மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.6.19

Astrology: ஜோதிடம்: இயற்கைக்கு மாறாக கிடைக்கும் யோகம்!


Astrology: ஜோதிடம்: இயற்கைக்கு மாறாக கிடைக்கும் யோகம்!

Vipareetha Raja Yoga

விபரீத ராஜயோகம்

(Reversal of Fortune)

அதென்ன ஸ்வாமி விபரீதம்?

விபரீதம் என்பது சாதாரணமாக இல்லாததும், தவறானதும் ஆகும். விசித்திரமானதாகும்

நடக்கக்கூடாதது நடந்துவிட்டால், அதுவும் இயற்கைக்கு மாறாக நடந்துவிட்டால் அதை விபரீதம் என்போம்.

அதைப்போல கிடைக்கூடாத ராஜயோகம் விபரீதமாகக் கிடைத்து விட்டால் அது விபரீத ராஜயோகம்!

அது ஜாதகத்தில் எப்படி ஏற்படும்? அதன் பலன் என்ன?

இன்று அதை விவரித்து எழுதியுள்ளேன். படித்துப் பயனடைய வேண்டுகிறேன்.
--------------------------------------------------------------------
ராஜயோகம் என்பது அதிகாரம் மற்றும் உயர்வான நிலைக்கு ஜாதகனை உயர்த்தும் யோகம் ஆகும். கேந்திர மற்றும் திரிகோண அதிபதிகள் தங்களின் சேர்க்கையால் (கூட்டால்) அல்லது பார்வையால் உருவாக்கிக் கொடுப்பது ராஜயோகம்  ஆகும். அதற்குச் சிறந்த உதாரணம் ”தர்மகர்மாதிபதி யோகம்” 9ஆம், 10ஆம் அதிபதிகளின் சேர்க்கையால் அந்த யோகம் ஏற்படும். அவர்களின் பரிவர்த்தனையாலும் அது ஏற்படும். அதனால் ஜாதகனுக்கு அதீத செல்வமும், செல்வாக்கும், பதவியும் அதிகாரமும் கிடைக்கும்.

The tenth house in the horoscope stands for what we do in life, and the ninth house shows what we should do in life. When the lords of these two houses meet by conjunction, mutual reception (parivartan), or mutual aspect, the planetary combination as Dharma Karma Adhipati Yoga. As soon as a Raja yoga of this prominence shows up in a chart, it is natural  to anticipate obtaining lots of wealth and power.

மேலே குறிப்பிட்டுள்ளது வழக்கமான ராஜ யோகத்திற்கு உதாரணம்!ஆனால் விபரீத ராஜயோகம் என்பது வழக்கமான ராஜயோகங்களில் இருந்து மாறுபட்டது.

எப்படி மாறுபட்டது?

அனுஷ்கா சர்மா அல்லது பிரியா மணி போன்ற அழகான பெண்ணை நீங்கள் தேர்வு செய்து, கெஞ்சிக்கூத்தாடி, சம்மதிக்க வைத்து, நீங்கள் திருமணம் செய்து கொண்டால், அது வழக்கமான ராஜ யோகம்

ஆனால், அதே அனுஷ்கா சர்மா அல்லது பிரியா மணி போன்ற அழகான பெண்கள், அவர்களாகவே முன்வந்து, உங்களிடம் கெஞ்சிக்கூத்தாடி,
மன்றாடி, உங்களைத் திருமணம் செய்து கொண்டால் அது விபரீத ராஜயோகம்

இன்னும் விளக்கமாகச் சொன்னால், பிரிட்டீஷ்  அரச குடும்பத்தினரே முன் வந்து அவர்கள் வீட்டுப் பெண்ணை,உங்களுக்குத் தாரை வார்த்துக்  கொடுப்பதாகச் சொன்னால், அது விபரீத ராஜ யோகம்.

உதாரணங்கள் போதுமா?
------------------------------------------------------------------
The vipareeta rajayogas are somewhat different from the normal  rajayogas as mentioned above. These rajayogas are formed due to downfall of someone, based on which the native's fortune is reversed. The downfall can be of an enemy or a someone near to the native,
however the combinations are somewhat different for both circumstances.

இந்த விபரீதம் என்னும் சொல், மாறுபட்டு வருவதைக் குறிக்கும். The term vipareeta imply reversal of something

ஒன்றின் வீழ்ச்சி, அல்லது ஒருவரின் வீழ்ச்சி, உங்களுக்கு சகாயமாகிக் கிடைப்பதுதான் விபரீத ராஜயோகம்.

”அண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்பக் காலியாகும்?” என்று கிராமங்களில் கூறுவார்களே, அதை நீங்கள் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

மிதுன லக்கின ஜாதகத்தின் 12ஆம் வீட்டில் சுக்கிரனும், சனியும் ஒன்றாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைந்து, உரிய நேரத்தில் திருமணமாவதும் தடைபட்டு, விரும்பும்
அளவிற்கு ஒரு மங்கை நல்லாளும் ஜாதகனுக்குக் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்ளூங்கள். அப்படிப்பட்ட நேரத்தில், ஜாதகனின் எட்டாம் வீட்டு அதிபதி சனி 12ல் இருப்பதால் (ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி இன்னொரு துஷ்ட ஸ்தானத்தில் அமர்வது) அவர் சுக்கிரனின் பென்டை நிமிர்த்தி, ஜாதகனின் திருமணத்தை உரிய நேரத்தில் நடத்தி வைப்பதுடன், மயக்கும் அழகுள்ள மங்கையையும் அவனுக்குப் பிடித்துக் கொடுத்து விடுவார்.அதுதான் விபரீத ராஜயோகம்

பெண்ணை உதாரணமாகச் சொன்னால்தான் சிலருக்கு மண்டையில் சுறுசுறுப்பாக ஏறும் என்பதற்காக இதைச் சொன்னேன்.

பணம், வேலை, பதவி, செல்வாக்கு என்று எதற்கு வேண்டுமென்றாலும் இந்த யோகம் ஒத்துவரும். அது அங்கே போய் அமரும் துஷ்டனையும், அவன் அடித்து வீழ்த்தும் சம்பந்தப்பட்ட அதிபதி அல்லது காரகனையும் பொறுத்து உண்டாகும்.
---------------------------------------------------------------------------------
துஷ்ட ஸ்தானம் என்பது 6, 8, 12ஆம் வீடுகளைக் குறிக்கும். 3ஆம் வீட்டையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்

ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

உதாரணத்திற்கு, சிம்ம லக்கினத்திற்கு, சனி 6ஆம் இட அதிபதி. அவர் ஜாதகனின் 12ஆம் வீட்டில் (கடகராசியில்) சந்திரனுடன் இருந்தால், அது வி.ரா.யோகம் ஆகும்!

சுருக்கமாகச் சொன்னால் 3, 6, 8, 12ஆம் அதிபதிகளில் இருவர், அந்த வீடுகள் ஒன்றில் கைகோர்த்துக் கொண்டு இருந்தால், அது விபரீத ராஜயோகம் ஆகும். கிடைக்காததை, அவர்கள் கிடைக்க வைப்பார்கள்.
---------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

 1. நான் தனுசு லக்கினம்
  12 ஆம் லக்கின அதிபதி செவ்வாயும்
  6 ஆம் வீட்டு அதிபதி சுக்கிரனும்
  8 ஆம் வீட்டு அதிபதி சந்திரனும்

  5 ஆம் இடமான மேஷத்தில் இருக்கின்றார்கள் .

  எனக்கு விபரீத ராஜ யோக விதி பொருந்துமா ?

  ReplyDelete
 2. வணக்கம் ஐயா
  நீங்கள்
  10.5.19 Astrology: ஜோதிடம்: ஒன்றிற்கு இரண்டு ஏன்?
  பாடத்திற்கு பதில் என்ன என்று இன்னும் கூறவில்லை,
  தயவு செய்து பதில் கூ றவும்

  ReplyDelete
 3. WELCOME back sir,

  We were worried about your health.

  By God's grace, you are ok now.

  Let us restart with a BIGBANG.

  Thanks

  V Narayanan
  Puducherry

  ReplyDelete
 4. வாத்தியார் அவர்களுக்கு வணக்கம்
  முதலில் தங்களின் உடல் நலம் குறித்து விசாரித்து கொள்கிறேன்
  தாங்கள் நீண்ட நாளுக்கு பிறகு வரகுப்பறைக்குள் வந்ததில் மகிழ்ச்சி இன்றய பாடம் நன்றாக இருந்தது நன்றி

  ReplyDelete
 5. Respected Sir,

  HARE KRISHNA!!! pleasant morning.... welcome back to classroom....

  God bless you all....

  Have a nice day,

  With regards,
  Ravi-avn

  ReplyDelete
 6. வணக்கம் குருவே,
  வாத்தியார் வந்தாச்சு!💐
  மிகவும் அழகாகப் படம் பிடித்தது போலத் தெள்ளத் தெளிவாக தங்களது வழக்கமான எளிய உதாரணங்களுடன் விளக்கம் கொடுத்துள்ளீர்கள்!
  நன்றி ஆசானே!👌

  ReplyDelete
 7. Very good explanation. The resilt for one puzzle is pending Sir.

  ReplyDelete
 8. ஆசிரியர் நீண்ட இடைவெளிக்குப்பின் நோயிலிருந்து மீண்டு வந்தது மகிழ்ச்சி.
  விபரீத ராஜயோகம் முழுமையாக ஏற்பட, 6, 8, 12 என்ற துர்ஸ்தான அதிபதிகள் மூவரும் சேர்ந்து அந்த துர் ஸ்தானங்களில் ஒன்றிலோ, அல்லது அந்த மூன்று துர்ஸ்தானங்களிலும் பரவியோ அமர வேண்டும். அவர்களே ஸ்பாவ சுபர்களாக இருப்பது, அல்லது வேறு ஸ்பாவ சுபர்கள் சம்பந்தப் படுவது, மேம்பட்ட பலன் கொடுக்கும்.
  பல ஜாதகங்களில் அந்த மூவரில் இருவர் மட்டும் இணைந்து அவர்களின் ஒரு துர்ஸ்தானத்தில் இருப்பதை பார்க்க முடியும். ஆனால், அந்த ஜாதகர் யாவருக்கும் விபரீத ராஜயோகம் கிடைப்பது இல்லை.
  அன்புடன்: ஃபெர்னாண்டோ

  ReplyDelete
 9. வணக்கம் வாழ்க நலமுடன் ஓம் நமசிவாய சிவா

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com