மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.3.09

உண்மையான அழகும் பொய்யான அழகும்!

ஞானி ஒருவர் இருந்தார். அவரிடம் ஒருவன் கேட்டான்.

"அழகு ஏன் மயக்குகிறது?"

அவர் பதில் சொன்னார்.

"அது எங்கே மயக்குகிறது? நீயல்லவா மயங்குகிறாய்?"

"சரி, அழகானது - அழகில்லாதது என்ற இரண்டு நிலைப்பாடுகள் ஏன்?

"அது படைப்பின் ரகசியம். எல்லாமே அழகானதுதான் என்றால் - நீ எங்கே
அதை உணரப் போகிறாய்? அதனால்தான் இரண்டு நிலைப்பாடுகள்.

"உண்மையான அழகிற்கும் - பொய்யான அழகிற்கும் என்ன வித்தியாசம்?"

"பொய்யான அழகு தற்காலிகமானது. அழிந்துவிடும். உண்மையான அழகு
காலத்தாலும் நிற்கும் பலராலும் போற்றப்படும். பெருமை வாய்ந்ததாக இருக்கும்!"

"உதாரணம் சொல்லுங்கள்"

"மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீரங்கநாதர் கோவில், ராமேஸ்வரம் கோவில்"

"அவைகள் தெய்வங்களின் உறைவிடம் - அதனால் அழகாகத்தோன்றலாம்.
வேறு இடங்களைச் சொல்லுங்கள்"

"எல்லா இடங்களிலும்தான் ஆண்டவன் இருக்கிறார். நான் சொன்ன அந்த
இடங்கள் மனிதனால் கட்டப்பட்டவைதான்.மேலும் சில இடங்களைச்
சொல்கிறேன் பார்.
திருவாரூர் தேரழகு
மன்னார்குடி மதில் அழகு
வேதாரண்யம் விளக்கழகு
கண்ணதாசன் பாட்டழகு
காளையார்கோவில் குளம் அழகு
சரி, உனக்குப் புரியும்படியாக ஒரு இடத்தைச் சொல்கிறேன். தாஜ்மகால்."

அதற்குப் பிறகு அவன் கேள்வி கேட்கவில்லை. போய்விட்டான்.

அதுபோல பதவிக்கும் ஒரு அழகு உண்டு. அது அதில் வந்து உட்காருபவரால்
ஏற்படுவது!

ஜவஹர்லால் நேறு அவர்களால் பிரதமர் பதவி அழகு பெற்றது!
டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் குடியரசுத்தலைவர் பதவி அழகு பெற்றது!
கவியரசர் கண்ணதாசன் அவர்களால் அரசவைக் கவிஞர் பதவி அழகு பெற்றது!

வாழ்க வளமுடன்!

40 comments:

  1. //ஜவஹர்லால் நேறு அவர்களால் பிரதமர் பதவி அழகு பெற்றது!//

    நல்ல நகைச்சுவையுடன் பதிவை முடித்துள்ளீர்கள்!!!

    ReplyDelete
  2. /////Blogger நந்தவனத்தான் said...
    //ஜவஹர்லால் நேறு அவர்களால் பிரதமர் பதவி அழகு பெற்றது!//
    நல்ல நகைச்சுவையுடன் பதிவை முடித்துள்ளீர்கள்!!!///////

    AK-47 பாதுகாப்பு இல்லாமல் வலம் வந்த ஒரே பிரதமர் அவர்தான். அது தெரியுமா உங்களுக்கு?
    இதை நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம்!

    ReplyDelete
  3. சுவையான பதிவு நன்றி,
    அடுத்த ஜோதிட பாடம் எப்போது அய்யா ?

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா

    உங்களால் வாத்தியார் பதவி அழகு பெற்றது :-))

    ReplyDelete
  5. ஐயா,
    உங்கள் பதிவில் கடைசிவரி விடுபட்டுள்ளது. கடைசி வரியாக இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    சுப்பையா வாத்தியாரால் வகுப்பறை அழகு...



    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  6. மற்றும் ஒரு உதாரணம் ஐயா,

    திருவண்ணாமலையின் எழிலும், தோற்றமும் அழகு !!

    என்றும் அன்புடன்

    ReplyDelete
  7. வாத்தியார் ஐயா, நீங்க நடத்துன பாடத்துலயே , இந்த ஒரு பாடம் தான் எனக்கு புரியலே.. (அதாவது எப்படி புரிஞ்சுக்கறதுனு தெரியலை)

    -->தாஜ் மகல் அழகுனு சொன்ன உடனே ஏன் போய்ட்டான்??

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா
    எல்லாமே அழகாகும் கள்ளம் இல்லா வெள்ளை மனம் இருந்தால் இல்லீங்களா ஐயா .ஐயாவினுடைய பாடம் மாதிரி!!!!
    தென் இந்திய மக்களின் முன்னேற்றம் கருதி அவர[ நேரு ] நான்கு மாநிலங்களையும் ஒன்றாக இணைத்து தஷிணபிரதேசம் என்று ஒன்றிணைக்க வேண்டும் என்று நினைத்தார் .அனால் நம் தெனிந்திய தலைவர்களின் வீண் பிடிவாதத்தால் அது முடியாமல் போய்விட்டது .அவர் எவ்வளவு தொலைநோக்கு பார்வை உள்ளவராக இருந்தார் நம் தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று நாம் இப்பொது அனுபவித்து வரும் பல நல்ல விஷயங்களே சாட்சி [எல்லை ,தண்ணீர் ,போக்குவரத்து பிரச்சினைகள் ]
    நன்றி
    கணேசன்

    ReplyDelete
  9. "அழகு என்பது அதை இரசிக்கத் தெரிந்தவரின் கண்களினுள்".
    உதா : காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு.

    நன்றி.

    ReplyDelete
  10. அய்யா இந்த பதிவை பற்றியதல்ல என்னுடைய கேள்வி. உங்கள் பதிவுகளை படித்து என்னுடைய மனைவியிடம் இதுபற்றி பேசுவதுண்டு. என்னுடைய மனைவி ஒரு சந்தேக வினா ஒன்றை உங்களிடம் கேட்டு தெளிவடைய விரும்புவதால் , அந்த கேள்வியை கீழே கேட்டுள்ளேன்.

    "இரண்டு கிரகங்கள் உச்சம் அடைந்து ஒன்றை ஒன்று பார்த்து கொள்ள கூடாது என்று படித்திருக்கிறேன். ஆனால் இரண்டு கிரகங்கள் நீச்சம் அடைந்து ஒன்றை ஒன்று 7 ஆம் பார்வையாக பார்த்து கொண்டால் என்ன பலனை கொடுக்கும்.?"

    ReplyDelete
  11. /////Blogger Geekay said...
    சுவையான பதிவு நன்றி,
    அடுத்த ஜோதிட பாடம் எப்போது அய்யா?/////

    தொடர்ந்து ஒன்பது கோள்களைப் பற்றிப் பதிவுகள் எழுதிவிட்டேன். இடையில் ஒரு வாரம் வேறு பணிகள் உள்ளதால் பாடங்களை எழுதித் தட்டச்ச நேரம் இல்லை. அடுத்த பாடம் 23.3.2009 திங்கட்கிழமை முதல் வெளிவரும். அதுவரை
    வகுப்பறைக்கு மற்ற பாடங்கள். அவைகள் எல்லாம் முன்பே தட்டச்சு செய்யப்பட்டு சேமிப்பில் உள்ளவைகள். அதனால் வலை ஏற்றுவதில் சிரமம் இல்லை!

    ReplyDelete
  12. //////Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    உங்களால் வாத்தியார் பதவி அழகு பெற்றது :-))//////

    என்மேல் இருக்கும் அன்பால் அப்படிச் சொல்கிறீர்கள். அது உண்மையல்ல! என்னைவிடச் சிறந்த வாத்தியார்கள் உள்ளார்கள்!

    ReplyDelete
  13. /////Blogger வேலன். said...
    ஐயா,
    உங்கள் பதிவில் கடைசிவரி விடுபட்டுள்ளது. கடைசி வரியாக இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
    சுப்பையா வாத்தியாரால் வகுப்பறை அழகு...
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////
    வெறும் அழகு கவைக்கு உதவாது. உதவும்படி இருந்தால் சரிதான் வேலன்!

    ReplyDelete
  14. ////Blogger SP Sanjay said...
    மற்றும் ஒரு உதாரணம் ஐயா,
    திருவண்ணாமலையின் எழிலும், தோற்றமும் அழகு !!
    என்றும் அன்புடன்///////

    ஆமாம். நானும் பலமுறை சென்று, கண்டு மகிழ்ந்திருக்கிறேன்!

    ReplyDelete
  15. //////Blogger BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...
    வாத்தியார் ஐயா, நீங்க நடத்துன பாடத்துலயே , இந்த ஒரு பாடம் தான் எனக்கு புரியலே.. (அதாவது எப்படி புரிஞ்சுக்கறதுனு தெரியலை)
    -->தாஜ் மகல் அழகுனு சொன்ன உடனே ஏன் போய்ட்டான்??///////

    விடை கிடைத்தது. போய்விட்டான்! அவ்வளவுதான் நண்பரே!
    தாஜ்மகலை அழகுக்கு உதரணமாகச் சொல்லலாம் இல்லையா?

    ReplyDelete
  16. /////Blogger choli ganesan said...
    வணக்கம் ஐயா
    எல்லாமே அழகாகும் கள்ளம் இல்லா வெள்ளை மனம் இருந்தால் இல்லீங்களா ஐயா .ஐயாவினுடைய பாடம் மாதிரி!!!!
    தென் இந்திய மக்களின் முன்னேற்றம் கருதி அவர[ நேரு ] நான்கு மாநிலங்களையும் ஒன்றாக இணைத்து தஷிணபிரதேசம் என்று ஒன்றிணைக்க வேண்டும் என்று நினைத்தார் .அனால் நம் தெனிந்திய தலைவர்களின் வீண் பிடிவாதத்தால் அது முடியாமல் போய்விட்டது .அவர் எவ்வளவு தொலைநோக்கு பார்வை உள்ளவராக இருந்தார் நம் தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று நாம் இப்பொது அனுபவித்து வரும் பல நல்ல விஷயங்களே சாட்சி [எல்லை ,தண்ணீர் ,போக்குவரத்து பிரச்சினைகள் ]
    நன்றி
    கணேசன்//////

    அப்படிப்பட்ட தலைவர்கள் இப்பொது இல்லை! அதுதான் சோகம்!

    ReplyDelete
  17. ////Blogger மாசிலா said...
    "அழகு என்பது அதை இரசிக்கத் தெரிந்தவரின் கண்களினுள்".
    உதா : காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு.
    நன்றி./////

    உண்மைதான்! அழகு என்பதற்கு அளவுகோல் இல்லை!

    ReplyDelete
  18. Blogger Ragu Sivanmalai said...
    அய்யா இந்த பதிவை பற்றியதல்ல என்னுடைய கேள்வி. உங்கள் பதிவுகளை படித்து என்னுடைய மனைவியிடம் இதுபற்றி பேசுவதுண்டு. என்னுடைய மனைவி ஒரு சந்தேக வினா ஒன்றை உங்களிடம் கேட்டு தெளிவடைய விரும்புவதால் , அந்த கேள்வியை கீழே கேட்டுள்ளேன்.
    "இரண்டு கிரகங்கள் உச்சம் அடைந்து ஒன்றை ஒன்று பார்த்து கொள்ள கூடாது என்று படித்திருக்கிறேன். ஆனால் இரண்டு கிரகங்கள் நீச்சம் அடைந்து ஒன்றை ஒன்று 7 ஆம் பார்வையாக பார்த்து கொண்டால் என்ன பலனை கொடுக்கும்.?"////

    சுபக்கிரகம் என்ன நிலையில் இருந்தாலும், எந்த இடத்தில் இருந்தாலும் சுபக்கிரகம்தான். கேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே! அதுபோல தீய கிரகம் என்ன நிலையில் இருந்தாலும் தீய கிரகம்தான்!

    உச்சனை உச்சன் பார்த்தால் ஜாதகன் பிச்சை எடுப்பான் என்று சொல்வார்கள். அது வெறும் சொல்லடை. உண்மையில்லை.
    அதுபோல நீசனை நீசன் பார்த்தாலும் ஒன்றும் பிரச்சினை இல்லை. அவர்வர்களுக்கு உள்ள பணிகளை அவரவர் தசா/ புத்திகளில் நடத்துவார்கள். என்ன பலன்களின் அளவு வேறுபடும்.

    சுகக்கிரகம் உச்சமானால் ஜாதகன் காரில் போவான். நீசமானால் நடந்து போவான்
    களத்திரகாரகன் உச்சமானால் நல்ல மனைவி கிடைப்பாள். அவன் நீசமானால் பிரச்சினைக்குரிய மனைவி கிடைப்பாள்
    இப்படியாக எல்லாம் வேறுபடும்!

    ReplyDelete
  19. ஜவகர்லால் நேருவால் உண்மையில் பிரதமர் பதவி அழகுதான். அவர்,காமராஜர் உள்ளிட்ட தலைவர்களால் அவர்கள் வகித்த பதவி அழகு பெற்றது . ஒன்றும் தெரியாதவர்க்கு அது நகைச்சுவையாகத்தான் தெரியும் . நன்றி ஐயா !

    ReplyDelete
  20. //AK-47 பாதுகாப்பு இல்லாமல் வலம் வந்த ஒரே பிரதமர் அவர்தான். அது தெரியுமா உங்களுக்கு?//

    நன்றாகத் தெரியும் ஐயா, அது மட்டுமல்ல இப்போது எல்லா பிரதமர்களும் AK-47 பாதுகாப்புடன் வலம்வர அவர்தான் காரணம் எனவும் தெரியும் (அவர் காஷ்மீர் பிரச்சனையில் சொதப்பியதைத்தான் சொல்கிறேன்)

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. //ஒன்றும் தெரியாதவர்க்கு அது நகைச்சுவையாகத்தான் தெரியும்//

    ஜின்னாவிற்கு அவர் பிரதமர் பதவியை விட்டுத் தந்திருந்தால் பிரிவினையை தவிர்த்திருக்கலாம் என்பது பற்றியும்,1960-ல் வயதாகி விட்டதால்தான் நாடு பிரிந்தாலும் பரவாயில்லை என பிரதமர் பதவியை அடைய அவர் துடித்தது பற்றி அவரே கொடுத்த பேட்டி பற்றியும், காந்திஜியே அவர் பிரதமராவதை விரும்பவில்லை என்பது பற்றியும், சீனா பிரச்சனையில் அவர் சொதப்பியது பற்றியும் ஏதோ கொஞ்சம் தெரியும். அதை வைத்து ஏதோ எழுதி விட்டேன், மன்னிக்கவும்.

    ReplyDelete
  23. Dear Sir

    Edhu unmayana Azhagu Edhu Poiyyana Azhagu --- Nalla Padhivu..

    Iam waiting for next lesson Sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  24. ஒரு குடுபத்தில் உள்ள தந்தைக்கு சனி மகா திசை சனி புத்தி -ஒரு வருடமாய் ( மகரக லக்கினம் -பத்தில் சனி+செவ்),
    தாய்க்கு ஜென்மச் சனி(கடக லக்கினம்- 6 ல் சனி + கேது-இரண்டாவது சுற்று),
    மகனுக்கு சுக்கிர திசை (மகர லக்கினம்-11 ல் சனி+சுக்)தொடங்கி 8 வ்ருடம் கழிந்துள்ள நிலை யில் பலன்கள் எப்படி ?
    ஒன்றுக் கொன்று துணை செய்யுமா?
    ஒன்று மற்றொன்றின் பலனை திசை திருப்புமா?

    குடுபத்தில் ஒருவரின் ஜாதக பலன் அடுத்தவரை பாதிக்குமா?
    ஒருவரின் யோக திசை/தசா புத்தி அடுத்தவ்ரின் சிரமத் தடைகளை சரி செய்ய்யுமா?

    இது பற்றி ஒரு பதிவு பலரின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும்.

    ReplyDelete
  25. //////Blogger citizen said...
    ஜவகர்லால் நேருவால் உண்மையில் பிரதமர் பதவி அழகுதான். அவர்,காமராஜர் உள்ளிட்ட தலைவர்களால் அவர்கள் வகித்த பதவி அழகு பெற்றது . ஒன்றும் தெரியாதவர்க்கு அது நகைச்சுவையாகத்தான் தெரியும் . நன்றி ஐயா !/////

    உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. ///////Blogger நந்தவனத்தான் said...
    //AK-47 பாதுகாப்பு இல்லாமல் வலம் வந்த ஒரே பிரதமர் அவர்தான். அது தெரியுமா உங்களுக்கு?//
    நன்றாகத் தெரியும் ஐயா, அது மட்டுமல்ல இப்போது எல்லா பிரதமர்களும் AK-47 பாதுகாப்புடன் வலம்வர அவர்தான் காரணம் எனவும் தெரியும் (அவர் காஷ்மீர் பிரச்சனையில் சொதப்பியதைத்தான் சொல்கிறேன்)//////

    காஷ்மீர் பிரச்சினையில் சொதப்பியது அன்றைய தேதியில் காஷ்மீரின் மன்னராக இருந்தவரே காரணம். வரலாற்றைப் படித்துப்பாருங்கள். இன்றைய வன்முறைகளுக்குப் பெருகிவரும் தீவிரவாதமே காரணம்!

    ReplyDelete
  27. /////Blogger நந்தவனத்தான் said...
    //ஒன்றும் தெரியாதவர்க்கு அது நகைச்சுவையாகத்தான் தெரியும்//
    ஜின்னாவிற்கு அவர் பிரதமர் பதவியை விட்டுத் தந்திருந்தால் பிரிவினையை தவிர்த்திருக்கலாம் என்பது பற்றியும்,1960-ல் வயதாகி விட்டதால்தான் நாடு பிரிந்தாலும் பரவாயில்லை என பிரதமர் பதவியை அடைய அவர் துடித்தது பற்றி அவரே கொடுத்த பேட்டி பற்றியும், காந்திஜியே அவர் பிரதமராவதை விரும்பவில்லை என்பது பற்றியும், சீனா பிரச்சனையில் அவர் சொதப்பியது பற்றியும் ஏதோ கொஞ்சம் தெரியும். அதை வைத்து ஏதோ எழுதி விட்டேன், மன்னிக்கவும்.///////

    நாடு பிரிந்தது 1960ல் இல்லை. அது நடந்தது 1947ல்
    அது ஆங்கிலேயர்களின் divide & rule policyயால் வந்த சூழ்ச்சி!

    ReplyDelete
  28. Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Edhu unmayana Azhagu Edhu Poiyyana Azhagu --- Nalla Padhivu..
    Iam waiting for next lesson Sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    அடுத்த பாடம் (23.3.2009) திங்கட்கிழமை முதல்!

    ReplyDelete
  29. Blogger புரட்சித் தமிழன் said...
    ஒரு குடுபத்தில் உள்ள தந்தைக்கு சனி மகா திசை சனி புத்தி -ஒரு வருடமாய் ( மகரக லக்கினம் -பத்தில் சனி+செவ்),
    தாய்க்கு ஜென்மச் சனி(கடக லக்கினம்- 6 ல் சனி + கேது-இரண்டாவது சுற்று),
    மகனுக்கு சுக்கிர திசை (மகர லக்கினம்-11 ல் சனி+சுக்)தொடங்கி 8 வ்ருடம் கழிந்துள்ள நிலையில் பலன்கள் எப்படி ?
    ஒன்றுக் கொன்று துணை செய்யுமா?
    ஒன்று மற்றொன்றின் பலனை திசை திருப்புமா?/////

    ஒரே நேரத்தில் குடும்பத்தில் உள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு, இது போல தீய கிரகங்களின் திசை நடந்தால் மொத்த குடும்பமும் அவதியுறும். பலன்கள் திசை திரும்பாது. Traffic Jam ஆகி படுத்தி எடுக்கும்!

    /////// குடுபத்தில் ஒருவரின் ஜாதக பலன் அடுத்தவரை பாதிக்குமா?
    ஒருவரின் யோக திசை/தசா புத்தி அடுத்தவரின் சிரமத் தடைகளை சரி செய்யுமா?//////

    ஒருவரின் பலன் அவரை மட்டும் பாதிக்கும். கணவன் மனைவி உறவில்கூட பாதிப்பு யாருக்கு இருக்கிறதோ அவரை மட்டும் அதிகம் பாதிக்கும். அடுத்தவர் அவருடன் சேர்ந்து நனைய வேண்டியதிருக்கும்.

    ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றால் வீட்டில் உள்ள மற்றவர்கள் நிம்மதியாக இருக்க முடியுமா?
    அந்த நிலைமை மற்றவர்களுக்கு ஏற்படும்!

    ReplyDelete
  30. //நாடு பிரிந்தது 1960ல் இல்லை. அது நடந்தது 1947ல்
    அது ஆங்கிலேயர்களின் divide & rule policyயால் வந்த சூழ்ச்சி!//

    வாத்தியாரைய்யா, 1960 அவரு பேட்டி கொடுத்த வருடம்!

    ReplyDelete
  31. /////Blogger நந்தவனத்தான் said...
    //நாடு பிரிந்தது 1960ல் இல்லை. அது நடந்தது 1947ல்
    அது ஆங்கிலேயர்களின் divide & rule policyயால் வந்த சூழ்ச்சி!//
    வாத்தியாரைய்யா, 1960 அவரு பேட்டி கொடுத்த வருடம்!/////

    உங்கள் சுறுசுறுப்பிற்குப் பாராட்டுக்கள்!
    அவர் கொடுத்த பேட்டி இணையத்தில் கிடைக்கிறதா? இருந்தால் எனக்கு அதைக் cut & paste செய்து மின்னஞ்சலில் அனுப்பிவையுங்கள். நான் படித்துப்பார்க்க விரும்புகிறேன்!

    ReplyDelete
  32. //காஷ்மீர் பிரச்சினையில் சொதப்பியது அன்றைய தேதியில் காஷ்மீரின் மன்னராக இருந்தவரே காரணம்.//

    அவரை குறை சொல்லி புண்ணியமில்லை.அவருடைய நாட்டை அவர் ஆள விரும்பினார். பின் பாக்கி'கள் தொந்தரவு தரவும் இங்கு இணைய சம்மதித்தார்.

    //இன்றைய வன்முறைகளுக்குப் பெருகிவரும் தீவிரவாதமே காரணம்!//

    தீவிரவாத்திற்கு வித்திட்டது நேரு முடித்து வைத்தது, அவரது குடும்பம்!

    நேரு பிரச்சனையை ஐநா விற்கு கொண்டு போனது முதல் தவறு.

    இணைப்பிற்கு பின்னர் செய்தது இது... Even after the State joined India, Nehru backed the Sheikh to the hilt vis-a-vis other political forces in the State: Maharaja Hari Singh in the Valley and the Praja Parishad movement in Jammu. But Nehru's first serious mistake was to put all his eggs in one basket — Sheikh Abdullah. He sought the people's support but his only instrument of strategy was Abdullah and once the latter started seeking complete internal sovereignty, or else an independent state, Nehru dumped the Sheikh as well as the people's constituency. Since then, democracy was never allowed to take root in the State, subordinated as it was to India's "national interests". (நன்றி:The Hindu)

    இப்படி மக்கள் தீர்ப்பை ஒதுக்கி ஷேக்கை பிடித்து உள்ளே தள்ளியதால் ஆரம்பித்த மக்கள் அதிர்ப்தி வளர்ந்து இப்படி ஆகிவிட்டது.

    நிற்க, இது பதிவுக்கு சம்மந்தமற்று விவாதம் போய் கொண்டிருக்கிறது. சின்ன கமெண்டுடன் விட்டிருப்பேன். சிட்டிசன் "ஒன்றும் தெரியாதவர்" என தடாலடியாக சொல்லி விட்டதால் இப்படியாகிவிட்டது மன்னிக்கவும்

    ReplyDelete
  33. நண்பர் நந்தவனத்தார் நகைச்சுவை என்றதும் எனக்கு முதலில் புரியவில்லை. பிறகுதான் கீழே படிக்கப் படிக்க ஒவ்வொன்றாக புரிய ஆரம்பித்தது. பதிவிற்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் வரலாற்றை திரும்பி பார்ப்பது தவறில்லை என்று நினைக்கிறேன். இன்றைக்கு எனக்கு தெரியாத சில புதிய தகவல்கள் கிடைத்தன. இதற்கு காரணமான சர்ச்சை வரவேற்க பட வேண்டிய ஒன்றே. பல விஷயங்கள் நான் பிறப்பதற்கு முன் நடந்தது. நான் இந்தியாவில் பிறந்து வளராவிட்டாலும் இந்தியாவைப் பற்றி தெரிந்து கொள்ள சிறிது ஆர்வம் காட்டுவதுண்டு.

    ReplyDelete
  34. The explanation of beauty is simple ' Beauty is in the eyes of the beholder". The politician is also a human being with his ambitions and limitations.Dr. K.N.Rao has written a book :Nehru Dynasty: with astrological significance.

    ReplyDelete
  35. ஐயா ஒரு வேண்டுகோள். சனியைப் பற்றி எழுதி விட்டீர்கள். அவரது பிள்ளைகள், குட்டிகள் இல்லாவிட்டால் எப்படி சொல்வது. உபகிரகங்கள் மாந்தி மற்றும் குளிகனைப் பற்றி எழுதுங்கள். என் ஜாதகத்தில் 11ல் இந்த இரண்டு வில்லன்களோடு 1½ வில்லன் கேதுவும் இருக்கிறார். இவைகளை குருவும் வேறு மூன்று வில்லன்களும் பார்வையிடுகிறார்கள். பலன்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசை.

    ReplyDelete
  36. /////////Blogger நந்தவனத்தான் said...
    //காஷ்மீர் பிரச்சினையில் சொதப்பியது அன்றைய தேதியில் காஷ்மீரின் மன்னராக இருந்தவரே காரணம்.//
    அவரை குறை சொல்லி புண்ணியமில்லை.அவருடைய நாட்டை அவர் ஆள விரும்பினார். பின் பாக்கி'கள் தொந்தரவு தரவும் இங்கு இணைய சம்மதித்தார்.
    //இன்றைய வன்முறைகளுக்குப் பெருகிவரும் தீவிரவாதமே காரணம்!//
    தீவிரவாத்திற்கு வித்திட்டது நேரு முடித்து வைத்தது, அவரது குடும்பம்!
    நேரு பிரச்சனையை ஐநா விற்கு கொண்டு போனது முதல் தவறு.
    இணைப்பிற்கு பின்னர் செய்தது இது... Even after the State joined India, Nehru backed the Sheikh to the hilt vis-a-vis other political forces in the State: Maharaja Hari Singh in the Valley and the Praja Parishad movement in Jammu. But Nehru's first serious mistake was to put all his eggs in one basket — Sheikh Abdullah. He sought the people's support but his only instrument of strategy was Abdullah and once the latter started seeking complete internal sovereignty, or else an independent state, Nehru dumped the Sheikh as well as the people's constituency. Since then, democracy was never allowed to take root in the State, subordinated as it was to India's "national interests". (நன்றி:The Hindu)
    இப்படி மக்கள் தீர்ப்பை ஒதுக்கி ஷேக்கை பிடித்து உள்ளே தள்ளியதால் ஆரம்பித்த மக்கள் அதிர்ப்தி வளர்ந்து இப்படி ஆகிவிட்டது.
    நிற்க, இது பதிவுக்கு சம்மந்தமற்று விவாதம் போய் கொண்டிருக்கிறது. சின்ன கமெண்டுடன் விட்டிருப்பேன். சிட்டிசன் "ஒன்றும் தெரியாதவர்" என தடாலடியாக சொல்லி விட்டதால் இப்படியாகிவிட்டது மன்னிக்கவும்//////

    தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  37. /////Blogger ananth said...
    நண்பர் நந்தவனத்தார் நகைச்சுவை என்றதும் எனக்கு முதலில் புரியவில்லை. பிறகுதான் கீழே படிக்கப் படிக்க ஒவ்வொன்றாக புரிய ஆரம்பித்தது. பதிவிற்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் வரலாற்றை திரும்பி பார்ப்பது தவறில்லை என்று நினைக்கிறேன். இன்றைக்கு எனக்கு தெரியாத சில புதிய தகவல்கள் கிடைத்தன. இதற்கு காரணமான சர்ச்சை வரவேற்க பட வேண்டிய ஒன்றே. பல விஷயங்கள் நான் பிறப்பதற்கு முன் நடந்தது. நான் இந்தியாவில் பிறந்து வளராவிட்டாலும் இந்தியாவைப் பற்றி தெரிந்து கொள்ள சிறிது ஆர்வம் காட்டுவதுண்டு.//////

    உங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டுக்கள். நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  38. //////Blogger krish said...
    The explanation of beauty is simple ' Beauty is in the eyes of the beholder". The politician is also a human being with his ambitions and limitations.Dr. K.N.Rao has written a book :Nehru Dynasty: with astrological significance.//////

    தகவலுக்கு நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  39. /////Blogger ananth said...
    ஐயா ஒரு வேண்டுகோள். சனியைப் பற்றி எழுதி விட்டீர்கள். அவரது பிள்ளைகள், குட்டிகள் இல்லாவிட்டால் எப்படி சொல்வது. உபகிரகங்கள் மாந்தி மற்றும் குளிகனைப் பற்றி எழுதுங்கள். என் ஜாதகத்தில் 11ல் இந்த இரண்டு வில்லன்களோடு 1½ வில்லன் கேதுவும் இருக்கிறார். இவைகளை குருவும் வேறு மூன்று வில்லன்களும் பார்வையிடுகிறார்கள். பலன்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசை.////////

    எல்லாமே கட்டுரைகளாக வர இருக்கின்றன. ஒன்றையும் நான் விடுவதாக இல்லை! சற்றுப் பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  40. //எல்லாமே கட்டுரைகளாக வர இருக்கின்றன. ஒன்றையும் நான் விடுவதாக இல்லை! சற்றுப் பொறுத்திருங்கள்!//

    நன்றி ஐயா!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com