மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.3.09

எந்த ஊர்க்காரர்களுக்கு வருமானம் அதிகம்?


எந்த ஊர்க்காரர்களுக்கு வருமானம் அதிகம்?

அது என்ன வருமானத்தையும், ஊரையும் இணைத்துச்
சொல்கிறீர்கள் என்கிறீர்களா?

இரண்டிற்கும் சம்பந்தம் உள்ளது சாமிகளா!

தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் விவசாயத் தொழிலாளியைவிட,
திருப்பூரில் இருக்கும் சாயத் தொழிலாளிக்கு இரண்டு மடங்கு
சம்பளம் கிடைக்கும்.

சேலத்தில் இருக்கும் கூலித் தொழிலாளியைவிட நாமக்கல்லில்
இருக்கும் கூலித் தொழிலாளியின் வருமானம் அதிகம்.
அதுபோல சிவகாசியில் இருக்கும் உழைப்பாளிகளுக்குத் தனி
மதிப்பு உண்டு

அதற்குக் காரணம், அங்கே உள்ள அசுரத் தொழில் வளர்ச்சியும்,
அதனால் உண்டாகும் பொருளாதார மாற்றங்களுமே காரணம்.

அந்த அசுரத் தொழில் வளர்ச்சிக்கு யார் காரணம்?

அரசா? இல்லை!

யார் காரணம் என்பதைக் கீழே கொடுத்துள்ளேன். தொடர்ந்து
படியுங்கள்
=======================================================
பாடம்: நான்காம் வீடு

நான்காம் வீடு முக்கியமான வீடுகளில் ஒன்று.

நான்காம் வீட்டைவைத்துத்தான் ஜாதகனின் தாய், கல்வி,
வாழ்க்கை வசதிகள் (Comforts in life) ஆகிய மூன்றையும்
சொல்வார்கள்

கல்விக்கு உரிய வீடு நான்காம் வீடுதான்.

ஒரு வேடிக்கை பாருங்கள். கல்விக்கு உரிய வீடு நான்காம் வீடு.
அறிவிற்கு (keen intelligence) உரிய வீடு ஐந்தாம் வீடு.

கல்வி, அறிவு இரண்டையும் ஒரே வீட்டில் இறைவன் வைக்கவில்லை.

வைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

அந்த வீடு கெட்டுப்போயிருந்தால் மனிதனுக்கு கல்வி, அறிவு இரண்டும்
இல்லாமல் போய்விடும். ஆகவே வைக்கவில்லை. அப்படி ஒரு சகாயம்!

அதனால்தான் படிக்காத மேதைகளும் உண்டு. படித்த முட்டாள்களும் உண்டு

ஜாதகத்தில் ஒன்று நன்றாக இல்லாவிட்டாலும் ஒன்று நன்றாக இருக்கும்!

கல்வி அடிபட்டிருந்தாலும், அறிவு தூக்கலாக இருக்கும். இல்லை
அறிவு அடிபட்டிருந்தால், கல்வியாவது நன்றாக இருக்கும்.

இரண்டு வீடுகளும் நன்றாக அல்லது சரியாக இருந்தால், படித்த
அறிவாளியாக இருப்பான்.

இன்று தமிழ் நாட்டிலேயே அதிக தொழில் முனைவோர்கள் நிறைந்த
இடங்கள் மூன்று

1.திருப்பூர்
2.நாமக்கல்
3.சிவகாசி

இந்த மூன்று ஊர் மக்களுமே நன்றாகத் தொழில் செய்கிறார்கள்.
உற்சாகமாக இருக்கிறார்கள். அதிகம் சம்பாத்தித்துக்
கொண்டிருக்கிறார்கள்

அவர்களில் பெரும்பான்மையோர் அதிகம் படிக்காதவர்கள். அதை மனதில்
வையுங்கள்.

படித்தவன் பாட்டைக் கெடுத்தான். எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்று
அவர்கள் எதையும் கெடுப்பதில்லை!
--------------------------------------------------------------------------------------------------
நான்காம் வீட்டு அதிபதி (அவர்தான் முக்கியம். அவர்தான் அந்த வீட்டின்
நாயகன்) நன்றாக இருந்தால், அந்த வீட்டின் அம்சங்கள் அனைத்தும்
ஜாதகனுக்குக் கிடைக்கும்.

நன்றாக இருப்பது என்பது என்ன? சோப்புப் போட்டுக் குளித்து, படிய தலை
வாரி, ஜோவன் மஸ்க் சென்ட் அடித்துக் கொண்டு, வான் ஹுஸைய்ன் ஆயத்த
அடைகளை அனிந்து கொண்டு, அரவிந்தசாமி லுக்கில் இருப்பதா? இல்லை!

நாயகன், கேந்திர வீடுகளில் அல்லது திரிகோண வீடுகளில் இருப்பதும்,
ஆட்சி, உச்சம் பெற்று இருப்பதும், அதோடு சுயவர்க்கத்தில் நல்ல
பரல்களைப் பெற்று இருப்பதுமே ஆகும். அதோடு சுப கிரகங்களுடன்
கூடி இருத்தல் கூடுதலான விஷேசம். அதைவிடச் சிறப்பு பத்தாம் வீட்டில்
அமர்ந்து தனது வீட்டை நேரடியான பார்வையில் வைத்திருத்தல்.

இப்படிப் பலவற்றையும் அலசித்தான் ஒரு வீட்டின் பலனைப் பார்க்க வேண்டும்
---------------------------------------------------------------------------------------------------
நான்காம் வீட்டு அதிபதி நன்றாக இருந்தால் அம்மூன்றும் அசத்தாலாகக்
கிடைக்குமா?

கிடைக்கும். அவ்வளவுதான்.

அசத்தலாகக் கிடைப்பதற்கு மேலும் சில விதிமுறைகள் உள்ளன!

ஒரு வீட்டிற்கு மூன்று ஃபோர்ட்போலியோ எனும் போது. அது சம்பந்தப்பட்ட
கிரகங்களும் நன்றாக இருக்க வேண்டும்.

நிதி அமைச்சகம் பல திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கும். ஆனால் அதை
நல்ல முறையில் பயன் படுத்திச் செயல் படுத்துவது சம்பந்தப்பட்ட துறையின்
அமைச்சரைச் சார்ந்தது. அது போலத்தான் இதுவும்

தாய்க்கு உள்ள கிரகம் (authority for mother) சந்திரன்
கல்விக்கு உரிய கிரகம் (authority for education) புதன்
சுகங்களுக்கு உரிய கிரகம் (authority for comforts)சுக்கிரன்

நான்காம் வீட்டுக்காரன் ஒதுக்கும் நிதியை அல்லது வளமையை இவர்கள்
நின்று மேம்படுத்துவார்கள்.

ஆகவே ஜாதகத்தில் அவர்களும் நன்றாக இருக்க வேண்டும்.

அரவிந்தசாமி உதாரணத்தை நினைத்துக் கொள்ளுங்கள்

என்ன தலை சுற்றுகிறதா?

அதற்குப் பெயர்தான் ஜோதிடம்!

தலையைச் சுற்ற விடாதீர்கள். ஒரு கையால் தலையை அழுத்திப் பிடித்துக்
கொண்டு ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.

பிறகு கிரகங்கள் எல்லாம் உங்களுக்கு வசப்படும். அவற்றை நீங்கள்
சுற்ற விடலாம்
-------------------------------------------------------------------------------------------------------------
நான்காம் வீட்டு அதிபன் ஜாதகத்தில் சென்று அமர்ந்த இடத்தை வைத்துப்
பொதுப் பலன்கள்.

1ல் அதாவது லக்கினத்தில் இருந்தால்

ஜாதகன் வீடு, வாகனம், நிலபுலன்கள், மாடு கன்றுகள் உடையவனாக
இருப்பான்.

மாடு கன்றுகள் வேண்டாமா? அந்தக் காலத்தில் இருந்தவன்
அப்படித்தான் எழுதி வைத்து விட்டு போயிருக்கிறான்.
நீங்கள் அவற்றை மைனஸ் செய்து கொள்ளுங்கள்.
கிராமத்தில் இருப்பவன் டிராக்டர்கள் வைத்திருப்பான்.
நகரத்து ஆசாமி குவாலிஸ் வண்டி வைத்திருப்பான்.

வேளா வேளைக்கு விதம் விதமாய் சாப்பாடு கிடைக்கும் அல்லது
ஜாதகன் வேளாவேளைக்கு 'மேரி பிரவுன்' அல்லது 'சரவண பவன்'
டேஸ்ட்டில் சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.

மனையாள் சுகம் மிக்கவனாக இருப்பான். மனையாள் சுகம்
என்ன வென்று தெரியாதவர்கள் பதிவை விட்டு விலகவும்:-))))

பலராலும் போற்றப்படுபவனாகவும், விரும்பப்படுபவனாகவும் இருப்பான்.

தாய்வழிச் சொந்தங்கள் அவனைக் கொண்டாடி மகிழ்வார்கள்.

கல்வியில் மேம்பட்டவனாக இருப்பான்.

நான்காம் அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால், ஜாதகன்
அந்தஸ்து, பெரிய பதவிகள் என்று சிறப்பாக வாழ்வான்.

நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேலோ சொன்ன பலன்களை மறந்துவிட வேண்டியதுதான்.

அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும்

If the 4th lord is in the ascendant, the native will have all sorts
of domestic comforts, houses & conveyances.
They are outspoken, independent, clever and intelligent.
Their mother will be affectionate!
They will be appreciated in the field of education.
They will have the help of many friends and uncles.
--------------------------------------------------------------------------------------
2ல் அதாவது இரண்டாம் வீட்டில் இருந்தால்

தாயாருக்குப் பிடித்த மகனாக இருப்பான். தாயாரின் அன்பும் ஆதரவும்
ஜாதகனுக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும்

அதைவிட முக்கியமமாக தாய் வழிச் சொத்துக்கள் கிடைக்கும். இன்றைய
காலகட்டத்தில் நாம் சம்பாதிக்காமல் வரும் சொத்துக்கள் முக்கியம்தானே?
குடும்ப வாழ்க்கை, ஏஆர் ரஹ்மான் இசை பின்னணியில் ஒலிக்க, மிகவும்
ரம்மியமாக இருக்கும்.

If the 4th lord is in the 2nd the native will inherit much from their
mother or maternal relatives

நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேலே சொன்ன பலன்கள் இருக்காது.

அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும்
----------------------------------------------------------------------------------------
3ல் இருந்தால்

ஜாதகனின் உடன்பிறப்புக்கள் பெயர் சொல்லும்படியாக இருப்பார்கள்.
அதாவது நல்ல நிலைமையில் (position) இருப்பார்கள். ஜாதகனைவிட
அவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

ஜாதகனின் தாயார் நோயால் அவதியுற நேரிடும்

கஷ்டங்களும் நஷ்டங்களும் அதிகமாகும்.

வருமானத்தைவிட செலவுகள் அதிகமாகி அதனால் வாழ்க்கை சுகப்படாமல்
இருக்கும்

நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேற்கண்ட பலன்கள் இரட்டிப்பாகிவிடும்

தாய்வழி உறவுகள் பகையாக மாறிவிடும். வாழ்க்கை வசதிகள் நீங்கிவிடும்
அல்லது இல்லாமல் போய்விடும்.

இது நான்காம் வீட்டிற்கு, அதிலிருந்து பன்னிரெண்டாம் வீடு. அதை மனதில்
கொள்க!
-----------------------------------------------------------------------------------------------
4ல் இருந்தால்

நான்காம் வீட்டு அதிபதி நான்கிலேயே இருந்தால், ஜாதகன், வீடு, வாகனம்
என்று வசதியுடன் வாழ்வான். அதிகாரத்தில் உள்ளவர்களின் தொடர்பு
கிடைக்கும்

மற்றவர்களுடைய தொடர்பை, தங்களுக்குச் சாதகமாக மாற்றும் வல்லமை
பெற்றிருப்பர்கள். கறையில்லாத பெயரைப் பெற்றிருப்பார்கள்.

ஆன்மிகத்திலும், தத்துவ விசாரங்களிலும் ஈடுபாடுகொண்டிருப்பார்கள்.

அன்பு என்பது கொடுத்துப் பெறவேண்டியது என்பதை உணர்ந்தவர்களாக
இருப்பார்கள்.

கல்வியில் மேன்மை பெற்றிருப்பார்கள். உறவினர்கள் பலரும் ஜாதகனிடம்
விசுவாசமாக இருப்பார்கள்.

பணியாட்கள், உதவியாளர்கள் என்று அரசனுக்குச் சமமான வாழ்க்கை
ஜாதகனுக்கு அமையும்.

பெண்சுகம் திளைக்கும்படியாகக் கிடைக்கும். அத்துடன் பெண் வழிச்
சொத்துக்களும் கிடைக்கும் (ஆகா, இதல்லவா டபுள் அதிர்ஷ்டம்:-)))
------------------------------------------------------------------------------------------
5ல் இருந்தால்

நான்கிற்கு உரியவன் ஐந்தில் இருந்தால், ஜாதகனுக்கு அவனுடைய
குழந்தைகளால் மகிழ்ச்சியும், மதிப்பும் உண்டாகும்.

ஐந்திற்கும், பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்திற்கும் தொடர்பு
இருப்பதால் ஜாதகன், வரவு மிகுந்தவனாக இருப்பான்.

வீடு, வண்டி வாகனம் என்று வசதிகள் மிகுந்தவனாக இருப்பான்.

தனது வீட்டிலும், சுற்றியுள்ள சமூகத்திலும் செல்வாக்கு உடையவனாக இருப்பான்.

சிலர் பங்கு வணிகத்தில் ஈடுபட்டு அதிக அளவில் பொருள் ஈட்டுவார்கள்

நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேலோ சொன்ன பலன்களை மறந்துவிட வேண்டியதுதான்.

அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும்
--------------------------------------------------------------------------------------------
6ல் இருந்தால்

நான்காம் அதிபதி லக்கினத்திற்கு ஆறில் இருந்தால், ஜாதகனுக்கு எந்த சுகமும் இருக்காது. மாறாக அவஸ்தை நிரம்பி இருக்கும். தாயுடன் நல்ல பரிவு இருக்காது. தாய்வழி உறவுகளுடன் சண்டை, சச்சரவுகள் விரோதங்கள் இருக்கும். தாய் வழிச் சொத்துக்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும். அவ்வப்போது நோய், நொடிகள் வேறு வந்து நின்று வாட்டியெடுக்கும். நான்காம் அதிபதி வந்து நிற்கும் ஆறாம் வீட்டை சுபக்கிரகங்கள் பார்த்தால் மேற்சொன்ன பலன்கள் நீங்கும் அல்லது குறையும்

They may not get much happiness from mother & conveyances
They are basically careless and indifferent.
Their mother's health may be affected.
They are short tempered. Some of their friends may turn enemies.
Uncles and aunts also turn enemies. ---------------------------------------------------------------------------------------------------
7ல் இருந்தால்

ஜாதகன் கல்வித்துறையில் இருந்தால், தன் துறையில் புகழ் பெறுவான். சிறந்த கல்விமானாக இருப்பான். அதிகம் படித்தவனாக இருப்பான். நான்காம் வீடு
கல்விக்கும் உரிய வீடு, அதன் அதிபதி ஏழில் இருந்து லக்கினத்தைப்
பார்ப்பதால் இந்தப் பலன்கள். அதை மனதில் வையுங்கள்.

ஜாதகனுக்கு நல்ல தாய் கிடைப்பாள். வாழ்க்கை சொத்துக்கள், சுகங்கள்
மிகுந்திருக்கும். சிலர் நிறைய வீட்டு மனைகளை வளைத்துப் போடுவார்கள்.
நிறைய வீடுகளைக் கட்டுவார்கள். எல்லோரிடமும் இன்முகத்துடன்
பழகுவார்கள். நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்.

மொத்தத்தில் உதாரண மனிதர்களாகத் திகழ்வார்கள்.

இந்த இடம், திருமணத்திற்கு உரிய இடம் (7th House, house of marriage)
வந்திருக்கும் கிரகம் தாய் வீட்டைச் சேர்ந்தது.

ஆகவே இந்த அமைப்புள்ளவர் களுக்கு தாய்வழி உறவில் இருந்து
மனைவி கிடைப்பாள்.

சிலர் மனைவி சொல்லே மந்திரம் என்று இருப்பார்கள்.

அதுபோல சிலர் மனைவியைத் தவிர மற்ற அனைத்தையும் மாற்றிக்
கொண்டிருப்பார்கள். அதாவது வீடு வாகனங்களை அடிக்கடி
மாற்றுவார்கள்.

நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேலே சொன்ன பலன்கள் இருக்காது. அதற்காக வருத்தப் பட வேண்டாம்.
அதற்கு நஷ்ட ஈடு ஜாதகத்தில் வேறு வழியில் கொடுக்கப்பட்டிருக்கும்! --------------------------------------------------------------------------------------------
8ல் இருந்தால்.

எட்டாம் வீடு என்பது ஆயுள் ஸ்தானம் மட்டுமல்ல, வாழ்க்கையில்
சந்திக்கப்போகும் சிரமங்கள் மற்றும் அவஸ்தைகளுக்கான வீடும்
அதுதான்.

It is also house of difficulties.

சிறு வயதில் ஜாதகன் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டிருப்பான்.
அவனை ஒழுங்காக பள்ளிக்கு அனுப்பும் சூழ்நிலை இருந்திருக்காது.
தாயன்பு கிடைத்திருக்காது. தாயார், வறுமையான சூழ்நிலையில்
பிறந்து வளர்ந்தவளாக இருப்பாள்.

சில தாய்களுக்கு அந்த வறுமையான சூழல் தொடரும். அதனால அவள் ஆசைப்பட்டாலும் தன் குழந்தைகளுக்கு அவளால் உரிய கல்வியைத்
தரமுடியாது.

ஜாதகன் வறுமைக்கும், அவமானத்திற்கும் ஆளாகி வளர்ந்திருப்பான்.
வீடு, வாகனங்கள், சொத்துக்கள் என்று எதுவும் சொல்லும்படியாகக்
கிடைக்காது.

உறவுகளும் நண்பர்களும் பொய்யாகிப் போகும் அல்லது போவார்கள்.
இந்த நிலைமை கொடுமையானது. அதாவது இந்தப் பொய்யாகிப்
போகும் நிலைமை! என்ன செய்வது? விதி என்று நொந்து கொள்ளலாம்
அவ்வளவுதான்.

நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் மேற்சொன்ன பலன்கள்
நீங்கும் அல்லது குறையும் =================================================

9ல் இருந்தால்

ஒன்பதாம் வீடு பாக்கியஸ்தானம். அங்கே நான்காம் அதிபதி வந்து
அமர்ந்தால் கேட்கவா வேண்டும்? பழம் நழுவித் தேனில் விழுந்து
அது நழுவி வாயில் விழுந்தது போல இருக்கும் அற்புதமான
அமைப்பு இது.

ஒரு கேந்திர அதிபதி திரிகோணத்தில் வந்து அமர்வது அற்புதம் இல்லையா?

சரி, ரெம்பவும் நெகிழ்ந்து, கதை விடாமல் பலனைச் சொல்லுங்கள்.

இதோ பலன்கள்:

The native will be blessed by a loving and compassionate mother
அதோடு நல்ல அன்பான தந்தை கிடைப்பார்.

ஜாதகன் அவருடைய முழு அன்பையும் பெற்றவனாக இருப்பான்.
நிலபுலன்கள், வீடுவாசல்கள், வண்டிவாகனங்கள், சுகங்கள்,
செளகரியங்கள் என்று அனைத்தும் ஜாதகனுக்குக் கிடைக்கும்.

ஜாதகன் பெரியவர்களை மதிப்பவனாகவும், தெய்வபக்தி மிகுந்தவனாகவும்
இருப்பான்.

ஜாதகனுக்கு ஆழ்ந்த ஆறிவு, நல்ல சிந்தனைகள், நகைச்சுவை உணர்வு
மிகுந்து இருக்கும்

நல்ல தந்தைக்கும், தந்தை வழிச் சொத்துக்களுக்கும் இது ஒரு உன்னத
அமைப்பாகும்.

நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேலே சொன்ன பலன்கள் கிடைக்காது.

அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும் -------------------------------------------------------------------------------------------

10ல் இருந்தால்

ஒரு கேந்திர அதிபதி இன்னொரு கேந்திரத்தில் அமரும் அமைப்பு இது.
நன்மைதரும் அமைப்பு!

ஜாதகனுக்கு தொழில் அல்லது வேலையில் அபரிதமான முன்னேற்றம்
கிடைக்கும்.

தன்னுடைய வேலையில் அனைத்து நுட்பங்களையும் அறிந்தவனாக
இருப்பான். சிலருக்கு அரசியல் தொடர்பு கிடைக்கும்.

அதில் வெற்றியும் கிடைக்கும். சிலர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து
பெரும்பொருள் ஈட்டுவார்கள்

ஜாதகன் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை பெற்றிருப்பான்.
எந்த இடத்திலும் அவனுடைய வரவை அல்லது இருப்பைப் பலரும்
உணரும்படி செய்யக்கூடியவன்.

வீடு, வாகனம் என்று என்று எல்லா செளகரியங்களும் உடையவனாக
இருப்பான். நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பான். அவர்களும் அவனுக்கு
உதவுபவர்களாக இருப்பார்கள்

நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேலே சொன்ன பலன்களை மறந்துவிட வேண்டியதுதான்.
அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும் ------------------------------------------------------------------------------------------
11ல் இருந்தால்

இந்த அமைப்பால் ஜாதகன் செளகரியங்கள், சுகங்கள் நிறைந்தவனாக
இருப்பான். தொழிலில் ஈடுபட்டுப் பெரும் பொருளை லாபமாகப் பெறுவான்.

சிலர் சிறு வயதிலேயே தங்கள் தாயாரை இழக்க நேரிடும்.

இந்த வீடு நான்காம் வீட்டிற்கு அதிலிருந்து எட்டாம் வீடு.
அதை மனதில் கொள்க!
If the 4th lord is in the 11th the native will be wealthy.
The native will have a lot of good friends.
They will have lots of gains as 11th house rules gains and
the fulfillment of all desires.
A good house and conveyances are guaranteed.
He will have lot of mental tensions also as 11th is 8th to the fourth.
Lack of mental peace and bliss can result. -------------------------------------------------------------------------------
12ல் இருந்தால்
நன்மை எதுவும் இல்லாத அமைப்பு.
சுகங்கள், செளகரியங்கள் குறைந்து இருக்கும்.
நண்பர்கள் உறவினர்களின் ஆதரவு இருக்காது.
வாழ்க்கை வறுமையும், கஷ்டங்களும், நஷ்டங்களும்,
வேதனைகளும் நிறைந்ததாக இருக்கும்.
பூர்வீக சொத்துக்கள் இருந்தால் அனைத்தும் விரையமாகிக்
காணாமல் போய்விடும்.
மொத்தத்தில் சிரமமோ சிரமம்.

The native will have to face many ills & unhappy situations in life.
The lord of 4th house in this house of loss shows loss of comforts.
Regarding house they may have to face many problems.
They may have to encounter litigation and problems regarding house.
They may not be happy with regard to mother.
Uncles and aunts will become enemies
Some friends also go against them.
They will be beset by many problems and difficulties.
Expenditure rises and they may have to spend much money on house
and conveyances.
They may have to face losses in speculation.

சுபக் கிரகங்களின் பார்வை இந்த அமைப்பின் மேல் பட்டால் அவை
குறையும் அல்லது நீங்கும். இல்லாவிட்டால் நோ சான்ஸ்! --------------------------------------------------------------------------------------------

(தொடரும்)

இந்தப் பாடத்தின் அடுத்த பகுதி வெள்ளிக் கிழமையன்று வெளியாகும்
ஸ்கிரீன் சைசில் 13 பக்கங்கள் உள்ள பாடம் இது. உங்களுக்காக
விவரமாகக் கொடுத்துள்ளேன். அனைவரையும் பொறுமையாகப்
படித்து
உணர வேண்டுகிறேன்.

அப்போதுதான் எழுதிய எனது நோக்கம் நிறைவேறும்!


நன்றி வணக்கத்துடன்
வகுப்பறை
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

69 comments:

  1. உங்கள் விளக்கம் மிக அருமை. மறைவு ஸ்தானமான 8ம் வீட்டில் இருந்தால் பலன்கள் எப்போதுமே குறைவு தானா?
    8ம் வீட்டை பற்றி சற்று விரிவாக எழுதவும். எழுதியிருந்தாலும் கூறவும் நான் தாமதமாக வந்த மாணவன்.

    ReplyDelete
  2. கன்னி லக்னம். எனக்கு சுகஸ்தானாதிபதி குரு 3ல், 3 பரலுடன் இருக்கிறார். அதனால் இது எனக்கு சுகஸ்தானமில்லை. சோகஸ்தானம். அதுவும் சில ஜோதிடர்கள் குருவுக்கு கேந்திராதிபத்திய/பாதகாதிபத்திய தோசம் எதுவுமே சரியில்லை என்கிறார்கள். ஆனால் ஒரு ஆறுதல். தாங்கள் சொன்ன மற்ற மூவர், புதன், சுக்கிரன், சந்திரன் மூவரும் முறையே 7,5,6 பரல்களுடன் இருக்கிறார்கள். சந்திரன் 10ல் இருந்து 4ம் இடத்தை பார்க்கிறார்.

    ReplyDelete
  3. கிரக வக்கிரத்தை பற்றி சில வரிகள் சொல்ல ஆசைப்படுகிறேன். 21ம் தேதி வகுப்பறைக்கு வர இயலவில்லை. அதனால் அன்று பின்னூட்டம் இடவில்லை. தாங்கள் சொல்லியதற்கு சிறு திருத்தம். புதன், சுக்கிரன், இருவரும் சூரியனுடன் சேர்ந்துதான் 90 பாகைக்குள் இருப்பார்கள். புதனும் சுக்கிரனும் சூரியனை விட்டு 90 பாகைக்கு மேல் போக எத்தனித்தால் வக்கிரமடைந்து பின்னோக்கி வருவார்கள். இவர்களை முக்கூட்டு கிரகங்கள் என்பார்கள். ஆனால் செவ்வாய் குரு, சனி இவர்களை சூரியன் சுமார் 130 பாகை அல்லது 5வது ராசியைக் கடக்கும் போது இவர்கள் வக்கிரமடைவார்கள். 7வது ராசியில் அதி வக்கிரமும் 9வது ராசியில் வக்கிர நிவர்த்தியும் அடைவார்கள். சில ஜோதிடர்களும் ஜோதிட புத்தகங்களும் வக்கிர கிரகம் நல்ல அல்லது உச்ச பலனைக் கொடுக்கும் என்கிறார்கள். ஆனால் அனுபவத்தில் தாங்கள் சொல்லியதுபோல் ஏடாகூடமான பலன்கள்தான் நடக்கின்றன. வக்கிரமடைந்த கிரகங்களின் ஆதிபத்தியமும் காரகத்துவமும் பாதிக்கபடத்தான் செய்கிறது.

    ReplyDelete
  4. நல்ல விளக்கம்... நல்லாசிரியர் விருது கொடுக்கலாம்னு நினைக்கின்றேன்..

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா

    நான்காம் அதிபதி பாடம் மிகவும் தெளிவாகவும் ,விரிவாகவும் இருந்தது
    படிப்பது புரியும்படியும் தெளிவாக இருந்தது ! நன்றி

    ReplyDelete
  6. ஹலோ சார்,
    4ல் எனக்கு சனி வக்கிரம், ஆக,
    //ஜாதகன், வீடு, வாகனம்
    என்று வசதியுடன் வாழ்வான்.//
    வீடு இருக்கு, ஆனால் வாகனயோகம் தற்போது இல்லை.

    //அதிகாரத்தில் உள்ளவர்களின் தொடர்பு கிடைக்கும்.//
    இதுவும் சரி தான்.

    //மற்றவர்களுடைய தொடர்பை, தங்களுக்குச் சாதகமாக மாற்றும் வல்லமை பெற்றிருப்பர்கள்.
    கறையில்லாத பெயரைப் பெற்றிருப்பார்கள்.//

    இதுவும் சரி.

    //ஆன்மிகத்திலும், தத்துவ
    விசாரங்களிலும் ஈடுபாடு கொண்டிருப்பார்கள்.// அவ்வளவாக இல்லை.

    //அன்பு என்பது கொடுத்துப் பெறவேண்டியது என்பதை உணர்ந்தவர்களாக இருப்பார்கள்.//
    100% சரி.
    //கல்வியில் மேன்மை பெற்றிருப்பார்கள். உறவினர்கள்
    பலரும் ஜாதகனிடம் விசுவாசமாக இருப்பார்கள்.// சரி.

    //பணியாட்கள், உதவியாளர்கள் என்று அரசனுக்குச் சமமான வாழ்க்கை
    ஜாதகனுக்கு அமையும்.//

    இங்க தான் எங்கயோ இடிக்குது. ம்ஹும் என்ன பன்ன?

    கிடைச்சவரை சந்தோஷப் பட்டுக்க வேண்டியது தான்.

    ReplyDelete
  7. நான்காம் வீட்டை பற்றிய விரிவான படத்திற்கு மிக்க நன்றி ....எனக்கு துலாம் லக்கினம். 4, 5 வீடுகளுக்கு அதிபதியான சனி தசை நடக்கிறது. சனி 10 ஆம் வீடாகிய கடகத்தில் இருந்து தனது வீடாகிய நான்காம் வீட்டை (மகரம்) பார்வை செய்கிறது.

    கடகம் பகை வீடு என்று பலன் பார்பதா அல்லது சனி கடகத்தில் தன்னுடைய சொந்த நட்சத்திரமாகிய பூச நட்சத்திர காலில் நிற்பதால் நன்மை தரும் பலன் என்று எடுப்பதா.

    நான்காம் வீட்டு பலன் என்று பார்த்தால் கல்வி வெளிநாடு சென்று MBA படிக்கும் அளவிற்கு நன்மை செய்து உள்ளது. எனவே இந்த கடகம் பகை வீடு என்பது எப்படி பாதிக்கும்.

    ReplyDelete
  8. உங்கள் விளக்கம் மிக அருமை!!
    ஐயா ஒரு சந்தேகம் , படதுக்கும் பாடத்துக்கும் என்ன சம்பந்தம் ?

    ReplyDelete
  9. நான்காம் அதிபதி பாடம் மிகவும் தெளிவாகவும் ,விரிவாகவும் இருந்தது
    படிப்பது புரியும்படியும் தெளிவாக இருந்தது ! நன்றி//

    நானும் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  10. ஸ்ஸ்ஸ் அப்பாடா!!! நம்ம ஆளு 10ம் வீட்டுல ஜம்-ணு இருக்கார்!!

    ஐயா!! எந்த ஊருகாரங்களுக்கு குஸும்பு அதிகம்னு ஜோதிட ரீதியில் விளக்க முடியுமா?

    புரிஞ்சிருபீங்களே?? தம்பிக்கு எந்த ஊருன்னு???

    ReplyDelete
  11. ஜயா ஒரு doubt 4ம் இட அதிபதி 12ம் இடத்தில் அமர்ந்தால் நல்லமில்லை, அதோடு சனி 12 ல் இருந்தால் இன்னும் அதிகமாகும் . ஆனால் சனி உச்சம் அடைந்திருந்தால் பிரச்சனை இரட்டிப்பாகுமா ? :).

    ReplyDelete
  12. ஒரு பெண்ணின் சாமுத்திரிகா லக்ஷ்ணத்தைப் பார்த்தே நான்காம் இடம் பற்றிச் சொல்லமுடியும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ,இது உண்மையா
    ( படமும் இதைத் தான் சொல்கிறதோ )

    ReplyDelete
  13. வணக்கம் ஐயா
    அருமையான விளக்கம் 'நான்காம் வீடு கல்விக்கு ஐந்தாம் வீடு அறிவுக்கு இரண்டும் ஒன்றாக இருந்தால் ? எனக்கு நான்கில் கேது ஐந்தில் குரு ,தப்பித்தேன் . மகர லக்னத்திற்கு செவ்வாய் பத்தாம் இடத்தில ஆட்சியில் ,கேந்திர அதிபதி இன்னும் கேந்திரத்தில் ,ஆரம்பமே அமோகமாக இருக்கிறது
    நன்றி
    கணேசன்

    ReplyDelete
  14. ஐயா,

    நாமக்கல்,திருப்பூர்,சிவகாசியை சொன்ன நீங்கள் சென்னையை தவிர்த்ததேன்? தங்கள் பதிவை வியாழன் அன்று எதிர்பார்த்தேன். புதன் அன்றே வந்துவிட்டது. தவிர தாங்கள் பதிவுகளில் தற்சமயம் ஒரு வேகம் காணப்படுகின்றது.இது எதனால்?
    படங்களின் கிளைமாக்ஸில்-தொடர்நாடகங்களின் கிளைமாக்ஸை திடீர் என முடித்துவிடுவார்கள். அதுபோல் தற்சமய பாடங்கள் செல்கின்றன?

    வாழ்க வளமுடன்,
    வேலன்

    ReplyDelete
  15. Dear Sir

    Nice Lesson and excellent explanation about 4th house.

    Arivu veru Kalvi veru ... good explanation.

    Enakku 4th house(Kumbam) --- Avar(Shani) - 9th place il irukkiar(Kadakam)..Sir..Dhasai Epadi sir?? Payamaga Irukkudhe...

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  16. Arumayana nadai, Arumayana padam.. Nandri ayya..

    ReplyDelete
  17. Dear Sir

    Ennudaya maganukku 4,11(Sukkiran) ikkuriyavan 9il Uchham(Meenam) - Kadaka Lagnam.

    5,10 th Lord(Sevvai) -- 7il Uchham (Magaram).Sani 2il Vakkiram...Sir..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  18. //////Blogger Sai said...
    உங்கள் விளக்கம் மிக அருமை. மறைவு ஸ்தானமான 8ம் வீட்டில் இருந்தால் பலன்கள் எப்போதுமே குறைவு தானா?
    8ம் வீட்டை பற்றி சற்று விரிவாக எழுதவும். எழுதியிருந்தாலும் கூறவும் நான் தாமதமாக வந்த மாணவன்./////

    8 & 12 கிரகங்கள் அமர்ந்தால் பலன்கள் குறையும். எட்டாம் வீட்டைப்பற்றிய பாடம் பின்னால் வரும்!

    ReplyDelete
  19. //////Blogger ananth said...
    கன்னி லக்னம். எனக்கு சுகஸ்தானாதிபதி குரு 3ல், 3 பரலுடன் இருக்கிறார். அதனால் இது எனக்கு சுகஸ்தானமில்லை. சோகஸ்தானம். அதுவும் சில ஜோதிடர்கள் குருவுக்கு கேந்திராதிபத்திய/பாதகாதிபத்திய தோசம் எதுவுமே சரியில்லை என்கிறார்கள். ஆனால் ஒரு ஆறுதல். தாங்கள் சொன்ன மற்ற மூவர், புதன், சுக்கிரன், சந்திரன் மூவரும் முறையே 7,5,6 பரல்களுடன் இருக்கிறார்கள். சந்திரன் 10ல் இருந்து 4ம் இடத்தை பார்க்கிறார்./////

    மற்ற அம்சங்கள் நன்றாக உள்ளன. அதுதான் சொன்னேனே நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டிருக்கும் என்று!

    ReplyDelete
  20. ///////////Blogger ananth said...
    கிரக வக்கிரத்தை பற்றி சில வரிகள் சொல்ல ஆசைப்படுகிறேன். 21ம் தேதி வகுப்பறைக்கு வர இயலவில்லை. அதனால் அன்று பின்னூட்டம் இடவில்லை. தாங்கள் சொல்லியதற்கு சிறு திருத்தம். புதன், சுக்கிரன், இருவரும் சூரியனுடன் சேர்ந்துதான் 90 பாகைக்குள் இருப்பார்கள். புதனும் சுக்கிரனும் சூரியனை விட்டு 90 பாகைக்கு மேல் போக எத்தனித்தால் வக்கிரமடைந்து பின்னோக்கி வருவார்கள். இவர்களை முக்கூட்டு கிரகங்கள் என்பார்கள். ஆனால் செவ்வாய் குரு, சனி இவர்களை சூரியன் சுமார் 130 பாகை அல்லது 5வது ராசியைக் கடக்கும் போது இவர்கள் வக்கிரமடைவார்கள். 7வது ராசியில் அதி வக்கிரமும் 9வது ராசியில் வக்கிர நிவர்த்தியும் அடைவார்கள். சில ஜோதிடர்களும் ஜோதிட புத்தகங்களும் வக்கிர கிரகம் நல்ல அல்லது உச்ச பலனைக் கொடுக்கும் என்கிறார்கள். ஆனால் அனுபவத்தில் தாங்கள் சொல்லியதுபோல் ஏடாகூடமான பலன்கள்தான் நடக்கின்றன. வக்கிரமடைந்த கிரகங்களின் ஆதிபத்தியமும் காரகத்துவமும் பாதிக்கபடத்தான் செய்கிறது.///////

    ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான். அது பிழை. பதிவில் திருத்தி விடுகிறேன். அனுபவத்தில் கிரக வக்கிரத்தால் அதிகமாகப்
    பாதிப்பைத்தான் பார்த்திருக்கிறேன்.நன்றி!

    ReplyDelete
  21. //////////Blogger ஆ.ஞானசேகரன் said...
    நல்ல விளக்கம்... நல்லாசிரியர் விருது கொடுக்கலாம்னு நினைக்கின்றேன்..////////

    உங்கள் அன்பைவிடவா, விருது பெரிது?

    ReplyDelete
  22. ///////////Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    நான்காம் அதிபதி பாடம் மிகவும் தெளிவாகவும் ,விரிவாகவும் இருந்தது
    படிப்பது புரியும்படியும் தெளிவாக இருந்தது ! நன்றி/////////

    நன்றி சுந்தர்!

    ReplyDelete
  23. ///////////Blogger Sumathi. said...
    ஹலோ சார்,
    4ல் எனக்கு சனி வக்கிரம், ஆக,
    //ஜாதகன், வீடு, வாகனம்
    என்று வசதியுடன் வாழ்வான்.//
    வீடு இருக்கு, ஆனால் வாகனயோகம் தற்போது இல்லை.
    //அதிகாரத்தில் உள்ளவர்களின் தொடர்பு கிடைக்கும்.//
    இதுவும் சரி தான்.
    //மற்றவர்களுடைய தொடர்பை, தங்களுக்குச் சாதகமாக மாற்றும் வல்லமை பெற்றிருப்பர்கள்.
    கறையில்லாத பெயரைப் பெற்றிருப்பார்கள்.//
    இதுவும் சரி.
    //ஆன்மிகத்திலும், தத்துவ
    விசாரங்களிலும் ஈடுபாடு கொண்டிருப்பார்கள்.// அவ்வளவாக இல்லை.
    //அன்பு என்பது கொடுத்துப் பெறவேண்டியது என்பதை உணர்ந்தவர்களாக இருப்பார்கள்.//
    100% சரி.
    //கல்வியில் மேன்மை பெற்றிருப்பார்கள். உறவினர்கள்
    பலரும் ஜாதகனிடம் விசுவாசமாக இருப்பார்கள்.// சரி.
    //பணியாட்கள், உதவியாளர்கள் என்று அரசனுக்குச் சமமான வாழ்க்கை
    ஜாதகனுக்கு அமையும்.//
    இங்க தான் எங்கயோ இடிக்குது. ம்ஹும் என்ன பன்ன?
    கிடைச்சவரை சந்தோஷப் பட்டுக்க வேண்டியது தான்./////////

    கொடுக்கும் விதிகளில் சில பொருந்தினால் சரிதான் சகோதரி. நன்றி!

    ReplyDelete
  24. ////////////Blogger Ragu Sivanmalai said...
    நான்காம் வீட்டை பற்றிய விரிவான படத்திற்கு மிக்க நன்றி ....எனக்கு துலாம் லக்கினம். 4, 5 வீடுகளுக்கு அதிபதியான சனி தசை நடக்கிறது. சனி 10 ஆம் வீடாகிய கடகத்தில் இருந்து தனது வீடாகிய நான்காம் வீட்டை (மகரம்) பார்வை செய்கிறது.
    கடகம் பகை வீடு என்று பலன் பார்பதா அல்லது சனி கடகத்தில் தன்னுடைய சொந்த நட்சத்திரமாகிய பூச நட்சத்திர காலில் நிற்பதால் நன்மை தரும் பலன் என்று எடுப்பதா.
    நான்காம் வீட்டு பலன் என்று பார்த்தால் கல்வி வெளிநாடு சென்று MBA படிக்கும் அளவிற்கு நன்மை செய்து உள்ளது. எனவே இந்த கடகம் பகை வீடு என்பது எப்படி பாதிக்கும்./////////

    சனி துலா லக்கினத்திற்கு யோககாரகன். ஒரு கேந்திரம் மற்றும் ஒரு திரிகோணவீடுகளுக்கு உரியவன். அவன் பகை வீட்டில் இருந்தாலும் யோகத்தையே தருவான். கவலைப் படாதீர்கள்! அவனை யோககாரகனாகவே பாருங்கள்!

    ReplyDelete
  25. ///////////Blogger Geekay said...
    உங்கள் விளக்கம் மிக அருமை!!
    ஐயா ஒரு சந்தேகம் , படதுக்கும் பாடத்துக்கும் என்ன சம்பந்தம் ?///////

    பதிவில் திருப்பூரைப் பற்றி எழுதியுள்ளேன். அதற்குப் படம் match ஆகிறதா இல்லையா?

    ReplyDelete
  26. /////////Blogger புதுகைத் தென்றல் said...
    நான்காம் அதிபதி பாடம் மிகவும் தெளிவாகவும் ,விரிவாகவும் இருந்தது
    படிப்பது புரியும்படியும் தெளிவாக இருந்தது ! நன்றி//
    நானும் வழிமொழிகிறேன்.///////////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  27. ///////////Blogger பரமார்த்த குரு said...
    ஸ்ஸ்ஸ் அப்பாடா!!! நம்ம ஆளு 10ம் வீட்டுல ஜம்-ணு இருக்கார்!!
    ஐயா!! எந்த ஊருகாரங்களுக்கு குஸும்பு அதிகம்னு ஜோதிட ரீதியில் விளக்க முடியுமா?
    புரிஞ்சிருபீங்களே?? தம்பிக்கு எந்த ஊருன்னு???////////////

    அதற்கெல்லாம் ஜோதிடத்தில் ஒன்றும் எழுதிவைக்கப்படவில்லை!

    ReplyDelete
  28. ////////////Blogger Emmanuel Arul Gobinath said...
    ஜயா ஒரு doubt 4ம் இட அதிபதி 12ம் இடத்தில் அமர்ந்தால் நல்லமில்லை, அதோடு சனி 12 ல் இருந்தால் இன்னும் அதிகமாகும் . ஆனால் சனி உச்சம் அடைந்திருந்தால் பிரச்சனை இரட்டிப்பாகுமா ? :).////////

    12ல் உள்ள சனி உச்சம் என்றால் உங்களுக்கு விருச்சிக லக்கினம். 4ற்குரியவனும் சனியே. mixed results!

    ReplyDelete
  29. /////////Blogger KS said...
    ஒரு பெண்ணின் சாமுத்திரிகா லக்ஷ்ணத்தைப் பார்த்தே நான்காம் இடம் பற்றிச் சொல்லமுடியும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ,இது உண்மையா
    ( படமும் இதைத் தான் சொல்கிறதோ )//////////

    4ஆம் வீடு பெண்ணின் கற்பு ஸ்தானம்!

    ReplyDelete
  30. ////////Blogger krish said...
    Thanks for the lesson.///////////

    நன்றி க்ரீஷ்

    ReplyDelete
  31. ////////Blogger annadurai said...
    வணக்கம் ஐயா
    அருமையான விளக்கம் 'நான்காம் வீடு கல்விக்கு ஐந்தாம் வீடு அறிவுக்கு இரண்டும் ஒன்றாக இருந்தால் ? எனக்கு நான்கில் கேது ஐந்தில் குரு ,தப்பித்தேன் . மகர லக்னத்திற்கு செவ்வாய் பத்தாம் இடத்தில ஆட்சியில் ,கேந்திர அதிபதி இன்னும் கேந்திரத்தில் ,ஆரம்பமே அமோகமாக இருக்கிறது
    நன்றி
    கணேசன்//////////////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  32. ///////////Blogger வேலன். said...
    ஐயா,
    நாமக்கல்,திருப்பூர்,சிவகாசியை சொன்ன நீங்கள் சென்னையை தவிர்த்ததேன்? தங்கள் பதிவை வியாழன் அன்று எதிர்பார்த்தேன். புதன் அன்றே வந்துவிட்டது. தவிர தாங்கள் பதிவுகளில் தற்சமயம் ஒரு வேகம் காணப்படுகின்றது.இது எதனால்?
    படங்களின் கிளைமாக்ஸில்-தொடர்நாடகங்களின் கிளைமாக்ஸை திடீர் என முடித்துவிடுவார்கள். அதுபோல் தற்சமய பாடங்கள் செல்கின்றன?
    வாழ்க வளமுடன்,
    வேலன்/////////////

    சென்னையில் அவஸ்தைப் படுகிறவர்களே அதிகம்.
    எப்போதும் உள்ள வேகம்தான்!

    ReplyDelete
  33. //////////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Nice Lesson and excellent explanation about 4th house.
    Arivu veru Kalvi veru ... good explanation.
    Enakku 4th house(Kumbam) --- Avar(Shani) - 9th place il irukkiar(Kadakam)..Sir..Dhasai Epadi sir?? Payamaga Irukkudhe...
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman///////////////

    அதெல்லாம் நன்றாக இருக்கும். இப்போதே எதற்குக் கவலை?

    ReplyDelete
  34. /////////Blogger Prabhu said...
    Arumayana nadai, Arumayana padam.. Nandri ayya..///////////

    நன்றி பிரபு!

    ReplyDelete
  35. ///////////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Ennudaya maganukku 4,11(Sukkiran) ikkuriyavan 9il Uchham(Meenam) - Kadaka Lagnam.
    5,10 th Lord(Sevvai) -- 7il Uchham (Magaram).Sani 2il Vakkiram...Sir..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman//////////////

    பிறந்த குழந்தைகளுக்கெல்லாம் இப்போது பார்க்காதீர்கள். 12 வயதிற்குமேல் பாருங்கள்!
    அத்ற்குப் பிறகுதான் அவர்களுடைய ஜாதகம் வேலை செய்யும்!

    ReplyDelete
  36. தங்கள் பாடத்தில் உள்ளதை சுருக்கமாக சொல்வதானால் 4ம் அதிபதி லக்னத்திற்கு மற்றும் 4 இடத்திற்கு 6,8,12ல் மறையக்கூடாது. பகை, நீசம் பெறக்கூடாது. விடுபட்ட இன்னொன்று. அவர் நைசர்கிக சுப கிரகமாக இருக்கக் கூடாது. அடுத்து வரும் மஹா (mega) பாடத்தில் சந்திப்போம். ஒரு பதிவிற்கு 2 பின்னூட்டங்களுக்கு மேல் இடுவதில்லை என்று என் சொந்த quota வைத்திருந்தேன். அதை இன்று நானே மீறி விட்டேன். மற்றவர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டுமே.

    ReplyDelete
  37. அய்யா,

    நேற்று இரவு வரை வகுப்பறையைப் பார்த்துவிட்டுதான் உறங்கச் சென்றேன். சிங்கப்பூர் 2-1/2 மணி நேரம் தாண்டி உள்ளதால் தற்போதுதான் இந்தப் பாடத்தைப் பார்க்க முடிந்தது (அதோடு வகுப்பறைக்கு அடியேன் புதியவன்) ... இருப்பினும் பாடத்தோடு பின்னூட்டங்களையும் பார்க்க முடிந்ததில் சந்தோஷம். பின்னூட்டங்களைப் பார்ப்பதால் பாடங்களை மேலும் தெளிவாக அறியமுடிகிறது.
    முக்கூட்டு கிரகங்களின் வக்கிரம் பற்றிய புதிய செய்தி ஒரு குழப்பத்தையும் தெளிவாக்கியுள்ளது.
    மிக்க நன்றி அய்யா
    சிங்கப்பூர் சீனு

    ReplyDelete
  38. ஆமாம் ஜயா, விருச்சிக லக்கினம். கண்ணீர் துளி போல் உள்ள தீவில் பிறந்தால் எப்போதும் சோகம் எங்காவது இருந்தாவது வரத்தானே செய்யும். எப்படியோ இறையருளால் சந்தோசமாக உங்கள் blog ஜ படித்து கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  39. ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு சார்.. :)

    ReplyDelete
  40. ஐயா வணக்கம்
    எனக்கு 4-ம் வீட்டு (மேஷம்) அதிபதி செவ்வாய் 7-ல் (கடகத்தில்) நீசம். 4-ம் வீட்டின் பரல் 36 . 4-ம் வீட்டில் குருவும்(6 paral) கேதுவும் உள்ளனர். எனக்கு செவ்வாய் நீசமானதால் பலன்கள் கிடைக்காதா அல்லது வீட்டின் பரல்(36) அதிகமானதால் கிடைக்குமா ?

    ReplyDelete
  41. Dear sir,

    You mentioned if the 4 th lord in 11th place will have lot of good friends, but I found the opposite way in my expereince ,less friends and no real good friends.

    I am Simbha lagna , 4th lord Mars in 11th place.

    Heard from one of the astro article that if Mars in 11th plcae is like burn the gains. (as Mars also called Aknikkaren) is that true.
    Thanks

    ReplyDelete
  42. Hello sir,

    Dhanusu lagnam, 4 am athipathi guru 11 il.

    its true for me. my mother passedaway in childhood.

    Yoganandam.

    ReplyDelete
  43. //////Blogger ananth said...
    தங்கள் பாடத்தில் உள்ளதை சுருக்கமாக சொல்வதானால் 4ம் அதிபதி லக்னத்திற்கு மற்றும் 4 இடத்திற்கு 6,8,12ல் மறையக்கூடாது. பகை, நீசம் பெறக்கூடாது. விடுபட்ட இன்னொன்று. அவர் நைசர்கிக சுப கிரகமாக இருக்கக் கூடாது. அடுத்து வரும் மஹா (mega) பாடத்தில் சந்திப்போம். ஒரு பதிவிற்கு 2 பின்னூட்டங்களுக்கு மேல் இடுவதில்லை என்று என் சொந்த quota வைத்திருந்தேன். அதை இன்று நானே மீறி விட்டேன். மற்றவர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டுமே./////

    அடடா, இடத்தைப் பற்றி எதற்குக் கவலை?. கூகுள் ஆண்டவரின் சர்வரில் நமக்கெல்லாம் வேண்டிய இடம் உள்ளது!:-))))

    ReplyDelete
  44. /////Blogger Cheenu said...
    அய்யா,
    நேற்று இரவு வரை வகுப்பறையைப் பார்த்துவிட்டுதான் உறங்கச் சென்றேன். சிங்கப்பூர் 2-1/2 மணி நேரம் தாண்டி உள்ளதால் தற்போதுதான் இந்தப் பாடத்தைப் பார்க்க முடிந்தது (அதோடு வகுப்பறைக்கு அடியேன் புதியவன்) ... இருப்பினும் பாடத்தோடு பின்னூட்டங்களையும் பார்க்க முடிந்ததில் சந்தோஷம். பின்னூட்டங்களைப் பார்ப்பதால் பாடங்களை மேலும் தெளிவாக அறியமுடிகிறது.
    முக்கூட்டு கிரகங்களின் வக்கிரம் பற்றிய புதிய செய்தி ஒரு குழப்பத்தையும் தெளிவாக்கியுள்ளது.
    மிக்க நன்றி அய்யா
    சிங்கப்பூர் சீனு/////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  45. ////////Blogger Emmanuel Arul Gobinath said...
    ஆமாம் ஜயா, விருச்சிக லக்கினம். கண்ணீர் துளி போல் உள்ள தீவில் பிறந்தால் எப்போதும் சோகம் எங்காவது இருந்தாவது வரத்தானே செய்யும். எப்படியோ இறையருளால் சந்தோசமாக உங்கள் blog ஜ படித்து கொண்டு இருக்கிறேன்.///////////

    தொடர்ந்து படியுங்கள். கண்ணீர்த் துளிகள் காணாமல் போய்விடும்!

    ReplyDelete
  46. ////Blogger Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said.../////
    ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு சார்.. :)////

    பெயருக்குப் பின்னால் எப்படி இரண்டு பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டுள்ளீர்கள்?

    ReplyDelete
  47. /////Blogger உங்கள் மாணவி said...
    ஐயா வணக்கம்
    எனக்கு 4-ம் வீட்டு (மேஷம்) அதிபதி செவ்வாய் 7-ல் (கடகத்தில்) நீசம். 4-ம் வீட்டின் பரல் 36 . 4-ம் வீட்டில் குருவும்(6 paral) கேதுவும் உள்ளனர். எனக்கு செவ்வாய் நீசமானதால் பலன்கள் கிடைக்காதா அல்லது வீட்டின் பரல்(36) அதிகமானதால் கிடைக்குமா?//////

    அதிபதி நீசமானாலும், அவருடைய வீடு 36 பரல்களுடன் அம்சமாக (சிறப்பாக) உள்ளதே! அதானால் உரிய பலன்கள் கிடைக்கும் சகோதரி!

    ReplyDelete
  48. /////Blogger vijayan said...
    Dear sir,
    You mentioned if the 4 th lord in 11th place will have lot of good friends, but I found the opposite way in my expereince ,less friends and no real good friends.
    I am Simbha lagna , 4th lord Mars in 11th place.
    Heard from one of the astro article that if Mars in 11th plcae is like burn the gains. (as Mars also called Aknikkaren) is that true.
    Thanks/////////////

    பதிவில் சொல்லியிருப்பது பொதுப் பலன். ஜாதகத்திற்கு ஜாதகம் வேறு அமைப்புக்களை வைத்து அது மாறுபடும்!
    செவ்வாய்க்கு அதன் வீட்டிலிருந்து உங்கள் ஜாதகத்தில் இருக்கும் இடம் எட்டாம் வீடு. ஆகவே பலன்கள் அடிபட்டுப்போகும்
    செவ்வாய்க்குப் புதனின் வீடு சிறப்பானதல்ல!

    ReplyDelete
  49. //////////Blogger YOGANANDAM M said...
    Hello sir,
    Dhanusu lagnam, 4 am athipathi guru 11 il.
    its true for me. my mother passedaway in childhood.
    Yoganandam.//////////

    கேட்க வருத்தமாக உள்ளது. இருந்தாலும் தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  50. /////Blogger Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said.../////
    ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு சார்.. :)////

    பெயருக்குப் பின்னால் எப்படி இரண்டு பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டுள்ளீர்கள்? //

    இதுவும் ஒரு வகை எழுத்துக்களைக் கொண்டு செய்தது தான் ஐயா. அதை அபப்டியே காப்பி செய்து யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அது படம் இல்லை. எழுத்துக்கள் தான்.

    ReplyDelete
  51. Dear Sir,

    I am simha lagna, 4th house lord -Mars is with Jupiter in 11th house. Mars is not in good placement as it is in mithuna but it is with Jupiter. Since it is with Guru will it be benefical?

    -Shankar

    ReplyDelete
  52. அருமையான பாடம்!

    ஐயா, ஒரு சந்தேகம்

    //

    9ல் இருந்தால்

    ஒன்பதாம் வீடு பாக்கியஸ்தானம். அங்கே நான்காம் அதிபதி வந்து
    அமர்ந்தால் கேட்கவா வேண்டும்? பழம் நழுவித் தேனில் விழுந்து
    அது நழுவி வாயில் விழுந்தது போல இருக்கும் அற்புதமான
    அமைப்பு இது.

    ஒரு கேந்திர அதிபதி திரிகோணத்தில் வந்து அமர்வது அற்புதம் இல்லையா?

    இதோ பலன்கள்:

    The native will be blessed by a loving and compassionate mother
    அதோடு நல்ல அன்பான தந்தை கிடைப்பார்.

    ஜாதகன் அவருடைய முழு அன்பையும் பெற்றவனாக இருப்பான்.
    நிலபுலன்கள், வீடுவாசல்கள், வண்டிவாகனங்கள், சுகங்கள்,
    செளகரியங்கள் என்று அனைத்தும் ஜாதகனுக்குக் கிடைக்கும்.

    நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
    மேலே சொன்ன பலன்கள் கிடைக்காது.//

    கும்ப லக்கினத்துக்கு 4,9 க்கு உடைய சுக்ரன் 9ல் இருந்தால் நன்மை என்று சொல்லியுள்ளீர்கள்
    9ம் வீடு என்பது, 4ம் வீட்டிற்க்கு 6இல் அல்லவா உள்ளது, 6ம் இடம் மறைவு ஸ்தானம் இல்லையா?

    சற்று விளக்கம் தாருங்கள்!

    என்றும் அன்புடன்

    ReplyDelete
  53. /////////////////Blogger Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
    /////Blogger Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said.../////
    ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு சார்.. :)////
    பெயருக்குப் பின்னால் எப்படி இரண்டு பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டுள்ளீர்கள்? //
    இதுவும் ஒரு வகை எழுத்துக்களைக் கொண்டு செய்தது தான் ஐயா. அதை அபப்டியே காப்பி செய்து யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அது படம் இல்லை. எழுத்துக்கள் தான்.//////

    எழுத்துக்கள் எங்கே கிடைக்கின்றன? சுட்டியைத் தாருங்கள். பலரும் பயனடையட்டும்.

    ReplyDelete
  54. ///////Blogger hotcat said...
    Dear Sir,
    I am simha lagna, 4th house lord -Mars is with Jupiter in 11th house. Mars is not in good placement as it is in mithuna but it is with Jupiter. Since it is with Guru will it be benefical?
    -Shankar///////

    குருவோடு இருப்பது சுப் கிரகத்தின் சேர்க்கையல்லவா? இருவரும் 5 பாகைகள் தள்ளியிருந்தால் போது. அதோடு குருவும் செவ்வாயும் சேர்ந்தால் குருமங்கள யோகம்.
    அதற்குப் பலன்? அது யோகங்களைப் பற்றிய பாடத்தில் வரும். சற்றுப் பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  55. //////Blogger SP Sanjay said...
    அருமையான பாடம்!
    ஐயா, ஒரு சந்தேகம்//
    9ல் இருந்தால்
    ஒன்பதாம் வீடு பாக்கியஸ்தானம். அங்கே நான்காம் அதிபதி வந்து
    அமர்ந்தால் கேட்கவா வேண்டும்? பழம் நழுவித் தேனில் விழுந்து
    அது நழுவி வாயில் விழுந்தது போல இருக்கும் அற்புதமான
    அமைப்பு இது
    ஒரு கேந்திர அதிபதி திரிகோணத்தில் வந்து அமர்வது அற்புதம் இல்லையா?
    இதோ பலன்கள்:
    The native will be blessed by a loving and compassionate mother
    அதோடு நல்ல அன்பான தந்தை கிடைப்பார்.
    ஜாதகன் அவருடைய முழு அன்பையும் பெற்றவனாக இருப்பான்.
    நிலபுலன்கள், வீடுவாசல்கள், வண்டிவாகனங்கள், சுகங்கள்,
    செளகரியங்கள் என்று அனைத்தும் ஜாதகனுக்குக் கிடைக்கும்.
    நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
    மேலே சொன்ன பலன்கள் கிடைக்காது.//
    கும்ப லக்கினத்துக்கு 4,9 க்கு உடைய சுக்ரன் 9ல் இருந்தால் நன்மை என்று சொல்லியுள்ளீர்கள்
    9ம் வீடு என்பது, 4ம் வீட்டிற்க்கு 6இல் அல்லவா உள்ளது, 6ம் இடம் மறைவு ஸ்தானம் இல்லையா?
    சற்று விளக்கம் தாருங்கள்!
    என்றும் அன்புடன்////////

    ரிஷபத்திற்கும், துலாம் வீட்டிற்கும் அதிபதி சுக்கிரன். இரண்டு வீடுகளும் ஒன்றிலிருந்து ஒன்று 6/8 positionல் உள்ளது
    அதுபோல மேஷமும் விருச்சிகமும் செவ்வாய் கிரகத்தின் வீடுகள். அவையும் 8/6 positionல் உள்ளன. இருந்தாலும் வீட்டு அதிபதிக்கு அந்த அஷ்டம சஷ்டமக் (6/8 அல்லது 8/6) கோளாறுகள் கிடையாது. விதிவிலக்கு உண்டு!

    விளக்கம் போதுமா?

    ReplyDelete
  56. Dear Sir


    Ungal Tamlmanapathivugal - katturaikal padithen...Arumai Sir..

    "Neenga Oru All in All Azhagu Raja Sir".

    Thank you

    Regards
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  57. //
    என்ன தலை சுற்றுகிறதா?

    அதற்குப் பெயர்தான் ஜோதிடம்!

    தலையைச் சுற்ற விடாதீர்கள். ஒரு கையால் தலையை அழுத்திப் பிடித்துக்
    கொண்டு ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.
    //


    கஷ்டம் தான்.
    ஈசி சிலபஸ் ஆக இருந்தால் பரவாயில்லை!.

    தலை நன்றாகவே சுற்றுகிறது.

    முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  58. /////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Ungal Tamlmanapathivugal - katturaikal padithen...Arumai Sir..
    "Neenga Oru All in All Azhagu Raja Sir".
    Thank you
    Regards
    Arulkumar Rajaraman/////

    ஆல் இன் ஆல் அழகுராஜா என்றால் எனக்குக் கவுண்டமணியின் நினைவுதான் வரும்!:-))))

    ReplyDelete
  59. ///////Blogger மெனக்கெட்டு said... //
    என்ன தலை சுற்றுகிறதா?
    அதற்குப் பெயர்தான் ஜோதிடம்!
    தலையைச் சுற்ற விடாதீர்கள். ஒரு கையால் தலையை அழுத்திப் பிடித்துக்
    கொண்டு ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.
    //
    கஷ்டம் தான்.
    ஈசி சிலபஸ் ஆக இருந்தால் பரவாயில்லை!.
    தலை நன்றாகவே சுற்றுகிறது.
    முயற்சிக்கிறேன்.//////

    ஆர்வத்துடன், involvement உடன் படியுங்கள் மனதில் ஏறும். தலை சுற்றாது!

    ReplyDelete
  60. This comment has been removed by the author.

    ReplyDelete
  61. Dear Sir,

    I have a doubt, please clarify me, this may be bit foolish,

    the scenario is

    The person thula ascendant(lagna), in his fourth house sun and Mars Placed, in his 11th house placed sani and ragu.

    Now my question is

    In this scenario

    Sani is sitting at surya’s house, surya is sitting with sani’s house so can we conclude this is parivarthana yoga? If yes, surya will give good result for the person in his desc, bukthi kocharam and etc since he is the 11th lord for lagna

    pls forgive me if this is not a valid question

    Thanks in Advance

    ReplyDelete
  62. //ரிஷபத்திற்கும், துலாம் வீட்டிற்கும் அதிபதி சுக்கிரன். இரண்டு வீடுகளும் ஒன்றிலிருந்து ஒன்று 6/8 positionல் உள்ளது
    அதுபோல மேஷமும் விருச்சிகமும் செவ்வாய் கிரகத்தின் வீடுகள். அவையும் 8/6 positionல் உள்ளன. இருந்தாலும் வீட்டு அதிபதிக்கு அந்த அஷ்டம சஷ்டமக் (6/8 அல்லது 8/6) கோளாறுகள் கிடையாது. விதிவிலக்கு உண்டு!

    விளக்கம் போதுமா?//

    அஷ்டம சஷ்டமக் கோளாறுகள் பற்றிய விளக்கம் போதுமானது, நன்றி ஐயா

    என்றும் அன்புடன்

    ReplyDelete
  63. ஐயா

    என்னுடைய கேள்வி சூரியனையும் சனியையும் பற்றித்தானே இருவரும் பரிவர்ததன யோகம் பெற்றுள்ளார்களா? ஏன் என்றால் சூரியன் இந்த லக்கினதிற்க்கு லாபதிபதி ஆயிற்றே

    ReplyDelete
  64. /////Blogger san said...
    Dear Sir,
    I have a doubt, please clarify me, this may be bit foolish,
    the scenario is
    The person thula ascendant(lagna), in his fourth house sun and Mars Placed, in his 11th house placed sani and ragu.
    Now my question is
    In this scenario
    Sani is sitting at surya’s house, surya is sitting with sani’s house so can we conclude this is parivarthana yoga? If yes, surya will give good result for the person in his desc, bukthi kocharam and etc since he is the 11th lord for lagna
    pls forgive me if this is not a valid question
    Thanks in Advance//////

    சூரியனும் சனியும் பரிவத்தனை பெற்றுள்ளன. அதற்குரிய பலன்கள் கிடைக்கும்!

    ReplyDelete
  65. Blogger SP Sanjay said...
    //ரிஷபத்திற்கும், துலாம் வீட்டிற்கும் அதிபதி சுக்கிரன். இரண்டு வீடுகளும் ஒன்றிலிருந்து ஒன்று 6/8 positionல் உள்ளது
    அதுபோல மேஷமும் விருச்சிகமும் செவ்வாய் கிரகத்தின் வீடுகள். அவையும் 8/6 positionல் உள்ளன. இருந்தாலும் வீட்டு அதிபதிக்கு அந்த அஷ்டம சஷ்டமக் (6/8 அல்லது 8/6) கோளாறுகள் கிடையாது. விதிவிலக்கு உண்டு!
    விளக்கம் போதுமா?//
    அஷ்டம சஷ்டமக் கோளாறுகள் பற்றிய விளக்கம் போதுமானது, நன்றி ஐயா
    என்றும் அன்புடன்////

    நன்றி சஞ்சய்!

    ReplyDelete
  66. /////Blogger san said...
    ஐயா
    என்னுடைய கேள்வி சூரியனையும் சனியையும் பற்றித்தானே இருவரும் பரிவர்த்தனை யோகம் பெற்றுள்ளார்களா? ஏன் என்றால் சூரியன் இந்த லக்கினதிற்க்கு லாபதிபதி ஆயிற்றே!

    பரிவத்தனை பெற்றுள்ளார்கள்!அதற்குரிய பலன்கள் கிடைக்கும்! அதனதன் தசா புத்திகளில் கிடைக்கும்!

    ReplyDelete
  67. மதிப்பிற்குரிய அய்யா,


    தங்கள் விளக்கதிற்க்கு மிக்க நன்றி, மேலும் வர்கோத்தமம் பற்றி சில சந்தேகங்கள், தாங்கள் தயவு கூர்ந்து விளக்கவும்.

    1.அஸ்தங்கம் அடைந்த கிரகம் வர்கோத்தமம் பெற்றால் நன்மை செய்யுமா?

    2.பகை/நீச வீடுகளில் அமர்ந்த கிரகம் வர்கோத்தமம் பெற்றால் நன்மை செய்யுமா?

    3.ஒரு ஜாதகத்தில் யோக காரகன் பகை/நீச வீடுகளில் அமர்ந்தால் அவரது பலன் எவ்வாறு இருக்கும்?

    ReplyDelete
  68. /////Blogger san said...
    மதிப்பிற்குரிய அய்யா,
    தங்கள் விளக்கதிற்க்கு மிக்க நன்றி, மேலும் வர்கோத்தமம் பற்றி சில சந்தேகங்கள், தாங்கள் தயவு கூர்ந்து விளக்கவும்.
    1.அஸ்தங்கம் அடைந்த கிரகம் வர்கோத்தமம் பெற்றால் நன்மை செய்யுமா?/////

    சுபக் கிரகங்கள் என்றால் எந்த நிலையிலும் நன்மைகளைச் செய்யும். அதன் தசா புத்திகளில் செய்யும்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    2.பகை/நீச வீடுகளில் அமர்ந்த கிரகம் வர்கோத்தமம் பெற்றால் நன்மை செய்யுமா?////
    பலன்கள் பாதியாகக் குறைந்து விடும். நீசம்பெற்றால் பலன் இல்லாமல் போய்விடும்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    3.ஒரு ஜாதகத்தில் யோக காரகன் பகை/நீச வீடுகளில் அமர்ந்தால் அவரது பலன் எவ்வாறு இருக்கும்?/////

    பலன்கள் பாதியாகக் குறைந்து விடும். நீசம்பெற்றால் பலன் இல்லாமல் போய்விடும்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com