து அல்லது கூட்டணி போட்டு ஜாதகத்தில் 7ஆம் வீடு அல்லது 10ஆம் வீட்டில் இருப்பது.

3. சந்திரனுக்குப் பத்தாம் வீட்டில் சுக்கிரனும் அல்லது சுக்கிரனுக்குப் பத்தாம் வீட்டில் சனியும் இருந்தாலும் ஆசாமி பெண்களுக்கு அல்வா கொடுப்பவன்தான்.

4. ஆறாம் அதிபதி, ஆறு அல்லது எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் இருக்கும் நிலைமை!

5. இரண்டு, ஏழு, பத்தாம் வீட்டு அதிபதிகள் ஒன்று சேர்ந்து பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் நிலைமை!

6. ஏழாம் வீட்டதிபதி ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்து, வேறு ஒரு தீய கிரகத்தின் பார்வையுடன் இருக்கும் நிலைமை!

7.சுக்கிரன் சனியின் வீட்டில் இருப்பதுடன், சனியின் பார்வையோடு இருக்கும் நிலைமை. அல்லது சுக்கிரன் செவ்வாயின் வீட்டில் இருப்பதுடன், செவ்வாயின் பார்வையோடு இருக்கும் நிலைமை!

8.ஏழாம் வீட்டதிபதி லக்கினத்தில் இருந்தாலும் அல்லது ஏழிலேயே குடியிருந்தாலும் அதே நிலைப்பாடுதான்

9.ஏழாம் அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டாம் வீட்டில் இருக்கும் நிலைமை

10.லக்கினத்தில் இருந்து ஏழாம் வீட்டில் சூரியன் இருக்கும் நிலைமை!

11.லக்கினாதிபதியும், ஆறாம் அதிபதியும் ஒன்றாக வேறு ஒரு தீயகிரகத்துடன் சேர்ந்திருக்கும் நிலைமை

12.தேய்பிறைச் சந்திரனும், ஒரு தீய கிரகமும் ஒன்றாக ஏழாம் வீட்டில் இருக்கும் நிலைப்பாடு

13.ஏழாம் அதிபதியும், ஒரு தீயகிரகமும் கூட்டாக ஜாதகத்தில் எங்கே இருந்தாலும் அந்த நிலைப்பாடு!

14.சந்திரன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்கள் கூட்டணி ஒரு இடத்தில் இருக்கும் நிலைமை!

15.ஏழில் புதன் இருந்து அது அதன் சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இல்லாது இருக்கும் நிலைமை!

16.சுக்கிரனும், ஏழாம் வீட்டதிபனும் ஒன்றாக செவ்வாய்க்கு உரிய இடத்தில் (அதாவது மேஷம் அல்லது விருச்சிகத்தில்) இருக்கும் நிலைமை!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
என்ன தலையைச் சுற்றுகிறதா?

இதைப் படித்தவுடன், சிலருக்கு சந்தேகம் வரலாம். இந்த அமைப்பில்லாத ஜாதகம் இருக்குமா,என்ன?

75% சதவிகித ஜாதகங்களில் இந்த அமைப்புக்களில் ஒன்றாவது இருக்கும்.

சைட் அடிக்காத அல்லது லுக் விடாத மனிதன் உண்டா? ஒரு அழகான பெண்ணைக் கண்டவுடன், அவளை அடைய வேண்டுமென்று ஆசைப்படாத அல்லது ஏக்கம் கொள்ளாத மனம் உண்டா?

நான் அப்படியில்லை என்று ஒரு இளைஞன் சொன்னால் அவன் பொய் சொல்கிறான் என்று அர்த்தம்

அது இயற்கை: பெண்ணின் மேல் ஆணிற்கு ஒரு ஈர்ப்பு இருக்க வேண்டும் என்பதற்காகக் காலன் செய்து வைத்துள்ள சதி!

சரி,அங்கே ஒழுக்கமின்மை எங்கே வருகிறது?

ஒன்றிற்கும் மேற்பட்ட பெண்ணுடன் தொடர்பு வைக்கும்போதும், அல்லது தொட்டுப்பார்க்கும் போதும், அல்லது சாய்க்கும் போதும், பிறன் மனை நோக்கா பேராண்மை தவறும்போதும் அங்கே ஒழுக்கமின்மை வந்து நின்றுவிடும்.

மனிதர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மோசமானவர்கள். அதீத இச்சைகளை உடையவர்கள். சிலர் தங்கள் சாமர்த்தியத்தால், அது வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வார்கள்.

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும். Everyone wants to sleep with other man's wife என்னும் பழமொழிகள் உலவுவதை யாரும் மறக்க வேண்டாம்.

அந்த இச்சைகளின் (ஒழுக்கமின்மையின்) அளவு ஆளாளுக்கு வேறுபடும். ஜாதகத்தின் மற்ற தன்மைகளை வைத்து வேறுபடும். சாரசரிக்கு கூடவோ அல்லது குறைவாகவோ பலருக்கும் இருக்கும்.

சிலர் 14 அல்லது 18 வயது முதல் டண்டணக்கா டணக்குணக்கா அடிக்கும் கடைசி நிமிடம் வரை ஒழுக்கம் இல்லாமல் இருந்துவிட்டுப் போய்ச் சேர்வார்கள். சிலர் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு திருந்தி ஒழுக்க சீலர்களாக வாழ்ந்து,பெயரெடுத்துவிட்டுப் போவார்கள். அது அவரவர்கள் வாங்கி வந்த வரம்

”பெண்களுக்கும் இதே விதிகள் பொருந்துமா?” என்று கடைசிப் பெஞ்ச் கண்மணிகள் யாரேனும் பின்னூட்டம் இட வேண்டாம். பெண்களுக்குக் கால் செருப்பின் அளவு வேறுபடுவதைப்போல - உங்கள் மொழியில் சொன்னால் உடலில் வளைவு நெளிவுகள் வேறு படுவதைப்போல பல விதிகள் வேறுபடும். அவை ஏன்? எதனால் என்பதைப் பற்றி பெண்களுக்கான விஷேச ஜாதக அமைப்புக்கள் என்கின்ற பாடத்தை நடத்தும் போது விவரிக்கிறேன். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்.

பாடம் ஓக்கேயா?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

8.2.10

கேள்வியும் நானே - பதிலும் நானே!

------------------------------------------------------------------------
கேள்வியும் நானே - பதிலும் நானே!

பகுதி 1
-------------------------------------------------------
1.இரட்டைப் பிறவிகளின் ஜாதகம் எப்படி வேறுபடுகிறது?

கால சந்திப்பைத் தவிர்த்து மற்ற நேரங்களில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளின் ஜாதகங்கள் பார்வைக்கு ஒன்றாக இருக்கும். ராசி & நவாம்சம் இரண்டும் அச்சர சுத்தமாக ஒன்றுபோல இருக்கும்.

ஆனால் நாடிச் சக்கரம் வேறுபடும். ஒவ்வொரு ராசிக்கும் 150 நாடிகள் உண்டு. ஒரு ராசியின் பாகைகள் 30 என்னும்போது 30 வகுத்தல் 150 பிரிவுகள் நாடியில் வரும். அதாவது 120 நிமிடங்கள் வகுத்தல் 150 நாடிகள்.48 விநாடிகளுக்கு ஒரு நாடி என்றாகும். உதய லக்கினத்தை வைத்து, அதில் இருக்கும் முதல் நாடியின் அளவு 8 முதல் 115 வினாடிகள் வரை வரலாம். அதனால் இரட்டைப் பிறவிகளின் ஜாதகங்கள் வேறுபடும்.அவர்களின் தலை எழுத்தும் வேறுபடும். வடமொழி நூல்களில் இந்த நாடியைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளது என்பார்கள். ஆனால் ஆங்கில் மொழிபெயர்ப்புக்களில் படிக்கக் கிடைக்கவில்லை. தேடினால் கிடைக்கலாம். KP Stellar System of Astrology
யில் இரட்டைப் பிறவிகளுக்கான ஜாதகத்தைக் கணிக்கும் முறை கொடுக்கப்பட்டுள்ளது என்பார்கள். நம் வகுப்பிற்கு ஜோதிடத்தை நன்கு அறிந்தவர்கள் பலர் வருகிறார்கள். அவர்களில் ஒருவர் இந்தக் கேபி முறையைப் பற்றிய செய்தியைக் கொடுத்தால், அது அனைவருக்கும் பயன்படும்.

புதன் இரட்டைப் பிறவிகளுக்கான கிரகம். உபய ராசிகள் (Dual signs) மிதுனம் (Gemini), கன்னி (Virgo), தனுசு (Sagittarius), மீனம் (Pisces) போன்ற ராசிகளும் இரட்டைப் பிறவிகளுக்கான ராசிகள். இந்த ராசிகளின் அதிக பட்ச ஆதிக்கத்தில் பிறந்த குழந்தைகள் இரட்டை பிறவிகளாக இருக்கும் என்பார்கள்.

அதேபோல பெற்றோர்களின் ஜாதகத்தில், ஐந்தாம் வீட்டின் மேல் உபய ராசிகளின் (Dual signs) ஆதிக்கம் இருந்தாலும் அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு இருக்கும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
2. ஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வது?

நான்காம் வீடு கல்விக்கான இடம். ஐந்தாம்வீடு மனம் மற்றும் நுண்ணறிவிற்கான இடம். இரண்டாம் வீடு வாக்கு ஸ்தானம். ஆகவே இந்த மூன்று வீடுகளையும் அலசினால், ஜாதகனின் கல்வியைப் பற்றி அறிந்துகொள்ளலாம். அதோடு அந்த வீட்டு அதிபர்கள், காரகன் புதனின் நிலைமைகளையும் நன்கு அலச வேண்டும்.
சூரியன் - தத்துவப் பாடங்கள், நிர்வாகப் படிப்புக்களுக்கு அதிபதி
சந்திரன் - மருந்துகள்
செவ்வாய் - அறுவை சிகிச்சைகள், விவசாயம்
புதன் - கணிதம்
குரு - இலக்கியம், வானவியல்
சனி - சரித்திரம், அரசியல் என்று கிரகங்களையும், அதன் கூட்டணிகளையும் வைத்து, ஜாதகன் படிக்கும் துறையை அல்லது என்ன படிப்பு அவனுக்கு ஒத்து வரும் என்பதையும் அலசலாம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

இதன் அடுத்த பகுதி, அடுத்த திங்கட்கிழமையன்று வரும்.

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

5.2.10

வாத்தியாரின் வேண்டுகோள்!

+++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியாரின் வேண்டுகோள்!

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும், ஜோதிடப் பத்தகத்தின் முதல்கட்ட வேலை முடிந்துவிட்டது. அடுத்து இரண்டு கட்ட வேலைகளும் இரண்டு மாதங்களுக்குள் முடிந்துவிடும்.

புத்தகம் ஏப்ரல் மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாவது மாதம் முடிந்து, வெளியீட்டுற்குத் தயாராகி விடும். வகுப்பறை மாணவர்களுக்குத்தான் முன்னுரிமை. அவர்களுக்குக் கொடுத்தது/ அனுப்பியது போக மீதம் உள்ள பிரதிகள்தான் எனது நண்பர்கள்/ மற்றும் உறவினர்களுக்கு! அனேகமாக வெளி விற்பனை (Book Stand Copies) இருக்காது. அப்படி வெளிவிற்பனைக்கு யாரேனும் கேட்டு வந்தால், அது இரண்டாம் பதிப்பு வெளியிட்டால் மட்டுமே சாத்தியப்படும்.

பதிவுகள் எழுதத்துவங்கிய சமயத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் என்னை எச்சரித்தார் (அவர் ஒரு பிரபலமான எழுத்தாளர். தமிழ்நாடறிந்த எழுத்தாளர். இதுவரைக்கும் இருபதிற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அவருடைய நூல்கள் வெளிவந்து அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன என்பது கூடுதல் செய்தி). இணையப் பதிவுகளில் பாதுகாப்பு இல்லை. உங்கள் ஆக்கங்கள் திருடப்படலாம் என்றார்.

யாரும் பிறக்கும்போதே முழு ஜோதிட ஞானத்துடன் பிறப்பதில்லை. ஜோதிடக் குடும்பங்களில் பிறந்தவர்கள் தங்கள் தந்தையார் மூலமாகவும், மற்றவர்கள் காலப்பிரகாசிகா, சரவளி, ஜோதிட சிந்தாமணி, குமார சுவாமியம், புலிப்பாணி ஜோதிடம் போன்று பல நூல்களைப் படித்துதான் ஜோதிட அறிவைப் பெறுகின்றார்கள். நானும் பல நூல்களைப் படித்துத்தான் ஜோதிடத்தில் ஒரளவு தேர்ச்சி பெற்றேன். ஜோதிடம் என்பது கடல். அதில் முழுத் தேர்ச்சி பெறுவது என்பது சுலபமல்ல.

நானும், நான் கற்றவைகள், என் அனுபவங்கள் மற்றவர்களுக்கும் பயன்படட்டும், குறிப்பாக அடுத்த தலைமுறையினருக்குப் பயன் படட்டும் என்றுதான் பதிவில் எழுதி வருகிறேன். எனது ஜோதிட ஆக்கங்களில் ஜோதிடக் குறிப்புக்களை மட்டும் ஒருவர் திருடமுடியுமே தவிர, என்னுடைய நடையில் எழுதப் பெற்றுள்ள மொத்த எழுத்துக்களையும், சொந்த அனுபவச் செய்திகளையும் ஒருவரால் வேறு வழிகளில் பயன்படுத்த முடியாது. அது எனக்கு நன்றாகத் தெரியும்.

அதோடு, சிலவற்றைத் திருடி என்னால் ஒருவர் பயனடைய முடியும் என்றால், பயனடைந்துவிட்டுப் போகட்டும் என்னும் மாறுபட்ட சிந்தனையுடன்தான் பதிவில் கடந்த 3 ஆண்டுகளாக நான் எழுதி வருகிறேன். இப்போது பல மாணவர்களின் வேண்டுகோளூக்கு இணங்கப் பத்தகமாக வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.

ஜோதிடம் என் தொழில் அல்ல! பதிப்பித்துப் புத்தகங்களை வெளியிடுவதும் என் தொழில் அல்ல! இறையருளால் எனக்கு வேறு ஒரு நல்ல தொழில் இருக்கிறது. ஒரு ஆர்வக்கோளாறால் இவற்றைச் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய அரிய நேரம் அதில் செலவாகிறது என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் ஒரு மனத்திருப்திக்காக அந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறேன்.

2,000ற்கும் மேற்பட்ட வாகர்களையும், இன்றையத் தேதியில் சுமார் 1249 பின் தொடர்பவர்களையும் (Followers) நான் பெற்றுள்ளேன். அதுவே எனக்குக் கிடைத்த முதல் பிரதிபலனாக நான் எண்ணுகிறேன். உங்களின் அன்பைவிட உயர்ந்த பிரதிபலன் வேறு எதுவும் கிடையாது.

என்னுடைய ஜோதிடப் புத்தகங்களை, விருப்பமுள்ளவர்கள் மட்டும் வாங்கிக் கொள்ளலாம். மற்றவர்கள் பதிவில் இருந்து தாங்கள் பிரதி எடுத்து வைத்திருக்கும் பக்கங்களையே பயன் படுத்திக்கொள்ளலாம்.

ஜோதிடப் புத்தகத்திற்கும், பதிவில் உள்ள ஆக்கங்களுக்கும் என்ன வித்தியாசம்?

90% பதிவில் உள்ளவைகள்தான் புத்தகத்தில் வரப்போகின்றன. எல்லாப் பாடங்களும் முறைப்படுத்தப் பெற்று, பகுதிகள் பிரிக்கப் பெற்றுப் படிப்பதற்கு வசதியான முறையில், பொருளடக்கம், குறிச்சொற்களுடன் புத்தகத்தில் வரப்போகின்றன.

முதலில் பத்தகங்களைப் பெரிய அளவில் ஒவ்வொன்றும் சுமார் 480 பக்கங்கள் இருக்கும்படியாக இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் வெளியிட எண்ணி யிருந்தேன். இப்போது அவ்வெண்ணத்தை மாற்றிக்கொண்டு, எனது மானசீக ஆசான் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள இந்துமதம் நூல்களின் பத்து பாகங்களைப் போல என்னுடைய ஜோதிட நூல்களையும் பத்து பாகங்களாக வெளியிட எண்ணியுள்ளேன்.

ஒவ்வொரு பாகமும், சுமார் 100 பக்கங்களில் இருந்து 160 பக்கங்கள் வரை மட்டுமே இருக்கும் படியாக வெளியிட எண்ணியுள்ளேன்.

அறிமுகம், ஜோதிடம் வந்தவழி, ஜோதிட ஆதாரங்கள், அடிப்படைப் பாடங்கள், நவக்கிரகங்கள், (பன்னிரண்டு) வீடுகள், தசாபுத்திப் பலன்கள், அஷ்டகவர்க்கம், யோகங்கள், ஜோதிடநுட்பங்கள் மற்றும் அலசல்கள், கேள்வி பதில்கள் என்பது போன்ற தலைப்பில் புத்தகங்கள் இருக்கும். படிப்பவர்களுக்கு அது வசதியாகவும் இருக்கும்.

முதலில் ஐந்து பாகங்களும், இரண்டு மாத இடைவெளியில் மீதமுள்ள பாகங்களும் வெளியாகும். புத்தகங்கள் அனைத்தும் படிப்பதற்கு எளிமையாகவும், சுவாரசியம் குறையாமலும் இருக்கும்.

புத்தகங்கள் அச்சாகி முடிந்தவுடன், ஒவ்வொன்றின் பக்கங்களும், விலையும் பதிவில் முறையாக வெளிடப்படும். விருப்பமுள்ளவர்கள் மட்டும் வாங்கிக் கொள்ளலாம். வாங்குபவர்களுக்கு, அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும், பதிவு அஞ்சலில் (by registered post) அவைகள் வந்து சேரும். அஞ்சலில் அனுப்பியவுடன், அதற்காக ரசீது scan செய்ப்பட்டு, அவர்களுக்கு அனுப்பிய தேதியுடன் மின்னஞ்சல் மூலமாகத் தெரிவிக்கப்படும்.

பத்தகங்களில் சில ஆச்சரியங்கள் இருக்கும். அது இப்போதைக்கு சஸ்பென்ஸாக இருக்கட்டும். புத்தகங்கள் உங்கள் கைக்கு வந்தவுடன், அதைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

புத்தகத்தில் உங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும். அதனால் புத்தகங்களில் வகுப்பறையைப் பற்றியும், (இதுவரை நடத்திய) பாடங்களைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும் வெளியிட விரும்புகிறேன். விருப்பம் உள்ளவர்கள் எழுதி, மின்னஞ்சலில் அனுப்புங்கள். இரண்டு பக்கங்களுக்குமிகாமல் (1/8 sizeல் 2 பக்கங்கள் A4 sizeல் ஒருபக்கம் - புரியும்படியாகச் சொன்னால் Computer Screen Shot சைஸில் இரண்டு பக்கங்கள்) எழுதியனுப்புங்கள்.

வகுப்பறையில் ஆறு மாதங்களாக அல்லது அதற்கு முன்னதாகச் சேர்ந்து படிப்பவர்கள் மட்டுமே எழுதுங்கள். உங்கள் கருத்துக்கள், உங்கள் புகைப்படம், புனைப்பெயர், வயது, வசிக்கும் ஊர், மற்றும் உங்கள் மின்னஞ்சல் முகவரியுடன் வெள்ளியிடப்படும். ஒரு புத்தகத்திற்கு, 6 பேர்களின் கடிதம் வீதம், மொத்தம் 60 அன்பர்களின் கடிதங்கள் வெளியிடப்படும்.

MRK சார், உண்மைத்தமிழன், நாமக்கல் சிபி, ஆனந்த், ஆலாசியம்கோ, துபாய் டி.கண்ணன், தில்லி உமா, கனடா தனுஜா, போன்ற சீனியர் வாசகர் களிடமிருந்தும் அக்கடிதங்களை எதிர்பார்க்கிறேன். பத்து தினக்களுக்குள் எழுதியனுப்புங்கள்.

எனக்கு, வாத்தியார் பட்டத்தைக் கொடுத்து, அதன் காரணமாக வகுப்பறையைத் துவங்குவதற்குக் காரணமாக இருந்த இருவரின் கடிதகங்களும் வெளியிடப்படும். அவர்களையும் எழுதி அனுப்ப வேண்டுகிறேன்.

நன்றி, வணக்கத்துடன்
வாத்தியார்.
++++++++++++++++++++++++++++++++++++
முன்பதிவின் அடுத்த பகுதி!

அதைப்படிக்காதவர்கள் அதைப் படித்துவிட்டுப் பிறகு கீழே உள்ளதைப் படிக்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். அதற்கான சுட்டி இங்கே உள்ளது!
___________________________________________

அடுத்து நடந்தது என்ன?

அடுத்த நாள் காலையில், அதே நண்பன் திரும்பி வந்தான். வந்தவன் நம் ஆசாமியிடம் சொன்னான்:

“பெண்களை ஏற்றிக் கொண்டுவரும் கப்பல், இன்று மாலை வந்துவிடும். நீ உன் கணக்கிற்கு முந்நூறு ரூபாய்கள் தர வேண்டும்”

முந்நூறு என்பது பெரிய தொகை (ஒரு பவுன் பதின்மூன்று ரூபாயாக இருந்த காலம்) நம்ம ஆள் முதல் நாளே யோசித்து வைத்திருந்தான். முற்றிலும் இலவசம் என்றால் பரவாயில்லை. உள்ளடி வேலையாக இருந்தால்
என்ன பதில் சொல்வது என்று யோசித்து வைத்திருந்தான்.

உடனே பதில் சொன்னான்.

“பெண்களெல்லாம் இலவசமில்லையா?”

”இலவசம்தான். ஆனால் அவர்களை ஏற்றிக் கொண்டுவந்த கப்பல் கட்டணம் - தலைக்கு நூறு ரூபாய் வீதம் மூன்று பெண்களுக்கு வீதம் முந்நூறு ரூபாய் செலுத்த வேண்டும்”

“எனக்கு வேண்டாம். ஆர்டரைக் கேன்சல் செய்துவிடு.”

“ஏன் பணத்திற்காக வேண்டாம் என்கிறாயா?”

“பணத்திற்காக இல்லை. இரவு யோசித்துப் பார்த்தேன். வேண்டாமென்று இரவே முடிவு செய்து வைத்திருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன்”

”இதுக்கு என்ன கணக்கு?”

“புண்ணாகுக் கணக்கு! பெரிதாகக் கணக்கு ஒன்றுமில்லை. நீயும் யோசித்தாயென்றால், உனக்கும் விளங்கும்”

“உன் வாயால் நீயே சொல்.நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்”

“எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. என் அப்பாவிற்கு வயதாகிவிட்டது. என் தம்பி சின்னப் பயல். அதனால் சரிப்பட்டுவராது என்றுதான் வேண்டாம் என்கிறேன்”

வந்த நண்பன் ஒரு நமுட்டுச் சிரிப்பை உதிர்த்துவிட்டுச் சென்றுவிட்டான்.

தன் நண்பனின் வரக் கஞ்சத்தனத்தைப் பற்றி அவனுக்குத் தெரியாதா என்ன?
-------------------------------------------------------------------------
அதென்ன வரக் கஞ்சத்தனம்.

வரக்காப்பி என்று பால் இல்லாத காப்பியைக் கிராமங்களில் குடிப்பார்கள். அதுபோல வரக் கஞ்சத்தனம் என்பது.....காசிற்காக எதையும் பறிகொடுக்கும் அல்லது அனுபவிக்காமல் கடாசிவிடும் அல்லது நன்மை தீமைகளை நினைத்துப் பார்க்க மறுக்கும் கஞ்சத்தனம்

(தொடரும்)
------------------------------------------------
அவசர வேலையாக வேலையாக வெளியூர் சென்றமையால், நேற்று வகுப்பறைக்கு வரமுடியாமல் போய்விட்டது.


வாழ்க வளமுடன்!

3.2.10

மனமே மயக்கம் கொள்ளாதே!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மனமே மயக்கம் கொள்ளாதே!

மனதை நெறிப்படுத்தும் தொடர் - பகுதி 1

"எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே - அவன்
நல்லவனாவதும், தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே!”
- கவியரசர் கண்ணதாசன்

எல்லா மனிதர்களும் நல்லவர்களே! அந்தரு மஞ்ச்சிவாரே!’ என்று அதைத்தான் ஆந்திரத்திலும் சொல்வார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒரு மனிதனால் நல்லவனாக நடக்க முடியாமல் போய்விடலாம். அதற்கு அவன் என்ன செய்வான் பாவம்?

மனிதர்களில் வித்தியாசம் இல்லை. மழைத்துளியில், மழை நீரில் வித்தியாசமில்லை. அது விழுகும் அல்லது பெய்யும் இடத்தை வைத்து அதன் தன்மை மாறிவிடும். வயலில் பெய்தால் பயிருக்கு நீராகும். குளத்தில் விழுந்தால், குடிப்பதற்குப் பயன்படும். தெருக்களில் பெய்தால், நகரம் சுத்தமாகும். அதுவே சாக்கடையில் பெய்தால், யாருக்கும் பயன்படாது. அதுபோலத்தான் மனித வாழ்க்கையும்.

கிடைக்கும் சந்தர்ப்பங்களை வைத்துத்தான் ஒரு மனிதனின் உயர்ச்சியும், தாழ்ச்சியும் இருக்க முடியும்

கவியரசரின் வரிகளில் கடைசியில் உள்ள இரண்டு வார்த்தைகளை மாற்றிப் பார்த்தால், மனிதர்களின் இன்றைய வாழ்க்கைக்கு அது சரியாக இருக்கும்

”நல்லவனாவதும், தீயவனாவதும் சந்தர்ப்பம் வாய்ப்பதிலே!”
___________________________________________
மனிதர்களில் வித்தியாசமில்லை என்றாலும் மனித மனங்களில் வித்தியாசம் இருக்கிறது. அதற்கு சந்தர்ப்ப சூழ்நிலையைச் சுட்டிக் காட்ட முடியாது. ஒருவன் கஞ்சனாக இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள் அல்லது ஊதாரியாக இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதற்கு யார் காரணம்? சந்தர்ப்ப சூழ்நிலைகளா? இல்லை, அதற்கு அவனுடைய மனம் மட்டுமே காரணம்!

ஊதாரிக்கும் (spend drift), கஞ்சனுக்கும் (miser) என்ன வித்தியாசம்?

ஊதாரி வருங்காலப் பிச்சைக்காரன். கஞ்சன் என்றுமே பிச்சைக்காரன்.

கஞ்சன் என்றுமே தன்னைக் கஞ்சன் என்று ஒப்புக்கொள்ள மாட்டான். சிக்கனமாக இருக்கிறேன் என்பான்.காந்தியைப்போல எளிமையாக இருக்கிறேன் என்பான்.

இந்தச் சிக்கனம் எனும் பெயரில் உலாவும் கஞ்சத்தனத்திற்கு ஒரு குட்டிக் கதை உள்ளது.
_____________________________________________________

எண்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்.
(இதைக் கடைசிவரை நினைவில் வையுங்கள்)

ஒரு செல்வந்தர் இருந்தார். அளவிட முடியாத பணக்காரர். ஒரு நண்பன் வந்து அவரிடம் இப்படிச் சொன்னான்:

”பக்கத்து நாட்டிலிருந்து ஆயிரம் இளம் பெண்கள் வருகிறார்கள்.”

”எதற்கு?” நம்ம ஆள் கேட்டான்.(அவனுக்கு வயது 30 தான். ஏகாரத்தில் சொல்வதால் தவறில்லை)

”வேலைக்குத்தான். அவர்கள் நாட்டில் வறட்சி. வேலையில்லாத் திண்டாட்டம். உயிர் வாழ்ந்தால் போதும் என்கின்ற நிலைமை. வேலை தேடி வருகிறார்கள்.”

”இங்கே வேலைக்குத்தான் வேண்டிய ஆட்கள் கிடைக்கிறதே!”

”இல்லை. அவர்களுக்கு சம்பளம் தேவைப்படாது. இருக்க இடம். உடுக்க உடை, உண்ண உணவு கொடுத்து வைத்துக் கொண்டால் போதும்”

”சம்பளத்தைவிட, அதற்கு அதிகம் செல்வாகுமே!”

”புரியாமல் பேசாதே! அவர்கள் எல்லா வேலைக்கும் லாயக்கானவர்கள். எல்லா வேலைக்கும் உடன் படுவார்கள். அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு பேசு”

”சரி, சரி! அவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்?”

”கேட்கிறவர்களுக்குக் கேட்கிற எண்ணிக்கையில் கொடுக்கப் போகிறோம்.”

”அப்படியானால் சரி, எனக்கு மூன்று பெண்கள். ஏற்பாடு செய்!”

“மூன்று பெண்களா? என்ன கணக்கு?”

“எனக்கு ஒன்று. என் அப்பாவிற்கு ஒன்று. என் தம்பிக்கு ஒன்று!”

வந்தவன் குறித்துக் கொண்டு போய்விட்டான்
++++++++++++++++++++++++++++++++++++
அடுத்து நடந்தது என்ன?

(தொடரும்)






வாழ்க வளமுடன்!

2.2.10

Doubt: தென்காசி செல்லும் பஸ்ஸில் ஏறி, பழநிக்கு டிக்கெட் கேட்டால் என்ன ஆகும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: தென்காசி செல்லும் பஸ்ஸில் ஏறி, பழநிக்கு டிக்கெட் கேட்டால் என்ன ஆகும்?

Doubts: கேள்வி பதில் பகுதி 24

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் இருபத்திநான்கு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
email.No.96
அருள் முருகன்

Sir
I humbly request you to clarify my doubts.

1) Generally speaking suyabukthi will not do good to a person. The same would be the
case with Guru dasa Guru bukthi. In such a case how long will Guru dasa Sani bukti take in its 2 1/2 periodto provide relief to a person if generally speaking the person had suffered a lot in Rahu dasa ?

குரு தசையில் சனி புத்தி 30 மாதங்கள், 12 நாட்கள். அதுவும் சுமாராகத்தான் இருக்கும். அதற்கு அடுத்துவரும் குரு தசை புதன் புத்தி நன்மைகளை உடையதாக இருக்கும்! ராகு தசையில் கஷ்டப்பட்டீர்கள் என்பதற்காக அடுத்துவரும் தசா புத்திகள் தங்கள் விதிகளை மீறி செயல் படாது!

2) Generally speaking if a persons maternal uncle (mothers brother) plays an important role
in a persons upbringing(right from childhood days of the kid), will it be possible to find it
from the kids horoscope ?

தாய்வழி உறவுகளைப் பற்றியும், அவர்களுடன் உள்ள சுமூக உறவுகளைப் பற்றியும் 4ஆம் வீட்டை வைத்து ஒரளவிற்குத் தெரியும். தாய் மாமா, பாசமலர் சிவாஜி போல இருப்பாரா? கை வீசம்மா கை வீசு, என்று கையைப் பிடித்துக் கொண்டு பாடுவாரா என்பதெல்லாம் ஜாதகத்தில் தெரியாது!

3) If in a females horoscope 7 planets in drekkanam divisional chart occupy the same
raasi as they are seen in raasi chart, dharmakarmathipathi yoga found in 3'rd house, 10'th house getting 39 points in ashtavarga, 11'th house - 41 points, does that indicate the females brother will be a VIP in the society ?

என்ன சுவாமி குழப்புகிறீரே? திரேக்கணத்தை பற்றிய கேள்வியில் எதற்கு தர்மகர்மாதிபதி யோகத்தையும், 10 & 11 ஆம் வீட்டுப் பரல்களையும் கொண்டு வந்து கொக்கி போட்டு மாட்டுகிறீர்கள்? Drekkana is used to study the prospects of siblings. உடன் பிறப்புக்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
VIP in the societyயாக இருப்பார்களா என்பதெல்லாம் (எனக்குத்) தெரியாது
------------------------------------------
email.No.97
P.பாலசுப்பிரமணியன் புள்ளிகாட், ரியாத்.

Dear Sir,
I have few more doubts.

1. Mandhi – you have mentioned that it will affect one aspect (out of multiple functions of
the house) of the house where it is sitting. Will this affect permanently? In one horoscope,
it is sitting in second house, Cancer, and affected the jathakan in his speech ie. he was
"Thikku Vai" in his child hood. Now he has over come that to grow up in career, though
this affects him very rarely and sometimes only. Does that mean Manthi will not affect
him further, or it will continue to affect in other areas like "Vakku" or "Speech" or other
functions of second house.

நீங்களே, அரிதாக, சிலசமயங்களில் மட்டுமே அந்தக்குறை உள்ளது என்று
எழுதியுள்ளீர்கள். இறைவழிபாடு செய்யச் சொல்லுங்கள். முற்றிலும் நீங்கிவிடும்!

2. If good planet becomes ucham, it means it has more power to do good.
In the same way if bad planet becomes ucham, does it mean it will do more harm?

தீயகிரகம் என்று ஒரே கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். சனி தீயகிரகம்தான். அதே நேரத்தில் அவன் ஆயுள்காரகன், கரம் காரகன் (authority for profession) உச்சம் பெற்ற சனி, ஜாதகனுக்கு (மற்ற அம்சங்களையும் வைத்து) நீண்ட ஆயுளையும், தொழிலில்/வேலையில் மேன்மையையும் தருவார்

3.Similarly if negative planet has more parals, does it mean it will affect the jathagan or it
will benefit the jathagan. Should the negative planets get lower suya parals to do less
harm to the jathagan.

எதிர்மறையான கிரகம் என்பது, 6,8,12 ஆம் வீட்டு அதிபதிகளைக் குறிக்கும். அந்த வீட்டு அதிபதிகளுக்கு சுயவர்க்கப்பரல்கள் அதிகம் இருந்தால், அவர்கள் ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்யாவிட்டாலும் கஷ்டங்களிலிலும், துன்பங்களிலும், தாக்குப் பிடிக்கும் சக்தியைக் கொடுப்பார்கள்

4.How to see the houses and planets in Navamsa Chart. Is it to be done from the position
of lagna in navamsa, which is different from lagna in main chart or the lagna position in
the main chart to be applied to the same house in navamsa.

மின்னஞ்சல் கேள்வி எண்.71 தேதி 25.1.2010க்கான பதிலைப் பாருங்கள். அதே பதில்தான் உங்களுக்கும்!

5.In many manual horoscopes, I find the main chart would be correct, but navamsa would
be wrong. Sometimes I could not arrive at the manually developed Navamsa chart even
using a good software. Same is the case with the remaining portion of Dasa period at
birth. That could not be arrived to match with the manual workings. This indicates the
chart requires BTR. In some cases I tried with both Lahiri and Raman Ayanamsa. As you
have been familiar with manually constructing horoscope and you know people who do it,
can you please tell me why this happens and what could be the reason for them not
matching with computerised horoscope. What are the possible mistakes, those
astrologers would have committed.
Is there any tool for BTR or short cuts to rectify the same.
I look forward to your response at the earliest.

நல்ல சிற்பி செய்த சிலை நன்றாக இருக்கும். நல்ல பொறியாளர் வடிவமைத்த இயந்திரம் நன்றாக இயங்கும்.நல்ல இயக்குனர் இயக்கிய படம் அருமையாக இருக்கும். அதுபோலத்தான் இதுவும். ஜோதிடத்தில் நல்ல பாண்டியத்யம் பெற்ற ஜோதிடர்கள் எழுதிக் கொடுக்கும் ஜாதகத்தில் குறைகள் இருக்காது. அந்தக் காலத்தில் இருந்தார்கள். இப்போது இல்லை. சர்வமும் கணினி மயம். கணினி போற்றி, கணினி போற்றி, கணினி போற்றி, என்று மூன்றுமுறை
சொல்லிவிட்டுக் கணினியிலே கணித்து விடுங்கள்
----------------------------------------
email.No.98
திரு அரசு

மதிப்பிற்குரிய அய்யா வணக்கம்.

லேட் அட்மிஷனாக வகுப்பில் சேர்ந்த எனக்கு தாங்கள் அனுப்பிய பழைய பாடங்களின் தொகுப்பினை படித்துப் பார்த்துப் புரிந்து கொண்டதில் எனக்கு ஏற்பட்டுள்ள கீழ்க்கண்ட இரண்டு ஐயங்களை தீர்த்து வைக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

1 . அஷ்டவர்க்கம் மற்றும் சுயவர்கப் பரல்களைக் கணக்கிடும் வழிமுறை என்ன என்பதை உதாரண ஜாதகத்துடன் சற்று விளக்கமாக தெரிவிக்க வேண்டுகிறேன்.ஜாதகம் கணிக்கும் மென்பொருள் மூலம் பரல்கள் கணக்கிடப்பட்டு விட்டாலும் அதன் வழிமுறை குறித்து தெரிந்து கொள்ளவே இதனைக் கோருகிறேன்.

வழிமுறைகள்தானே? அது பெரிய பாடம். நீங்கள் கேட்டதற்காக நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன். பொறுத்திருங்கள். உங்கள் ஆர்வம் வாழ்க! நாளும் வளர்க!

2. பரிவர்த்தனை தொடர்பாக ஒரு ஐயம்: சில ஜாதகங்களில் மூன்று கிரகங்கள் கூட்டாக பரிவர்த்தனை ஆகி இருப்பதை கண்டிருக்கிறேன் , உதாரணமாக ஐந்துக்குரிய கிரகம் எழில், எழுக்குரிய கிரகம் ஒன்பதில் ஒன்பதுக்குரிய கிரகம் ஐந்திலும் பரிவர்த்தனை ஆகி இருப்பின் இதையும் யோகதுக்குரிய பரிவர்த்தனை ஆக கொள்ளலாமா? இதற்கான பழங்கள் எப்படி இருக்கும் அய்யா?
வணக்கத்துடன், அரசு.

அது முக்கோணப்பரிவர்த்தனை என்று பெயர்.பரிவர்த்தனையில் சம்பந்தப்பட்ட அந்த 3 கிரகங்களுமே நன்மைகளைச் செய்வார்கள்
-----------------------------------
email.No.99
பழனிசெந்தில்

அன்புள்ள ஆசிரியர் அவர்களூக்கு,
குழ‌ந்தை இல்லாதவர்கள் தத்து எடுக்கும் குழந்தை ஜாதகம் மூலம் பலன் அல்லது பாதிப்பு அடைவார்களா? நன்றி.
செந்தில்.மதுரை.

உங்கள் கேள்வி சரியில்லை. பேருந்தில் பயணிக்கிறவன், அது எந்த ஊர் செல்லும் பேருந்து என்று பார்த்து ஏறமாட்டானா? பார்க்காமல் ஏறினால் என்ன ஆகும்? தென்காசி செல்லும் பஸ்ஸில் ஏறி, பழநிக்கு டிக்கெட் கேட்டால் என்ன ஆகும்? அதுவும் பஸ் புறப்பட்டு, 10 கிலோமீட்டர் தூரம் சென்ற பிறகு கேட்டால், நடத்துனரிடம் டோஸ் வாங்கிக் கொண்டு பஸ்சைவிட்டு இறங்க நேரிடும். அதுபோலத்தான் இதுவும். தத்து எடுக்கிறவன், தத்து எடுக்கப்போகும் குழந்தையின் ஜாதகத்தைப் பரிசீலிக்காமல் தத்து எடுப்பானா?
பார்க்காமல் எடுத்தால், வருவதை அனுபவிக்க வேண்டியதுதான்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
email.No.100
லக்ஷ்மணன், சென்னை

வாத்தியார் அவர்களுக்கு வணக்கம்.

தாங்கள் கேள்வி பதில் பகுதி மிக்க உபயோகமாகஇருக்கிறது
அதிலும் தாங்கள் பதிலுக்கு அசத்தலாக தலைப்பு கொடுப்பது, அது என்ன என்று ஆவலாக முதலில் படிக்க தோன்றும் அளவுக்கு உள்ளது. படங்களை வேறு போட்டு அசத்துவது இன்னும் தூக்கலாக இருக்கிறது ( எங்கே இருந்து சாமி படங்களை சேகரிக்கிறீர்கள்)

கூகுள் ஆண்டவர் சந்நிதியில் இல்லாத படமா? அங்கே இருந்துதான் எடுக்கிறேன் சார்!

என்னுடைய கேள்வி.
1. Md என்பது மாந்தியா Gl என்பது மாந்தியா ?
தாங்கள் ஒரு பாடத்தில் Md தான் மாந்தி என்று ஜகன்நாத் ஹோரா படம் போட்டு இப்படி சொன்னீர்கள்.
" உடனே சடாரென்று சொன்னேன்,” Native of the horsocope should be amentally retarded person" (இந்த ஜாதகன் ஒரு மனநோயாளி)
இன்னொரு இடத்தில் Gl தான் மாந்தி என்று குறிப்பிட்டீர்கள்
/ஜகந்நாத ஹோரா மென்பொருளில் வரும். அதில் Gள் (குளிகன்) என்று போட்டிருக்கும் அதுதான் மாந்தி// என்றுஅதற்க்கு ஒரு வாசகர் எழுதிய பதில்:
நல்ல வேளை வாத்தியாரையா. "Md" என்று போட்டிருப்பது மாந்தி என்று நினைத்தேன். = என்பதாகும்.
ஆக இதில் எது மாந்தி?

”சிங்காரிதான் காவேரி
காவேரிதான் சிங்காரி” என்று புரட்சித் தலைவர் படத்தில் ஒரு பாடல் வரும்.
அதைப்போல மாந்திதான் குளிகன்; குளிகன்தான் மாந்தி என்று வைத்துக்கொள்ளுங்கள். இரண்டும் ஒன்றுதான். ஜகந்நாத ஹோரையில் இரண்டும் வெவ்வேறு என்பார்கள். அவர்களுடைய மென்பொருளை
உபயோகிப்பவர்கள் "Md" என்று போட்டிருப்பதை எடுத்துக்கொள்ளுங்கள். மாந்தியை மட்டும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிகனைப் பெவிலியனுக்கு அனுப்பிவிடுங்கள். குழப்பம் இருக்காது!

2. ஜாதகத்தில் 4 வகைகள் மட்டுமே உண்டு: என்று சொல்லியது பற்றிய கேள்வி.

1. தர்ம ஜாதகம் (1,5,9 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
2. தன ஜாதகம் (2,6,10 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
3. காம ஜாதகம் (3,7,11 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
4, ஞான ஜாதகம் (4,8,12 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
என்னுடைய ஜாதக த்தில் முப்பது பரல்கள் மேல் இருந்தால் சரி என்றால் ஒன்றில் கூட சரியாக வரவில்லையே. இந்த செட் கணக்குப்படி முப்பது பரல்கள் எல்லாவற்றிலும் வரவில்லை . சரி இரண்டு இடங்களில் இருந்தால் போதும் என்றால் மேற் கூறிய இரண்டு

வகைக்கு ஒத்து வருகிறது.
1 – 5 - 9 இல் முறையே 31 – 25 – 25 பரல்கள்
2 – 6 – 10 இல் முறையே 31 - 24 – 34 பரல்கள்
3 – 7 – 11 இல் முறையே 34 – 19 – 33 பரல்கள்
4 – 8 – 12 இல் முறையே 34 – 26 – 26 பரல்கள்
1 – 2 – 3 – 4 – 10 – 11 இடங்கள் மட்டுமே 30 பரல்களுக்கு மேல் இருக்கிறது. இது எந்த வகை ஜாதகம் எப்படி பார்ப்பது என்று தயவு செய்து சொல்லி புரிய வைக்கவும்.
இப்படிக்கு
லக்ஷ்மணன் /////

அந்த நான்கு வகைகளிலும் வராத கலவையான ஜாதகம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த 4 வகைகளுக்குள் அடங்க வேண்டும் என்று அவசியம் ஒன்றும் இல்லை!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேள்வி பதில் பகுதியில் இதுவரை 100 மின்னஞ்சல்களுக்குப் பதில் அளித்துள்ளேன். சற்று இடைவெளி விட்டுவிடுவோம். தொடர்ந்து எழுதினால், படித்தால் கசந்துவிடும். வெரைட்டி வேண்டாமா? படத்தில் சண்டைக் காட்சியையே எவ்வளவு நேரம் பார்க்க முடியும்? கேள்வி, பதிலின் அடுத்த பகுதிகள் பிப்ரவரி 15ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் வரும்.
பொறுத்திருங்கள். இடையில் வேறு ஏதாவது சுவாரசியமான விஷயத்தைப் பார்ப்போம்
=========================================================
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!