Short Cut Astrology -4
குறுக்குவழி ஜோதிடம்-4
நேற்றைய பாடத்தின் தொடர்ச்சி
ராகு & கேது ஆகிய இரண்டு கிரகங்களுக்கும் சொந்த வீடும் இல்லை சொந்த
நாட்களும் இல்வை என்பதை
முன் பாடத்தில் படித்தோம்
ஆனால் தினமும் ராகுவிற்கு ஒன்றரை மணி
நேரமும் கேதுவிற்கு ஒன்றரை மணி நேரமும் ஒதுக்கப் பெற்றுள்ளது
அதை ராகு காலம் என்றும் எம கண்டம் (கேது காலம்)
எனறும் சொல்வோம்
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரைதான்
கிரக பலனுக்கு உரிய காலம
அதில் ராகு மற்றும் கேதுவிற்கு 3 மணிநேரம் கழித்தால் மீதம் உள்ள 9 மணி நேரம்தான் ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்கு உரிய கிரகத்திற்கு கிடைக்கும்
ராகுவும் கேதுவும் தீய கிரகங்கள்
அவர்களுடைய காலத்தில் சுப காரியங்களைச்
செய்யாமல் இருப்பது நல்லது
நாள் --
ராகு காலம்
திங்கள் 07:30 - 09:00
செவ்வாய் 15:00 -
16:30
புதன் 12:00 - 13:30
வியாழன் 13:30 -
15:00
வெள்ளி 10:30 -
12:00
சனி 09:00 - 10:30
ஞாயிறு 16:30 -
18:00
கேது காலத்தின் நேரம்:
இது ராகு காலத்திற்குப் பிறகு வரும்
நேரமாகும். ராகு காலம் காலை
6 -7:30 மணி எனறால் அதற்கு அடுத்து 6 மணி நேரம் கழித்து வரும் 1.5
மணி நேரம் கேது காலம் ஆகும்.
உதாரணமாக, காலை 7.30 முதல் 9 மணி வரை ராகு காலம் என்றால், மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை
கேது காலம் இருக்கும்.
அன்புடன்
வாத்தியார்

No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com