குறுக்குவழி ஜோதிடம் - பகுதி 9 &10
கிரகங்களின் ஆட்சி உச்சம் நீசம் விபரம்
ஆட்சி என்பது ஒரு கிரகம் தனது சொந்த ராசியில் வலுவாக இருப்பது;
உச்சம் என்பது உச்சபட்ச பலம் பெறுவது
உச்ச ராசிக்கு 180 பாகையில் எதிர் கட்டத்தில் இருபது
நீசம்;
நீசம் என்பது அந்த கிரகம் பலவீனமடைந்து, அதன் சுயமான ஒளியை இழந்து நிற்கும்
நிலை,
இது பொதுவாக உச்சத்திற்கு எதிர்
ராசியில் ஏற்படும்.
ஒவ்வொரு கிரகத்திற்கும் குறிப்பிட்ட
ராசிகள் ஆட்சி, உச்சம், நீசம் பெறும் இடங்கள் உண்டு,
இது ஜாதகரின் பலன்களைத்
தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
கிரகங்களின் ஆட்சி, உச்சம், நீசம் (பொதுவானவை)
சூரியன்: உச்சம் - மேஷம், நீசம் - துலாம்.
சந்திரன்: உச்சம் - ரிஷபம், நீசம் - விருச்சிகம்
செவ்வாய்: உச்சம் - மகரம், நீசம் - கடகம்.
புதன்: உச்சம் - கன்னி, நீசம் - மீனம்.
குரு: உச்சம் - கடகம், நீசம் - மகரம்.
சுக்கிரன்: உச்சம் - மீனம் , நீசம் - கன்னி
சனி: உச்சம் - துலாம், நீசம் - மேஷம்.
ஆட்சி, உச்சம், நீசம் விளக்கம்
ஆட்சி (Own House): ஒரு கிரகம் தனது சொந்த ராசியில் இருக்கும்போது,
அது அந்த ராசியின் குணங்களைக்
முழுமையாக வெளிப்படுத்தும்.
இது நல்ல பலத்தைத் தரும் (100% பலம்).
உச்சம் (Exaltation): உச்சம் என்பது ஒரு கிரகம் தனது சொந்த ராசியை விட அதிக பலம் பெற்று,
மிக உயர்ந்த நிலையில் இருக்கும் நிலை.
உச்ச ராசிக்கு நேர் எதிர் ராசி நீச ராசியாக அமையும்.
நீசம் (Debilitation): நீசம் என்பது ஒரு கிரகம் தனது ஒளியையும், வலிமையையும் இழந்து
பலவீனமாக இருக்கும் நிலை. இது பொதுவாக
அதன் உச்ச ராசிக்கு 7-ஆம் இடத்தில் அமையும்.
உதாரணமாக, சூரியன் உச்சம் பெறும் மேஷத்திற்கு
எதிர் ராசியான துலாம் சூரியனுக்கு நீசமாகும்.
பலன்கள்
ஆட்சி மற்றும் உச்சம் பெற்ற கிரகங்கள்
சாதகமான, வலிமையான பலன்களைத் தரும்.
நீசம் பெற்ற கிரகங்கள் பலவீனமாக
இருப்பதால், அவற்றின் காரகத்துவங்களுக்குரிய
பலன்கள் குறைந்து, சில நேரங்களில் எதிர்மறை பலன்களைத்
தரலாம்.
ஒரு ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தால் அந்த ஜாதகம் யோகமான ஜாதகம்
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் ஜாதகத்தில் நான்கு கிரகங்கள் உச்சமாக இருக்கின்றன
ஸ்ரீ ராமபிரானின் ஜாதகத்தில் ஐந்து
கிரகங்கள் உச்சமாக உள்ளது
அவர்கள் ஏன் வனவாசம் போன்ற கஷ்டங்கள் பட்டார்கள்? அது தசா புத்திகளால் ஏற்பட்டது
தசா புத்தி பாடம் நடத்தும் போது அவற்றை
விபரமாகப் பார்ப்போம்
உங்கள் வசதிக்காக, உங்கள் பயன் பாட்டிற்காக ஒரு அட்டவணையைக் கொடுத்துள்ளேன்
அதில் எல்லா விபரமும் உள்ளது
அதைப் பத்திரப் படுத்தி
வைத்துக்கொள்ளுங்கள்
வாசன் திருக்கணித பஞ்சாஙத்தின் கடைசிப் பக்கத்தில் இந்த அட்டவணை உள்ளது
___________________________________________________________
Short Cut Astrology Part 10
குறுக்கு வழி ஜோதிடம் பகுதி 10
ஜோதிடம் கிரகங்களின் வலிமை
Planetary Strength
ஜோதிடத்தில் கிரகங்களின் வலிமை என்பது, அவை இருக்கும் ராசி, வீடு, நட்சத்திரம், நீசம்/உச்சம், பகை/நட்பு, திசை, பார்வை, மற்றும் ஷட்பலம் (ஸ்தான பலம், கால பலம் போன்ற) ஆகியவற்றைப் பொறுத்து அமையும்;
வலிமையான கிரகம் அதன் தன்மையான பலன்களை முழுமையாகத் தரும்,
பலவீனமான கிரகம் (நீசம், பகை போன்ற) தடைகள், தாமதங்கள், துன்பங்களைத் தரும்,
மேலும் இந்த கிரக பலமே ஒருவரின்
வாழ்க்கையில் யோக, அவயோக நிலைகளைத் தீர்மானிக்கிறது.
கிரக பலத்தை பாதிக்கும் தன்மைகள்
ஸ்தான பலம் (Positional Strength):
உச்சம்: கிரகம் உச்சம் பெறும் ராசியில்
இருந்தால் அதிக வலிமை.
நீசம்: நீசம் அடையும் ராசியில்
இருந்தால் வலிமை குறைவு
(நீச பங்க ராஜ யோகமும் உண்டு அதை பின்னர்
பார்க்கலாம்).
நட்பு/பகை: நட்பு ராசியில் இருந்தால் பலம்,
பகை ராசியில் இருந்தால் பலவீனம்.
கேந்திர/திரிகோண பலம்: 1, 4, 5, 7, 9, 10 ஆம் வீடுகளில் இருப்பது பலம்
சேர்க்கும்.
திக்கு பலம்: சூரியன், சனி, புதன், குரு போன்றவற்றுக்கு குறிப்பிட்ட
திசைகளில் பலம் உண்டு
(எடுத்துக் காட்டு: சூரியன் 10-ல்).
கால பலம் (Temporal Strength):
பக்ஷ பலம்: வளர்பிறை/தேய்பிறை
நிலைகளைப் பொறுத்தது (சந்திரன்).
தின பலம்: ஒரு குறிப்பிட்ட நாளில்
கிடைக்கும் பலம்.
நதோன்னத பலம்: பகல்/இரவு நேரங்கள், அஸ்தமனம் சார்ந்த நிலைகள்.
ஷட்பலம் (Sixfold Strength):
இது 6 விதமான பலங்களை ஒன்றிணைத்து கிரகத்தின் மொத்த வலிமையைக் கணக்கிடும்
ஒரு விரிவான முறை.
ஸ்தான பலம், கால பலம், திக்கு பலம், சேஷ்டா பலம், யுத்த பலம், நைர்சக பலம் ஆகியவை இதில் அடங்கும்.
கிரக சேர்க்கை (Conjunctions) & பார்வை (Aspects):
அவற்றை பின் ஒரு நாள் விரிவாகப்
பார்க்கலாம்
இப்போது விவரித்தால் ஓவர் டோசாகிவிடும்
சிவராஜ யோகம்: குரு-சூரியன் சேர்க்கை அல்லது பார்வை.
கிரகங்களின் சேர்க்கை: 10ஆம் அதிபதி பலம் பெற்று
கேந்திரம்/திரிகோணத்தில் இருப்பது ராஜ யோகம் தரும்.
சுருக்கமாக: ஒரு கிரகம் உச்சம், நட்பு ராசி, கேந்திரம்/திரிகோணம் போன்றவற்றில்
வலிமையாகவும்,
நீசம், பகை, அஷ்டம ஸ்தானம் போன்றவற்றில்
பலவீனமாகவும் இருக்கும். இந்த கிரகங்களின் வலிமையே ஜாதகத்தில் யோக, அவயோக பலன்களைத் தீர்மானிக்கிறது.
யோகம் என்பது Luck
அவயோகம் என்பது Unluck
அன்புடன்
வாத்தியார்
அன்புடன்
வாத்தியார்

No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com