Astrology: கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே!!!!
கீழே அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். மனிதருக்கு அவருடைய தந்தையார் கோடிக்கணக்கான செல்வத்தைக் கொடுத்துவிட்டுப் போயிருந்தார். ஆனால் ஜாதகர் அவருடைய 45வது வயதிற்குள் வியாபாரத்தில் நஷ்டங்கள், கஷ்டங்கள் ஏற்பட்டு எல்லா சொத்துக்களும் கரைந்து காணாமல் போய்விட்டன. அன்றாடம் செல்விற்கே சிரமப்படும் நிலைமைக்கு ஜாதகர் ஆளாகி விட்டார்.
ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?
ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!!!!
அவருடைய ஜாதகம் விரைய ஜாதகம்.
1. சிம்ம லக்கினம். லக்கினாதிபதி சூரியன் 12ல்
2. 10ம் இடத்து அதிபதி (தொழில் ஸ்தான அதிபதி) சுக்கிரனும் 12ல்
3. உடன் கேது.
4. 2ம் வீட்டில் (தன ஸ்தானத்தில்) சனி
5. 2ம் வீட்டிற்கு உரிய புதன் அந்த வீட்டிற்கு 12ல்
6. லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் ஒரு பக்கம் கேது. மறுபக்கம் சனி
7. 22 வதற்கு மேல் வந்த மகா திசைகள் இரண்டுமே வலுவிழந்து நின்றன
மேற்கூரிய காரணங்களால் ஜாதகர் சிரம நிலைக்கு ஆளானார்
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
===================
Sir write some secrets about numerology
ReplyDeleteமுன்பே எழுதியுள்ளேன். தேடிப்பிடித்து படியுங்கள் ராசா!!!!
ReplyDelete