Astrology: ஜாதகியின் கர்ப்பப்பைக் கோளாறுக்கு காரணம் என்ன?
ஒரு இளம் பெண்ணின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகி பூர நட்சத்திரக்காரர். ஜாதகிக்கு குழந்தை இல்லை. மருத்துவமனையில் பரிசோதனை செய்துவிட்டு, கர்ப்பப்பையில் கோளாறு என்று கூறி விட்டார்கள்.
ஜாதகியின் கர்ப்பப்பைக் கோளாறுக்கு காரணம் என்ன?
ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!!!
கும்ப லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சனீஷ்வரன் உச்சமாகி ஒன்பதாம் வீட்டில் உள்ளார். ஜாதகிக்கு கர்ப்பையில் கட்டி. ஆறாம் வீட்டுக்காரன் சந்திரன் 7ல் அமர்ந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருக்கிறான். ஏழாம் வீடுதான் பெண்களின் கர்ப்பப்பைக்கான வீடு. 7ம் வீடு செவ்வாயின் விஷேச பார்வையில் உள்ளது. உடலில் கட்டிகள் தோன்றுவதற்கு செவ்வாய்தான் காரணம். ஏழாம் வீடும் அதில் அமர்ந்திருக்கும் சந்திரனும் செவ்வாயின் பார்வையால் கெட்டிருப்பதுதான் கர்ப்பப்பை கோளாறுக்குக் காரணம்!!!!
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
=============================================
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com