=======================================
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 24
வாழ்க்கை என்பது ஒரு நெடும் பயணம்!
அந்தப் பயணத்திற்குப் பயன்படும் வாகனம்தான்
ஜாதகம். என்று வைத்துக் கொள்ளுங்களேன்
பயணிக்கும் சாலைதான் தசாபுக்தி.
நம்து வாகன ஓட்டுனர்தான் கோச்சாரம்
(கோள் சாரம் - கோள்களின் நிலமை -
Present Day Planetary Positions)
ந்ல்ல குளிசாதன வசதியுடைய பென்ஸ் கார்,
சென்னை - கன்னியாகுமரி நான்கு வழித் தேசிய
நெடுஞ்சாலை, அனுபவமும், பொறுமையும் மிக்க
வாகன் ஓட்டுனர் இம்மூன்றும் அமைந்தால்
பயணம் எப்படி இருக்கும்?
சுகமாகவும், சூப்பராகவும் இருக்காதா?
சரி, அதே பயணத்தை கொஞ்சம் மாற்றி
யோசித்துப் பாருங்கள்.
பழைய இரும்புக் கடைக்காரன்கூட வாங்க
யோசிக்கும் நிலையிலுள்ள ஒரு ஓட்டைக் கார்
ஹாரனைத் தவிர வண்டியின் அத்தனை
ப்குதிகளிலும் சத்தம் வரக்கூடிய கண்டிஷனிலுள்ள
வண்டி!
சாலையும் குண்டும் குழியும் நிறைந்த - திண்டுக்கல்
நத்தம் - சிங்கம்புணரிச் சாலை போன்ற மோசமான
சாலை.
ஓட்டுனரும் புதிதாக வண்டி ஓட்டக் கற்றுக்
கோண்டு வந்து வேலைக்குச் சேர்ந்த ஓட்டுனர்
இப்படி இருந்தால் பயணம் எப்படி இருக்கும்?
யோசித்துப் பாருங்கள்!
ஒரு சமயம் சாலை நன்றாக இருக்கும் ஓட்டுனர்
சுமாரான ஆசாமியாக இருப்பார். ஓட்டுனர் கில்லாடியாக
இருப்பார்ர்.சாலை மோசமாக இருக்கும்!
சில பேருக்கு மட்டும்தான் எல்லாமே அருமையாக
அமைந்து விடும். அவர்களுடைய காரும் (ஜாதகம்)
V- 8 Cylinder Engine உடன் கூடிய Cadillac காராக இருக்கும்.
தசா புத்தி கொஞ்சம் சுமாராக இருக்கும் போது
கோள்சாரம் கைக் கொடுக்கும். கோள்சாரம் அடிக்கும் போது
தசாபுத்தி வந்து குறுக்கே நின்று காக்கும்
அதெல்லாம் கொடுப்பினை!
ஜாதகத்தில் 1ம் வீடு, 9ம் வீடு, 10ஆம் வீடு, 11ம் வீடு
நன்றாக அமைந்திருந்தால் அதுதான் சிறப்பான ஜாதகம்.
மேலே சொன்ன் உவமைக்குரிய ஜாதகம்!
அதுதான் வாங்கி வந்த வரம். பிறக்கும் போது
வாங்கி வந்த வரம்.
அதற்கு இன்னொரு பெயரும் உண்டு. அதுதான்
கர்ம வினை! பற்றித் தொடரும் இரு வினைப்
பாவமும் புண்ணியமும் என்று பட்டினத்தார்
பாடினாரே அந்தப்பாவ புண்ணீயம்தான்.
அது ஜாதகத்திலும் தெரியும். அதற்குரிய வீடு
ஐந்தாம் வீடு. பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று
பெயர். அதற்குரிய பகுதி வரும் போது அதைப்
பற்றிப் பேசுவோம்!
சாதாரண மனிதனுக்கு பாவ புண்ணியம் எல்லாம்
தெரியாது. சொன்னாலும் ஒப்புக் கொள்ள மாட்டான்.
ரேசன் கார்டிற்கும், கட்சி உறுப்பினர் அட்டைக்கும்,
ஐநூறு ரூபாய் காந்தி படம் போட்ட ரூபாய்த்
தாளிற்கும் கொடுக்கும் மதிப்பில் நூற்றில்
ஒரு பங்கு மதிப்பைக்கூட அவன் பாவ புண்ணீய
த்திற்குக் கொடுக்கமட்டான்.
அவனுக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது. சொல்லித்
தரவும் ஆளில்லை. அவனுக்குக் கிடைக்கும் ஒரு சில
மணி ஓய்வு நேரத்தையும் டாஸ்மார்க் பாரில்
நண்பர்களுடன் கழிப்பதற்குச் சரியாக இருக்கும்.
மேலும் இதில் எல்லாம அவனுக்கு நம்பிக்கை இல்லை!
அவர்களில் பாதிப்பேர் சாமியாவது பூதமாவது என்பார்கள்
மீதிப் பேர் மனைவியின் வற்புறுத்தலுக்காக குலதெய்வக்
கோவிலுக்கு மட்டும் போய் வருவார்கள். அதுவும் ஒரு
உல்லாசப் பயணமாகத்தான் போய் வருவார்கள்.
ஐம்பது வயதிற்கு மேல்தான், சிலருக்கு அறுபது
வயதிற்குமேல் தான் சற்றுப் புரிய ஆரம்பிக்கும்.
அப்போது புரிந்து என்ன பயன்?
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.
கடவுள் கருணை மிக்கவர். அவர்தான் Match Maker
(ஜோடி சேர்ப்பவர்)
வீட்டில் பார்த்து செய்து வைத்த திருமணம்
என்றாலும் (Arranged Marriage) அல்லது காதல்
திருமணம் (Love Marriage) என்றாலும் அதுவும்
ஜாதகத்திலேயே தெரிந்துவிடும்.
அவர் எந்தவிதமான திருமணமானாலும் சரி
ஜோடியை சரியாகத்தான் கொடுத்திருப்பார்.
கணவன் ரயில் என்றால் மனைவி
தண்டவாளமாக இருப்பாள்
மனைவி ரயில் என்றால் கணவன்
தண்டவாளமாக இருப்பான்
அவர் ஒரு போதும் ரயிலையும், ரயிலையும்
ஜோடி சேர்த்ததில்லை!
அது படு சுவாரசியமான விஷயம்.
அதற்குள்ள பகுதி வரும்போது
அதை சற்று விவரமாக அலசுவோம்
பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன்
முடித்துக் கொள்கிறேன்
(தொடரும்)
----------------------------------------------
தசா புத்திப் பலன் இரண்டாம் பகுதி
கீழே உள்ளது.
குறுக்குவழி மன்னர்களூக்கான
அட்டவணையும் உடன் உள்ளது
இதன் மூன்றாவது பகுதி நாளை வரும்!
==================================================
==================================================
==================================================
==================================================
==================================================
==================================================
==================================================
==================================================
==================================================
//கணவன் ரயில் என்றால் மனைவி
ReplyDeleteதண்டவாளமாக இருப்பாள்
மனைவி ரயில் என்றால் கணவன்
தண்டவாளமாக இருப்பான்//
அதானால் தான் அடிக்கடி தடம் புரண்டு விபத்து நடக்கிறதா ?
:))))))
இது அட்டெண்டன்ஸ் பின்னூட்டம் !
////அதானால் தான் அடிக்கடி தடம் புரண்டு விபத்து நடக்கிறதா ?////
ReplyDeleteரயிலும் தண்டவாளமும் ஒன்றை விட்டு ஒன்று விலகாமல் போக வேண்டும்!
அப்படிப்போனால் விபத்து எப்படி ஏற்படும் சிங்கைக்காரரே!
இறைவன் தப்பாக ஜோடி சேர்ப்பதில்லை என்பதில்
ReplyDeleteநம்பிக்கை இருக்கிறது.
ஏனெனில் பெற்றோர் பொருத்தம் பார்த்தாலும் நாமும் மனமொப்பிதானே மணம் (சில திருமணங்களைத் தவிர) செய்கிறோம்.
புலிப்பாணி ஜோதிடரின் பாடல்கள் விவரமாக் இருக்கின்றன.
சரியாகக் கற்றுத் தேறினால்,தெளிவாக இருக்க வழியுண்டு.
தாங்கள் நாடி ஜோதிடம் பற்றி அறிவீர்களா.
அதில் நம்பிக்கை உண்டா.
/// வல்லிசிம்ஹன் அவர்கள் சொல்லியது: .
ReplyDeleteபுலிப்பாணி ஜோதிடரின் பாடல்கள் விவரமாக் இருக்கின்றன.
சரியாகக் கற்றுத் தேறினால்,தெளிவாக இருக்க வழியுண்டு.///
இன்னும் பல நூல்கள் உள்ளன அவற்றில்
ஒன்று குமாரசுவாமீயம்
அருமையான நூல்.
கடினமான சங்ககாலத்துத் தமிழ்..
படித்துப் புரிந்து கொள்வது சிரமம்!
/// தாங்கள் நாடி ஜோதிடம் பற்றி அறிவீர்களா.
அதில் நம்பிக்கை உண்டா.///
நேரடி அனுபவம் கிடையாது! பல நண்ப்ர்களூம்
உறவினர்களும் சொல்லக் கேள்வியுற்றிருக்கிறேன்
நாடிஜோதிடத்தில் இருந்த ஓலைச்சுவடிகள்
காலமாக நடைபெற்ற குடும்பச் சண்டையில்
ப்ங்கிடப்பெற்று சிதறுண்டு போயிருக்கிறது!
அத்னால் தொடர்புச் சுவடிகள் கிடைக்காது!
அந்தக் காலத்தில் நம்மை எதுவும் கேட்காமலேயே
நம் கட்டை விரல் பெருவிரல் ரேகையை வைத்து
நம்முடைய பிறந்த நாள், நட்சத்திரம், ஜாதகம்
அனைத்தையும் எழுதிக் கொடுத்து விடுவார்களாம்
என் சிற்றப்பா அது போல ஒரு முறை எழுதி
வாங்கியதாகச் சொன்னார்.
இப்போது அது மாதிரி எழுதித்தரும் நிபுனர்கள்
எவரும் இருப்பதாகத் தெரியவில்லை!
மேலும் ஒன்று - நடந்தவரை ஏட்டை எடுத்து
வாசித்து விடுவார்கள். சரியாக இருக்குமாம்
ஆனால் எதிர்காலப் பலனைச் சொல்வதில்
குழப்பம் இருக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்!
//கணவன் ரயில் என்றால் மனைவி
ReplyDeleteதண்டவாளமாக இருப்பாள்
மனைவி ரயில் என்றால் கணவன்
தண்டவாளமாக இருப்பான்//
கணவன் மனைவி பற்றி கூறியிருப்பது நூற்றுக்கு நூறு சரி. விட்டுக் கொடுத்து சென்றால் கண்டிப்பாக தடம் புரண்டு விடாமல் வாழ்க்கை அமையும்.
//ஜாதகத்தில் 1ம் வீடு, 9ம் வீடு, 10ஆம் வீடு, 11ம் வீடு
ReplyDeleteநன்றாக அமைந்திருந்தால் அதுதான் சிறப்பான ஜாதகம்.
மேலே சொன்ன் உவமைக்குரிய ஜாதகம்!//
if this is the generic rule, how come the poorvapunnia (5th house) house gives the paava/punniya palan.
Let us assume a case where a person's 5th house is very strong/good in his horoscope and other houses that you mentioned (1, 9, 10, and 11) are poor or normal. As per your generic rule above, he could NOT have a good/smooth life on the current birth as his houses (1, 9,10,11) are poor, eventhough he has done lot of "punniayas" in previous birth.
Please don't get me wrong here that I am asking stupid question. Basically I am trying to find the significance or importance of the 5th house over the other houses.
I have read in many books (Saaravali, Bhirugath Jaathagam, jyothida alangaaram ) that if all houses are bad/weak in a horoscope except 5th house, still the person will lead a happy life. I have seen the same kind of approach in Mr.AM.Rajagopalan's Q/A sections in Kumudam jyothidam as well.
குருவே,
ReplyDeleteவழக்கம் போல் இப்பதிவும் மிக அருமையாக உள்ளது. பதிவில் நான் பிறந்த ஊர் பெயரைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், மோசமான சாலைக்கு உதாரணமாக வந்ததில் சிறிது வருத்தம்தான்.
திண்டுக்கல் ராஜா
//////Meenakshi Sundaram said...
ReplyDelete//ஜாதகத்தில் 1ம் வீடு, 9ம் வீடு, 10ஆம் வீடு, 11ம் வீடு
நன்றாக அமைந்திருந்தால் அதுதான் சிறப்பான ஜாதகம்.
மேலே சொன்ன் உவமைக்குரிய ஜாதகம்!//
if this is the generic rule, how come the poorvapunnia (5th house) house gives the paava/punniya palan.///
Nothing is a generic rule my dear friend. There are many exemptions.
For example, If mars is placed in the seventh or eighth house, it is Kuja Dosa in general
But Mesha Langa and Virushiak Lagna are exempted from Kuja Dosha, since Mars is its Own Lord
Like that, there are many exemptions.
Purva Punniya is also like that. Even if the said houses are not good, It will confer happy life.
But not like the horoscope of those people whose 1,8,10, & 11 houses are good
There is no definition for happiness. It varies from age to age and people to people
But one thing, all the natives of the horoscopes are equal., Since the Ashtakavarga Points to any horoscope is 337
whether it is the horoscope of Ambani or an ordinary taxi driver.
I am going cover all these points in my future articles
Please wait and read my forth coming articles
Regarding the 5th house I will write in detail when I write that part of Jothidam in my blog
Thanks for your comments
////வழக்கம் போல் இப்பதிவும் மிக அருமையாக உள்ளது. பதிவில் நான் பிறந்த ஊர் பெயரைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், மோசமான சாலைக்கு உதாரணமாக வந்ததில் சிறிது வருத்தம்தான்.
ReplyDeleteதிண்டுக்கல் ராஜா ////
என்ன செய்வது?
எனக்கு சட்டென்று அந்த சாலைதான் நினவிற்கு வந்தது!
ஏனென்றால் நான் அடிக்கடி பயணிக்கும் சாலை.
கோவையிலிருந்து என் சொந்த ஊரான தேவகோட்டைக்கு
அந்தச் சாலை வழியாகத்தான் சென்றாக வேண்டும்!
இல்லையென்றால் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதுபோல
திருச்சி - புதுக்கோட்டை வழியாகச் செல்ல வேண்டும்:-)))
முதலில் படத்தை பார்த்ததும்,ஏதோ ரயில் ஜோதிடம் பற்றி இருக்கும் போல் என்று நினைத்தேன்.
ReplyDeleteஉதாரணம் நன்றாக உள்ளது.
//அது ஜாதகத்திலும் தெரியும். அதற்குரிய வீடு
ReplyDeleteஐந்தாம் வீடு. பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று
பெயர்.//
ஜாதகத்தில் ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானம் அல்லவா, ஒன்பாதாமிடம் தானே பூர்வ புண்ணிய ஸ்தானம். விளக்கவும்.
கோசாரத்தில் சனி ஆறாம் இடத்திலும், குரு ஒன்பதாம் இடத்தில் அமைவதின் பலன் என்ன. சென்ற குரு பெயற்ச்சிக்கு முன் கும்பராசிக்கு கோசாரம் இவ்வாறு அமைந்தது. பொதுவாக ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு, அகப்பட்டவனுக்கு அஸ்டமத்தில் சனி என்ற வழக்கு உள்ளது, ஆனால் எனக்குத்தெறிந்த 10 கும்ப ராசிக்காரர்கள், என்னையும் சேர்த்து, இந்த கால கட்டத்தில் மிக துன்பங்களை சந்திக்க நேர்ந்தது, ஏன்.
///// வடுவூர் குமார் said... முதலில் படத்தை பார்த்ததும்,ஏதோ ரயில்
ReplyDeleteஜோதிடம் பற்றி இருக்கும் போல் என்று நினைத்தேன்.
உதாரணம் நன்றாக உள்ளது.////
ரயில்தான் இப்போது இந்தியாவில் அப்ரிதமான லாபத்துடன்
ஓடிக்கொண்டிட்ருக்கிறதே! அதைப் பற்றி எழுத என்ன இருக்கிறது!
//// whoami said...ஜாதகத்தில் ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானம் அல்லவா,
ReplyDeleteஒன்பாதாமிடம் தானே பூர்வ புண்ணிய ஸ்தானம். விளக்கவும்.////
ஒவ்வோரு வீட்டிற்கும் 3 இலாக்காக்கள் உள்ளன!
விபரங்கள் பின் பதிவு ஒன்றில் வரும்!
5ம் வீடிற்கு 1, பூர்வபுண்ணிய ஸ்தானம் 2. புத்திர ஸ்தானம், 3. நுன்னறிவு ஸ்தான்ம என்ற
3 இலாக்காக்கள் உண்டு!
-----------------------
9ம் வீடு பாக்கிய ஸ்தானம் House of Gains)
-------------------------
கோள்சாரம் சற்று விரிவான பகுதி!
அடுத்தவாரம் முழுவதும் கோச்சாரத்தைப் பற்றிய பதிவுகள்தான்
அதில் எல்லா விவரங்களும் வரும்
சற்று பொறுத்திருக்க வேண்டுகிறேன்
உள்ளேன் ஐயா.
ReplyDeleteபாடங்கள் அருமையாக போகின்றன.
உள்ளேன் ஐயா!
ReplyDeleteஇப்படிக்கு முதல் வரிசைக்கு வரத் துடிக்கும் கடைசி பெஞ்சு (மாண்பு மிகு) மாணவன்.
Thank you for your service.
ReplyDeleteHope you explain more about 7th house in the forthcoming weeks as we ( many of us) yet to get married. :-)))
Once again thank you sir.
அய்யா, நான் உங்களது தொடர்களை படித்து வருகிறேன்.
ReplyDeleteஉங்களது சேவைக்கு நன்றி.
-கிச்சா
மிஸ்டர் கனகராஜ் &
ReplyDeleteமிஸ்டர் கிச்சா
உங்கள் இருவருடைய பாராட்டிற்கும் நன்றி!
இது தான் முதல் வருகை. எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களை எழுதி வருகிறீர்கள். இனி தொடர்ந்து வருவேன்.
ReplyDeleteமுதலில் படிக்கமால் விட்டதை எல்லாம் முடிச்சுட்டு வருகிறேன்.
கலைஞரின் நடப்பு தசா புத்தி சொல்லமுடியுமா
ReplyDeleteநன்றி
//// ambi said... இது தான் முதல் வருகை. எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களை எழுதி வருகிறீர்கள். இனி தொடர்ந்து வருவேன். முதலில் படிக்கமால் விட்டதை எல்லாம் முடிச்சுட்டு வருகிறேன்.///
ReplyDeleteஆகா நன்றாகப் படித்து விட்டு வாருங்கள்!
///// whoami said...கலைஞரின் நடப்பு தசா புத்தி சொல்லமுடியுமா/////
ReplyDeleteஅது வேண்டாம் நண்பரே - தேவையில்லாத பிரச்சினைகளைத் தவிர்த்து விடுவது நல்லது!
கணவன் ரயில் என்றால் மனைவி
ReplyDeleteதண்டவாளமாக இருப்பாள்
மனைவி ரயில் என்றால் கணவன்
தண்டவாளமாக இருப்பான்
மிக மிக அருமையான வரிகள்...இதனை நானும் கவனித்திருக்கின்றேன்.. அய்யா...
நன்றி...நன்றி...நன்றி...
sir ,i am anew student
ReplyDelete