மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.7.17

சிறிது நேரம் குதித்ததால் ஏற்பட்ட பயன்!!!


சிறிது நேரம் குதித்ததால் ஏற்பட்ட பயன்!!!

Health Tips

சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற அலோபதி மருத்துவரை ஒரு மருத்துவக் கட்டுரை விஷயமாக சந்தித்தேன்.வயது 70களில் இருப்பவர்.. அவர் ஒரு ஈ.என்.டி. ஸ்பெஷலிஸ்டும்கூட!

தனக்கு நேர்ந்த ஒரு பிரச்னை பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் மிக ஆச்சர்யமாக இருந்தது..

அன்று காலை எழுந்தவுடன் அவருக்கு ஒரு பிரச்னை.

சிறுநீர் போகவேண்டும்போல அவரின் அடிவயிறு முட்டிக்கொண்டு இருக்கிறது.. ஆனால், போய் உட்கார்ந்தால் வரவில்லை.

இந்த வயதில் இதுபோல் சிலருக்கு வராமல் கொஞ்ச நேரம் போக்கு காட்டுவது சகஜம், பிறகு முயற்சித்தால் வந்துவிடும் என்பதால், சற்று நேரம் கழித்து முயற்சித்து பார்த்திருக்கிறார். அப்போதும் வரவில்லை. தொடர்ந்து முயற்சித்தும் சிறுநீர் வரவில்லை என்றதும்தான், ஏதோ பிரச்னை என்று புரிந்தது.

டாக்டராக இருந்தாலும், தசையும் ரத்தமும் கொண்ட மனிதர்தானே அவரும்! அடிவயிறு கனத்துப் போய், உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் படு அவஸ்தையாக, ஒருவித பயத்துடன் இருந்த அந்த நிலையில், உடனே தனக்குப் பழக்கமான ஒரு சிறுநீரக இயல்துறை மருத்துவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

‘‘நான் இப்போது புறநகர்ப்பகுதியில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறேன். பத்தரை மணிபோல உங்கள் வீடு இருக்கும் ஏரியா அருகிலுள்ள மருத்துவமனைக்கு வந்துவிடுவேன். அதுவரை இன்னும் ஒன்றரை மணி நேரம் தாங்குவீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார் அந்த மருத்துவர்.

‘‘பொறுத்துப் பார்க்கிறேன்!’’ என்று அவர் சொன்ன அந்த நேரம் பார்த்து இன்னொரு போன்.

அது, அவரின் ஊர்க்காரரான (சுசீந்திரம் பக்கம்) இன்னொரு அலோபதி மருத்துவரிடமிருந்து வந்திருந்தது..

போன் பேசக்கூட முடியாதபடி, தன்னை பெரும் கஷ்டத்துக்குள்ளாகும் தன் பிரச்னையைப் பற்றி தன் சிறுவயது மருத்துவ தோழரிடம் பகிர்ந்து கொண்டார் ஈ.என்.டி. மருத்துவர்.

‘‘ஓ.. சிறுநீர் சேர்ந்திருந்தும் வெளிவர வில்லையா? கவலைப்படாதே.. சரி, நான் சொல்வதுபோல செய், வந்துவிடும்! என்றவர், அதற்கான
இன்ஸ்ட்ரக்ஷன்களைத் தர ஆரம்பித்து விட்டார்.

‘‘எழுந்து நின்று நன்றாகக் குதி... குதிக்கும்போது உன் ரெண்டு கையையும் அப்படியே மேலேயிருக்கும் மாம்பழத்தைப் பறிப்பதுபோல ஆக்ஷன் செய்! இப்படி ஒரு பதினஞ்சு இருபது முறை செய்!’’ என்று சொல்லியிருக்கிறார்.

என்னது! அடிவயிறு சிறுநீரால் தளும்பிக் கொண்டிருக்கும் நிலையில் மேலே எழும்பிக் குதிப்பதா? என்று திகைத்தாலும், நண்பர் கூறினாரே என குதிக்க ஆரம்பித்தார். நாலைந்து முறைகூட குதிக்கவில்லை, அடைபட்டு இருந்த சிறுநீர் வெளிவர ஆரம்பித்து விட்டது. அப்படியொரு மகிழ்ச்சி அந்த ஈ.என்.டி. மருத்துவருக்கு!!

‘‘எத்தனை எளிமையாக என் பிரச்னையை தீர்த்தாய் நண்பா!’ என கொண்டாடிவிட்டார்.

அவர் சொன்னார், ‘‘இந்தப் பிரச்னைக்குத்தான் மருத்துவமனையில் சேர்த்து, பிளாடரில், கதீட்டர் டியூப் எல்லாம் சொருகி, ஒரு புரசீஜர் செஞ்சு அதுக்கு ரூ. 50,000 போல சார்ஜ் செஞ்சிருப்போம். அதுக்கும் மேல ஆஸ்பத்திரி செலவுகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், ஊசிகள், முக்கியமா அலைச்சல்கள், மன உளைச்சல்கள் எல்லாம் சேர்ந்து செலவாகும்!

நண்பர் சொன்ன ஒரு சின்ன குதிப்பதில் இத்தனை செலவுகள் எனக்கு மிச்சமாச்சு!’’ என்றார் பெருமிதத்துடன்.

மருத்துவர்_பெற்ற_பலன்_இவ்வுலகும்_பெற_வேண்டி  பகிர்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22 comments:

  1. Good morning sir, very useful health tips, now ah days lot of people's are suffering from this urinary problem sir, thanks for best solution sir, vazhga valamudan sir

    ReplyDelete
  2. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir, very useful health tips, now ah days lot of people's are suffering from this urinary problem sir, thanks for best solution sir, vazhga valamudan sir/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  3. நன்றி ஐயா.
    சென்ற வாரம் தான் இந்த விஷயத்தை படித்தேன்.

    ReplyDelete
  4. அல்லோபதி மருத்துவத்தில் புகுந்துவிட்ட அதிகமான வணிகச் செயல்பாடுகள்
    மக்களை வேறு திசையில் பார்க்கத் தூண்டுகின்றன.உடல் நிலை ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒருவருக்குப் பயன் அளித்த மாற்று முறைகள் வேறு ஒருவருக்குப் பயன் அளிக்காது போகலாம்.

    இந்த டாக்டருக்கு வந்த அடைப்பு குதித்ததால் சரியாகியிருக்கும் நிலையில் இருந்திருக்கலாம். வேறு ஒருவருக்கு அது குதித்தாலும் சரியாகாத நிலையில் இருக்கலாம்.எனவே அனைவருக்கும் ஆனது என்று இந்த முறையைச்சொல்ல முடியாது.வேண்டுமானால் எல்லோரும் கடைப்பிடித்துப் பார்க்கலாம். பலன் கிடைத்தால் நல்லது. கிடைக்காவிட்டால் பரவாயில்லை.

    அல்லோபதி மருத்துவம் அதனுடைய எல்லா குறைபாடுகளுடனும், அறிவியல் பூர்வமானது.இந்த குதிக்கும் முறையையே அறிவியல் பூர்வமாக அணுக, ஒரே மாதிரியான சிறுநீர் கழிக்க சிரமப்பட்டவர்களை குதிக்கச் சொல்லிப் பார்த்து எத்த‌னை பேருக்குப் பலித்தது, எத்தனை பெருக்குப் பலிக்கவில்லை என்று ஆய்வு அறிக்கை கிடைக்க வேண்டும். அதில் ஆண் எத்தனை பெண் எத்தனை,வயது என்ன ,எந்த வயதுக்காரர்களுக்கு அந்த முறை எப்படி வேலை செய்கிறது என்பதையெல்லாம் பதிவு செய்தல் வேண்டும்.அந்தக் குதித்தல் முறை பெரும்பானவர்களுக்கு உதவியிருந்தால் அதன் பின்னரே அதனை எல்லோருகும் பரிந்துரை செய்யலாம்.

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,எளிய மருத்துவ குறிப்புகள் எல்லாம், மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. Respected Sir,

    Pleasant morning... I was on leave (two months) sir.

    Your posts are impressing me lot.

    Thanking you.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  7. மிகவும் பயனுள்ள பதிவு!

    ReplyDelete
  8. அருமை...
    அருமை ..
    அருமை.

    முதல் அருமை மருத்துவ குறிப்புக்கு
    இரண்டாவது அருமை அவர் சொன்னபடி செய்ததற்கு..
    மூன்றாவது அருமை இதை அறிய எங்களுக்கு தந்தமைக்கு

    ReplyDelete
  9. ////Blogger SELVARAJ said...
    Nothing equivalent to Classic///

    நல்லது. நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  10. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
    நன்றி ஐயா.
    சென்ற வாரம் தான் இந்த விஷயத்தை படித்தேன். ////

    நல்லது. அறியத்தந்தமைக்கு நன்றி!!!!

    ReplyDelete
  11. //////Blogger kmr.krishnan said...
    அல்லோபதி மருத்துவத்தில் புகுந்துவிட்ட அதிகமான வணிகச் செயல்பாடுகள்
    மக்களை வேறு திசையில் பார்க்கத் தூண்டுகின்றன.உடல் நிலை ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒருவருக்குப் பயன் அளித்த மாற்று முறைகள் வேறு ஒருவருக்குப் பயன் அளிக்காது போகலாம்.
    இந்த டாக்டருக்கு வந்த அடைப்பு குதித்ததால் சரியாகியிருக்கும் நிலையில் இருந்திருக்கலாம். வேறு ஒருவருக்கு அது குதித்தாலும் சரியாகாத நிலையில் இருக்கலாம்.எனவே அனைவருக்கும் ஆனது என்று இந்த முறையைச்சொல்ல முடியாது.வேண்டுமானால் எல்லோரும் கடைப்பிடித்துப் பார்க்கலாம். பலன் கிடைத்தால் நல்லது. கிடைக்காவிட்டால் பரவாயில்லை.
    அல்லோபதி மருத்துவம் அதனுடைய எல்லா குறைபாடுகளுடனும், அறிவியல் பூர்வமானது.இந்த குதிக்கும் முறையையே அறிவியல் பூர்வமாக அணுக, ஒரே மாதிரியான சிறுநீர் கழிக்க சிரமப்பட்டவர்களை குதிக்கச் சொல்லிப் பார்த்து எத்த‌னை பேருக்குப் பலித்தது, எத்தனை பெருக்குப் பலிக்கவில்லை என்று ஆய்வு அறிக்கை கிடைக்க வேண்டும். அதில் ஆண் எத்தனை பெண் எத்தனை,வயது என்ன ,எந்த வயதுக்காரர்களுக்கு அந்த முறை எப்படி வேலை செய்கிறது என்பதையெல்லாம் பதிவு செய்தல் வேண்டும்.அந்தக் குதித்தல் முறை பெரும்பானவர்களுக்கு உதவியிருந்தால் அதன் பின்னரே அதனை எல்லோருகும் பரிந்துரை செய்யலாம்./////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  12. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,எளிய மருத்துவ குறிப்புகள் எல்லாம், மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் பகிர்ந்தமைக்கு நன்றி.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  13. ///Blogger ravichandran said...
    Respected Sir,
    Pleasant morning... I was on leave (two months) sir.
    Your posts are impressing me lot.
    Thanking you.
    With kind regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  14. ////Blogger Packirisamy N said...
    மிகவும் பயனுள்ள பதிவு!////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  15. ///Blogger வேப்பிலை said...
    அருமை...
    அருமை ..
    அருமை.
    முதல் அருமை மருத்துவ குறிப்புக்கு
    இரண்டாவது அருமை அவர் சொன்னபடி செய்ததற்கு..
    மூன்றாவது அருமை இதை அறிய எங்களுக்கு தந்தமைக்கு/////

    நல்லது. உங்களின் மேலான பாராட்டிற்கு நன்றி வேப்பிலையாரே!!!!

    ReplyDelete
  16. Dear Sir,

    Thanks....

    I want to share something about that, DefntY, I wil after sometime.

    MAN!

    ReplyDelete
  17. ////Blogger Manivannan said...
    Dear Sir,
    Thanks....
    I want to share something about that, DefntY, I wil after sometime.
    MAN!////

    நல்லது. நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  18. ////Blogger Anbu Selvan said...
    Nandri Ayya/////

    நல்லது. அன்பு செல்வன்!!!!

    ReplyDelete
  19. Naan Kanda Manithargalil Viyaka koodiyavar Neengal. Neengal VignyanaThai meygnathal Ariya petravar... Google seitha poorva jenma baakiyam Ungal Anupavathai Pakirkindrathu... pukalchi illai Makilchi...

    ReplyDelete
  20. ////Blogger Anbu Selvan said...
    Naan Kanda Manithargalil Viyaka koodiyavar Neengal. Neengal VignyanaThai meygnathal Ariya petravar... Google seitha poorva jenma baakiyam Ungal Anupavathai Pakirkindrathu... pukalchi illai Makilchi...////

    நான் எளியவன். புகழ்ச்சிக்கெல்லாம் இடமில்லை. வாய்ப்புக் கிடைத்தது எழுதுகிறேன். அவ்வளவுதான். நன்றி நண்பரே!!!! கூகுள் ஆண்டவருக்குத்தான் எல்லா பெருமையும்!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com