மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.10.17

Astrology: ஜோதிடம்: சக்ரா யோகம்


Astrology: ஜோதிடம்: சக்ரா யோகம்

யோகங்களைப் பற்றிய பாடம்!!!

சக்கரம் என்றவுடன் நமது மனக்கண் முன்பாக வந்து நிற்பது வண்டிச் சக்கரம்

வண்டி, இயந்திரம் முதலியவற்றின் இயக்கத்திற்குப் பயன் படும் அச்சில் சுழலக்கூடிய வட்டமான உறுப்பு. காரின் சக்கரம். புராணத்தில் திருமாலின் கையில் உள்ளதும் சுழன்று சென்று பகைவரை அழிப்பதுமான ஆயுதம்!

இன்னும் பல சக்கரங்கள் உள்ளன!

காலச் சக்கரம்
வாழ்க்கைச் சக்கரம்
ராசிச் சக்கரம்
நவாம்சச் சக்கரம்

பொதுவாகச் சுழற்சியைக் கொடுப்பது எல்லாம் சக்கரம்தான்.

மனித உடம்பிலும் ஆறு சக்கரங்கள் இருந்து சக்தியை உருவாக்கிக் கொண்டிருக்கும் என்று சொல்வார்கள். அதை மேலே உள்ள படத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

யோகத்தின் அமைப்பு: பத்தாம் வீட்டில் ராகு, பத்தாம் வீட்டு அதிபதி லக்கினத்தில், லக்கின அதிபதி 9ஆம் வீட்டில் இருந்தால் அது இந்த யோகத்தைக் கொடுக்கும். அதுபோல ஒற்றைப் படை வீடுகளில், அதாவது ஜாதகத்தில் 1,(லக்கினம்), 3, 5,7,9,11   ஆகிய வீடுகளில் எல்லா கிரகங்களும் இருப்பதும் இந்த யோகத்தைக் கொடுக்கும்.

பலன்: ஜாதகன் நாட்டின் ஒரு பகுதிக்கு நிர்வாகியாகும் நிலைக்கு உயர்வான். அது கிராம அதிகாரி அல்லது பஞ்சயாத்து ஒன்றியத் தலைவர் பதவியில் இருந்து மாவட்ட ஆட்சியாளர், மாநில ஆளுனர், முதன் மந்திரி பதவி வரைக்கும் மாறுபடலாம். அந்த பதவி வித்தியாசம் ஏற்படுவதற்கு, குறிப்பிட்டுள்ள அந்த வீடுகளின்/வீட்டு அதிபர் களின் அஷ்டகவர்க்கப் பரல்கள், சுயவர்க்கப்பரல்களின் அளவு காரணமாக இருக்கும். ஜாதகன் பொதுவாகப் பலரின் மரியாதைக்கு உரியவனாக விளங்குவான். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உடையவனாக விளங்குவான்.

சிலர் ஜாதகத்தில் மற்ற அம்சங்கள் மாறுபடும்போது, ஜாதகன் ராணுவத்தில் சேர்ந்து நல்ல அந்தஸ்த்தில் பணிபுரிவான்.

சார், 3ல் எனக்கு 2 இருக்கிறது, பாதி யோகம் உண்டா? என்று யாரும் கேட்க வேண்டாம். செயல்பாடுகள் பாதியாக இருப்பது பயன்படாது. நான்கு சக்கரங்களில், இரண்டுதான் இருக்கின்றன அல்லது இரண்டுதான் காற்றுடன் இருக்கின்றன எனும்போது கார் எப்படி ஓடும்?யோசித்துப் பார்த்து விட்டு எழுதுங்கள்!

நன்றி, வணக்கம்

அன்புடன்,
உங்கள் வகுப்பறை,
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18 comments:

 1. Good morning sir very rare to see this yoga but always i took 337 tonic in this circumstances thanks sir vazhga valamudan

  ReplyDelete
 2. நல்ல வேளை
  இந்த யோகம் எனக்கு இல்லை..

  ReplyDelete
 3. இது போல
  புண்ணிய சக்கரம் பற்றி ஒரு பதிவு போடுங்க

  ReplyDelete
 4. 1,5,9 - Trikona
  1,7 - Kendra

  11-considered to be best for malefic planets

  But, 3-considered to be maraivu stana. How does planets compared to do good in 3rd? Is it because they look at 9th?

  Likewise even house planetary position produce Samudra yoga for wealth, and so on. But if you can share a bit light on why this yoga gives administration skills, it will be great.

  ReplyDelete
 5. வணக்கம் ஐயா,யோக பாடம் அருமை.புத ஆதித்ய யோகம் தவிர மற்றதெல்லாம் அரிதாகவே இருக்கின்றன.நன்றி.

  ReplyDelete
 6. ////Blogger kmr.krishnan said...
  Very good yogam Sir.////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

  ReplyDelete
 7. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
  Good morning sir very rare to see this yoga but always i took 337 tonic in this circumstances thanks sir vazhga valamudan/////

  அருமை. நல்ல முடிவு. அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்!!! நன்றி சண்முகசுந்தரம்!!!!

  ReplyDelete
 8. ////Blogger வேப்பிலை said...
  நல்ல வேளை
  இந்த யோகம் எனக்கு இல்லை../////

  யோகம் இல்லாவிட்டால் என்ன? எல்லோருக்கும் பரல்கள் 337தானே சுவாமி! அதை நினைத்துப் பாருங்கள்!!!!

  ReplyDelete
 9. /////Blogger வேப்பிலை said...
  இது போல
  புண்ணிய சக்கரம் பற்றி ஒரு பதிவு போடுங்க/////

  நல்ல பெற்றோர்களைப் பெற்றவர்கள் எல்லோரும் புண்ணியவான்கள்தான் சுவாமி!!! பிறப்பிலேயே அந்த யோகம் கிடைத்துவிடும்!!!!


  ReplyDelete
 10. ////Blogger Kesavaraj & Kalaivani said...
  Good post sir////

  நல்லது. நன்றி நண்பரே!!!!

  ReplyDelete

 11. /////Blogger selvaspk said...
  1,5,9 - Trikona
  1,7 - Kendra
  11-considered to be best for malefic planets
  But, 3-considered to be maraivu stana. How does planets compared to do good in 3rd? Is it because they look at 9th?
  Likewise even house planetary position produce Samudra yoga for wealth, and so on. But if you can share a bit light on why this yoga gives administration skills, it will be great.////

  உங்களுடைய அனுமானம் சரிதான்! நன்றி செல்வா!!!!

  ReplyDelete
 12. ////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,யோக பாடம் அருமை.புத ஆதித்ய யோகம் தவிர மற்றதெல்லாம் அரிதாகவே இருக்கின்றன.நன்றி.//////

  எத்தனை யோகம் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? அனைவருக்கும் பிறப்பு, இறப்பு, அஷ்டகவர்க்கப் பரல்கள் எல்லாம் சமம்தானே? அதை நினைத்து மகிழ்வோம் ஆதித்தன்!!!!!

  ReplyDelete
 13. Good morning sir,
  Every Friday to know about one good yogam is nice. Thank you sir.

  ReplyDelete
 14. ////Blogger பரிவை சே.குமார் said...
  நல்ல பகிர்வு ஐயா.////

  நல்லது. நன்றி நண்பரே!!!!

  ReplyDelete
 15. /////Blogger gokila srinivasan said...
  Good morning sir,
  Every Friday to know about one good yogam is nice. Thank you sir./////

  நல்லது. நன்றி சகோதரி!!!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com