மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.3.09

க‌ன‌வு மெய்ப்ப‌ட‌ வேண்டும்



"க‌ன‌வு மெய்ப்ப‌ட‌ வேண்டும்

கைவ‌ச‌மாவ‌து விரைவில் வேண்டும்"
என்றான் முண்டாசுக் கவிஞன் பாரதி.

எனக்கும் ஒரு கனவு உணடு. அது விரைவில் மெய்ப்பட உள்ளது.

ஐந்து ஆண்டுகளாக குறும் இதழ்களிலும், மூன்று ஆண்டுகளாக வலைப்
பதிவுகளிலும் எழுதிக் கொண்டிடுக்கிறேன்.

குறும் இதழ்களில் இதுவரை 53 சிறுகதைகளையும், இரண்டு கட்டுரைத்
தொடர்களையும் எழுதியுள்ளேன். வலைப்பதிவுகளில் பல்சுவைப் பதிவு,
மற்றும் வகுப்பறைப் பதிவுகளில் இதுவரை சுமார் 700 இடுகைகளை
வலையேற்றியுள்ளேன்.

அவற்றில் சில ஆக்கங்களைப் புத்தகமாக வெளியிடும் எண்ணத்தில் களம்
இறங்கியுள்ளேன்.

முதலில் எனது சிறுகதைகளைத் தொகுத்து இரண்டு புத்தகங்களாகவும்,
குட்டிக்கதைகள் மற்றும் மனவளக் கட்டுரைகளை இரண்டு புத்தகங்களாகவும்
வெளியிடவுள்ளேன். அந்தப் பணி நடந்துகொண்டு உள்ளது

எனது வழக்கமான வியாபார, மற்றும் சொந்த அலுவல்களுக்கிடையே, இந்த
புத்தகப் பணியும் சேர்ந்து கொண்டதால், நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிறது.
அதனால்தான் பல்சுவைப் பதிவில் சென்ற ஒரு திங்களாக எதுவும் எழுத முடியவில்லை.

வகுப்பறையை மட்டும் நிறுத்தவில்லை. மாணவக் கண்மணிகள் ஏமாற்றம்
அடையக்கூடாது என்பதால் அதை மட்டும் விடாமல் செய்து கொண்டிருக்கிறேன்.

பின்னூட்டங்களுக்குப் பதில் எழுதுவது மற்றும் சற்று தாமதப்படுகிறது. சற்றுப்
பொறுத்துக் கொள்ளுங்கள்.

யாராவது நேரத்தை இலவசமாகவோ அல்லது கடனாகவோ தந்து உதவுங்கள்:-)))))))
----------------------------------------------------------------------------------------------------------------
நான்கில் ஒன்று தயாராகி விட்டது. அதாவது அச்சாகி வந்து விட்டது.
உங்கள் பார்வைக்குக் கீழே கொடுத்துள்ளேன்.

அதை வெளியிடும் நாள். கிடைக்கும் பதிப்பக விவரம் எல்லாம் பிறகு எழுதுகிறேன்




இந்த நூலிற்கு வாழ்த்துரை மற்றும் அணிந்துரையை மூன்று பிரபலங்கள்
கொடுத்துள்ளார்கள். அதைப் புத்தகத்தின் உள்ளே சேர்த்திருக்கிறேன்.


வாழ்த்துரை: டாக்டர் ஜஸ்டிஸ் திரு.AR.லெட்சுமணன் அவர்கள். முன்னாள்
உச்சமன்ற நீதியரசர். இந்நாள் தலைவர், இந்தியச் சட்ட ஆணையம், புது தில்லி.
(Chairan, Law Commission of India, New Delhi)

முன்னுரை: இலக்கிய சிந்தனை' திரு.ப. லெட்சுமணன் அவர்கள். சென்னை.
இவர் புகழ்மிக்க குடும்பத்தில் பிறந்தவர். அண்ணாமலை பல்கலைக் கழகத்தின்
நிறுவனர். ராஜாசர். திரு. முத்தையா செட்டியார் அவர்களின் மகள் வழிப்பேரர்
மத்திய உள்துறை அமைச்சர். திரு.ப. சிதம்பரம் அவர்களின் மூத்த சகோதரர்.

அணிந்துரை: முனைவர், பேராசான்.மூத்த தமிழறிஞர் திரு. தமிழண்ணல் அவர்கள்.
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர். மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மதுரை



புத்தகத்தின் பெயர்: செட்டிநாட்டு மண்வாசனைக் கதைகள். முதல் தொகுதி
புத்தகத்தின் அளவு: 1/8 Demi Size 160 பக்கங்கள். இருபது சிறுகதைகள் உள்ளன

நன்றி வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்

இரண்டு தினங்களாக ஊரில் இல்லை. இன்றுகாலைதான் திரும்பினேன்
அடுத்த பாடம் நாளை வலையேறும்.

வாழ்க வளமுடன்!

58 comments:

  1. தங்கள் பதிப்பு புத்தகங்கள் விற்பனையில் வெற்றி பெற வகுப்பறை மாணவர்கள் சார்பில் வாழ்த்துகின்றோம்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  2. Adutha padathirkaka nalai varai kathirukkiren. I appreciate your dedication. You try to write in the limited time or even if you have time constraint. This is the first thing I should learn from you.

    ReplyDelete
  3. ஐயா உங்களது சிறுகதை தொகுப்பு வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன். எங்களுக்கும் ஒரு பிரதி வேண்டும் சென்னையில் இப்புத்தகம் கிடைக்கும் இடங்களை கூடிய விரைவில் தெரியப் படுத்தவும்.

    ReplyDelete
  4. all the best for your efforts.defnetly this book will give you a great reputation.

    ReplyDelete
  5. Dear Sir

    Ungal Puthakangal Enakku US il kidaikkuma??

    Avaludan Ethirpakkiren...Kandippaga Manavarkalin Muthal Pathippu Enakku Tharavendum ena Thalmayudan Kettukolkirean.

    "Ungalin Elutthu Pani
    Engalin Udal Ani(Anikalankal)"

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  6. Dear Sir

    Mandhil Urudhi Vendum,
    Vakkinilea Inimai vendum,
    Ninaivu Nalladhu Vendum
    Kanvu Meipadal Vendum
    Kariyathil Urudhi vendum
    Than vasamavadhu vendum
    Pen viduthalai Vendum
    periya kadavul kakkavendum
    ...

    "Unmai Sir.. Neengal Bharadhi Sollukku Illakkaga Irupadum & Naan Ungal Manavan Endru Sollikolvadhil Permaipadukindrem"


    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  7. //தங்கள் பதிப்பு புத்தகங்கள் விற்பனையில் வெற்றி பெற வகுப்பறை மாணவர்கள் சார்பில் வாழ்த்துகின்றோம்.
    //

    Repettooo..!!

    Please let me know where I can get this book in Bangalooru.

    GK,BLR

    ReplyDelete
  8. அய்யா வணக்கம்

    உங்கள் புத்தகம் விற்பனையில் வெற்றி பெற்று உங்கள் பெயர் சொல்ல
    எங்கள் வாழ்த்துகள்.........

    உங்கள் புத்தகங்கள் கிடைக்கும் இடம் பற்றியும் தயவுசெய்து தெரியப்படுத்தவும்..

    ReplyDelete
  9. Congradulations. Sir. All the best.

    ReplyDelete
  10. ஹலோ சார்,

    அருமையாக உள்ளது,உங்கள் புத்தகம் பற்றிய அறிவிப்பு.
    //உங்கள் புத்தகம் விற்பனையில் வெற்றி பெற்று உங்கள் பெயர் சொல்ல
    எங்கள் வாழ்த்துகள்.........//
    நானும் இதையே வழி மொழிகிறேன்.

    வளர்க உங்கள் எழுத்துப் பணி.

    ReplyDelete
  11. All the best sir,Congratuation for your great effort... Always our support to you...
    Ungal Puthakangal Enakku Singapore il yenge kidaikkum..

    ReplyDelete
  12. உங்களின் புத்தகங்கள் விற்பனையில் சாதனைபுரிய எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பான்.


    மென்மேலும் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.


    wishing you all the best

    கார்த்திக்.

    ReplyDelete
  13. ////Blogger வேலன். said...
    தங்கள் பதிப்பு புத்தகங்கள் விற்பனையில் வெற்றி பெற வகுப்பறை மாணவர்கள் சார்பில் வாழ்த்துகின்றோம்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    நன்றி வேலன்!

    ReplyDelete
  14. ////Blogger ananth said...
    Adutha padathirkaka nalai varai kathirukkiren. I appreciate your dedication. You try to write in the limited time or even

    if you have time constraint. This is the first thing I should learn from you.////

    நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  15. /////Blogger N.K.S.Anandhan. said...
    ஐயா உங்களது சிறுகதை தொகுப்பு வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன். எங்களுக்கும் ஒரு பிரதி வேண்டும்

    சென்னையில் இப்புத்தகம் கிடைக்கும் இடங்களை கூடிய விரைவில் தெரியப் படுத்தவும்./////

    தெரியப்படுத்துகிறேன்!

    ReplyDelete
  16. /////Blogger govind said...
    all the best for your efforts.defnetly this book will give you a great reputation.////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. //////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Ungal Puthakangal Enakku US il kidaikkuma??
    Avaludan Ethirpakkiren...Kandippaga Manavarkalin Muthal Pathippu Enakku Tharavendum ena Thalmayudan

    Kettukolkirean.
    "Ungalin Elutthu Pani
    Engalin Udal Ani(Anikalankal)"
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman//////

    அஞ்சல் நிலையத்தில் உள்ள வழிமுறைகளை விசாரித்துவிட்டு உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்

    ReplyDelete
  18. ////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Mandhil Urudhi Vendum,
    Vakkinilea Inimai vendum,
    Ninaivu Nalladhu Vendum
    Kanvu Meipadal Vendum
    Kariyathil Urudhi vendum
    Than vasamavadhu vendum
    Pen viduthalai Vendum
    periya kadavul kakkavendum ...
    "Unmai Sir.. Neengal Bharadhi Sollukku Illakkaga Irupadum & Naan Ungal Manavan Endru Sollikolvadhil

    Permaipadukindrem"
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    உங்கள் எண்ணம் சிறக்கட்டும். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. ///////Blogger Geekay said...
    //தங்கள் பதிப்பு புத்தகங்கள் விற்பனையில் வெற்றி பெற வகுப்பறை மாணவர்கள் சார்பில் வாழ்த்துகின்றோம்.
    //
    Repettooo..!!
    Please let me know where I can get this book in Bangalooru.
    GK,BLR////

    தெரியப்படுத்துகிறேன் ஜீக்கே!

    ReplyDelete
  20. //////Blogger sundar said...
    அய்யா வணக்கம்
    உங்கள் புத்தகம் விற்பனையில் வெற்றி பெற்று உங்கள் பெயர் சொல்ல
    எங்கள் வாழ்த்துகள்.........
    உங்கள் புத்தகங்கள் கிடைக்கும் இடம் பற்றியும் தயவுசெய்து தெரியப்படுத்தவும்../////

    தெரியப்படுத்துகிறேன் சுந்தர்!

    ReplyDelete
  21. ////Blogger krish said...
    Congradulations. Sir. All the best./////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. //////Blogger sumathi said...
    ஹலோ சார்,
    அருமையாக உள்ளது,உங்கள் புத்தகம் பற்றிய அறிவிப்பு.
    //உங்கள் புத்தகம் விற்பனையில் வெற்றி பெற்று உங்கள் பெயர் சொல்ல
    எங்கள் வாழ்த்துகள்.........//
    நானும் இதையே வழி மொழிகிறேன்.
    வளர்க உங்கள் எழுத்துப் பணி.//////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  23. /////Blogger VA P RAJAGOPAL said...
    All the best sir,Congratuation for your great effort... Always our support to you...
    Ungal Puthakangal Enakku Singapore il yenge kidaikkum../////

    அஞ்சல் நிலையத்தில் உள்ள வழிமுறைகளை விசாரித்துவிட்டு உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்

    ReplyDelete
  24. /////Blogger திருநெல்வேலி கார்த்திக் said...
    உங்களின் புத்தகங்கள் விற்பனையில் சாதனைபுரிய எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பான்.
    மென்மேலும் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.
    wishing you all the best
    கார்த்திக்.///////////

    நன்றி கார்த்திக்!

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள்!

    தங்கள் பதிப்பு புத்தகங்கள் விற்பனையில் வெற்றி பெற வகுப்பறை மாணவர்கள் சார்பில் வாழ்த்துகின்றோம்.

    ReplyDelete
  26. கும்தலக்கடி கும்மாவா
    சுப்பைய்யா சார்னா சும்மாவா!

    ReplyDelete
  27. ஏற்கனவே உங்களது சிறுகதை சிலவற்றை படித்திருக்கிறேன்! எனது தந்தையாரும் படித்திருக்கிறார்!

    தொகுப்பாக வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்துகொண்டே இருக்கிறது!

    வாங்கி எங்கள் வீட்டிற்கும் ஒன்று அனுப்பவேண்டும்!

    இரண்டு காப்பி ரிசர்வ்டு!

    ReplyDelete
  28. ஐயா உங்களது சிறுகதை தொகுப்பு வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன்!

    ReplyDelete
  29. Ayya, Vaztha vayathillai.. Vanangukiraen

    ReplyDelete
  30. தங்கள் புத்தகங்கள் விற்பனையில் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்

    ReplyDelete
  31. congrats sir, and all the best for the success of your books. are you going have a book release function in coimbatore ? let us all know, sir. and where is our cyber party.he he..

    also sir why is jupiter transiting to aquarius this may and again back to 'makara' in a few weeks. im confused..?

    ive posted the predictions for this year from star teller magazine.lets check back in a few months..


    The year 2009 starts with Saturn’s retrogression on the very first day of the year. Jupiter’s atichara will be the main concern, as it passes through its debilitation point and becomes conjunct with Rahu . The year will mainly face bad significations of Jupiter, such as dropping monetary values and unstable currency and share markets. As Jupiter represents banking systems and its financial management, central banks will face more challenges. The advisers to the states and top diplomatic officials need to be more vigilant. The Lunar eclipse closing the year will see the departure of an important spiritual and social figure. It is interesting to note that the New Year will commence on a Thursday and end on a Thursday ruled by Jupiter, with a Full Moon nearing the eclipse.
    Articles

    The year 2009 will commence with Jupiter in Atichara or acceleration. Also note that the New English year will begin on the day Saturn turns retrograde at 27°46’ in Leo.

    The beginning of the month January will witness both fiery planets Mars and Sun transit the fiery sign of Sagittarius. Exact Jupiter-Sun conjunction will be on 24 Jan. 2009. Solar eclipse follows on 26 Jan.

    Five planets will be in association in Capricorn in February. Exact Mars/ Rahu conjunction will occur on 15 Feb. 2009. Amidst this, there will be a (penumbral) lunar eclipse on 09 Feb. 2009. Jupiter conjuncts Rahu on 11 Feb. 2009. These may implicate severe political crisis around the globe, as Saturn will still be in retrogression. Monetary systems will face turbulence.

    Saturn will move close to the Earth on 8 March 2009. Both planets Mars and Sun are bitter enemies of Saturn. However there will be a peculiar parivarthana in the midst of bitter opposition. Places of worship such as temples, centres of pilgrimage should be well-guarded for security, Government will be under stress during this period.

    Exact opposition of Mars and Saturn will occur on 05 April 2009. On 1 May 2009, Jupiter will transit to Aquarius Rasi during its acceleration motion, after completing its transit in Capricorn in just 143 days. Jupiter will be in opposition to Saturn then. A good grahamalika yoga will occur on 26 May 2009, where planets will occupy all signs commencing from Capricorn to Leo.

    Jupiter will turn retrograde on 16 June 2009. Retrogression of Jupiter and the aspect of Saturn on it will reduce the positive indications of Jupiter. Financial institutions will encounter economic pressure.

    The month of July will witness two eclipses — Lunar eclipse on the 7 th and Solar eclipse on the 22 nd . Saturn and Mars exact conjunction will occur on 11 July 2009. Jupiter in retrogression enters Capricorn on 31 July 2009. A penumbral lunar eclipse will occur on 6 August 2009. Jupiter will be quite close to the Earth on 14 August 2009.

    Saturn transits to Virgo on 10 Sept. 2009 and it conjuncts Sun there, as Sun-ingress also occurs in Virgo on 17 th Sept. Aspect of Mars on them from Gemini will make things worse. Scandals of women leaders will surface. As Saturn-Sun association in Virgo continues, Mars will be in close conjunction with Ketu on 9 Oct. 2009 at 2°04’ in Cancer. Shake-up of governments and monetary systems, landslides, earthquakes etc are likely then. Jupiter becoming Direct on 14 Oct. will bring some relief, especially at the economic front.

    Nodes change signs on 18 Nov. 2009 and the judiciary will make firm laws. Jupiter ingresses into Aquarius on 20 Dec. 2009, followed by a Lunar eclipse on 31 Dec. The Lunar eclipse closing the year will see the departure of an important spiritual and social figure.

    ReplyDelete
  32. வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  33. எலக்ட்ரனிக் புத்தக வடிவில் வெளியிடும் எண்ணம் உள்ளதா சார்?
    அன்புடன்
    ராஜ்

    ReplyDelete
  34. //congrats sir, and all the best for the success of your books. are you going have a book release function in coimbatore ? let us all know, sir. and where is our cyber party.he he..//

    சீக்கிரமே சைபர் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்வார்!


    //why is jupiter transiting to aquarius this may and again back to 'makara' in a few weeks. im confused..?//

    சூரியன், சந்திரன், ராகு, கேது ஆகியவை தவிர மற்ற கிரகங்களுக்கு வக்ர கதி உண்டு!

    வக்ர கதி என்பது தான் சென்ற பாதையில் சில காலம் பின்னோக்கிச் செல்வது! அதாவது சூரியனின் வேகத்திற்கு ஏற்ப இசைவு செய்து ஓடுதல்! அவை மிக வேகமாகச் செல்வது போல தெரிந்தால்(வேகத்தின் காரணமாக சூரியனை விரைவாகக் கடந்து விடக் கூடிய நிலை ஏற்பட்டால் அதைத் தவிர்க்க சில காலம் மீண்டும் பின்னோக்கி நகர்கின்றன. சூரியனின் வேகத்திற்கேற்ப இசைவு பெற்று மீண்டும் நேர்பாதையில் செல்கின்றன! இவ்வாறு பின்னோக்கிச் செல்லும் காலம் அக்கிரகத்தின் வக்ரகதி என்று பெயர் பெறும்! இக் குருவானது மீண்டும் பின்னோக்கி மகர ராசிக்கு வருவதும் தான் வக்ர கதி அடையப் பெற்றதால்தான்!

    இவ்வாறு வக்ரகதி அடையும்போது அக்கிரகங்கள் தனது பலத்தை இழந்து அவற்றுக்குண்டான பலன்களை வழங்க இயலாமல் போவதே இயல்பு!

    மேலும் ஏதேனும் தவறிருப்பின் வாத்தியார் திருத்துவாராக!

    ReplyDelete
  35. //////Blogger நாமக்கல் சிபி said...
    வாழ்த்துக்கள்!
    தங்கள் பதிப்பு புத்தகங்கள் விற்பனையில் வெற்றி பெற வகுப்பறை மாணவர்கள் சார்பில் வாழ்த்துகின்றோம்.//////

    நன்றி சிபி!

    ReplyDelete
  36. ///////Blogger நாமக்கல் சிபி said...
    ஏற்கனவே உங்களது சிறுகதை சிலவற்றை படித்திருக்கிறேன்! எனது தந்தையாரும் படித்திருக்கிறார்!
    தொகுப்பாக வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்துகொண்டே இருக்கிறது!
    வாங்கி எங்கள் வீட்டிற்கும் ஒன்று அனுப்பவேண்டும்!
    இரண்டு காப்பி ரிசர்வ்டு!//////

    சிபிக்கு இல்லாமலா? தருகிறேன்!

    ReplyDelete
  37. //////////Blogger அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
    ஐயா உங்களது சிறுகதை தொகுப்பு வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன்!///////

    நன்றி பாஸ்கர்!

    ReplyDelete
  38. ////////Blogger Prabhu said...
    Ayya, Vaztha vayathillai.. Vanangukiraen//////

    நன்றி பிரபு!

    ReplyDelete
  39. //////Blogger dubai saravanan said...
    தங்கள் புத்தகங்கள் விற்பனையில் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்/////////

    நன்றி சரவணன்!

    ReplyDelete
  40. /////////Blogger mike said...
    congrats sir, and all the best for the success of your books. are you going have a book release function in coimbatore ? let us all know, sir. and where is our cyber party.he he..

    இன்னும் முடிவு செய்யவில்லை!
    ---------------------------------------------------

    ////also sir why is jupiter transiting to aquarius this may and again back to 'makara' in a few weeks. im confused..?//////

    அதற்குப் பெயர்தான் வக்கிரகதி! வேகத்தில் முன்னே செல்வது. பிறகு பின்னே வருவது!
    -------------------------------------------------
    ive posted the predictions for this year from star teller magazine.lets check back in a few months..

    ஸ்டார் டெல்லெரில் வந்த தகவல்களைக் கொடுத்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  41. ///////////Blogger BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...
    வாழ்த்துக்கள் ஐயா...///////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  42. /////////Blogger Raj kumar said...
    எலக்ட்ரனிக் புத்தக வடிவில் வெளியிடும் எண்ணம் உள்ளதா சார்?
    அன்புடன்
    ராஜ்//////////

    தற்சமயம் அப்படி எண்ணம் எதுவும் இல்லை!

    ReplyDelete
  43. உங்க தழிழ்ப் பணி தொடர நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  44. மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி....வாழ்த்துக்கள் ஐயா!!!

    இப்போதே அந்த புத்தகத்தை படிக்க ஆவல் தூண்டுகிறது.

    அன்பு மாணவர்,
    மோகன்

    ReplyDelete
  45. Blogger நாமக்கல் சிபி said...
    //congrats sir, and all the best for the success of your books. are you going have a book release function in coimbatore ? let us all know, sir. and where is our cyber party.he he..//
    சீக்கிரமே சைபர் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்வார்!//////
    //why is jupiter transiting to aquarius this may and again back to 'makara' in a few weeks. im confused..?//
    சூரியன், சந்திரன், ராகு, கேது ஆகியவை தவிர மற்ற கிரகங்களுக்கு வக்ர கதி உண்டு!
    வக்ர கதி என்பது தான் சென்ற பாதையில் சில காலம் பின்னோக்கிச் செல்வது! அதாவது சூரியனின் வேகத்திற்கு ஏற்ப இசைவு செய்து ஓடுதல்! அவை மிக வேகமாகச் செல்வது போல தெரிந்தால்(வேகத்தின் காரணமாக சூரியனை விரைவாகக் கடந்து விடக் கூடிய நிலை ஏற்பட்டால் அதைத் தவிர்க்க சில காலம் மீண்டும் பின்னோக்கி நகர்கின்றன. சூரியனின் வேகத்திற்கேற்ப இசைவு பெற்று மீண்டும் நேர்பாதையில் செல்கின்றன! இவ்வாறு பின்னோக்கிச் செல்லும் காலம் அக்கிரகத்தின் வக்ரகதி என்று பெயர் பெறும்! இக் குருவானது மீண்டும் பின்னோக்கி மகர ராசிக்கு வருவதும் தான் வக்ர கதி அடையப் பெற்றதால்தான்!
    இவ்வாறு வக்ரகதி அடையும்போது அக்கிரகங்கள் தனது பலத்தை இழந்து அவற்றுக்குண்டான பலன்களை வழங்க இயலாமல் போவதே இயல்பு!
    மேலும் ஏதேனும் தவறிருப்பின் வாத்தியார் திருத்துவாராக!////////

    விளக்கம் சரியாகத்தான் உள்ளது! நன்றி சிபி!

    ReplyDelete
  46. //////Blogger செல்லி said...
    உங்க தழிழ்ப் பணி தொடர நல்வாழ்த்துக்கள்/////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  47. /////Blogger Mohan said...
    மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி....வாழ்த்துக்கள் ஐயா!!!
    இப்போதே அந்த புத்தகத்தை படிக்க ஆவல் தூண்டுகிறது.
    அன்பு மாணவர்,
    மோகன்/////

    உங்கள் ஆர்வத்தை அப்படியே வைத்திருங்கள். புத்தகம் வந்தவுடன் படித்துப் பாருங்கள். உங்கள் எதிர்பார்ப்பின்படி புத்தகம் இருக்கும்!

    ReplyDelete
  48. வணக்கம் ஐய்யா

    ஒரு ராசியில் கிரகம் நீசம் பெற்று,வக்கிரமும் பெற்றால் அதற்கு என்ன பலன்?

    ReplyDelete
  49. நிச்சயம் மெய்ப்படும் வாத்தியாரையா. புத்தகம் இமாலய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  50. /////Blogger sundar said...
    வணக்கம் ஐய்யா
    ஒரு ராசியில் கிரகம் நீசம் பெற்று,வக்கிரமும் பெற்றால் அதற்கு என்ன பலன்?//////

    ஒரே நேரத்தில் இரண்டு விபத்துக்கள் ஏற்படும் பலன். பஸ்ஸில் இருந்து அடிபட்டுக் கீழே விழுந்தவன் கையில் இருந்த பணமும் கொள்ளை போனால் எப்படி இருக்கும்? அப்படி ஒரே நேரத்தில் இரண்டு துயரங்கள்.

    ReplyDelete
  51. /////Blogger அமர பாரதி said...
    நிச்சயம் மெய்ப்படும் வாத்தியாரையா. புத்தகம் இமாலய வெற்றி பெற வாழ்த்துக்கள்./////

    உங்கள் அன்பிற்கு நன்றி பாரதி!

    ReplyDelete
  52. வண்ணக்கம் ஐயா

    தங்கள் புத்தகங்கள் விற்ப்பனையில் வெற்றி பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் .தங்களுடைய வெளிஈடுகள் எங்கு கிடைக்கும் என்பதை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன் .அனைத்தையும் வாங்க ஆர்வமாக இருக்கிறேன் .
    நன்றி
    கணேசன்

    ReplyDelete
  53. அய்யா, சனி மேசத்தில் செவ்வாயுடன் சேர்ந்து நீசபங்கம் ஆகியிருந்தால் என்ன பலன்

    ReplyDelete
  54. /////Blogger choli ganesan said...
    வணக்கம் ஐயா
    தங்கள் புத்தகங்கள் விற்ப்பனையில் வெற்றி பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் .தங்களுடைய வெளியீடுகள் எங்கு கிடைக்கும் என்பதை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன் .அனைத்தையும் வாங்க ஆர்வமாக இருக்கிறேன் .
    நன்றி
    கணேசன்//////

    வெளியிட்டவுடன் தெரியப்படுத்துகிறேன் நண்பரே!

    ReplyDelete
  55. //////Blogger bash said...
    அய்யா, சனி மேசத்தில் செவ்வாயுடன் சேர்ந்து நீசபங்கம் ஆகியிருந்தால் என்ன பலன்/////

    சனியும் செவ்வாயும் இரு எதிர்மறையான கிரகங்கள். அவர்கள் இருவரின் சேர்க்கை, சம்பந்தப்பட்ட பாவங்களுக்குத் (வீடுகளுக்கு) தீமைதான்

    ReplyDelete
  56. வாழ்த்துக்கள் !

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  57. ///Blogger இராசகோபால் said...
    வாழ்த்துக்கள் !
    அன்புடன்
    இராசகோபால்/////////

    நன்றி ராஜகோபால்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com