மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.6.09

என்னடா ஆயிற்று பாகற்காய்க்கு?


என்னடா ஆயிற்று பாகற்காய்க்கு?

ஆசிரமம் ஒன்றில் முற்றும் துறந்த சந்நியாசி ஒருவர் இருந்தார்.
அவருக்கு நான்கு இளம் சீடர்கள் இருந்தார்கள்.

முற்றும் துறந்தவருக்கு எதற்கு ஆசிரமம்? எதற்கு சீடர்கள்?
என்கிறீர்களா. அதுவும் சரிதான். அதை எல்லாம் நானும் கேட்டுக்
கொண்டிருந்தால் கதையை எப்படி நகர்த்துவது?

சில விஷயங்களைக் கேட்காமல் கருத்தை மட்டும் பார்ப்பதுதான்
நமக்கு நல்லது. ஆகவே கதைக்கு வருகிறேன்.

அசிரமத்தின் அன்றாடத் தேவைகளை, அந்த ஆசிரமத்தின் மேல்
மதிப்பு வைத்திருந்த - உங்கள் மொழியில் சொன்னால் அந்த
ஆசிரமத்தின்மேல் பிடிப்பு அல்லது காதல் கொண்டிருந்த உள்ளூர்
மக்கள் பார்த்துக் கொண்டார்கள்.

ஆசிரமம் செழிப்பாக இருந்தது. காலையிலும், மாலையிலும் சாமியார்,
மக்களை நல்வழிப்படுத்தும் முகமாக உரை நிகழ்த்துவார். கூட்டு
வழிபாடு செய்வார்.

ஒரு நாள், அந்த நான்கு சீடர்களில் மூன்று பேர்கள் சாமியாரிடம்
வந்து,” ஐயா நாங்கள் அருகிலிருக்கும் புண்ணிய நதிகளிலும், நீர்
நிலைகளிலும் தீர்த்தமாடிவிட்டுவர ஆசைப் படுகிறோம். அனுமதி
கொடுங்கள்” என்றார்கள்

”ஏன் நம்மூர் ஆற்றிற்கு என்னாயிற்று?” என்று கேட்டார்.

”அதில்தான் தினமும் நீராடிக்கொண்டிருக்கிறோமே! ஒரு மாறுதலுக்காக
மற்ற புண்ணிய நதிகளிலும் நீராடிவிட்டுவர விரும்புகிறோம்” என்றார்கள்.

“சென்று வாருங்கள்” என்றார்.

அவர்களில் ஒருவன்,”ஐயா நீங்களும் வர வேண்டும்!” என்றான்.

“இல்லை, நீங்கள் மட்டும் சென்று வாருங்கள்!” என்றார்

மற்ற இருவரும் இப்போது அவனுடன் சேர்ந்து வலியுறுத்தவே, சாமியார்
சுற்று முற்றும் பார்த்தார்.

அருகில் இருந்த பாகற்காய் கொடியில் நிறையக் காய்கள் காய்த்துத்
தொங்கிக் கொண்டிருந்தன.

அவற்றில் ஒன்றைப் பறித்து அவர்களிடம் கொடுத்தவர், இப்படிச் சொன்னார்:

“இந்தக்காயை நான் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நீராடும்
இடங்களில் எல்லாம் இதையும் மூன்று முறைகள் நமச்சிவாயா என்று
சொல்லி நீரில் முக்கி எடுத்துக் கொண்டு வாருங்கள்”

அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். உள்ளூர் ஆசாமி ஒருவன் அவர்களுக்கு
வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான். இரண்டு நாட்கள்
பயணம் மேற்கொண்டு நான்கு நதிகளில் நீராடிவிட்டுத் திரும்பினார்கள்.

திரும்பி வந்தவுடன், சாமியாரை நெடுஞ்சான் கிடையாக விழுந்து
வணங்கினார்கள்.

சாமியார் கேட்டார்,”பாகற்காய் என்ன ஆயிற்று?”

“நீங்கள் சொன்னபடியே பாகற்காயையும் நீராட்டிக் கொண்டு வந்திருக்கிறோம்”

“இன்று அதைச் சமையலில் சேர்த்து விடுங்கள்” என்றார் அவர்.

அப்படியே செய்தார்கள்.

மதியம் சாப்பிடும்போது, சாமியார் கேட்டார்,” பாகற்காயில் ஏதாவது
மாறுதல் தெரிகிறதா?”

சீடர்கள் மூவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்,” இல்லை ஐயா,
எப்போதும் போல அது கசப்பாகத்தான் இருக்கிறது!”

இப்போது சாமியார், அவர்களுக்குப் புரியும்படியாக அழுத்தமான குரலில்
சொன்னார்.

“எத்தனை புண்ணிய நிதிகளில் முக்கி எடுத்தாலும் பாகற்காயின் குணம்
போகவில்லை அல்லவா? அதுபோலத்தான் எத்தனை புண்ணிய நதிகளில்
நீராடினாலும் அல்லது எத்தனை ஆலயங்களில் வழிபட்டாலும் மனிதனின்
இயற்கைக் குணம் மாறாது!”

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆமாம் மனிதனின் இயற்கைக் குணம் என்றுமே மாறாது.

அதைப் பிறவிக் குணம் என்பார்கள்

அதை வலியுறுத்திச் சொல்லவே இந்தக் கதை.

மிளகாய் என்றுமே மிளகாய்தான்
மாங்காய் என்றுமே மாங்காய்தான்
புளியங்காய் என்றுமே புளியங்காய்தான்

எத்தனை இனிப்புப் போட்டுச் சமைத்தாலும் அவற்றின் இயற்கைத் தன்மை மாறாது!

அதுபோல கஞ்சன் என்றுமே கஞ்சன்தான். எத்தனை செல்வம் வந்தாலும்,
அந்தக் கஞ்சத்தன்மை மாறாது. அதுபோல காமுகன் என்றும் காமுகன்தான்.
எத்தனை பெண்களை அவனுக்குக் கட்டிவைத்தாலும் அவன் திருந்த
மாட்டான். உலகில் உள்ள அத்தனை அழகான பெண்களையும்
அவனுக்குக் கட்டி வைப்பதாகச் சொன்னாலும், தேவமங்கைகள் என்று
சொல்கிறார்களே, அவர்கள் கிடைப்பார்களா? என்றுதான் கேட்பான்.

அதுபோல கோபம், சோம்பேறித்தனம், பொறாமை, படபடப்பு, பிடிவாதம்
என்றுள்ள பல மனித குணங்கள் பிறவியிலேயே வருவது. அது என்றுமே
மாறாதது. மனிதன் செத்துச் சாம்பலாகும் வரை அவனுடனேயே இருப்பது.

எந்தக் கொம்பனாலும் அவற்றை மாற்ற முடியாது. அல்லது மாற்றிக் கொள்ள
முடியாது.

ஏன் அப்படி?

அதுதான் வாங்கி வந்த வரம்!

உங்கள் மொழியில் சொன்னால், பிறந்த லக்கினத்தாலும், மற்றும் பிறந்த
நேரத்தில் உள்ள கிரக அமைப்புக்களாலும் ஏற்படுவது அது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Benefic planets such as Jupiter, Venus, Mercury and the luminous
Moon do very well in first house. However, the presence of the
malefics such as Rahu, Ketu, Saturn and Mars can create very
difficult situations in life. Strongly afflicted, it produces difficult
birth or even infant mortality. It can also cause psychological,
emotional and physical disorders.

லக்கினத்துடன் சந்திரன், குரு, சுக்கிரன், புதன் போன்ற நன்மையளிக்கும்
கிரகங்கள் சம்பந்தப் படும்போது மனிதன் பல நல்ல குணங்களைப்
பெற்றவனாக இருப்பான். சனி, ராகு, கேது, செவ்வாய் போன்ற தீய
கிரகங்கள் சேரும்போது மன வக்கிரங்கள், உணர்வுச் சீரழிவுகள்
கொண்டவனாக ஜாதகன் இருப்பான்.

(லக்கினத்தைப் பற்றிய அலசல் தொடரும்)






வாழ்க வளமுடன்!

33 comments:

  1. //ஆமாம் மனிதனின் இயற்கைக் குணம் என்றுமே மாறாது.

    அதைப் பிறவிக் குணம் என்பார்கள்

    அதை வலியுறுத்திச் சொல்லவே இந்தக் கதை.

    மிளகாய் என்றுமே மிளகாய்தான்
    மாங்காய் என்றுமே மாங்காய்தான்
    புளியங்காய் என்றுமே புளியங்காய்தான்

    எத்தனை இனிப்புப் போட்டுச் சமைத்தாலும் அவற்றின் இயற்கைத் தன்மை மாறாது!

    அதுபோல கஞ்சன் என்றுமே கஞ்சன்தான். எத்தனை செல்வம் வந்தாலும்,
    அந்தக் கஞ்சத்தன்மை மாறாது. அதுபோல காமுகன் என்றும் காமுகன்தான்.
    எத்தனை பெண்களை அவனுக்குக் கட்டிவைத்தாலும் அவன் திருந்த
    மாட்டான். உலகில் உள்ள அத்தனை அழகான பெண்களையும்
    அவனுக்குக் கட்டி வைப்பதாகச் சொன்னாலும், தேவமங்கைகள் என்று
    சொல்கிறார்களே, அவர்கள் கிடைப்பார்களா? என்றுதான் கேட்பான்.

    அதுபோல கோபம், சோம்பேறித்தனம், பொறாமை, படபடப்பு, பிடிவாதம்
    என்றுள்ள பல மனித குணங்கள் பிறவியிலேயே வருவது. அது என்றுமே
    மாறாதது. மனிதன் செத்துச் சாம்பலாகும் வரை அவனுடனேயே இருப்பது.

    எந்தக் கொம்பனாலும் அவற்றை மாற்ற முடியாது. அல்லது மாற்றிக் கொள்ள
    முடியாது.

    ஏன் அப்படி?

    அதுதான் வாங்கி வந்த வரம்!//


    மிக அருமையாய் சொல்லியுள்ளீர்கள்
    பாராட்டுககள்.

    ReplyDelete
  2. குணம் மாறாது. ஆனால் பாவம் தீரும் என்று புண்ணிய நதிகளில் சிலர் மூழ்கி குளிக்கிறார்கள். குறைந்த பட்சம் இதையாவது மாற்றலாமோ.

    லக்னத்தை எந்த கிரமும் பார்க்காவிட்டால்/அதில் எந்த கிரகமும் இல்லாவிட்டால் லக்னாதிபதியையோ/அவரை பார்த்த/ சேர்ந்த கிரகத்தை வைத்து பலனைக் காணலாம் என்பது சரியா?

    விடியற்காலை 1 மணிக்கு மேல் பதிவிட்டிருக்குறீகள். தங்களை கர்ம வீரர் என்று பாராட்டலாம்.

    ReplyDelete
  3. //////Blogger அமர பாரதி said...
    உள்ளேன் அய்யா.////

    வருகைப்பதிவு போட்டாயிற்று அமரபாரதி!

    ReplyDelete
  4. Blogger திருநெல்வேலி கார்த்திக் said...
    அதுபோல கோபம், சோம்பேறித்தனம், பொறாமை, படபடப்பு, பிடிவாதம்
    என்றுள்ள பல மனித குணங்கள் பிறவியிலேயே வருவது. அது என்றுமே
    மாறாதது. மனிதன் செத்துச் சாம்பலாகும் வரை அவனுடனேயே இருப்பது.
    ஏன் அப்படி?
    அதுதான் வாங்கி வந்த வரம்!//
    மிக அருமையாய் சொல்லியுள்ளீர்கள்
    பாராட்டுக்கள்.////

    உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. /////Blogger ananth said...
    குணம் மாறாது. ஆனால் பாவம் தீரும் என்று புண்ணிய நதிகளில் சிலர் மூழ்கி குளிக்கிறார்கள். குறைந்த பட்சம் இதையாவது மாற்றலாமோ.
    லக்னத்தை எந்த கிரமும் பார்க்காவிட்டால்/அதில் எந்த கிரகமும் இல்லாவிட்டால் லக்னாதிபதியையோ/அவரை பார்த்த/ சேர்ந்த கிரகத்தை வைத்து பலனைக் காணலாம் என்பது சரியா?//////

    சரிதான். அப்படித்தான் அலச வேண்டும்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    விடியற்காலை 1 மணிக்கு மேல் பதிவிட்டிருக்குறீர்கள்.
    தங்களை கர்ம வீரர் என்று பாராட்டலாம்.////

    மாணவக் கண்மணிகளின் அன்பிற்கு முன்னால் எந்தப் பட்டமும் எடுபடாது.
    உங்களுக்காக எழுதுவதற்கு நான் நேரம் காலம் பார்ப்பதில்லை!

    ReplyDelete
  6. ஐயா,

    வணக்கம். நமது வகுப்பறை மாணவர்களுக்க ஜாதக பொரு்த்தம் சுலபமாக பார்ப்பது எப்படி என பதிவிட்டுள்ளேன்.பார்க்கவும்.

    முகவரி:-
    http://velang.blogspot.com/2009/05/blog-post_31.html

    நன்றி..

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  7. ஐயா,

    எனக்கு லக்கினத்தில் குரு...

    பலன்கள் அருமை...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  8. When Mercury is in Lagna and Guru aspects from 9th place what will be the effect on life and education.

    ReplyDelete
  9. பாடத்தின் கருத்துக்கள் நிச்சயமான உண்மை அய்யா.

    ReplyDelete
  10. Dear sir,

    Am mailing for u for the past one month.....u said ill reply in 1 week.but i didnt receive any mail from u sir.........

    so please reply soon im waitin.....


    I ASKED ONE QUESTION onli sir....

    ReplyDelete
  11. Dear sir,

    ill ask my single question here itself..............

    mesha lagnam...chevvai(exalted) in 10th place........sani(pagai) in 8th place(it is chevvai home).....

    they are parivarthanai........10 and 8 are good parivarthana or bad........this is my QUESTION???


    Thats all...

    ReplyDelete
  12. Dear Sir

    Manidha gunangal patriya padam Arumai... Adhan moolam Lagnathai patri alasuvadhu adhaninum arumai...

    "Vazhaga Umadhu Pugzhal Valarga Umadhu Thondu"..

    Main (Lagnathibadhi) Subject -- Alasungal Alasungal ...Aalamaga Alasungal...

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  13. sir my relative who was born in 23.3.1954.He has tulam rasi,magara lagnam.In forecoming sanipeyarchi, 7 1/2sani will start for tulam rasi,which suttru[2nd or 3rd]will be he have.In his planetary position sani and chandiran in 10th place.varum sani peyarchi avaruku eppadi irukum thank you sir

    ReplyDelete
  14. sir my relative who was born in 23.3.1954.He has tulam rasi,magara lagnam.In forecoming sanipeyarchi, 7 1/2sani will start for tulam rasi,which suttru[2nd or 3rd]will be he have.In his planetary position sani and chandiran in 10th place.varum sani peyarchi avaruku eppadi irukum thank you sir

    ReplyDelete
  15. Dear sir,

    if somebody knows his birth nature and if he wish to do

    ReplyDelete
  16. Dear Sir,

    If anybody wants to change his birth nature its possible

    ReplyDelete
  17. இதுதான் ஜயாவின் தனி style கதையுடன் பாடத்தை அலுக்காமல் நகர்த்தும் பாங்கு. நன்றாக சொன்னீர்கள் ஜயா.

    ReplyDelete
  18. ராமபிரானின் குணங்கள்

    1. பொய் பேசாதவர்.
    2. கெட்ட வார்த்தைகள் பேசாதவர்.
    3. பிறர் முதலில் பேசட்டும் என காத்திருக்க மாட்டார். அவரே ஒரு புன்னகையோடு பழக ஆரம்பித்து விடுவார்.
    4.சூதாட்டத்தில் ஈடுபடாதவர்.
    5.தானம் கொடுத்ததை பற்றி மறந்துவிடுவார்.
    6.தன் பெருமையை பற்றி சிந்திக்காதவர்.
    7.ஒருவர் தனக்கு பல தீமைகள் செய்திருந்து எப்போதாவது ஒரே ஒரு நன்மை மட்டும் செய்திருந்தாலும் கூட அந்த ஓரே ஒரு நன்மையை பற்றி மட்டும் தான் பேசுவார்.
    8. அவரிடம் வருபவர் எவரேனும் அவரை குறை சொன்னால், அதற்கான காரணத்தை ஆராய்ந்து அந்த நபர் தன் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை இனிமையான சொற்களால் நீக்கிவிடுவார்.
    9.அவரால் அரை வயிற்று உணவிலோ கால் வயிற்று உணவிலோ ஒரு கைப்பிடி உணவிலோ கூட திருப்தியடைய முடியும்.
    10.சிற்றின்பங்களை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அனுபவிப்பவர்.
    11.செல்வம் சேர்ப்பதில் ஆர்வமுள்ளவர். அச்செல்வத்தை வீணாக்காதவர். செலவு செய்யும் பொழுது எல்லோருக்கும் பயனளிக்கும் விதமாக செலவு செய்பவர்.
    12.செல்வத்தில் ஈடுபாடு உடையவராயிருப்பினும் பேருண்மையை உணர்ந்து ஆத்ம சாதனைகளை கைவிடாதவர்.
    13.தன் மக்களுக்கு மட்டுமல்லாமல் சகல ஜீவராசிகளுக்கும் நன்மையையே விரும்புபவர்.
    14.சீதையை தவிர வேறொரு பெண்ணை தன் வாழ்நாள் முழுவதிலும் நினையாதவர்.
    15.காட்சிக்கு இனிமையான தோற்றத்தை உடையவர். அதாவது பிறர் தன்னை பார்த்து முகம் சுளிக்காத விதமாக காட்சியளிப்பவர்.
    16.தன்னிடம் சரணடைந்தவர் எவராயினும் அவர்கள் குற்றங்களை எல்லாம் மன்னித்து ஆதரவளிக்க கூடியவர்.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. Dear sir
    I am writing to you after a long time. But I am regualarly reading your lessons. When I asked a question regarding suyavargam, You asked me to send my horoscope in PDF format. I am not able to convert it in PDF. But when I gothrough with your earlier lessons, somehow I understood the parals of suyavargam.

    Sir, I understand that now we can not do anything about the parals. But can we imporove it by doing any parigarams for the planets? Will stones really help?

    Thanks a lot.

    ReplyDelete
  21. வணக்கம் ஐயா ,நாம் பிறவி எடுத்து இருப்பதே நம் செயல்களின் பலனை அனுபவிப்பதற்கே இல்லீங்களா .எனவே இப்பிறவியில் நாம் எடுத்துள்ள கர்மாக்களை அனுபவித்துக்கொண்டே நம் அடுத்த பிறவியை நல்லபடியாக அமைத்துக்கொள்ள முடியும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் .நம் சென்ற பிறவிக்கான பலன் இப்பிறவி என்றால் அடுத்ததும் நம் கைகளிலேயே உள்ளது தெளிவாகும் .எனென்றால் ஆண்டவன் நமக்கு எதையும் சிந்திக்கும் ஆற்றலும் சுதந்திர மன வலிக்கும் கொடுத்துள்ளார். எனவே தேர்ந்தெடுக்கும் உரிமை எல்லோர்க்கும் சமமாகவே உள்ளது .முடிவெடுங்கள் பலனடையுங்கள் ,எல்லாம் அவன் கையில் இல்லை நம் கையில்
    அன்புடன்
    கணேசன்

    ReplyDelete
  22. வாத்யார் அய்யா பின்னே தெய்வங்களும் கோவில்களும் எதற்காக இருக்கின்றன, அவற்றால பயன் எதுவும் காணாமலா அங்கே பக்தர்கள் படை திரள்கிறார்கள்

    ReplyDelete
  23. வணக்கம் ஐயா,லக்னத்திற்கு தீய கிரக பார்வை இருந்தால் அந்த திசா புத்திகளில் மட்டுமே தீய பலன் (அ) தீய குணம் ஏற்படும்.ஆனால் லக்னத்திலேயே தீய கிரகங்கள் இருப்பின் குழந்தைப்பருவம் முதற்கொண்டே தீய குணங்களுடன் (அ) வன்முறையாக செயல்படுவார்.மேலும் லக்னாதிபதியையும் கவனிக்க வேண்டியது முக்கியம்.சரிதானே ஐயா?

    அன்புடன்,
    மதுரை தனா.

    ReplyDelete
  24. நமது செயல்களாலேயே நம் பாவ புண்ணியம் தீர்மானமாவது உண்மை.புண்ணிய செயல்களால் அடுத்த பிறவியின் நற்பலன்களை அதிகரித்துக்கொள்வது நலம்.தெய்வீக வழிபாடு என்பது பிறவிகளுக்கு அப்பாற்பட்ட நிலைக்கு நம்மை உயற்த்திக்கொள்ள துணை செய்வது.அதன் பலன் நம் தெய்வீக ஈடுபாட்டை பொறுத்து நம்மை வந்தடையும்.(உ.ம்)மார்கன்டேயன்.சரியா ஐயா?

    அன்புடன்,
    மதுரை தனா.

    ReplyDelete
  25. ஜாதகம், விதி இவை மட்டுமே இறுதியான‌வை அல்ல. அதையும் தாண்டி நமது வாழ்க்கையை நல்லபடி அமைத்துக்கொள்வது நம் கையில்தான் உள்ளது.
    விதி என்பது நமது வீடு மாதிரி.வீட்டின் அறைகளை நம்மால் மாற்ற இயலாது. ஆனால் அறையிலுள்ள பொருட்களை அழகாக இடம் மாற்றி, அடுக்கி வைத்துக் கொள்வதும் அதன் பயன்பாடும் நம் கையில்தான் உள்ளது. அது போலத்தான், விதியை முற்றிலுமாக மாற்ற இயலாமல் போகலாம். ஆனால் ஒரு 25 சதவிகிதமாவது அதில் நம் பங்கும் உள்ளது என்பதே என் கருத்து. அதைத்தான் கண்ணதாசன் அவர்கள் "தெய்வம் பாதி. திறமை பாதி" என்றார்கள். சரியா அய்யா?

    ReplyDelete
  26. Sir
    I have sent my Ashtavargam chart in XL format to your mail id "classroom2007@gmail.com"

    Kindly gothrough and confirm me about Suyavargam parals when you are free.

    Warm regards

    ReplyDelete
  27. மிகவும் அற்புதமான உவமை கதை. ஆனால் மனிதனின் இயற்க்கை குணம் மூங்கில் போல் இருந்தால் அதை உடையாமல் வளைக்க முடியும் அல்லவா? மூங்கில் மூங்கிலாக இருந்தாலும் வளைக்க முடியுமே?

    லக்கினத்தில் ஒன்றுமே இல்லை என்றால்?

    மற்றும் நீண்ட நாளா ஒரு கேள்வி சுப்பையா அய்யா - ஒருவரின் ஆன்மீக குரு, வருவாரா எப்பொழுது வருவார் என்பதை ஜாதகத்தில் கண்டறிய முடியுமா?

    ReplyDelete
  28. அய்யா, ஜூலை மதத்தில் வரும் சந்திர சூரிய கிரகனத்தை பற்றி தங்கள் கருத்தை பகிர்ந்துகொள்ள வேண்டிகொள்கிறேன்.

    ReplyDelete
  29. கும்ப குரு உங்களிடம் நிறைய வேலை வாங்குகிறாரா அய்யா. ரொம்ப பிஸியாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது

    ReplyDelete
  30. என்ன ஆயிற்று வாத்தியருக்கு, இப்பொழுதெல்லாம் அடிக்கடி வகுப்பறையை விட்டு காணாமல் போய் விடுகிறார். பெரிய project எதுவும் கிடைத்து அதில் busy ஆகி விட்டாரா? அப்படி எதுவும் இருந்தால் தங்களுக்கு எனது வாழ்த்துகள் உரிதாகட்டும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com