மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.4.07

ஆகா இதுதான் ஜாதக பலன் என்பதா?


======================================================
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 22
எம்.ஜி.ஆரின் ஜாதகம் (தொடர்ச்சி)

முன் பதிவைப் படிக்காதவர்களைப் படிக்க வேண்டுகிறேன்
அப்பொழுதுதான் இந்தப் பதிவு புரியும்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஜாதகத்தைக்
நேற்றுக் கொடுத்திருந்தேன். உடன் ஒரு கேள்வியும் கேட்டு,
நடத்திய பாடத்தில் கொடுத்திருந்த தசாபுத்திகளின்படி
தலைவர் என்ன தசை/என்னபுக்தியில் முதலமைச்சர்
ஆனார் என்று கேட்டிருந்தேன்.

ஒருவர் மட்டும் சரியாக விடை அளித்திருந்தார்
அவருக்குப் பாராட்டுக்கள்.

மற்றவர்களும் தெரிந்து கொள்வதற்காக அந்த
ஜாதகத்தை வைத்துச் சில விளக்கங்களைக் கீழே
கொடுத்துள்ளேன்
-----------------------------------------------------------
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஜாதகம்

பிறந்த நாள்: 28 .01.1917
காலை மணி 6.30
இடம் கண்டி
இருப்பு : புதன் தசையில் 12 வருடம் 2 மாதம் 7 நாட்கள்

30.06.1977 ல் அவர் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆனார்!
-----------------------------------------------------------------------
அவருடைய ஜாதகத்தின் சிறப்புக்கள்

1. Eleventh lord Mars is exalted and placed in the
first house - That is in his lagna
லாபாதிபதி செவ்வாய் உச்சமடைந்து லக்கினத்தில்
அமர்ந்தது பெரும் சிறப்பு. பணம், பதவி, புகழ்
மக்கள் செல்வாக்கு என்று எல்லாமே அவரைத்
தேடி வந்தன

2. Number one benefic planet Jupiter is in a
Kendra - 4th House (it is also his friendly house)
gave him all the comforts required in life
4ல் – சுக ஸதானத்தில் சுப கிரகமான் குரு
அமர்ந்தது அவருக்கு வீடு, வாசல், வாகனம் என்று
எல்லா வசதிகளையும் கொடுத்தது!

3. Lagna lord Saturn is in a kendra (7th House)
and also aspecting the lagna directly - gave him
an amazing standing power
லக்கினாதிபதி 7ல் அமர்ந்து தன்னுடைய சொந்த
வீட்டைப்பார்ப்பது அவருக்கு நின்று சாதிக்கும்
தன்மையைக் கொடுத்தது

4. Benefic Planet Moon (7th lord in his horoscope)
is aspecting the Bhagya House (House of Gains)
from the third house
பதவி, புகழ், எல்லாவற்றையும் பாக்கிய ஸ்தானத்தைப்
பார்க்கும் சந்திரன் வழங்கியது.

5. The planet for Arts - Venus is in his own
house in the Navamsa along with Rahu. It is
a good combination for Drama & Cinema
They are also associated in the rasi
அவருடைய ஜாதகத்தில் ராசியிலும் சரி, அம்சத்திலும்
சரி, சுக்கிரனும், ராகுவும் சேர்ந்திருப்பது அவருக்கு
திரை உலகில் பெரும் புகழை ஏற்படுத்திக் கொடுத்தன

6. Venus & Mercury association gave him
expertise in all the fields which he under took

7. The placement of Ketu in the 6th house
gave him courage to face any situation


1917.01.28 பிறந்த தேதி
0012.02.07 புதன் தசா இருப்பு (குழந்தைப் பருவம்)
0007.00.00 கேது தசா (Period One - 7 Years)
---------------
1936.04.05 கேது தசா முடிவுற்ற நாள்
0020.00.00 சுக்கிர தசா (Period Two - 20 years)
------------------
1956.04.05 சுக்கிர தசா முடிவுற்ற நாள்
0006.00.00 சூரிய தசா (Period Three 6 yeras)
------------------
1962.04.00
0010.00.00 சந்திர தசா (Period Four - 10 years)
--------------------
1972.04.05
0007.00.00 செவ்வாய் தசா (Period Five - 7 Years)
--------------
1979.04.05
0002.08.12 ராகு தசா / ராகு புக்தி (Period 6 Part One)
0002.04.24 ராகு தசா / குரு புக்தி (Period 6 Part Two)
-------------------
1984.05.11
0002.10.06 ராகு தசா / சனி புக்தி (Period 6 Part Three)
---------------
1987,03,17 ராகு தசா புதன் புக்தி ஆரம்பம்
1987.12.24 காலமான நாள்

---------------------Period 1
அவர் தன்னுடைய பன்னிரெண்டு வயது முதல்,
19 வயது வரை அந்தக் காலத்தில் சிறுவர்களை
வைத்து நடத்தப் பெற்ற நாடகக் கம்பெனியில் சேர்ந்து
(Boys Drama Groups) பல ஊரகளில் சுற்றித் திரிந்து
நாடகங்கள் நடக்கும் கீற்றுக் கொட்டகைகளிலே உண்டு,
உறங்கி வாழந்ததோடு பல சிரமங்களை அனுபவித்த
காலம் இது. - அதற்குக் காரணம் கேது தசை
--------------------------------------------------
M.N. நம்பியார் & M.R.ராதா எல்லாம் அவருடைய
நாடகக் காலத்து நண்பர்கள்தான்
---------------------------------------------------
Period 2
சுக்கிர தசைக் காலம்
சுக்கிர தசை ஆரம்பம் ஆனவுடனேயே அவருடைய
நல்ல காலமும் ஆரம்பம் ஆயிற்று.
கலைத்துறைக்கு (Cinema Industry) வந்து கால்
ஊன்றினார்.
1936 ல் அவருடைய முதல் படமான "சதிலீலாவதி'
வெளிவந்தது.அதிலிருந்து 1955 ல் குலேபகாவலி
என்னும் படம் வெளிவந்தவரை அந்த 20 வருட
காலத்தில் அவர் நடித்தது மொத்தம்
33 படங்கள்தான்.(அந்தக் காலத்தின் சினிமாவின்
வளர்ச்சியும், நிலைமையும் மந்தமாகத்தான் இருந்தது)
அவர் ஜாதகத்தில் ராசியிலும்
அம்சத்திலும் சுக்கிரன் ராகுவுடன் சேர்ந்து
இருப்பதைக் கவனிக்கவும். அதனால்தான்
கலைத்துறையில் பிரகாசித்தார்.. ஆனாலும் ராசியில்
சுக்கிரன் 12ல் (விரைய ஸ்தானத்தில்) மறைந்து
விட்டதால் அதிகமான ஏற்றம் இல்லை.
1953ம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சியில் இருந்த
அவர் அதற்குப் பிறகுதான் தி.மு.கவில் சேர்ந்தார்.
----------------------------------------
Part Three & Part Four
லக்கினத்தில் அமர்ந்த சூரியனின் தசை
(Sun is the eight lord - but placed in the first house and
also asapected by the lagna lord Saturn from the
seventh house gave him sudden popularity in
his career and also in his life)
1956 ஏப்ரல் முதல் ஆறு வருட காலம் சினிமா
உலகில் அவருக்கு மிகவும் ஏற்றமான காலம்
லெட்சக்கணக்கான ரசிகர்கள் அவருக்குக் கிடைத்ததும்
இந்தக் காலகட்டத்தில்தான்
1956ல் வெளிவந்த அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற படம்,
அதே வருடம் வந்த மதுரை வீரன், தாய்க்குப்பின் தாரம்
ஆகிய படங்கள் பெரும் வெற்றியைக் கொடுத்தன!
அதற்குப் பிறகு இறக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல்
வெற்றியைக் குவித்தார். அவருடைய படப் பாடல்கள்
அனைத்தும் தமிழகமெங்கும் ஒலித்தன

1958ல் நாடோடி மன்னன்
1961ல் தாய் சொல்லைத் தட்டாதே
1965ல் எங்க வீட்டுப் பிள்ளை
1966ல் அன்பே வா
1973ல் உலகம் சுற்றும் வாலிபன்
ஆகிய ஐந்து படங்களும் வசூலில் சாதனை
படைத்த படங்கள். மொத்தம் 133 படங்களில்
அவர் நடித்தார்.
சூரியனுடைய தசையைத் தொடர்ந்து வந்த சந்திர
தசையும் (10 வருடங்கள்) அவருக்குச் சாதகமாக
இருந்ததுதான் அவருடைய தொடர் வெற்றிக்குக்
காரணம் 7க்குரிய சந்திரன் 3ல் அமர்ந்து
9ம் இடமான பாக்கிய ஸதானத்தைப் பார்த்தது
(The seventh lord Moon who is placed in the
third house aspected the 9th house, house of
Bhagya - House of Gains and conferred him
continued success in his life)
--------------------------------------------------------------------------
அதற்குப் பிறகு வந்த செவ்வாய் தசை - சொல்லவே
வேண்டாம் - செவ்வாய் அவருடைய ஜாதகத்தில்
4 & 11ம் வீட்டிற்குரியன்.
(House of comforts & House of Profit - சுகாதிபதி & லாபாதிபதி)

இரண்டு முக்கியமான வீடுகளுக்கு உரியவன்.
அவன் உச்சம் பெற்றதோடு லக்கனத்திலும் அமர்ந்தது
அபரிதமான யோகத்தைக் கொடுத்தது.

அவரைத் தமிழ் நாட்டின் முதன்மந்திரிப் பதவிவரை
கொண்டுபோய் உட்கார வைத்தது!
அடுத்து வந்த பத்து ஆண்டுகளுக்கும்
ஏன் அவர் இறக்கும் வரையில் யாராலும் அசைக்க
முடியாத நிலையில் அந்தப் பதவியில் அவரை அது
உட்கார வைத்தது!
-----------------------------------------------------------
எல்லா தசைகளிலுமே ஆரம்ப புக்தி (அதைச் சுய புக்தி
என்பார்கள்) பெரிதாக ஒன்றும் செய்யாது. அதனால்
செவ்வாயை அடுத்து வந்த ராகு தசை ராகு புக்தியிலும்
அதற்கு அடுத்து வந்த ராகு தசை குரு புக்தியிலும்
அவருக்குத் தீங்கு ஏதும் நேரவில்லை.(குரு அவருடைய
ஜாதகத்தில் 4ல் - கேந்திரத்தில்)

ஆனால் 11.01.1984 ல் ஆரம்பித்த ராகு தசை சனி
புக்தி முதல் அவருக்கு கெட்ட நேரம் ஆரம்பித்தது

இரண்டு தீய கிரகங்கள் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும்?
பி.எஸ். வீரப்பாவும், எம்.என்.நம்பியாரும் அவர் நடித்த
படங்களில் செய்த வில்லத்தனங்களைப் போல அவைகள்
இரண்டும் சேர்ந்து கெடுதல்களைச் செய்ய ஆரம்பித்தன.

அவருக்குப் பல விதமான நோய்கள் (Multiple Diseases)
ஏற்பட்டு படுத்த படுக்கையாகிவிட்டார். அமெரிக்கா
விற்குச் சென்றும் சிகிச்சைகள் மேற்கொண்டார்.
எதுவும் பலனிக்கவில்லை. சற்றுத்தேறி வந்தவர்.
24.12.1987 அன்று காலமாகிவிட்டார்.

அவருடைய இறுதி ஊர்வலத்தில் பத்து லெட்சம் மக்கள்
கலந்து கொண்டார்கள் என்பது வியக்கத்தக்க செய்தி!
அவர் புரட்சித் தலைவர் என்று பெயர் பெற்றதும்
ஏழை எளிய மக்களின் அன்பைப் பெற்றதும்

அவருடைய ஜாதக அமைப்பினால்தான்.
அவர் கொல்லூர் மூகாம்பிகை அம்மனின் தீவிர பக்தர்
அடிக்கடி அங்கு சென்று தேவியை வணங்கியும் வந்தார்.

இரண்டாம் இடத்திற்குரியவன் அல்லது ஏழாம் இடத்திற்
குரியவன் இவர்களில் எவன் வலுவாக இருக்கிறானோ
அவன்தான் மரணத்தைக் கொடுப்பான் என்பது விதி (Rule)
அவருடைய ஜாதகத்தில் 2ற்குரியவன் சனி ( The second
lord in his horoscope is Saturn who is the owner of
Kumba Rasi, that is the second house from his lagna)
அவன் 7லிலும் அமர்ந்து வலுவாக இருந்து, அவருடைய
மரணத்திற்குக் காரணமானான்.

அவருடைய ஆறாம் வீடான நோய் ஸதானத்திற்கு
(House of Diseases) அதிபதியான புதன் துணை வர
ராகுவும் புதனும் சேர்ந்து மரணத்தை நிறைவேற்றினார்கள்
இருவரும் ஒன்று சேர்ந்து அவருடைய ஜாதகத்தில்
12ம் வீட்டில் ஒன்றாக இருப்பதைப் பார்க்கவும்
அவர் மறைந்தது அவர்களுடைய தசா புக்தியில்தான்!
-------------------------------------------------------------------------------
உங்களுக்குப் புரியும்படியாக விளக்கங்கள் கொடுத்துள்ளேன்
என்று நம்புகிறேன்.

ஒரு ஜாதகத்தை ஆராய்ந்து அலசிப்பார்க்கும் விதம்
இதுதான். அதற்காகத்தான் இத்தனை விவரமாக எழுதினேன்
------------------------------------------------------------------------------
சரி, என்னுடைய அரட்டைக் கச்சேரியை இத்துடன்
முடித்துக் கொண்டு மீண்டும் பாடத்திற்கு வருகிறேன்

நேற்று தசா புக்தியை விளக்கி நிறைய அட்டவணை
களுடன் பாடங்களைக் கொடுத்திருந்தேன்

நான் படிக்கிற காலத்தில் எனக்கு ஜோதிட வாத்தியாரும்
இல்லை. பாடங்களையும் பிரித்துப் புரியும்படியாகத்
தருவதற்கு ஆட்களுமில்லை. ஆளில்லாவிட்டால் என்ன
நாமே பிரித்துப் படிப்போம் என்று எனக்கு நானே பல
அட்டவணைகளைத் தயார் செய்து வைத்துக் கொண்டு
தான் படித்தேன். ஆறே மாதங்களுக்குள் முழுப்
பாடத்தையும் என் தலைக்குள் இருக்கும் Hard Discல்
ஏற்றிவைத்து விட்டேன்.

அப்படி 30 வருடங்களுக்கு முன்பு ஏறி வைத்தது.
தொடர்ந்து பலரிடம் ஜோதிடத்தைப் பற்றி அரட்டை
அடிப்பதாலும், கையில் கிடைக்கும் பல ஜோதிட
நூல்களைத் தொடர்ந்து படிப்பதாலும், இன்னும்
மறக்காமல் நினைவில் உள்ளது!

இதை ஒரு Build Upற் காகச் சொல்லவில்லை!
ஜோதிடத்தில் ஆர்வமுள்ளவர்கள், தொடர்ந்து படிக்க
வேண்டும். வாரம் ஒரு நான்கு மணி நேரமாவது
அதற்குச் செலவழிக்க வேண்டும்.

Astrological Magazine or Star Teller போன்ற
மாத இதழ்களுக்குச் சந்தாவை கட்டி மாதா மாதம்
வரும் இதழ்களைப் படிக்க வேண்டும்!
---------------------------------------------------------------------
தசா புக்திகளின் கால அளவைத் தெரிந்து கொள்ள
உதவும் சூத்திரம் (Formula for assessing the
Sub-periods in Major Periods of Planets)

மகாதசை ஆண்டுகள் x புத்திநாதனின் ஆண்டுகள்
= புக்தியின் காலம்.

அப்படி வரும் விடையின் முதல் இரண்டு எண்கள்
மாதங்களையும், அடுத்த எண்ணை 3 ஆல் பெருக்க
வரும் விடை நாட்களையும் குறிக்கும்

Major Period x Sub Period = Number of Months
& Days of the Sub- Period (In the three digit
answer, first 2 digits are months and the last
digit multiplied by three is the days)

உதாரணம்: ராகு தசை குரு புக்தி
18 x 16 = 288
முதல் 2 டிஜிட் மாதங்கள் - ஆகவே
28 மாதங்கள்
அடுத்த டிஜிட்டான 8 x 3 நாட்கள் = 24 நாட்கள்
அதாவது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள்

இதைப் போன்று எந்தக் கிரகத்திற்கு வேண்டுமென்றாலும்
போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
வரும் விடையை முன் பதிவிலுள்ள அட்டவணையுடன்
ஒத்துப் பார்த்துக்கொள்ளுன்கள். 100% சரியாக இருக்கும்

இதைப் பல பெரிய ஜோதிடர்கள் ரகசியமாக
வைத்திருப்பார்கள். பஞ்சாங்கம் இன்றி மனதிற்
குள்ளேயே கணக்குப் போட்டு காகிதத்தில் நடப்பு
தசையைக் குறித்துத் தந்து நம்மை அசத்துவார்கள்.

பெரிய வித்தை ஒன்றுமில்லை! உங்கள் அனைவருக்கும்
அது தெரியட்டும் என்றுதான் இன்று அதை நான்
உங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

இந்த சூத்திரம் தெரிந்து விட்டால் பஞ்சாங்கம்
தேவையில்லை. நான் நேற்றுக்கொடுத்திருந்த
3 அட்டவணைகளும் தேவையில்லை!.

யாருடைய ஜாதகத்தையும் பார்த்து கண நேரத்தில்
நடப்பு தசையை கணக்கிட்டுச் சொல்லலாம்

நமது கணினியில் Calculator இருக்கிறது. கீழ்க்கண்ட
தாச புக்திகள் இந்த சூத்திரத்தின்படி சரியாக வருகிறதா
என்று பாருங்கள்

அதுதான் இன்றைய Practical Test:==================================================
==================================================
சூரிய தசையில் சந்திர புக்தி, சந்திர தசையில்
செவ்வாய் புக்தி, செவ்வயில் ராகு புக்தி, ராகுவில்
குரு புக்தி, குருவில் சனி புக்தி, சனியில் புதன்
புக்தி, புதனில் சுக்கிரன் புக்தி அல்லது உங்கள்
விருப்பப்படி எதற்கு வேண்டுமென்றாலும்
கணக்கிட்டுப் பார்த்து இந்த FORMULA வை
மனதில் ஏற்றி அங்கேயே அது காலத்திற்கும்
நிற்கும்படி செய்யுங்கள்

இது போன்று இன்னும் சில சூத்திரங்கள்
உள்ளன! அவைகள் அததற்குரிய பாடங்களில்
சொல்லிக் கொடுக்கப்படும்!

பதிவின் நீளம் கருதி, இன்று இத்துடன் நிறைவு
செய்கிறேன்

(தொடரும்)
--------------------------------------------

46 comments:

  1. excellent article...
    lot of informations

    ReplyDelete
  2. ///Star Said: excellent article...
    lot of informations
    ////

    Thanks for your comments

    ReplyDelete
  3. இன்னிக்கும் வந்துட்டேன்!

    இந்த சூத்திரம் கொஞ்சம் சுலபமா இருக்கே!

    மிக்க நன்றி!

    ReplyDelete
  4. நான் ரொம்ப ஸ்லோ சார்.
    புதன் நாலாம் இடத்தில் இருந்தால் இப்படி இருக்குமா?

    நிறைய கேள்விகளுக்கு எனக்கு விடை வேண்டும். எங்கே ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை.:-0)
    மடல் அனுப்ப மீண்டும் உங்கள் முகவரி....இ மெயில் கிடைக்குமா?

    ReplyDelete
  5. அய்யா,
    இன்றைய பாடம் அருமை. எல்லா லக்னத்திற்கும் 2 அல்லது 7 ல் வலுவாக இருப்பவன் மரணத்தை கொடுப்பானா?

    ReplyDelete
  6. I have read in many books that the Ashtamaathipathy (8th house lord) and Aayul kaarakan Sani decides the death. I have practically seen in many horoscopes as well. But it looks different in your lesson as well as in MGRs case. Could you throw any light into this.

    ReplyDelete
  7. Thank you for your excellant class.
    I feel the class is too short for us, can you extend it to satisfy eager students like us?

    ReplyDelete
  8. குருவே நானும் கோயமுத்தூர் தானுங்கோ. கொஞ்சம் கணிதம் படித்திருப்பதால் இதில் நாட்டம் ஏற்பட்டது. (கல்யாணத்தில் ஜாதகம் விளையாடும் விளையாட்டில் வேற வழி இல்லாமல் இதை படிக்க ஆரம்பித்தேன்) நான் மிதுன ராசி. அதன் அதிபதி புதன். ஜாதகம் படித்தால் வரும் என்று தெரிந்த பிறகு என் உற்சாகம் அதிகரித்தது. தமிழ்மணத்தில உங்கள் தொடர் பார்ததும் உங்கள் விசிறியாகி விட்டேன். நானும் கோவை என்பதால் தங்களை சந்திக்க விருப்பம் (நீங்கள் விரும்பினால், நேரம் ஒதுக்க முடிந்தால்!!!).

    அப்புறம் ஒரு சந்தேகம்.

    சூரிய தசையில் சந்திர புத்தியை உங்கள் பார்முலா படி கணக்கிட்டேன். 6x10=60 இரண்டு இலக்கம் என்பதால் 5 வருடங்கள் என முடிவு செய்து உங்கள் அட்வணையை பார்த்தால் அதில் 6 வருடங்கள் என குறிப்பிட்டிருந்தது.

    என் சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்களா?
    rajakvk at gmail dot com

    ReplyDelete
  9. அய்யா,

    சூத்திரங்கள் மிக சரியாக புத்தியைக் கணக்கிடுகிறது. என்னுடைய தசா புத்தி காலங்களை வைத்து சரி பார்த்துக்கொண்டேன். இந்த எளிய சூத்திரம் நிச்சயமாக மனதில் நிற்கும்.

    ReplyDelete
  10. /////நாமக்கல் சிபி said... இன்னிக்கும் வந்துட்டேன்!
    இந்த சூத்திரம் கொஞ்சம் சுலபமா இருக்கே! /////

    இதையாவது ஒப்புக் கொண்டீர்களே!:-)))

    ReplyDelete
  11. ////வல்லிசிம்ஹன் said... நிறைய கேள்விகளுக்கு எனக்கு
    விடை வேண்டும். எங்கே ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை.
    மடல் அனுப்ப மீண்டும் உங்கள் முகவரி....இ மெயில் கிடைக்குமா?////

    இதே வலைப்பதிவின் Profile பகுதியில் உள்ளதே சகோதரி!
    இருந்தாலும் உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன்
    classroom2007 at gmail.com

    classroom2007@gmail.com

    ReplyDelete
  12. ////// அமர பாரதி said... ,
    இன்றைய பாடம் அருமை. எல்லா லக்னத்திற்கும்
    2 அல்லது 7 ல் வலுவாக இருப்பவன் மரணத்தை
    கொடுப்பானா?/////

    அது பொது விதி. சில விதிவிலக்குகளும் உள்ளன
    பின் பதிவுகளில் அது வரும்!

    ReplyDelete
  13. /////Meenakshi Sundaram said...
    I have read in many books that the Ashtamaathipathy (8th house lord)
    and Aayul kaarakan Sani decides the death. I have practically seen in
    many horoscopes as well. But it looks different in your lesson
    as well as in MGRs case. Could you throw any light into this.////

    சனி கர்ம காரகன், ஆயுள் காரகன். Span of lifeற்கு அவன்தான்
    காரணம். ஆனால் மரண்ம் ஏற்படுவது அத்ற்குள்ள
    தசா புத்திகளில்தான்.பின் பதிவுகளில் அதன் விவரங்கள்
    வரும். பொறுத்திருங்கள்

    ReplyDelete
  14. ///// ks said... Thank you for your excellant class.
    I feel the class is too short for us, can you extend
    it to satisfy eager students like us?////

    இல்லை நண்பரே!
    ஒரு பாடம் - A4 Sizeல் நான்கு பக்க அளவில்
    விஷயங்கள்,(தமிழில் தட்டச்ச வேண்டாமா?)
    வாரம் 3 அல்லது 4 பதிவுகள் என்று நான்
    ஒரு அளவு வைத்திருக்கிறேன்.

    வலைப்பதிவில் எழுதுவது ஒரு ஆர்வத்தில்தான்
    என் தொழிலையும் (Marketing) நான் பார்க்க வேண்டாமா?

    ஜோதிடமும் ஒரு பொழுதுபோக்குத்தான்.
    நான் ஒன்றும் தொழில் முறை ஜோதிடனும் அல்ல!
    நேரமின்மைதான் என்னுடைய முதல் பிரச்சினை!

    ReplyDelete
  15. ///// Kanakaraj said...
    குருவே நானும் கோயமுத்தூர் தானுங்கோ. கொஞ்சம் கணிதம் படித்திருப்பதால் இதில் நாட்டம் ஏற்பட்டது. (கல்யாணத்தில் ஜாதகம் விளையாடும் விளையாட்டில் வேற வழி இல்லாமல் இதை படிக்க ஆரம்பித்தேன்) நான் மிதுன ராசி. அதன் அதிபதி புதன். ஜாதகம் படித்தால் வரும் என்று தெரிந்த பிறகு என் உற்சாகம் அதிகரித்தது. தமிழ்மணத்தில உங்கள் தொடர் பார்ததும் உங்கள் விசிறியாகி விட்டேன். நானும் கோவை என்பதால் தங்களை சந்திக்க விருப்பம் (நீங்கள் விரும்பினால், நேரம் ஒதுக்க முடிந்தால்!!!).////
    தொடர் முடிந்தபிறகு ஒரு நாள் அனைவரும் சந்திப்போம்!


    ////சூரிய தசையில் சந்திர புத்தியை உங்கள் பார்முலா படி கணக்கிட்டேன். 6x10=60 இரண்டு இலக்கம் என்பதால் 5 வருடங்கள் என முடிவு செய்து உங்கள் அட்வணையை பார்த்தால் அதில் 6 வருடங்கள் என குறிப்பிட்டிருந்தது.///

    6 என்பது 6 மாதங்கள்!

    அட்டவணையில் 6 என்று குறிப்படப்பட்டுள்ளது மாதங்களை மட்டுமே!

    அதில் வருடமே வராது . மறுபடியும் ஒருமுறை பாருங்கள்!
    அப்படியே கீழே அமரபாரதியின் பின்னூட்டத்தையும் படியுங்கள்!

    ReplyDelete
  16. ////அமர பாரதி said...
    சூத்திரங்கள் மிக சரியாக புத்தியைக் கணக்கிடுகிறது.
    என்னுடைய தசா புத்தி காலங்களை வைத்து சரி பார்த்துக்
    கொண்டேன். இந்த எளிய சூத்திரம் நிச்சயமாக மனதில் நிற்கும/////

    நன்றி அமர பாரதி!

    ReplyDelete
  17. Dear Sir
    Thank you for your excellent class,I'm your regular student from Canada
    Can you please suggest some best webpages for learning astrology.
    I have a question about neecha bhanga ,when saturn is in mesha and mars in scopio is it neecha bhanga under any rule ?
    I would be realy thankful if you clear my doubt.

    ReplyDelete
  18. Your blog is very informative...

    Learing lots of new things and very much exicted...

    V Karthik

    ReplyDelete
  19. very informative, is it not true that it is not good to have papagrahas like rahu, ketu, sani in lagna? is mars a papagraha? reg. MGR: i thought that he was born on 17th January. Is it not correct? what about his marital life and yields? is 7th and 5th place weak? thanks for the article.

    ReplyDelete
  20. வாத்தியார் அவர்களே,
    கடேசி பெஞ்ச் மாணவனின் கேள்வி, கோவிக்காமல் விளக்கவும். எம்.ஜி.ஆரின் ஜாதகத்தில் நட்சத்திரம் "ரேவதி" என்று போட்டுள்ளது, அதனால் பக்கம் 3ல் கொடுத்துள்ள "ஆயில்யம், கேட்டை, ரேவதி" என்ற அட்டவணையை தசா புத்திக்கு பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் நீங்கள், பக்கம் 1ல் கொடுத்துள்ள "ரோகிணி, அஸ்தம், திருஓணம்" அட்டவணையை ஏன் பயன்படுத்துகிறீர்கள் ?

    நன்றி.

    ReplyDelete
  21. ////// whoami said...present ////

    வருகைப் பதிவில் குறித்துக்கொள்ளப்பட்டது!

    ReplyDelete
  22. ///// ks said...
    I have a question about neecha bhanga ,when saturn is in mesha
    and mars in scopio is it neecha bhanga under any rule ?
    I would be realy thankful if you clear my doubt.///

    இல்லை! நீசபங்க ரரஜயோகம் என்பது ஒரு உச்சமான
    கிரகத்துடன் நீசமான கிரகம் சேர்ந்திருப்பது மட்டுமே!
    (By association only)

    ReplyDelete
  23. /////Kaartz said... Your blog is very informative...
    Learing lots of new things and very much exicted...
    V Karthik///

    உங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி!

    ReplyDelete
  24. ///// kulo said... very informative, is it not true that it is not good to have papagrahas like rahu, ketu, sani in lagna? ///
    அப்படியெல்லாம் தனிப்பட்டுச் சொல்ல்முடியாது. மகரம், கும்ப லக்கினங்களுக்கு
    சனி அதிபதி. அவர் தன்னுடைய லக்கினத்தில் அமர்ந்திருப்பது எப்படிப் பாவமாகும்
    அந்த் இரு லக்கினக்காரர்களுக்கும் சனி பாவ கிரகமல்ல (Since he is the owner of that two lagnas)
    இப்படிப் பல விதி விலக்குகள் உண்டு!

    லக்கினத்தில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால் தாமபத்திய வாழக்கையில்
    மிகுந்த ஈடுபாட்டைக் கொடுக்கும். அதை எப்படி பாவமென்று சொல்வது...ஹி.ஹி!:-)))
    இப்படியும் சில் விதிவிலக்குகள் வேறு பணிகளுக்கு உண்டு!:-)))

    is mars a papagraha?
    முழு பாவ கிரகமில்லை!

    ///reg. MGR: i thought that he was born on 17th January. Is it not correct?////
    இந்தக் குழப்பம் உண்டு. ஆனால் தலைவர் ரேவதி நட்சத்திரம் என்பது பிரசித்தம்
    28ம் தேதிதான் ரேவதி நட்சத்திரம் உள்ளது. அது மட்டுமல்ல இந்த ஜாதக கட்டம்
    தலைவருக்கு நெருக்கமான ஜோதிடர் வெளியிட்டது!

    ReplyDelete
  25. ////// கூமுட்டை said...
    வாத்தியார் அவர்களே,
    கடேசி பெஞ்ச் மாணவனின் கேள்வி, கோவிக்காமல் விளக்கவும். எம்.ஜி.ஆரின் ஜாதகத்தில் நட்சத்திரம் "ரேவதி" என்று போட்டுள்ளது, அதனால் பக்கம் 3ல் கொடுத்துள்ள "ஆயில்யம், கேட்டை, ரேவதி" என்ற அட்டவணையை தசா புத்திக்கு பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் நீங்கள், பக்கம் 1ல் கொடுத்துள்ள "ரோகிணி, அஸ்தம், திருஓணம்" அட்டவணையை ஏன் பயன்படுத்துகிறீர்கள் ?////

    நான் எங்கே ஸ்வாமி அட்டவணையைப் பயன் படுத்தினேன்?

    எனக்கு இருக்கவே இருக்கிறது Formula & Calculator

    M.G.R க்கு எழுதியுள்ள தசா / புக்தி கணக்கில் எந்த இடத்தில் தவறு இருக்கிறது
    அதைச் சுட்டிக் காட்டுங்கள்!

    ReplyDelete
  26. எம்.ஜி.ஆருக்கு பக்கம் 3ல் கொடுத்துள்ள "ஆயில்யம், கேட்டை, ரேவதி" என்ற அட்டவணையை தசா புத்திக்கு பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். அது சரியா, தவறா ?

    ReplyDelete
  27. ///கூமுட்டை அவர்கள் சொல்லியது:
    எம்.ஜி.ஆருக்கு பக்கம் 3ல் கொடுத்துள்ள "ஆயில்யம், கேட்டை, ரேவதி" என்ற அட்டவணையை தசா புத்திக்கு பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். அது சரியா, தவறா ? ///

    அட்டவணைகளை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள்!

    அட்டவணை 3ல் புதன் திசைக்கும், அதன் உட்பிரிவுகளுக்கும் உள்ள
    கால அள்வு கொடுக்கப்பட்டுள்ளது!
    ரேவதி நட்சத்திரத்திற்கு புதன் தசை முடிந்தவுடன் அந்த அட்டவணையில் உள்ள
    கேதுவிற்குரிய தசை 7 வருடத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் எடுத்துக் கொண்டாயிற்று
    அதற்குப் பிறகு சுக்கிரதசைக்கு உள்ள 20 வருடங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும் எடுத்துக் கொண்டாயிற்று!

    அதற்குப் பிறகு வரும் சூரிய் தசை, சந்திர தசை செவ்வாய தசைக்கெல்லாம்
    அட்டவணை ஒன்றிற்குப் போயல்லவா காலத்தைக் குறிக்கவேண்டும்?

    இப்போது புரிகிறதா? இன்னும் புரியவில்லை என்றால் உங்கள் அலைபேசி எண்ணைக் கொடுங்கள்
    வேண்டிய விளக்கம் தருகிறேன்

    ReplyDelete
  28. ஏன் MGR க்கு குழந்தை செல்வம் இல்லாமல் போனது? ஜாதகத்தை வைத்து எவ்வாறு இதை கணிப்பார்கள்?

    ReplyDelete
  29. புரிஞ்சிருச்சுங்க. விளக்கத்துக்கு நன்றி. ஆனா உங்கள விடுறதா இல்ல.
    - கர்ப்ப செல் இருப்பை எப்படி கண்டுபிடிப்பது. குழந்தை அன்னையின் வயிற்றில் இருப்பது பத்து மாசம் தானே. எம்.ஜி.ஆருக்கு கர்ப்ப செல் இருப்பு புதன் தசையில் 16 வருடம் 8 மாசம் தானே இருக்க வேண்டும். பின்ன எப்படி 12 வருடம் 2 மாதம் 7 நாட்கள் ?

    ReplyDelete
  30. ///// குறும்பன் said...
    ஏன் MGR க்கு குழந்தை செல்வம் இல்லாமல் போனது?
    ஜாதகத்தை வைத்து எவ்வாறு இதை கணிப்பார்கள்?////

    மிகவும் சென்ஸிடிவான கேள்வி!
    குழந்தைப் பாக்கியம் என்பது ஐந்தாம் வீட்டைவைத்துப் பார்ப்பார்கள்.
    இங்கே ஐந்தாம் வீட்டிற்குரிய கிரகமான சுக்கிரன் லக்கினத்திற்கு விரைய ஸ்தானமான
    (House of Loss)) 12ம் வீட்டில் போய் அமர்ந்து விட்டது. அதே சுக்கிரன் தன்னுடைய வீடிலிருந்து பார்க்கையில் அந்த வீட்டிற்கு 8ம் வீட்டில் இருக்கிறது. இரண்டுமே நல்லதல்ல!
    மேலும் குழந்தைகளைக் கொடுக்கும் குரு பகவானின் (Authority for awrding children)
    பார்வை 5ம் வீட்டிற்குக் கிடைக்கவில்லை!
    இவைதான் காரணம் (It is called as denial of children)

    சொந்தக் குழந்தை இல்லையென்றால் என்ன?
    எத்தனை சொந்தக் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை
    மதிக்கின்றன அல்லது அன்பாக விசுவாசமாக இருக்கின்றன?

    ஆனால் அவருக்கு லெட்சக்கணக்கான் திரைப்பட ரசிகர்களும்,
    கட்சித் தொண்டர்களும், குழந்தைகளைவிட மேலாக அல்லவா அவரை நேசித்தார்கள்
    அன்பாக இருந்தார்கள். அவருக்காக உயிரையும் கொடுப்பதற்குச் சித்தமாக இருந்தார்கள்
    அதுவல்ல்வா முக்கியம்!

    The Almight had compensated the loss by giving him lakhs of fans and party men

    ReplyDelete
  31. //// கூமுட்டை said... புரிஞ்சிருச்சுங்க. விளக்கத்துக்கு நன்றி. ஆனா உங்கள விடுறதா இல்ல.
    - கர்ப்ப செல் இருப்பை எப்படி கண்டுபிடிப்பது. குழந்தை அன்னையின் வயிற்றில் இருப்பது பத்து மாசம் தானே. எம்.ஜி.ஆருக்கு கர்ப்ப செல் இருப்பு புதன் தசையில் 16 வருடம் 8 மாசம் தானே இருக்க வேண்டும். பின்ன எப்படி 12 வருடம் 2 மாதம் 7 நாட்கள் ?/////

    அந்த பத்து மாதக் கண்க்கெல்லாம் இங்கே வராது தம்பி!

    தலைவர் பிறந்த அன்று என்ன நட்சத்திரம் - அந்த நட்சத்திரத்தில், அவர் பிறந்த் நிமிடத்தில் எவ்வளவு நேரம் பாக்கியிருந்தது என்பதுதான் அளவு!

    மீண்டும் பழைய பதிவுகளைப் படித்துவிட்டு வாருங்கள் புரியும்!

    ReplyDelete
  32. தலைவரே!

    உங்க கணிப்பு தப்புன்னு நினைக்கிறேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் ஜனவரி 17 அல்லவா? நீங்கள் ஜனவரி 28 என்கிறீர்களே?

    ReplyDelete
  33. முந்தையப் பதிவை படித்தேன் ஆசிரியரே, ஆனால் நீங்கள் கொடுத்துள்ள எடுத்துக்காட்டு முழுவதும் விளங்கவில்லை.

    - பாதம் என்றால் என்ன ?
    - இன்ன நட்சத்திரத்திற்கு மொத்தம் எவ்வளவு பாதம் என்று எங்கே பார்ப்பது ?
    - பிறந்த நாள்/தேதியில் இவ்வளவு பாதம் கடந்துவிட்டது என்பதை அறிவது எப்படி ?

    ReplyDelete
  34. ///Lucky Look Said: உங்க கணிப்பு தப்புன்னு நினைக்கிறேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் ஜனவரி 17 அல்லவா? நீங்கள் ஜனவரி 28 என்கிறீர்களே? ///

    லக்கியாரே!
    இதற்கு முன் பதிவில் MGR அவர்களின் ஜாதகத்தின் Press Clipping உள்ளது
    அது அவருக்கு நெருக்கமான ஜோதிடரால் முன்பு வெளியிடப்பட்டது
    அதைப் பார்க்க வேண்டுகிறென்

    மேலும் இதே பக்கத்தில் இதே கேள்வியை குலோ என்பவர் பின்னூட்டத்த்ஜில் கேட்டிருந்தார்
    அதற்கு நான் எழுதியிருந்த பதில் கீழே உள்ளது!

    ///reg. MGR: i thought that he was born on 17th January. Is it not correct?////
    இந்தக் குழப்பம் உண்டு. ஆனால் தலைவர் ரேவதி நட்சத்திரம் என்பது பிரசித்தம்
    28ம் தேதிதான் ரேவதி நட்சத்திரம் உள்ளது. அது மட்டுமல்ல இந்த ஜாதக கட்டம்
    தலைவருக்கு நெருக்கமான ஜோதிடர் வெளியிட்டது!////

    முக்கியமான விஷ்யம் என்னவென்றால் அவருடைய நட்சத்திரம் ரேவதி என்பது பிரசித்தம்
    நான் என்னுடைய மனத்திருப்திக்காக பதிவை வெளியிடும் முன்பு கணினியில்
    உள்ள மென்பொருளில் பரிசோதித்துப் பார்த்தேன் 28ம் தேதியன்றுதான் ரேவதி நட்சத்திரம்.
    ஆக்வே பதிவில் உள்ளது சரியான ஜாதகம்தான்!

    ReplyDelete
  35. ////// கூமுட்டை said...முந்தையப் பதிவை படித்தேன் ஆசிரியரே,
    ஆனால் நீங்கள் கொடுத்துள்ள எடுத்துக்காட்டு முழுவதும் விளங்கவில்லை.

    - பாதம் என்றால் என்ன ?
    - இன்ன நட்சத்திரத்திற்கு மொத்தம் எவ்வளவு பாதம் என்று எங்கே பார்ப்பது ?
    - பிறந்த நாள்/தேதியில் இவ்வளவு பாதம் கடந்துவிட்டது என்பதை அறிவது எப்படி ?////

    1.பாதம் என்றால் ஒரு நட்சத்திரத்தின் நான்கில் ஒரு பகுதி (One fourth division of a Star)
    2. எல்லா நட்சத்திரத்திற்கும் அதே கணக்குதான்
    3. பிறந்த தேதியில் சூரிய உதயத்தில் இருந்து எத்தனை மணி நேரம் கடந்து
    குழந்தை பிறந்துள்ளது என்று பார்க்கிறோம் இல்லையா - அது போலவே
    ந்டசத்திரத்தில் எத்தனை நேரம் கழிந்துள்ளது. எவ்வளவு நேரம் மீதி
    உள்ளது என்று பார்க்கவேண்டும்
    4. இந்த நட்சத்திரத்தின் ஆரம்ப மணி நேரம் - முடிகின்ற மணி நேரம் எல்லாம்
    ஒவ்வொரு நாளும் தினசரி நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    பஞ்சாங்கத்தைப் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்
    5. கணினி முரையில் ஜாதகம் கழிக்க இது தேவையில்லை
    உங்களுக்காக கணினியே அதைப் பார்த்துக்கொள்ளும்!:-))))

    என்ன சந்தேகம் தீர்ந்ததா?
    ஆயிரம் பொன்னை நான் வாங்கிக் கொள்லலாமா?::-))))

    அதென்ன ஸ்வாமி உங்களுடைய பெயருக்கு எங்கள் பகுதியில் வேறு அர்த்தம் வரும்!
    பொன்முட்டை' என்று மாற்றி வைத்துக் கொள்ளுங்களேன்.It is only a suggestion! Do not mistake me!

    ReplyDelete
  36. ////Mr.Manickam Said: I really like your blogs and the simple way of explaining the omplex calculations. This is my first class and i have to catchup old classes.
    you are doing a wonderfull service and thank you very much..
    -Monic/////

    Explaining the complex things in a simple way is the first task of a good teacher!

    I am really happy with your comments!

    Thanks Mr.Manickam!

    ReplyDelete
  37. ஆசிரியரே, விளக்கங்களுக்கு நன்றி. கூமுட்டைனா என்னான்னு தெரிஞ்சு தான் பேர வச்சிருக்கேன். ஏற்கனவே என்னோட பின்னூட்டங்கள பாத்திருப்பிங்க. என்னங்க பண்றது, எனக்கு மூளை கொஞ்சம் மெதுவாத்தான் வேல செய்யுது.

    ஆயிரம் பொன்னா ? இப்ப தான் உங்க பதிவப் படிச்சுக்கிட்டே என் ஜாதகத்தை ஆராச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். எப்ப அதிர்ஷ்டம் அடிக்கும்னு தெரிஞ்க்கிட்டா உடனே உங்களுக்கு ஆயிரம் பொன் தான்.

    ReplyDelete
  38. ///கூமுட்டை அவர்கள் சொல்லியது: என்னங்க பண்றது, எனக்கு மூளை கொஞ்சம் மெதுவாத்தான் வேல செய்யுது.///

    மெதுவா வேலை செய்தால் பரவாயில்லை!

    வில்லங்கமாக வேலை செய்யாமல் இருந்தால் போதும்!:-)))

    புதனுடன் ஒன்றுக்கு மேற்பட்ட தீய கிரகங்கள் இருந்தால் மூளை வில்லங்காமாகத்தான் வேலை செய்யும்!

    ReplyDelete
  39. புரட்சித்தலைவர் பிறந்தநாளாக தமிழக அரசும், அதிமுக தலைமைக் கழகமும் ஜனவரி 17 அன்றைத்தானே கொண்டாடுகிறார்கள்?

    தலைவரும் பொய் சொல்லிவிட்டாரா?

    ReplyDelete
  40. ////ல்க்கி லுக் அவர்கள் சொல்லியது: புரட்சித்தலைவர் பிறந்த
    நாளாக தமிழக அரசும், அதிமுக தலைமைக் கழகமும்
    ஜனவரி 17 அன்றைத்தானே கொண்டாடுகிறார்கள்?
    தலைவரும் பொய் சொல்லிவிட்டாரா?////

    முன் பதிவிலுள்ள Press Clipping ஐப் பாருங்கள் அதில்
    தலைவருக்கு நெரருக்கமான ஜோதிடர் எழுதியுள்ள
    வரிகள் முக்கியம்.
    " எனக்கு அவருடைய உண்மையான ஜாதகம்
    கிடைத்திருக்கிறது. அதை வெளியிடுகிறேன்" என்று
    அவர் குறிப்பிட்டுள்ளார் (30 ஆண்டுகளுக்கு முந்தைய
    பேப்பர் கட்டிங் அது!)

    அது மட்டுமல்ல. தலைவரின் பிறந்த வருடத்திலும்
    சரியான தகவல் இல்லை - அது 1917 ஆ அல்லது 1911
    ஆ என்பதற்குச் சரியான குறிப்பு இல்லை என்று
    அவருடைய உதவியாளராக இருந்த திரு.மோகன்தாஸ்.IPS
    அவர்கள் தன்னுடைய - "எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும்"
    என்ற் தன்னுடைய நூலில் எழுதியுள்ளார்
    தலைவர் ரேவதி நட்சத்திரம் என்பதை முன்பு ஒரு
    சினிமா இதழில் படித்திருக்கிறேன். அதன்படி
    பார்த்தாலும் 28.1917 தான் பிறந்த் தேதி
    ஆகவே தலைவருக்கு நெருக்கமான ஜோதிடர்
    கொடுத்த தகவல்தான் சரியானது என்று
    வைத்துக் கொள்வோம்.

    ReplyDelete
  41. //ஆகவே தலைவருக்கு நெருக்கமான ஜோதிடர்
    கொடுத்த தகவல்தான் சரியானது என்று
    வைத்துக் கொள்வோம்.//

    அப்போ தலைவர் சொன்னது தப்பு. அவருக்கு நெருக்கமான ஜோதிடர் சொன்னது தான் உண்மை என்கிறீர்களா? (சும்மா தமாசுக்கு)

    ReplyDelete
  42. Dear sir,

    In MGR horoscope,Lagnathipathi mars is "Ucham" in Rasi. But in Amsam, it is "Neesam". By your other lesspns, amsam is magnified version and you insisst to consider amsam. How come it give fame to him. please explain

    ReplyDelete
  43. /////shyamala said...
    Dear sir,
    In MGR horoscope,Lagnathipathi mars is "Ucham" in Rasi. But in Amsam, it is "Neesam". By your other lesspns, amsam is magnified version and you insisst to consider amsam. How come it give fame to him. please explain///

    கேந்திரத்தில் இருக்கும் குரு, சனி போன்ற கிரகங்கள் அதைச் செய்தன!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com