மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.10.17

மோடியின் உண்ணாவிரதத்தினால் உயர்ந்த சர்தார் சரோவர் அணை!!!


மோடியின் உண்ணாவிரதத்தினால் உயர்ந்த சர்தார் சரோவர் அணை!!!

இன்று மோடியின் பிறந்தநாள்.இந்த நாளில் சுமார்
25 வருடங்களுக்கு மேலாக 16,000 கோடி  ரூபாய் செல வில்
கட்டப்பட்டு வந்த சர்தார்சரோவர் அணையை இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.இதன் மூலம் உலகிலேயே இரண்டாவது பெரிய அணை 

மோடியால் கட்டப்பட்டது என்று நீர் மேலாண்மை வரலாற்றில் மோடியின் பெயர் நிலைத்து நிற்கும்.

சமீபத்தில் நான் வேலை பார்க்கும் இடத்தில் மேனேஜர்  ஒருவர்குஜராத்தில் இருந்து டிரான்ஸ்பர் ஆகி மீண்டும் மதுரைக்கே வந்து இருந்தார்.வழக்கம் போ ல நலம் விசாரணைகள் முடிந்த பிறகு மோடியை பற்றி நான் கேட்க  பதிலுக்கு அவர் சொன்னது என்னை பிரமிக்க வைத்தது..
.
அவர் குஜராத்தில் உள்ள வத்நகர் அலுவலகத்தில் இருந்து மதுரைக்கு மாற்றலாகி வந்திருந்தார். அவரிடம் பேசிய பொழுது அவர் சொன்ன வார்த்தை கள் குஜராத்தில் ரோடுகள்,மின்சாரம் தண்ணீர் இந்த மூன்றும் சூப்பர் என்றார்.அதோடு அங்கே ஆபிசில் போர்வாட்டர்  கிடையாதாம். ஜெனரேட்டர் கிடையா தாம்.அந்தளவுக்கு தண்ணீர் கார்ப்பரேசன் குழாய்களில் வந்துவிடுமாம்.பவர் கட் என்கிற பேச்சே இல் லாததால் ஜெனரேட்டர் தேவையே கிடையாதாம்..ஆபிசுக்கே போர் ஜெனரேட்டர் கிடையாது என்றால் வீடுகளுக்கு சொல்லவா வேண்டும்.

அந்தளவிற்கு 24 மணிநேரமும் குஜராத்தில்  தண்ணீர் மின்சாரம் செய்து கொடுத்த மோடியை இன்றும் குஜராத் மக்கள் இங்குள்ள தமிழ் ஹீரோக்களை விட மேன்மையாக கொண்டாடுகிறார்கள் என்றார் இப்படி குஜராத் மக்கள் மோடியின் புகழ் பாடி நிற்க முக்கி ய காரணம் நர்மதா அணையில் கட்ட ப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை தான்.

இன்றளவில் நம் நாட்டில் 4300  அணைகள் கட்டப் பட்டு ள்ளன.இதில் இருந்து உலகளவில் இந்தியா வின் பெயரை சொல்லிக்கொண்டு இருப்பது மோடியால் விரிவுபடுத்தப்பட்ட சர்தார் சரோவர்  அணைதா ன்.ஆம்உலகின் இரண்டாவது கான்கிரீட் மூலம் கட்டப்பட்டபெரிய அணை என்கிற பெருமை இந்த அணைக்கே உள்ளது.

இந்தியாவின் ஐந்தாவது பெரிய ஆறு நர்மதா. இந்தியாவுக்குள்ளேயே உற்பத்தியாகும் ஆறுகளில், கிருஷ்ணா, கோதாவரிக்கு அடுத்து மூன்றாவது பெரியது. மத்திய பிரதேசத்தில் உற்பத்தியானாலும், குஜராத் வழியாகத்தான் பெருமளவு ஓடுகிறது. நர்மதா நதியின் முகத்து வாரத்திலிருந்து சுமார் 1163 கிலோமீட்டர் தொலைவில் குஜராத்தில் உள்ளது. நாவகம் .இங்குதான் கான்கிரீட் மூலம் கட்டபட்ட உலகின்இரண்டாவது பெரிய அணைஉள்ளது
..
முதலாவது அணை அமெரிக்காவில் கொலம்பியா நதியில் கட்டபட்ட கிராண்ட் கூலே  அணையாகும்.
பொதுவாக அணைகள்இரண்டு வகையில் உள்ளது. ஒன்று ஆர்ச் அணை இன்னொன்று கிராவிட்டி அணை.ஆர்ச் அணை என்றால் வளைவாக கட்டப்படுவது. கிராவிட்டி அணைகள் நேராக கட்டப்பட்டு இருக்கும்.உலகில்உள்ள பெரிய அணைகள் எல்லாம் கிராவிட்டி அணைகள் தான்.நம்ம முல்லை பெரியார்  அணையும் கிராவிட்டி அணைதான்.நம்ம கரிகால் சோழன் கட்டிய கல்லணை ஆர்ச் அணைகளில் ஒன்று.

சரி நாம் இந்த சர்தார்சரோவர் அணைக்கு வருவோம்.இந்த சர்தார் சரோவர் அணைக்கு என்ன விசேஷம் என்றால் கான்கிரீட் தொழில் நுட்பத்தின்மூலமாக கட்டபட்ட உலகில் உள்ள இரண்டாவது பெரிய அணை தான் சர்தார்  சரோவர் அணை.சுமார் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு மேல் 163 அடி உயரத்திற்கு கான்கிரீட் கலவைகளால் கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையின் 
கட்டுமானத்தில் ஒரு தமிழனின் அறிவும் அடங்கியுள்ளது.

உலகமே போற்றும் இந்த கான்கிரீட் தொழில்நுட்பத் தில் நம்முடைய தமிழ்நாட்டின் பங்கும் இருக்கிறது
என்று எத்தனை பேருக்கு தெரியும்?பேராசிரியர் ராமகிருஸ்ணன் தெரியுமா? கோயம்புத்தூரில் பீளமேட்டில் பிறந்து அமெரிக்காவில் ஐக்கியமானவர். லாவா  இருக்கிறதல்லவா..அதாங்க எரிமலை குழம்பு.அதுபாறையாக மாறியதும் அதை உருக்கி அதில் இருந்து கொஞ்சூண்டு எடுத்து கான்கிரீட்டோடு சேர்த்து கட்டினால்  பில்டிங் படு ஸ்டிராங்காக இருக்குமாம்..இது இவரோட கண்டுபிடிப்பு..மவுலிவாக்கம் பில்டர்ஸ்க்கு இது தெரியாமல் போனது ஆச்சரியம் தான்..எதுவாக இருந்தாலும் 
கான்கிரீட் தொழில்நுட்பத்தில் நம்முடைய  மாநிலத்தில் பிறந்த ஒருவரின் அறிவும் இணைந்துள்ளது நமக்கு சந்தோசம் தானே..

வாழ்த்துக்கள் ராமகிருஸ்ணன் சார்..

சர்தார்  சரோவர் அணைக்கு நேரு 1961 ம் ஆண்டு அடிக்கல் நாட்டினாலும் இந்த அணையின் கட்டுமானப் பணிகள் குஜராத் மாநிலத்திற்கும் மத்திய பிரதேசத்துக்கும்  இடையில் ஏற்பட்ட ஏகப்பட்ட பஞ்சாயத்துக்களை முடித்து 1979ம் ஆண்டு தான் கட்டுமானப் பணியே ஆரம்பமானது.

1979ம் வருடத்திலேயே துவங்கப்பட்ட இந்த  சர்தார் சரோவர் அணை மோடி தன்னுடைய காலத்தில் திட்ட மதிப்பீட்டில் இருந்து 163 மீட்டர்  அதிகப்படி யான உயரத்திற்கு பல எதிர்ப்புகளுக்கிடையே கட்டி முடித்தார். இதனால் தான் இந்த அணை இன்று உல கில் இரண்டா வது பெரிய அணையாக போற்றப்படுகிறது

இந்த அணையின் உயரத்தை அதிகரிக்கக்கூடாது என்று மேதாபட்கர்  அருந்ததி ராய் போன்ற  கூட்டம் மக்களை பயமுறுத்தி போராட வைத்தாலும் தன்னுடைய உண்ணாவிரதத்தினால் அனைத்து  எதிர்ப்புகளையும் முறியடித்து தான் நினைத்ததை சாதித்தார் மோடி.

அரை மணி நேரம் மவுண்ட் ரோடில் உண்ணாவிரதம் இருந்ததற்க்கே அலப்பறை கொடுக்கும் திராவிட தலைவர்களிடையே 51 மணி நேரம் தொடர் உண்ணாவிரதம் இருந்து மேதாபட்கர் போன்றவர்களை களத்தில் இருந்து துரத்திவிட்டு கட்டப்பட்ட 
இந்த சர்தார் சரோவர் அணை தன்னுடைய வரலாற்றில் மோடியின் பெயரை என்றும் சொல்லிக்கொண்டே இருக்கும்.

சர்தார் சரோவர் அணையில் நீர் தேக்கும் உயரத்தை உயர்த்த மோடிஎடுத்த முயற்சிகள் தான் இன்று ஒட்டு மொத்த குஜராத்தையும் வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது. ஏனென்றால் மோடி முதல்வராக  பதவி ஏற்கும் முன் அணையின் உயரம் 90 மீட்டர் தான் இருந்தது.ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தன்னுடைய தொடர் முயற்சிகளால் இன்று 138 மீட்டர்  உயரத்திற்கு அணையில் நீரை தேக்கி வைத்து விட்டார்.

இந்த அணையில் இருந்து தான் உலகிலேயே நீளமான கான்கிரீட் கால்வாயான நர்மதா கால்வாய் திட்டம்  உருவாக்கப் பட்டுள்ளது,நர்மதா கால்வாய் திட்டத்தை செயல்படுத்தி பக்கத்து மாநிலமான ராஜஸ்தானுக்கும் தண்ணீர் கொண்டு சென்றுள்ளார் என்றால் அணையின் உயரத்தை அதிகரிக்க வேண் டும் என்று அவர் போராடிய அவசியத்தினை புரிந்து கொள்ளவேண்டும்.

சுமார் 70 மீட்டர் அகலத்தில் 7 மீட்டர் ஆழத்தில் 535 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு மெயின் கால்வாயை வெட்டி அதில் இருந்து 75,000 கிலோமீட்டர் தூரத்துக்கு துணைகால்வாய்கள் வழியே தண்ணீர் கொண்டு செல்ல தண்ணீர்  எங்கிருந்து வரும்,அதனால் தான் அணையில் நீர் தேக்கும் அளவை உயரத்த மோடி போராடி வெற்றிக்கண்டார். இப்பொழுது 4.73 மில்லியன் கியூபிக் 
மீட்டர்தண்ணீர் இந்த அணையில் சேமிக்கப்பட்டுள்ளது.

இதனால் 18 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு இந்த அணையில் இருந்து வெளியேறும் நீரினால் பயன் பெறுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.சுமார் மூன்று கோடி மக்களுக்கு அதாவது குஜராத்தில் 9633 கிராமங்கள்; மற்றும்131 நகர ங்கள் ராஜஸ்தானில் 1336  கிராமங்கள், 3 நகரங்கள்குடிநீர் வசதி பெறுகின்றன
.
நர்மதா கால்வாய் மூலம் குஜராத்தில் சுமார் 5 லட்ச ம் ஹெக்டேர் நிலங்கள்:உள்ள 15 மாவட்டங்கள்; 73 தாலுக்காக்கள்; 3,112 கிராமங்கள் . விவசாய வசதி பெற்றுள்ளது இது தவிர ராஜஸ்தானின் பார்மர் மற்றும் ஜல்லூர் மாவட் டங்களில் உள்ள 7.2 லட்சம் ஏக்கர் நிலங்களில்  விவசாயம் விரிவாகியுள்ளது.

அதோடு இந்த அணையில் இரு நீர் மின்நிலையங்க ள் அமைக்கப்பட்டு 1500.மெகாவாட்மின்சாரம் உரு வாக்கப்பட்டு குஜராத்  மகாராஸ்டிரா மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கு
பிரித்து கொடுக்கப்படுகிறது. இப்படி நர்மதா நதியின்
திசையையே மாற்றி சர்தார் சரோவர் அணையில் தேக்கி
வைத்து  அதை குஜராத் முழுவதும் கொண்டு சென்று சோழநாடு சோறுடைத்து என்பது போல குஜராத்தை பருத்தியுடைத்து என்று மாற்றிய பெருமை மோடியையே சாரும்.

சோழ நாடு என்றவுடன் குலோத்துங்க சோழனின் முடிசூட்டும் விழாவில் அவ்வையார் பாடிய வரப்பு உயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும்.நெல் உயர குடி உயரும்.குடி  உயர கோன் உயர்வான் என்ற   பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

மோடி கட்டிய சர்தார் சரோவர் அணையினால் குஜ ராத்தில் விவசாய நிலங்களில் உள்ள  வரப்புகளின் கரைகள்  உயர்ந்ததால் அங்கு நீர் மட்டம் உயர்ந்த து.நீர்  மட்டம் உயர்ந்ததால்  பருத்தி கோதுமை நெல் பயிரிடும்விவசாயம் வளர்ந்தது. விவசாயம் பெருகி 
யதால் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தது.

இதனால்குடி உயர கோன்உயர்வான் என்ற அவ்வை யாரின் கூற்றை குஜராத் நிரூபித்தது. குஜராத் மக்க ளின் வாழ்வு 
முன்னேறியதால் அந்த மக்களை ஆண்ட  மோடி இன்று அந்த மாநிலத்தை உள்ளடக்கிய 29 மாநில ங்களையும் 7 யூனியன் பிரதேசங்க ளை யும் கொண்ட பாரத  நாட்டை ஆளும் பிரதமராக உயர்ந்தார் என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்த சர்தார் சரோவர் அணை தான்.

மேலதிக விவரங்களுக்கு:
https://en.wikipedia.org/wiki/Sardar_Sarovar_Dam
--------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30 comments:

  1. காவேரிப் பிரச்சனையை தீர்த்துவைக்காமல் இருக்கிறாரே.கர்நாடகத்தில் கட்சி அரசியலுக்காக தமிழகத்தின் உரிமைகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறாரே!

    ReplyDelete
  2. Good morning sir very useful information about our nation and respected modiji thanks sir vazhga valamudan

    ReplyDelete
  3. அய்யா
    தான் பிறந்த மாநில நலனிற்காக செய்த பிரதமர் அடுத்த மாநில நலனுக்காக அக்கறை எடுக்க வேண்டும்

    ReplyDelete
  4. தேச நலனுக்கான பல முயற்ச்சிகள் மேற்கொள்ள பட்டாலும் சிறுபான்மை அசியலால் பாதிக்க படும் தலைவர். நீண்ட நெடிய நாள் பலன் அடிப்படையில் திட்டமிடும் பொழுது மக்கள் எதிர் பார்ப்பது Instant coffee. Anyway சத்யமேவ் ஜெயதே...

    ReplyDelete
  5. Respected Sir,

    Pleasant morning.... Its historical effort...

    Have a great day. Happy birthday Modi ji....

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  6. இது முழுக்க பொய்யான தகவல். அணையின் ஆரம்பகால திடடத்தை விட ஒரு அடி உயரம் கூட மோடி வந்த பிறகு கூட்டவில்லை. அணையினால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முழு நிவாரணம் வழங்காமலும் அவர்களுக்கு மாற்று இடம் வழங்காமலும் அணையை ஒரு குறிப்பிடட உயரத்திற்கு ( அதாவது மதகு அமைக்கும் உயரத்திற்கு ) மேல் கட்டக்கூடாது என்பது தான் நீதிமன்றத்தின் உத்தரவு. மோடி பதவிக்கு வருவதற்கு முன் 99 % வேலைகள் முடிந்துவிட்ட்து. கெனால் வேலைகள் 100 % முடிந்துவிட்டது . அணையில் மதகுகள் அமைப்பது மட்டும் தான் பாக்கி இருந்தது. இதற்காக மோடி முதல்வராக இருந்தவரை எது உம் செய்ய வில்லை.
    வாத்தியாரே நீங்கள் மோடியின் பக்தராக இருக்கலாம் அதற்காக பிஜேபி யின் ஸ்லீப்பர் செல் வேலையை அதுவும் பொய்யான செய்தியை உங்கள் தளத்தில் பிரசுரம் செய்து ஏன் மதச்சாயம் பூசிக்கொள்கிறீர்கள். நான் 1994 வரை நர்மதா அணையில் வேலை செய்தவன். மீண்டும் இப்பொழுதும் அதனோடு பலவகையில் சம்பந்தப்பட்டவன். எவனோ பெற்ற பிள்ளைக்கு மோடி அப்பா முறை கொண்டாடுவது அசிங்கமாக இல்லையா . மதகின் அளவு 18 .3 மீட்டர் அகலம் 17 .௦ மீட்டர் உயரம் . அப்படி 30 மதகுகள் உள்ளது இது சம்பந்தமாக யாருடன் வேண்டுமானாலும் விவாதிக்க தயாராக உள்ளேன்

    ReplyDelete
  7. Need this kind of IRON HAND in tamilnad also...

    ReplyDelete
  8. This is well narrated but needs additional validation. Building up images are very easy in today's world. Not necessarily they should reflect the ground level reality. Though I don't claim that the write up has false information but dont believe something blindly just because it has come in the media or endorsed by people from online communities.

    ReplyDelete
  9. மிகவும் அருமையான தகவல்!!!

    ReplyDelete
  10. இன்று கந்த சஷ்டி தாங்கள் அதுபற்றி ஒன்றும் எழுதவில்லையே

    ReplyDelete
  11. Sir, very great information and a great example for our PM's character.

    ReplyDelete
  12. /////Blogger kmr.krishnan said...
    காவேரிப் பிரச்சனையை தீர்த்துவைக்காமல் இருக்கிறாரே.கர்நாடகத்தில் கட்சி அரசியலுக்காக தமிழகத்தின் உரிமைகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறாரே!////

    உண்மைதான். அவரை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. நம் தமிழகத் தலைவர்களும், பாரளுமன்ற உறுப்பினர்களும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே சாமி! என்ன செய்வது? எல்லாம் தமிழக மக்களின் தலை எழுத்து!!!!

    ReplyDelete
  13. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful information about our nation and respected modiji thanks sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  14. //////Blogger Kalai Rajan said...
    அய்யா
    தான் பிறந்த மாநில நலனிற்காக செய்த பிரதமர் அடுத்த மாநில நலனுக்காக அக்கறை எடுக்க வேண்டும்/////

    நீங்கள் சொல்வது சரிதான். யார் போய் இதை அவரிடம் சொல்வது?

    ReplyDelete

  15. ////Blogger Saravanan V said...
    nice sir....////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  16. ////Blogger SELVARAJ said...
    தேச நலனுக்கான பல முயற்ச்சிகள் மேற்கொள்ள பட்டாலும் சிறுபான்மை அசியலால் பாதிக்க படும் தலைவர். நீண்ட நெடிய நாள் பலன் அடிப்படையில் திட்டமிடும் பொழுது மக்கள் எதிர் பார்ப்பது Instant coffee. Anyway சத்யமேவ் ஜெயதே...//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி செல்வராஜ்!!!!

    ReplyDelete
  17. ///Blogger Balasaravanan KM said...
    மிகச் சிறப்பான பதிவு//////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  18. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Pleasant morning.... Its historical effort...
    Have a great day. Happy birthday Modi ji....
    With regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!!

    ReplyDelete
  19. /////Blogger RAJA said...
    இது முழுக்க பொய்யான தகவல். அணையின் ஆரம்பகால திடடத்தை விட ஒரு அடி உயரம் கூட மோடி வந்த பிறகு கூட்டவில்லை. அணையினால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முழு நிவாரணம் வழங்காமலும் அவர்களுக்கு மாற்று இடம் வழங்காமலும் அணையை ஒரு குறிப்பிடட உயரத்திற்கு ( அதாவது மதகு அமைக்கும் உயரத்திற்கு ) மேல் கட்டக்கூடாது என்பது தான் நீதிமன்றத்தின் உத்தரவு. மோடி பதவிக்கு வருவதற்கு முன் 99 % வேலைகள் முடிந்துவிட்ட்து. கெனால் வேலைகள் 100 % முடிந்துவிட்டது . அணையில் மதகுகள் அமைப்பது மட்டும் தான் பாக்கி இருந்தது. இதற்காக மோடி முதல்வராக இருந்தவரை எது உம் செய்ய வில்லை.
    வாத்தியாரே நீங்கள் மோடியின் பக்தராக இருக்கலாம் அதற்காக பிஜேபி யின் ஸ்லீப்பர் செல் வேலையை அதுவும் பொய்யான செய்தியை உங்கள் தளத்தில் பிரசுரம் செய்து ஏன் மதச்சாயம் பூசிக்கொள்கிறீர்கள். நான் 1994 வரை நர்மதா அணையில் வேலை செய்தவன். மீண்டும் இப்பொழுதும் அதனோடு பலவகையில் சம்பந்தப்பட்டவன். எவனோ பெற்ற பிள்ளைக்கு மோடி அப்பா முறை கொண்டாடுவது அசிங்கமாக இல்லையா . மதகின் அளவு 18 .3 மீட்டர் அகலம் 17 .௦ மீட்டர் உயரம் . அப்படி 30 மதகுகள் உள்ளது இது சம்பந்தமாக யாருடன் வேண்டுமானாலும் விவாதிக்க தயாராக உள்ளேன் //////

    சாயம் பூச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை நண்பரே!!!
    படித்ததைத்தான் பகிர்ந்துள்ளேன்!
    உங்கள் கருத்து மற்றும் கண்டனங்களுக்கு நன்றி!


    ReplyDelete
  20. ////Blogger vivek kayamozhi said...
    Need this kind of IRON HAND in tamilnad also.../////

    உண்மைதான். நம்பிக்கையோடு இருப்போம். காலம் ஒரு நாள் கனியாமலா போகும்?

    ReplyDelete
  21. ////Blogger Chocks said...
    This is well narrated but needs additional validation. Building up images are very easy in today's world. Not necessarily they should reflect the ground level reality. Though I don't claim that the write up has false information but dont believe something blindly just because it has come in the media or endorsed by people from online communities.////

    உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete

  22. ////Blogger ponnusamy gowda said...
    மிகவும் அருமையான தகவல்!!!////

    நல்லது. நன்றி பொன்னுசாமி அண்ணா!!!

    ReplyDelete
  23. /////Blogger Kalai Rajan said...
    இன்று கந்த சஷ்டி தாங்கள் அதுபற்றி ஒன்றும் எழுதவில்லையே/////

    மாத இதழ் ஒன்றிற்கு எழுதிக் கொடுத்தேன். வேலைப் பளுவின் காரணமாக அதை பதிவில் ஏற்ற மறந்துவிட்டேன். பழநிஅப்பன் மன்னிப்பாராக! நீங்கள் நினைவு படுத்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  24. /////Blogger Saravanan Annamalai said...
    Sir, very great information and a great example for our PM's character./////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  25. வணக்கம் குருவே!
    அரும்பெரும் காரியங்கள் செய்யும் மாமனிதர் தான் நமது பிரதமர் என்று
    தெரிகிறது இன்றைய பதிவைப் படித்தபின்! ஆனால், பல கார்ட்டூன்கள், அரசியல் பதிவுகள் அவரை மட்டம் தட்டுகின்றனவே?
    அடிக்கடி வெளிநாடு செல்லும் பிரதமரும் இவரே! இந்திய அளவில்
    புரட்சி செய்பவர் என்னும் சொல்லும்
    இவருக்கே! ஆனால்,தமிழ்நாட்டுக்கு
    என்ன செய்வார் அல்லது செய்தார்
    என்ற கேள்விக்கு விடை இல்லாதவர்
    போலல்லவா தெரிகிறார்?!
    வஞ்சிக்கும் கேர்ள்,கர்னாடக மற்றும் ஆந்திர அரசுகளிடமிருந்து தமிழகத்தையும், தமிழக விவசாயிகளையும் காப்பாற்றுவாரா ?!
    மில்லியன் டாலர் கேள்வி,ஐயா?!

    ReplyDelete
  26. Blogger Raja! Please send your mail Id to me. My Mail Id is kmrk1949@gmail.com

    ReplyDelete
  27. Ayya, Tamilagame yethirkum Modiku ivlo Periya Build up thevaya... thangalidam irunthu ithai Yethirparka villai.... :-(

    ReplyDelete
  28. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    அரும்பெரும் காரியங்கள் செய்யும் மாமனிதர் தான் நமது பிரதமர் என்று
    தெரிகிறது இன்றைய பதிவைப் படித்தபின்! ஆனால், பல கார்ட்டூன்கள், அரசியல் பதிவுகள் அவரை மட்டம் தட்டுகின்றனவே?
    அடிக்கடி வெளிநாடு செல்லும் பிரதமரும் இவரே! இந்திய அளவில்
    புரட்சி செய்பவர் என்னும் சொல்லும்
    இவருக்கே! ஆனால்,தமிழ்நாட்டுக்கு
    என்ன செய்வார் அல்லது செய்தார்
    என்ற கேள்விக்கு விடை இல்லாதவர்
    போலல்லவா தெரிகிறார்?!
    வஞ்சிக்கும் கேர்ள்,கர்னாடக மற்றும் ஆந்திர அரசுகளிடமிருந்து தமிழகத்தையும், தமிழக விவசாயிகளையும் காப்பாற்றுவாரா ?!
    மில்லியன் டாலர் கேள்வி,ஐயா?!/////

    காலம்தான் பதில் சொல்ல வேண்டும். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  29. /////Blogger KJ said...
    Ayya, Tamilagame yethirkum Modiku ivlo Periya Build up thevaya... thangalidam irunthu ithai Yethirparka villai.... :-(/////

    உங்களின் வருத்தம் புரிகிறது! சரோவர் அணையைப் பற்றிய செய்தியை மட்டும் படியுங்கள். மோடியை மறந்துவிடுங்கள். நன்றி!!!


    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com