மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.5.20

Astrology: ஜோதிடம். ஹீரோவும் வில்லனும்!!!!

Astrology: ஜோதிடம். ஹீரோவும் வில்லனும்!!!!  

“சார், நான் ரிஷப லக்கினக்காரன்.சுக்கிரன் எனக்கு லக்கினாதிபதி.அத்துடன் அவனே ஆறாம் இடத்திற்கும் அதிபதி.அவன் என்னுடைய ஜாதகத்தில் 12ல்இருக்கிறான். அதாவது விரையத்தில் மறைந்து விட்டான்.ஆனால் நவாம்சத்தில் அவன் உச்சம் பெற்றுள்ளான்.அவன் எனக்கு ஹீரோவா? அல்லது வில்லனா?”

“இரண்டும்தான்.இரண்டு இடங்களுக்கு அதிபதி என்னும்போது, அவன் இரண்டையுமே செய்வான்.”

“விளங்கவில்லையே  சார்! ஒன்று ஹீரோ என்று சொல்லுங்கள்.அல்லது வில்லன் என்று சொல்லுங்கள்.ஏதாவது ஒன்றுதானே உண்மையாக இருக்கும்”

“உங்கள் வீட்டிற்கு நீங்கள் பிள்ளை. உங்கள் மாமனார் வீட்டிற்கு நீங்கள் மாப்பிள்ளை.அதில் ஏதாவது ஒன்றுதான் உண்மையா? அல்லது   இரண்டுமே உண்மையா?”

“இரண்டுமே உண்மைதான்”

“அப்படித்தான் அதுவும்.உங்கள் லக்கினத்திற்கு அவன் ஹீரோ.   ஆறாம் வீட்டுக் காரியங்களுக்கு அவன் வில்லன். இரண்டு வீட்டு வேலைகளையுமே அவன் கச்சிதமாகச் செய்வான். ஹீரோ என்பதால் வில்லன் வேலையை விட்டுக் கொடுக்க மாட்டான்.இது எல்லாக் கிரகங்களுக்கும் பொதுவான குணம்.”

“சரி, எப்போதுசெய்வான்?”

“தனது மகாதிசை, மற்றும் புத்திகளில் செய்வான்”

“ஒரே தசாபுத்தியில் அவன் இரண்டு வேலைகளையும் எப்படிச் செய்ய முடியும்? ஏதாவது ஒன்றைத்தானே செய்ய முடியும்?அடுத்து எனக்கு சுக்கிரபுத்தி வரவுள்ளது. அந்த புத்தியில் அவன் நன்மையைச் செய்வானா அல்லது தீமையைச் செய்வானா என்று எப்படித் தெரிந்து கொள்வது”

“இங்கே கோள்ச்சாரம் உங்களுக்கு உதவும்.கோளாசாரச் சுக்கிரன் அல்லது சம்பந்தப்பட்ட கிரகத்தின் அன்றைய இருப்பிடம் (by placement) மற்றும் பார்வை (aspect) எந்த வீட்டின் மேல் விழுகிறதோ அந்த வீட்டிற்கான பலன்கள் கிடைக்கும். உதாரணத்திற்கு இன்றையத் தேதியில் சுக்கிரன் கோச்சாரப்படி எங்கே இருக்கிறான் என்று படத்துடன் கீழே கொடுத்துள்ளேன். அதைப் பாருங்கள். இன்றையச் சுக்கிரன் விருச்சிகத்தில் இருந்து கொண்டு உங்களுடைய லக்கினத்தைப் பார்க்கிறான். இப்போது அவனுடைய புத்தி உங்களுக்கு நடந்தால் அது நன்மையானதாக இருக்கும். இப்படித்தான் பார்க்க வேண்டும்.விளக்கம் போதுமா?”



“இது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிற வேலையாக இருக்கிறதே! குறுக்குவழி இல்லையா?”

“இருக்கிறது. அஷ்டகவர்க்கப் பாடம் நடத்தியுள்ளேன். அதில் சொல்லித் தந்துள்ளேன்.”

---------------------------------------------------------------------
1. மேஷ லக்கினத்திற்கு வில்லன் புதன் (6th Lord) அதோடு அவனே மூன்றாம் இடத்திற்கும் அதிபதி
2. ரிஷப லக்கினத்திற்கு வில்லன் சுக்கிரன் (6th Lord) அதோடு அவனே லக்கினாதிபதியும் ஆவான்.
3. மிதுன லக்கினத்திற்கு வில்லன்செவ்வாய் (6th Lord) அதோடு அவனே லாபாதிபதியும் (11th Lord) ஆவான்.
4. கடக லக்கினத்திற்கு வில்லன் குரு (6th Lord) அதோடு அவனே பாக்கியாதிபதியும் (9th Lord) ஆவான்.
5. சிம்ம லக்கினத்திற்கு வில்லன் சனி (6th Lord) அதோடு அவனே ஏழாம் வீட்டிற்கு அதிபதியும் (7th Lord) ஆவான்.
6. கன்னி லக்கினத்திற்கு வில்லன் சனி (6th Lord) அதோடு அவனே ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியும் (5th Lord) ஆவான்.
7. துலா லக்கினத்திற்கு வில்லன் குரு (6th Lord) அதோடு அவனே மூன்றாம் வீட்டிற்கு அதிபதியும் (3rd Lord) ஆவான்.
8. விருச்சிக லக்கினத்தற்கு வில்லன் செவ்வாய் (6th Lord) அதோடு அவனே லக்கினத்திற்கும் அதிபதி ஆவான்.
9. தனுசு லக்கினத்திற்கு வில்லன் சுக்கிரன் (6th Lord) அதோடு அவனே லாபாதிபதியும் (11th Lord) ஆவான்.
10. மகர லக்கினத்திற்கு வில்லன் புதன் (6th Lord) அதோடு அவனே பாக்கியாதிபதியும் (9th Lord) ஆவான்.
11. கும்ப லக்கினத்திற்கு வில்லன் சந்திரன் (6th Lord)
12. மீன லக்கினத்திற்கு வில்லன் சூரியன் (6th Lord)
-----------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
=====================================================

8 comments:

  1. Good morning sir very nice thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. ஐயா வணக்கம்
    எளிமை, இனிமை ......
    மனதில் நின்றது.
    நன்றி

    ReplyDelete
  3. ரிஷப லக்கினத்துக்கு 12 ல் சுக்கிரன் அமர்ந்தால் அங்கு மேஷத்தில் சூரியன் பாதம் 1 மட்டுமே உள்ளது. அப்படிஇருக்கையில் எப்படி மீனத்தில் உச்சம் ஆக முடியும் விளக்குங்கள் ஐயா நன்றி

    ReplyDelete
  4. வணக்கம் குருவே,
    வெளிநாட்டில் எங்கள் பெண்ணின்
    வீட்டில் தங்கி ஒரு மாதம் வளர்ச்சியுள்ள புதிய வரைப்
    பேண உள்ளதாலும் பின்னூட்டங்கள்
    எழுத இயலாதிருதந்தநு என்பதைத்
    தெரிவித்துக் கொள்கிறேன் ஆசானே!
    இன்றைய ஜோதிட பாடம் கவனத்தில் கொள்ள ஏற்றது!

    ReplyDelete
  5. ////Blogger Kannan L R said...
    ஐயா வணக்கம்
    எளிமை, இனிமை ......
    மனதில் நின்றது.
    நன்றி//////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  6. /////Blogger Sivakumar said...
    ரிஷப லக்கினத்துக்கு 12 ல் சுக்கிரன் அமர்ந்தால் அங்கு மேஷத்தில் சூரியன் பாதம் 1 மட்டுமே உள்ளது. அப்படிஇருக்கையில் எப்படி மீனத்தில் உச்சம் ஆக முடியும் விளக்குங்கள் ஐயா நன்றி//////

    பதிவை நன்றாக மீண்டும் ஒருமுறை படியுங்கள். அம்சத்தில் உச்சம் என்றுதான் அன்பர் சொல்லியுள்ளார்

    ReplyDelete
  7. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே,
    வெளிநாட்டில் எங்கள் பெண்ணின்
    வீட்டில் தங்கி ஒரு மாதம் வளர்ச்சியுள்ள புதிய வரைப்
    பேண உள்ளதாலும் பின்னூட்டங்கள்
    எழுத இயலாதிருதந்தநு என்பதைத்
    தெரிவித்துக் கொள்கிறேன் ஆசானே!
    இன்றைய ஜோதிட பாடம் கவனத்தில் கொள்ள ஏற்றது!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  8. /////Blogger Shanmugasundaram said...
    Good morning sir very nice thanks sir vazhga valamudan////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com