மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.3.09

Bullet Proof ஜாக்கெட்டும் சனீஷ்வரனும்!

Bullet Proof ஜாக்கெட்டும் சனீஷ்வரனும்!

சனிப் பெயர்ச்சிப் பலன்களை நாளிதழ்களிளும் சரி, குறு இதழ்களிளும் சரி
பரபரப்பாக எழுதுவார்கள்.

சாதாரணக் குடிமகனுக்கு - என்ன தெரியும்? ஒன்றும் சரிவரத் தெரியாது?

சனிப்பெயர்ச்சி என்றால், சனீஸ்வரன் மூட்டை முடிச்சுக்களையெல்லாம்
கட்டிக்கொண்டு தன் குடும்பத்தாருடன் அடுத்த ஊருக்குக் குடி பெயர்ந்து
போகிறார் என்று நினைத்துக்கொண்டிருப்பான்.

வானவெளியின் வட்டத்திலுள்ள 360 டிகிரிகளையும் (பாகைகளையும்)
30 வருடங்களில் (அதாவது 360 மாதங்களில் மாதம் ஒரு டிகிரி என்ற விகிதத்தில்)
கடந்து ஒரு சுற்றை முடிக்கும் சனீஸ்வரன், ஒரு ராசியின் 30 டிகிரிகளையும்
கடந்து அடுத்த ராசியின் எல்லைக்குள் பிரவேசம் செய்வதுதான் சனிப் பெயர்ச்சி.

சிம்ம ராசியில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரவேசித்தவர், அந்த
ராசியின் 24 டிகிரி தூரத்தைக் கடந்து இன்று 24.34 என்ற டிகிரிக் கல்லில்
நிற்கின்றார். முழு தூரத்தையும் அவர் இன்னும் ஆறு மாதங்களில் கடந்து கன்னி
ராசிக்குள் பிரவேசிப்பார்

அதனால் என்ன நடக்கும்?

பத்திரிக்கைகளில் சனிப் பெயர்ச்சிக்காக எழுதுவதைப் போன்றுதான் அவ்வளவு
ராசிக்காரர்களுக்கும் நடக்குமா?

அப்படி நடக்காது!

ஏன் நடக்காது?

இந்தியாவின் ஜனத்தொகை சுமார் 108 கோடி மக்கள். 12 ஆல் வகுத்தால் சராசரியாக
ஒரு ராசிக்கு 9 கோடி என்ற அளவில் மக்கள் இருக்கலாம். அந்த ஒன்பது கோடி
மக்களுக்கும் அவர்களுடைய ராசிப்படி குறிப்பிட்டுள்ள பலன்கள் எப்படி ஒரே
மாதிரியாக நடக்கும்?

அபத்தமாக இல்லையா?

பின் எப்படி நடக்கும்?

ஒவ்வொருவருடைய, பிறந்த ஜாதகம், அவர்களுடைய இன்றைய வயது,
ஜாதகத்திலுள்ள கிரகங்களின் வலிமை, அஷ்டவர்க்கத்தில் அந்த ஜாதகருடைய
குறிப்பிட்ட ராசியிலுள்ள பரல்கள், முக்கியமாக ஜாகதருடைய நடப்பு தசா புக்தி
போன்றவைகளை வைத்துத்தான் கோச்சார சனியுடைய தீய பலன்கள் அல்லது
நல்ல பலன்கள் இருக்கும்.

உதாரணத்திற்கு லாபாதிபதியுனுடைய தசை நடந்து கொண்டிருக்கும் ஜாதகனை,
அந்த லாபதிசைக்கு அதிபதியான கிரகம் அணைத்துக் கொள்ளூம். Bullet Proof
ஜாக்கெட் போட்ட மனிதனை எப்படித் துப்பாக்கிக் குண்டுகள் அனுகாதோ
அப்படி என்று வைத்துக் கொள்ளுங்கள். இல்லை Black Cat Commandos with
AK47 Riffle படையுடன் இருக்கும் ஒரு நபரைத் தீய சக்திகள் எப்படி அனுக
முடியாதோ, அப்படி என்று வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் 30 பரல்களுக்கு
மேல் உள்ள ராசிகளில் சஞ்சாரம் செய்யும் சனி அந்த ஜாதகனை ஒன்றும் செய்யாது.

இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் பெயர்ச்சி பலன்கள் பொதுவானவை.
மழை பெய்வதைப் போல! வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பவன் மழையைப்பற்றிக்
கவலைப்பட வேண்டாம். காருக்குள், கண்ணாடிகளை ஏற்றிவிட்டு அமர்ந்து
செல்பவனும் கவலைப்பட வேண்டாம். குடை வைத்திருப்பவன், பாதி நனைய
வாய்ப்புண்டு அவன் சற்றுக் கவலைபடலாம். ரெயின் கோட் போட்டிருப்பவனும்
சிறிது நனைய வாய்ப்புண்டு அவனும் சற்றுக் கவலைபடலாம். முழுதாகக் கவலைப்
பட வேண்டியன் இவை எதுவுமே இல்லாமல் நடுத் தெருவில் மாட்டிக் கொண்டவன்
மட்டுமே.

ஆகவே உங்கள் வயது to நடப்பு தாசாபுக்தி என்று மேற் சொன்னவை மட்டுமே
சனியின் பெயர்ச்சிப் பலனை நிர்ணயம் செய்யும். அதன்படிதான் பலன்களும்
இருக்கும். யாரும் பொதுப்பலன்களைப் படித்து விட்டுக் குழம்ப வேண்டாம்!

கோச்சாரம் (கோள்களின் சாரம்)

ஒரு குடும்பப் பெண்ணிற்குப் பல பணிகள் உள்ளன. தாயாக, தாதியாக, தாரமாக,
தோழியாக அவள் அவ்வப் போது தன் கடமைகளைச் செய்யவேண்டும்.
பகல் முழுவதும் அவள் தாதியாகத் தன்வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும்,
தன் குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருந்து பணிவிடைகளைச் செய்ய
வேண்டும். தன் கணவனிற்குத் தோழியாக இருந்து அரவணைப்பையும், தாரமாக
இருந்து அவனுடைய அபிலாஷைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

ஒவ்வொரு நாளும் அவள் பன்முகம் காட்டிப் பணிகளைச் செய்ய வேண்டும்.
பெண்ணிற்கு என்றில்லை. ஆணிற்கும் அதேபோல பல பணிகள் உண்டு.
தந்தையாக, பொருளீட்டிக் குடும்பத்தைக் காக்கும் காவலனாக, தன் மனைவிமீது
அன்பைப் பொழியும் கணவனாக அவனுக்கும் பன்முகப் பணிகள் உள்ளன.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் கோள்களுக்கும் அவ்வாறு பல பணிகள்
உள்ளன!

Natal Chart எனப்படும் பிறந்த ஜாதக அமைப்பில் உள்ள பலன்களை அவ்வப்போது
அவைகள் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். அதேபோல தங்களுக்குரிய
திசைகள் (Main periods) அல்லது புக்திகள் (SubPeriods) வரும்போது அதற்குரிய
பலன்களையும் ஜாதகனுக்குக் கொடுக்க வேண்டும். அதோடு சுழற்சியில், வான
வெளியில் சுழன்று வரும்போது (That is in transit) சுழற்சியில் ஒவ்வொரு ராசிக்கும்
மாறும்போது அதற்கென்று விதிக்கப்பெற்றுள்ள பலன்களையும் வழங்கவேண்டும்.

சுழற்சியில் என்ன பலன் என்கிறீர்களா?

சனீஷ்வரனையே எடுத்துக்கொள்வோம் - அவர் ஒரு சுற்றை முடிக்க சுமார் முப்பது
ஆண்டுகள் ஆகும்.ஒவ்வொரு ராசியிலும் அவர் இரண்டரை ஆண்டுகள்
சஞ்சரிப்பார். அப்படிச் சஞ்சரிக்கும் காலங்களில்,

1. 12ம் இடம், 1ம் இடம், 2ம் இடம் ஆகிய இடங்களில் ஏழரை ஆண்டுச் சனியாகவும்
2. 8ம் இடத்தில் அஷ்டமச் சனியாகவும், நான்கு ராசிகளிலும் சேர்த்து மொத்தம்
10 ஆண்டுகள் பெரும் அளவு தீயபலன்களையே கொடுப்பார்

ஏழரை ஆண்டுச் சனி (எழரை நாட்டுச் சனி அல்லது சாடே சனி என்றும்
சொல்வார்கள்) ஜாதகனின் சந்திரன் அமர்ந்த ராசிக்குப் பன்னிரெண்டாம் இடத்தில்
சனி வந்த நாள் முதலே துவங்கி ஏழரை ஆண்டுகள் வரை நீடிக்கும். அந்தக் காலக்
கட்டத்தில் ஜாதகருக்குப் பொதுவாக தீய பலன்களே நடைபெறும்.

அனைவருடனும் கருத்து வேறுபாடுகள்,சச்சரவுகள், வம்பு, வழக்குகள்,
தொழிலில் நஷ்டம் அல்லது பார்க்கும் வேலையில் தொல்லைகள், இடமாற்றங்கள்,
குடும்பத்தினருக்கு உடல் நலக் குறைவு, மனவேதனை, அமைதியின்மை
போன்றவைகள் ஏற்பட்டு ஆட்டிப்படைக்கும். ’சோதனைமேல் சோதனை
போதுமடா சாமி' என்று பாடும் அளவிற்குப் பாதகங்களை ஏற்படுத்தி
விடுவார்.

சந்திர ராசியிலிருந்து 3ம்வீடு, 6ம்வீடு, 11ம் வீடு ஆகிய மூன்று ராசிகளைத்
தவிர மற்ற இடங்களில் அவர் நன்மைகளைச் செய்வதில்லை. இதற்கு
ஒரு விதிவிலக்கு உண்டு. அவர் சஞ்சரிக்கும் ராசி அஷ்டவர்க்கத்தில்
30 பரல்களுக்குமேல் பெற்ற ராசியாக இருந்தால் அந்த இரண்டரை
ஆண்டுகள் ஜாதகனுக்குத் தீமையான பலன்கள் இருக்காது.

ஒருவர் 90 ஆண்டுகள் வரை வாழ்கின்றார் என்று வைத்துக்கொண்டால், அவர்
வாழ்க்கையில் மூன்று முறைகள் இந்த ஏழரை நாட்டுச் சனி வந்து போய் விடும்.

அவற்றை முறையே மங்குசனி, பொங்குசனி, மரணச்சனி என்பார்கள்.

முதலில் வரும் ஏழரை நாட்டுச் சனி மங்குசனி எனப்படும். அது அறிவு,கல்வி, வேலை
வாய்ப்பு அனைத்தையும் மங்கவைத்து விடும். மொத்தத்தில் வெறுத்து விடும்.(Defame
and detachment Period என்றும் சொல்லலாம்)

அடுத்த சுற்றில் வரும் சனி கஷ்டத்தைக் கொடுக்கும், ஆனால் அதே நேரத்தில் பல
அனுபவங்களையும், வாய்ப்புக்களையும் கொடுத்து உயர்த்தி விடும் (Elevation Period
எனச் சொல்லலாம்) அதனால்தான் அந்தக் காலகட்டத்தைப் பொங்குசனி' என்பார்கள்.

மூன்றாவது சுற்றில் வரும் ஏழரை நாட்டுச் சனி பொதுவாக ஜாதகனுக்கு, எட்டாம் வீட்டில்
நிர்ணயிக்கப் பெற்ற ஆயுள் அளவு (Span of Life) நிறைவு பெறும் காலமென்றால்,
அவனுடைய கதையை முடித்துக் கையோடு கூட்டிக் கொண்டுபோய் விடும்.

சிலர் விதிவிலக்காக மூன்றாவது சுற்றையும் தாக்குப் பிடித்துக் கொண்டு உயிரோடு
இருப்பார்கள். அவர்கள் தீர்க்க ஆயுள் பெற்ற ஆசாமிகள். அவர்கள், அவர்களின்
ஜாதகத்தின்படி (In the period of Second Lord or Seventh Lord) அதற்குரிய நேரத்தில்
இறைவனடி சேர்வார்கள் அல்லது இயற்கை எய்துவார்கள்

இதுபோல குரு பகவானும் தனது சுழற்சியில் ஒவ்வொரு ராசியிலும் தான் சஞ்சரிக்கும்
காலத்தில் அததற்குரிய பலன்களை வாரி வழங்குவார்.அவர் ஒரு சுற்றை முடிக்க
சுமார் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு ராசியிலும் அவர் ஒரு ஆண்டு காலம்
சஞ்சரிப்பார். அப்படிச் சஞ்சரிக்கும் காலங்களில், 7ம் வீடு, 11ம் வீடு, 5ம் வீடு, 9ம் வீடு
ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் போது மிகவும் நன்மையான பலன்களைக் கொடுப்பார்

வீட்டில் சுப காரியங்களை நடத்தி வைப்பார், திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம்
நடைபெறும். நல்ல வேலைக்காக ஏங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை
கிடைக்கும். செல்வம் சேரும், வீடு, நிலபுலன்கள் வாங்கும் வாய்ப்புக்களை
உண்டாக்குவார். வழக்குகள் வெற்றி பெரும்.மழலைச் செல்வம் கிடைக்கும். வீட்டில்
சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். மொத்தத்தில் 'உலகம் பிறந்தது எனக்காக,
ஓடும் நதிகளும் எனக்காக’ என்று பாட வைத்து விடுவார்

ஏழரைச் சனி என்ன செய்யும்? என்ன வேண்டுமென்றாலும் செய்யும்!

ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவியில்
இல்லாதவன், புத்திசாலி, முட்டாள் என்ற வித்தியாசம் எதுவும் சனிக்குக் கிடையாது!
துவைக்க வேண்டிய ஆளைத் துவைத்துக் காயப்போட்டு, அயர்ன் பண்ணி மடித்து
அலமாரியில் வைத்து விட்டுப் போய்விடுவார் சனீஸ்வரன்.

பல காரியங்கள் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடும்.

இதற்கு உதாரணமாக பல விபத்துக்களைச் சொல்லலாம். எத்தனை விபத்துக்களில்
எத்தனை பேர் உருவம் தெரியாமல் போயிருக்கிறார்கள்?

நீங்கள் அற்புதமாகக் கார் ஓட்டக்கூடியவர்தான், உங்கள் காரும் புதிதாக
அவ்வளவு சேஃப்டி வசதிகளையும் கொண்ட கார்தான் என்றாலும் எதிரில்
வருகிறவன் தவறு செய்தால் நீங்கள் என்ன செய்ய முடியும்? அல்லது
பின்னால் வருகிறவன் தவறு செய்தால் நீங்கள் எப்படித் தப்பிக்க முடியும்?

மெக்காஃபி, ஏ.வி.ஜி என்று ஸ்கேனர் வைத்தெல்லாம் சனியைத் தடுத்து நிறுத்த
முடியாது. அதே போல எவ்வளவு பெரிய ஆள் என்றாலும் அதற்குரிய நேரம்
வந்து விட்டால் என்ன நடந்தது என்று நினைக்கு முன்பே எல்லாம் நடந்து
முடிந்திருக்கும்.

எல்லைக் காவல் படைகளை ஏ.கே47 உடன் வாசலில் வைத்துத் தடுக்கவும்
முடியாது. நேரம் வந்தால் யார் யாரை எப்படிப் போட வேண்டுமோ அப்படிப்
போட்டு விடுவார்.

விபத்து என்றில்லை. வாழ்க்கையில் பலவித இன்பங்களையும், துன்பங்களையும்
நமது ஜாதகப்படி அளந்து கொடுத்துவிட்டுப்போகிறவர் அவர்தான்.

ஏழரைச் சனி என்றால் என்ன?

ஒருவரின் சந்திர ராசிக்கு, முன் ராசியிலும், சந்திர ராசியிலும், அதற்கு அடுத்த
ராசியிலும் சனீஷ்வரன் சஞ்சாரம் செய்யும் காலமே ஏழரைச் சனியாகும்!

உங்களுக்குப் புரியும்படி உங்கள் மொழியில் சொன்னால், அந்த மூன்று வீடுகளில்
தலா இரண்டரை வருடங்கள் வீதம் மொத்தம் ஏழரை ஆண்டுகள் அவர் வந்து
(அழைக்காத) விருந்தாளியாகத் தங்கிவிட்டுப் போகும் கால கட்டமே ஏழரைச்
சனியாகும்.

அதென்ன இரண்டரை வருடக் கணக்கு?

அவர் வானவெளியில் எல்லா ராசிகளிலும் ஒரு ரவுண்டு அடித்துக் ஹாயாக
சுற்றிவரும் மொத்த காலம் 30 ஆண்டுகள் ஆகும். அதை ராசிக் கணக்கிற்குக்
கொண்டு வர 30 வருடங்கள் வகுத்தல் 12 ராசிகள் = இரண்டரை ஆண்டுகள்.

அவருடைய தொல்லைகளில் இருந்து தப்பிக்கும் யோகம் உண்டா?

உண்டு!

அந்த மூன்று ராசிகளிலும் அஷ்டவர்க்கப் பரல்கள் 30ற்குமேல் இருந்தால்,
அவருடைய தொல்லைகள் தடுக்கப்பெற்றுவிடும். ஜாதகன் தப்பித்துவிடுவான்.
அந்த மூன்று ராசிகள் என்றில்லை. அவற்றில் ஒன்றில் 30 பரல்கள் இருந்தால்
கூட அந்தப் பகுதிக்கு உரிய இரண்டரை வருடங்கள் ஜாதகன் நிம்மதியாக
இருக்கலாம்.

அப்படி எத்தனை முறை அவர் வலம் வருவார்?

80 அல்லது 90 வயதுவரை ஒருவருக்கு ஆயுள் என்றால், மூன்று முறை அவர்
விருந்தினராகத் தங்கிவிட்டுப்போவார்.

தொல்லைகள் ஒரே மாதிரியாகவா இருக்கும்?

இல்லை! வேறுபடும்!

முதல் சுற்று: மங்கு சனி.மங்கு என்பதற்கு மங்கிப் போகுதல் என்று பொருள்
அடுத்த சுற்று: பொங்கு(ம்) சனி மூன்றாவது சுற்று: மரணச்சனி அல்லது அந்திம
காலச் சனி!

இவற்றுள் முதல் சுற்றுதான் மிகவும் மோசமானது!

சிலர் பிறக்கும்போதே ஏழரைச் சனியுடன் பிறப்பார்கள். உதாரணத்திற்கு பூசம்,
ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை முதல் 2 பாதங்களில்
இன்றைக்குப் பிறக்கும் குழந்தைகள் ஏழரைச் சனியுடன் பிறந்துள்ளன என்று
வைத்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகளின் ஜாதகம் 12 வயதுவரை வேலை செய்யாது. அவர்களுக்கு
அவர்களுடைய பெற்றோர்களின் ஜாதகப்படிதான் பலன்கள்.

ஒரு குழந்தை அந்த வயதிற்குள் ஏழரைச் சனியின் பிடியில் அகப்பட்டால்,
அந்தக் குழந்தைக்கு எதுவும் தெரியாது. அதனுடைய அவதிகளைப் பெற்றோர்கள்
தான் அனுபவிக்க நேரிடும்.

அதற்கு அடிக்கடி உடல் நலம் குன்றி பெற்றோர்களை அவதிப்பட வைக்கும்.

பன்னிரெண்டு வயதிற்கு மேல் சனிப்பிடித்தால் குழந்தையின் கவனம் சிதறும்.
சரியான கவனத்தைப் படிப்பில் செலுத்தாது. Drop out from School கேசாகிவிடும்.
பத்து, ப்ளஸ் டூ வகுப்பில் பெயிலாகும் குழந்தைகளில் பெரும்பாலோனருக்கு
ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கும்.

அதென்ன சார், பெரும்பாலோர்கள் என்று சொல்லித் தப்பிக்கின்றீர்கள்
என்று கேட்காதீர்கள். சிலருக்கு படிப்பு, மற்றும் வித்தைக்குரிய கிரகமான புதன்
ஜாதகத்தில் பலவீனமாக இருந்து அதனால் அவர்கள் தோல்வியுற நேரலாம்.
அவை விதிவிலக்கு.

ஏழரைச் சனியின் முதல் பகுதியை (முதல் இரண்டரை வருடங்களை) விரையச்
சனி என்பார்கள் கோச்சாரப்படி சந்திர ராசிக்கு அது 12ஆம் இடம். ஆகவே
அது விரையச் சனி காலம். பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகளால்
நாள் கணக்குகள் நஷ்டம் என்று நஷ்டமாகவே அக்காலம் கழியும்.

அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) ஜென்மச் சனி என்பார்கள்.
அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் ஏகத்துக்கும்
மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும்.

அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) கழிவுச் சனி என்பார்கள்.
அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள்
குறைந்ததாக இருக்கும்.

அப்பாடா சாமி என்று நிம்மதிப் பெரு மூச்சை ஏழரை வருடங்கள் கழிந்த பிறகுதான்
விட முடியும்.

அந்த முதல் பகுதியான விரையச் சனி நடக்கும் காலத்தில் நடக்கும் திருமணங்கள்
சோபிப்பதில்லை. தம்பதிகளுக்குள், பிரிவு, பிரச்சினை என்று போராட்டமாக
இருக்கும். விவரம் தெரிந்தவர்கள் தங்கள் குழந்தையின் திருமணத்தை விரையச்
சனியின் காலத்தில் நடத்தி வைக்க மாட்டார்கள்.

இரண்டாவது சுற்றில் (அதாவது பொங்கு சனியில்) ஜாதகனைச் சனீஷ்வரன்
கைதூக்கிவிடுவான். The native of the horoscope will be elevated to a good
position. It level will be according to the strength of the horoscope.

அதுவும் மேளம் அடித்துத் தூக்கிவிட மாட்டான். பல கஷ்டமான அனுபவங்களைக்
கொடுத்த பிறகுதான் தூக்கி உட்காரவைப்பான்.

மூன்றாவது சுற்று அந்திம காலம். ஜாதகனின் ஆயுள் முடியும் நேரம் என்றால் சனி
ஜாதகனுக்குப் போர்டிங் பாஸ் கொடுத்து மேலே அனுப்பி வைத்து விடுவார்.
மேலே என்றால் எங்கே என்று தெரியுமல்லவா?

அதனால் கடைசி சுற்றுச் சனி என்றால் எல்லோரும் பயம் கொள்வார்கள். ஆனால்
அது எல்லோருக்கும் பொதுவானதல்ல! ஒருவனின் ஆயுள் எப்போது முடியும்,
எந்த தசா புத்தியில் அது வரும் என்பது எட்டாம் பாவப் பாடத்தில் வரும்.
அப்போது அதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன்படிதான் மூன்றாவது சுற்றில் வரும்
சனி அனுப்பிவைப்பார். இல்லையென்றால இல்லை! மூன்று சுற்றுக்களையும்
கடந்து வாழ்ந்தவர்கள், வாழ்கின்றவர்கள் நிறைய உண்டு!

இன்றைக்குத் தேதியில் சனி எங்கே இருக்கிறார்?

சைடுபரில் உள்ள ஜகன்நாதஹோரா மென்பொருளை திறந்தீர்கள் என்றால்
அது அன்றைய தேதியில் உள்ள கிரக நிலைகளைக் காட்டும். அதில் சனி,
இன்றையத் தேதியில் சனி சிம்மத்தின் 24.34 வது பாகையில் உள்ளதை அது
காட்டும். அதுபோல எந்தத் தேதிக்கு வேண்டுமென்றாலும் காட்டும்.

ஒரு ராசியில் சனீஷ்வரன் 30 மாதங்கள் தங்கிச் செல்வதால் 30 பாகைகள்
வகுத்தல் 30 மாதங்கள் ஒரு மாதத்திற்கு ஒரு பாகை. சனி 24.34 பாகையில்
இருக்கிறார் என்றால் சிம்மத்திற்கு அவர் வந்து 24 மாதங்கள் ஆகிவிட்டன
என்பது பொருள். இன்னும் மீதமுள்ள 6 மதங்கள் அங்கே இருந்துவிட்டுப்
பிறகு பெட்டி படுக்கையுடன் அவர் அதற்கு அடுத்த வீடான கன்னி ராசிக்கு
நடையைக் கட்டிவிடுவார்.

இன்றையத் தேதிக்குக் கன்னிராசிக்காரனுக்கு அவர் விரையச் சனி. மாறியவுடன்
ஜென்மச்சனி. சிம்ம ராசிக்காரனுக்கு அவர் இன்றையத் தேதிக்கு ஜென்மச் சனி.
மாறியவுடன் அவர் கழிவுச் சனி. கடக ராசிக்காரனுக்கு அவர் இப்போது கழிவுச்
சனி, மாறியவுடன் அவர்கள்(அதாவது கடக ராசிக்காரர்கள்) ஏழரைச் சனியின்
பிடியில் இருந்து முற்றிலும் விடுபடுவார்கள்.

ஏழரைச் சனியைப் பற்றிய தகவல்களை உங்களுக்கு விவரமாகக் கொடுத்துள்ளேன்
அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். புரியாதவர்கள், புரியவில்லை
என்று சொல்லுங்கள், தனியாகக் கச்சேரி வைக்கிறேன் (பாடம் எடுக்கிறேன்)
============================================================

இது முன்பே எழுதியதுதான். சனீஷ்வரனைப்பற்றிய செய்திகளில் இதுவும்
இடம் பெறவேண்டும் என்பதால் மீண்டும் ஒருமுறை கொடுத்துள்ளேன்.
மேலும் புதியவர்கள் பலர் உள்ளார்கள் அவர்களும் படிக்கட்டும் என்று
கொடுத்துள்ளேன். பதிவுலக மொழியில் சொன்னால் மீள் பதிவு என்று
வைத்துக்கொள்ளுங்கள்

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

81 comments:

  1. காலை வணக்கம் ஐயா...

    இன்று நான் தாம் முதல் மாணவன்...

    ReplyDelete
  2. வகுப்பறைக்கு புது மாணவர்

    ஐயா,

    உங்கள் கட்டுரைகளை மிகவும் ரசித்து படித்துகொண்டுவருகிறேன்.ஜாதகம் தவிர எதார்த்தமான கட்டுரைகள் மிகவும் அருமை...ஒரு health tonic சாப்பிட்ட உணர்வு வருகிறது. உங்கள் உன்னத பணி தொடர எனது மனமாற வாழ்த்துகள்!!!

    எனக்கு லக்னத்தில் சனி, சிம்ம ராசி..எழரை சனி இரண்டாவது சுற்று நடக்கிறது, மூன்றாது சுற்றில்(approx. 57-58 age) எனக்கு Boarding pass சனி கொடுத்துவிடுவாரா?

    எனக்கு ராகு லக்னத்தில் (கடக லக்னம்) இருந்து மூன்றாமிடத்தில் (கன்னியில்) இருக்கிறார்.
    ராகு திசையில் எப்போது திருமணம் நடக்கும்? உங்கள் முன்பதிவுகளில் ராகு திசை சுக்கிர புத்தியில் வாய்ப்பு இருப்பதாக எழுதியிருந்தீர்கள், எனக்கு இப்போது ராகு திசை சனி புத்தி நடக்கிறது. சுக்கிர புத்தி வருவதர்க்குள் எனக்கு 38 வயது ஆகிவிடும். Any chance to get married sooner than that?

    நன்றி,
    மோகன்

    ReplyDelete
  3. sir i have read the lesson. due to work i was unable to give comment for the past two lessons. sorry sir.
    by
    sridhar

    ReplyDelete
  4. சனிஷ்வரனுடைய அறிமுக பாடங்கள்
    அருமை அய்யா...புதியவர்களுக்கு பாடம் எளிமையாக புரியும்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  5. Very good lesson. I was born under viraya sani. Married under the same. Quite a late marriage. 12th from moon has only 17 paral. The lowest. 9th from lagna. Enakku villankal vittilthan athika paral irukkirathu.

    ReplyDelete
  6. //மழை பெய்வதைப் போல! வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பவன் மழையைப்பற்றிக்
    கவலைப்பட வேண்டாம். காருக்குள், கண்ணாடிகளை ஏற்றிவிட்டு அமர்ந்து
    செல்பவனும் கவலைப்பட வேண்டாம். குடை வைத்திருப்பவன், பாதி நனைய
    வாய்ப்புண்டு அவன் சற்றுக் கவலைபடலாம். ரெயின் கோட் போட்டிருப்பவனும்
    சிறிது நனைய வாய்ப்புண்டு அவனும் சற்றுக் கவலைபடலாம். முழுதாகக் கவலைப்
    பட வேண்டியன் இவை எதுவுமே இல்லாமல் நடுத் தெருவில் மாட்டிக் கொண்டவன்
    மட்டுமே.//

    அசத்தல் சார் !!

    ReplyDelete
  7. Power situation in Bangalore is very bad compared to Chennai. Yesterday there was no power for the whole night. One saving grace is the weather is pleasant. Thanks for the lesson. Can you please write about the effect of Saturn in various houses, as given in ancient books.

    ReplyDelete
  8. Ayya, erkanavae paditha thagavalgal endralum, main exam ku munadi oru revision madhiri irunduchu... nandri ayya

    ReplyDelete
  9. ரொம்பவும் பயனுள்ள விவரங்கள்!

    ReplyDelete
  10. Vanakkam Ayya,
    Saniishwaran antha Elu arai aandugalil thavaru seiyavum thoondavar ilaiya ?
    Nandri,
    Navaneethan.

    ReplyDelete
  11. ஐயா,
    மிகத் தெளிவான விளக்கங்களை அளித்துள்ளீர்கள்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  12. Padivu ulaga Sudaroli Endru pattame kodukkalam ungalakku....Great style of writing...

    ReplyDelete
  13. /////Blogger மதி said...
    காலை வணக்கம் ஐயா...
    இன்று நான் தான் முதல் மாணவன்...//////

    முதலில் சூரியன் வரவேண்டும். நீங்கள் சந்திரன் வந்திருக்கிறீர்கள். அதனாலென்ன பரவாயில்லை!
    எல்லா கிரகங்களும் நமக்கு வேண்டியவர்கள்தான்!

    ReplyDelete
  14. //////Blogger Mohan said..
    வகுப்பறைக்கு புது மாணவர்
    ஐயா,
    உங்கள் கட்டுரைகளை மிகவும் ரசித்து படித்துகொண்டுவருகிறேன்.ஜாதகம் தவிர எதார்த்தமான கட்டுரைகள் மிகவும் அருமை...ஒரு health tonic சாப்பிட்ட உணர்வு வருகிறது. உங்கள் உன்னத பணி தொடர எனது மனமாற வாழ்த்துகள்!!!
    எனக்கு லக்னத்தில் சனி, சிம்ம ராசி..எழரை சனி இரண்டாவது சுற்று நடக்கிறது, மூன்றாது சுற்றில்(approx. 57-58 age) எனக்கு Boarding pass சனி கொடுத்துவிடுவாரா?///////

    அது உங்கள் ஜாதகத்தின் மற்ற அம்சங்களைப் பொறுத்து மாறும்
    -------------------------------------------------------------------------------------
    எனக்கு ராகு லக்னத்தில் (கடக லக்னம்) இருந்து மூன்றாமிடத்தில் (கன்னியில்) இருக்கிறார்.
    ராகு திசையில் எப்போது திருமணம் நடக்கும்? உங்கள் முன்பதிவுகளில் ராகு திசை சுக்கிர புத்தியில் வாய்ப்பு இருப்பதாக எழுதியிருந்தீர்கள், எனக்கு இப்போது ராகு திசை சனி புத்தி நடக்கிறது. சுக்கிர புத்தி வருவதர்க்குள் எனக்கு 38 வயது ஆகிவிடும். Any chance to get married sooner than that?
    நன்றி,
    மோகன்////////

    கடக லக்கினம் என்றால் ஏழுக்கு உரியவன் சனி. ஏழுக்கு உரியவனுக்கும் அதிகாரம் உண்டு. இப்போது முயன்றால் சனி புத்தியிலும் நடக்கும். முயற்சி செய்யுங்கள்.
    --------------------------------------------------------------------------------------

    ReplyDelete
  15. //////Blogger sridhar said...
    sir i have read the lesson. due to work i was unable to give comment for the past two lessons. sorry sir.
    by
    sridhar///////

    அதற்கு எதற்கு ஸாரி? ஸாரியையெல்லாம் வாத்தியாரிடம் சொல்லி அவரைச் சங்கடத்திற்கு ஆளாக்காதீர்கள். நான் நடத்துவது இணைய வகுப்பு. யார் வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். எனக்கும் சேர்த்துத்தான் அந்த வசதி!

    ReplyDelete
  16. //////Blogger வேலன். said...
    சனிஷ்வரனுடைய அறிமுக பாடங்கள்
    அருமை அய்யா...புதியவர்களுக்கு பாடம் எளிமையாக புரியும்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.//////

    புரிந்தால் சரிதான். எழுதும் எனக்கும் மகிழ்ச்சி!

    ReplyDelete
  17. ///////Blogger ananth said...
    Very good lesson. I was born under viraya sani. Married under the same. Quite a late marriage. 12th from moon has only 17 paral. The lowest. 9th from lagna. Enakku villankal vittilthan athika paral irukkirathu.//////

    வில்லன்கள் அதிக வலுவுடன் இருந்தால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். எனக்கும் ஜாதகத்தில் வில்லன்கள் அதிக வலுவுடன்!

    ReplyDelete
  18. /////////////Blogger புருனோ Bruno said...
    //மழை பெய்வதைப் போல! வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பவன் மழையைப்பற்றிக்
    கவலைப்பட வேண்டாம். காருக்குள், கண்ணாடிகளை ஏற்றிவிட்டு அமர்ந்து
    செல்பவனும் கவலைப்பட வேண்டாம். குடை வைத்திருப்பவன், பாதி நனைய
    வாய்ப்புண்டு அவன் சற்றுக் கவலைபடலாம். ரெயின் கோட் போட்டிருப்பவனும்
    சிறிது நனைய வாய்ப்புண்டு அவனும் சற்றுக் கவலைபடலாம். முழுதாகக் கவலைப்
    பட வேண்டியன் இவை எதுவுமே இல்லாமல் நடுத் தெருவில் மாட்டிக் கொண்டவன்
    மட்டுமே.//
    அசத்தல் சார் !!/////////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி டாக்டர்!

    ReplyDelete
  19. /////////////Blogger krish said...
    Power situation in Bangalore is very bad compared to Chennai. Yesterday there was no power for the whole night. One saving grace is the weather is pleasant. Thanks for the lesson. Can you please write about the effect of Saturn in various houses, as given in ancient books.///////////////

    ஆகா, அதை எழுதாமல் இருப்பேனா? எழுதுகிறேன் நண்பரே

    ReplyDelete
  20. //////Blogger Prabhu said...
    Ayya, erkanavae paditha thagavalgal endralum, main exam ku munadi oru revision madhiri irunduchu... nandri ayya////////

    ஆமாம், அவ்வப்போது ரிவைஸ் செய்து கொள்வது நல்லதுதான்!

    ReplyDelete
  21. ///////////Blogger நாமக்கல் சிபி said...
    ரொம்பவும் பயனுள்ள விவரங்கள்!/////////

    நன்றி நாமக்கல்லாரே!

    ReplyDelete
  22. ///////Blogger amudkrishnan said...
    Vanakkam Ayya,
    Saniishwaran antha Elu arai aandugalil thavaru seiyavum thoondavar ilaiya ?
    Nandri,
    Navaneethan./////////

    அவர் தூண்டமட்டார். சூழ்நிலை தூண்டும். நிலைமையை உணர்ந்து கட்டுப்பாடுடன் இருப்பது நம் கையில் உள்ளது!

    ReplyDelete
  23. //////////Blogger தியாகராஜன் said...
    ஐயா,
    மிகத் தெளிவான விளக்கங்களை அளித்துள்ளீர்கள்.
    மிக்க நன்றி.//////////

    நன்றி தியாகராஜன்!

    ReplyDelete
  24. //////////Blogger Ragu Sivanmalai said...
    Padivu ulaga Sudaroli Endru pattame kodukkalam ungalakku....Great style of writing...//////////

    பட்டம் எல்லாம் எதற்கு? உங்கள் (மாணவர்களின்) அன்பு போதும்.
    உங்களை நினத்துக் கொண்டு எழுதும்போது எழுத்தில் ஒரு வேகம் வந்து விடும். அவ்வளவுதான்.

    ReplyDelete
  25. சனீஷ்வரனால் நிறையவே அவதிபட்டிருக்கேன். இப்பகூட நடந்துகிட்டிருக்கு. :))

    ஆனாலும் எனக்கு சனீஸ்வரை ரொம்ப பிடிக்கும். கஷ்டம் நிறைய கொடுத்திட்டேனேன்னு போகும்போது அப்படியே சந்தோஷங்களை அள்ளிக்கொடுத்திட்டு போவாரு பாருங்க அதிலையும் அவர்தான் வள்ளல்.

    நவக்கிரகத்தை சுத்தும்போது “நீலாஞ்சன சமாபாதம் மட்டும்தான் சொல்வேன்”

    ReplyDelete
  26. பதிவுலகசு சுடரொளி சுப்பைய்யா வாத்தியார் அவர்கள் வாழ்க! வாழ்க!

    ReplyDelete
  27. /////Blogger புதுகைத் தென்றல் said...
    சனீஷ்வரனால் நிறையவே அவதிபட்டிருக்கேன். இப்பகூட நடந்துகிட்டிருக்கு. :))
    ஆனாலும் எனக்கு சனீஸ்வரை ரொம்ப பிடிக்கும். கஷ்டம் நிறைய கொடுத்திட்டேனேன்னு போகும்போது அப்படியே சந்தோஷங்களை அள்ளிக்கொடுத்திட்டு போவாரு பாருங்க அதிலையும் அவர்தான் வள்ளல்.
    நவக்கிரகத்தை சுத்தும்போது “நீலாஞ்சன சமாபாதம் மட்டும்தான் சொல்வேன்”/////

    அந்தப் பாடலை முழுமையாகச் சொல்லுங்கள் சகோதரி!

    ReplyDelete
  28. ////Blogger நாமக்கல் சிபி said...
    பதிவுலகசு சுடரொளி சுப்பைய்யா வாத்தியார் அவர்கள் வாழ்க! வாழ்க!////

    குரல்கொடுப்பதைப் பார்த்தால்...டவுட்டாக இருக்கிறதே சுவாமி!
    கலாய்ப்பு இல்லையே?

    ReplyDelete
  29. //பதிவுலகசு சுடரொளி சுப்பைய்யா வாத்தியார் அவர்கள் வாழ்க! வாழ்க!//

    Repeattu..

    :-))

    ReplyDelete
  30. Dear Sir

    Ungalin Elutthu nadaiyil Shanishwaran lesson Etthanaimurayanalum Padikalam sir.

    one small term:
    Sa Ree ghaa ma pha dha neee --- 7 swarangal

    Saturn - 7 1/2

    Ist and Last Swarangal Combined Sanee + Eshwaran(life Sangeethadhai Unarthum Eshwaran(Pattam)- petrvan).

    Reading and Enjoying your lesson Sir..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  31. Add something for bullet proof. Stronger lagna lord/5th/9th lord/ Varkothama. Or sani is one of them. Strongest amongst them is 9th lord. My experience plus those who I know. I got best results during 9th lord's period. Nothing can stop you from anything. Last but not least. Strong lagna and/or lagna in vargothama

    ReplyDelete
  32. 108கோடி ஜனங்களை 12ல் எதற்கு வகுக்க வேண்டும், உங்களின் கணிப்பு (WRONGa IRUNTHAAL)- கன்னி ராசிக்காரர்கள் 5கோடி இருந்தால் நீங்கள் என்ன செய்ய முடியும் ? ஜோதிடம் என்பது கணிப்பு தான்...

    ReplyDelete
  33. im working in mcafee software and its quite intersting to c u talking about it as well ;)
    வளர்க நின் புகழ், வாழ்க நின் தொண்டு!!

    ReplyDelete
  34. ayya arumaiyana padangal.innum
    niraiya therinthu kolla aaasai.

    ReplyDelete
  35. ஐயா,

    ராசி துலாம், லக்கினம் தனுசு, 5 ல் சனி நீசம், நடப்பு திசை சனி, ஓரு வழியாக சனி திசை வரும் ஆகஸ்டு மாதத்தில் முடிகிறது.பின் வரும் புதன் திசை எப்படி இருக்கும் , புதன் 2 ல் ராகுவுடன்.

    ப‌ட்ட கஷ்ட‌ங்கள், பட்டூ கொண்டிருக்கும் க‌ஷ்டங்க‌ள் வில‌குமா?

    ReplyDelete
  36. ////Blogger Geekay said...
    //பதிவுலகச் சுடரொளி சுப்பைய்யா வாத்தியார் அவர்கள் வாழ்க! வாழ்க!//
    Repeattu.. :-))/////

    சிபியாரோடு நீங்களும் சேர்ந்துவிட்டீர்களா? இனி என்பாடு கஷ்டம்தான்:-))))

    ReplyDelete
  37. //////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Ungalin Elutthu nadaiyil Shanishwaran lesson Etthanaimurayanalum Padikalam sir.
    one small term: Sa Ree ghaa ma pha dha neee --- 7 swarangal
    Saturn - 7 1/2
    Ist and Last Swarangal Combined Sanee + Eshwaran(life Sangeethadhai Unarthum Eshwaran(Pattam)- petrvan).
    Reading and Enjoying your lesson Sir..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    வழக்கம்போல பாராட்டு; வழக்கம்போல நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  38. //////Blogger ananth said...
    Add something for bullet proof. Stronger lagna lord/5th/9th lord/ Varkothama. Or sani is one of them. Strongest amongst them is 9th lord. My experience plus those who I know. I got best results during 9th lord's period. Nothing can stop you from anything. Last but not least. Strong lagna and/or lagna in vargothama/////

    உங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  39. /////Blogger ஆகாயமனிதன்.. said...
    108கோடி ஜனங்களை 12ல் எதற்கு வகுக்க வேண்டும், உங்களின் கணிப்பு (WRONGa IRUNTHAAL)- கன்னி ராசிக்காரர்கள் 5கோடி இருந்தால் நீங்கள் என்ன செய்ய முடியும் ? ஜோதிடம் என்பது கணிப்பு தான்...///////

    அது ஏன், வாழ்க்கையே மாயை! (Illusion)

    நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்!
    நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்!

    இதில் ஜோதிடம் என்ன? கணிப்பு என்ன? ஆகாயம் என்ன? பூமி என்ன?

    ReplyDelete
  40. //////Blogger Arun Kumar. S said...
    im working in mcafee software and its quite intersting to c u talking about it as well ;)
    வளர்க நின் புகழ், வாழ்க நின் தொண்டு!!/////

    நன்றி அருண்குமார்!

    ReplyDelete
  41. /////Blogger thirunarayanan said...
    ayya arumaiyana padangal.innum
    niraiya therinthu kolla aaasai.//////

    எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன். தொடர்ந்து படியுங்கள்!

    ReplyDelete
  42. /////Blogger KaveriGanesh said..
    ஐயா,
    ராசி துலாம், லக்கினம் தனுசு, 5 ல் சனி நீசம், நடப்பு திசை சனி, ஓரு வழியாக சனி திசை வரும் ஆகஸ்டு மாதத்தில் முடிகிறது.பின் வரும் புதன் திசை எப்படி இருக்கும் , புதன் 2 ல் ராகுவுடன்.
    ப‌ட்ட கஷ்ட‌ங்கள், பட்டூ கொண்டிருக்கும் க‌ஷ்டங்க‌ள் வில‌குமா?////

    ஒரு திசை கஷ்டப்படுத்தினால், அடுத்ததிசை நன்மையுடையதாக இருக்கும். கவலையை விடுங்கள். நம்பிக்கையோடு இருங்கள்!

    ReplyDelete
  43. அய்யா,

    மாந்திஇக்கு என்ன பலன் அதை எப்படி கண்டுபிடிப்பது ஜெகநாத சர்ட்இல் மாந்தி இல்லை . kichanap

    ReplyDelete
  44. good after noon sir,

    mithuna rasi, thula lakna
    relived from 7 1/2 sani
    but now sani thasa sukra puthi is running. in 4th house sukran and sevvai is there. working as share broking dealer. having so many prob. foriegn job also getting delayed. when i will be relaxed and job comfort.

    krupa from pondy

    ReplyDelete
  45. தற்கொலை செய்து கொண்டவர் உடைய மகன் ஜாதகத்தை பார்த்து அவர் அம்மா தற்கொலை செய்து கொண்டார் என்பதை அறிய முடியுமா சார் ?

    ReplyDelete
  46. ////Blogger achukichan said...
    அய்யா,
    மாந்திக்கு என்ன பலன்? அதை எப்படி கண்டுபிடிப்பது? ஜெகநாத சார்ட்டில் மாந்தி இல்லை /////

    மாந்தி ஒரு உப கிரகம். அதைப் பற்றிய கட்டுரை பின்னால் வரும். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  47. Blogger krupa said...
    good after noon sir,
    mithuna rasi, thula lakna
    relived from 7 1/2 sani
    but now sani thasa sukra puthi is running. in 4th house sukran and sevvai is there. working as share broking dealer. having so many prob. foriegn job also getting delayed. when i will be relaxed and job comfort.
    krupa from pondy/////

    The details given are not sufficient to say anything
    Inform your date of birth, place of birth and time of birth!

    ReplyDelete
  48. //////Blogger Sendha said...
    தற்கொலை செய்து கொண்டவர் உடைய மகன் ஜாதகத்தை பார்த்து அவர் அம்மா தற்கொலை செய்து கொண்டார் என்பதை அறிய முடியுமா சார் ?/////

    எனக்குத் தெரிந்தவரை அறிய முடியாது!
    ஒருவருடைய மரணத்தை அவருடைய ஜாதகத்தை வைத்துத்தான் அறிய முடியும். மகன் ஜாதகத்தை வைத்து, மருமகள் ஜாதகத்தை வைத்து அல்லது கணவன் ஜாதகத்தை வைத்து எல்லாம் கண்டு பிடிக்க முடியாது.

    ReplyDelete
  49. ஐயா,
    துலா ராசிக்கு இன்னும் 6 மாதங்களில் விரைய சனி ஆரம்பமாகப்போகிறது.
    இந்த மகரலக்னமுடைய ஜாதகனுக்கு சனி துவைக்கும் போது ஏதேனும் சலுகை காட்டுவாரா என தெரிவிக்க வேண்டுகிறேன்.ஏனெனில் லகாதிபதியாகி,துலா ராசிக்கு யோககாரனுமாகிறதால் கேட்கிறேன்.

    (ஏழாமிடமான கடகத்திலிருக்கும் சனி தனது சுயவர்க்கத்தில் 2 பரல்களுடன் இருந்து,
    ராசிக்கு 12,1,2 ஆகிய இடங்களில் முறையே 25,28,31 பரல்கள் இருக்கின்ற நிலையில்,சனி தனது சுய புக்தியுடன் தசையை நடத்திக்கொண்டிருக்கின்ற வேளையில் கேட்கப்படும் கேள்வி.)

    ReplyDelete
  50. //
    துவைக்க வேண்டிய ஆளைத் துவைத்துக் காயப்போட்டு, அயர்ன் பண்ணி மடித்து
    அலமாரியில் வைத்து விட்டுப் போய்விடுவார் சனீஸ்வரன்.
    //

    //
    மெக்காஃபி, ஏ.வி.ஜி என்று ஸ்கேனர் வைத்தெல்லாம் சனியைத் தடுத்து நிறுத்த
    முடியாது. அதே போல எவ்வளவு பெரிய ஆள் என்றாலும் அதற்குரிய நேரம்
    வந்து விட்டால் என்ன நடந்தது என்று நினைக்கு முன்பே எல்லாம் நடந்து
    முடிந்திருக்கும்.
    //

    உங்களுடைய இந்த எழுத்து நடைக்காகவே தினசரி வந்துவிட்டுப் போகிறேன்.

    ReplyDelete
  51. வண்ணக்கம் ஐயா
    தினமும் சாயங்காலம் மட்டுமே தங்களின் வகுப்பறைக்கு நன் வருவதால் நான் கடைசி பெஞ்ச் மாணவன் .ஆனாலும் படங்களை ஆர்வமுடன் படிக்கும் மாணவன் .என்னுடைய ராசி கும்பம் லகினம் மகரம் ,ஆதலால் அவர் தன் வீட்டிற்க்கு ஏதேனும் வில்லங்கம் மற்ற எல்லா வீட்டிற்க்கு பண்ணுவதுபோல் செய்வாரா அல்லது கொஞ்சம் கம்மி பண்ணுவாரா தன்னுடைய ஏழரை மற்றும் அஷ்டம [எட்டில்]காலங்களில்.மீனத்தில் 33[2nd house] மேஷத்தில் [4th house]கன்னியில்35 [8th house] பரல்கள் .
    thanks
    ganesan

    ReplyDelete
  52. sir, what is this retrogade motion that i keep reading in some articles...for eg it is said that jupiter will be i retro sometime in may...

    does mercury take the same amount of time to pass through differnt rasis ?

    ReplyDelete
  53. what about retrograde exalted saturn in 12th house .

    ReplyDelete
  54. Sir, My lagnam is Kadagam. Simma rasi (Pooram)
    Moon - 2nd house, Saneeswaran(Vakkiram)-4th, Guru -5th, Kethu-6th, Sun,Mer,Mars-9th, Sukran-10th, Rahu-12th.
    you mentioned its not that much advisable to get married during Viraya sani. Currently, its Jenma sani ongoing for me.
    Please advise if I can get married after Jenma sani is over (or) wait till 7 1/2 years duration is over? but, Sanneswaran is the lord of my 7th/8th house?

    ReplyDelete
  55. வணக்கம் ஐயா

    சனி ஏழரை காலமும் அஸ்டமச்சணி காலமும் அந்த பாதிப்புகள்
    பற்றியும் அறிந்து கொண்டேன்.பாடம் நன்றாக விளங்கியது.சனி
    4 ல் வருவதும் அஸ்டமச்சணி காலமா?

    ReplyDelete
  56. sir

    DOB : 05.01.1966
    Birth Place: Thanjavur
    Birth Time: 01.45 AM
    Rasi: Mithuna
    Lakna : Thula
    Natchathira : Mirugasirisha

    Kirupa from Pondy

    ReplyDelete
  57. sir

    DOB : 05.01.1966
    Birth Place: Thanjavur
    Birth Time: 01.45 AM
    Rasi: Mithuna
    Lakna : Thula
    Natchathira : Mirugasirisha

    Kirupa from Pondy

    ReplyDelete
  58. Dear Sir

    Kadaka lagnathithirku sani 7,8 karan - Adhu vakiramadaindhu 2il (Simmam) irundhal , Andha Dasai Eppadi Irukkum?

    What about his studies and Life?

    Could you please reply sir

    Thank you
    Regards
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  59. Dear Sir

    I send my son birth details to your email 5 days before.

    Could you please reply sir.

    Thank you

    Regards
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  60. //குரல்கொடுப்பதைப் பார்த்தால்...டவுட்டாக இருக்கிறதே சுவாமி!
    கலாய்ப்பு இல்லையே?//

    ச்சேச்சே!

    ReplyDelete
  61. Morning sir.

    Kandaka sani endral enna enbathai varum katturaikalil ezhuthuveergala?

    Enakku kandaka sani nadappathaka (Rishaba Rasi) oru jothida column il parthen.

    Thangalidan kettal vidai kooruveergal ena thondriyathal kettum vitten.

    anbudan
    raj

    ReplyDelete
  62. வணக்கம் ஐயா

    அஷ்டவர்கம் பற்றி விரிவாக விளக்கவேண்டும் என்று தாழ்மையோடு வேண்டுகிறோம்

    ReplyDelete
  63. Dear Sir

    Next Lesson waiting Sir...

    Time is 4:14 a.m.(PST)... Sunday sir...

    Iam refreshing my Mozilla web browser sir...

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  64. //////Blogger தியாகராஜன் said...
    ஐயா,
    துலா ராசிக்கு இன்னும் 6 மாதங்களில் விரைய சனி ஆரம்பமாகப்போகிறது.
    இந்த மகரலக்னமுடைய ஜாதகனுக்கு சனி துவைக்கும் போது ஏதேனும் சலுகை காட்டுவாரா என தெரிவிக்க வேண்டுகிறேன்.ஏனெனில் லகாதிபதியாகி,துலா ராசிக்கு யோககாரனுமாகிறதால் கேட்கிறேன்.
    (ஏழாமிடமான கடகத்திலிருக்கும் சனி தனது சுயவர்க்கத்தில் 2 பரல்களுடன் இருந்து,
    ராசிக்கு 12,1,2 ஆகிய இடங்களில் முறையே 25,28,31 பரல்கள் இருக்கின்ற நிலையில்,சனி தனது சுய புக்தியுடன் தசையை நடத்திக்கொண்டிருக்கின்ற வேளையில் கேட்கப்படும் கேள்வி.)///////

    உங்கள் லக்கினத்திற்கு உடையவர் சனி என்பதால் உங்களுக்குசலுகைகள் உண்டு. அவரால் அதிக உபத்திரவம் இருக்காது.

    ReplyDelete
  65. //////Blogger மெனக்கெட்டு said...
    //
    துவைக்க வேண்டிய ஆளைத் துவைத்துக் காயப்போட்டு, அயர்ன் பண்ணி மடித்து
    அலமாரியில் வைத்து விட்டுப் போய்விடுவார் சனீஸ்வரன்.
    //
    //
    மெக்காஃபி, ஏ.வி.ஜி என்று ஸ்கேனர் வைத்தெல்லாம் சனியைத் தடுத்து நிறுத்த
    முடியாது. அதே போல எவ்வளவு பெரிய ஆள் என்றாலும் அதற்குரிய நேரம்
    வந்து விட்டால் என்ன நடந்தது என்று நினைக்கு முன்பே எல்லாம் நடந்து
    முடிந்திருக்கும். //
    உங்களுடைய இந்த எழுத்து நடைக்காகவே தினசரி வந்துவிட்டுப் போகிறேன்./////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  66. ///////Blogger choli ganesan said...
    வண்ணக்கம் ஐயா
    தினமும் சாயங்காலம் மட்டுமே தங்களின் வகுப்பறைக்கு நன் வருவதால் நான் கடைசி பெஞ்ச் மாணவன் .ஆனாலும் படங்களை ஆர்வமுடன் படிக்கும் மாணவன் .என்னுடைய ராசி கும்பம் லகினம் மகரம் ,ஆதலால் அவர் தன் வீட்டிற்க்கு ஏதேனும் வில்லங்கம் மற்ற எல்லா வீட்டிற்க்கு பண்ணுவதுபோல் செய்வாரா அல்லது கொஞ்சம் கம்மி பண்ணுவாரா தன்னுடைய ஏழரை மற்றும் அஷ்டம [எட்டில்]காலங்களில்.மீனத்தில் 33[2nd house] மேஷத்தில் [4th house]கன்னியில்35 [8th house] பரல்கள் .
    thanks
    ganesan/////

    உங்கள் ராசிக்கும், லக்கினத்திற்கும் உடையவர் சனி என்பதால் உங்களுக்குசலுகைகள் உண்டு. அவரால் அதிக உபத்திரவம் இருக்காது.

    ReplyDelete
  67. //////Blogger mike said...
    sir, what is this retrogade motion that i keep reading in some articles...for eg it is said that jupiter will be i retro sometime in may...
    does mercury take the same amount of time to pass through differnt rasis ?////

    இல்லை. மற்ற கிரகங்களைக் குறிப்பாக சுக்கிரன், செவ்வாய் இருவரையும் அனுசரித்து அதன் சுற்று இருக்கும் சுற்றும் நேரமும் இருக்கும். அந்த 3 கிரகங்களும் 90 பாகைக்குள் இருக்கும் ஒன்றை விட்டு மற்றொன்று அந்த 90 பாகைக் கணக்கைத் தாண்டிச் செல்லாது.

    ReplyDelete
  68. /////Blogger gonzalez said...
    what about retrograde exalted saturn in 12th house ./////

    வக்கிரகதி பற்றிய பாடம் விவரமாக எழுத உள்ளேன். பொறுத்திருந்து படியுங்கள்

    ReplyDelete
  69. //////Blogger Srinath said...
    Sir, My lagnam is Kadagam. Simma rasi (Pooram)
    Moon - 2nd house, Saneeswaran(Vakkiram)-4th, Guru -5th, Kethu-6th, Sun,Mer,Mars-9th, Sukran-10th, Rahu-12th.
    you mentioned its not that much advisable to get married during Viraya sani. Currently, its Jenma sani ongoing for me.
    Please advise if I can get married after Jenma sani is over (or) wait till 7 1/2 years duration is over? but, Sanneswaran is the lord of my 7th/8th house?///////

    திருமணத்திற்கு உரிய திசை வரும்போது திருமணம் நடக்கும். கோச்சாரத்தைவிட அது முக்கியம்!

    ReplyDelete
  70. //////Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    சனி ஏழரை காலமும் அஸ்டமச்சணி காலமும் அந்த பாதிப்புகள்
    பற்றியும் அறிந்து கொண்டேன்.பாடம் நன்றாக விளங்கியது.சனி
    4 ல் வருவதும் அஸ்டமச்சணி காலமா?/////

    இல்லை. எட்டில் வருவதுதான் அஷ்டமத்துச் சனி!

    ReplyDelete
  71. /////////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Kadaka lagnathithirku sani 7,8 karan - Adhu vakiramadaindhu 2il
    (Simmam) irundhal , Andha Dasai Eppadi Irukkum?
    What about his studies and Life?
    Could you please reply sir
    Thank you
    Regards
    Arulkumar Rajaraman//////

    சனி திசைக்குப் பலன்களை முன்பே எழுதியுள்ளேன். பழைய பாடங்களைத் தோண்டிப்பாருங்கள் உதவிக்கு சைடுபாரில் உள்ள கூடுதுறையாரின் பதிவு உள்ளது

    ReplyDelete
  72. ///////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    I send my son birth details to your email 5 days before.
    Could you please reply sir.
    Thank you
    Regards
    Arulkumar Rajaraman//////

    நேரம் இருக்கும் போது கணித்து அனுப்புகிறேன்
    12 வயது வரை குழந்தைகளுக்குச் ஜாதகம் வேலை செய்யாது. பெற்றோர்களின் ஜாதகம்தான்

    ReplyDelete
  73. //////////Blogger நாமக்கல் சிபி said...
    //குரல்கொடுப்பதைப் பார்த்தால்...டவுட்டாக இருக்கிறதே சுவாமி!
    கலாய்ப்பு இல்லையே?//
    ச்சேச்சே!//////

    இல்லையென்றால் சரிதான்!

    ReplyDelete
  74. /////////////Blogger Raj kumar said...
    Morning sir.
    Kandaka sani endral enna enbathai varum katturaikalil ezhuthuveergala?
    Enakku kandaka sani nadappathaka (Rishaba Rasi) oru jothida column il parthen.
    Thangalidan kettal vidai kooruveergal ena thondriyathal kettum vitten.
    anbudan
    raj/////

    ராசிக்கு 4ஆம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வதை அப்படிக்கூறுகிறார்கள். சுகக்கேடு அவ்வளவுதான்

    ReplyDelete
  75. /////Blogger velan said...
    வணக்கம் ஐயா
    அஷ்டவர்கம் பற்றி விரிவாக விளக்கவேண்டும் என்று தாழ்மையோடு வேண்டுகிறோம்/////

    முன்பே எழுதியிருக்கிறேன் சுவாமி. பழைய பாடங்களைப் பாருங்கள்
    சுட்டிக்கு, சைடுபாரில் உள்ள கூடுதுறையாரின் பதிவைப் பாருங்கள்

    ReplyDelete
  76. /////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Next Lesson waiting Sir...
    Time is 4:14 a.m.(PST)... Sunday sir...
    Iam refreshing my Mozilla web browser sir...
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman//////

    அடுத்த பாடம் நாளை (10.3.2009)

    ReplyDelete
  77. Ayya......

    Once again, i really like this blog... When I read the astro classes, i check with my family's horo..... I would like to check with my son's astro...... this looks pritty different from the normal.... not sure why....kindly help me in understaning

    Birth 12 Feb 2003
    Time :5:00 PM and birth is salem......
    Please when you have time, please give me ur feed back....
    Regards
    Siva

    ReplyDelete
  78. Ayya...

    Marupadiyum nan than...... is there any download link where we can get the Astrology EBooks in Tamil??

    Regards
    Siva........

    Looking for your book at the earliest......

    Siva

    ReplyDelete
  79. /////Blogger Siva said...
    Ayya......
    Once again, i really like this blog... When I read the astro classes, i check with my family's horo..... I would like to check with my son's astro...... this looks pritty different from the normal.... not sure why....kindly help me in understaning
    Birth 12 Feb 2003
    Time :5:00 PM and birth is salem......
    Please when you have time, please give me ur feed back....
    Regards
    Siva///////

    பதிவின் முகப்பில் உள்ள ஜாதகம் கணிக்கும் மென் பொருளை உபயோகித்துப் பாருங்கள். சரியாக வரும்! இல்லையென்றால் மறுபடியும் வாருங்கள்!

    ReplyDelete
  80. /////Blogger Siva said...
    Ayya...
    Marupadiyum nan than...... is there any download link where we can get the Astrology EBooks in Tamil??
    Regards
    Siva........
    Looking for your book at the earliest......
    Siva//////

    எனக்குத் தெரியவில்லை. நீங்கள் இணையத்தில் தேடிப்பார்த்துச் சொல்லுங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com