Humour: நகைச்சுவை: சேதாரம் செய்கூலி இல்லாமல் கிடைத்த நகை!
நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள்!
--------------------------------------------------
1
தன் சட்டைப் பையினுள் இருந்து அழகான புதிய செல் போனை எடுத்த அந்த இளைஞன்
கடற்கரையில் அமர்ந்திருந்த காதலியிடம் நீட்டி சொன்னான்....
" அன்பே ! இந்த செல் போன் உனக்குத் தான் . வைத்துக் கொள். "
பளபளப்பான அந்த செல் போனை வைத்த கண் வாங்காமல் பார்த்த காதலி அவனை முத்தமிட்டு
கேட்டாள்.
" இது எனக்குத் தானா? என் மீது இவ்வளவு அன்பா? விலை அதிகமாக இருக்குமே ! எங்கே
வாங்கினீர்கள்? "
காதலன் சிரித்துக் கொண்டே பதிலளித்தான் " இது வாங்கியதில்லை. ஓட்டப் பந்தயத்தில் பரிசாகக்
கிடைத்தது. "
தன் காதலன் ஓட்டப் பந்தய வீரன் என்பதை அறிந்து இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் மீண்டும்
முத்தமிட்டு கேட்டாள்.
" ஓட்டப்பந்தயத்தில் எத்தனை பேர் ஓடினீர்கள் டார்லிங்? "
காதலன் பெருமையாகச் சொன்னான்.
*" மூன்று பேர். நான், செல்போன் கடைக்காரன், ஒரு போலீஸ்..."*
---------------------------------------------------------
2
உலகத்தையே ஒரு கலக்கு கலக்கனும்னு ஆசை
but
அந்த கரண்டித்தான் எங்க இருக்கூனு தெரியல்ல
😜😜😜😜😜😜😋😋
-----------------------------------------------------------
3
🕺🏻 ''டேய்..ஓடாதே..
நில்ரா..
எதுக்குடா
இவளை தூக்கிட்டு ஓடறே ?''
''நீங்கதானே சார் சொன்னீங்க.
விளையாட்டு விழா ஆரம்பிக்கறதுக்கு முன்னால , ஜோதியைத் தூக்கிட்டு ஓடணும்னு '' 🏃🏻
---------------------------------------------------------------
4
🤔 "(என்ன இவ! இன்னக்கி இட்லில இவ்ளோ ஓட்ட போட்டு வச்சுருக்கா😐)"
"என்னங்க இடியாப்பம் எப்டி இருக்கு"
"(ஆத்தி இடியாப்பமா இது😳😭) சூப்பர் செல்லம்👌😀"
---------------------------------------------------------------
5
👻 ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி
அமைவாள்.
.
கோபு : யோவ் அது மச்சம் இல்லய்யா 'சூடுய்யா" - அதை வச்சதே என் மனைவி 😉😉😉
-----------------------------------------------------------------
6
சார்! நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா.....?
கல்யாணத்துக்கு முன்னாடிதான் சொல்லுங்களேன்.....
கல்யாணத்துக்கு முன்னாடி,
எனக்கு முருகனைத்தான்
ரொம்பப் பிடிக்கும் .....
அப்போ பின்னாடி.....?
அட,
அதை ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம்
நான் வேண்டாத தெய்வமே
இல்லை.....!!!
--------------------------------------------
7
சத்தியவான் சாவித்திரி .....
தன் கணவனை.....
எமதர்ம ராஜாவிடமிருந்து
தன் தந்திர வரங்களால்
கடுமையாகப் போராடி மீட்டாள்.....
கதையின் கருத்து :--
ஒரு புருஷனை...
பொண்டாட்டிகிட்ட இருந்து .....
எமதர்மனால கூட
காப்பாத்த முடியாது.....!!!
-----------------------------------------------------
8
மனைவி:
ஏங்க! உங்களைக்
கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு
என் புத்தியை
செருப்பாலத்தான்
அடிச்சுக்கோணும்.....!
கணவன்:
செருப்பு இந்தா இருக்கு.....!
புத்திக்கு எங்கே போவ!!??
-----------------------------------------------------
9
கணவன்:
"என்ன சமைச்சிருக்கே ...?
சாணி வரட்டி மாதிரி இருக்கு...
நல்லாவேயில்லை"....
மனைவி:
"கடவுளே! .....
இந்த மனுஷன்
இன்னும் என்னவெல்லாம்
சாப்பிட்டுப் பார்த்திருக்காரோ.....?
தெரியலையே... ஏ...ஏ... ஏ....." !
--------------------------------------------------
10
மனைவி என்பவள் திருக்குறள் போன்றவள்.....
அடேங்ங்ங்ங்ங்ங்ங்கப்பா! எவ்வளவு அதிகாரங்கள்.
😳😳🙄
-----------------------------------------------------
11
🤒 நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும்,
🤕 மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்..
-----------------------------------------------------
12
😱 மனைவி : என்னங்க பக்கத்து வீட்டில பெரிய சண்டை நடக்குது. போய் ஒரு தடவை என்னன்னு
பார்த்துட்டு வாங்களேன்.
😜 கணவன் : ஏற்கனவே ஒரு தடவை போனதுக்குத்தான் சண்டையே நடக்குது 😍 😜
--------------------------------------------------------
13
🙋🏻♂ தக்காளி சோறு பிரியாணி மாதிரி இருந்தா அது அம்மா சமையல்!
💁🏻♂ பிரியாணியே தக்காளி சோறு மாதிரி இருந்தா அது பெண்டாட்டி சமையல்!
😤 சாப்பிட்ட உடனே வாந்தி வந்துச்சுன்னா அது லவ்வர் சமையல்!
😂😂
--------------------------------------------------------
14
💰 பர்ஸ்ல உள்ள காசை எல்லாம் பிடிங்கிக்கொண்டு
ஒரு புது காலி பர்ஸ் கொடுப்பான் பாரு...
அவன்தான் நகை கடைக்காரன்😆
---------------------------------------------------------
15
நண்பர் : நான் தீவாளி-க்கு சேதாரம் செய்கூலி இல்லாம நகை வாங்கிட்டேன்....
மற்ற நண்பர் : எந்த கடைல வாங்கன
நண்பர் : என் மாமனார் வீட்ல வாங்கிட்டேன்....
😜😂🤣
-----------------------------------------------------------
இவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளது?
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Nice Sir. 10 ,15 are very nice
ReplyDeleteஅனைத்தும் மிக அருமை குரு. இருப்பினும் முதலாவது நெஞ்சில் நிற்கிறது.
ReplyDeleteநன்றி குரு. குரு வாழ்க.
6 அடுத்து 12. யதார்த்தம் நல்ல நகைச்சுவையாக. ஹா ஹா ஹா, நன்றி.
ReplyDeleteGood morning sir all are very nice especially 1,9 are super thanks sir vazhga valamudan
ReplyDeleteI like 7th joke sir
ReplyDelete1&2.
ReplyDeleteஐயா
ReplyDeleteவணக்கம். தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அனைத்தும் அருமை. 14 ஆம் எண் மிகவும் அருமை.
நன்றி
இப்படிக்கு
செ. ஜீவானந்தம்
Respected Sir,
ReplyDeleteHappy morning.... all are nice especially no.12
Have a great day.
With regards,
Ravi-avn
வணக்கம் குருவே!
ReplyDelete11வது நகைச்சுவை தான் யதார்த்தம்!
1,3,5,7,15 ஆகியனவும் டாப்!
வணக்கம் ஐயா,என்னுடைய பார்வையில் 6 முதல் 12 வரை.நன்றி.
ReplyDelete////Blogger kmr.krishnan said...
ReplyDeleteNice Sir. 10 ,15 are very nice////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!
////Blogger Kesavaraj & Kalaivani said...
ReplyDeleteஅனைத்தும் மிக அருமை குரு. இருப்பினும் முதலாவது நெஞ்சில் நிற்கிறது.
நன்றி குரு. குரு வாழ்க.////
உங்களின் தெரிவைத் தெரியப் படுத்தியமைக்கு நன்றி நண்பரே!!!!
////Blogger Thanga Mouly said...
ReplyDelete6 அடுத்து 12. யதார்த்தம் நல்ல நகைச்சுவையாக. ஹா ஹா ஹா, நன்றி./////
உங்களின் தெரிவைத் தெரியப் படுத்தியமைக்கு நன்றி நண்பரே!!!!
////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir all are very nice especially 1,9 are super thanks sir vazhga valamudan////
நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!
///Blogger Subathra Suba said...
ReplyDeleteI like 7th joke sir///
நல்லது. நன்றி சகோதரி!!!!!
////Blogger ponnusamy gowda said...
ReplyDelete1&2.////
உங்களின் தெரிவைத் தெரியப் படுத்தியமைக்கு நன்றி நண்பரே!!!!
////Blogger C Jeevanantham said...
ReplyDeleteஐயா
வணக்கம். தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அனைத்தும் அருமை. 14 ஆம் எண் மிகவும் அருமை.
நன்றி
இப்படிக்கு
செ. ஜீவானந்தம்////
உங்களின் தெரிவைத் தெரியப் படுத்தியமைக்கு நன்றி நண்பரே!!!!
///Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning.... all are nice especially no.12
Have a great day.
With regards,
Ravi-avn////
நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!
////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
11வது நகைச்சுவை தான் யதார்த்தம்!
1,3,5,7,15 ஆகியனவும் டாப்!////
உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!
/////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,என்னுடைய பார்வையில் 6 முதல் 12 வரை.நன்றி./////
உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!
எல்லாமே நன்றாக உள்ளது.
ReplyDelete10, 15 மிகவும் நன்றாக உள்ளது
4,15
ReplyDelete/////Blogger Chandrasekaran Suryanarayana said...
ReplyDeleteஎல்லாமே நன்றாக உள்ளது.
10, 15 மிகவும் நன்றாக உள்ளது////
உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!
////Blogger SELVARAJ said...
ReplyDelete4,15////
உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!