மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.2.22

ஊசி விழும் சத்தம் கேட்குமா அல்லது கேட்காதா?



ஊசி விழும் சத்தம் கேட்குமா அல்லது கேட்காதா?

 *சில நேரம் கேட்கும்.*

1)ஃபீல்ட் மார்ஷல்n மானேக் ஷா ஒரு முறை அகமதாபாத்தில் ஆங்கிலத்தில் பேச துவங்கினார். "குஜராத்தியில் பேசுங்கள்... நீங்கள் குஜராத்தியில் பேசினால் தான் கேட்போம்." என்று கூச்சலிட்டனர் மக்கள். 

 பேச்சை நிறுத்தி விட்டு தீர்க்கமாக மக்களைச் சுற்றிப் பார்த்தவாறே பதிலளித்தார் ஷா: "நண்பர்களே, என் நீண்ட பணிக்காலத்தில், பல போர்கள் புரிந்திருக்கிறேன். 

ராணுவத்தில் உள்ள ஸீக் ரெஜிமெண்ட் வீரர்களிடம் இருந்து பஞ்சாபி மொழியை கற்றிருக்கிறேன்; மராத்தி மொழியை, மராத்தா ரெஜிமெண்ட்டிடம்; மெட்ராஸ் ஸாப்பர்களிடம் தமிழ்; பெங்காலி ஸாப்பர்களிடம் பெங்காலி மொழி; ஏன் ? கூர்க்கா ரெஜிமேன்ட்டிடம் இருந்து நேப்பாளி மொழியைக் கூட கற்றிருக்கிறேன்.

துரதிஷ்டவசமாக,குஜராத்தில் இருந்து ஒரு வீரர் கூட இல்லை, எனக்கு குஜராத்தி மொழி கற்றுத்தர." என்றார்.

 *தொடர்ந்த* *நிசப்தத்தில்  ஊசி விழும் சப்தத்தை* *கேட்டிருக்க முடியும்.*
2) ஃபிரான்ஸ் நாட்டுக்கு விமானம் மூலம் வந்திறங்கிய 83 வயது அமெரிக்கர் *ராபர்ட் வொய்ட்டிங்,* கஸ்டம்ஸ் அதிகாரியிடம் தன் பாஸ்போர்ட்டை துழாவி எடுத்துக்காட்ட சற்று நேரம் எடுத்துக்கொண்டார். 

இதுதான் ஃபிரான்ஸ் நாட்டுக்கு முதல் முறையாக வருகிறீர்களா.." என்று 
நக்கலாக கேட்டார் அதிகாரி. 

இல்லை முன்பு வந்திருக்கிறேன்.

அப்படியானால், உங்கள் பாஸ்போர்ட்டை தயாராக எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும், உங்களுக்கு." என்றார்.

நான் கடைசியாக வந்த பொழுது, எனக்கு பாஸ்போர்ட் காட்டவேண்டிய அவசியம் ஏற்படவில்லை."

சான்ஸே இல்லை.அமெரிக்கர்கள் இங்கு வந்திறங்கும் பொழுது தங்கள் பாஸ்போர்ட்டுகளை காட்டவேண்டும் என்பது எப்பொழுதுமே உள்ள விதி." உறுமினார் அதிகாரி!

சில வினாடிகள் தீர்க்கமாய் அந்த அதிகாரியைப் பார்த்தவாறே, 
அமெரிக்கர் சொன்னார்:

*இரண்டாம் உலகப் போரின் போது, உங்கள் நாட்டை விடுவிக்க 1944ஆம் ஆண்டு,  ஜூன் 6ம் தேதி, அதிகாலை 04:40 மணிக்கு ஒமஹா கடற்கரையில் நான் வந்திறங்கிய பொழுது,... என் பாஸ்போர்ட்டை காண்பிக்க, ஒரு ஃப்ரெஞ்சுக்காரர் கூட அங்கில்லை."* என்றார்.

*தொடர்ந்த நிசப்தத்தில்,ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.*

3) இந்திய விடுதலைக்குப் பிறகு பிரதமராய் தீர்மானிக்கப்பட்டி
ருந்த நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியைத் தேர்ந்தெடுக்க, ராணுவ உயரதிகாரிகளைக் கூட்டிப் பேசினார்.: 

 *நமக்கு ராணுவத்தை நிர்வகித்து அனுபவம் இல்லாததால், ஒரு ஆங்கிலேய ராணுவ* வீரரையே நம் படைத் தளபதியாக நியமிக்கலாம் என்று நினைக்கிறேன்."

பிரிட்டிஷாரிடம் சேவகம் செய்தே பழக்கப்பட்டிருந்த கூடியிருந்தோர் அனைவரும் ஒத்துக்கொண்டு தலையசைத்தனர். 

ஆனால், நாத்து சிங் ரதோர் எனும் ஒரு ராணுவ உயரதிகாரி தனக்கு பேச சந்தர்ப்பம் கேட்டார். 

சுயமாய் சிந்திக்கும் இந்தப் போக்கை கண்டு துணுக்குற்றாலும்,நேரு பேச அனுமதி அளித்தார்.

சார் நமக்கு நாட்டை ஆளவும்கூட அனுபவம் கிடையாது. நாம் ஏன் ஒரு பிரிட்டிஷ்காரரை, இந்தியப் பிரதம மந்திரியாக நியமிக்கக் கூடாது. ?"

*தொடர்ந்த நிசப்தத்தில் ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.!*

அரூபமான இத்தாக்குதலில் இருந்து சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்டு நேரு கேட்டார்: 

முதல் ராணுவத் தளபதியாக நீ, ஆகிறாயா?"

இல்லை சார். நம்மிடம் மிகுந்த திறமை வாய்ந்த லெஃப்டினெண்ட் ஜெனரல் கரியப்பா இருக்கிறார்.அவர் இப்பதவிக்கு மிகவும் தகுதியானவர்."

இப்படித்தான் கரியப்பா அவர்கள் நம் முதல் ராணுவத் தளபதியானது வரலாறு!

*ஊசிவிழும் சப்தமும் சில நேரம் கேட்கும்.!*  
---------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com