Astrology: நான்காம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்
4th House and placement benefit of its lord
கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:
Placement benefits of planets!
கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!
இப்போது நான்காம் வீட்டையும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்களையும் பார்ப்போம்!
கிரகங்கள் அவ்வாறு அமரும் இடமானது அவற்றின் உச்ச வீடாக அல்லது ஆட்சி வீடாக இருந்தால் சுபமான பலன்கள் உண்டாகும். இதை மனதில் வையுங்கள்!
1.
நான்காம் வீட்டு அதிபதி இலக்கினத்தில் அமர்ந்திருந்தால், ஜாதகன் மாளிகை போன்ற பெரிய வீட்டில் வாசம் செய்வான். நல்ல கல்விமானாக இருப்பான். வாகனங்கள் முதலிய எல்லா செளகர்யங்களையும், சுகங்களையும் பெற்றவனாக இருப்பான்.
2
நான்காம் அதிபதி இரண்டாம் வீட்டில், அதாவது இலக்கினத்திற்கு அடுத்த வீட்டில் இருந்தால், தாயாருக்கு பீடையாகும். ஆனால் தாயாரின் ஆதரவும், அன்பும் முழுமையாகக் கிடைக்கும். கல்விக்குக் குறைவிருக்காது. தாய்வழி உறவினர்களின் ஆதரவு இருக்கும்.
3
நான்கிற்கு உரியவன் மூன்றாம் வீட்டில் இருந்தால் தாயாருக்கு பீடை. அத்துடன் வீடு, வாகனம் குறைபாடுகளும் இருக்கும். அதாவது அவைகள் எல்லாம் கிடைப்பதற்குப் பல தடைகள் உண்டாகும்.
4
நான்கிற்கு உடையவன், நான்கிலேயே இருந்தால் எல்லா நன்மைகளும் உண்டு.
5.
நான்கிற்கு உடையவன், ஐந்தில் இருந்தால், ஜாதகனுக்கு வீடு, மனை, வாகனம் போன்ற வசதிகளுக்குக் குறைவிருக்காது. அத்துடன் ஜாதகன் பல புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை சென்று வருவான். கல்விமானாக இருப்பான்.
6
நான்காம் வீட்டுக்காரன் ஆறில் இருந்தால், தாயாருக்குப் பீடை. வீடு, வாகன முடக்கங்கள் ஏற்படும். ஜாதகன் பல நஷ்டங்களையும், சுகக் கேடுகளையும் அனுபவிக்க நேரிடும்.
7
நான்கிற்கு உரியவன் ஏழில் இருந்தால், தாயாருக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். வீடு, வாகன, சுகம் துக்கம் எல்லாம் சமபலனாகக் கலந்து கிடைக்கும். அதாவது வரும்.போகும்.
8
நான்கிற்கு உரியவன் எட்டில் இருந்தால், தாயாரால், ஜாதகனுக்கு இடையூறுகள், கஷ்டங்கள் உண்டாகும். சனி, ராகு அல்லது கேது இந்த இடத்துடன் சம்பந்தப்பட்டால், ஜாதகனுக்கு அங்கக் குறைபாடு உண்டாகும்.
9.
நான்கிற்கு உரியவன் ஒன்பதில் இருந்தால், ஜாதகன் வீடு, பூமி, வாகனம் உடையவனாக இருப்பான். சுகபோகங்கள் உடையவனாகவும், குலபாக்கியம் உடையவனகவும் இருப்பான்.
10
நான்கிற்கு உரியவன் பத்தில் இருந்தால், வீடு, வாகனம், பூமி விருத்திகள் உண்டாகும். இத்துடன் 9 & 11ம் வீடுகளுக்கு உரியவர்களின் தொடர்பு உண்டானால், புதையலுக்கு நிகரான லாபம் உண்டாகும்.
11
நான்கிற்கு உரியவன் பதினொன்றில் இருந்தால் தாயாருக்குக் கண்டம். ஜாதகன் சுகங்கள் நிறைந்தவனாக இருப்பான். பூமி, மற்றும் வியாபாரத்தின் மூலம் பெருத்த லாபம் உண்டாகும்
12
நான்கிற்கு உரியவன் பன்னிரெண்டில் இருபது நன்மையான அமைப்பு அல்ல! ஜாதகனுக்கு சுகக் குறைவுகள் உண்டாகும். பூமி விரையம், கஷ்டங்கள் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
அன்புடன்,
வாத்தியார்