மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.5.20

அன்றாடம் காய்ச்சிக் கூட்டம் யார் தெரியுமா?

அன்றாடம் காய்ச்சிக் கூட்டம் யார் தெரியுமா?

*உலகத்துலயே மிகப்பெரிய 'அன்னாடம் காய்ச்சிக் கூட்டம்' ன்னா... சந்தேகமில்லாம அமெரிக்காகாரன் தான்.*

'சேமிப்பு' ன்றது மருந்துக்குக் கூட கிடையாது. சேர்ந்த மாதிரி ரெண்டு மாசம் கூட அவங்களால வேலையில்லாம சமாளிக்க முடியாது. 90-கள்ள, உலகம் முழுக்க  ஒரு பொருளாதார தேக்கம் வந்தப்போ, அமெரிக்கால நிறைய பேர வேலைய விட்டுத் தூக்குனாங்க. அதுல ஏகப்பட்ட பேர் தற்கொலை பண்ணிட்டான்.

ரெண்டு வருஷம் முன்ன, இங்க நம்ம ஊரு பல் டாக்டர்ட்ட ஒரு நாலுபல்லு வேல பாத்ததுக்கு... 17 ஆயிரம் செலவாச்சு. அதே ட்ரீட்மெண்டுக்கு சென்னையில கேக்கும் போது, 60 ஆயிரம் சொன்னாங்க. அமெரிக்கால இருக்குற சொந்தக்காரப் பொண்ணுட்ட பேசும் போது, அதே ட்ரீட்மெண்டுக்கு அங்க எவ்ளோ ஆகும்னு கேட்டா... பல் டாக்டர்ட்ட பேசிட்டு, அடுத்த நாள் கூப்ட்டு... 21/2 to 3 லட்சம் வரைக்கும் ஆகும்னுது. மேலும், அமெரிக்கால இருக்குற நம்மாளுங்க... எந்தப் பெரிய வைத்தியமும் அங்க பண்ணிக்க மாட்டாங்களாம். மெடிக்கல் இன்ஷூரன்ஸ் மாதிரியான சமாச்சாரங்கள் இருக்குறதால, அந்த பூர்வக்குடிங்க தப்பிச்சுட்டு திரியுது. இல்லன்னா... அனேகம் பேர் செத்து சுடுகாட்டுக்கு போயிருப்பான். அந்தளவுக்கு, மருத்துவ செலவு மட்டுமே அவ்ளோ காஸ்ட்லியாம்.

மத்தபடி... வீடு, கலர் கலரான காருக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இருக்காது. பூராமே லோனு, கிரெடிட் கார்டு தான். காய்கறி மார்க்கெட்ல, தினமும் சரக்கடிக்குற லோடுமேனுக்கு, வாரம் பூரா அட்வான்ஸ் குடுத்துட்டு... வார கடேசில சம்பளம் குடுக்கும் போது மொத்த அட்வான்சையும் புடிச்சுக்குவான். லோடுமேன் கைல பணத்தக் குடுத்துட்டு திருப்பி வாங்குற வேலை எல்லாம் கனவுலயும் நடக்காது. அமெரிக்க ஹைடெக் கூலிகளும்... அதே மானங்கெட்ட பொழப்பு தான் பொழைக்குறாங்க. அவங்களுக்கு நேர் மாறானவங்க நம்மாளுங்க. தயிர் சோத்துக்கு, மட்டை ஊறுகா வரைக்கும் நம்ம அண்ணாச்சிக் கடைலயே வாங்கி பேக்பண்ணிக் கொண்டு போயிடுறாங்க. பாரம்பர்யமாவே நம்ம ஆளுங்களுக்கு சேமிப்பு பழக்கம் இருக்குறதால தான், அங்க இருக்குற நம்ம ஆளுங்க டாப் லெவல்ல இருக்காங்க.

நாமெல்லாம் வெள்ளிக் கிழமைன்னா... பசங்க வேலைக்கு கிளம்பும் போதே, "இன்னைக்கு சாயங்காலம் வரும் போது மாரியம்மன் கோயிலுக்கு போய்ட்டு, பிரசாதம் வாங்கிட்டு வாடா" ன்னு, சொல்லி அனுப்புவோம். பிரசாதம் வாங்கிட்டு வர்றானோ இல்லையோ... அம்மா சொன்னதுக்காக, ஒரேவொரு கோட்டரோட, வீடு வந்து சேருவான். ஆனா அதுங்க... வெள்ளிக்கிழம காலைல வேலைக்குக் கிளம்பும் போதே, 'பார்ட்டி டிரெஸ்' ன்னு சொல்லி ஒரு ஜட்டி, பனியன மஞ்சப்பையில சுத்திக் கொண்டு போயிரும். சாயங்காலம், ஆபீஸ் பாத்ரூம்ல அப்டியே துணிய மாத்திட்டுப் போய் பாருக்குள்ள பூந்ததுன்னா... ஞாயித்துக் கிழம நடுஜாமத்துல, ஒரு பத்திருபது உருப்படிகள ஒன்னா JCB-ல வழிச்சுத் தூக்கி டிப்பர்ல போட்டு... ஒவ்வொரு வீடா கொண்டாந்து தூக்கி விட்டுட்டுப் போவாங்க. மிகப் பெரிய நிறுவனங்கள்ள வேலை பாக்குற அமெரிக்கனும் சரி, நம்மவூருல சனிக்கிழமை சம்பளம் வாங்குற தண்ணிவண்டி கொத்தனாரும் சரி... ரெண்டுபேரு பொழப்பும் ஒன்னு தான்.

திங்கக்கிழம காலைல, அரை டீ-க்கு... டீ-கடக்காரன்ட்ட, 'ஆத்தா அம்மா'ன்ற வார்த்தைய கேட்டுட்டு நிப்பான்

சரி விஷயத்துக்கு வருவோம். இப்ப அங்க அத்தனாயிரம் பேர் செத்துட்டு இருக்கான்... ஆனா இந்த பயலுவ, லாக்டவுன கேன்சல் பண்ணனும்னு போராட்டத்த ஆரம்பிச்சுட்டாங்க. சரி இங்கயாவது மனிதாபிமானம் இருக்கு, ஆளாளுக்கு போட்டி போட்டு, தேடிக் கொண்டு போய் சாப்பாடு குடுக்குறாங்க. அங்க, அவனவன் பொழப்பே நாறிட்டு கிடக்கு.  பீரோ நிறைய சரக்கு பாட்டில் தான் அடுக்கி வெச்சிருப்பான். பெரும்பாலும் ரெடிமேட் புட் தான். பூராம் காலி ஆயிருக்கும். சுட்டுப் போட்டாலும் சமைக்க வராது. அங்க எவனும் அன்னதானமும் பண்ண மாட்டான். போராடாம என்ன செய்வான் ? உலகத்துலயே, காஸ்டலியான ஹைடெக் பிச்சக்காரன்னா... அது அமெரிக்கன் தான் !!!
பகிர்வு
-----------------------------------------------------
படித்து அதிர்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3 comments:

  1. Good morning sir its real shocking to hear thanks sir for your valuable information vazhga valamudan

    ReplyDelete
  2. தங்களின் இந்த பதிவு என்னை சற்றே சிந்திக்க வைத்தது. இதை வைத்து ஒரு பதிவு போட்டுளேன். தங்களின்பெயரும் அந்த பதிவில் உள்ளதால் அந்த பதிவின் தொடர்பை தமக்கு அளிக்க கடமை பட்டுளேன்.

    https://vishcornelius.blogspot.com/2020/05/blog-post_20.html

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com