மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

Well said

Well said
Varahamihiram, The Great

Galaxy2007 Class

Galaxy2007 Class
Classroom for Advanced Lessons

Galaxy 2007 Class -Advanced Lessons

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

இரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன!

Galaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.

அந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

வந்தவர்களின் எண்ணிக்கை

13.4.07

Super Star's Horoscope - தொடர்ச்சி


=================================================
Super Star's Horoscope - தொடர்ச்சி
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 27
இதற்கு முன் உள்ள பதிவிற்கான சுட்டி இங்கே!இது ஒரு தொடர் பதிவு. ஒன்றிற்கொன்று தொடர்
புள்ளவை. ஆகவே முன்பதிவைப் படித்து விட்டு
வரவேண்டுகிறேன்

சூப்பர் ஸ்டாரின் ஜாதகத்தில் பல சிறப்புக்கள்
உள்ளன

1. லக்கின அதிபதி சூரியன் 4ல் - அது கேந்திரம் + நட்பு வீடு

2. பூர்வ புண்ணியாதிபதி குரு 7ல் - அது கேந்திரம்
+ லக்கினத்தின் மீதுவிழும் அவருடைய நேரடிப் பார்வை

3. பாக்கிய ஸ்தான அதிபதி (House of gains) செவ்வாய்
உச்சம் அடைந்துள்ளார் + சந்திரனுடன் சேர்ந்து
சசி மங்கள யோகம்

4. லாபாதிபதி (House of Profit) புதன் 5ல் -
அது திரிகோண வீடு + 11ற்கு அவருடைய
நேரடிப்பார்வை

5. தொழில் ஸ்தான அதிபதி (House of Profession)
சுக்கிரன் 5ல் + லாபாதிபதியுடன் சேர்க்கை

6. புதனும் சுக்கிரனும் சேர்ந்து (By association)
நிபுண யோகத்தை வழங்கினார்கள்

7 இரண்டாம் வீட்டில் - அதாவது குடும்ப, தன
ஸ்தானத்தில் சனி - அது ஒன்றுதான் குறை
போன்று தோற்றளிக்கும் - ஆனால் குறை
நிவர்த்தியாகி விட்டிருக்கிறது.

எப்படி என்பதை அடுத்த பத்தியில் சொல்லியிருக்கிறேன்

சூப்பர் ஸ்டார் என்று சொல்லாமல் - 2ல் சனி
இருக்கிறதே அதற்கு என்ன பலன் என்று
அவருடைய ஜாதகத்தைக் காட்டிக் கேட்டால்,
சாதாரண ஜோதிடர் அவசரத்தில் இந்த ஜாதகன்
கையில் காசே தங்காது என்று சொல்லி விடுவார்.

சனி 2ல் இருந்தால் காசு கையில் தங்காதுதான்
(Expense oriented horoscope) ஆனால் அவரிடம்
தங்காத பணமா? சேராத சொத்துக்களா? அது எப்படி?

அதற்குக் காரணம் 2ம் வீட்டு அதிபதி புதன்
அம்சத்தில் உச்சமாகி இருப்பதைப் பாருங்கள்

எந்தக் கிரகம் என்றாலும் அது அம்சத்தில் உச்சம்
பெற்றால், உச்சமான பலனைக் கொடுத்து
விடுவார். அதுபோல அவருடைய ஜாதகத்தில்
பாக்கியாதிபதி செவ்வாய் ராசியில் உச்சம் குரு 7ல்
ஆக இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்து அவருக்குப்
புகழையும், செல்வாக்கையும் வாரி வழங்கியுள்ளன.
அதனால் தான் அவருக்கு லெட்சக்காணக்கான
ரசிகர்கள். ஏன் ஜப்பான் வரைகூட அவருக்குப்
பரந்து விரிந்த ரசிகர்கள்.

தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்திற்குரிய
சுக்கிரன் லாபாதிபதி புதனுடன் சேர்ந்து திரிகோண
வீட்டில் அமர்ந்ததால் அவர் நுழைந்த திரைத்
துறையில், அவருக்கு அவைகள் நம்பர் ஒன்
இடத்தைப் பிடித்துக் கொடுத்தன!

அம்சத்தில் மூன்று சுப கிரகங்கள் அருமையான
இடத்தில் அமர்ந்துள்ளன. குருவிற்கும், சுக்கிரனுக்கும்
ஆட்சி பலன் (Own House) சந்திரனுக்கோ உச்சமாகிய
பலன்(Exalted House)

அவர் 12.12.1950ஆம் ஆண்டு பிறந்தவர்.
திருவோணம் நட்சத்திரம் - பெருமாளின் நட்சத்திரம்
பிறந்த திசையில் 7 வருடம் - 18 நாட்கள் இருப்பு

அவருக்குக் கால சர்ப்பதோஷம். ராகு - கேது விற்குள்
மற்ற 7 கிரகங்களும் மாட்டிக்கொண்டுள்ளன பாருங்கள்.
(All the 7 planets are hemmed between Rahu and Ketu)
(காலசர்ப்ப தோசத்தைப் பற்றிய விரிவான் பதிவு
பின்னால் வரும்)

அதனால்தான் சிறிய வயதில் அவர் கஷ்டப்
பட்டிருக்கிறார். பேருந்தில் நடத்துனர் வேலையைச்
சிறிது காலம் பார்த்தவர். அவருடைய 25 வயதில்
தான் திரைக்குள் பிரவேசித்தார்.

15.8.1975ஆம் ஆண்டு வந்த 'அபூர்வ ராகங்கள்' என்ற
திரைப் படத்தில் சிறிய பாத்திரம். மூன்று நான்கு
காட்சிகளில் மட்டுமே வந்து போவார். அவரை
மக்களுக்கு நன்கு அறிமுகப் படுத்திய படம்
பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் வந்த
'16 வயதினிலே' என்னும் படம்.

12ம் வீட்டிற்குரிய சந்திரன் 6ல் அமர்ந்து விபரீத
ராஜயோகத்தைத் தந்துள்ளது!

தன, குடும்ப ஸ்தானத்தில் (Second House) சனியும்,
கேதுவும் அமர்ந்ததோடு, அந்த ஸ்தானத்தின்மேல்
ராகுவின் பார்வையும் விழுவதால் அவருக்கு,
ஆன்மிகச் சிந்தனைகள், துறவறம் மீது அதிக
நாட்டம் ஏற்பட்டுள்ளது.

சிம்ம லக்கினம்தான் ஹீரோக்களின் லக்கினம்.
அதனால்தான் அந்த லக்கினத்திற்கு சிங்கம்
குறியீடாக ஒதுக்கப்பட்டுள்ளது.

சிங்கத்தைவிட பெரிய ஹீரோ உண்டா?
அதேபோல சிங்கம் யாருடனும் கூட்டு வைக்காது.
தனித்துத்தான் செயல்படும்.
அதனால்தான் அவரால் அரசியலிற்கு வரமுடிய
வில்லை. அரசியல்வாதிகளின் லக்கினம் கடக
லக்கினம்.

அரசியல் என்றாலும், கட்சிகள் என்றாலும் கூட்டு
இல்லாமலா? அதனால்தான் சிம்ம லக்கினத்துக்
காரகள் 95% அரசியலில் ஈடுபடமாட்டார்கள்.
மீதமுள்ள அந்த 5% ஜாதகத்தில் உள்ள வேறு
அமைப்பினால வரலாம். அது விதி விலக்கு.

விதி விலக்குகளை உதாரண்மாக எடுத்துக்
கொள்ளக்கூடாது!
(Exemptions should not be taken as examples)

தற்சமயம் அவருக்கு சனிதிசையில் சுக்கிரபுக்தி
நடை பெறுகிற்து. அது 11.12.2008 வரை உள்ளது!

கடந்த 30 ஆண்டுகளாக அவருக்கு நடைபெற்ற
மகா தசைகளும் சரி புக்திகளும் சரி ஜாதக
அமைப்பினால் ,ஜாதகத்தில் அவைகள் நல்ல
இடங்களில் அமர்ந்துள்ள காரணங்களினால்
அவருக்குப் பெரிய பாதிப்பு ஒன்றையும் ஏற்படுத்தவில்லை!
--------------------------------------------------------------------------
தசாபுக்தி பலன்களின் மூன்றாவது பகுதியைக்
கீழே கொடுத்துள்ளேன்.

இத்துடன் தசாபுக்திப் பலன்கள் பகுதி நிறைவுறுகிறது!
கடைசி பெஞ்ச் கண்மணிகளுக்காக வழக்கம்போல
அட்டவணையையும் கொடுத்திருக்கிறேன்.
-------------------------------------------------------------------------
1. கிரகங்கள் ஆட்சி மற்றும் உச்சம் பெற்றிருக்கும்
ஜாதகர்களுக்கு திசைகளும், புத்திகளும் நல்ல
திசைகளில் அதிக நல்ல பலன்களையும்,
மோசமான திசைகளில் குறைவான தீய
பலன்களையும் மட்டுமே கொடுக்கும்

2. அதே கிரகங்கள் ஜாதகத்தில் பகை வீடுகளிலும்
அல்லது நீசம் பெற்றும் இருக்குமானால் நல்ல
திசைகளில் குறைவான நல்ல பலன்களையும்,
மோசமான திசைகளில் அதிகமான் தீய பலன்களையும்
கொடுக்கும்
3. கேந்திரம், திரிகோணங்களில் அமர்ந்திருக்கும்
கிரகங்கள் தங்களுடைய தசாபுக்திகளில் நன்மையான
பலன்களையும், ஆறாம் இடம், எட்டாம் இடம்,
பன்னிரெண்டாம் இடம் ஆகிய இடங்களில்
அமர்ந்திருக்கும் கிரகங்கள் தங்களுடைய
தசாபுக்திகளில் அதிகமான தீமைகளைத்தான்
கொடுக்கும்
வாசகர்கள் மேற்கூறியவற்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும்---------------------------------------------------------------------------

====================================================================================================
அவரவர் தங்கள் ஜாதகத்திற்கு உரிய மகா
திசைகளையும், புக்திகளையும் யாருடைய உதவியும்
இன்றித் தாங்களே கணித்துப் பார்பதற்கும்,
உத்தேசமாக பலன்களை அறிந்து கொள்வதற்கும்
வகை செய்யும் விதமாக பாடங்களை நடத்தியிருக்கிறேன்.

அடுத்தது கோச்சாரம் - கோள் சாரம் பற்றிய பாடம்.

(The present day planetary positions and its effects on one's natal chart)

அதுவும் சற்றுப் பெரிய பாடம்தான்
ஆனால் உங்களுக்குப் புரியும் விதமாக அதை
நடத்தவுள்ளேன். இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக
அவைகள் பதிவிடப்படும்
-----------------------------------------------------------------------

கடைசி பெஞ்ச் கண்மணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான
செய்தி. கீழே கொடுத்துள்ளேன்!
14.04.2007 மாலை 6 மணி முதல் 18.4.2007 மாலை 6 மணி
வரை நான்கு தினங்கள் வாத்தியாரின் வெளியூர்
பயணத்தால் வகுப்பறைக்கு விடுமுறை-----------------------------------------------------------------------

இதுவரை தொடர்ந்து 27 பதிவுகள் வந்துள்ளன.
இந்த நான்கு நாட்களில் அவைகளையெல்லாம்
ஒருமுறை மீண்டும் படித்து வையுங்கள். திரும்பி
வந்தவுடன் Revision Test உண்டு. குறிப்பாக அந்த
மல்யுத்தப் பார்ட்டிகளுக்கு கண்டிப்பாகப் பரிட்சை உண்டு!

(தொடரும்)

12 comments:

கும்பா said...

உள்ளேன் அய்யா

நாமக்கல் சிபி said...

உள்ளேன் ஐயா!

Unknown said...

குருவுக்கும் மற்றும் வகுப்பறைத் தோழர்களுக்கும் உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்
இராசகோபால்

monickam said...

ullane iyya

சேதுக்கரசி said...

கடைசி பெஞ்சு கண்மணிகளுக்கான செய்தியை மட்டும் தவறாமல் படிச்சிட்டேன்.. ஹிஹி.

உங்கள் நண்பன்(சரா) said...

//மல்யுத்தப் பார்ட்டிகளுக்கு கண்டிப்பாகப் பரிட்சை உண்டு//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... சிபி நீங்களாவது படிச்சீங்களா?

rajakvk said...

உள்ளேன் ஐயா.

சென்ஷி said...

நான் சிபிய பாத்து காப்பி அடிக்க வேண்டியது தான் போலருக்கு..

இன்னிக்கு எல்லாத்தியும் ப்ரிண்ட் அவுட் எடுத்துட்டு போகப்போறேன்.

அப்புறம் பாருங்க.
நீங்களே கடைசி பெஞ்ச் போகாதேன்னு சொல்வீங்க :)

இன்னொரு மல்யுத்த பார்ட்டிய காணோம் :)

சென்ஷி

Anonymous said...

குருவே,

நீங்கள் நலம்தானே? வகுப்புகளுக்கும் அப்பால், ஒரு நல்ல வலைப்பதிவரை இணையத்தின் மூலமாக சந்திக்க முடியாமல் போனதால் சிறிது வருத்தம்தான்.

அன்புடன்
இராசகோபால்

தினேஷ் said...

Dear Sir

Excellent efforts. I had a chance to visit your blog quite recently and studying the lessons. Your expression with interesting examples make simple and easily understandable.

Thank you so much.

Regards
Dinesh

தினேஷ் said...

Dear Sir

I got a chance to visit your blog quite recently and studying the previous lessons. They are very much interesting and your expression and appropriate examples make the lesson simple and unserstandable.

Thank you so much.

Regards
Dinesh

Subbiah Veerappan said...

வருகைப் பதிவேட்டிற்காக வகுப்பிற்கு வந்த
1. Who am I
2. நாமக்கல் சிபி
3. Monickam
4. கனகராஜ்
ஆகிய அன்பர்களுக்கு மிக்க நன்றி!

-----------------------
1 புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொன்ன மிஸ்டர்
ராஜகோபால் அவர்களுக்கும்,

2. கடைசி பெஞ்சிற்கான செய்திகளைத் தவறாமல்
படிக்கும் அரசியாருக்கும்,

3. தான் படிப்பதைப் பற்றிக் கவலைப்படாமல்
சிபி படித்ததைப் பற்றிக் கவலைப்படும்
உங்கள் நண்பர் சரா அவர்களுக்கும்,

4. இன்னொரு மல்யுத்தப் பார்ட்டியைத் தேடிக்
கவலைப்படும் டில்லி இளைஞர் சென்ஷிக்கும்,

5.Excellent efforts என்று மனமுவந்து பாராட்டிய
மிஸ்டர் தினேஷ் அவர்களுக்கும்
என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

அன்புடன்
SP.VR.சுப்பையா