மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.12.19

எவை நல்ல விஷயம்?

எவை நல்ல விஷயம்?

நான் தொலைகாட்சிகள் பார்ப்பதை நிறுத்தி மூன்று வருடங்களாகி விட்டது.

முப்பது வருடமாக இடைவிடாமல் படித்து வந்த ஜூனியர் விகடன்,
ஆனந்த விகடன்,தின மலர்,தினகரன்  மற்றும் குமுதம் படிப்பதையும்
நிறுத்தி விட்டேன்.

இது ஏதோ தற்சயலாக நடந்தது தான்.அனால் இவை எல்லாவற்றையும் நிறுத்திய பின் நாடு திடீர் என  அமைதி பூங்காவாக திகழ்கிறது.எதிர்மறை எண்ணங்கள் குறைகின்றன."நல்ல நேரம்" நிறைய கிடைக்கிறது.பிடித்த சரித்திர புத்தகங்களை தேடி படிக்க முடிகிறது.தேவைப்பட்ட தகவல்கள் மற்றும் நல்ல பல விஷயங்களை கூகுள் செய்து படித்து, பார்த்து ரசிக்க முடிகிறது.

டிவி ஒரு idiot box என்று சொன்ன மகானை தேடி கொண்டு இருக்கிறேன்
நான்  மாலை போடுவதற்கு.

டிவி தான் ,  நீங்கள் என்ன நினைக்க வேண்டும்,என்ன பார்க்க வேண்டும்  என்பதை முடிவு செய்கிறது.அவைகளும் வியாபாரிகளே.விளம்பர இடைவேளை என்பது வெளியில் தெரியும் விளம்பரங்கள்.செய்தி என்ற போர்வையில் தனக்கு வேண்டப்பட்ட கட்சிக்கு மறைமுகமாக  ஜால்ரா
தட்டும் ஊடகங்கள் தமிழகத்தில் பெருத்து விட்டது.எல்லாமே இன்று underground dealing  தான். நமக்கு புரிய சில வருடங்கள் ஆகும்.அவ்வளவு தான்

எவ்வளவோ நல்ல விஷயங்கள் facebook, whatsapp களினால் தெரிவிக்கபடுகிறது.ஆனால்,தமிழ் டிவி மற்றும் பத்திரிக்கைகள் எதுவும் அதை ஒளிபரப்புவது இல்லை.  எதற்கும் உதவாத விவாதங்களை நடத்தி கொண்டு அரசியல்வாதிகளுக்கு விளம்பர இடைவேளை கொடுத்து
கொண்டு இருக்கிறது. ஒரு காலத்தில் யாருக்குமே தெரியாத  மனுஷ்ய புத்திரன்,சீமான்,தமிழன் பிரசன்னா,ஜகத் கஸ்பர், பியுஸ்,ஜோதி மணி
மற்றும் நமது  சிரிப்பு அருணன்  போன்றோரை விவாதம் என்ற பெயரில்
அமர வைத்து யார் லூசு என்று தரக்குறைவாய் திட்டி பட்டிமன்றம் நடத்தி  பிரபல படுத்தி பின்  பணமுடிப்பு கொடுத்து அனுப்பும் டிவி சேனல்கள் முட்டாள்களா? பார்க்கும் நாம் முட்டாள்களா?   இதில் ஒரு முக்கிய கட்சி சார்பாக ஒரே மாநிலத்தில் ஐந்தாறு டிவி சேனல்கள் வேறு. கலாசார சீர்கேடான,அரை வேக்காட்டு  சீரியல்கள்,தமிழர்களை இன்னும்
முட்டாள்கள் என்றே அந்த சேனல்கள்   நினைத்து வருவது வெட்க கேடு.தமிழன் தன்பெருமைகளை மறந்து வருகிறான்.நம் திருக்குறள் உலகங்கும் செல்லும்.ஆனால் நாம் இங்கு சீரியலில் மூழ்கி கிடப்போம்.இன்றைய தமிழ்நாடு, உண்மையான தமிழ்நாடா?

அறுபது வருட திராவிட நாத்திக அசிங்க  அரசியல் நம் நாயன்மார்களையும்,ஆழ்வார்களையும் மறக்க அடிக்க முயன்று கொண்டிருக்கிறது.நல்ல விஷயங்களை, அது குரான் ஆகட்டும்
அல்லது பைபிள் ஆகட்டும் அல்லது தேவார,திரு வாசக மாகட்டும்
இன்றைய தமிழர்கள் எத்தனை பேர் தேடி  படிக்கிறார்கள்? படித்தால்,
டிவி சீரியல் பார்க்க மனம் ஒப்பாது.

மீடியா காரர்களிடம் போட்டி மனப்பான்மை வேறு .வியாபார போட்டி .
இன்று ஆழ்குழாய் குழியில் விழும் குழந்தைகளை லைவ் டெலிகாஸ்ட் செய்ய போட்டி போடும் மீடியா அந்த குழந்தை இறந்த பின் அது போல் தமிழ்நாடு எங்கும் இருக்கும் ஆழ்குழாய்  குழிகளை தேடி  மூட எந்த வித முயற்சியும் தன சேனல் மூலம் செய்ய முயல்வதில்லை.பரபரப்பு ஒன்றே போதுமானது.மீடியா மேதாவிகளுக்கு என்றுமே இறந்தால் தான் நற்செய்தி.சாவும் சாதிக்கு சாதி வித்தியாசபடுத்த படுகிறது.

sensational news அதிகம் பார்த்து மனித மனம் இன்று பரபர என தான்  அலைகிறது.இதுவும் ஒரு மனோ வியாதி தான்.ஒரு வித பயத்தையும் உருவாக்குகிறது.

நீங்கள் உண்ணும் உணவு என்னவோ அதை போல் தான் உங்கள் நடத்தை,குணம் எல்லாம்  அமையும் என்பதை போல் நீங்கள் பார்க்கும்
வக்கிர டிவி செய்திகள் உங்கள் குணத்தை ஒரு நாள் கெடுக்கவும் செய்யும்.பொறுப்பு கேட்ட மீடியா தான் இன்று நம்மை ஆள்கிறது.
தயவுசெய்து அதை தவிருங்கள்.வாழ்க்கை இனிப்பாகும்.அமைதி ஆகும்.சொந்தமாக சிந்திபீர்கள்.

எல்லாவற்றையும் Exaggerate செய்து காட்டும்  மன நிலை ஊடக
நபர்களுக்கு கை வந்த கலை.அவர்கள் பெண்களை என்றுமே ஒரு போக பொருளாக தான் காட்டி வருகிறார்கள்.சில செய்தி பத்திரிக்கைகளில் கற்பழிப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களுக்கு கொடுக்க  படுவதில்லை.

அடுத்த பிரச்சினை, பிரபலமாக ஆக , சில பைத்தியங்கள் வேறு.....
மேடையில் ஏதோதோ உளறி கொட்ட வேண்டியது. அது உடனே
sensational news........சமீபத்தில் கூட ராஜீவ் விவகாரம்.கேட்டவுடன்
தலை சுற்றியது........கொல்வது இங்கு வீரமா?

வீட்டில் நூலகங்கள் வையுங்கள்.தினமும் ஒரு மணி நேரமாவது
நல்ல புத்தகங்களை தேடி  படியுங்கள்.

முடிந்தால் தொலைகாட்சியை மார்வாடி கடையில் அடமானம் வைத்து
நல்ல புத்தகங்களை வாங்கி  படியுங்கள். முக்கிய செய்திகளை இன்று ரேடியோவிலோ அல்லது இன்டர்நெட் மூலமாகவோ  தேவை ஆன
அளவு அறிந்து  கொள்ளுங்கள்.அது நமக்கு போதுமானது.

நிறைய நேரம் இருந்தால், அநாதை  குழந்தைகளுக்கு உதவுங்கள்.கல்வி கொடுங்கள்.உணவு கொடுங்கள்.இறைவனின் பொற்பாதங்களில் நேரத்தை செலவிடுங்கள்.
------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Good morning sir excellent thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. very nice super article I am also stop all the magazines and reduce TV watching

    ReplyDelete
  3. ////Blogger Shanmugasundaram said...
    Good morning sir excellent thanks sir vazhga valamudan////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  4. /////Blogger veegan65 said...
    very nice super article I am also stop all the magazines and reduce TV watching////

    நல்லது. நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  5. ////Blogger kmr.krishnan said...
    Nice advice////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com