மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

11.7.17

கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!


கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!

இன்றைய சிந்தனை 1

“மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு.”

எவ்வளவு சிம்பிளாக சொல்லி விட்டார் வாரியார்...?

கேள்வி : “தெய்வங்கள் மக்களை காப்பாற்றும் என்று கூறுகிறார்கள். ஆனால் தெய்வங்களின் சிலைகளைத் திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர். அவ்வாறு தங்களையே காத்துக் கொள்ள முடியாத தெய்வங்கள் மக்களை எப்படி காப்பாற்றும் ?”

வாரியார் பதில் : “சிலைகளே கடவுள் அல்ல. மூர்த்தி வேறு. மூர்த்திமான் வேறு. மூர்த்தி என்பது சிலை. மூர்த்திமான் அந்தச் சிலையில் நாம் ஆவாகனம் செய்கின்ற தெய்வம்.. மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு. பல்பில் ஷாக் அடிப்பதில்லை. ஆகவே பல்புகளை திருடும் போது ஏன் ஷாக் அடிப்பதில்லை என்று கேட்பதை போலிருக்கிறது இந்த வினா. சிலைகளைத் திருடுகின்றபோது, ஆண்டவன் ஏன் அவனுக்கு தண்டனை கொடுக்கவில்லை என்ற வினா எழக்கூடும். கடவுள் கருணைக்கடல். தாய், திருடுகின்ற மகனிடத்தும் அன்பு பாராட்டுவது போல், கடவுள் கள்ளனுக்கும் கருணை காட்டுவார்.
---------------------------------------------------------
2
இன்றைய சிந்தனை..
2

அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார்.

அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார்.

அவர், ''ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்... நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்க லாமே?!''  என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார்.
 
உடனே ராக்ஃபெல்லர்,

''விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காக...இப்போது எஞ்ஜினை அணைத்துவிட முடியுமா?

எஞ்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும் தெரியுமா?'' என்று கேட்டார்.

''பெரும் விபத்து நேருமே!''- பதற்றத்துடன் பதிலளித்தான் இளைஞன்.

இதைக் கேட்டுப் புன்னகைத்த ராக்ஃபெல்லர், ''வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது.

வந்த பிறகு, 'உயரத்தைத் தொட்டு விட்டோமே...' என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும்.

உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!'' என்று விளக்கம் அளித்தார்.

எந்த தொழிலையும் செய்து வெற்றி காண இயலும் என்ற நம்பிக்கையின் உந்துவிசை உழைப்புத்தான்.

 உழைப்பு ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையை உண்டாக்குகிறது. அந்த உறுதியான தன்னம்பிக்கை யுடன், இணைந்த உழைப்புத்தான் உலகை இன்றைய உயர்நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்பது நூறுவிழுக்காடு உண்மைதான்.

ஆம்.,நண்பர்களே.,

மனித சமுதாயம் வாழ்வதற்கு, மிகவும அடிப்படையானது உழைப்புத்தான்.

உழையுங்கள்!  உழையுங்கள்!

அதுவே அனைத்து நோய்க்கும் மருந்து”..

படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18 comments:

kmr.krishnan said...

Both are very nice, Sir!

K.P.Shanmuga Sundaram Sundaram said...

Good morning sir, it's true Sir, health is wealth,so work hard and live healthy life thanks sir vazhga valamudan sir

Subbiah Veerappan said...

//////Blogger kmr.krishnan said...
Both are very nice, Sir!/////

4 மணிக்கே பின்னூட்டமா? உங்களின் ஊற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் மனதார பாராட்டுகிறேன் கிருஷ்ணன் சார்!!! நன்றி !!!!!

Subbiah Veerappan said...

/////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir, it's true Sir, health is wealth,so work hard and live healthy life thanks sir vazhga valamudan sir/////

உங்கள் வண்டி ஒரு மணி நேரம் லேட்! கிருஷ்ணன் சார் முந்திக் கொண்டு விட்டார்! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!!

Chandrasekaran Suryanarayana said...

நன்றி ஐயா. வணக்கம்.

Visvanathan N said...

Respected sir,

Good morning sir. Thank you for your message on Hard work. Work work work until you can. Hard work will always give reward to the person. Message with example is very good sir.

Regards,

Visvanathan N

ravichandran said...

Respected Sir,

Happy morning... First one is so impressive....

Thanks for sharing.... God bless you all.

Have a great day.

With kind regards,
Ravi-avn

adithan said...

வணக்கம் ஐயா,கடவுளின் கருணையையும்,உழைப்பின் உயரத்தையும்,இருவேறு சிந்தனைகள் மூலம் உணர்த்திய பாங்கு மிகவும் சிறப்பு.நன்றி.

Subbiah Veerappan said...

////Blogger Chandrasekaran Suryanarayana said...
நன்றி ஐயா. வணக்கம்.////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

Subbiah Veerappan said...

////Blogger Visvanathan N said...
Respected sir,
Good morning sir. Thank you for your message on Hard work. Work work work until you can. Hard work will always give reward to the person. Message with example is very good sir.
Regards,
Visvanathan N////

நல்லது. நன்றி விஸ்வநாதன்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... First one is so impressive....
Thanks for sharing.... God bless you all.
Have a great day.
With kind regards,
Ravi-avn/////

நல்லது. நன்றி அவனாசி ரவி! நீண்ட நாட்களாக உங்களைக் காணவில்லையே?

Subbiah Veerappan said...

////Blogger adithan said...
வணக்கம் ஐயா,கடவுளின் கருணையையும்,உழைப்பின் உயரத்தையும்,இருவேறு சிந்தனைகள் மூலம் உணர்த்திய பாங்கு மிகவும் சிறப்பு.நன்றி.////

நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆதித்தன்!!!!

கார்த்திக் Sree Vadivel Tex said...


ஐயா,
லக்னாதிபதியும், 12ம் அதிபதியும் பரிவர்த்தனை நன்மையா,தீமையா...இல்லை அது லக்கனத்தை பொருத்து மாறுபடுமா.....

Happy said...

//உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!//


என்றும் நினைவில் நிறுத்தவேண்டிய வரிகள்!

Subbiah Veerappan said...

/////Blogger கார்த்திக் Sree Vadivel Tex said...
ஐயா,
லக்னாதிபதியும், 12ம் அதிபதியும் பரிவர்த்தனை நன்மையா,தீமையா...இல்லை அது லக்கனத்தை பொருத்து மாறுபடுமா.....//////

பரிவர்த்தனையான கிரகங்களை வைத்து பலன்கள் மாறுபடும்! பொதுப்பலன் என்ன என்றால் தீமைதான்!!!

Subbiah Veerappan said...

/////Blogger Happy said...
//உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!//
என்றும் நினைவில் நிறுத்தவேண்டிய வரிகள்!/////

நல்லது. நன்றி நண்பரே!!!!

வேப்பிலை said...

சூப்பர்

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
சூப்பர்////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வேப்பிலையாரே!!!!