உ
சிவமயம்
Short cut Astrology - 3
முதலில் அடிப்படைப் பாடங்கள்
Basic Lessons
அடிப்படை் பாடங்கள தெரிந்தவர்ள் மீண்டும் ஒரு முறை படியுங்ஙள்
தவறில்லை
புது முகங்கள் கவனமாகப் படித்து
மனதிற்குள் பதிய வைத்துக் கொள்ளுங்கள்
1 கிரகங்கள் -Planets
சூரியன்
சந்திரன்
(இவை இரணாடும் அரச கிரகங்கள்)
செவ்வாய்
புதன்
வியாழன் (குரு,)
வெள்ளி
(சுக்கிரன்)
சனி
ராகு
கேது
மொத்தம் 9 கோள்கள்/கிரகங்கள்
நவ கிரகங்கள் என்போம்
------------------
1 சூரியனை வைத்துத்தான் - ஞாயிற்றுக்
கிழமை (Sun = Sunday)
2 சந்திரனை வைத்து திங்கட் கிழமை (Moon = Monday)
3 செவ்வாய் 4 புதன், 5 குரு, 6 சுக்கிரன், 7 சனி ஆகியவற்றை வைத்துத்தான்
மற்ற 5 கிழமைகளூம்
செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை
இந்த ஏழு கிரகங்களுக்கும் சொந்த
வீடுகளும் உண்டு, காரகத்துவமும் உண்டு.
"காரகத்துவம்" என்பது
ஜோதிடத்தின்படி, ஒரு குறிப்பிட்ட கிரகத்தின்
ஆதிக்கத்தையும்,
அது குறிக்கும் செயல்களையும், பொருட்களையும் குறிக்கிறது.
உதாரணமாக, சூரியன் தந்தை, அரசு, புகழ் போன்றவற்றின் காரகத்துவம் ஆகும்,
சந்திரன் மனம், தாய், உடல் போன்றவற்றின் காரகத்துவம் ஆகும்.
கிரகங்களின் காரகத்துவத்தை
புரிந்துகொள்வது, தனிமனிதர்களின் வாழ்வில்
நடக்கும் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள உதவும்.
கிரக காரகத்துவத்திற்கான சில
உதாரணங்கள்:
சூரியன்: தந்தை, அரசு, அதிகாரம், ஆன்மா, புகழ்
சந்திரன்: தாய், மனம், உடல், உணர்ச்சிகள்
செவ்வாய்: பூமி, சகோதரர்கள், தைரியம், ஆற்றல்
புதன்: புத்தி, கல்வி, வியாபாரம், பேச்சுத்திறன்
குரு: அறிவு, செல்வம், குரு, குழந்தைகள், ஆசிரியர்
சுக்கிரன்: மனைவி, வாகனம், ஆடம்பரம், அழகு, கலை
சனி: கஷ்டங்கள், உழைப்பு, ஆயுள், நீதி
ராகு/கேது: எதிர்ரகசியம்
----------------------------------------------------------------
ராகு மற்றும் கேது கியவற்றிற்கு சொந்த
வீடும் கிடையாது சொந்த கிழ்மைகளும் கிடையாது
ஆனால் அவற்றிற்காக தினமும் ஒன்றரை மணி
நேரம் ஒதுக்கீடு உண்டு அவற்றை
ராகு காலம் கேது காலம் என்போம்
அதன் விபரத்தை இங்கேயே இப்போதே
சொன்னால் ஓவர் டோஸ் ஆகி விடும்
ஆகவே அடுத்த பாடத்தில் அதைப்
பார்ப்போம்
அன்புடன்
வாத்தியார்


No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com